Wise voices
Saturday, October 11, 2025
Meister eckhart
When I preach, I usually speak of detachment and say that a man should be empty of self and all things; and secondly, that he should be reconstructed in the simple good that God is; and thirdly, that he should consider the great aristocracy which God has set up in the soul, such that by means of it man may wonderfully attain to God; and fourthly, of the purity of the divine nature
Alan watts
Sexuality alan watts
ALAN W. WATTS
Nature, Man
and Woman
A NEW APPROACH TO SEXUAL
EXPERIENCE There is a. correlation between man’s attitude to nature and man’s attitude to woman.
However fanciful this symbolism may sometimes be, it has in fact had an enormous influence upon sexual love in both Eastern and Western cultures.
sexual love is a troubled and problematic relationship in cultures where there is a strong sense of man’s separation from nature, especially when the realm of nature is felt to be inferior or contaminated with evil.
Needless to say, the Christian, and particularly the Anglo-Saxon, cultures are preoccupied with sexuality in ways that strike outsiders as peculiarly odd, and we ourselves are well aware that we have ‘ sex on the brain ’ to an extraordinary degree.
sexual love is the most intense and dramatic of the common ways in which a human being comes into union and conscious relationship with something outside himself. It is, furthermore, the most vivid of man’s customary expressions of his organic spontaneity, the most positive and creative occasion of his being transported by something beyond his conscious will.
cultures in which the individual feels isolated from nature are also cultures wherein men feel squeamish about the sexual relationship, often regarding it as degrading and evil — especially for those dedicated to the life of the spirit.(church orthodox hindu)
The disordered sexuality of the Western (and some other) cultures is surely due to the fact that the sexual relationship has never been seriously integrated with and illumined by a philosophy of life. It has had no effective contact with the realm of spiritual experience.
It has never even achieved the dignity of an art, as in the Indian Kama Sutra, and would thus seem to rank in our estimation far below cookery.
We have dubbed the relationship ‘ animal and animal we have for the most part let it remain. Matrimony has not so much ennobled it as fenced it in, trusting naively that ‘ true love ’ would somehow find a way to make the relationship whole and holy. And this might indeed have come to pass, without introducing any studied techniques, given the presence of certain other conditions. It might have come to pass of itself, spontaneously, if the culture had known anything of real spontaneity. But this was, and is, impossible when human personality is centred exclusively in the ego, which in its turn is set over against nature as the dissociated soul or mind. Generally speaking, the style of philosophy which we have followed and the type of spiritual experience which we have cultivated have not lent themselves to a constructive application to sexuality.
contents
Posts
https://wisewordsnr.blogspot.com/2025/09/pythagorus.html
A Krishna menon EYe I AM
A Krishna menon witness doer
A Krishna menon body mind
A Krishna menon. Subject object
Atmananda Krishna Menon
Herodotus
Jaggi vasudev
Ram doss
Ram doss
Aurobindo detach
osho-i-am- a gate
ramana-atma-vicharam
Marcus Aurelius
Ashtavakra
Sivananda quotes
Yog vashist adi vyadhi
Yog vashist
Thirumular
Vivekananda's voice
Ramana quotes
Ramana Maharshi on Reincarnation
Ramana maunam
Self surrender ramakrishna
Ramakrishna rk sayings
Sivananda rk
Jk commentsries
Jk mind 2
Jk love
Jk self knowledge
Jk. Mind
Jk awareness
Jk relationships
Sankhya
gita daily
Quotes Shankara
Quotes Gandhi
Quotes pythagorus
Jk desiire
Osho life
Posts listed
Quotes Epictetus
Sai says
Shri Ramana maharishi
Osho thoughts
Buddha lessons
Tao te ching Lao Tzu
OJASWI SHARMA Attach Detach
Patanjali
menu
a blog for the voice of the wise men of humankind......voices from the ancient past....
and wise sayings from wisdom literature
Posts
- A Krishna menon EYe I AM
- A Krishna menon witness doer
- A Krishna menon body mind
- A Krishna menon. Subject object
- Atmananda Krishna Menon
- Herodotus
- Jaggi vasudev
- Ram doss
- Ram doss
- Aurobindo detach
- osho-i-am- a gate
Labels: ramana
osho i am a gate
நான் ஒரு வாசல்
ஓஷோ
பொருளடக்கம்
⦁ முழுமையான விழிப்புணர்வு, முழுமையான சுதந்திரம் -1
⦁ சன்னியாசம் என்றால் என்ன ? -23
⦁ சக்கரத்தை விட்டு வெளியே வாருங்கள் - 51
⦁ உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள் - 70
⦁ மாபெரும் சாகசம் - 94
⦁ மையத்திற்கு வாருங்கள் -115
⦁ தீக்ஷையின் ரகசியங்கள் -139
⦁ ஒரு ஜன்னலை திறந்து விடுங்கள் -173
⦁ ஒரு நொடிப்பொழுதில் கூட -205
முழுமையான விழிப்புணர்வு, முழுமையான சுதந்திரம்.
அன்புள்ள ஓஷோ,
உங்களுடைய தனிப்பட்ட சொந்த விஷயங்களைப் பற்றி கேட்பதற்காக மன்னிக்கவும். இந்த கேள்விகள் பலபேர் இதயங்களில் நெருப்பாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதினால், நான் இந்த கேள்விகளைக் கேட்கிறேன். நீங்கள் யார்? நீங்கள் எதற்காக இவ்வுலகத்திற்கு வந்தீர்கள்? இங்கு உங்களுடைய வேலை என்ன ? அந்த வேலை எப்படி நிறைவேறும்?
இந்தக் கேள்விகள் சொந்த விஷயங்களைப் பற்றியதோ இல்லையோ, அதனால் எந்த பாதிப்பும் கிடையாது. ஏனெனில் என்னைப் பொருத்தமட்டில் தனிமனிதனாக யாரும் இல்லை. தனி மனிதன் என்று யாரும் இல்லாதபோது, உங்களால் தனிப்பட்ட சொந்த விஷயங்களைப் பற்றி எந்தக் கேள்வியையும் கேட்கவே இயலாது. தனிப்பட்ட சொந்த விஷயங்களைப் பற்றி கேட்பது அகம்பாவம் அல்ல. ஆனால் நம்மை தனிமனிதனாக பாவித்துக் கொள்ளுதல் நம்முடைய அகம்பாவம்தான். தனிமனிதன் என்று யாரும் இல்லை. அது இல்லாத ஒன்று. உண்மையில் சொல்லப்போனால் தனிமனிதனாக யாரும் இல்லை அல்லது இருப்பது ஒரே ஒரு தனிமனிதன்தான். கடவுளுக்கு மட்டும் தான் தனித்துவமிக்க குணம் இருப்பதாக சொல்லலாம். ஏனெனில் அவருக்கு மட்டும்தான் மையம் இருக்கிறது. நமக்கு மையம் கிடையாது.
நமக்கு மையம் [centre]என்பது இல்லை. ஆனால் நமக்கு மையம் இருப்பதாக பாவித்துக்கொள்கிறோம். அந்த மையம் ஒரு அனுமானம், மாயை. மையம் இல்லாமல் நம்மால் வாழ இயலாது என்று நாம் நினைக்கிறோம். இந்த அனுமானிக்கப்பட்ட மையம் தான் `நான் என்ற அகந்தை’[Ego].
நீங்கள் இந்தக் கேள்வியை தனிப்பட்ட சொந்த விஷயத்துக் கேள்வியாக நினைக்கலாம். ஆனால் இந்த கேள்விகள் என்னை நோக்கி இருக்கும் வரை, அது இல்லாத ஒன்றை நோக்கி இருப்பதாகவே அர்த்தம். என்னைப் பொறுத்தவரை நான் என்னை தனிமனிதனாகவே நினைக்கவில்லை. ஒருவன் ஆழமாகப் போகப்போக `நான்’ என்பது சிறியதாகிப் போகும். ஒருவன் ஒருமுறை தன்னுடைய மூலமான அடித்தளத்திற்கு சென்றுவிட்டால், அங்கே` நான்’ என்பதே இருக்காது.
இரண்டாவதாக ` நான் யார்` என்று கேட்கிறீர்கள். `நான்’ இல்லை என்பதே என் பதில். நான் எப்போதும், நாடி வருபவர்களிடம்` நான் யார்’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்பேன். இவ்வாறு கேட்டுக்கொண்டால், அவர்களுக்கு தான் யார் என்று தெரிந்துவிடும் என்பதினால் அல்ல. ஆனால் இக்கேள்வியை ஆழமாகத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டால், தனக்குள் கேள்வி கேட்பவன் மறைந்து, கேள்வி மட்டுமே மிஞ்சும் ஒரு வினாடி வரும் என்பதினால்தான், நான் அவ்வாறு கேட்டுக்கொள்ளச் சொல்கிறேன். இந்த கேள்வியை தீவிரமாக, முடிந்தவரை ஆழமாக கேட்கும்போது அந்த ஒரு வினாடி வந்தே தீரும். அதில் இருக்கும் அசட்டுத்தனம் வெளிப்படும். அந்த வினாடியில் `நான் யார்’ என்று கேட்பதற்கும், `நீ யார்’என்று கேட்பதற்கும், யாரும் இல்லை என்பதனைப் புரிந்துக் கொள்வீர்கள். இந்தக் கேள்வி, பதில் கிடைக்க கேட்கப்படும் கேள்வி அல்ல. இது கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு செல்ல, கேட்கப்படும் கேள்வி.
நம்முள்ளே யாரும் இல்லை, உண்மையில் பார்க்கப் போனால்`உள்ளே’ என்ற ஒன்றே இல்லை. `உள்ளே’ என்ற ஒன்று இல்லாதபோது `வெளியே’ என்ற ஒன்றும் இல்லை. உங்களுடைய புறத்திற்கும், அகத்திற்கும் வேறுபாடு இல்லாதபோது, இந்த உலகம் முழுவதும் ஒன்றாகிறது. இப்பிரபஞ்சம் முழுமையான ஒன்றாக இருக்கும்போது, அது `நீ’, `நான்’ என்று இரண்டாகப் பிளவுபடாது.
அதனால் `நீங்கள் யார்’ என்ற கேள்வி எனக்கு அர்த்தமற்றதாகத் தெரிகிறது. இதற்கு பதிலாக `இருப்பது எது’ என்று கேட்பதே அர்த்தமுள்ள கேள்வி - யார்? அல்ல எது? –ஏனெனில் எது என்பது இந்த முழு பிரபஞ்சத்தையும்[Existence]குறிக்கும், இதை .இப்பிரபஞ்சத்தில் இருப்பவை எல்லாவற்றிற்கும் கேட்கலாம்.
`இருப்பது எது` என்றக் கேள்வி எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். இதில் இருகூறாக்குதல் இல்லை, பிளவுப்படுதலும் இல்லை. ஆனால்` யார் ‘என்ற கேள்வி ஆரம்பத்திலிருந்தே பிளவை உண்டாக்குகிறது. அது இருகூறாக்குதலையும், பல கூறாக்குவதையும் அனுமதிக்கிறது.
இருப்பதெல்லாம் ஒரே ஒரு உயிரினம்தான் (being) உயிரினங்கள் அல்ல.
இருப்பது ஒரே ஒரு உயிரினம் என்று நான் சோல்வது உயிர்த்தன்மையைத்தான் (beingness), ஏனெனில், ஒன்று, இன்னொன்று இல்லாமல் தனியாக ஜீவிக்க முடியாது. மற்றொன்று இல்லாமல் ஒன்று இருக்கிறது என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.
அதனால் இருப்பது உயிரினம் (being) அல்ல, உயிர்த்தன்மைதான் (beingness). நான் எப்போதும் சொல்வது போல், கடவுள் இல்லை, ஆனால் தெய்வீகத்தன்மை (divineness) நிறைந்திருக்கிறது. `உயிரினம்’ என்ற வார்த்தைக்கு வரையறை இருக்கிறது.அதே போல் `கடவுள்’ என்ற வார்த்தைக்கும் எல்லை இருக்கிறது. ஆனால் உயிர்த்தன்மை என்ற வார்த்தைக்கோ, அல்லது தெய்வீகத்தன்மை என்ற வார்த்தைக்கோ வரையறையோ, எல்லையோ கிடையாது.அதில் எல்லாம் உள்ளடங்கியுள்ளது, எதையும் தவிர்க்கவில்லை. அதனால் `நீங்கள் யார்’ என்று என்னை கேட்கும்போது, இந்தக் கேள்வியை `இருப்பது எது’ என்று என்னை நோக்கி கேட்டதாகவே, நான் அர்த்தம் எடுத்துக்கொள்வேன். என்னால் இக்கேள்விக்கு வேறு எப்படியும் அர்த்தம் எடுத்துக்கொள்ள இயலாது.
நீங்கள் என் மூலமாக ஒரு அடிப்படை கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். ``இருப்பது எது’’ என்பது எனக்கல்ல, அது உயிரினத்திற்கும், இப்பிரபஞ்சத்திற்கும்தான். ஒரு சிறுதுளியுள் ஒருவர் ஆழ்ந்து சென்றால் அதில் அவர் மகா சமுத்திரத்தையே காணலாம். வெளித்தோற்றத்திற்குத்தான் ஒரு துளி, துளியாக இருக்கும். இப்பிரபஞ்சமாகவே இருக்கும் பட்சத்தில், ஒரு துளியின் தன்மையும்,சமுத்திரத்தின் தன்மையும் ஒன்றுதான். ஒரு துளியிலும் சமுத்திரம் சம்பந்தப்பட்ட அனைத்தும் இருக்கும். அதனால் அறியாமையில்தான் ஒருவன் ஒரு துளித்தண்ணீர்; அவன் அறிந்துக் கொண்ட வினாடியிலிருந்து இருப்பது சமுத்திரம்தான் என்று புரியும்.
நீங்கள் மகா சமுத்திரத்தைப் பற்றிய கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். அதனால் இதற்கு நான் பதில் சொல்லும் போது, நான் என்னைப் பற்றி மட்டும் பதில் அளிக்கவில்லை, உங்களைப் பற்றியும்தான் பதிலளிக்கிறேன். இதற்கு நான் பதில் சொல்லும்போது,நான் என்னைப்பற்றி பதிலளிக்கவில்லை, ஆனால் இங்கிருப்பவை அனைத்தையும் பற்றி பதில் சொல்கிறேன்.
இருப்பது எது? இதில் பல அடுக்குகள் உள்ளன. இதில் ஒருவருக்கு மேற்பாகத்தைப் பற்றி மட்டும் தெரிந்திருந்தால், பின்பு அவருக்கு பார்க்கக்கூடிய மற்றும் உணரக்கூடிய வஸ்த்துக்கள் (Matter) மட்டும்தான் இருப்பதாகத் தெரியும். பார்க்கக்கூடிய, அல்லது உணரக்கூடிய பொருட்கள்தான் இப்பிரபஞ்சத்தின் மேற்பாகத்தில் உள்ளது. அறிவியல் இதுவரை மேற்பாகத்தில் உள்ளவையைத்தான் ஆராய்ந்து வந்திருக்கிறது. அறிவியலைப் பொறுத்தவரை, இந்த வஸ்த்துக்கள் மட்டும்தான் உண்மையானது, மற்றவைகள் அல்ல. ஆனால் இப்போது அறிவியல் மேற்பாகத்திலிருந்து ஒரு அடி ஆழமாகச் சென்று, பார்த்து உணரக்கூடிய வஸ்த்துக்கள் இல்லை, இருப்பதெல்லாம் ஆக்க சக்திதான் (energy) என்று சொல்கிறது. இந்த ஆக்க சக்தி இரண்டாவது அடுக்கில் உள்ளது. இது பார்த்து, உணரக்கூடிய பொருட்களை விட ஆழமானது. ஒருவர் இந்த ஐம்புலன்களால் உணரக்கூடிய வஸ்த்துக்களுள் ஆழமாகச் சென்றால் அங்கே வஸ்த்துக்கள் எதுவும் இல்லை என்றும், இருப்பது ஆக்கசக்திதான் என்பது புரியும். ஆனால் இதுவும் போதாது, ஏனெனில் ஆக்கசக்தியின் கீழ்ப்படியில் விழிப்புணர்வு (consciousness) இருக்கிறது.
அதனால் `நீங்கள் யார்’ என்று என்னை கேட்கும்போது ``நான் விழிப்புணர்வு’’ என்று சொல்கிறேன். இந்தப் பதிலில் எல்லாம் அடங்கியுள்ளது - எல்லாமே விழிப்புணர்வுதான். நான் எல்லாவற்றினுடைய பிரதிநிதியாகத்தான் இப்பதிலை சொல்கிறேன். நீங்கள் விழிப்புணர்வுதான் என்று நீங்கள் கேள்விபட்டிருக்கக்கூட மாட்டீர்கள், உங்களுக்கே நீங்கள் விழிப்புணர்வுதான் என்று தெரியாமலிருக்கலாம், ஆனாலும் நான் உங்களுக்காகவும் பதிலளிக்கிறேன்,விழிப்புணர்வு இருக்கிறது. நான் எதையாவது இருக்கிறது என்று சொன்னால், அதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட அர்த்தம் இருக்கும். நான் எதையாவது இருக்கிறது என்று சொல்லும்போது அவை இப்பிரபஞ்சத்தின் வெளியே இருக்காது என்று பொருள். எது ஒன்றால் இப்பிரபஞ்சத்தின் வெளியே செல்ல இயலுகிறதோ அது உண்மையில் இங்கே இருந்ததில்லை என்று அர்த்தம். அது உண்மையில் இங்கே இருந்ததில்லை என்று அர்த்தம். அது உண்மையில் இங்கே இருந்ததில்லை. அது மேல்வாரியான பொருட்களாக (phenomenal) இருப்பதுபோல் தோற்றமளித்திருக்கும்.
அதனால் மாறுவதெல்லாம் மேல்வாரியான பொருட்கள்தான் (அவை உண்மையில் இப்பிரபஞ்சம் சம்பந்தப்பட்டவை அல்ல), வெளிப்புறமாக இருப்பதுதான் மாறிவருகிறது, உள்ளார்ந்த, அடித்தளத்தில் மாற்றம் இல்லை. அடித்தளத்தில் இருப்பது எப்பொழுதும் நிகழ்காலத்திலேயே இருக்கிறது. உங்களால் அதை இருந்தது என்றோ அல்லது இருக்கும் என்றோ சொல்ல முடியாது. இருப்பது என்னவோ அது இருக்கிறது. அதற்கு நிகழ்காலம் மட்டும்தான் பொருந்தும்.
அதற்கு கடந்தகாலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை, ஏனெனில் கடந்தகாலமும் எதிர்காலமும் மாற்றம் இருந்தால்தான் அர்த்தமுள்ளவைகளாக இருக்கும். ஆனால் ஏதோ ஒன்று கடந்தகாலமும் இல்லாமல், எதிர்காலமும் இல்லாமல் நிகழ்காலத்தில் இருக்கிறது என்றால், கண்டிப்பாக அந்த நிகழ்காலத்தின் அர்த்தம் வித்தியாசமாக இருக்கும். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். நமக்கெல்லாம் நிகழ்காலமென்பது ஏதோ கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையே இருக்கும் ஒன்று. ஆனால் கடந்தகாலமும், எதிர்காலமும் இல்லையென்றபோது, அந்த நிகழ்காலம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அது ஏதோ கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையே இருக்கும் ஒன்றல்ல. அந்த நிகழ்காலம் என்பது ஒரு வினாடி - இல்லாத இரண்டிற்கு நடுவே வரும் ஒரு வினாடி : கடந்தகாலம் போய்விட்டது, அது இனியில்லை, எதிர்காலமோ இன்னும் வரவில்லை. ஆக இல்லாத இவ்விரண்டிற்கும் நடுவே ஒரு நிகழ்கால வினாடியிருக்க வாய்ப்பில்லை. இல்லாத இரண்டிற்கு நடுவே ஒன்றிருக்க இயலாது. அது இருப்பதுப் போல் தெரிகிறது அவ்வளவுதான்.
அதனால், நான் விழிப்புணர்வு இருக்கிறது என்று சொல்லும்போது, நான் கடந்த காலத்திற்கோ, அல்லது எதிர்காலத்திற்கோ உட்பட்டு சொல்லவில்லை. ஆனால் ஆதியந்தத்திற்கு அப்பாற்பட்டு சொல்கிறேன். நான் முடிவற்றது (everlasting) என்று சொல்லவில்லை, ஏனெனில், முடிவற்றது அல்லது எப்போதும் இருப்பது என்ற வார்த்தைகளில் காலவரம்பு உள்ளது. நான் அது எப்போதும் நிகழ்காலத்தில் உள்ளது என்று சொல்லும்போது, அது இந்த பிறவி, இந்த பூமி, இந்த உலகம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல (non temporal) பிரபஞ்சம் என்பது இந்த பிறவி, இந்தபூமி, இந்த உலகம் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, அது நேரத்திற்கும், அதே சமயத்தில் விண்வெளிக்கும் அப்பாற்பட்டது, ஏனெனில் விண்வெளியில் இருப்பதெல்லாம் (space) இல்லாமல் போய்விடும். அதேபோல் நேரத்திற்கு உட்பட்டிருப்பதெல்லாமும் இல்லாமல் போய்விடும். மேலும் நேரமும், விண்வெளியும் இரண்டல்ல. அதனால் தான் நான் அவ்விரண்டையும் சம்பந்தப்படுத்துகிறேன். விண்வெளியின் ஒரு கோணம்தான் நேரம்.விண்வெளியின் ஓட்டம்தான் நேரம், நேரம் ஓடாமல் நின்றால், அதுதான் விண்வெளி. அதனால் இப்பிரபஞ்சமானது, இப்பிறவி, இந்த பூமி, இவ்வுலகம் இந்த விண்வெளி ஆகியன சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல.
அதனால் நான், இந்த பூமி, இவ்வுலகம், இந்த விண்வெளி சம்பந்தப்பட்டவன் மட்டும் அல்ல என்று என்னை சொல்லும்போது, அதை நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய `நான்’ எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது. அதில் நீங்களும், கேள்விக்கேட்பவனும் உண்டு. எதுவுமே விடுபடவில்லை. பின்னர் உங்களுடைய கேள்விக்கு ஆராய்ந்து பதில் சொல்வது சுலபமாக இருக்கும். எதுவெல்லாம் மாற்றத்திற்குரியதோ அவைக்கெல்லாம் ஓர் காரணம் உள்ளது (purposive), ஏதோ செய்வதற்கு உள்ளது, அது இருப்பதற்கு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் நிறைவேறிய நிமிடம், அது இப்பிரபஞ்சத்திற்கு வெளியே சென்றுவிடும்.
ஆனால் எவையெல்லாம் இப்பிரபஞ்சத்தில் உண்மையாக உள்ளதோ, அவைகள் இருப்பதற்கு எந்த காரணமும் கிடையாது, நிறைவேற்றுவதற்கும் எந்த காரணமும் கிடையாது, நிறைவேற்றுவதற்கும் எந்த காரணமும் கிடையாது. அப்படி ஒரு காரணம் இருந்து, அது நிறைவேற்றப்பட்டால், பின்னர், இப்பிரபஞ்சமே அர்த்தமற்றதாகிவிடும். அதனால் இந்த பிறவி, இந்த பூமி, இந்த உலகத்திற்குதான் ஓர் நோக்கம் உள்ளது. இவை ஓர் நோக்கத்துடன் படைக்கப்பட்டவை. இதை வேறுவிதமாக சொன்னால், இவை ஓர் மூலத்தை அடைவதற்கான வழி. காரணம் என்பதற்கு இதுதான் பொருள். அவை ஏதோ ஒன்று நிறைவேறுவதற்காக உள்ளது. அந்த மூலக்காரணம் நிறைவேறியதும் அவை போய்விடும். ஆனால் `நான்’ என்று சொல்லும்போது, அதில் எல்லாம் அடக்கம். அதற்கு எந்த நோக்கமும் கிடையாது.
இப்பிரபஞ்சத்திற்கு நோக்கம் எதுவும் இல்லை. அதனால்தான் அதை லீலை, விளையாட்டு என்கிறோம். இப்பிரபஞ்சத்திற்கே நிறைவேற்றுவதற்கான எந்த குறிக்கோளும் இல்லை. அது எதை நோக்கியும் செல்லவில்லை. அதற்கு ஒரு முடிவும் இல்லை. ஆனாலும் அது போய்க்கொண்டிருக்கிறது. நிறையவே போய்க் கொண்டிருக்கறது. அதனால் இது லீலை, விளையாட்டாகத்தான் இருக்கவேண்டும் -இது ஆக்கச்சக்தியின் வெளிப்பாடுதான். இதை என்னுடன் சம்பந்தப்படுத்தலாம். நான் எதுவாகவும் ஆக வேண்டியதில்லை. இருப்பினும் பலவற்றை செய்வதாக சொல்கிறேன்.
நீங்கள் எப்போது உங்களை இப்பிரபஞ்ச விழிப்புணர்வின் ஓர் அங்கம் என்பதனை புரிந்துக் கொள்கிறீர்களோ, அப்போழுது இதில் எந்த நோக்கமும் இல்லை என்பதனை புரிந்துக் கொள்வீர்கள். நீங்கள் இருப்பது ஒரு விளையாட்டாகத் தான் இருக்கும்; பின்னர் அவ்விளையாட்டே பிரபஞ்ச இசைவுடன் கூடி பலக் கோணமாகிறது (multidimensional). நீங்கள் எவ்வளவோ செய்கிறீர்கள், ஆனாலும் செய்பவன் யாரும் இல்லை. அதில் எந்த நோக்கமும் இல்லை; இவையெல்லாம் அதில் இல்லை - பின்னர் அது ஒரு விளையாட்டாகிறது.
நீங்கள் இதை கவனிக்க வேண்டும்: செய்பவன் காரணம் இல்லாமல் இருக்க முடியாது, அதேபோல் நோக்கமும் செய்பவன் இல்லாமல் அமையமுடியாது. இவ்விரண்டும் ``நான் என்ற அகந்தையின்’’ (Ego)இரு துருவங்கள். ஒரு காரணமும் இல்லாவிட்டால் ``நான் என்ற அகந்தைக்கு’’ சௌரியப்படாது. காரணங்களின் வழியேத்தான் ``நான் என்ற அகந்தை’’ பூர்த்தியாகிறது. எதையாவது செய்யவேண்டும், ஒருவன் அதை செய்வதில் வெற்றிக் காணவேண்டும், ஒருவன் எங்கேயாவது சென்றடைய வேண்டும், ஒருவன் எதையாவது செய்தாக வேண்டும், ஒருவன் தன்னுடைய கையெழுத்தினை பதித்தாக வேண்டும், இவ்வாறெல்லாம் ``நான் என்ற அகந்தை’’ காரணமுடையது. மறுக்கையில் இப்பிரபஞ்சத்திற்கு எந்த காரணமும் கிடையாது. இந்த ``நான் என்ற அகந்தையை’’ தாண்டி உங்களுக்கு ஏதாவது தெரிந்தாலே ஒழிய, உங்களுக்கு எதுவும் தெரிந்ததாகவே அர்த்தம் கிடையாது.
அதனால், என்னை பொருத்தமட்டில் எல்லாமே விளையாட்டுத்தான். நானும் இல்லை, நான் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. இருப்பினும் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இவைகள் ஏன் போய்க்கொண்டிருக்கிறது என்று கேட்கலாம் அவைகள் போய்க் கொண்டிருக்கிறது, ஏனெனில் அவற்றை நிறுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை, மேலும் நிறுத்துவதற்கு யாரும் இல்லை. உங்களுக்கு நான் சொல்வது புரிகிறதா ? அதை நிறுத்துவதற்கும் யாரும் இல்லை, அதற்கான எந்த காரணமும் இல்லை. அதனால் இயற்கையில் போக வேண்டும் என்றிருக்கிறது. அதற்கு நீங்கள் வழியாகிறீர்கள். நீங்கள் வழியாக வேண்டும் என்று திட்டமிட்டு வழியாகவோ அல்லது கர்த்தாவாகவோ முடியாது. ஆனால் உங்கள் சாத்வீகத் தன்மை (Passivity) உங்களை வழியாக்கும், அந்த சாத்வீகத் தன்மை என்பது நீங்கள் இல்லாத நிலை. இப்படி இல்லாவிடில் நீங்கள் பேச்சிற்குதான் சாத்வீகமாக இருப்பீர்கள், உங்கள் அகந்தை எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.எந்த வினாடியிலிருந்து நீங்கள் சாத்வீகம் ஆகிறீர்களோ அந்த வினாடியிலிருந்து ``நான் என்ற அகந்தை’’ இருக்காது. சாத்வீகத் தன்மையென்றால் ``நான் என்ற அகந்தை’’ இல்லாத நிலை.
அதனால் நான் முழுமையாக சாத்வீகமாக இருக்கிறேன். எதுவெல்லாம், நடக்கிறதோ நடக்கிறது. நான் `ஏன்’ ? என்று கேட்பதில்லை, ஏனெனில் கேட்பதற்கு யாரும் இல்லை. அப்படியே யாரையாவது சந்தித்தாலும், கடவுளாகவே இருந்தாலும், அவர் சிரிப்பார் அவ்வளவு தான். அவரால் கூட இதற்கு பதிலளிக்க முடியாது. இதற்கு அவரால் ஏன் பதில் சொல்லமுடியாது என்றால், காரணமின்றி எதுவுமே நடைபெறாது என்ற கொள்கையும் (Casuality) , ஏன் என்று கேட்கும் கொள்கையும், நில்லாமல் ஓடிக்கொண்டிருப்பதை (flux) இரண்டாக வகுத்தால் தான் அர்த்தமுள்ளதாகும். நீங்கள் ஆரம்பம், முடிவு என்று ஒன்று இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால், பின்பு காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற கொள்கை அர்த்தமுள்ளதாகும். ஆனால் நில்லாமல் ஓடிக்கொண்டிருப்பதை, முடிவும் இல்லாததாக, ஆரம்பமும் இல்லாததாக புரிந்துக் கொண்டால் பின்னர் அனைத்தும் எல்லாவற்றிற்குள்ளும் செல்கிறது, எல்லாம் எல்லாவற்றிலிருந்தும் வருகிறது. இது கடலின் அலைகள் போலத்தான், எல்லா அலையின் பின்னாலும் அலையிருக்கிறது, எல்லா அலைகளின் முன்னாலும் ஏதோ இருக்கிறது. சற்று முன்னால் இன்னொரு அலையும் இருக்கிறது. ஆக கடல் முழுவதும் அலைகளாக இருக்கிறது. அந்த அலைகள் ஆதி அந்தத்திற்கு அப்பாற்பட்டது.
இதை `ஏன் ‘ என்று மனிதர்களை தவிர வேறு எதுவும் கேட்பதில்லை. அதனால் வேறெதற்கும் பேராவல் (ANXIETY) இல்லவே இல்லை. அதனால் எப்பொழுதெல்லாம் மனிதனின் மனம் பேராவல் கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் அது கேள்விகளையும் உருவாக்கி, பதில்களையும் கொடுத்துக் கொள்கிறது. இந்த கேள்விகளும் அர்த்தமற்றவை, அதனால் அதன் பதில்களும் அதைவிட அர்த்தமற்றவையாகிறது. நாம் சாமர்த்தியமாக நம் கற்பனைச் சக்தியின் மூலம் உருவாக்கிய கேள்வியென்பதால், அதற்கு விடை காணும் வரை நம்மால் நிம்மதியாக இருக்கமுடியாது. அதனால் நாம் பதில்களை கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறோம். கேள்விகளையும் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறோம். இவ்வாறு கேள்விகளையும் கேட்டுக் கொண்டு அதற்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் பைத்தியக் காரத்தனத்தை பார்த்தால், நீங்கள் உங்களுள் தனக்குத்தானே பேசிக்கொள்வது தெரியும். அப்படியே நீங்கள் கேள்விக் கேட்டு அதற்கு நான் பதில் அளித்தால் கூட ஒரு மனிதனின் மனம் கேட்கிறது, அதற்கு மனிதனின் மனம் பதில் அளிக்கிறது. இதுவும் அதே மனதின் கண்ணாம்பூச்சி விளையாட்டுத்தான். இதில் யார் கேட்கிறார்கள், யார் பதிலளிக்கிறார்கள் என்பதை பற்றி எந்த வித்தியாசமும் இல்லை.
மனித மனதின் கேள்விகள், மனித மனதின் பதில்கள் என்று பெரும் குழப்பத்தை நாம் இந்த கேள்வி பதில்களால் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் இன்னும் ஒரு கேள்விக்குக் கூட பதில் அளிக்கப்படவில்லை. கேள்விகள் எப்பொழுதும் எங்கு இருந்ததோ அது அங்கேயே இருக்கிறது. இந்தக் கேள்வி பதில்களின் அணிவகுப்பையும், இந்த அர்த்தமற்றதையும், பயனளிக்காத, எங்கும் கொண்டு செல்லாத முயற்சியையும் உங்களால் பார்க்க முடிந்தால், இது போன்ற முட்டாள்தனங்களை பற்றி உங்களுக்கு திடீரென்று மின்னல் போல் வந்து, நீங்கள் தெரிந்துக்கொண்டால், பின்னர் நீங்கள் இந்த மனித மனதின் அசட்டுத்தனத்தை நினைத்து சிரிப்பீர்கள். நீங்கள் சிரிக்கும் அந்த நிமிடத்திலிருந்து நீங்கள் மனதினை முழுமையாக கடந்து செல்வீர்கள். பின்னர் கேள்வியும் இருக்காது, பதிலும் இருக்காது. பின்பு நீங்கள் அன்புடன் இருப்பீர்கள். எந்தக் காரணமும் இல்லை, எந்த தூண்டுதலும் இல்லை என்ற பொழுது, வாழ்தல் மட்டுமே போதுமானதாகிறது.
நீங்கள் கேட்கிறீர்கள் அதற்கு நான் பதிலளிக்கிறேன். ஆனால் எனக்கு நானே எந்த கேள்வியும் கேட்க இயலாது. என்னை பொருத்தமட்டில் எந்த கேள்வியும் இல்லை. எந்த பதிலும் இல்லை. நான் கடலில் இருக்கும் அலைகளைப் போல அல்லது மரத்தில் இருக்கும் இலைகளைப் போல அல்லது வானத்தில் இருக்கும் மேகங்களைப் போல கேள்விகள் எதுவும் இல்லாமல் பதில்கள் எதுவும் இல்லாமல் வாழ்கிறேன். நான் எந்த நிமிடம் இந்த கேள்விகளின் அசட்டுத்தன்மையை புரிந்துக் கொண்டேனோ, அந்த நிமிடம் என்னிலிருந்து ஏதோ முழுமையாக கீழே விழுந்தது. பின்னர் திரும்பவும் உயிர்ப்பெற்றேன். நான் திரும்பவும் பிறந்தேன். நான் நானாக பிறக்கவில்லை, ஆனால் இப்பிரபஞ்சத்தின் விழிப்புணர்வாகவே பிறந்தேன்.
இந்த பிரப்பஞ்சக் கோணத்தில் எல்லாமே - விளையாட்டுத்தான். இதை ஒருமுறை புரிந்துக்கொண்டால் – புரிந்துக்கொண்டதோடு அல்லாமல் எல்லாமே விளையாட்டுத் தான் என்று உணர்ந்துவிட்டால் - நீங்கள் முழுமையாக, பூர்ணமாக இளைப்பார முடியும். பின்னர், பதட்டம் இருக்காது. உங்களால் இளைப்பார முடியும் ``நான் என்ற அகந்தை’’ இருக்காது.
``நான் என்ற அகந்தையால்’’ இளைப்பார முடியாது. அது பதட்டத்தினால் வாழ்கிறது. பதட்டம் தான் அதன் உணவு, ``நான் என்ற அகந்தை’’ இல்லாதபோது, பதட்டமும் இருக்காது. அப்பொழுது உங்களுள் எல்லாம் அடக்கம். பின்னர் கடந்த காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை. நீங்கள் ஆதி அந்தம் இல்லாதவர்கள் ஆகிறீர்கள். அதன் பின்னர் நடப்பதெல்லாம் ஒரு நிகழ்வு தான். எதையும் நீங்கள் செய்வதாகாது. எது ஒன்றும் உங்கள் மூலமாக நிறைவேற வேண்டியதில்லை. இவையெல்லாம் பொய்யான எண்ணங்கள். ஆன்மிகவாதிகள் கூட, இதே ரீதியில் ஏதோ செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியானால் ``நான் என்ற அகந்தை’’ அடித்தளத்தில் படிந்து, நன்மை செய்வது போல ஏமாற்றி, ஆபத்தாகிறது ``நான் என்ற அகந்தை’’ இருந்தால், செய்பவனும் செயலும் இருக்கும். இதில் பொருள் (object) தான் மாறியிருக்கிறதே தவிர செய்முறை அதுவாகவேத் தான் இருக்கிறது.
என்னைப் பொருத்தவரை நான் ``என்னை’’ என்று குறிப்பிடுவது யாரும் இல்லை. நான் இதை மொழிக்காகவும், நான் சொல்வதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு சொல்கிறேன். எனக்கு நீ என்றோ, நான் என்றோ குறிப்பிட்டுச் சொல்வதற்கு யாரும் இல்லை. ஆனால் மொழியில் அப்படி பேச சாத்தியம் இல்லை. அதனால்தான் உண்மையை மொழியின் வாயிலாக வெளிப்படுத்த முடியாது. உண்மை மொழி வடிவமாக முடியாது, ஏனெனில் மொழி உண்மை இல்லாதவர்களாலும், இல்லாத ஒன்றாலும் உருவாக்கப்பட்டது. இந்த உண்மையில்லாத ``நான் என்ற அகந்தையால்’’ உருவாக்கப்பட்டது தான் மொழி. மொழி ``நான் என்ற அகந்தையின்’’ வாயிலாக வந்ததினால், அதுவால் ``நான் என்ற அகந்தையை’’தாண்டிச் செல்ல முடியாது. அதனால் உங்களுக்கு ``நான்’’ என்று குறிப்பிடுவதற்கு யாரும் இல்லை என்று தெரிந்திருந்தாலும் கூட, மொழிக்காக நீங்கள் அப்படி உபயோகித்துதான் ஆக வேண்டும். அதனால்தான் நான் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கிறேன் ``நான்’’ என்று யாரும் இல்லை.
இந்த `என்னை’ என்பதை பொறுத்தவரை எதுவும் செய்யவேண்டியதில்லை. ஏனெனில் எல்லாம் தானாகவே நிகழும். நாமே நிகழ்கிறோம், நாமே ஒரு நிகழ்வு தான். இந்த பிரபஞ்சமே ஒரு நிகழ்வுதான், செய்தது அல்ல. அதனால் பழைய கொள்கையான `கடவுள் ஒரு படைப்பாளி’ என்பது, அர்த்தமுள்ளதாக எனக்கு தெரியவில்லை. நான் கடவுள்களை படைப்பாளி என்று சொல்லமாட்டேன். ஏனெனில் அப்படி சொல்வதில் ``நான் என்ற அகந்தை’’ வெளிப்படுகிறது. படைத்தான் என்ற கருத்தும், செய்தல் என்பதும் அகந்தையின் பிரதிப்பலிப்பு தான். நாம் எதையாவது `செய்வது’ போல, கடவுளும் உலகத்தை `செய்தார்’ என்றாகிறது. நாம் நம்முடைய குணங்களை இப்பிரபஞ்சத்தின் மேல் ஏற்றிவிட்டோம், அதனால் படைப்புப் படைத்தவன் என்று இரு கூற்றாகிறது (Dichotemy).
எனக்கு கடவுள் என்பது எது நடந்துக் கொண்டிருக்கிறதோ அதுதான் - படைப்பாளி அல்ல, ஆனால் நிகழ்ந்துக் கொண்டிருப்பவை. கடவுள் என்பது, ஆதி அந்தமில்லாமல் போய்க்கொண்டிருப்பது. எது நடந்தாலும், அது கடவுள்தான். நீங்களும், மற்றவர்களும் நிகழ்வுகள்தான். இந்த ஆதி அந்தமில்லாத நிகழ்வுகள்தான் கடவுள். மற்றபடி படைப்பாளியும் அல்ல, படைப்பும் அல்ல. இந்த இரு கூற்றே ``நான் என்ற அகந்தையால்’’ ஆனது - நாம் அதை இப்பிரபஞ்சத்தின் மேல் ஏற்றிவிட்டோம்.
ஒருமுறை உங்களுள் இரு கூற்றாக, செய்பவன், செய்தல் என்ற இரண்டில்லை என்பதனை தெரிந்துக் கொண்டால், பின்னர் எங்கேயும் செய்பவன், செய்தல் என்று இல்லை - எல்லாமே நிகழ்வுகள்தான் என்று புரியும். இது ஆதி அந்தம் இல்லாத நிகழ்வுகள்தான் என்று ஒருமுறை தெரிந்துவிட்டால் பின்னர் எந்த பாரமும் இல்லை. எந்த படபடப்பும் இல்லை. உங்கள் பிறப்பும் ஓர் நிகழ்வு, உங்கள் இறப்பும் ஓர் நிகழ்வுதான். நீங்கள் இங்கே இருப்பதும் ஓர் நிகழ்வு, நீங்கள் இங்கு இல்லாமல் போவதும் ஓர் நிகழ்வுதான். நீங்கள் எங்கும் இல்லை.
இப்படி ``நான்’’ என்று நினைக்கும் ``நான் என்ற அகந்தை’’ எங்கிருந்துவந்தது - நான் செய்கிறேன்? ’, அது உங்கள் நினைவாற்றலிலிருந்து வருகிறது.உங்கள் நினைவாற்றல் இந்த நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டே வருகிறது. நீங்கள் பிறந்தீர்கள். நீங்கள் குழந்தையாகிறீர்கள், பிறகு வாலிபம் வருகிறது, பின்னர் முதுமை வருகிறது. எல்லாம் நிகழ்கிறது - அன்பு நிகழ்கிறது, வெறுப்பு நிகழ்கிறது, அதை நினைவாற்றல் பதிவு செய்து கொண்டே வருகிறது. கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும்போது அந்த ஒட்டுமொத்த நினைவுகள், `நான்’ என்றாகிறது. `நான் ஒருவரை காதலித்தேன், இதை எங்கோ காதல் நிகழ்ந்தது என்று சொன்னால், இன்னும் பொருத்தமாகவும், சரியாகவும் இருந்திருக்கும். ஏனெனில் நான் எதையும் செய்யவில்லை. ஆனால் `நான் காதலித்தேன்’ என்ற நினைவாற்றலும், பிறப்பு இறப்புப் போல ஓர் நிகழ்வாகிறது.
இங்கு நடப்பதெல்லாம் நிகழ்வுகள்தான், செய்பவன் யாரும் இல்லை என்பதை ஒருவரால் 24 மணிநேரம் மட்டும் ஞாபகத்தில் வைத்திருக்க முடிந்தால் கூட, அவரால் முன்போல் திரும்ப இருக்க இயலாது. ஆனால் இதை ஒரு வினாடிக் கூட ஞாபகத்தில் வைத்திருப்பது கடினம்.
சம்பவங்கள் எல்லாம் நிகழ்வுகள்தான். நீங்கள் எதையும் செய்யவில்லை என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வதுதான் மிகக் கடினமானது. உதாரணத்திற்கு, நான் பேசுகிறேன். இதை `நான் பேசுகிறேன்’ என்று சொல்லி, அதையே `நான்’ பேசுகிறேன் என்ற அர்த்தத்தில் சொன்னால், நான் முழு விஷயத்தையும் தவறாக சொன்னதாக அர்த்தம். நான் அடுத்த வரி என்ன பேசப்போகிறேன் என்பது எனக்கே தெரியாது. அது வந்தவுடன்தான் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அதுவும் ஒரு நிகழ்வுதான். அதனால் அத்துடன் என்னை சம்பந்தப்படுத்த முடியாது. ஏதோ என் மூலமாக வருகிறது. நான் எதையும் செய்யவில்லை. ஏதோ என்னுள் நடக்கிறது.
இதுதான் வேதங்களெல்லாம் ஒருவருக்கும் சொந்தமில்லை என்று நாம் சொல்வதின் அர்த்தம். நாம் வேதங்களை யாரும் இயற்றவில்லை என்று சொல்கிறோம். இதன் மூலம் நாம் குறிப்பிடுவது யாரெல்லாம் வேதங்களை தொகுத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் ஏதோ நடக்கிறது என்ற உண்மை புரிந்திருக்கும். அவர்களெல்லாம் செய்பவர்கள் அல்ல, ஏதோ அவர்களிடம் வருகிறது. அவர்கள் ஒரு வழியாக, மூலமாக,ஊர்தியாக இருக்கிறார்கள். அப்படி ஊர்தியாவதும் ஒரு நிகழ்வுதான். அதுவும் அவர்களின் செயலால், அவர்கள் ஊர்தியாகவில்லை. இப்படி இல்லாவிட்டால் ஏதோ செய்ய வேண்டும் என்ற பொய்மை இதிலும் வேறு நிலையில் தொடரும்.
அதனால் உங்கள் செயல்களுள் ஆழமாக செல்லுங்கள், அங்கே நிகழ்வுகளை கண்டுக் கொள்வீர்கள். அங்கே செயல்கள் எதுவும் இருக்காது. ஏனெனில் அங்கே செய்பவன் யாரும் இல்லை. அதனால், எப்படி ஒருவரால் ஏன் என்று கேட்கமுடியும்? யாரால் இதற்கு பதில் சொல்ல முடியும்? வீடு காலியாகியுள்ளது. இந்த வீட்டிற்கு சொந்தக்காரனும் இல்லை. எல்லாம் நடந்துக் கொண்டேயிருக்கட்டும். வீட்டுக்காரன் இல்லாத வீடேக்கூட நிகழ்வுகளுக்கு தகுதியானது.
இதை இன்னும் சற்று தெளிவாகப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். `நாம் நடக்கும்போது நடப்பவன் இல்லை, நடை மட்டும்தான் இருக்கிறது’ என்று புத்தர் பலமுறை சொல்லியிருக்கிறார். இதை எப்படி புரிந்துக் கொள்வது? நானே இல்லையென்றால், என்னால் எப்படி நடக்க முடியும்? நடந்துப் பாருங்கள், நடக்கும்போது நீங்கள் எங்கேயென்று பாருங்கள் - உங்களால் நடையை மட்டும்தான் பார்க்க முடியும். ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது அதில் பேச்சாளர் இல்லை, பேச்சு மட்டும் தான் இருக்கிறது என்று சொன்னால் நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால் பேசிக்கொண்டிருக்கும் செய்கையில் நீங்கள் ஆழ்ந்து உள்ளே சென்றால், அங்கே பேச்சாளர் இல்லை, பேச்சுதான் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உண்மையில் கவிஞன் என்று யாரும் இருந்ததில்லை, கவிதைகள் தான் நிகழ்ந்திருக்கிறது. ஓவியன் என்று யாரும் இல்லை, ஓவியங்கள்தான் நிகழ்ந்திருக்கறது.ஆனால் இதில் ஊர்தியே சொந்தக்காரனாகிறது.
இந்த நினைவாற்றல்தான் பொய்மையை உருவாக்குகிறது. ஆனால் இந்த பொய்மைகள் எனக்கில்லை. நினைவாற்றலால் என்னை சிக்க வைக்க முடியாது. அதன் பிடியிலிருந்து நான் வெளியேறி விட்டேன். அதனால் எல்லாம் நடக்கிறது. ஆனால் செய்பவர் யாரும் இல்லை. எதுவெல்லாம் நடக்க வேண்டுமோ அது நடக்கும். நான் அதை ஆரம்பிக்கவும் மாட்டேன், அதன் எஐமானனாகவும் (Master) மாட்டேன். ஒருமுறை உங்களுக்கு நீங்கள் இல்லையென்று தெரிந்துவிட்டால், நீங்கள் வேறொரு அர்த்தத்தில் எஐமானனாகிறீர்கள். நீங்கள் இல்லாதபோது நீங்கள் எதிர்மறையாக அடிமையாக முடியாது. இப்பொழுது உங்களின் சுதந்திரம் முழுமையானது. இப்போது உங்களை யாரும் அடிமைப்படுத்த முடியாது. இப்போது எந்தவிதமான அடிமைத்தனமும் இருக்காது. அதற்கான எந்த சாத்தியக்கூறும் இருக்காது. இது முரண்பட்டவை போல் தோன்றினாலும், உண்மையில் -எவனொருவன் எஐமானனாக முயற்ச்சிக்கிறானோ அவன் எப்பொழுதும் அடிமையாகிவிடும் அபாயத்தில் இருக்கிறான். ஆனால், எவனொருவன் தன்னைத்தானே இழக்கிறானோ, எவனொருவன் அவன் தேர்ச்சிப் பெற்றவைகளையும், அவன் முயற்சிகளையும், அவனுடைய செய்பவனையும் இழக்கிறானோ, அப்போது அவன் எல்லா அடிமைத் தனத்திற்கும் அப்பாற்பட்டவனாகிறான். அவன் சுதந்திரம் அடைகிறான். அவன் வானத்தைப் போல சுதந்திரமாகிறான். அவன் சுதந்திரமாக இருக்கிறான் என்பதைவிட, அவன் சுதந்திரமாகவே ஆகிறான் என்பதுதான் சரி, ஏனெனில் ஒருவன் சுதந்திரமாக இருக்கும்போது கூட அதில் காரணப்பொருள் இருக்கும். அதனால் அவனே சுதந்திரம் என்பது சரியாக இருக்கும். அதனால் உங்களுக்குப் பிடித்திருந்தால் நான் சுதந்திரம் என்று சொல்வேன். இதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனெனில் ஏதாவது காரணம் இருந்தால் பின்னர் நீங்கள் சுதந்திரமாக இல்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் அந்த காரணத்திற்கு கட்டுப்பட்டு அந்த காரணத்துடன் கட்டப்படுகிறீர்கள். நீங்கள் செய்வதற்கு ஏதாவது இருந்தால், நீங்கள் அதனுடன் கட்டப்படுகிறீர்கள். பின்னர் சுதந்திரமாக இருக்க முடியாது.
நான் முழுமையான சுதந்திரம். ஏனெனில் எனக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. நானொரு எதிர்நோக்கு,எல்லாம் தானாக நிகழும், நான் அதை ஏற்றுக்கொள்வேன். எதுவுமே நடக்கவில்லையென்றாலும் நான் அந்த நடக்காதவைகளை ஏற்றுக்கொள்வேன். நான் காத்துக்கொண்டேயிருக்கிறேன். இந்த காத்திருத்தல் ஒருவரை இப்பிரபஞ்சத்தின் தெய்வீக சக்திக்கு ஒரு வழியாக்குகிறது. செய்பவன் இல்லாத போது எவ்வளவோ உங்கள் மூலம் நடக்கும். ஆனால் செய்பவன் இருந்தால் உங்கள் மூலம் எதுவும் நடக்காது. செய்பவன் இருக்கும்போது நீங்கள் இருக்கிறீர்கள். சாத்தியமில்லாதவற்றை நீங்கள் செய்துக் கொண்டிருக்கிறீர்கள், ஏனெனில், செய்பவன் சாத்தியமில்லாதபோது, செய்கைகள் சாத்தியமாகாது.
நீங்கள் பயனற்ற முயற்சியில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளீர்கள். இதன் விளைவு உங்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தரும். நீங்கள் இல்லாதபோது நீங்கள் எப்பொழுதும் வெற்றியடைவீர்கள். உங்களுக்கு தோல்வியென்பதே இருக்காது. ஏனெனில் நீங்கள் எதுவாக வேண்டும் என்றும் நினைத்ததில்லை; அப்படியே தோல்வி நிகழ்ந்தாலும், அது ஒரு நிகழ்வுதான். அதேபோல் வெற்றி நிகழ்ந்தாலும் அதுவும் ஒரு நிகழ்வுதான். இவ்விரண்டுமே நிகழ்வுகள்தான் என்கிறபோது இவ்விரண்டிற்கும் நடுநிலை வகிப்பீர்கள். எது நடந்தாலும், இதில் எது வந்தாலும் வித்தியாசமொன்றும் இருக்காது. இதில் ஏதோ ஒன்றே போதுமானது.
அதனால் `நான்’ என்று நான் சொல்லும்போது அதில் எல்லோரும் அடக்கம் என்று சொல்லி நிறைவு செய்கிறேன். நான் விழிப்புணர்வு, சுதந்திரம் என்ற இவ்விரண்டு வார்த்தைகளையும், இந்த இரகசியத்தை உங்களுக்கு சுலபமாக புரியவைக்கத்தான் உபயோகப்படுத்துகிறேன். இல்லையெனில் இவ்விரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான். விழிப்புணர்வுதான் சுதந்திரம், சுதந்திரம் தான் விழிப்புணர்வு. சுதந்திரம் குறையும் அளவிற்கு ஐம்புலன்களால் உணரக்கூடிய பொருட்கள் இருக்கும். சுதந்திரம் அதிகமாகும் அளவிற்கு விழிப்புணர்வும் அதிகமாகும்.
நாம் இந்த மேஜையை `பொருள்’ என்று சொல்வதற்கு காரணம் அதனால் தானாக நகர முடியாது. அதேபோல் நாம் நீங்கள் உணர்வு (Conscious) உடையவர்கள் என்று சொல்லும்போது, உங்களால் ஓரளவிற்கு சுதந்திரமாக நகர முடிகிறது. ஆனால் நீங்கள் விழிப்புணர்வாகவே ஆகும்போது நீங்கள் ஆழமாக செல்ல செல்ல, உங்களுக்கு மூலம் (Source) தெரிந்துக் கொண்டேயிருக்கும்.
நீங்கள் விழிப்புணர்வு தான் என்று எனக்கு தெரியும், உணர்வுடைய உயிர் அல்ல. விழிப்புணர்வு என்பது உங்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு குணமல்ல, நீங்களே விழிப்புணர்வு. நீங்கள் முழுவதும் சுதந்திரமானவர்கள்.
அதனால் எங்கிருந்தாலும் தொடருங்கள். ஒன்று இன்னும் சுதந்திரமாக இருங்கள், அல்லது இன்னும் விழிப்புணர்வு மிக்கவராக இருங்கள், மற்றவைகள் தானாக விளையும். நீங்கள் அதிக சுதந்திரத்துடன் இருந்தால், நீங்கள் அதிக விழிப்புடன் இருப்பீர்கள். நீங்கள் அதிக விழிப்புணர்வுடன் இருந்தாலே ஒழிய, உங்களால் அதிக சுதந்திரமாக இருக்க இயலாது. நீங்கள் அதிக விழிப்புணர்வுடன் இருங்கள், நீங்கள் அதிக சுதந்திரம் அடைவீர்கள். இதற்கு மாறாக இருக்க இயலாது. ஏனெனில் விழிப்புணர்வுதான் சுதந்திரத்தை உருவாக்குகிறது. நீங்கள் முழுமையான உணர்வுடன் இருக்கும்போது நீங்கள் முழுமையான சுதந்திரம் அடைகிறீர்கள். பின்னர் நீங்கள் இருப்பதற்கு எந்த நோக்கமும் இல்லை, எந்த காரணமும் இல்லை. பின்னர் எல்லாமே நிகழ்வுகள்தான். அந்த நிகழ்வுகள்தான் லீலை.
அன்புள்ள ஓஷோ, நீங்கள் சுயத்தை அறிந்தவரா? (self – realized) உங்களுக்கும், இப்பிரபஞ்சத்திற்கும், இம்மக்களுக்கும் உள்ள உறவுமுறையை நீங்கள் எப்படி விளக்குவீர்கள் ?
``சுயத்தை அறிதல்’’ என்பது சரியான வார்த்தை அல்ல, ஏனெனில் அறிதல் என்பதே ``சுயம்’’ (Self) என்பதை கடந்து செல்லுதல்தான். அதனால் ``சுயத்தை அறிதல்’’ என்ற வார்த்தை முன்னுக்குப் பின் முரண்பட்டது. நீங்கள் அறிந்து கொண்டால், உங்களுக்கு ``சுயம்’’ இல்லை என்பது தெரியும். நீங்கள் அறிந்து கொள்ளாவிட்டால், பின்பு ``சுயம்’’ இருக்கிறது. அதனால் ``சுயம்’’ என்ற நிலையில் இருப்பது அறியாமை, அறிந்து கொண்டுவிட்டால் பின்பு ``சுயம்’’ என்பது இல்லை. அதனால் நான் என்னை சுயத்தை உணர்ந்தவன் என்று சொல்ல இயலாது. என்னால் இப்பொழுது ``சுயம்’’ என்பது இல்லை என்றுதான் சொல்லமுடியும் !
``சுயம்’’ என்பது இருந்தது, ஆனால், அது கதவு வரைதான் இருந்தது. நீங்கள் அறிந்துக் கொள்ளுதல் என்ற கோவிலுள் நுழைந்த வினாடியிலிருந்து, அதை உங்களால் காண முடியாது. அது கதவுவரை, உங்களைத் தொடர்ந்து வரும் நிழல், அது தொடர்வதோடு மட்டுமில்லாமல், அது உங்களைப் பற்றிக்கொள்ளவும் செய்கிறது - ஆனால் கதவு வரை மட்டும் தான், அதனால் கோவிலுள் நுழையமுடியாது. நீங்கள் அதைக் காப்பாற்ற வேண்டுமானால், நீங்களும் வெளியிலேயே தங்க வேண்டும். ``சுயம்’’ என்பதுதான் ஒருவன் கடைசியாக தூக்கி எறியவேண்டியது. ஒருவனால் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட முடியும், ஆனால் ``சுயம்’’ என்பதை எறிவது முடியாத ஒன்றாகிறது, ஏனெனில் சுயத்தை அறிய கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இந்த ``சுயம்’’ சுயத்திற்காக எடுத்த முயற்சிகளே. இதை அறிந்த வினாடியிலிருந்து நீங்கள் இருக்கமாட்டீர்கள், நீங்கள் முயற்சிக்க மாட்டீர்கள்.
அதனால், எல்லா தலைசிறந்த ஆசிரியர்களும், தவறாக வழிகாட்டக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். சுயத்தை அறிதல் என்பது தவறாக வழிகாட்டக்கூடிய வார்த்தை. ஆனால் ``சுயம் இல்லை என்பதை அறிதல்’’ (No Self Realization) என்று அவர்கள் சொன்னால் உங்களுக்குப் புரியாது. அது அசட்டுத்தனம் ஆகிவிடும். ஆனால், சுயம் இல்லை என்பதை அறிதலே உண்மையானது. புத்தர்தான் ``அனட்டா’’ (Anatta), ``சுயம் இல்லை’’ என்பதை உபயோகப்படுத்தினார். புத்தர் மட்டுமே உபயோகப்படுத்தினார். அதனால்தான் புத்தரை இந்தியாவிலிருந்து வேருடன் பிடுங்கி எறிந்தார்கள். அவரை வெளியேற்றினார்கள், பின்னரும் ``சுயத்தை அறிதல்’’ என்ற வார்த்தையை புத்தமதத்தினர் பயன்படுத்தும் வரை, அவர்களால் தங்கள் மதத்தின் வேரை நடமுடியவில்லை. சீனாவிலும் (China) , ஜப்பானிலும் (Japan) புத்தமதம் மீண்டும் வந்தது, அது மீண்டும் ``சுயத்தை அறிதல்’’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்த ஆரம்பித்தது. புத்தர் `` சுயம் இல்லை என்பதை அறிதல்’’ என்றே பயன்படுத்தினார். நானும் அவ்வாறே ``சுயம் இல்லை என்பதை அறிதல்’’ என்றே பயன்படுத்துகிறேன். அறிதல் என்பது இது மட்டும்தான்.
``சுயம்’’ எனபது இல்லாத நிமிடத்திலிருந்து நீங்கள் இப்பிரபஞ்சமாகிறீர்கள். இது ஒரு உயர்ந்த விளையாட்டு. ``சுயம்’’ என்பதை அறிந்து கொள்வதுதான், ஐயம் ஏதுமின்றி உயர்ந்த, இறுதியான விளையாட்டு. ``சுயம்’’ என்பது பாதுகாக்க வேண்டிய ஒன்றல்ல; அது அழிக்கப்பட வேண்டிய ஒன்று. அது உங்களுடைய உள்ளார்ந்த சக்தி வெளிப்படவும், இறுதியான அறிதலுக்கும், தடையாக உள்ளது.
அதனால் நான் என்னை ``சுயத்தை உணர்ந்தவன்’’ என்று சொல்லமுடியாது. நான் ``சுயம் இல்லை என்பதை அறிந்தவன்’’ என்றே சொல்லுவேன், மேலும், இதை அறிவது மட்டுமே சாத்தியமானது. இதைத் தவிர வேறு அறிதல் இல்லை. யாரெல்லாம் ``சுயத்தை அறிதல்’’ எனபதற்கு உரிமைக் கொண்டாடுகிறார்களோ, அவர்களெல்லாம் ``சுயம்’’ என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்களேத்தவிர, ``அறிதல்’’ என்பதற்கு அல்ல. நான் ``அறிதல்’’ என்பதற்குத்தான் முக்கியத்துவம் தருகிறேன். அதனால்தான் நான் அழுத்தமாக ``சுயம்’’ என்பதை மறுக்கிறேன்.
எனக்கும், இப்பிரபஞ்சத்திற்கும், மற்ற மக்களுக்கும் இடையே உள்ள உறவு முறை என்ன? இரண்டு ``சுயத்திற்கிடையே தான்’’ உறவுமுறை இருக்கிறது. நான் யாருடனும் உறவு இல்லாதவன்,உறவு முறை எதுவும் இல்லாதவன். உறவுமுறை என்பது இருவர்களுக்கிடையே இருப்பது. இது முரண்பட்டது போல் இருந்தாலும், எல்லா உறவு முறையிலும், நீங்கள் உறவு இல்லாமல் தான் இருக்கிறீர்கள். நீங்கள் எப்படிப்பட்ட உறவுமுறையில் இருந்தாலும், நீங்கள் உறவு இல்லாமல்தான் இருப்பீர்கள், ஏனெனில் உறவு முறை இருவர்களுக்கிடையே இருப்பது. அதில் இருவர் இருப்பார்கள். அதனால் உறவுமுறை என்பது இருமையின் (Duality) முன்தோற்றத்தை மறைப்பதுதான். சில வினாடிகளுக்கு உறவு முறையில் இருப்பது போல திருப்தியடைவீர்கள், ஆனால் மறுபடியும் நீங்கள் இருக்கிறீர்கள், நீங்கள் உங்களிடமே திரும்புகிறீர்கள், பின்னர் உறவுமுறை இல்லை.
உதாரணத்திற்கு, நாம் சாதாரணமாக காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே, அந்தக் காதலில் இருக்கும் பொழுது, நாம் உறவில் இருப்பதுபோல் தோன்றுகிறது. நாம் இதுதான் உறவுமுறை என்று நம்பும் அளவிற்கு ஒரு பொய்யான உறவு முறையை உருவாக்குகிறோம். ஆனால் உண்மையில் நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம். அந்த இரண்டும், இரண்டாகவேத்தான் இருக்கும். எவ்வளவு அருகில் இருந்தாலும் கூட, அந்த இரண்டு, எப்பொழுதும் இரண்டாகவேத்தான் இருக்கும். உடல் உறவில் கூட, அவர்கள் இரண்டாகவேத்தான் இருப்பார்கள். அந்த இரண்டு, ஒன்றாவது போல் ஒரு பொய்யான தோற்றத்தைதான் தருகிறது. இரண்டு ``சுயத்திற்கிடையே’’ ஒன்றாகுதல் இருக்க இயலாது. ``சுயம்’’ என்பது இல்லாத இருவர்களுக்கிடையேதான், ஒன்றாகுதல் இருக்க முடியும்.
என்னைப் பொருத்தவரை, எனக்கு இப்பிரபஞ்ச உண்மைகளோடு எந்த உறவும் இல்லை, உறவு இல்லவே இல்லை. நான் இப்படி சொல்வதினால், நான் தனியாக இருக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. நான் இப்படி சொல்வதின் அர்த்தம், உறவுமுறை வைத்துக்கொள்ள யாரும் இல்லை என்பது தான். இப்பிரபஞ்ச உண்மைகளைப் பொறுத்தவரை, நான் ஒன்று, இப்பிரபஞ்ச உண்மைகள் என்னுள் ஒன்றாகிறது.
என் பக்கத்திலிருந்து, நான் ஒன்றுதான், ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பக்கத்தில் இருந்து பார்க்கும்பொழுது, நான் ஒன்றல்ல. அவர்களுக்கு உறவு உண்டு. சிலர் என்னுடன் நண்பர்களாகவும், சிலர் பகைவர்களாகவும், சிலர் என்னுடன் சகோதரர்களாகவும், சிலர் சிஷ்யர்களாகவும் என்னுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால், என்னுடன் உறவு வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு அவர்களுடன் எந்த உறவு முறையும் கிடையாது. என்னுள் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அனைத்தும், அவர்களையும் உறவில்லாமல் செய்வதற்குத்தான். ஆனால் இதற்கு அவர்களால் எந்த முயற்சியும் எடுக்க இயலாது. இதுதான் ``சுயம் இல்லை’’ என்பதை அறிதலாகும்.
யார் ஒருவராலும் சிஷ்யராகவும் இருக்க இயலாது, யார் ஒருவராலும் குருவாகவும் இருக்க இயலாது என்பது அவர்களுக்குத் தெரிந்தால், யார் ஒருவராலும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ள முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்தால், அப்பொழுதான் ``சுயம்’’ என்பது விழுந்து, உங்கள் சூன்யம் (emptiness) மூடப்படாமல் நிர்வாணமாகிறது. உங்களுக்கு ``சுயம் என்ற எல்லையை கொடுக்கும் அளவிற்கு எந்த துணிகளும் இல்லை. உங்களுடைய முழுமையான நிர்வாணத்தில், உங்களுக்கு சுயம் இல்லை என்று தெரியும்பொழுது, நீங்கள் இருப்பீர்கள், ஆனால் ஒரு விண்வெளியாகவும், ஒரு உள் வானமாகவும், சூன்யமாகவும் இருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் ஒன்றாகுகிறீர்கள். அல்லது அப்பொழுது தான் நீங்கள் உண்மையாக உறவு கொள்கிறீர்கள் என்று சொல்லுவேன். அவ்வாறு ஒன்றாகுதல் நிகழும்பொழுது, ஒருவருக்கு “சுயம்” என்பது இருக்காது.
நீங்கள் என்னிடம், எனக்கும், இப்பிரபஞ்சத்திற்கும், இம்மக்களுக்கும் இடையே உள்ள உறவுமுறை என்ன என்று கேட்டீர்கள். எனக்கு இப்பிரபஞ்சமும், இம்மக்களும், இவ்விரண்டும் இரண்டல்ல. இப்பிரபஞ்சம் பலவிதமாக வடிவெடுக்கிறது, இதில் ஒரு வடிவம்தான் இந்த மக்கள். இப்பிரபஞ்சம் பலவிதமாக வடிவெடுக்கிறது -சூரியன், நட்சத்திரங்கள், பூமி, மரங்கள், மிருகங்கள், மக்கள். இவை நிகழும் தன்மைதான் (Frequencies) மாறுபடுகிறதே தவிர, தெய்வீகத்தன்மை எல்லாவற்றிலும் ஒன்றுதான். அதனால் எனக்கு இப்பிரபஞ்சமும், இம்மக்களும் வெவ்வேறு அல்ல.
என்னவெல்லாம் நான் முன்பு சொன்னேனோ, அவையெல்லாம் நான் யோசித்து சொன்னதல்ல. அதுவெல்லாம் உண்மை. ஆனால், நான் யோசித்தால் - உங்கள் பக்கத்திலிருந்து நீங்கள் நினைப்பதை நான் புரிந்துகொள்ளவேண்டுமானால், நான் யோசித்துத்தான் ஆக வேண்டும் - பின்னர் என்னுடன் நீங்கள் உறவு வைத்திருப்பீர்கள், ஏனெனில் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் இருக்கும் வரை நீங்கள் உறவில் தான் இருப்பீர்கள். இது ஒரு கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது. தினமும் ஒவ்வொரு வினாடியும் இது கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது.
நீங்கள் என்னுடன் உறவு கொண்டுள்ளதாக உணர்கிறீர்கள். நீங்கள் எனக்கு சொந்தமாக உணர்கிறீர்கள். பின்பு, நான் உங்களுக்கு சொந்தமாக வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் என்னுடன் உறவுமுறை வைத்துக் கொண்டிருப்பதால், நானும் உங்களுடன் உறவுமுறை வைத்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இந்த எதிர்பார்ப்பினால், நீங்கள் கட்டாயம் ஏமாற்றம் அடைவீர்கள் என்பது எனக்குத் தெரியும். “சுயம்” இருக்கும் ஒரு மனிதருக்கு இது கட்டாயம் ஏமாற்றமாகத்தான் இருக்கும், புரிய நீண்ட காலமாகும். ஆனால், நீங்கள் சுயம் இல்லாதவராக இருந்தால், இது புரிய சிறிது நேர இடைவெளிக் கூட ஆகாது. ஒவ்வொரு வினாடியும் ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஏனெனில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறாது. அதை நிறைவேற்றுவதற்கு யாரும் இல்லை.
அதனால் நான் மிகவும் பொறுப்பற்றவன், ஏனெனில் பொறுப்பாக இருப்பதற்கு யாரும் இல்லை. தக்க செயல்கள் இருக்கின்றன (Responses), ஆனால் பொறுப்பாளி என்று யாரும் இல்லை. அதனால் ஒவ்வொரு செயலும், தனித்து தானாக இயங்கக்கூடியது. அது வரிசையாக தொடர்ந்து இருக்க இயலாது. அதனால் எதுவும் ஒரு வினாடியிலிருந்து இனி தொடரும் என்று உங்களால் எதிர்பார்க்கமுடியாது. அது எனக்கேக்கூட தெரியாது. செயல்கள் அனைத்தும் தனித்து தானாக இயங்கும்பட்சத்தில், அவை ஒவ்வொன்றும், தனக்குத் தானே முழுமை பெற்றது, அவை எவ்விதத்திலும் கடந்த காலத்துடனோ அல்லது எதிர்காலத்துடனோ தொடர்புடையது அல்ல.
“ நான் என்ற அகந்தை” (Ego) தொடர்ச்சியான சம்பவங்களால், நிகழ்வுகளால் நினைவாற்றலினால் ஆனது. இது இவ்வாறு இருப்பதின் காரணம் நீங்கள் தொடர்ச்சியில் இருப்பதுதான் - மேலும் நீங்கள் என்னையும், அத்தொடராக ஆக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால் அது கடினமாகிறது. அதனால் எல்லோருமே, இப்போதோ அல்லது மற்றொரு சமயத்திலோ என்னிடம் கோபப்படுவீர்கள், ஏனெனில் என்னுடைய செயல்கள் அனைத்தும், தனித்துத் தானாக இயங்குகிறது, மேலும் அது வரிசையாக தொடர்ந்து இயங்கும் ஒன்றல்ல. வரிசையில் தொடர்ந்து வரும் செயல்கள் பொறுப்பாகிவிடும். பின்பு உங்களால் நம்ப முடியும்.
நான் மிகவும் நம்பத்தகாதவன். உங்களால் என்னை நம்பவே முடியாது - என்னாலேயே என்னை நம்பமுடியாது. என்ன நடக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. நான் முழுவதும் வெளிப்படையாக, என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறேன். நான் உறவுமுறை என்ற ரீதியில் யோசிப்பதேயில்லை, என்னால் யோசிக்கவே முடியாது, இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால், நான் ஒன்றாகும் விதத்தில் வாழ்கிறேன்.
எப்பொதெல்லாம் நீங்கள் என் அருகில் இருக்கிறீர்களோ, அப்போதெல்லாம் நான் உங்களுடன் உறவில் இருப்பதாக அர்த்தம் கிடையாது. ஆனால் அப்பொழுது நான் உங்களுடன் ஒன்றாகுகிறேன். இந்த ஒன்றாகுதலை, நீங்கள் அன்பு என்று தவறாக கருதுகிறீர்கள். ஆனால், இந்த ஒன்றாகுதல் அன்பும் அல்ல, வெறுப்பும் அல்ல, ஏனெனில் அன்பாகத் தெரிபவையெல்லாம், எந்த வினாடியிலும் வெறுப்பாக மாறக்கூடியவை. ஆனால் இந்த ஒன்றாகுதல் வெறுப்பாக மாறவே முடியாது. நீங்கள் அருகிலும் இருக்கலாம், தொலைவிலும் இருக்கலாம், நீங்கள் நண்பராகவும் இருக்கலாம், பகைவராகவும் இருக்கலாம், ஆனால் இதுவெல்லாம் எந்த மாற்றத்தையும் உண்டாக்காது. என்னை பொறுத்தமட்டில், நீங்கள் என்னிடம் வந்தாலும், என்னை விட்டுப் போனாலும், அதனால் எந்த வித்தியாசம் இருக்காது.
உறவுமுறை நிபந்தனைகளுடையது, ஒன்றாகுதல் நிபந்தனைகள் ஏதும் இல்லாதது. உறவுமுறை எப்போதும் நிபந்தனைகளுடன்தான் இருக்கிறது. நிபந்தனைகளில் ஏதாவது மாற்றம் இருந்தால், உறவுமுறையிலும் மாற்றம் இருக்கும். எல்லாம் எப்போதும் எரிமலையின் மீதே இருந்து வருகிறது. எல்லா உறவுமுறைகளுமே எப்போதும் நிரந்தரமில்லாமல் தடுமாறிக் கொண்டேயிருக்கிறது. எப்போதும் படிப்படியாக செத்துக் கொண்டேயிருக்கிறது, எப்போதும் மாறிக் கொண்டேயிருக்கிறது. அதனால் எல்லா உறவுமுறைகளும் பயத்தை உண்டாக்குகிறது, ஏனெனில் அது எப்போதும் உடையும் அபாயத்தில் இருக்கிறது. அதனால் பயம் அதிகமாகும் அளவிற்கு நீங்கள் அதிகமாக அதைப் பற்றிக் கொள்கிறீர்கள், நீங்கள் அதிகமாகப் பற்றிக் கொள்வதின் மூலம் நீங்கள் அதிகமான பயத்தை உண்டாக்குகிறீர்கள். ஆனால் ஒன்றாகுதல் என்பது முற்றிலும் நேர் எதிர்மறையானது. ஒன்றாகுதல் நிபந்தனைகள் இல்லாதது. அது இருப்பதற்குக் காரணம் அதில் நிபந்தனைகள் இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை, நிறைவேற்ற ஏதும் இல்லை, எதிர்கால பலன் என்று எதுவும் இல்லை. இது கடந்தகால நிபந்தனைகளுக்கு உட்பட்டதும் அல்ல, இதற்கு எதிர்கால குறிக்கோள்களும் இல்லை. இது இந்த கணத்திற்குரியது. தனித்துத்தானாக இயங்கக்கூடியது, இதற்கு கடந்தகாலத்துடனும் தொடர்பில்லை, எதிர்காலத்துடனும் தொடர்பில்லை.
இப்பிரபஞ்சத்துடனும், இம்மக்களுடனும் ஒன்றாகுதலை என்னால் உணர முடிகிறது. மேலும், இப்பிரபஞ்சத்திற்கும் இதே உணர்வுதான் இருக்கிறது. நான் அத்துடன் ஒன்றாகுதலை உணர்வதுபோல், இப்பிரபஞ்சமும் ஒன்றாகுதலை உணர்கிறது.முன்பு ஒருபொழுது இதை நான் உணரவில்லை, ஆனால் இப்பிரபஞ்சமும் இதே உணர்வுடன்தான் எப்பொழுதும் என்னுடன் இருந்து வந்திருக்கிறது என்பது இப்பொழுது எனக்குத் தெரியும்.
ஒன்றாகுதல் எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும்; அது எப்போதும் ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. இப்பிரபஞ்சத்திற்காக ஆதி அந்தமில்லாத காத்திருப்பு இருந்திருக்கிறது. அதை இப்போது இப்பிரபஞ்சத்திடம் என்னால் உணர முடிகிறது, அதை என்னால் மக்களிடமும் உணர முடிகிறது. யாரேனும் என்னுடன் ஒன்றாகுதலை உணரும் வினாடியிலிருந்து, அவர்கள் இப்பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாகிறார்கள். பின்னர் அவர் ஒரு மனிதரல்ல, அவர் பரந்த பிரபஞ்சமாகவே ஆகிறார். இந்த ஒன்றாகுதலை ஒருமுறை, ஒரு மனிதரோடு உணர்ந்துவிட்டால், உங்களுக்கு அந்த சுவை தெரிந்துவிடும். உங்களுக்கு பேரானந்தத்தின் சுவை தெரிந்துவிடும். பின்னர் நீங்கள் “எல்லாம்” என்பதற்குள் குதிக்கலாம்.
அதனால், இதுதான் என்னைச் சுற்றி நடந்துக் கொண்டிருக்கிறது. இதை நான் செய்கிறேன் எனறு நான் சொல்லவில்லை - இதுதான் என்னைச் சுற்றி நடந்துக்கொண்டிருக்கிறது.
நான் உங்களுக்கு இந்த ஒன்றாகுதலின் சுவையைக் கொடுப்பதற்காக என் அருகில் அழைப்பேன். அதை உங்களால் ஒரு வினாடிக்கு உணரமுடிந்தால் கூட, உங்களால் பின்பு பழையபடி இருக்க இயலாது. இது ஒரு மிகப் பொறுமையான முயற்சி -தெரியாதது, ஊகிக்க முடியாதது. யாராலும், எப்பொழுது அந்த நிமிடம் அருகில் வரும் என்பதை சொல்லமுடியாது. சில நேரங்களில் ஒன்றாகுதலை உணர,உங்கள் மனநிலை ஒத்து இணக்கமாக இருக்கும். அதனால்தான் நான் தியானம் செய்யும்படி வற்புறுத்துகிறேன், ஏனெனில், தியானம் என்பது மனதை ஒரு உச்சிக்கு இணக்கமாக்கி, ஒன்றாகுதலுள் குதிக்க வைப்பதுதானேத்தவிர வேறொன்றுமில்லை.
என்னைப் பொறுத்தவரை தியானம் என்பது மனதை ஒன்றாக்குதலை நோக்கி இணக்கம் ஆக்குவதுதான். மனதை ஒன்றாக்குதலை நோக்கி திறந்து வைப்பதுதான். உங்கள் தியானம், எப்பொழுது உங்களையும் கடந்து செல்கிறதோ, அப்பொழுதுதான் இது சாத்தியமாகும்; இல்லையென்றால் இது சாத்தியமாகாது. அது உங்களுக்கு கீழே இருந்தால் - நீங்கள் தான் அதை செய்கிறீர்கள், நீங்கள்தான் கட்டுப்படுத்துபவராக இருக்கிறீர்கள் - அப்படியானால் அது நடக்காது, ஏனெனில் நீங்கள்தான் வியாதி. அதனால்தான் நான் உங்களை தியானத்திற்கு தூண்டுகிறேன், அதில் ஓரளவிற்கு மேல் போய்விட்டால், நீங்கள் இருக்கமாட்டீர்கள், தியானம் உங்களை நடத்திச் செல்லும். போகப்போக நீங்கள் தள்ளப்படுவீர்கள். கண்டிப்பாக நீங்கள்தான் தியானத்தை ஆரம்பிப்பீர்கள், ஏனெனில் அதைத்தவிர வேறு வழியில்லை. நீங்கள் தான் ஆரம்பிக்க வேண்டும், ஆனால் நீங்கள் தியானத்தை முடிக்கமாட்டீர்கள். நீங்கள் ஆரம்பிப்பீர்கள், ஆனால் நீங்கள் அதை முடிக்கமாட்டீர்கள். நடுவில் எங்கோ அந்த நிகழ்வு நிகழும். தியானம் உங்களைப் பிடித்துக் கொள்ளும். “நீங்கள்” எறியப்படுவீர்கள், தியானம் உள்ளே வரும். பின்பு நீங்கள் இப்பிரபஞ்சத்தோடு இணக்கப்படுவீர்கள். பின்பு நீங்கள் ஒன்றாய் இருப்பீர்கள்.
ஒன்றாகுதல்தான் முக்கியமே தவிர, உறவுமுறை அல்ல. இந்த உறவுமுறைதான் “சன்சாரா” (Sansara) இவ்வுலகம், இந்த உறவுமுறைகளால் நாம் திரும்பத் திரும்ப பிறக்கவேண்டும். ஒருமுறை உங்களுக்கு ஒன்றாகுதல் தெரிந்துவிட்டால், பின்பு உங்களுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. பின்பு உங்களை தவிர்த்து யாரும் இல்லை. எல்லோரும் உங்களுள் அடக்கம். நீங்களே இப்பிரபஞ்சமாகிவிட்டீர்கள். ஒன்றாகுதல் வருவதற்கு முன்பு, தனி மனிதன் போகவேண்டும், தெய்வீகம் வருவதற்கு முன்பு, “நான் என்ற அகந்தை” போகவேண்டும்.
“நான் என்ற அகந்தைதான்”, எல்லா உறவுமுறைகளுக்கும் மூலாதாரம். உறவுமுறைதான் உலகம். கடவுள் உறவுமுறை அல்ல, தெய்வீகம் உறவுமுறை அல்ல. தெய்வீகத்திற்கு “சுயம்” என்பது கிடையாது. அப்படியானால் “உங்களால்” அத்துடன் ஒன்றாக முடியாது. அதனால், ஒரு பக்தனால் (Bhakta), ஒரு வழிபடுபவனால், இப்பிரபஞ்சத்தை அடையவே முடியாது. ஏனெனில் அவன் கடவுளை உறவுமுறை ரீதியில் நினைக்கிறான் - கடவுளை தந்தையாகவும், கடவுளை காதலனாகவும், கடவுளை அன்புக்குரியவனாகவும் நினைக்கிறான். ஆக அவன் உறவுமுறை ரீதியிலேயே நினைக்கிறான். அவன் “சுயம்”, “மற்றவர்” என்ற ரீதியில் தன்னையும், கடவுளையும் நினைத்துக்கொண்டிருக்கிறான். அவனால் “நான் என்ற அகந்தையை ” தாண்டிச் செல்ல இயலாது. இது சற்று நுண்ணிய கருத்து, கடவுளை வழிபடும் பக்தன் எப்பொழுதும் சரணடைய போராடுகிறான். பக்தி, பக்தியின் பாதை எப்பொழுதும் சரணடைதலின் பாதையே. அவன் சரணடைய முயற்சிக்கிறான், ஆனால் மற்றொருவரிடம்.
நீங்கள் மற்றொருவரிடம் சரணடைய முயற்சிக்கும்போது, “மற்றவர்” என்பது இருக்கிறது. நீங்களே இல்லாதபோது மற்றவர் இருக்கமுடியாது, அதனால், நீங்கள் நிழலாக இருந்துக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் உங்களை மறந்து விடுவீர்கள். ஆனாலும் மறப்பது சரணடைதல் ஆகாது. நீங்கள் தெய்வத்தையே அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பதினால் , இப்போது உங்களுக்கு உங்களைப்பற்றியே ஞாபகம் இல்லை, ஆனாலும் நீங்கள் பின்பக்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் நிழலில் இருக்கிறீர்கள். அதனால்தான் கடவுள் மற்றவராக இருக்கிறார், இல்லாவிட்டால் கடவுள் மற்றவராக இருக்க முடியாது.
அதனால் பக்தியின் பாதை இப்போது இருப்பது போன்றே இருக்கும்பட்சத்தில், உங்களை எல்லாவற்றையும் கடந்துசெல்லும் நிலைக்கும், இப்பிரபஞ்சத்திற்கும், ஒன்றாகுதலுக்கும் அழைத்துச் செல்ல இயலாது. எனக்கு இன்னொருவரிடம் சரணடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. இது “சுயம்” என்பதை சரணடைய செய்வதாகும் - யார் கால்களிலும் அல்ல, நீங்களே சரணடைதல் அவ்வளவுதான். “சுயம்” என்பது இல்லையென்றால், பின்பு நீங்கள் ஒன்றாகிவிட்டீர்கள்.
இந்த “சுயம்” விதைகளை உருவாக்கிக் கொண்டே போகலாம், அது போன்ற போலிகளை உருவாக்கிக்கொண்டே போகலாம். இதில் பெரிய, மிக நிச்சயமான ஏமாற்றம், நாம் கடவுளின் பக்தன் என்பதில்தான் - ஒரு ஆன்மீக ஏமாற்றல். எந்த ஏமாற்றலும், ஆன்மீகம் ஆகும்போது அது அபாயமாகிறது. ஏனெனில் உங்களால் அதை மறுக்கக்கூட முடியாது. அதை மறுப்பதுக்கூட குற்ற உணர்வை ஏற்படுத்திவிடும். நீங்கள் “சுயத்தன்மையை”, கடவுளுக்கு மறுப்பதிற்காக குற்ற உணர்வு அடைகிறீர்கள், ஆனால் கடவுளுக்கோ “சுயத்தன்மை” என்பது உங்களின் “சுயத்தின்” வெளிப்பாடுதான். உங்களுக்கு “சுயம்” என்பது இல்லாத வினாடியிலிருந்து கடவுளுக்கும் “சுயம்” இல்லை என்பது தெரியவரும். பின்னர் இந்த முழுபிரபஞ்சமும் “சுயம்” என்பது இல்லாமல் இருக்கும். இந்த முழு பிரபஞ்சமும் எப்பொழுது “சுயம்” இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது நீங்களும் அத்துடன் ஒன்றாகுகிறீர்கள்.
“சுயம்” இல்லாமல் இருப்பதுதான் சரியான பாதை.
“சுயம்” இல்லாமல் இருப்பதுதான் உண்மையான பக்தி.
“சுயம்” இல்லாமல் இருப்பதுதான் உண்மையான சரணாகதி.
அதனால் பிரச்சினைகள் எப்பொழுதும் “சுயம்” என்பதினால்தான். நாம் விடுதலை கொள்ள நினைத்தால் கூட மோட்சம் (Moksha), நாம் “சுயத்தின்” விடுதலை பற்றி தான் நினைக்கிறோமே தவிர “சுயத்திடமிருந்து” விடுதலைப் பெற நினைப்பதில்லை.பின்னர் நாம் விடுதலை பெற்று விட்டோம் என்று நினைக்கிறோம். ஆனால், பின்னர் உங்களால் சுதந்திரமாக இருக்கமுடியாது – மோட்சம் (Moksha) என்பது “சுயத்தின்” சுதந்திரம் இல்லை. அது “சுயத்திடமிருந்து” சுதந்திரம். அதனால் நான் “சுயம்” என்பது இல்லாமல், பெருக்கெடுத்துக்கொண்டு, “சுயம்” என்பது இல்லாத போக்கில் இருக்கிறேன். எனக்கு “சுயம்” இல்லை என்பது மட்டுமல்லாமல் யாருக்குமே “சுயம்” என்பது இல்லை.
உதாரணத்திற்கு, கடலில் அலைகள் இருக்கின்றன, ஆனால் அந்த ஒவ்வொரு அலையும் தன்னைத்தானே இக்கடலிலிருந்து தனியாகயிருப்பதாக தவறாகக் கருதுகிறது. அது தனியாக இருப்பதுபோல் தோற்றம் அளிக்கிறது. அது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளலாம் - அதைச் சுற்றி பல அலைகள் இருக்கின்றன, மேலும் ஒவ்வொரு அலையும் வித்தியாசமாக இருப்பதுபோல் தோற்றமளிக்கிறது. என்னுடைய அலை மேலோங்கியும், உங்களுடைய அலை தாழ்ந்தும் இருக்கும், அல்லது என்னுடைய அலை தாழ்ந்தும், உங்களுடைய அலை மேலோங்கியும் இருக்கும். அது எப்படி ஒன்றாக இருக்கமுடியும்?, மேலும் அந்த அலைகளால் கடலுக்குள் ஆழமாக பார்க்க இயலாது. மேல்வாரியாக இருப்பதுதான் தெரியும். உங்களின் அலை சாகிறது, என்னுடைய அலை இளமையாக இருக்கிறது, எழும்பிக்கொண்டு இருக்கிறது. நீங்கள் கரையை அடைந்து விட்டீர்கள், நான் இன்னும் தள்ளியே இருக்கிறேன். எப்படி என்னால் நாம் இருவரும் ஒன்று என்று நினைக்க இயலும்? ஆனாலும், நம்மால் அப்படி நினைக்க முடிகிறதோ இல்லையோ, நாம் எல்லோரும் ஒன்றுதான்.
எந்த அலை தன்னை எல்லாம் அடங்கிய “நான்” ஆக நினைக்கிறதோ, அதற்கு அகந்தை இல்லை, ”சுயம்” என்பதும் இல்லை. இந்த அலைக்கு கடல்தான் அலை என்பது தெரிந்து இருக்கிறது. அலை என்பது வெளிப்புறத்தோற்றம். மேல் மட்டத்தில் இருப்பது, பார்வைக்கு, மேல்மட்டம் அசைந்து கொண்டிருக்கும். நான் என்று தன்னை நினைக்கும் அலைக்கு, அலைகள் இல்லாத நிலையும், அலைகள் இல்லாத கடலும்தான் உண்மை என்பது அதற்குத் தெரியாது. உங்களுடைய அலையும் இதிலிருந்து வேறுபட்டது அல்ல.
எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பது எதுவென்று எனக்குத் தெரியும். இதை நீங்கள் “சுயத்தை அறிதல்” என்பீர்கள். ஆனால் நான் அப்படி சொல்லமாட்டேன். நான் இதை “சுயம் இல்லை என்பதை அறிதல்” என்றே சொல்லுவேன், ஏனெனில் எல்லா அறிதலின் சாராம்சமும் இதுதான். இது “சுயம்” இல்லாத நிலை. நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன்.
நான் சொன்னதெல்லாம், நான் கருதியதாக இல்லாமல் இருக்கலாம். நான் கருதியதெல்லாம் சொல்லாமலிருந்திருக்கலாம். அதனால் என்னுடைய பேச்சை என்னுடைய அர்த்தங்களுடன் ஒப்பிட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். எப்பொழுதும் ஆழத்தையே பார்க்கவும். எப்போதும் எது சொல்லப்படாமல், சுட்டிக்காட்டப்படுகிறதோ அதை கவனிக்கவும். சிலவற்றை சொல்லமுடியாது. அதைக் காட்டவும், சுட்டிக்காட்டவும்தான் முடியும். ஆழமாக இருப்பவைகளையும், மூலக்காரணமாக இருப்பவைகளையும், காட்டத்தான் முடியுமேத் தவிர, சொல்லமுடியாது. நான் சொல்லமுடியாதவற்றை எல்லாம் சொல்கிறேன். அதனால் என்னுடைய வார்த்தைகளை வைத்துக்கொண்டு யோசிக்காதீர்கள். எப்போதும் வார்த்தைகளை அர்த்தமற்றதாக எண்ணி தூக்கியெறியுங்கள், பின்னர் சொல்லப்படாத வார்த்தைகளின் அர்த்தங்களினுள் செல்லுங்கள், மௌனத்தின் அர்த்தங்களினுள் செல்லுங்கள். அது எப்பொழுதும் வார்த்தைகளின் பின்னால் இருக்கும்.
வார்த்தைகள் எப்போதும் இறந்துபோனது, ஆனால் அர்த்தங்கள் எப்போதும் இருக்கும். ஒருவர் வார்த்தைகளிடம் வெளிப்படையாக இருக்கலாம், அறிவுப்பூர்வமாக புரிந்து கொள்வதினால் ஒருவரால் வெளிப்படையாக இருக்கமுடியாது. நீங்கள் உங்கள் முழு மெய்யிருப்பினால் (Being) திறந்து கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் அறிவினால் மட்டும் இயலாது. அறிவு சில சமயங்களில் தவறாக புரிந்துக்கொள்கிறது என்பதற்காக அல்ல - அறிவு எப்போதுமே தவறாக புரிந்து கொள்கிறது. அறிவு சில சமயங்களில் தவறு செய்கிறது என்பது இல்லை-அறிவே ஒரு பிழைதான். அது எப்போதுமே தவறு செய்கிறது.
அதனால் எதுவெல்லாம் சொல்லப்பட்டதோ, அதனிடம் கருணையுடன் இருங்கள். அதைப்புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள், அது உங்களுள் ஆழமாக செல்லட்டும். அதனிடம் மென்மையாக இருந்து, அதற்கு வழிவிடுங்கள். அது உங்கள் இதயத்திற்குள் ஆழமாக செல்லட்டும். அதற்கு எந்தவிதமான அறிவுச் சார்ந்த தடைகளையும் ஏற்படுத்தாதீர்கள். பின்னர் உங்களின் முழு மெய்யிருப்பின் ஒத்துழைப்பினால், அவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு அது புரியாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் உங்களுக்குத் தெரியும். புரிந்து கொள்ளுதல் போதாது, தெரிந்துக்கொள்ளுதல் அவசியம். சில சமயங்களில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள், அல்லது புரிந்துகொண்டதாக நினைப்பீர்கள், இதன் மூலம் நீங்கள் தெரிந்துகொள்வதற்குத் தடைகளை உருவாக்குகிறீர்கள். அறிவு புரிந்து கொள்ளும், ஆனால் நம் மெய்யிருப்பு தெரிந்து கொள்ளும். அறிவு என்பது ஒரு பாகம்தான், உங்கள் மெய்யிருப்பு தான் உண்மையானது.
நீங்கள் தெரிந்துகொள்ளும்போது, நீங்கள் இரத்தத்தின் மூலம் தெரிந்துகொள்கிறீர்கள், நீங்கள் எலும்புகளின் மூலம் தெரிந்துகொள்கிறீர்கள், நீங்கள் இதயத்துடிப்புகளின் மூலம் தெரிந்துகொள்கிறீர்கள். ஆனால், நீங்கள் புரிந்து கொள்ளும்போது, நீங்கள் அறிவின் இயந்திர அமைப்பின் மூலம்தான் புரிந்துகொள்கிறீர்கள், அது ஆழமானது அல்ல. அது ஒரு கருவிதான், ஒரு பயனுள்ள, வாழ்வதற்குத் தேவையானக் கருவி ,அது உறவுப்படுத்திக்கொள்ளத் தேவையானது, ஆனால் அது ஒன்றாகுதலுக்கும், ஆன்மீக இறப்புக்கும், மறுப்பிறப்பிற்கும், தடையாக உள்ளது. அது உயிர் வாழ உபயோகப்படும் ஒரு இயற்கையான கருவி அவ்வளவுதான். அது ஆணிவேரான உண்மைகளை அறிய உருவாக்கப்பட்டது அல்ல. அது ஒளிந்திருக்கும் இரகசியங்களை தெரியவைப்பதற்காக உண்டாக்கப்பட்டதல்ல - மேலும் இரகசியங்கள் ஒளிந்தே இருக்கும்.
அதனால் எதையெல்லாம் சொல்கிறேனோ, அதைப்பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள். வீட்டுக்குச் சென்று அதன்மேல் உறங்குங்கள். அது சற்று உள்ளே போகட்டும், அது ஊடுருவிச் செல்லட்டும். உங்களை நீங்களே காத்துக்கொள்ளவேண்டாம், திறந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு காத்தலும் தெரிந்துகொள்வதற்கு எதிராக செயல்படுகிறது. அது உங்களுள் உள்ளாழ்ந்து சென்றடைந்த பின்புதான் உங்களுக்கு அது தெரியவரும், உண்மை புரியும். இதுதான் சிரத்தா, (Shradha) உறுதியான நம்பிக்கை (Faith) எனப்படுவது. இது அறிவின் வழியாக வரும் நம்பிக்கை (Belief) அல்ல. ஒருவர் அறிவின் வாயிலாக நம்பலாம், அல்லது அறிவின் வாயிலாக நம்பாமல் இருக்கலாம். ஆனால் இரண்டும்,அறிவு சம்பந்தப்பட்டதுதான். ஆனால் நான் சொல்லும் உறுதியான நம்பிக்கை (Faith) அறிவு சம்பந்தப்பட்டது அல்ல - அதில் முழு மாயம் பங்குப்பெற்றள்ளது. இது மறைந்திருக்கும் ஆச்சரியங்களுடன் ஒன்றாவது.இது ஒரு தாண்டுதல்.
எனக்கு எந்த தத்துவ விளக்கங்களிலும் விருப்பம் இல்லை. எனக்கு எந்த தத்துவங்களிலும் விருப்பம் இல்லவே இல்லை. எனக்கு இப்பிரபஞ்சத்திற்குள் இறங்கவே விருப்பம். சொல்லமுடியாதவைகளுக்கு வழிகாட்டவே நான் சிலவற்றை சொல்கிறேன். நான் உங்களுக்கு மௌனத்திற்கு வழிகாட்டவே வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். உங்களுக்கு ஊர்ஜிதப்படுத்த முடியாதவைகளை உணர்த்தவே நான் சிலவற்றை ஊர்ஜிதப்படுத்துகிறேன். என்னுடைய வெளிக்காட்டுதல் எல்லாம், உண்மையாக வெளிக்காட்டவேண்டும் என்பதற்காக அல்ல, ஆனால் வெளிக்காட்ட முடியாதவைகளை உணர்த்துவதற்காகத்தான்.
அதனால், கருணையுடன் இருங்கள். ஏனெனில், கருணையே நீங்கள் திறந்துகொள்வதற்கு வாய்ப்பாக இருக்கலாம். நான் சொன்னதெல்லாம் உங்களுள் சொட்டுக்களாக இறங்கட்டும். அது மலரும், விதைகள் அதன் ஆழத்திற்கு சென்றால், அதற்கு அதன் மலர்ச்சி இருக்கும். மலர் வந்தபிறகு, சொல்லமுடியாதவைகளை சொன்னதைப் பற்றி உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு சொன்னவைகளை பற்றித் தெரியும், ஆனாலும் அது சொல்லப்படாமல் அப்படியே இருக்கும்.
*************************************************************************************************************
சன்னியாசம் என்றால் என்ன?
அன்புள்ள ஓஷோ,
நீங்கள் ஏன் ஏறக்குறைய, உங்களை பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் சன்யாசம் வழங்குகிறீர்கள்? உங்கள் சன்யாசத்தின் கொள்கை என்ன? அதில் கட்டாயம் நிறைவேற்ற வேண்டியது என்ன?
எனக்கு சன்யாசம் என்பது, விளையாட்டுத்தன்மை இல்லாத கடுமையான ஒன்றல்ல (Serious) வாழ்க்கையே விளையாட்டுத்தான், எவரொருவர் விளையாட்டுத்தனம் இல்லாமல் இருக்கிறாரோ, அவர் எப்போதுமே இறந்தவராக இருக்கிறார். வாழ்க்கை என்பது காரணங்கள் ஏதுமின்றி வழிந்தோடிக்கொண்டிருக்கும் ஆக்க சக்திதான், அதில் என்னைப் பொறுத்தவரை சன்யாசம் என்பது காரணங்கள் ஏதும் இல்லாமல் வாழ்க்கையை நடத்திச்செல்வதாகும். வாழ்க்கையில் விளையாட்டாக இருங்கள், அதை வேலையாக எடுத்துக்கொள்ளாதீர்கள். விளையாட்டுத்தன்மை இல்லாத அறிவு வியாதியுடையது, அது உண்மையில் விளையாட்டை வேலையாக மாற்றும். சன்யாசியாக இருப்பவர்கள், இதற்கு மிக எதிர்மறையாக, வேலையை விளையாட்டாக மாற்றவேண்டும். உங்களால், இந்த முழு வாழ்க்கையையும் கனவாக, ஒரு கனவு நடிப்பாக, எடுத்துக்கொள்ள முடிந்தால், பின்பு நீங்கள் ஒரு சன்யாசிதான். எவரொருவர் வாழ்க்கையை கனவாக, ஒரு கனவு நாடகமாக கருதுகிறார்களோ, அவர் எல்லாவற்றையும் துறந்தவராகிறார்.
துறப்பது என்பது இவ்வுலகத்தை விட்டு வெளியேறுதல் அல்ல, ஆனால் மனோபாவத்தை மாற்றிக் கொள்வது. உலகத்தை மாற்றும் மனோபாவம், மிக்க விளையாட்டுத்தன்மை இல்லாதது. அதனால்தான் என்னால், யாருக்கு வேண்டுமானாலும் சன்யாசம் கொடுக்க முடியும். எனக்கு தீக்க்ஷை வழங்குவதே ஒரு விளையாட்டுதான். நான் எந்த தகுதிகளையும் கேட்கமாட்டேன், நீங்கள் தகுதியுடையவரோ இல்லையோ, ஏனெனில் எங்கு கடுமையான விளையாட்டுத்தனம் இல்லாமல் ஏதோ நடக்கிறதோ அங்குதான் தகுதிகளை கேட்பார்கள். அதனால், எல்லோரும், இப்பிரபஞ்சத்தில் இருப்பதினால் மட்டுமே, இவ்விளையாட்டுக்கு தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். ஒருவன் விளையாடலாம், அப்படியே அவன் தகுதியில்லாதவனாக இருந்தாலும், அதனால் எந்த வித்தியாசமும் இருக்காது -ஏனெனில் இங்கு இருப்பவை அனைத்தும் விளையாட்டுத்தான். அதனால்தான் நான் எந்த தகுதிகளையும் கேட்கமாட்டேன்.
மேலும், என் சன்யாசத்தில், நிறைவேற்றுவதற்கு எந்த நிபந்தனைகளும் கிடையாது. நீங்கள் சன்யாசியாகும் நிமிடத்திலிருந்து, நீங்கள் முழு சுதந்திரம் அடைகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் ஒரு முடிவெடுத்துவிட்டீர்கள் (decision) என்பதோடு, இதுவே உங்களின் கடைசி முடிவும் கூட. இப்போது, இனி நீங்கள் எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லை. இப்போது நீங்கள் முடிவெடுக்காமல் வாழ்வதென்றும்,சுதந்திரமாக வாழ்வதென்றும், கடைசியாக முடிவெடுத்துவிட்டீர்கள்.
முடிவு எடுத்துக்கொண்டு வாழும் ஒருவரால், சுதந்திரமாக வாழமுடியாது.அவன் எப்போதும் கடந்த காலத்துடன் இணைக்கப்பட்டிருப்பான், ஏனெனில் முடிவு கடந்தகாலத்தில்தான் எடுக்கப்பட்டுள்ளது. உங்களால் எதிர்காலத்தைக் குறித்து எந்த முடிவும் எடுக்க இயலாது. ஏனெனில் எதிர்காலம் முற்றிலும் தெரியாதது, அதனால் எந்த முடிவெடுத்தாலும் அது கடந்தகாலத்துடனே இணைக்கப்பட்டிருக்கும். நீங்கள் சன்யாசத்திற்கு தீக்க்ஷை பெற்ற வினாடியிலிருந்து, நீங்கள் அனுமதி பெறாத, முன் ஏற்பாடு இல்லாத, எதிர்காலத்திற்கு செல்ல ஆரம்பித்து வைக்கப்படுகிறீர்கள். இப்போது நீங்கள் கடந்தகாலத்துடன் கட்டப்படவில்லை. நீங்கள் வாழ்வதற்கு சுதந்திரமாக இருப்பீர்கள். இதன் மூலம் நீங்கள், செயல்பட, விளையாட, உங்களுக்கு என்ன நிகழ்கிறதோ அதற்கும், சுதந்திரமாக இருப்பீர்கள். இதுதான் பாதுகாப்பின்மை (Insecurity).
பெயரைத் துறப்பதோ, சொத்துக்களைத் துறப்பதோ, உண்மையான பாதுகாப்பின்மை கிடையாது, அது மிக மேல்வாரியான பாதுகாப்பின்மை. சொத்துக்களை பாதுகாப்பு என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த மனம், அப்படியேத்தான் இருக்கிறது. சொத்துக்கள் கூட பாதுகாப்பு இல்லவே இல்லை, நீங்கள் எல்லா சொத்துகளுடனும் இறந்துபோவீர்கள். வீடுகூட பாதுகாப்பு கிடையவே கிடையாது, அதில் நீங்கள் இறந்துபோவீர்கள். அதனால், சொத்துக்கள், வீடு, நண்பர்கள், குடும்பம் இவைகளெல்லாம் பாதுகாப்பு என்ற தவறான எண்ணம், இன்னும் இருந்துகொண்டு, இப்போது “நான் துறந்துவிட்டேன், இப்போது நான் பாதுகாப்பின்றி இருக்கிறேன் “ என்று நினைக்கிறது.
எந்த மனம் மற்றும் எந்த மனிதன் கடந்த காலத்துடன் கட்டப்படாமல் இருக்கிறானோ, அவன் மட்டுமே பாதுகாப்பின்றி வாழ்பவன். பாதுகாப்பின்மை என்றால் கடந்த காலத்துடன் கட்டுப்படாமல் இருப்பது. அதில் எந்த அர்த்தங்களும் கிடையாது, ஏனெனில் உங்களுக்கு தெரிந்தவைகளெல்லாம் கடந்த காலத்திலிருந்தே வருகிறது. உங்களின் மனம்கூட கடந்தகாலத்தைச் சார்ந்தது.
அதனால், எவர் ஒருவர் கற்றதை துறக்கிறாரோ, அவரே உண்மையாக ஏதோ துறக்கிறார். நீங்களே கடந்தகாலத்திலிருந்துதான் வருகிறீர்கள், நீங்கள், கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்கப்பட்ட அனுபவங்கள்தானேத் தவிர, வேறெதுவும் இல்லை. அதனால், யார் ஒருவர் தன்னையே துறக்கிறாரோ, அவர்தான் ஏதோ துறக்கிறார். உங்களுடைய எல்லா ஆசைகள், உங்களுடைய எல்லா நம்பிக்கைகள், உங்களுடைய எல்லா எதிர்பார்ப்புகள் - இவைகளெல்லாம் கடந்தகாலத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன. எவர் ஒருவர் கடந்தகாலத்தை துறக்கிறாரோ அவர் தன்னுடைய ஆசைகளை, நம்பிக்கைகளை, தன் எதிர்பார்ப்புகளையும் துறக்கிறார்.
இப்போது, நீங்கள் காலியாக, ஒன்றும் இல்லாமல், யாராகவும் இல்லாமல் இருப்பீர்கள். சன்யாசம் என்றால், இன்னார் என்று உரிமைக் கொண்டாடுதலை தூக்கி எறிவது. அதனால் இதுவே உங்கள் மனதின் கடைசி முடிவு, இத்துடன் கடந்தகாலம் மூடப்பட்டுவிட்டது.அத்துடன் இருந்த அடையாளம் உடைந்தது, தொடர்பும் எதுவும் இல்லை. நீங்கள் புதியவர் - நீங்கள் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள்.
உயிருடன் இருக்கும் அனைவரும், பாதுகாப்பில்லாமல் வாழ்வதற்கு தகுதியுடையவர்கள். ஒருவருக்கு உண்மையில் வாழ வேண்டுமேயானால், அவர் பாதுகாப்பின்றியே வாழவேண்டும். பாதுகாப்பிற்காக செய்யப்படும் அனைத்து ஏற்பாடுகளும் வாழ்வை துறப்பதற்குத்தான். நீங்கள் அதிக பாதுகாப்புடன் இருக்க, இருக்க, நீங்கள் குறைவாகவே வாழ்கிறீர்கள். நீங்கள் அதிக பாதுகாப்புடன் இருக்க, இருக்க, நீங்கள் அதிகமாக இறந்தவன் போல் இருக்கிறீர்கள். இதை வேறுவிதமாக சொன்னால், நீங்கள் அதிக பாதுகாப்பின்றி இருக்கும்போதே, நீங்கள் அதிகமாக வாழ்கிறீர்கள். உதாரணத்திற்கு, இறந்த ஒருவனால் மறுபடியும் இறக்கமுடியாது. அவன் மரணம் - புக முடியாதவன் (death proof) . இறந்த ஒருவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகாது, அதனால் அவன் வியாதிப் - புக முடியாதவன் (disease proof ). இறந்தவன் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறான், அதனால் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பார்த்தால், அவனுக்கு முட்டாள்தனமாக இருக்கும் - ஏனெனில் அவர்கள் பாதுகாப்பில்லாமல் வாழ்கிறார்கள்.
நீங்கள் உயிருடன் இருப்பது உண்மையானால், பின்பு நீங்கள் பாதுகாப்பின்றி இருக்கிறீர்கள். அதிகப் பாதுகாப்பின்றி இருக்கும்போதுதான், அதிகமாக உயிருடன் இருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை, யார் ஒருவன் வாழ்க்கையை பரிபூரணமாக, அனுகூலமாக, அதிகபட்சமாக வாழ முடிவு செய்கிறானோ, அவனே சன்யாசி. இது இரண்டு பக்கமும் எரியும் தீவட்டியைப் போன்றது.
நிறைவேற்ற வேண்டியது எதுவும் இல்லை, வாக்குறுதிகள் எதுவும் இல்லை.நீங்கள் எந்த நெறிமுறையுடனும் இணைக்கப்படவில்லை. உங்களுக்கு பாதுகாப்பின்றி வாழ்வதையே ஒரு நெறிமுறையாக்க வேண்டுமானால், அது வேறு விஷயம். பார்க்கப் போனால், அது ஒரு உள்ளார்ந்த நெறிமுறை. நீங்கள் அதற்காக, அராஜகமாக இருக்கப் போவதில்லை, இல்லை! ஒருவர் அராஐகமாக இருப்பார் என்று நான் எப்போது சொல்லியிருக்கிறேன்? , அராஜகம் எப்போதும் ஒருமுறையுடனும், ஒரு வழக்கத்துடனும் இணைக்கப்பட்டது. நீங்கள் முறையைத் துறந்தால், உங்களால் முறைக்கேடாக நடந்து கொள்ள முடியாது. இது முறையை மறுப்பது அல்ல, இது முறையை துறப்பது அவ்வளவுதான், துறுப்பதென்றால் இப்போது முறையாக இருப்பது. இது ஒரு நடிப்புத்தான், மற்றவர்களுக்காக ஒரு நாடகம். நீங்கள் இதைப்பற்றி தீவிரமாக இருக்கமாட்டீர்கள், இது விளையாட்டில் ஒரு பாத்திரம், அவ்வளவுதான். நீங்கள் மற்றவர்களுக்காகவும், சாலைப்போக்குவரத்திற்காகவும் இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ நடக்கலாம், ஆனால் அதில் விளையாட்டுத்தன்மை இல்லாமல் தீவிரமாக செயல்படமாட்டீர்கள், அவ்வாறு செயல்பட அதில் ஒன்றுமில்லை.
அதனால் சன்யாசி முறைகேடாக இருக்கப் போவதில்லை. ஆனால் அவனைப் பொறுத்தமட்டில், அவன் உள்விழிப்புணர்வை பொறுத்தமட்டில், இப்போது எந்த முறையும் இருக்காது. இதனால் முறைகேடாக இருப்பான் என்றும் அர்த்தம் இல்லை, ஏனெனில் முறைகேடு எப்பொழுதும் முறையின் ஒரு பகுதிதான். எப்போது முறை இருக்கிறதோ, அதில் முறைகேட்டிறகும் வழி இருக்கிறது. எப்போது முறை என்பது இல்லையோ அப்போது முறைகேட்டிற்கும் வழி இல்லை, ஏனெனில் அங்கே இயற்கையாகவே நிகழும் தன்மை இருக்கும். ஒவ்வொரு நொடியும் நீங்கள் இருப்பீர்கள், ஒவ்வொரு நொடியும் நீங்கள் செயல்படுவீர்கள், ஒவ்வொரு வினாடியும் அதற்கு அதுவே முழுமை பெற்றிருக்கும். நீங்கள் அதற்காக முடிவெடுக்க வேண்டாம். நீங்கள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து எந்த முடிவும் இல்லை. அந்த வினாடி உங்களிடம் வரும்போது, நீங்கள் செயல்படுவீர்கள். இதற்கு முன் தீர்மானமோ, முன் ஏற்பாடுகளோ கிடையாது.
அந்த வினாடி உங்களிடம் வருகிறது, நீங்கள் அந்த வினாடிக்கு நிகழ்கிறீர்கள், இதன் விளைவாக எது வருகிறதோ, அது வரட்டும். மென்மேலும், ஒரு புதிய நெறிமுறை உங்களுள் எழும்புவதை உணர்வீர்கள், அது ஒவ்வொரு வினாடிக்கு மட்டும் இருக்கும் நெறிமுறை. இது முற்றிலும் வித்தியாசமான பரிமாணம். அதனால் இதைத் தெளிவாக புரிந்துக்கொள்ளுதல் நல்லது. நீங்கள் முன்கூட்டியே முடிவு செய்தால் என்ன செய்வது?, இது எதனால் என்றால், உங்களால் அந்த வினாடியில், இயற்கையாக, தன்னிச்சையாக, செயல்படுமளவிற்கு உங்களுக்கு விழிப்புணர்வு இருப்பதாக நீங்கள் நினைக்கவில்லை, உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கையில்லை, அதனால்தான் நீங்கள் முன்கூட்டியே முடிவு செய்கிறீர்கள்.
ஆனாலும் நீங்கள் முடிவெடுக்கிறீர்கள். உங்களால் அந்த வினாடியில் செயல்பட முடியாதபட்சத்தில், உங்களால் எப்படி முன்கூட்டியே முடிவெடுக்க முடியும்? இப்பொழுது உங்களுக்கு குறைந்த அனுபவம்தான் இருக்கிறது. அந்த வினாடி வரும்போதுதான் உங்களின் அனுபவம் அதிகரிக்கும். நாளைய “என்” மீது எனக்கு நம்பிக்கை இல்லையென்றால் எப்படி இன்றைய “என்” மீது எனக்கு நம்பிக்கையிருக்கும். மேலும் நான் முன்கூட்டியே முடிவெடுத்தால், அதில் எந்த அர்த்தமும் இல்லை. அது அழிக்கும் ஆற்றல்தான் கொண்டு இருக்கும்.
நான் இன்று முடிவு செய்து, நாளை செயல்படுகிறேன். எல்லாமே மாறிவிட்டது. எல்லாமே புதியதாக இருக்கிறது, ஆனால் எடுத்த முடிவு மட்டும் பழையது. இதில் இந்த வினாடிக்குத் தக்கவாறு செயல்படவில்லையென்றால், குற்ற உணர்வு ஏற்படுகிறது. அதனால் யாரெல்லாம் முன்கூட்டியே முடிவெடுக்க கற்றுத் தருகிறார்களோ, அவர்களெல்லாம் குற்ற உணர்வை உருவாக்குகிறார்கள். நான் அவ்வாறு செயல்படவில்லையென்றால் குற்ற உணர்வு ஏற்படுகிறது. அதன்படி செயல்பட்டால், பின்னர் என்னால் போதிய அளவிற்கு செயல்பட முடியாது. இதனால் ஏமாற்றம்தான் கண்டிப்பாகத் தொடரும்.
அதனால் நீங்கள் உங்களை எந்த முடிவுடனும் பொறுப்பேற்று இணைத்துக் கொள்ளாவிட்டால், நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள் என்று நான் சொல்லுகிறேன். ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு வினாடியும், உங்களிடம் வரட்டும், பின்பு உங்கள் மெய்யிருப்பு (total being) அந்த வினாடியில் முடிவெடுக்கட்டும். செயல் நடக்கும்போது, முடிவும் வரட்டும். முடிவு செயலுக்கு முன்னால் வராமல் இருக்கட்டும், அப்படி வந்துவிட்டால் அந்த செயல் முழுமை பெற வாய்ப்பில்லை.
நீங்கள் முன்கூட்டியே முடிவெடுக்கும்போது, நீங்கள் புத்தியினால் முடிவெடுக்கிறீர்கள், என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்த வினாடி இன்னும் வராததால், உங்கள் மெய்யிருப்பு அதில் இருக்க வாய்ப்பில்லை. நான் யாரையாவது காதலிக்கிறேன் என்றால், நான் அவனையோ அல்லது அவளையோ சந்திக்கும்போது, நான் இப்படி செயல்படுவேன், நான் இதைச் சொல்லுவேன், நான் இதை செய்வேன், நான் அதைச் செய்யமாட்டேன், என்று நான் என்னுடைய புத்தியினால், அறிவினால் மட்டுமே நினைக்கமுடியும். இது முழுமையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த வினாடி இன்னும் வந்தடையவில்லை. இந்த மெய்யிருப்பு சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை. அதனால் இந்த மெய்யிருப்பினால் எப்படி செயல்படமுடியும்?
நான் முன்கூட்டியே முடிவெடுத்தால், அந்த வினாடி வரும்போது, மெய்யிருப்பினால் செயல்படமுடியாது, ஏனெனில் அந்த முடிவு அங்கு இருக்கும். அதனால் நான், அந்த முடிவினை பின்பற்றுவேன், அதைப்போல் போலியாக செய்வேன். அதனுடைய நகலாக இருப்பேன். நான் ஒரு பொய்யான மனிதராக இருப்பேன். நான் உண்மையாக இருக்கமாட்டேன், ஏனெனில் நான் முழுமையாக இல்லை. நான் செயல்படுவதற்கு, எனக்கு, முன் தீர்மானிக்கப்பட்ட வரைபடம் இருக்கும். நான் அதன்படிதான் செயல்படுவேன். திரும்பவும், இதுவும் ஒரு அறிவு சார்ந்த செயலாகவே இருக்கும். உங்கள் மெய்யிருப்பினுடையதாக இருக்காது. இதில் நீங்கள் வெற்றிப்பெற்றாலும், தோல்வியடைந்தாலும், எதுவாகயிருந்தாலும் உங்களுக்கு தோல்வியே. ஏனெனில் உங்கள் மெய்யிருப்பு இதில் இருக்கமுடியவில்லை. உங்களால் அன்பை உணர முடியாது.
அதனால், அந்த வினாடி வரட்டும், அந்த வினாடி உங்களுக்கு சவால் விடட்டும். பின்னர் உங்கள் மெய்யிருப்பு செயல்படட்டும். பின்னர் அந்த செயல் முழுமையானது. பின்னர் உங்கள் மெய்யிருப்பு செயல்பட வரும். பின்னர் நீங்கள் அதில் பரிபூரணமாக இருக்கிறீர்கள். அப்போது எவ்வளவு அதிகபட்சமான நன்மை வெளிவர வாய்ப்புள்ளதோ, அவ்வளவு நன்மை, இந்த முழுமையினால் ஏற்படுமேத் தவிர, முன்கூட்டியே எடுக்கப்படும் முடிவினால் ஒருபோதும் வராது. அதனால் சன்யாசம் என்பது அந்தந்த வினாடியில் எந்த கடந்தகால இணைப்புகளும் இல்லாமல் இருப்பதே.
அதனால் நான் உங்களுக்கு ஒரு மாலையும், ஒரு அங்கியும் வழங்குகிறேன், இனி நீங்கள் முடிவெடுக்காமல் வாழவேண்டும் என்ற ஞாபகத்திற்காகத்தான். இது உங்களுக்கு, நீங்கள் பழைய மனிதன் அல்ல என்று ஞாபகப்படுத்துவதற்காகத்தான். இந்த விழிப்புணர்வு ஆழமாக வந்து, இனி இதை, நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை, என்றபோது, நீங்கள் இந்த மாலையையும், இந்த அங்கியையும் தூக்கி எறிந்துவிடலாம். இதை எறியும் நிலைக்கு நீங்கள் வரும்போது, அதை ஒரு முடிவாகவோ, அதை எனக்கு கொடுக்கப்பட்ட வாக்காகவோ நினைக்காதீர்கள். அந்த நிலை உங்களுக்கு வரும்போது, அதை தூக்கி எறியுங்கள். ஆனால் அந்த விழிப்புணர்வு ஆழமாகி, உங்கள் உறக்கத்தில் கூட நீங்கள் சன்யாசி என்று உங்களுக்குத் தெரியும்வரை, அதை தூக்கியெறியாதீர்கள்.
எப்பொழுது உங்கள் கனவில்கூட, இந்த காவி நிற அங்கி வருகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்து விடுங்கள். எப்பொழுது கனவில்கூட உங்கள் காவி நிற அங்கி இருக்கிறதோ, அப்போது அதை தூக்கி எறியுங்கள். பின்னர் அதற்கு அர்த்தமில்லை. இது உங்களுக்கு சுயநினைவு இல்லாத சமயங்களில் கூட, மறக்காமல் ஞாபகம் இருந்தால், எந்த சூல்நிலையிலும் உங்களுக்கு இது நினைவிருந்தால், பின்பு இதற்கு அவசியமில்லை. அதனால் இது நீங்கள், உங்கள் மெய்யிருப்பை நோக்கிப் போவதற்கும், செயல்பாட்டை நோக்கிப் போவதற்கும், உதவும் ஒரு ஆயுதம், அவ்வளவுதான்.
என்னுடன், ஒரு நிமிடமேயானாலும், இருக்க நேரிடும் ஒவ்வொருவருக்கும், நான் சன்யாசம் வழங்கிகொண்டேதான் இருப்பேன், ஏனெனில் நான் முன்பு சொன்னது போல, எனக்கு நாளையை பற்றி எதுவும் தெரியாது. அதனால் என்னால் பொறுத்திருக்க முடியாது. நீங்கள் இந்த வினாடி வந்தால், இந்த வினாடியில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்தாக வேண்டும். இந்த வினாடியில், என்னால் காத்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கு நாளையை பற்றித் தெரியாது, என்ன நடக்கப்போகிறது எனபதும் தெரியாது, மேலும் என்னால் திட்டம் தீட்டவும் முடியாது, அதனால் என்னுடன், நீங்கள் இருக்கும் அந்த வினாடியில், என்ன செய்யப்படுகிறதோ, அது அந்த வினாடியிலேயே செய்யப்படவேண்டியது. அதை ஒத்திப்போட முடியாது, ஏனெனில் எனக்கு எதிர்காலம் என்பது கிடையாது.
மேலும், இந்த சன்யாசம் பழைய சன்யாசத்தைப் போல் கிடையாது. இது முற்றிலும் புதிய கொள்கை, அல்லது, இது முற்றிலும் மறக்கப்பட்ட ஒன்று, இது முழுவதும் பழங்காலத்தையது. நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இது பழமையும், புதுமையும் சமமாக சேர்ந்தது. ஏனெனில், எப்போதெல்லாம், உண்மையான சன்யாசம் இருந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் அது இவ்வாறே இருந்திருக்கிறது. ஆனால் எப்போதுமே போலிகள் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் மறுக்க முடியாது - அவர்கள் இருக்கிறார்கள். போலிகள் இருக்கிறார்கள், எப்போதுமே இருப்பார்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஒரு கோட்பாடாக ஆக்குகிறார்கள், ஏனெனில் கோட்பாடுகளைத்தான் பார்த்து நடிக்க முடியும் (imitated).
சன்யாசம் என்பது, இன்னொருவரால் பார்த்து நடிக்க முடியாது. சுதந்திரத்தைப் பார்த்து, யாராலும் அதுபோல் இருக்க முடியாது; அதைப்போல், சன்யாசத்தையும் பாரத்து யாராலும் நடிக்க முடியாது. அதனால் பாரத்து நடிப்பவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் இதிலிருந்து ஒரு முறையை (system) உருவாக்குவார்கள் - ஒருவரை பாரத்து நடிப்பவர்கள் எப்போதும் முறையை உருவாக்குவார்கள். அவர்களுக்கு சன்யாசத்தைத் தவிர, அழிப்பதற்கு பெரியதாக ஒன்றும் இல்லை, ஏனெனில் வாழ்க்கை இப்போது இருப்பதுபோல் இருக்கும்பட்சத்தில், அது ஒருவரை பாரத்து ஒருவர் நடிப்பதுதான். பிறரை பின்பற்றி, அவர்களை போல் நடிப்பது போய்க்கொண்டேயிருக்கிறது. இந்த முழு உலகமே பிறரைப்போல் நடித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் பிறரைப்போல் நடிப்பதின் மூலமாகத்தான் வளர்க்கப்படுகிறீர்கள் - மொழி, நல்லொழுக்கங்கள், சமூகம், பண்பாடு, எல்லாவற்றையும் நடிப்பால் கற்றுத்தரப்படுகிறது. எல்லாம் நடிப்பின் மூலம் கிரகித்துக் கொள்ளப்படுகிறது.
அதனால் நடிப்பவர்கள், சன்யாசத்தில் தவிர, மற்ற எல்லாத் துறைகளிலும் வெற்றிக் காண்கிறார்கள். இங்கு அவர்கள் அனைத்தையும் அழிக்கிறார்கள். அவர்களால் வேறு எங்கும் அழிக்கவே முடியாது, ஏனெனில் அங்கெல்லாம் சட்டமே விதிமுறைகளை பார்த்து பின்பற்றுவதுதான். உங்களால் மொழியுடன் சுதந்திரமாக இருக்க முடியாது, நீங்கள் அதை பின்பற்றித்தான் ஆகவேண்டும். உங்களால் சமூக அமைப்பில் சுதந்திரமாக இருக்க முடியாது, நீங்கள் அதை பின்பற்றத்தான் வேண்டும். பின்பற்றுபவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி காண்பார்கள், ஆனால் சன்யாசத்தில் மட்டுமே முழு சுதந்திரம் என்ற கோணத்தில், பின்பற்றுபவர்களின் வளர்ச்சி, அழிவை நோக்கி இருக்கும். ஏனெனில், அதன் கோணமே முற்றிலும் எதிர்மறையானது. அதை பின்பற்றினால் அது அழிந்து விடும். இயேசுவை பின்பற்றினார்கள், அதனால் இயேசுவின் நகல்கள்தான் இருக்கிறது. எப்போதெல்லாம் சன்யாசம் பின்பற்றப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதில் சன்யாசம் எதுவும் பாக்கியிருக்காது. அதனால் எந்த வாக்கும் கொடுப்பதற்கோ, நிறைவேற்றுவதற்கோ இல்லை, என்று நான் சொல்லும்போது, அதில் பின்பற்றுதல் இருக்காது என்பதையே குறிப்பிடுகிறேன்.
நீங்கள் முழுவதும் சுதந்திரமானவர்கள். நான் உங்களை திறந்த வெளிக்குள் தள்ளிவிடுவேன். இதுதான் சன்யாசத்திற்கு தீக்க்ஷை கொடுத்து ஆரம்பித்து வைப்பது. இது உங்களை அகலபாதாளத்தில் தள்ளுவது அல்ல. இது உங்களுக்கு திறந்த வானத்தைக் கொடுப்பது. இது உங்களை திறந்த வானத்தில் பறப்பதற்காக தள்ளுவது. இதற்கு வழிகளோ, அல்லது வழிக்கான வரைபடங்களோ கிடையாது என்பது உண்மை, இருக்கவும் முடியாது, வானத்தில் எந்த பாதையும் இருக்கமுடியாது. அதனால் நீங்கள் தனியாகத்தான் பறந்தாக வேண்டும். நீங்கள் உங்களை மட்டும்தான் நம்பியாக வேண்டும். உங்கள் மெய்யிருப்பு மட்டுமே உங்களுக்கு பிரத்யோக துணை, ஒரே துணை.
வாழ்க்கையும் வானத்தைப்போலத்தான். அது பூமியில் உள்ள சாலைகளைப்போல அல்ல - உங்களால் பின்பற்ற முடியாது, பின்பற்றுவது முடியாத ஒன்று. நீங்கள் தனியாகத்தான் இருக்கவேண்டும். தீக்க்ஷை கொடுப்பது என்றால், இப்பொழுது நான் உங்களை தனிமைக்கு தள்ளப்போகிறேன் என்று அர்த்தம். அதனால் இப்போது, நீங்கள் முழுமையான தனிமையில் யாரையும் சார்ந்து இல்லாமல், என்னைக்கூட சார்ந்து இல்லாமல் இருப்பீர்கள். இதற்கு தைரியம் தேவைப்படுகிறது. இன்னொருவரை பார்த்து நடிப்பது சுலபம், பின்பற்றுவது சுலபம், இன்னொருவரை சார்ந்திருப்பதும் சுலபம், ஆனால் முழுமையான தனிமையில், எந்த வரைபடமும் இல்லாமல், எந்த ஒழுக்க நெறியும் இல்லாமல், விதிமுறைகளும் இல்லாமல் இருப்பதுதான் மாபெரும் தைரியம். சன்யாசி என்றால்,தைரியமாக இருப்பவன். இந்த தைரியம் யாரையாவது பார்த்து பின்பற்றக்கூடியதல்ல, இது வாழ்தலின் மூலம் வளர்த்துக் கொள்ளவேண்டிய ஒன்று.
நீங்கள் தவறு செய்வீர்கள், நீங்கள் வழித்தவறிப் போவீர்கள். இதுவெல்லாம் அதில் அடக்கம். ஆனால் தவறு செய்வதினால், நீங்கள் கற்றுக்கொள்வீர்கள், வழித்தவறி போவதின் மூலம், நீங்கள் சரியான இடத்திற்கு வருவீர்கள், இதற்கு இதைத்தவிர வேறு வழியில்லை. நீங்கள் கஷ்டமானவைகளை கடந்துதான் செல்லவேண்டும். இந்த தனிமையான நடை, இந்தத் தனிமையாக பறந்து செல்லுதலுக்காக, ஒருவர் கடுமையானவற்றை கடந்துதான் செல்லவேண்டும். பழைய சன்யாசத்திற்கும், மற்றும் கவனத்தை கவரக்கூடிய வகையில் இருக்கும் சன்யாசத்திற்கும், இந்த சன்யாசத்திற்கும் இன்னொரு வித்தியாசமும் இருக்கிறது. சன்யாசம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அந்த சன்யாசத்தில், ஆன்மீகத் துறத்தலைக் காட்டிலும், சமுதாயத் துறத்தலே அதிகமாக இருக்கிறது. அதனுடைய அமைப்பில் கூட உடல்தான் ஆன்மீகத்தை விட அதிகமாக சம்பந்தப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த சன்யாசம் அடிப்படையாக ஆன்மீகத் தன்மை உடையது. அதனால் இதை, நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம். இது உங்களிடமிருந்து உள்ளாழ்ந்த ஆன்மீத்தை மட்டுமே, வற்புறுத்திக் கேட்கிறது. நான் பார்த்தவரை, நீங்கள் அதிகமாக உடலுடன் சம்மந்தப்பட்டிருந்தால், நீங்கள் ஆழ்ந்து செல்வதற்கு, குறைந்த வாய்ப்பே இருக்கிறது. ஏனெனில் நீங்கள் உடலுடன் அதிகமாக சம்மந்தப்பட்டிருந்தால், நீங்கள் அதை விட்டு வெளிவர மாட்டீர்கள், உங்களால் அதிலிருந்து வெளிவர முடியாது, ஏனெனில் அதனுள்ளே வெளிவரமுடியாமல் போவதற்கான சாத்தியக்கூறு நிறைய இருக்கிறது. யாரேனும் ஆசைகளை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தால், அவன் முடியாத ஒன்றிற்காக பாடுபடுகிறான், ஏனெனில் ஆசைகள் இயற்கையானது. உங்கள் உடலால் அவை இல்லாமல் இருக்கமுடியாது. அதனால் நீங்கள் உடலையே பற்றிக்கொண்டு இருப்பீர்கள். அப்படியும் ஆசைகள் இருக்கும் - குறைவாக இருக்கும், ஆனால் அது இருக்கும். உங்கள் உடல் பலவீனம் ஆக ஆக உங்களால் ஆசைகளை குறைவாகத்தான் உணரமுடியும். அதனால் உடலைப் பலவீனப்படுத்திக்கொண்டே போகலாம். ஆனால் சாகும்வரை உடலுக்கு ஆசைகள் இருக்கும்
ஆசைகள் மட்டுமல்லாமல், தேவைகளும் இருக்கின்றன. தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். அதை பூரத்தி செய்யும் அளவிற்கு, அது உங்களுக்கு தொல்லைக் கொடுக்காது,வேண்டுமென்று வற்புறுத்தி கேட்டுக்கொண்டிருக்காது, நீங்கள் அத்துடன் செலவழிக்க வேண்டிய நேரம் குறையும். நீங்கள் உங்களுடைய உடல் தேவைகளுடன் போராட ஆரம்பித்தால் உங்கள் முழு வாழ்க்கையும் இதிலேயே வீணாகிவிடும். இந்த பழைய சன்யாசத்தில், முழு போக்கும் எதிர்மறையாக இருக்கிறது, எதையாவது ஒன்றுக்கு எதிராக சண்டையிட வேண்டியிருக்கிறது. இதனால் “நான் என்ற அகந்தைதான்” இன்னும் பலம் பெறும். எப்போதெல்லாம் சண்டையிருக்கிறதோ, அப்போதெல்லாம் “நான் என்ற அகந்தை” பலம் பெறும். உங்களால் ஒரு ஆசையை அழிக்க முடிந்தால், உங்களுக்கு “நான் என்ற அகந்தை” அதிகமாகும். உங்கள் உடலுக்குத்தேவையான ஒரு குறிப்பிட்டத் தேவையை, உங்களால் மறுக்க முடிந்தால், நீங்கள் இன்னும் “நான் என்ற அகந்தையுடன்” இருப்பீர்கள். சண்டை எந்த விதத்தில் இருந்தாலும், அது உங்களின் “நான் என்ற அகந்தையை” திருப்தி செய்யும், நிறைவு செய்யும்.
எனக்கு சன்யாசம் என்பது உடன்பாடான ஒன்று, (Positive), எதிர்மறையாக நிராகரிக்கப்படவேண்டியதல்ல (Negative). அது உங்கள் உடலின் தேவைகளை மறுப்பதற்காக அல்ல. அது உங்களின் மேம்போக்கான தேவைகளையும் மறுப்பதற்காக அல்ல, அதை உங்களினுள்ளே வளர்ப்பதற்காக. இது எத்துடனும் சண்டையிடுவதற்காக அல்ல, இது உங்களின் முழு ஆக்க சக்தியை, சிலவற்றை வளர்ப்பதற்காக கொடுப்பதாகும். உங்கள் மெய்யிருப்பு வளர்ந்து, அது முதிர்ச்சிப் பெறவேண்டும். உங்கள் மெய்யிருப்பு வளர்ந்தவுடன் உங்களுக்கு எது தேவை, எது ஆசை என்று புரியும். இல்லாவிட்டால் உங்களால் தெரிந்து கொள்ள முடியாது. உங்களால் எது தேவை, எது ஆசை என்பதற்கிடையே வேறுபடுத்த முடியாது. ஆசை எப்போதும் பைத்தியம் போல் இருக்கும், தேவை எப்போதும் நியாயமானதாக இருக்கும். நீங்கள் உங்கள் தேவைகளை மறுத்தால், நீங்கள் உங்களுக்கே பாதகம் செய்து கொள்வதாகும். அதேபோல், நீங்கள் உங்கள் ஆசைகளை பெருக்கிக்கொண்டே போனால், அதுவும் உங்களுக்கு நீங்களே பாதகம் செய்துகொள்வதாகும். இப்படியே நீங்கள் உங்கள் தேவைகளை மறுத்துக்கொண்டே போனால், நீங்கள் தற்கொலை செய்து கொளவீர்கள். அதேபோல் உங்கள் ஆசைகளை பெருக்கிக்கொண்டே போனாலும், வேறு ஒரு விதமாக, தற்கொலை செய்து கொள்கிறீர்கள்.
ஆசைகள் மிக அதிகமாகி, ஆசைகள் அடக்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பெரிதாகும்போது, உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும். அந்த பதட்டம், தாங்க முடியாத அளவிற்கு இருக்கும். அதேபோல் நீங்கள் உங்கள் தேவைகளை மறுக்கும்போது, நீங்கள் தாங்கமுடியாத அளவிற்கு பதட்டத்தை உண்டாக்கிக் கொள்வீர்கள். அதனால், இரண்டு வகையான பாதகமான மனம் உள்ளது. அதில் ஒருவகையானது தேவைகளை மறுத்துக் கோண்டே இருக்கும், இன்னொரு வகையானது, தேவைகளை ஆசையாக மாற்றிக்கொண்டே இருக்கும். வெளிப்புறத்திலிருந்து இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க இயலாது. எது தேவை, எது ஆசை என்று வேறு யாராலும் உங்களுக்காக முடிவு செய்ய இயலாது. உங்களின் சுய விழிப்புணர்வுதான், அதன் அளவுகோல், ஏனெனில் ஒருவருக்குத் தேவையாக இருப்பது மற்றொருவருக்கு ஆசையாக இருக்கலாம். அதனால் இதற்கு பதிலைச் சொல்லி கொடுக்க முடியாது.
அதைப்பற்றி சொல்ல வேண்டுமானால் இவ்வளவுதான் சொல்லமுடியும்: எது இல்லாமல் உங்களால் வாழ முடியாதோ, அதுமட்டும்தான் தேவையென்பது. ஆனால் ஒருவருடைய விழிப்புணர்வு மட்டுமே, இறுதியாக, இதை முடிவு செய்யமுடியும், அதுவும் இதை எல்லா காலத்திற்கும் சேர்த்து முடிவெடுக்க முடியாது, ஏனெனில் இன்று எதுத்தேவையாக இருக்கிறதோ, அது நாளை ஆசையாக இருக்கலாம். இந்த வினாடி அது தேவையாக இருக்கலாம், அடுத்த வினாடியே அது ஆசையாக மாறலாம், ஆனால் உங்களுக்கு ஆக்கப்பூர்வ (Positive) விழிப்புணர்வு இருந்து, உங்களுக்கு உங்களுடைய மனதைப் பற்றியும், அதன் சூழ்ச்சிகளைப் பற்றியும், அதன் நாச வழிகளைப்பற்றியும், மேலும், உங்களின் நான் என்ற அகந்தையைப் பற்றியும், அது தன்னை பலப்படுத்திக் கொள்ளும் வழிகளைப் பற்றியும், அது தனக்கு உணவு வழங்கிக்கொள்ளும் முறைகளைப் பற்றியும் தெரிந்திருந்தால், உங்களுக்கு வேறுபடுத்தவும் தெரியும்.
அதனால் நான் எதிர்மறையாக (Negative) இல்லை. சன்யாசம், மற்றும் புதுமையும், பழமையும் கலந்த சன்யாசம், முற்றிலும் ஆக்கப்பூர்வமானது (Positive). ஏதோ ஒன்றை உங்களுள் வளர்ப்பதற்காக ஏற்பட்டது. நான் உங்களுக்கு இதைப் பற்றி உடன்பாடான மனோபாவத்தைத்தான் தரவேண்டுமே தவிர, எதிர்மறையான மனோபாவத்தை அல்ல. நீங்கள் எதையும் மறுக்க வேண்டியதில்லை. பார்க்கப்போனால், நிறைய விஷயங்கள் மறுக்கப்படலாம் - உங்களால் அல்ல, ஆனால் தானாகவே. நீங்கள் உள்நோக்கிச் செல்ல செல்ல, நீங்கள் வெளிப்புறத்து நடவடிக்கைகளை குறைத்துக்கொள்வீர்கள். ஒருவன் உள்ளூர இருப்பது குறைவாக இருந்தால், அவன் அதை, வெளிப்புறத்தில் அதிகமாக இருந்து ஈடுகட்டுவான். அவன் விரிந்துகொண்டே இருப்பான்.
ஆனால் நீங்கள் விரிவடைவதுடனும், உங்கள் வெளிப்புற “சுயத்துடன்” போராடாதீர்கள். விதையாக இருக்கும் உங்களுடன் போராடுங்கள், அது உயரமாக வளரும் வேகத்தில், இந்த வெளிப்புற அரத்தமற்றவைகளெல்லாம் தானாகவே விழுந்துவிடும். ஒருமுறை உள்ளூர இருக்கும் பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துகொண்டால், பின்பு அத்துடன் ஒப்பிடுவதற்கு வெளிப்புற உலகத்தில் ஒன்றுமே இல்லை. ஒருமுறை உள்ளார்ந்த பேரானந்தத்தை தெரிந்துகொண்டால், பின்னர் வெளிப்புற இன்பங்கள் எல்லாம் பைத்தியக்காரத்தனமாகிவிடும், பின்பு பொழுதுபோக்கு என்ற பெயரில் நடந்து கொண்டிருப்பவைகளெல்லாம் அர்த்தமற்றதாக, பைத்தியக்காரத்தன்மையாக ஆகிவிடும். ஒருமுறை உங்களுக்கு உள்ளார்ந்திருக்கும் பேரானந்தம் தெரிந்துவிட்டால், இதுவெல்லாம் தானாக விழுந்துவிடும். பின்பு, சந்தோஷம், இன்பம், என்று சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் ஏமாற்றிக்கொள்வதுதானே தவிர வேறொன்றுமில்லை என்பது தெரியவரும். ஆனால் உங்களுக்கு உள்ளார்ந்த பேரானந்தம் தெரிவதற்கு முன்பு நீங்கள் இவ்வாறு சொல்லக்கூடாது. அப்படி நீங்கள் சொன்னால், பின்பு அது மாபெரும் ஏமாற்றமாகிவிடும்.
அதனால் சன்யாசத்தை நோக்கி ஒரு ஆக்கப்பூர்வ (Positive) மனோபாவம் இருந்தால், அது முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருக்கும். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருக்கலாம், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதையே செய்து கொண்டிருக்கலாம் - உடனடியாக எந்தவித வெளிப்புற மாற்றமும் கேட்கப்படாது, ஆனாலும் சில மாற்றங்கள் இருக்கும், ஆனால் அவை பின்பு வரும். அவை வரும்போது வரட்டும், நீங்களாக எதையும் முயற்சிக்காதீர்கள், அவைகளை வற்புறுத்தி வரவழைக்காதீர்கள். ஆக்கப்பூர்வமான (Positive). சன்யாசிகள், நிஜமான (Positive) துறத்தலுக்காக, வரும் சாத்தியக்கூற்றை, நான் வரப்போகும் உலகில் தொலைநோக்காக பார்க்கிறேன்.
எதிர்மறை(Negative) கருத்தான தன்னையே மறுப்பது என்பது, முன்பு பல காரணங்களினால் சாத்தியமாக இருந்தது. சமுதாயத்தின் அமைப்பு ஒரு காரணம், உழவுத்தொழிலை மேற்கொண்டிருக்கும் சமுதாயத்தினால், சிலரை வேலை இல்லாமல் இருக்க அனுமதிக்க முடிந்தது. ஆனால், சமுதாயம், மென்மேலும் தொழில் மயமாகும்போது, கூட்டுக்குடும்பங்கள் இருக்கும் வாய்ப்பு குறைந்தே இருக்கும். தனித்துவம் அதிகரிக்க அதிகரிக்க, கூட்டு குடும்பத்திற்கான வாய்ப்பு குறைந்துவிடும். தளர்ந்த பொருளாதார அமைப்பினால், நிறைய கூட்டுக்குடும்பங்களை அனுமதிக்க இயலும். ஆனால் சீராக இருக்கும் பொருளாதார அமைப்பில், கூட்டுக்குடும்பங்களுக்கான வாய்ப்பு குறைந்துகொண்டே இருக்கும். சாதுக்களாகவும், சன்யாசிகளாகவும் இருப்பவர்கள், சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்துபவர்களாக தெரிந்தார்கள். என்னுடைய நோக்கில், எல்லோரும் அவரவர்களால் என்ன செய்யமுடியுமோ அதை செய்தாக வேண்டும். ஒருவர், அவர் இருக்கும் சமுதாயத்திற்கு, அவர் பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டும். ஒருவர் தன் சுயநலத்திற்கு மற்றவர்களை பயன்படுத்துபவர்களாக இருக்கக்கூடாது. யாரும் அவ்வாறு இருக்கக்கூடாது. அதுவும் ஒரு ஆன்மீகவாதி சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்துபவராக இருக்கக்கூடாது. ஒரு ஆன்மீகவாதியால் தன்நலத்திற்காக பிறரை உபயோகப்படுத்த முடியுமேயானால், மற்றவர்கள் அவ்வாறு இருக்கக்கூடாது என்று சொல்வதற்கேயில்லை.
என்னைப் பொறுத்த வரையில், ஒரு சன்யாசி, ஒருபோதும், சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்த மாட்டான். அவன் தன்னுடைய வாழ்விற்கு பணம் ஈட்டுவான். அவன் பயன்படுத்துபவனாக மட்டுமல்லாமல் (Consumer) தயாரிப்பவனாகவும்(Producer) இருப்பான். அதனால் தயாரிக்கும் கொள்கையும் ஆக்கப்பூர்வமானதே. பழைய கருத்தான தயாரிக்காத, சன்யாசிகள், எதிர்மறையான மனோபாவத்திற்கு தங்களை பக்குவப்படுத்தியிருந்தார்கள். ஆக்கப்பூர்வ மனோபாவத்திற்கு அதிக தாத்பரியம் இருக்கிறது. உதாரணத்திற்கு, பழைய சன்யாச கொள்கை, பலவற்றை மறுத்தது. அதுக் குடும்பத்தை மறுத்தது, அது உடலுறவை மறுத்தது, காதலை மறுத்தது, எவையெல்லாம் சமுதாயத்தின் சந்தோஷத்திற்கும், உங்களின் சந்தோஷத்திற்கும் உதவுகிறதோ, அவற்றையெல்லாம் மறுத்தது. அது மறுத்தது – நான் மறுக்கமாட்டேன்.
அதனால், நான் அதை அனுமதிக்கிறேன் என்று அர்த்தமில்லை. நான் மறுக்கமாட்டேன் என்று சொல்வதின் மூலம், ஒரு வினாடி வரும்போது, ஒருவன் இதையெல்லாம் முழுமையாக கடந்து செல்வான் என்பதையே உணர்த்துகிறேன் – உதாரணத்திற்கு, உடலுறவில். இது வேறு விஷயம், இது பலனாக வருமே தவிர அவசியமாக இருக்காது. இது சன்யாசத்திற்கு முன் தேவையில்லை, இது சன்யாசத்திற்குப் பின்னால் வரும். அப்படியே வரவில்லை என்றாலும், அதை ஒரு குற்ற உணர்வாக ஏற்படுத்தமாட்டேன். பழையக் கொள்கை மிக கொடூரமானது. அது மற்றவர்களுக்கு கொடுமை செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவதோடு அல்லாமல், தனக்குத்தானே நிறைவில்லாமல் துன்பப்படும் ஒன்றாகவும் இருக்கிறது. உடலுறவு மகிழ்ச்சியின் க்ஷணத்தோற்றத்தை கொடுப்பது போல் தோன்றுவதால், அது மறுக்கப்பட்டது.
நிறைய மதங்கள் சந்தோஷம் ஏற்படுத்தாத உடலுறவை அனுமதித்தது. நீங்கள் அதை இனப்பெருக்கத்திற்கு மட்டும் உபயோகப்படுத்தலாம், ஆனால் நீங்கள் அதன்மூலம் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்கக்கூடாது, அப்போதுதான் அது பாவமில்லை, அதனால் உடலுறவுக் கொள்வதினால் பாவமில்லை, “ஆனால் நீங்கள் சந்தோஷமாக இருக்கக்கூடாது, சந்தோஷமாக இருப்பதுதான் பாவம்”. என்னைப் பொறுத்தவரை, மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் எதுவும் மறுக்கப்படவும் கூடாது, அது அடக்கி வைக்கப்படவும் கூடாது. உங்கள் உள்ளார்ந்த மகிழ்ச்சி முதலில் வரட்டும் – பின்பு பல வழிகளில் உங்கள் ஆக்க சக்திகளின் போக்கில் மாற்றம் ஏற்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். பின்பு, அந்த மாற்றம் பெரியதாக இருக்கும்.
நீங்கள் உடலுறவை மறுத்தால், பின்பு நீங்கள் காதலையும் மறுக்கவேண்டும், இதை மறுக்கும் சன்யாசிகள் அன்பில்லாமல் ஆகிவிடுவார்கள். அவர்கள் அன்பைப் பற்றி பேசுவார்கள், ஆனால் அவர்கள் அன்பில்லாமல் ஆகிவிடுவார்கள். அவர்கள் உலக அன்பைப் பற்றி பேசுவாரகள், உலக அன்பைப் பற்றி பேசுவது, தனிப்பட்ட அன்பைப்பற்றி பேசுவதை விட, மிகச் சுலபமானது – தனிநபரின் அன்பைப் பற்றி பேசுவது மிகக் கடினமானது. இந்த முழு உலகத்தை நேசிப்பது மிகச்சுலபம், அதில் எதுவும் சம்பந்தப்படவில்லை. யார் ஒருவர் மறுக்கும் விதத்தில் நினைத்துக்கொண்டிருக்கிறாரோ, அவர் உலக அன்பைப் பற்றி பேசிக்கொண்டு, தனி மனிதனின் உணர்வுகளை வேருடன் பிடுங்கிக்கொண்டிருப்பார்.
எந்த மதம் உடலுறவை மறுக்கிறதோ, அது காதலையும் மறுக்கவேண்டும், ஏனெனில் காதலுடன் உடலுறவும் தொடர்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால், நான் பார்க்கும்வரை, உடலுறவு மறுக்கப்படாமல், ஆக்கப்பூர்வ வளர்ச்சியினால், அதை உருமாற்றினால், பின்பு காதலை மறுக்கத்தேவையில்லை.நீங்கள் அன்பாக இருந்தாலேயொழிய, நீங்கள் உடலுறவின் மூலம் செலவழிக்காத ஆக்க சக்தியை, உங்களால் பயன்படுத்த முடியாது. அந்த ஆக்க சக்தி அழிவை நோக்கி செல்லும், அதனால் அன்பை வளர்ப்பதே உடலுறவை கடந்துசெல்வதற்கான ஒரே வழி.
அன்பு வளர வேண்டும். அது உலகம் முழுவதும் பரவ வேண்டும், ஆனால் அது அங்கிருந்து தொடங்கக்கூடாது, அது எப்பொழுதும் தொலைவில் இருந்து தொடங்கக்கூடாது. எவன் ஒருவன் தொலைவிலிருந்துதான் தொடங்கவேண்டும் என்று நினைக்கிறானோ, அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான். எல்லாப் பயணமும், அருகில் இருந்துதான் தொடங்கவேண்டும். நாம் எடுத்து வைக்க வேண்டிய முதல் அடி தொலைவிலிருந்து எடுத்து வைக்க முடியாது. ஒருவன் அன்பு நிறைந்த தனிமனிதனாக இருக்கவேண்டும். எந்த அளவிற்கு ஒருவனுடைய அன்பு ஆழமாக வளர்கிறதோ, அந்த அளவிற்கு அவனுக்கு உடலுறவில் ஆர்வம் குறையும். பின்பு அன்பு பரவும்.
அதனால், நான் எதையும் மறுக்கமாட்டேன், ஏனெனில் இறுதியாக பேரானந்தம் அடைவதுதான் குறிக்கோள். எல்லோரும் பேரானந்தத்தை தேடுகிறார்கள். இன்பம் மறுக்கப்படக்கூடாது, ஆனால், எப்பொழுது அதிரடியாக பேரானந்தம் கிடைக்கிறதோ, அப்போது நீங்கள் சந்தோஷம் என்று எதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந் தீர்களோ, அதுவெல்லாம் போலியானது என்பது உங்களுக்குத் தெரியவரும். இந்த நிமிடத்தில் உங்களால் அதை எறிந்துவிட முடியாது. பேரானந்தம் முதலில் வரட்டும். இதுதான் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி என்பதாகும். முதலில் உங்களுள் பெரியதாக ஏதாவது வரட்டும், அப்பொழுதுதான் சிறிதாக உள்ளவையெல்லாம் எறியப்படும். இதன்மூலம் உங்களின் “நான் என்ற அகந்தை” யும் பலம் பெறாது. ஏனெனில் நீங்கள் தூக்கியெறியும்பொழுது, நீங்கள் பயன் இல்லாததையும், விலைப் போகாதவைகளை யும்தான் தூக்கி எறிவீர்கள்.
யாரெல்லாம் துறப்பதற்கு உரிமைக்கொண்டாடுகிறார்களோ, அவர்களெல்லாம் நான் இதைவிட்டு வந்தேன், நான் அதைவிட்டு வந்தேன் என்பார்கள். இப்படி சொல்வதின் மூலம் அவர்கள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்பதை காண்பிக்கிறார்கள். அவர்கள் எதையெல்லாம் துறந்தார்களோ, அவையெல்லாம் இன்னும் அவர்களுக்கு அர்த்தமுள்ளதாகத்தான் இருக்கிறது. அது அவர்களின் நினைவில் உள்ளது, அது இன்னும் அவர்களின் அறிவின் ஒரு பாகமாக இருக்கிறது. அவர்கள் இன்னும் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் துறந்துவிட்டது உண்மைதான், ஆனால் எப்படி ஒருவன் தனக்கு சொந்தமில்லாத ஒன்றை துறக்கமுடியும்? அதனால் நீங்கள் துறந்து விட்டதாக நினைத்துக்கொண்டேயிருந்தால், நீங்கள் இன்னும் அதற்கு சொந்தக்காரர்களாகத்தான் இருக்கிறீர்கள். நீங்கள் எதிர்மறையான வழியில் அதற்கு சொந்தக்காரர்களாக இருக்கிறீர்கள்.
ஆனால் ஒருமுறை உங்களுக்கு அற்புத சம்பவம், மாபெரும் ஆனந்தம், மாபெரும் மகிழ்ச்சி குறித்துத் தெரிந்துவிட்டால், பின்பு நீங்கள் எதையும் துறக்க வேண்டிய தில்லை, காய்ந்த இலை மரத்திலிருந்து விழுவதைப்போல, அது தானாகவே கீழே விழுந்துவிடும். காய்ந்த இலைகள் விழும்போது, அது யாருக்கும் கேட்பதும் இல்லை, யாருக்கும் தெரிவதும் இல்லை. மரத்திற்கும் அதன் காய்ந்த இலைகள் விழுவது குறித்து, தெரிவதும் இல்லை, அது எந்த காயத்தையும் விட்டுச் செல்வதில்லை. அதனால் என்னைப் பொறுத்தவரை, எது நடப்பதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் – பழுத்த வினாடி வரவேண்டும் – பழுப்பதுதான் எல்லாம். ஒருவன் பழுக்க வேண்டும், இல்லாவிட்டால் அவன் தேவையில்லாமல் அலைந்துகொண்டு, தன்னைத்தானே தேவையில்லாமல் துன்புறுத்திக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொண்டு இருப்பான். ஒருவன் பழுக்கவேண்டும், பின்பு வாய்ப்பு தானே வரும்.
அதனால் துறப்பது என்பது ஆக்கப்பூர்வமான வளர்ச்சியினால் இருக்கவேண்டும். இதைத்தான் என் சன்யாசத்தின் மூலம் உணர்த்துகிறேன் – ஆக்கப்பூரவமான வளர்ச்சியின் மூலம் துறப்பது. இதில் எதிர்மறையானது, மறுப்பது, அடக்குவது எதுவும் கிடையாது.
நான் மனிதர்களை, அவர்கள் இருப்பதுபோன்றே, அவ்வாறே ஏற்றுக்கொள்கிறேன். இப்போது நிகழக்கூடிய தன்மைகளோடுதான் ஒருவன் இருக்கிறான். ஆனால் அவன் அப்படியே இருக்கும்பட்சத்தில், அவனைக் கண்டனம் செய்யக்கூடாது. உபயோகமற்ற தென எதுவும் கிடையாது. அவன் ஒரு விதை, ஒரு விதையை கண்டனம் செய்தால், எப்படி உங்களால் ஒரு மரத்திற்கு ஆரவாரத்துடன் வரவேற்புத் தர முடியும்? நான் மனிதர்களை அவர்கள் இருப்பதுபோன்றே அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் – முழு மையாக, எந்த மறுப்பும் இல்லாமல்; நான் யார் ஒருவனையும், அவனால் இவ்வளவு தான் முடியும், இதுதான் முடிவு என்று கூறுவதில்லை. நான் அவனுக்கு இதுதான் ஆரம்பம் என்றுதான் கூறுகிறேன். மனிதன் என்பது ஒரு விதைதான். அந்த விதை பெரிய மரமாகவும், தெய்வீகமாகவும் வளர முடியும். ஒவ்வொரு மனிதனும் கடவு ளாகலாம். ஆனால், இப்போது அவன் ஒரு விதைதான். அந்த விதையை பாதுகாக்க வேண்டும், அந்த விதையை நேசிக்கவேண்டும், அந்த விதை வளர்வதற்கான வாய்ப்பைத் தரவேண்டும்.
சன்யாசம் என்றால், நீங்கள் விதை என்பதையும், உங்களுக்கு கடவுளாக நிகழக்கூடிய தன்மை இருக்கிறது என்பதையும், உணர்ந்தவன் என்று அர்த்தம். இது ஒரு முடிவல்ல, இது ஒரு ஆரம்பம்தான். இப்பொழுது நீங்கள் வளரவேண்டும் என்று முடி வெடுக்கவேண்டும். அந்த வளர்ச்சி சுதந்திரத்தின் மூலம் வளரும், அந்த வளர்ச்சி பாதுகாப்பின்மையின் மூலம் வரும். நீங்கள் விதையைப் பாருங்கள் – மிகப் பாதுகாப் பாக இருக்கும். ஆனால் மரத்திற்கு பாதுகாப்பு கிடையாது. விதை மூடியுள்ளது, முழுவதும் மூடப்பட்டுள்ளது. விதை சாகும் நிமிடத்திலிருந்து, மரம் வளர ஆரம்பிக்கிறது, வளரும் தன்மை முடுக்கிவிடப்படுகிறது. இதனால் ஆபத்துக்கள் இருக்கும், பாதுகாப்பின்மை இருக்கும், அழிவுக்கான வாய்ப்புகள் இருக்கும் – ஒரு மெல்லிய பொருள் இந்த உலகத்திற்கு எதிராக சண்டையிடுகிறது. ஆனால் இப்பொழுது நீங்கள் ஒரு விதைதான். அதனால் ஆபத்துக்கள் கிடையாது.
சன்யாசி என்றால், இப்பொழுது நீங்கள் வளர முடிவுசெய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இதுவே உங்களின் கடைசி முடிவு. இப்பொழுது நீங்கள் போராடவேண்டும், இப்பொழுது உங்களுக்கு பாதுகாப்பின்மை இருக்கும், உங்களுக்கு ஆபத்துக்கள் இருக்கும், நீங்கள் அவைகளுடன் சண்டையிட்டு, ஒவ்வொரு வினாடியும் நேருக்கு நேர் எதிர்கொள்ளவேண்டும். இந்த ஒவ்வொரு வினாடி சண்டையும், போராட்டமும், இந்த தெரியாத ஒன்றில் வாழ்வதும்தான் உண்மையான துறவு.
வளர முடிவெடுப்பது சிறந்த துறவாகும் – இது விதை தன்னுடைய பாதுகாப்பைத் துறப்பதாகும், இது விதைக்கு அளிக்கப்பட்டிருந்த முழுமையை, அது துறப்பதாகும். ஆனால் இந்த பாதுகாப்பிற்காக, நீங்கள் இழப்பது மிக அதிகம். விதைக்கு வாழக் கூடிய வாய்ப்பு இருக்கிறதேத் தவிர, தற்போது இறந்ததுதான். அது வாழலாம், அல் லது இறந்தது போன்றே இருந்துகொண்டிருக்கலாம். அது வளர்ந்து மரமாகும் வரை அது இறந்ததே. எனக்குத் தெரிந்தவரை, மனிதர்கள், அவர்கள் வளரவேண்டும் என்று முடிவெடுக்கும் வரை, அவர்கள் தெரியாத ஒன்றினுள் குதிக்கும்வரை, அவர் கள் விதைபோன்று மூடப்பட்டு, இறந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
சன்யாசியாக இருப்பதென்றால், வளர்வதென்று முடிவெடுப்பது, அபாயத்திற்குள் செல்வதென்று முடிவெடுப்பது, முடிவெடுக்காமல் வாழ்வது என்று முடிவெடுப் பதாகும். இது முன்னுக்குப் பின் முரண்பட்டதுபோல் தெரிந்தாலும், அது அவ்வாறு அல்ல. ஒருவன் எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டும். முடிவெடுக்காமல் வாழ வேண்டும் என்பதில் கூட, ஒருவன் எப்போதாவது ஒரு சமயம் முடிவெடுத்துதான் ஆகவேண்டும். பாதுகாப்பின்மையினுள் செல்வதுக்கூட எங்கோ செல்வதுதான். அதையும் ஒருவன் முடிவெடுத்துத்தான் ஆகவேண்டும். நான் உங்கள் முடிவுக்கு உதவுகிறேன். பின்பு நீங்கள் முடிவெடுக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறேன். இந்த புதுமையும், பழமையும் கலந்த சன்யாசிகள், இந்த உலகத்தின் எல்லைக்கே செல்லலாம். இது எல்லோரையும் சென்றடையலாம், ஏனெனில் இதற்கு சிறப்பாக எதுவும் தேவையில்லை – புரிந்துகொள்ளுதல் மட்டும்தான்.
நான் இன்னொன்றை கூற விரும்புவது, இந்த சன்யாசம் எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல. இந்த பூமியில் எல்லா வகையான சன்யாசமும், ஏதோ ஒரு மதத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தையோ சார்ந்தே இருந்திருக்கிறது. அதுவும் பாதுகாப்பிற்கான ஒரு வழிமுறைதான். நீங்கள் துறக்கிறீர்கள், ஆனாலும் சார்ந்தே இருக்கிறீர்கள். நீங்கள் “நான் சமுதாயத்தை விட்டுவிட்டேன்” என்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் ஒரு வர்க்கத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் இந்துவாகவோ, முகமதியராகவோ அல்லது சீக்கியராகவோ இருந்துகொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் ஏதோ ஒன்றாக இருந்துகொண்டே இருக்கிறீர்கள்.
உண்மையில் சன்யாசம் என்பது ஆன்மீகமாக இருப்பது, ஆனால் எந்த மதத்துடனும் இணைக்கப்படாமல் இருப்பதேயாகும். திரும்பவும் இது தெரியாத ஒன்றுக்குள் குதிப்பதாகும். மதங்கள் தெரிந்தவை, ஆனால் ஆன்மீகம் தெரியாத ஒன்று. ஒரு வர்க்கத்திற்கு முறைகள் இருக்கின்றன. ஆனால் ஆன்மீகத்திற்கு முறைகள் எதுவுமில்லை. ஒரு வர்க்கத்திற்கு புனித நூல்கள் இருக்கின்றன. ஆனால் ஆன்மீகத்திற்கு இப்பிரபஞ்சம் மட்டும்தான் இருக்கிறதேத்தவிர வேதநூல்கள் இல்லை. இந்த சன்யாசம் அகம் வேறு, புறம் வேறு, என்ற இல்லாதது, தெய்வத்தன்மை வாய்ந்தது. எந்த வர்க்கத்தையும் சார்ந்தது அல்ல.
அதனால் இந்த சன்யாசம் முகமதியரையோ அல்லது முகமதிய மதத்தையோ மறுப்பது என்று அர்த்தமில்லை. இந்த சன்யாசம் கிறிஸ்துவரையோ அல்லது கிறிஸ்துவ மதத்தையோ மறுப்பது என்று அர்த்தமில்லை – இல்லை! இது உண்மையில் நேர் எதிர்மறையாக இருக்கும் ஒன்று. இந்த சன்யாசம் கிறிஸ்து வர்களுக்கு, உண்மையான கிறிஸ்துவ மத்த்தைக் கொடுக்கும். இது இந்துக்களுக்கு உண்மையான இந்து மதத்தைக் கொடுக்கும். ஏனெனில் நீங்கள் இந்து மதத்திற்குள் ஆழ்ந்து சென்றால், இறுதியில் இந்து என்பது போய் ஆன்மீகத்தன்மை மட்டும்தான் இருக்கும். நீங்கள் கிறிஸ்துவ மதத்தில் ஆழ்ந்து சென்று பார்த்தால், அதில் கிறிஸ்துவ மதத்தன்மை குறைவாகவும், ஆன்மீகத்தன்மையே அதிகமாகவும் இருக்கும். உடனடியாக நீங்கள் ஆன்மீகத்தின் மையப்பகுதியை அடைவீர்கள்.
அதனால், நீங்கள் சன்யாசம் பெற்றால், நீங்கள் எந்த மதத்திலும் இருக்கமுடியாது என்று நான் சொல்வதின் மூலம், நீங்கள் கிறிஸ்துவ மதத்தையோ அல்லது இந்து மதத்தையோ அல்லது ஜெயின் மதத்தையோ மறுக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. நீங்கள் ஒவ்வொரு மதத்திலும், இறந்து பாரமாக இருக்கும் பாகத்தைத்தான் மறுக்கப்போகிறீர்கள். நீங்கள் இறந்த சம்பிரதாயத்தைத்தான் மறுக்கிறீர்கள். மேலும் இந்த இறந்த சம்பிரதாயங்களுக்குப் பின்னால், இறந்த வேதநூல்களுக்குப் பின்னால், இறந்த குரு ஆட்சிக்குப் பின்னால் (Gurudom) ,இறந்த கிறிஸ்துவ ஆலயங்களின் பின்னால், உயிருடன் ஓடிக்கொண்டிருப்பதை, நீங்கள் மறுபடியும் கண்டுபிடித்து அதை திறப்பதாகும்.
நீங்கள் மறுபடியும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மின்சாரத்தை (Current) கண்டுபிடிப்ப தாகும். அது எப்போதுமே இருந்திருக்கிறது, ஆனால் அதை எப்பொழுதுமே கண்டுபிடித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் மறுபடியும் கண்டுபிடிக்க வேண்டும். அதை ஒருவரிடமிருந்து ஒருவருக்கு மாற்றவும் முடியாது, மாற்றிச் செலுத்தவும் முடியாது, யாராலும் உங்களுக்கு கொடுக்கவும் முடியாது, நீங்களே உங்களுள் ஆழமாகத் தோண்ட வேண்டும், இல்லாவிட்டால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் நான் உங்களுக்கு மதத்தை கொடுக்கவில்லை, நான் இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருப்பதற்குள் உங்களைத் தள்ளுகிறேன். அது உங்களின் சொந்தக் கண்டுபிடிப்பாகத்தான் இருக்கும், அது யாருடையதாகவும் இருக்க வாய்ப்பில்லை, அதனால் நான் உங்களுக்கு எதையும் செலுத்தவில்லை.
ஒரு நீதிக்கதை :
புத்தர் ஒரு நாள் தன் கையில் பூவுடன் வந்தார். அவர் ஒரு ஆன்மீக சொற்பொழிவு கொடுக்கவேண்டும், ஆனால் அவர் மௌனமாக இருந்தார். அவர் சொல்வதைக் கேட்க வந்தவர்களுக்கெல்லாம், அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து ஆச்சரியம் அடைந்தார்கள். நேரம் கடக்கிறது. இதுபோன்று ஆனதே இல்லை – அவர் என்ன செய்கிறார் அவர்களெல்லாம், இவர் பேசப்போகிறாரா, இல்லையா ? என்று வியந்தார்கள்.
பின்பு யாரோ ஒருவர் கேட்டார் “நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? நாங்கள் எல்லோரும் நீங்கள் பேசுவதை கேட்பதற்காக வந்திருக்கிறோம் என்பதை மறந்துவிட்டீர்களா ? “.
புத்தர் சொன்னார் “நான் சிலவற்றை உங்களிடம் தெரிவித்தேன், நான் வார்த்தை களால் சொல்லமுடியாத சிலவற்றைச் சொன்னேன். உங்களுக்கு கேட்டதா, இல்லையா ? “.
யாருக்குமே கேட்கவில்லை, ஒரே ஒரு சிஷ்யர் மட்டும் – முற்றிலும் அறிமுகம் இல்லாத சிஷ்யர், இங்கேதான் முதல்முறையாக எல்லோருக்கும் தெரியவந்த “மகாகாஷ்யபா” (Mahakshyapa) என்ற சிஷ்யர் மனதார சிரித்தார். புத்தர் அவரைப் பார்த்து “மகாகாஷ்யபா (Mahakshyapa) இங்கே வா, நான் உனக்கு இந்த மலரைத் தருகிறேன், இதன் மூலம் நான் பகிரங்கமாக கூறுவது என்னவென்றால், என்னால் எதையெல்லாம் வார்த்தைகளின் மூலம் கொடுக்க முடிந்ததோ, அதையெல்லாம் நான் எல்லோருக்கும் கொடுத்துவிட்டேன், என்னால் வார்த்தைகளால் கொடுக்கமுடியாத, சில உண்மையான, அர்த்தமுள்ளவைகளை நான் மகாகாஷ்யபா (Mahakshyhyapa) விற்கு கொடுக்கிறேன்” என்றார்.
அதனால் சென் (Zen) பாரம்பரியம் திரும்பக் கேட்டுக்கொண்டே இருப்பது “மகாகாஷ்யபா (Mahakshyapa) விற்கு எது செலுத்தப்பட்டது? ” – வார்த்தைகள் இல்லாமல் சொல்லப்பட்டது. புத்தர் என்ன சொன்னார்? மகாகாஷ்யபா (Mahakshyapa) என்ன கேட்டார்? மேலும் எப்போதெல்லாம் இதைப்பற்றி தெரிந்தவர் இருக்கிறாரோ, அப்போதெல்லாம் அவரும் சிரிக்கிறார். ஆனால் அந்தக் கதை ஒரு மர்மமாகவே இருக்கிறது. இதை யாராவது புரிந்துகொள்ளும்போது அவர் மறுபடியும் சிரிக்கிறார். எங்கெல்லாம் பண்டிதர்கள், எல்லாம் தெரிந்தவர்கள் என்று ஒன்றும் தெரியாமல் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் என்ன சொல்லப்பட்டிருக்கும் என்பதைப்பற்றி கலந்துரையாடுவார்கள். ஆனால் யார் ஒருவருக்குத் தெரிந்திருக்கிறதோ அவர் சிரிப்பார்.
பாங்கி (Bankei) என்ற ஒரு மாபெரும் சென் (Zen) ஆசிரியர், “புத்தர் ஒன்றும் சொல்லவுமில்லை, மகாகாஷ்யபா (Mahakshyapa) எதையும் கேட்கவுமில்லை” என்றார்.
அதனால் யாரோ ஒருவர் கேட்டார் “புத்தர் ஒன்றும் சொல்லவில்லையா ? ”.
“ஆமாம், ஒன்றும் சொல்லப்படவில்லை, ஒன்றும் கேட்கப்படவில்லை. இது சொல்லப் பட்டதையும், கேட்கப்பட்டதையும் பார்த்த சாட்சி நான்” என்றார் பாங்கி (Bankei).
யாரோ ஒருவர் “நீங்கள் அங்கு இல்லையே ? “ என்றார். அதற்கு பாங்கி (Bankei) “நான் அங்கு இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. எதுவும் சொல்லப்படாதபோது, யாரும் சாட்சியாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நான் அங்கு இல்லை, ஆனாலும் நான் சாட்சியாக இருக்கிறேன்” என்றார்.
வாழ்ந்து கொண்டிருக்கும் மின்சாரத்தை (Current) சொல்லித் தெரியப்படுத்த முடியாது. அது எப்போதுமே இருக்கிறது, ஆனால் நீங்கள்தான் அதனிடம் செல்லவேண்டும். அது அருகில், ஒரு ஓரத்தில்தான் இருக்கிறது, அது உங்களுள் தான் இருக்கிறது. நீங்கள்தான் அந்த வாழ்ந்துக் கொண்டிருக்கும் மின்சாரம். ஆனால் நீங்கள் உள்ளே போனதேயில்லை. உங்கள் கவனம் முழுவதும், எப்போதும் வெளியிலேயே இருக்கிறது. நீங்கள் வெளிப்பக்கம் நோக்கி இருக்கிறீர்கள். அதில் நீங்கள் பொருத்தப்பட்டுவிட்டீர்கள். உங்கள் நோக்கு முற்றிலும் பொருத்தப்பட்டதாகிவிட்டது. அதனால் உங்களால் உள்ளே இருப்பது என்பதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்படியே நீங்கள் உள்ளே இருப்பதற்கு முயற்சித்தால்கூட, நீங்கள் கண்களை மூடிக் கொண்டு வெளிப்புறமாகவே தான் இருந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உள்ளே இருப்பதென்றால், புறமும், அகமும் இல்லாத மனநிலையில் இருப்பதாகும். உள்ளே இருப்பதென்றால் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே எந்த எல்லைக் கோடும் இல்லாமல் இருப்பதாகும். வெளிப்புறத்தில் ஒன்றும் இல்லாதபோதுதான், நீங்கள் உள்ளே இருக்கும் மின்சாரத்திற்கு வருவீர்கள். ஒருமுறை அதனுடைய க்ஷணத்தோற்றம் தெரிந்துவிட்டால், நீங்கள் மாறிவிடுவீர்கள். உங்களுக்குப் புரிந்து கொள்ள முடியாதவைகளைப் பற்றித்தெரியவரும். அறிவினால் புரிந்துகொள்ள முடியாதவைகளை பற்றி உங்களுக்குத் தெரியவரும். அறிவினால் தெரிவிக்க முடியாதவைகளை பற்றியும் உங்களுக்குத் தெரியவரும்.
ஆனாலும், ஒருவர் பேசவேண்டும் – பூவிடம் கூட – சிரிப்பின் மூலமாவது. இதில் எந்த வித்தியாசமும் இருக்காது, அவை செயல்களின் மூலம் தெரிவிப்பதாகும். நான் பூவிடம் கைகளை உபயோகப்படுத்தினாலும், என் உதடுகளை உபயோகப் படுத்தினாலும், அதனால் எந்த வித்தியாசமாவது இருக்க வாய்ப்புண்டா என்ன? செய்கைதான் புதியது. அதனால்தான் அது உங்களை பாதிக்கிறது. இல்லாவிட்டால் உதடு அசைவது எவ்வாறு ஒரு செய்கையோ அதைபோலதான் இதுவும் அதற்கு நிகரான ஒரு செய்கை. நான் சப்தமிட்டாலும் அது ஒரு செய்கைதான், நான் மௌனமாக இருந்தாலும் அது ஒரு செய்கைதான். ஆனால் செய்கைகள் புதியது, உங்களுக்குத் தெரியாதது. அதனால் இது ஏதோ வித்தியாசமானது என்று நினைக்கிறீர்கள். எந்த வித்தியாசமும் கிடையாது. வாழ்ந்துக்கொண்டிருக்கும் மின்சாரத்தை சொல்லித்தெரியவைக்க முடியாது. ஆனாலும் சொல்லியாக வேண்டும், எப்படியாவது உணர்த்தவேண்டும், எப்படியாவது காண்பிக்க வேண்டும்.
அதனால் ஒரு வினாடியில் யாராவது ஒருவர் சன்யாசம் எடுத்துக்கொள்ள தயாராக இருந்தால், அது அவனுடைய ஒரு மாபெரும் தேடலை நோக்கிய ஒரு முடிவு. இது அவன் தாண்டுதலுக்குத் தயாராகிவிட்டான் என்பதனை எனக்கு உணர்த்தும் ஒரு செயலாகும். எப்பொழுது ஒருவன் மாற்றதிற்குத் தயாராகிவிட்டானோ, பழைய அடையாளங்களை இழக்கத் தயாராகிவிட்டானோ, மறுபடியும் புதிய மனிதனாக பிறக்க தயாராகிவிட்டானோ, எப்பொழுது ஒருவன் தயாராகிவிட்டானோ, பின்பு அவனுக்கு எந்தத் தகுதிகளும் தேவையில்லை, அது எந்த மாற்றத்தையும் உண்டாக்காது. இந்த தயார் நிலைதான் தகுதி. எப்பொழுது ஒருவன் தயாராகிறானோ, அப்பொழுது நான் தள்ளுவதற்கு தயாராக இருக்கிறேன். அவன் சென்றடைய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அவன் ஆரம்பித்ததே ஒரு ஆச்சரியமல்லவா ?.
அது குறிக்கோள் அல்ல – அவன் சென்றடைய வேண்டும் என்பது குறிக்கோளே அல்ல. ஆரம்பிப்பதுதான் ஒரு பெரிய விஷயம். அடைவது அவ்வளவு பெரிய விஷயமல்ல. ஆரம்பமே சிறந்தது. ஏனெனில், எப்பொழுதெல்லாம் ஒருவன் அடைகிறானோ, அவன் திறமையுடையவனாகவே இருக்கிறான். ஆனால் எப்பொழுதெல்லாம் ஒருவன் ஆரம்பிக்கிறானோ அவன் திறமை இல்லாதவனாக இருக்கிறான். அதனால் ஆரம்பமே ஒரு ஆச்சரியம்தான்.
புத்தர், ஒரு ஆச்சரியமே அல்ல. அவருக்குத் திறமை இருக்கிறது, அதனால் அவர் அடைந்தார். இது கணக்கைப் போல நிச்சயமானது. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஆனால் யாராவது ஒருவன் தன்னுடைய எல்லா ஆசைகளுடனும், தன்னுடைய எல்லா ஏக்கங்களுடனும், தன்னுடைய எல்லா குறைபாடுகளுடனும் என்னிடம் வந்து ஆரம்பிக்க நினைக்கும்போதுதான் அது ஆச்சரியம். புத்தருக்கும், இவனுக்கும் இடையே யாரையாவது ஒருவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டியி ருந்தால், நான் அவனைத்தான் தேர்ந்தெடுப்பேன். அவன் ஒரு ஆச்சரியம், திறமையே இல்லாமல் இருந்தாலும் மிக தைரியமானவன்.
அதனால் முடிவில் நீங்கள் எதை சாதிக்கிறீர்கள் என்பது குறித்து எனக்கு அக்கறையேக் கிடையாது. எனக்கு ஆரம்பத்தின்மீதுதான் அக்கறை. நீங்கள் ஆரம்பியுங்கள், ஒருமுறை ஆரம்பித்துவிட்டால், பாதி முடிவு கையிலேயே இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆரம்பம்தான் முக்கியம். ஒருமுறை ஆரம்பித்துவிட்டால் நீங்கள் வளர்ந்துகொண்டே இருப்பீர்கள்.
இது ஒருநாள் இரண்டுநாள் விஷயமல்ல. இது நேரம் சம்பந்தப்பட்ட விஷயம். இது அடுத்தவினாடியே நடக்கலாம். அல்லது நிறைய பிறவிகளுக்கு நடக்காமலேயே இருக்கலாம். ஆனால் ஒருமுறை தொடங்கிவிட்டால், இனி நீங்கள் இருந்தபடியே இருக்கமுடியாது. நீங்கள் சன்யாசம் வாங்க வேண்டும் என்று எடுத்த முடிவே பல ஆச்சரியமான மாற்றங்களை உண்டாக்கும். தொடர்ந்து வரும் பல பிறவிகளுக்கு நீங்கள் சாதிக்காமலேயே இருக்கலாம், ஆனால் இனி நீங்கள் முன்பு இருந்தது போன்று இருக்கமாட்டீர்கள். இது திரும்பவும் வரும், திரும்பவும் உதிக்கும்.
நீங்கள் சுதந்திரமாக இருக்க எடுத்த முடிவின் நினைவு, உங்கள் அடிமைத் தனங்களின் இடையேயும், உங்கள் பந்தங்களுக்கிடையேயும் கூட எப்பொழுதும் இருக்கும். சுதந்திரமாக இருக்க எடுத்த முடிவு, சுதந்திரமாக இருக்க ஏற்பட்ட ஏக்கமும், எல்லாவற்றையும் கடந்து செல்ல ஏற்பட்ட இந்த ஏக்கமும் எப்பொழுதும் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டே இருக்கும். அதனால் ஒருவனுடைய ஆரம்பத்திற்கு நான் எப்படி மறுப்புக்கூற முடியும்? மேலும் அவன் தகுதியுடையவனா? இல்லையா? என்று நான் யாரை கேட்கவேண்டும்? கடவுளே நீங்கள் இருப்பதையும், வாழ்வதையும் அனுமதித்து, “நீங்கள் தகுதியுடையவரா?” என்று உங்களை கேட்காதபோது, நான் யார் கேட்பதற்கு.
நான் உங்களுக்கு உயிர்கொடுக்கவில்லை, நான் உங்களுக்கு இப்பிரபஞ்சத்தையும் கொடுக்கவில்லை, நான் ஒரு மாற்றத்தைத் தருகிறேன் அவ்வளவுதான். கடவுள் உங்களுக்கு வாழ்வு கொடுக்கத் தயாராக இருந்தபோது, நீங்கள் உங்கள் குறைபாடுகளுடனும், பலவீனங்களுடனும் தகுதி பெற்றவராகத்தான் இருக்கவேண்டும். “அவன்” நீங்கள் இருப்பதற்கு அனுமதிக்கிறான் என்றால், நீங்கள் விலைமதிப்பில்லாத பொக்கிஷமாகத்தான் இருக்கவேண்டும், நீங்கள் கடவுளின் பார்வையில்கூட விலைமதிக்கமுடியாத பொக்கிஷமாகத்தான் இருக்கவேண்டும். அதனால் உங்கள் ஆரம்பத்தை மறுப்பதற்கு நான் யார்? ஆனால் சில நேரங்களில் குருவாக இருப்பவர்கள், கடவுளை விட மிக புத்திசாலியாகிவிடுகிறார்கள். அவர்கள் யார் தகுதியுடையவன், யார் தகுதியில்லாதன் என்று முடிவு செய்கிறார்கள். கடவுளே அவர்களிடம் வந்தால்கூட, யார் தகுதியுடையவர்கள், யார் தகுதியில்லாதவர்கள் என்பதை முடிவு செய்வார்கள். எப்பொழுதெல்லாம் யாரேனும் வருகிறார்களோ, அப்பொழுது கடவுள்தான் வருகிறார். அதனால் சிரிக்காதீர்கள். எப்போதெல்லாம் யாரேனும் வருகிறார்களோ, அப்பொழுது கடவுள்தான் வருகிறார், ஏனெனில் வேறு யாராலும் வர இயலாது.
அதனால், “அவன்” என்னிடம் வரும்போது, அதை மறுப்பதற்கு நான் யார் ? அவனுக்கு அது தெரியாமல் இருக்கலாம், அவனுக்கு இதை குறித்து போதிய அளவிற்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் இதை குறித்து எனக்குத் தெரியும் – கடவுள் தன்னையேத் தேடுகிறார் என்று எனக்குத் தெரியும். அதனால் என்னால் அவனை மறுக்க முடியாது. நான் அவனுடைய ஆரம்பத்தில் சந்தோஷம்தான் அடையமுடியும். அதனால்தான் எந்த வேறுபாடும் செய்யப்படவில்லை, எந்த தகுதிகளுக்கும் அவசியமில்லை, இந்த தருணத்தில், இந்த சன்யாசம், இந்த முழு மனித இனத்திற்குமே தேவையானது. இது முழு மனித இனத்திற்கும் தேவைப்படுகிறது.
நமக்கு வாழும் மின்சாரத்தைப் பற்றி விழிப்புணர்வு இல்லாமலேயே போய்விட்டது. உள்ளேயும், வெளியேயும் இருக்கும் தெய்வீகத்தன்மையைப் பற்றி நமக்குத் தெரியாமல் இருக்கிறது. அதனால் ஒவ்வொருவருக்கும் இதைத் தெரியப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் மிகக் கீழ்நோக்கிப் போகும் இந்த சூழ்நிலையில், மறுபடியும் ஒரு நூற்றாண்டிற்கு வர வாய்ப்பில்லாமல் போகலாம். அது போய்க்கொண்டேயிருக்கிறது.
டார்வின் (Darwin) நாமெல்லாம் மிருகங்கள் என நினைத்தார், இப்பொழுது அவர்கள் நம்மைத் தானாகவே இயங்கும் ஒரு இயந்திரம் (Automata) என்கிறார்கள். மிருகங் களுக்காவது ஆத்மா இருக்கிறது ! அவைகளுக்கு இருந்தது நமக்கு இப்போது இல்லை. விரைவில் நாம் அவ்வளவுத் திறமையாக இயங்குபவர்களாகவும் இருக்கமாட்டோம். அப்பொழுது சிறந்த கணிணிகள் (Computers) இருக்கும், சிறந்த இயந்திரங்கள் இருக்கும், நீங்கள் இயந்திரமாகத்தான் இருப்பீர்கள் என்பதோடு, ஒரு சாதாரண இயந்திர மாகத்தான் இருப்பீர்கள்.
இது ஒரு நம்பிக்கை – இது அறிவு சம்பந்தப்பட்டதல்ல – இது ஒரு நம்பிக்கை. இதை மக்கள் மனதில் மூன்று நூற்றாண்டுகளாக திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இது பிரபலமடைந்து வருகிறது. மற்ற நம்பிக்கைகளைப் போல இதுவும் ஒரு நம்பிக்கை. அறிவியல் இதற்கு தன்னுடைய ஒத்துழைப்பைத் தருகிறதோ இல்லையோ, அதனால் எந்த மாற்றமும் இருக்காது, ஏனெனில் இது ஒரு நம்பிக்கை. இதை மனித இனம் நம்பத் தொடங்கினால், பின்பு அவர்களுடைய ஆத்மாவை திரும்பக்கொண்டு வருவது மிகக் கடினமானது.
அதனால் நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒரு முடிவு தெரிந்துவிடும், இந்த நூற்றாண்டின் இறுதி, வரப்போகும் நூற்றாண்டுகளின் விதியை தீர்மானிக்கும். இது உறுதியாகபோகிறது – உறுதி என்றால் இந்த மனிதர்கள் எல்லோரும் இயந்திரங்கள் என்றும், இயற்கையான இயந்திரக் கருவி என்ற கருத்தும் அதிகமாகும். இந்த நம்பிக்கை பிரபலமாகும்போது, தொலைந்துபோன, ஒளிந்துக் கொண்டிருக்கும் மின்சாரத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வது கடினம். இது கடினமாகிக்கொண்டேப் போகும்; இன்றேக்கூட இது மிகக் கடினமாகிவிட்டது. இந்த உலகத்தில் மிகக் குறைவானவர்களுக்கே இந்த வாழும் மின்சாரத்தைப் பற்றி தெரிந்திருக்கிறது – அவர்களை கைவிட்டு எண்ணிவிடலாம்.
பேசிக்கொண்டே இருப்பவர்களெல்லாம், பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். மிகக் குறைந்த மனிதர்களுக்கே உண்மை தெரிந்திருக்கிறது. அவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே வருகிறது. தெரிந்தவர்களின் இடம் நிரப்பப்படுவதே இல்லை, ஒவ்வொரு நாளும் இந்த வாழும் மின்சாரத்தைப் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் உண்மை விழிப்புணர்வைப் பற்றியும், தெய்வத்தைப் பற்றியும் தெரிந்துள்ளவர்கள் குறைந்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த நூற்றாண்டில், இந்த நூற்றாண்டின் இறுதி ஏமாற்றும் வகையில் இருக்கும், அதனால் ஆரம்பிக்க, ஒரு மாதிரியாக தயாராக இருப்பவர்களுக்கு, நான் தீக்ஷை கொடுத்து ஆரம்பித்து வைப்பேன். நான் பத்தாயிரம் நபர்களுக்கு தீக்ஷை வழங்கி, அதில் ஒருவன் குறிக்கோளை அடைந்தால்கூட, நான் எடுத்த முயற்சி வீண்போக வில்லை என்றே அர்த்தம். உள்ளே இருக்கும் உலகத்தைப் பற்றி (Inner World) சிறித ளவு யாருக்கெல்லாம் தெரிந்திருக்கிறதோ, அவர்களை ஏதோ ஆனந்தம் என்றும், ஏதோ அழிவில்லாமல் ஒன்று இருக்கிறது என்றும், ஏதோ தெய்வீகம் இருக்கிறது என்பதையும் பகிரங்கமாக சொல்லச் சொல்வேன்.
சாட்சியாக இருங்கள், போய் அதற்கு சாட்சியாக இருங்கள், இல்லையென்றால் இயந்திரம் என்ற நம்பிக்கை பிரபலமடைந்துவிடும். அதை இப்போது சரிபார்ப்பது சுலபம், பின்னர் அதனை அகற்றுவது இயலாத ஒன்றாகிவிடும். மேலும், மனமானது பிளாஸ்டிக் தன்மையைப் போன்றது, இன்று அதிக பிளாஸ்டிக்களாக இருக்கிறது. எந்த அச்சுக்கும் ஏற்றவாறு, தன்னை உருமாற்றிக்கொள்கிறது. ஏனெனில், எல்லா பழைய நம்பிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன, அறிவு காலியாகவும், எங்கோ ஓர் இடத்தில் தஞ்சம் கொள்ள தவிக்கிறது – அது ஒரு இயந்திரத்தனமான நம்பிக்கையாக இருந்தாலும்கூட, ஏதோ அர்த்தமில்லாத ஒன்றால், உங்களுக்கு ஒரு சொந்தம் போன்ற உணர்வை கொடுக்க முடிந்தால், உங்களுக்குத் தெரிந்தாற்போல் ஒரு உணர்வை கொடுக்க முடிந்தால், உங்களுக்கு உண்மையைப் பற்றி தெரியும் என்பதைப்போல் ஒரு உணர்வை கொடுக்கமுடிந்தால், அதை அறிவு பிடித்துக் கொள்கிறது. பின்பு மனித அறிவு அதனுடன் கட்டப்பட்டுவிடும்.
அதனால் ஒரு வினாடிக்கூட வீணாக்கப்படக்கூடாது. இதைப்பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள்கூட, இதை க்ஷணத்தோற்றம் பார்த்தவர்கள்கூட, இதைப்பற்றி, மற்றவர் களிடம் பேசவேண்டும். இந்த இறுதி நூற்றாண்டு, வெளிப்புறத்தில் சிறியதாக தோன்றினாலும், அது அவ்வளவு சிறியதானது அல்ல. அது பெரியது, ஒருவகையில், அது பல நூற்றாண்டுகளை விடப் பெரியது. ஏனெனில் மாற்றங்களின் வேகம் மிக அதிகமாக இருக்கிறது, இந்த முப்பதாண்டுகள், முப்பது நூற்றாண்டுகளைப் போலானது. இந்த முப்பது நூற்றாண்டுகளில் செய்ய முடியாதவைகளையெல்லாம், இந்த முப்பது வருடங்களில் செய்யலாம். இந்த வேகமான மாற்றத்தினால், நேரம் சிறிதாக தெரிந்தாலும், அது சிறியதானது அல்ல.
இந்த மனித இனத்திற்கும், தெய்வீகத்திற்கும் உள்ள கடைசி பாலத்தை அழிக்க, சாகடிக்க மூன்று நம்பிக்கைகள் உள்ளன. அறிவு ஒரு இயந்திரம்தான் என்பது முதல் நம்பிக்கை. இரண்டாவதாக எல்லோரும் சமம் – மனிதனும், மனிதனுக்கு சமுதாயத்திடம் இருக்கும் தொடர்பும் பொருளாதார சம்பந்தப்பட்டதுதான் என்பது. பின்பு இதயம் என்பது கிடையாது, பின்பு மனிதன் ஏமாற்றவில்லை, பொருளாதாரம் தான் ஏமாற்றுகிறது. பின்பு மனிதன் பொருளாதார சக்தியின் கைகளிலும், குருட்டு சக்தியின் கைகளிலும்தான் இருக்கிறான். அப்படியானால் மனிதனின் மனசாட்சி ஏமாற்றவில்லை, ஆனால் சமுதாய அமைப்புதான் ஏமாற்றுகிறது. மனசாட்சி சமுதாயத்தை தீர்மானிப்பதில்லை, சமூகம்தான் மனசாட்சியை தீர்மானிக்கிறது என்று மார்க்ஸ் (Marx) கூறுகிறார். பின்பு மனசாட்சி என்பது ஒன்றும் இல்லாதபோது, அது ஏமாற்றவில்லை என்றால், அது ஏமாற்றவில்லைதான்.
மூன்றாவதாக பகுத்தறிவு இல்லாத கொள்கை, டார்வின்(Darwin) கொள்கை, இப்போது அது, மனித இயந்திரத்தின் நம்பிக்கையாக மாறிவிட்டது. மார்க்ஸ் (Marx) கொள்கை மனசாட்சிக்கு எந்த பொறுப்பும் இல்லாமல் அதை பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ஒன்றாக மாற்றிவிட்டது, ஃபிராய்டியன்(Freudian) பகுத்தறிவு இல்லை என்ற கொள்கை, மனிதன் இயற்கையின் தூண்டுதலினால்தான் செயல்படுகிறான் என்கிறது. அவன் என்ன செய்கிறானோ, அதை அவன் செய்தாகவேண்டும். அப்படியானால் மனசாட்சி கிடையாது. அது இருப்பதுபோன்று ஒரு பொய்யான எண்ணத்தைத்தான் தருகிறது என்கிறது.
இந்த மூன்று கொள்கைகளிலும் மதங்கள் காணப்படவில்லை. முகமதியர்கள் மதமோ, கிறிஸ்தவ மதமோ, இந்து மதமோ அல்லது புத்த மதமோ, இதில் காணப்படவில்லை. இப்பொழுது புத்தரோ, மகாவீரரோ, முகமதோ அல்லது இயேசுவோ மானிட உருவத்திலிருந்த கடவுளின் தூதர்கள் அல்ல. ஃபிராய்டின் (Freudian), மார்க்ஸ் (Marx), டார்வின் (Darwin) இவர்கள்தான் இன்றைய கடவுளின் தூதர்கள். இவர்கள் மூவரும் சுதந்திரத்திற்கும், முடிவற்ற வாழ்விற்கும் எதிராக இருப்பவர்கள்.
அதனால் நான் ஒரு நம்பிக்கையில், நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கையில், எல்லோரையும் உள்ளார்ந்த உலகத்திற்கு தள்ளிக்கொண்டேயிருப்பேன். யாராவது ஒருவராவது உயிருடன் இருக்கும் மின்சாரத்திற்கு சச்சிதானந்த (Sat Chit Anand) த்திற்கு வருவார்கள், வந்து அவர்களின் உடல், பொருள், ஆவியினால் வெளிப்படுத்தி வாழ்ந்து காட்டுவார்கள் என நம்புகிறேன். இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒருசிலரையாவது கண்டுபிடிக்க முடிந்தால், பின்பு வரப்போகும் மனித இனமே மாறிவிடும். ஆனால் இதை சொல்லிக்கொடுப்பதின் மூலம் மாற்றமுடியாது, வாழ்வதின் மூலம்தான் முடியும். அதனால்தான் நான் சன்யாசத்தை வற்புறுத்து கிறேன். அது வாழ்வின் ஓர் ஆரம்பம்.
நான் இதை இன்னொரு அர்த்தத்திலும் வற்புறுத்துகிறேன் “வெளிப்புற மாற்றம் தேவையில்லையென்றால், பின்பு ஏன் அங்கியை மாற்றவேண்டும் ? ஏன் பெயரை மாற்றவேண்டும் ? “ என்று நீங்கள் கேட்கலாம். எனக்கு இந்த சன்யாசம் பரவவேண்டும். உங்களுக்கு இது ஞாபகம் வைத்துக்கொள்ள உதவும். மற்றவர்களுக்கு இதைப் பார்த்து, இதைப்பற்றி நினைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். அவர்கள் இதற்கு சம்மதமாகவோ, அல்லது எதிராகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் இதைப்பற்றி ஒன்றும் நினைக்காமல் இருக்கமுடியாது. உங்கள் வண்ண அங்கியை ஒருவர் பார்க்கும் வினாடியிலிருந்து, அவர் அதற்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ இருப்பார், யாரும் அதை அலட்சியப்படுத்த முடியாது. அவன் அதைப்பற்றி சிந்திக்கலாம் அல்லது அவன் அதைப்பற்றி நினைத்து சிரிக்கலாம். ஒன்று, அங்கி அணிந்தவர் துறவு மேற்கொண்டுள்ளார் என்று நினைக்கலாம், அல்லது யாரோ பைத்தியமாகிவிட்டார் என்று நினைக்கலாம். ஆனால் அவன் சிந்திக்க ஆரம்பிப்பான். இந்த அங்கிகள் அவ்வப்போது தற்செயலாக கண்களில் பட்டுக்கொண்டிருந்தால்,
இந்த அங்கியுடன் தினமும் பலமுறை தொடர்பு இருந்துக்கொண்டிருந்தால், அது தொற்றி பரவிக் கொண்டிருக்கும். அவனால் தொடர்ந்து தவிர்த்துக்கொண்டிருக்க முடியாது. அவன் ஏதோ ஒன்று, இதைப்பற்றி முடிவெடுத்தாக வேண்டும்.
எனக்கு மதம் என்பது இப்போதைய உரையாடலாக இருக்கவேண்டும். அது தற்போது, இப்போதைய உரையாடலாக இல்லை. இதைப்பற்றி யாருமே பேசுவதில்லை. எல்லோரும் அரசியலைப்பற்றி பேசுகிறார்கள். யாரும் மதத்தைப் பற்றி பேசுவதில்லை. அப்படியே மதத்தைப் பற்றி யாரேனும் பேசினால்கூட, அதை மற்றொருவர் மரியாதை நிமித்தமாகத்தான் பொறுத்துக்கொண்டிருக்கிறார். அதை அவர்கள் பிரசங்கம் செய்வதோ, கேட்பதோ அல்லது கவனிப்பதோ ஒரு சமுதாயக் கடமையாகத்தான் செய்கிறார்கள், ஞாயிற்றுக்கிழமை விஷயமாகத்தான் நினைக் கிறார்கள். யாரும் தன்னுடைய உள்ளார்ந்த ஆத்மாவுக்கு என்ன நடந்துக் கொண்டி ருக்கிறது என்பதை பற்றி அறிய எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை. அதனால் மதம் இப்போதைய தலைப்பாகவும், இப்போதைய உரையாடலாகவும் ஆக்கவேண்டும். இதற்கு எல்லா வழிகளையும் பயன்படுத்தி, மதத்தை உயிருடன் இருக்கும் ஒரு சின்னமாக்க வேண்டும்.
எங்கெல்லாம் நீங்கள் செல்கிறீர்களோ அங்கெல்லாம் நீங்கள் சிந்திக்க வைக்கும் அலைகளையும், உணர்ச்சி வெளிப்பாட்டின் அலைகளையும் உருவாக்க வேண்டும். நீங்கல் சற்றே கடப்பதினால்கூட, உங்களால் ஒரு அலையை உருவாக்க, ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும். அதணால்தான் நான் மாற்றத்திற்கு வற்புறுத்து கிறேன். இதைத் தவிர வேறு சில காரணங்களும் இருக்கிறது. காவி நிறம் பல வழிகளில் உதவுகிறது, ஏனெனில் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அலை நீளம் (Wave Length) உள்ளது, ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கிரகித்துக் கொள்ளும் திறன் இருக்கிறது. உங்களால் வெவ்வேறு நிற அங்கியை அணிந்துக் கொண்டு ஒரே மாதிரியாக இருக்க இயலாது.
இந்த காவி நிற அங்கி பல்வேறு காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் ஒரு காரணம், அது உங்களை சூரிய உதயத்தைப் போல உணரச் செய்கிறது. அது சூரியோதயத்தின் நிறம். அந்த முழு சூழ்நிலையே உயிர்பெற்று, பார்ப்பதற்கு தகுதி வாய்ந்ததாக இருக்கிறது. அது இருப்பதற்கு ஏற்ப உயிருள்ள, துடிப்புள்ள ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. நீங்கள் தெய்வத்துடன் சேர்ந்து துள்ளாடலாம் என்றதாலும், இந்த நிறம் தெர்ந்தெடுக்கப்பட்டது. நீங்கள் தெய்வத்துடன் உயிருடன் இருக்க வேண்டும். எந்த சோகமும் உங்களிடம் தஞ்சம் புகுந்துவிடக் கூடாது, எந்த தாக்கமும் உங்களுள் தஞ்சமாகக்கூடாது.
நீங்கள் இருபத்து நான்கு மணி நேரமும் நடனமாடும் மனநிலையில் இருப்பீர்கள் என நினைக்கிறேன் – இது நடனமாடும் நிறம். அது அதிகாலை சூழ்நிலையை பாதுகாத்து உங்களின் உடலைச் சுற்றித் தருகிறது. நாள் முழுவதற்கும் அதை பாதுகாக்கிறது. உங்களால் உணரமுடிந்து, அத்துடன் ஒத்துழைக்க முடிந்தால், உங்களால் பெரிய மாற்றத்தை உணரமுடியும். ஒருவர் இந்த காவி நிற அங்கியை அணியும்போது, ஒருவிதமான பலன் இருக்கும், அதுவே ஆயிரக்கணக்கானோர் இதை அணியும்போது, அதன் பலன் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். எண்ணிக்கை தன்மையை மாற்றிவிடும்.
புத்தர் பத்தாயிரம் காவி நிற அங்கி அணிந்த தன்னுடைய சிஷ்யர்களுடன் ஒரு நகரத்திற்கு வருவார். அந்த முழு நகரத்தையும் புது சூழல் சூழ்ந்துக்கொள்ளும். இது ஒரு மாபெரும் தாக்குதலாக இருக்கும். முழு நாளும் அந்த கிராமம் காலையில் இருந்ததுபோலவே பொலிவுடன் இருக்கும் – எல்லா இடத்திலும் காவி நிறம். ஒவ்வொரு வினாடியும் எல்லோருக்கும் நினைவிருக்கும். காவி நிறத்திற்கு மனரீதியான தொடர்பும் உண்டு.
காவலர் தன்னுடைய வேலை நேரத்தைத் தவிர்த்து, மற்றும் காக்கி உடையில் இல்லாதபோது, அவன் சாதாரண மனிதனாகத்தான் இருப்பான் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மாற்றம் அவன் முகத்தில் கூட தெரியும் – அவன் மிக சாதாரணமாக இருப்பான். அவன் தன் வேலைக்கான ஆடையில் இருக்கும்போது, அவன் வேறு ஒருவன் – மிகவும் வித்தியாசமான நபராக இருப்பான். அவன் அதே மனிதன் அல்ல, அவனுடைய முழு நடவடிக்கைகளும் வித்தியாசமாக இருக்கும். அவன் வித்தியாச மாக நிற்பான், அவன் வித்தியாசமாக நடப்பான்.
இந்த காவி நிற அங்கி, சன்யாசத்துடன் தொடர்புடையது. இது நீண்டகாலமாக, ஆயிர ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது உபயோகப்படுத்தப்படுகிறது. இது எல்லோ ருடைய அறிவின் ஒரு பாகமாகிவிட்டது. சன்யாசம் என்பது அடிப்படையாக கிழக்கத்திய நாடுகளுடையது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். இது முதலில் ஒரு கிழக்கத்தியரின் அறிவில்தான் உதித்தது. குறைந்தது, கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாவது கிழக்கத்தியர்கள் இந்த நிறத்தை உபயோகப்படுத் தியிருக்கிறார்கள். உங்களுடைய முன் பிறவிகளில் கூட, சன்யாசிகள் காவி நிற அங்கிதான் அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அது இப்பொழுது உங்களுடைய தொகுக்கப்பெற்ற அறிவின் ஒரு பாகமாக – உங்களுடைய நினைவில்லாமல் இருக்கும் விழிப்புணர்வின் (Unconscious) ஒரு பாகமாக இருக்கிறது. இது ஒரு மாபெரும் தொடர்பு.
அதனால் ஒருமுறை நீங்கள் இதை அணியும்போது, உங்கள் முழு பழைய கால, தொகுக்கப்பட்ட அறிவு திரும்பவும் உயிர்பெறும். உங்களுடைய நினைவு, திரும்பவும் மேலே வரத்தொடங்கி, உங்களை சூழ்ந்துக்கொள்ளும். அது உங்களுடைய தனிப்பட்ட குணாதிசயங்களையும் மாற்றி, உங்களையும் மாற்றிவிடும். அது உங்களின் அறிவின் உள் அமைப்பை மாற்றிவிடும். அதனால் இதற்குப் பதிலாக இன்னொரு நிற அங்கியை பயன்படுத்தலாம். ஆனால் இதேப்போன்ற தொடர்பை அப்பொழுது உருவாக்குவது கடினம். மேலும் நேரம் குறைவாகவும், இந்த வினாடிக் கடினமாகவும் இருக்கிறது.
எவ்வளவோ பேர், ஏன் காவி நிறம்? என்று என்னைக் கேட்கிறார்கள், ஏன் புதிய நிறம் இருக்கக்கூடாது?, புதிய நிறத்தை உபயோகப்படுத்தலாம், ஆனால் அது அவ்வளவு பயன் உள்ளதாக இருக்காது. நான் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருந்தால், நிறத்தை மாற்றி இருப்பேன். ஆனால் இப்பொழுது நேரம் குறைவாகவும், ஏமாற்றுவதாகவும், இறுதியாகவும், மாபெரும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாலும் மாற்ற இயலாது. அதனால்தான் நான் உங்களுடைய முன் பிறவிகளையும் உபயோகித்துக்கொள்கிறேன்.
மேலும், எப்போதும் என்னிடம் வருபவர்களுக்கெல்லாம் நான் சன்யாசம் வழங்குவதாக நீங்கல் நினைத்தால் அது அவ்வாறு அல்ல. நான் என்னிடம் வருபவர்களுக்கெல்லாம் சன்யாசம் கொடுத்ததாக சொல்லுவேன், ஆனால் அது அப்படி அல்ல. அது பார்ப்பதற்குத்தான் அவ்வாறு தோன்றுகிறது, ஆனால் அது அவ்வாறு அல்ல. ஒருவர் என்னிடம் வரும் வினாடியில் அவனைப்பற்றி, அவனுக்கு தெரிந்ததைவிட எனக்கு அதிகமாக தெரியும்.
நேற்று காலை என்னிடம் யாரோ ஒருத்தி வந்தாள். அவளை நான் சன்யாசம் எடுத்துக் கொள்ளும்படி சொன்னேன். அவள், இதைப்பற்றி யோசித்து முடிவெடுப்பதற்கு, இரண்டுநாள் அவகாசம் தரும்படி கேட்டாள். அதற்கு நான், “இரண்டு நாட்களை பற்றி யாருக்கத் தெரியும் ?அதைத் தெரிந்துகொள்ள அதிகமாக தேவைப்படும்...... இன்றே, இந்த வினாடியே எடுத்துக்கொள் “ என்றேன். ஆனால் அவளால் முடிவெடுக்க முடியவில்லை என்பதால், நான் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்தேன். அடுத்தநாள் காலையில் அவள் வந்து எடுத்தக்கொண்டாள். அவள் இரண்டு நாள் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரே ஒரு நாள்தான். நான் அவளை “ஏன்? உனக்கு இரண்டு நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது, பின்பு ஏன் இவ்வளவு விரைவாக வந்தாய்?” எனக் கேட்டேன். அதற்கு அவள் “இரவு மூன்று மணிக்கு திடீரென்று நான் விழித்துக்கொண்டேன், என்னுள் ஏதோ ஒன்று ஆழமாக சென்று “போய் சன்யாசம் பெற்றுக்கொள்” என்று சொன்னது” என்றாள்.
இது அவள் எடுத்த முடிவல்ல. ஆனால் ஆழமாக வேரூன்றிய அவளுடைய மனதால் எடுக்கப்பட்ட முடிவு இது. அவள் என்னுடைய அறைக்குள் வந்த வினாடியே எனக்கு அவளைத் தெரியும், அவளுக்கு இருபத்து நான்கு மணிநேரம் கழித்து தெரியவந்த மனதை எனக்கு அப்போதே தெரியும்.
அதனால் சன்யாசம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லும்போது ஒவ்வொருவருக்கும் பல காரணங்களுடன்தான் சொல்கிறேன். ஒன்று அவன் போன ஜென்மத்தில் சன்யாசியாக இருந்திருக்கவேண்டும், அல்லது எப்போதோ நடுவில் அவனுடைய நீண்ட பயணத்தில் அவன் சன்யாசியாக இருந்திருக்கவேண்டும்.
நான் நேற்று அவளுக்கு பெயர் மாற்றினேன், ஆனால் இப்போது அந்தப் பெயரையும் நான் மாற்றவேண்டும். ஏனெனில் நேற்று அவள் முடிவெடுக்காதபோது கொடுத்தப் பெயர் அது. இப்பொழுது அவளுக்கு உதவியாக இருக்கும்படியான, ஒரு பெயரைத் தருகிறேன். ஆனால் இன்று காலை அவள் ஒரு முடிவோடுதான் வந்தாள். வேறு பெயர்க்கூட தேவையில்லை. அவளுக்கு மா யோக விவேக் (Ma Yoga Vivek) என்ற பெயரை வழங்கினேன். ஏனெனில் இப்போது அவளுடைய முடிவு, அவளின் விவேகத்தினால் வந்தது, அவளுடைய விழிப்புணர்வினால், மற்றும் அறிந்துக்கொள்வதினால் வந்தது.
உதாரணத்திற்கு, மா யோக தாவோ (Ma Yoga Tao) இங்கே இருக்கிறாள்.
அவள் மூன்றுமுறை சன்யாசியாக இருந்திருக்கிறாள். நான் அவளுக்கு தாவோ(Tao) என்ற பெயரை வழங்கியதற்கு காரணம், அவள் போன ஜென்மத்தில் சீனாவின் தாவோ (Tao) சன்யாசியாக இருந்தார். அவளுக்கு இதைப்பற்றி, இப்பொழுது தெரியாமல் இருக்கலாம்.ஆனாலும் நான் அவளுக்கு தாவோ(Tao) என்ற பெயரை வழங்கியிருக்கிறேன். ஒருநாள் அவளுக்கு நினைவு வந்தால், பின்பு அவளுக்கு நான் ஏன் சீனப்பெயரை கொடுத்திருக்கிறேன் என்பது தெரியும். இப்போது அது சம்பந்தமில்லாதது, ஆனால் அவளுக்கு தான் தாவோ(Tao) சந்யாசியாக இருந்தது ஞாபகம் வரும் வினாடியிலிருந்து, அவளுக்கு நான் ஏன் இந்த பெயரை வழங்கியிருக்கிறேன் என்று தெரியவரும்.
எல்லாவற்றிற்கும் அர்த்தமுள்ளது. அவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. மேலும் அதை உங்களுக்கு விளக்குவதும் சாத்தியமில்லை. அதனால் நிறைய விஷயங்கள் நீண்ட காலத்திற்கு, உங்களுக்கு விளக்கப்படாமலேயே இருக்கும், ஆனால் உங்களுக்கு புரிந்துக் கொள்ளும் தன்மை அதிகரிக்கும்போது, என்னால் அதிகமாக உங்களிடம் விளக்கமுடியும். உங்களுக்கு ஆழமாக, கருணையாக இருக்கும் திறன் அதிகரித்தால், ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தலாம். கலந்துரையாடல் பகுத்தறிவு வாய்ந்ததாக இருந்தால், குறைவான உண்மைகளையே வெளிப்படுத்த முடியும். ஏனெனில் மிகவும் முக்கியமில்லாத உண்மைகளுக்குத்தான், காரணங்களுடன் நிரூபிக்க முடியும். ஆழ்ந்த உண்மைகளை காரணங்களுடன் நிரூபிக்க முடியாது.
அதனால் நீங்கள் கருணை உடையவர்கள், காரணங்கள் உள்ளே வராது என்று நான் உணரும்வரை, என்னால் சொல்லமுடியாது. பல விஷயங்களுக்கு நான் மௌனமாகத்தான் இருக்கவேண்டும் – நான் அதை உங்களுக்குத் தெரியாமல் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல, ஆனால், அது உங்களுக்கு உதவியாக இருக்காது என்பதினாலும், மாறாக, உங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும் என்பதினால்தான்.
*************************************************************************************************************
சக்கரத்தை விட்டு வெளியே வாருங்கள்
அன்புள்ள ஓஷோ,
இதற்கு முன்னால் நீங்கள் மாலையைப் பற்றியும், அங்கியின் நிறத்தை மாற்றுவதை பற்றியும், பெயரை மாற்றுவதை பற்றியும் பேசி இருக்கிறீர்கள். இதற்கான காரணங்களும் சொன்னீர்கள். குரு ஸ்தானத்தை நீங்கள் மறுக்கும்போது, நீங்கள் ஏன் உங்கள் படத்தை எங்கள் கழுத்தில் போட்டக்கொள்ள வேண்டும் என்கிறீர்கள் ?.
நான் குருவாக இருப்பதை மறுக்கிறேன், ஆனால் நீங்கள் சிஷ்யராக இருப்பதை நான் மறுக்கவில்லை. ஒருவர் எப்போதும் குருவாக இருக்கக்கூடாது, ஆனால் சிஷ்யராக இல்லாமல் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. மேலும், குரு ஒருவர் அங்கு இல்லாத பொழுது தோன்றும் சிஷ்யவுறவு( Discipleship) முற்றிலும் உள்ளார்ந்தது. அது ஒரு உள்முக ஒழுக்க நெறிமுறை(Inner discipline).Disciple மற்றும் Discipline என்ற வார்த்தைகளிரண்டும் ஒரே வேறிலிருந்துதான் வருகிறது. சிஷ்யராக இருப்பதென்றால் தேடுவதற்கும், நாடுவதற்கும், கற்பதற்கும் மனம் தயாராக இருக்கிறது என்று அர்த்தம். மனம் திறந்து மெல்லியதாக இருக்கிறது என்று அர்த்தம். அதனால் நான் குருவாக இருப்பதை மறுக்கிறேன். ஆனால் நீங்கள் சிஷ்யராக இருப்பதை நான் மறுக்கவில்லை.
இன்னொரு விஷயம்..... என்னுடைய புகைப்படத்துடன் இருக்கும் மாலைக்குப் பின்னால் பலக் காரணங்கள் உள்ளன. ஒன்று, புகைப்படம் என்னுடையதல்ல, அது என்னுடையதாக இருந்தால், நான் அதை அங்கே போடுவதற்கு தயங்கி இருப்பேன். அவரவர்களுடைய புகைப்படத்தை அங்கே போடும் அளவிற்கு யாருமே தைரியமாக இருக்கமாட்டார்கள். எல்லோரும் அங்கே போடுவதற்கு நினைப்பார்கள், ஆனால் யாரும் அங்கே போடமாட்டார்கள். அந்தப் படம் என்னுடையதைப்போல் தோன்றுகிறது, ஆனால் அது என்னுடையதல்ல. உண்மையான என்னுடைய புகைப்படம் இருக்க வாய்ப்பில்லை. ஒருவருக்கு தன்னையே தெரிந்த வினாடியி லிருந்து, அவன் விளக்கமுடியாதவன் என்றும், வர்ணிக்க முடியாதவன் என்றும், சட்டத்தினுள் இட முடியாதவன் என்றும் அவனுக்குத் தெரிந்திருக்கும். நான் காலியானவனாக இருக்கிறேன், அதனால் காலியாக இருப்பதை படமாக்கவோ, புகைப்படமாக்கவோ முடியாது. அதனால்தான் என்னால் படத்தை அங்கு போடமுடிகிறது.
இரண்டு அல்லது மூன்று விஷயங்கள் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அந்தப் படத்தை பற்றி அதிகமாக நீங்கள் தெரிந்து கொண்டால், அதன் மீது அதிக ஒருமுனைப்படுத்தி கவனித்தால், அத்துடன் அதிகமாக இணைந்து சென்றால், நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு அதிகமாகப் புரியும். நீங்கள் அதிகமாக ஒருமுனைப்படுத்திப் பார்த்தால், நீங்கள் படத்தைப் பற்றிக் கேட்ட முதல் கேள்வி இருக்காது. நீங்கள் என்னை நினைக்கும் வினாடியில், அது தெரியாமல் நினைத்திருந்தால்கூட, ஒருவகையில் நான் இருக்கிறேன். ஆனால், இதை நீங்கள் போகப்போகத்தான் அனுபவிப்பீர்கள்.
எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நான் அதைப்பற்றியெல்லாம் பேசமாட்டேன். இதுவே போதுமானது. வேறு சில காரணங்களெல்லாம் பின்பு தெரியவரும். அது இப்போது உங்களுக்குத் தெரியாமல் இருப்பதே சிறந்தது. சில விஷயங்கள் இருக்கின்றன, அவற்றைப் பற்றி பேசக்கூடாது, ஏனெனில் அவற்றைப் பற்றி பேசுவதினாலேயே அவை அற்பமாகிவிடும். சில விஷயங்கள் இரகசியமாகவே இருக்கவேண்டும், ஏனெனில் அவை இரகசியத்தில்தான் வேலை செய்யும், இல்லா விட்டால் வேலை செய்யாது. அவை மரத்தின் வேர்களைப் போல, நிலத்தடியில், இருட்டில், மரத்திற்குத் தெரியாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அவைகள் வேலை செய்யும்.
அதனால், இரகசியமான விஷயங்கள் நினைவுக்குத் தெரியாமல( Unconscious) பூமிக் கடியில்தான் இருக்கவேண்டும். உங்களுக்கு அது தெரியக்கூடாது – அப்போதுதான் அது வேலை செய்யும், இல்லாவிட்டால் அது வேலை செய்யாது. வேர்கள் வெளியில் தெரியக்கூடாது, அது ஒளிந்துதான் இருக்கவேண்டும். அதனால் நீங்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன், அப்படியே பதிலளித்தாலும், இரகசியங் கள் வெளிவராத அளவிற்குத்தான் பதிலளிப்பேன். ஒளிந்து இருப்பவை ஒளிந்தே இருக்கவேண்டும். உங்களுக்கு அனுபவத்தின் மூலம்தான் அது தெரியவரும்.
மூன்று மாதங்களுக்குப் பின்னர், உங்களால் அந்த மாலை இல்லாமல் ஒரு நொடிக்கூட இருக்க முடியாது. உங்களால் அந்த வித்தியாசத்தை உணரமுடியும். அப்போது அது நீங்கள் தெரிந்துக்கொள்வதாக இருக்கும். அந்த வித்தியாசம் பெரியதாக இருக்கும் என்பதினால் அதை உணராமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும் மேலும் உங்கள் அனுபவம் ஆழமாகவும், செழிப்பாகவும் வளரும்போது, நீங்கள் அங்கிருக்கும் படத்தை உணரமாட்டீர்கள். உங்களுடைய ஆழ்ந்த விழிப்புணர்வினால் (Consciousness) அந்த படம் காலியாகிவிடும்(Empty). எல்லோரும் படத்தைப் பார்ப்பார்கள், ஆனால் உங்களை பார்க்கமாட்டார்கள். இது நடக்கும்போது, பின்னர் நீங்கள் என்னுடன் நேரடியாக, உடனடியாக, எந்த சாதனமும் இல்லாமல் உரையாடலாம்.
நான் பல வழிகளில் சாதனங்கள் ஏதும் இல்லாமல் உங்களிடம் விஷயங்களை தெரியப்படுத்த முயற்சிக்கிறேன், ஏனெனில் சாதனங்களின் மூலம் தெரியப்படுத்த முடியாத விஷயங்கள் இருக்கின்றன. அதனால் சாதனங்களை நானே உருவாக்கவேண்டும். இந்த சன்யாசம் ஒரு சாதனம், இந்த தீக்ஷை வழங்குதல் இன்னொரு சாதனம்.
யாரெல்லாம் தீக்ஷை கொடுத்து ஆரம்பிக்க வைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்க ளெல்லாம், மற்றவர்களிடம் சொல்லமுடியாத விஷயங்களைப் பற்றி சீக்கிரமாகவே தெரிந்துகொள்வார்கள் - இரகசிய பயிற்சியின் மூலம் பக்குவப்பட்டு, பழுத்தவர்களை தவிர்த்து, வேறு யாராலும் சாதாரணமாக பல இரகசியங்களையும், அதன் சாவி களைப் பற்றியும் புரிந்துக்கொள்ள முடியாது.
இது ஒரு ஆரம்பம்தான், தொடர்வதற்கு நிறைய உள்ளது. நீங்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன் இருப்பதாக நான் உணர்ந்தால், பின்னர் நிறையத் தொடரும். நீங்கள் ஏற்றக்கொள்ளும் தன்மை இல்லாதவராக நான் உணர்ந்தால், ஆரம்பமே முடிவாகி விடும். நீங்கள் ஆரம்பத்திலேயேக் கூட நிறைய தெரிந்துகொள்வீர்கள், ஆனால் எல்லாவற்றையும் அல்ல. அதனால் நான் உங்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மையை தெரிந்துக்கொள்ள பல வழிகளில் முயற்சிப்பேன்.
யாராவது வந்தால், நான் அவர்களுக்கு படத்துடன் இருக்கும் மாலையை கொடுப்பேன். “ஏன் உங்களுடைய படத்தைத் தருகிறீர்கள் ?” என்று அவர்கள் கேட்கவேண்டும் என்பது எல்லோராலும் முன்கூட்டியே சொல்லமுடிந்த ஒன்று. இது முன்கூட்டியே சொல்லமுடிந்ததே. ஆனால் அவன் ஒன்றுமே கேட்காமல் மாலை யைப் பெற்றுக்கொண்டால், அவன் எதற்கு என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்தால், பின்பு கேள்வி கேட்க முடியாதபடி இருக்கும் சில விஷயங்களை, இவனுக்கு சொல்லலாம் என்ற ஆழமான குறிப்பை அவன் தருகிறான்.
சில விஷயங்கள் இருக்கின்றன, அவைகளை கேள்வி கேட்டால் சொல்லமுடியாது, ஏனெனில் இதற்கு சாட்சியங்கள் கொடுக்க முடியாது, காரணங்களும் கொடுக்க முடியாது, சில கேள்விகளுக்கு பதில் இருக்கமுடியாது, அவைகளெல்லாம் தெரிந்துக் கொள்வதற்கான வாக்குமூலங்கள் – இதற்கு சாட்சிகளோ, அடிப்படைத் தகுதிகளோ கிடையாது.
அதனால் என்னிடம் வருபவர்களில், நான் யாரையாவது பார்த்து, அவனிடம் சாதாரணமாக எல்லோரும் கேள்வி கேட்கும் ஒரு விஷயத்தைக் கொடுத்து, அதில் அவன் கேள்வி கேட்காமல் இருந்தால், கேள்விக் கேட்க முடியாத விஷயங்களைப் பற்றி அவனிடம் சொல்ல, அவன் தகுதி வாய்ந்தவனாக தன்னை நிரூபிக்கின்றான். பல விஷயங்களில் நீங்கள் எப்படியெல்லாம் கட்டப்பட்டு இருக்கிறீர்கள்! நீங்கள் எந்த அளவிற்கு, காரணங்கள் தேடும் மனதோடு கட்டப்பட்டிருக்கிறீர்கள் என்பது தெரியவேண்டும். அது எனக்குத் தெரியவேண்டும், ஏனெனில் நீங்கள் அதிகமாக காரணம் தேடும் மனதுடன் கட்டப்பட்டிருந்தால், உங்களுக்கு ஆழ்ந்த விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள குறைவான தகுதியே இருக்கும், ஏனெனில் காரணம் தேடுவதுதான் உங்களின் மிக மேல்பாகத்தில் உள்ளது. மிக்க மேல்வாரியானது.
அது தன்னை ஆழமானது என்று உரிமைக் கொண்டாடினாலும் – மேல்மட்டத்தில் இருப்பதுதான் தங்களை ஆழமானது என்று உரிமைக் கொண்டாடும் – காரணம் தேடும் அறிவுத்திறன், உங்களின் மிக மேல்பாகத்தில் உள்ளது. அது செய்வதற்கு ஏதோ உள்ளது, அது இருப்பதற்கு உபயோகமாக உள்ளது. ஆனால் உபயோகம் மட்டும்தான். அதை தெரியாத ஒன்றினுள் செல்ல வாகனமாக்க நினைத்தால், பின்பு உங்களால் போக முடியவே முடியாது. பின்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய பல விஷயங்களை உங்களால் தெரிந்துக்கொள்ளவே முடியாது.
அதனால் உங்களை அறிவதற்கு நான் பல முறைகளை பயன்படுத்துகிறேன். ஒவ்வொன்றிற்கும் பல காரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லாத ஒருவர், பதினைந்து நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், “நான் உங்களிடமிருந்து தீக்ஷை பெற்றுக்கொள்ளலாம், நான் உங்களிடமிருந்து தீக்ஷை பெறவேண்டும், ஆனால் உங்களை என் குருவாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்று எழுதியிருந்தார்.
நான் யாருடைய குருவும் அல்ல, நான் குருவென்று உரிமைக் கொண்டாடுவதும் கிடையாது, ஆனால் இந்த மனிதனிடம் நான் குருவென்று உரிமை கொண்டாடுவேன். இந்த மனிதனிடம் “நீ என்னை குருவாக நினைக்காமலிருக்க நான் அனுமதிக்கிறேன்” என்று என்னால் சொல்லமுடியாது. அவர் தன் இயலாமையை தெளிவாக காட்டிவிட்டார். நீங்கள் சிஷ்யராக இல்லாவிட்டால், பின்பு நான் உங்கள் குருவாக இருந்தாக வேண்டும். நீங்கள் சிஷ்ஷியராக இருந்தால், பின்பு நான் குருவாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அதற்குத் தேவையில்லை. ஆனால் நீங்கள் “நான் என்ற அகந்தையுடன்” சரணடையாமல் இருப்பதற்கு முக்கியத்துவம் அளித்தால், பின்பு நான் உங்கள் அகந்தையை அழிப்பதற்காக பல விஷயங்களை வற்புறுத்துவேன். நான் உங்களை “நான் என்ற அகந்தை” இல்லாமல் செய்ய பல சாதனங்களை உபயோகிப்பேன்.
நீங்கள் “நான் என்ற அகந்தையில்லாமல்” இருந்தால், பின்னர் நான் எந்த சாதனங் களையும் பயன்படுத்தமாட்டேன். அதனால் கஷ்டங்கள் குழப்பமாகிறது. சிஷ்யராக இருக்க தயாராக இருப்பவரிடம் “நான் உன் குரு அல்ல, நீ என் சிஷ்யராக இருப்பதே போதுமானது” என்று சொல்கிறேன். “நான் உங்களை நம்பமாட்டேன், நான் உங்களை குருவாக ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று சொல்பவரிடம் நான் குருதான் என்று வற்புறுத்திக் கூறுவேன், இல்லாவிட்டால் இந்த மனிதருக்கு தீக்ஷை வழங்க முடியாது. அவன் நிபந்தனைகளோடு வருகிறான், உங்கள் நிபந்தனைகளோடு, உங்களுக்கு தீக்க்ஷை வழங்க முடியாது.
தீக்க்ஷை வழங்குவது நீங்கள் சரணடைய தயாராக இருப்பதாகும், நம்ப தயாராக இருப்பதாகும், இல்லாவிட்டால் நீங்கள் தீக்க்ஷை பெறவேண்டிய அவசியமில்லை. தீக்க்ஷை கொடுப்பதும் ஒன்றும் இல்லை, இந்த மாலையும் ஒன்றுமில்லை, இந்த அங்கியும் ஒன்றுமில்லை, இவைகளெல்லாம் ஆரம்பம்தான், இப்பொழுது வழி இருட்டாக இருக்கும். நீங்கள் நினைத்துக் கூட பார்க்காததெல்லாம் அங்கு இருக்கும். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், இல்லாவிட்டால் உங்களால் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாது. அதனால் வாசலிலேயே நீங்கள் நம்பக்கூடியவர் அல்ல என்பதை தெரிந்துக்கொண்டால் நல்லது, அதன்பிறகு உங்களை உள்ளே அழைத்துச் செல்ல எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் அவசியமில்லாதது, வீணாகும்.
மதம் என்பது அடிப்படையாக நம்புவதோ(Belief) நம்பாமல் இருப்பதோ அல்ல, மதம் என்பது இதயப்பூர்வமாக நம்புவது( T rust). அது ஒரு உறுதியான நம்பிக்கை. எப்போதெல்லாம் தெரியாத ஒன்றினுள் குதிக்க வேண்டியுள்ளதோ, அப்பொழுதெல்லாம் வேறு வழியில்லை. உங்களால் முழுமையாக நம்ப முடிந்தாலேயொழிய உங்களால் தெரிந்துக்கொள்ள முடியாது. இப்பொழுது உங்களுக்குத் தெரியாது, அதனால் உங்களால் என்ன செய்ய முடியும்.. நீங்கள் நம்பிதான் அதனுள் குதிக்க வேண்டும். உங்களுக்கு உறுதியான நம்பிக்கை உண்டாகுவதற்கு இந்த மாலையும் உதவும்.
நீங்கள் இந்த படத்தைப் பார்த்து தியானம் செய்தால், அங்கே படம் இருக்காது என்று நான் சொல்லும்போது, நீங்கள் அதை நம்பிக்கையின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். முயற்சி செய்யுங்கள், அது நடக்கும். அந்தப் படம் மறையும்போது, நீங்கள் என்னுடன் தொடர்பு கொண்டு பேசலாம் என்று நான் சொல்லும்போது, அதை நம்பிக்கையின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளாதீர்கள், முயற்சி செய்யுங்கள். இதை ஒரு விவாதத்திற்கான கற்பனையாக எடுத்துக்கொண்டு, சோதித்துப் பாருங்கள். அந்தப் படம் மறையும் வினாடியில், என்னுடன் தொடர்பு கொண்ட பிறகு, நம்பிக்கைத் தேவையாக இருக்கும் பல விஷயங்களுக்கு நீங்கள் தயாராவீர்கள். பின்பு நம்பும் மனதுடன், மேற்கொண்டு, அடிகளை எடுத்து வைக்கலாம்.
நாகரீகம் முன்னேறத் தொடங்கியவுடன், “நான் என்ற அகந்தை” படிகம் போல் ஆகிவிட்டது. “நான் என்ற அகந்தை” தான் ஒரே தடை, இப்போது அதுதான் பெரிய தடை. இந்தளவிற்கு எப்போதும் இருந்ததில்லை.
சாரிபுத்தா(Sariputta) புத்தரிடம் வந்தார். அந்த காலத்தில், அதிகம் படித்தவர்களில் அவரும் ஒருவர், அவர் பல விஷயங்களில் கேள்வி எழுப்பினார், அவர் பல கேள்விகளை கேட்டார், அவர் பல விஷயங்களை பற்றி கலந்துரையாடினார், பின்பு அவருக்கு தீக்க்ஷை வழங்கப்பட்டது. அவர் தனக்கு தீக்க்ஷை வழங்கப்பட்ட வினாடியிலிருந்து, முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து புத்தருடன் இருந்தார், ஆனால் அவர் எதையுமே கேட்கவில்லை.
ஒருவர், “சாரிபுத்தா (Sariputta) நீங்கள் எவ்வளவோ படித்தவர், உங்களுக்கு புத்தரைவிட எல்லாம் தெரியும் என்று மக்கள் சொல்கிறார்கள்” என்று சொன்னார். தகவல்களை பொறுத்தவரை, அவர் பெரிய பண்டிதர்(Maha Pandit). “நீங்கள் வரும்போது, நீங்கள் ஆழ்ந்த விஷயங்களைப் பற்றி உரையாடினீர்கள், நீங்கள் பலவற்றைப் பற்றி கேள்வி எழுப்பினீர்கள், நாங்கள் எல்லோரும் புத்தரை கேள்விக் கேட்கும் அளவிற்கு ஒருவர் இருக்கிறார் என்று சந்தோஷம் அடைந்தோம்,மேலும் உங்கள் கேள்விகளால் பல விஷயங்கள் தெரியவந்தது, இல்லாவிட்டால் அவை தெரியாமலேயே
இருந்திருக்கும், ஆனால் இப்போது ஏன் மௌனமாகிவிட்டீர்கள்?” என்று கேட்டார்கள்.
சாரிபுத்தா (Sariputta) அதற்கு “நான் தீக்க்ஷை பெறுவதற்கு தாயாரான நிமிடத்திலிருந்து, நான் என் கேள்விகளை நிறுத்தவேண்டியிருந்தது, ஏனெனில் அதற்கு மேல் கேள்வி கேட்பதில் அர்த்தமில்லை. முழு நம்பிக்கை கொள்வதற்கு முன்பே நான் எல்லா கேள்விகளையும் கேட்டுவிட்டேன். இப்போது என் மனம் அமைதியாகிவிட்டது” என்று கூறினார்.
சாரிபுத்தா (Sariputta) திரும்பவும் ஏதாவது கேள்விக் கேட்கிறாரா என்று சோதிக்க, சில சமயங்களில் புத்தர் மிக அர்த்தமற்றவைகளை சொல்லுவார். அவர் சொல்லும் அர்த்தமற்ற விஷயங்களைக் கேட்டால், அந்த இடத்தில் யாராக இருந்தாலும், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்க ஆரம்பிப்பார்கள், ஆனால் சாரிபுத்தா(Sariputta) மௌனமாகவே இருப்பார்.
புத்தர் “நீ எங்கிருந்தாலும், எப்பொழுதும், நான் இருக்கும் திசையை நோக்கி, எனக்கு மரியாதை செலுத்து – நீ எங்கிருந்தாலும்”, என்று அவரிடம் சொன்னார். அவர் எங்கெல்லாம் திரிந்துக்கொண்டிருந்தாரோ, அங்கிருந்தெல்லாம் புத்தர் இருந்து கொண்டிருக்கும் திசையை நோக்கி மரியாதை செலுத்துவார்.
சாரிபுத்தா(Sariputta) புத்தர் இறந்தவுடன் விழிப்புணர்வு பெற்றார். ஒருவர் அவரிடம் “நீங்கள விழிப்புணர்வு பெற்றுவிட்டீர்கள், இப்போது நீங்கள் யாருக்கும் மரியாதை செலுத்த தேவையில்லை, நீங்களே புத்தர் ஆகிவிட்டீர்கள்” என்றார். அதற்கு சாரிபுத்தா(Sariputta) “இதற்கு முன்பு என்னால் மரியாதை செலுத்தமுடியவில்லை, ஏனெனில் அப்பொழுது நான் விழிப்புணர்வு பெறவில்லை, அதனால் “நான் என்ற அகந்தை” இருந்தது, இப்பொழுது நான் விழிப்புணர்வு பெற்றவிட்டபிறகும், மரியாதை செலுத்த முடியாதென்றால் பின்பு நான் எப்பொழுது மரியாதை செலுத்துவேன்?, முன்பு என்னால் மரியாதை செலுத்த முடியவில்லை, அப்படியே நான் மரியாதை செலுத்தியிருந்தாலும், அதை நான் கஷ்டத்துடன்தான் செய்தேன், கஷ்டப்பட்டு செலுத்தும் மரியாதை, மரியாதையே அல்ல. அப்போது என்னால் மரியாதை செலுத்த முடியாமல் போனதற்கு என்னுடைய “நான் என்ற அகந்தை” தான் காரணம். நீங்கள் இப்பொழுது, நான் விழிப்புணர்வு பெற்றுவிட்டதால் மரியாதை செலுத்தக்கூடாது என்கிறீர்கள், பின்னர் எப்பொழுது என்னால் மரியாதை செலுத்தமுடியும்? இது புத்தருக்குத் தேவையில்லை, ஆனால் இதுவே சரியான வினாடி. அப்பொழுது இது முடியாமல் இருந்தது” என்றார்.
ஆனால், அதுவெல்லாம் முழு நம்பிக்கை சுலபமாக வரக்கூடிய காலம். இப்பொழுது முழு நம்பிக்கை(Trust) முடியாத ஒன்றாகிவிட்டதால், மதமும் இல்லாத ஒன்றாகிவிட்டது. மதம் பகுத்தறிவு இல்லாமலும், முன்னுக்குப் பின் முரண்பட்டதாகவும் இருக்கக்கூடியது. இப்பிரபஞ்சத்திற்குள் குதிப்பது பகுத்தறிவாகாது, இது பகுத்தறி விலிருந்து, பகுத்தறிவு இல்லாத ஒன்றுக்குள் குதிப்பதாகும். அதனால் போகப்போக நான் உங்களை இதற்குத் தக்கவாறு தயார்படுத்த வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நான் உங்களை பகுத்தறிவு இல்லாத ஒன்றுக்குள் போவதற்குத் தயார்படுத்துவேன். அப்படியே நான் பதிலளித்தாலும், அது உங்கள் காரணம் கேட்கும் மனதை திருப்திப்படுத்துவதற்காக அல்ல, அதை முற்றிலும் நொறுக்குவதற்குத்தான். சில சமயங்களில் நான் பகுத்தறிவு உடையவனாக தோன்றினாலும், அது ஆரம்பத்தில் மட்டும்தான் இருக்கும். அது உங்கள் மனதுடன் ஆரம்பிப்பதற்குத்தான். நீங்கள் என்னை பகுத்தறிவு உள்ளவன்போல் உணர்ந்தால், பின்பு உங்கள் மனம் என்னுடன் ஸ்ருதி சேர்ந்துவிடும்.
நீங்கள் ஸ்ருதி சேர்ந்ததை பார்த்த வினாடியிலிருந்து, நான் உங்களை பகுத்தறிவு இல்லாதவற்றில் தள்ளுவேன். ஒருவனை பகுத்தறிவு இல்லாதவற்றில் தள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. இத்தோடு முடிந்துவிடாது, நீங்கள் இன்னும் தயாரானவுடன், இன்னும் மற்றவர்களின் கண்களில் பைத்தியக்காரத்தனமாக தோன்றும் பலவற்றை உங்களிடம் கொடுப்பேன். நீங்கள் பைத்தியமாக(Insane) தயாராகி விட்டீர்கள் என்று நான் பார்க்கும் வினாடியிலிருந்தும், எப்பொழுது நீங்கள் மற்றவர்களின் பார்வைக்குப் பயப்படாமல், எப்பொழுது நீங்கள் மற்றவர்களின் கருத்துக்கு பயப்படாமல், எப்பொழுது நீங்கள் உங்களுடைய காரணம் கேட்கும் மனதிற்கு பயப்படாமல் இருக்கிறீர்களோ அப்பொழுதுதான் ஆழமான சாவிகளை யெல்லாம் உங்களிடம் ஒப்படைக்கமுடியும், அதற்கு முன்னால் முடியாது. இல்லா விட்டால் நீங்கள் அந்த சாவிகளை தூக்கியெறிந்துவிடுவீர்கள், உங்களுக்கு அதன் அருமை தெரியாது. அவை சாவிகள் என்பதைக்கூட உங்களால் புரிந்துக்கொள்ள முடியாது.
அதனால் போகப்போக யாருக்கெல்லாம் சன்யாசத்திற்கு தீக்க்ஷை வழங்கப் பட்டிருக்கிறதோ, அவர்களெல்லாம் பகுத்தறிவு இல்லாதவற்றுள் போக தயாராக வேண்டும். இப்பிரபஞ்சம் அப்படிப்பட்டது, இது கேள்விக்கு பதில் அளிப்பதில்லை. வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான், அது விளக்கங்கள் கொடுப்பதில்லை, அது இருக்கிறது. நம்முடைய எல்லா கேள்விகளும், எல்லாப் பதில்களும் ஏமாற்றிக் கொள்வதுதான். அறிவியல் சார்ந்த பதில்கள் கூட ஏமாற்றிக்கொள்வதே; ஏனெனில் அவை எதற்கும் உண்மையாக பதிலளிப்பதில்லை. அவை கேள்விகளைத்தான் ஒரு அடி பின்னோக்கித் தள்ளுகிறது. கேள்விகளை தள்ளிக்கொண்டேப் போகிறது. நீங்கள் சோர்வடைந்து, கேள்வி கேட்பதில்லை.
எந்த கேள்வியையும், பதில்களால் பதில் அளிக்க முடியாது. இப்பிரபஞ்சத்தினுள் குதிப்பதினால், எல்லா கேள்விகளுக்கும் விடை வரும், ஆனால் அறிவின் மூலம் ஒருபோதும் வராது. நீங்கள் ஒரு அறிவியல் ஆர்ய்ச்சியாளரை பார்த்து ஏன் ஆக்ஸிஜனும்(Oxygen), ஹைட்ரஜனும்(Hydrogen) சேர்ந்தால் தண்ணீர் உருவாகிறது என்று கேட்டால், அதற்கு அவர் “அது அப்படித்தான் நடக்கிறது, அது அப்படித்தான்” என்பார். “நம்மால் இதைத்தான் சொல்லமுடியும் அது அப்படித்தான் நிகழ்கிறது”. ஆனால் அது ஏன் அப்படி நிகழ்கிறது என்று யாரும் எந்த அறிவியல் ஆராய்ச்சியாளரையும் பார்த்து கேட்பதில்லை. ஏன் ஆக்ஸிஜனும்(Oxygen), ஹைட்ரஜனும்(Hydrogen) சேர்ந்தால் தண்ணீர் வருகிறது, ஏன்?. ஏன் அது ஹீலியமும் (Helium), ஆக்ஸிஜனுமாக(Oxygen) இருக்கக்கூடாது? இதற்கு பதில் கிடையாது.
“எங்களால் எப்படி நடக்கிறது என்றுதான் சொல்ல முடியுமே தவிர, ஏன் நடக்கிறது என்று சொல்லமுடியாது” என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். ஆனால் மதத்தில் மட்டும் ஏன் என்று எப்போதும் கேட்டுக்கொண்டேயிருப்போம். அறிவியல், தனக்குப் பகுத்தறிவு உடையதாக உரிமைக்கொண்டாடுகிறது, ஆனால் அதுவால்கூட ஏன் என்பதற்கு பதில் சொல்ல முடியவில்லை. மதம் ஒருபோதும் தன்னை பகுத்தறிவு உடையதாக சொல்லிக் கொள்வதில்லை, ஆனால் அதனிடம் ஏன் என்று கேள்வி கேட்கப்படுகிறது.
“ஏன் இந்த மாலை?, ஏன் இந்தப் படம்?” என்று கேட்கிறீர்கள். நான் “இந்த வழியில் அதை உபயோகப்படுத்தினால், இது நடக்கும்” என்று சொல்கிறேன். என்னுடைய இந்த பதில், எந்தளவிற்கு அறிவியல் ரீதியாக இருக்கமுடியுமோ, அந்த அளவிற்கு இருக்கிறது. மதம் தனக்கு பகுத்தறிவு இருப்பதாக சொல்லிக்கொள்வதில்லை, அப்படியே சொன்னாலும், பகுத்தறிவு இல்லாமல் இருப்பது என்றுதான் சொல்லிக் கொள்ள வேண்டும்.
இந்த வழியில் மாலையை உபயோகியுங்கள்: படத்தின்மீது தியானம் செய்யுங்கள், பின்பு படம் இருக்காது. அது அப்படித்தான் நிகழ்கிறது. பின்னர் இல்லாத படம் கதவாகிறது. அந்தக் கதவின் வழியாக என்னிடம் உரையாடுங்கள். அது அவ்வாறே நிகழ்கிறது. தியானம் செய்த பிறகு, இந்த மாலையைக் கழற்றி அதை உணருங்கள், பின்பு அதை அணிந்துக்கொண்டு உணருங்கள், உங்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும்.
இந்த மாலை இல்லாமல் நீங்கள் பாதுகாப்பின்றி உணர்வீர்கள், அடக்க முடியாத வேகம், தாக்கும்போது அது உங்களுக்கு கெடுதலாக இருக்கலாம். இந்த மாலை உங்கள் மீது இருந்தால், நீங்கள் பாதுகாப்பாக, அதிக நம்பிக்கையுடன், அமைதியாக இருப்பதை உணர்வீர்கள். உங்களை வெளியிலிருந்து எதுவானாலும் பாதிப்பு ஏற்படுத்தமுடியாது. அது அப்படித்தான் நடக்கிறது; நீங்கள் சோதித்து பின்பு தெரிந்து கொள்ளுங்கள். ஏன் அப்படி நடக்கிறது? என்பதை அறிவியல்பூர்வமாக பதில் அளிக்க முடியாது. ஆன்மீகத்தில் பதில் அளிப்பதற்கு எந்த கேள்விகளும் இல்லை. மதத்தால் உரிமைக் கொண்டாட முடியாது, அதனால்தான் மத்த்தின் பல சடங்குகள் அர்த்தமில்லாததாகிவிட்டது.
காலம் செல்ல செல்ல, மிக அர்த்தமுள்ள சடங்குகள்கூட, அர்த்தமில்லாததாகிவிடும். ஏனெனில் சாவிகள் தொலைந்துவிட்டன, மேலும் யாராலும் ஏன் அந்த சடங்குகள் இருக்கின்றன என்று சொல்லமுடியவில்லை. பின்பு அது செத்த சடங்குகளாகி விடுகிறது. அதை வைத்துக்கொண்டு உங்களால் எதுவும் செய்யமுடியாது. நீங்கள் அந்த சடங்குகளை நடத்தலாம், ஆனால் அதனுடைய சாவிகள் தொலைந்து விட்டன. உதாரணத்திற்கு, நீங்கள் இந்த மாலையை அணிந்துக்கொண்டே இருக்கலாம், ஆனால் அதிலிருக்கும் படம் உள்ளார்ந்து என்னுடன் தொடர்பு கொள்வதற்கு என்று உங்களுக்குத் தெரியாமல் இருந்தால், பின்பு அது வீண் சுமையாகத்தான் இருக்கும். அதன் சாவி தொலைந்துவிட்டது. மாலை வேண்டுமானால் உங்களிடம் இருக்கலாம், ஆனால் அதன் சாவி தொலைந்துவிட்டது. பின்பு ஒருநாள் அல்லது இன்னொரு நாள், நீங்கள் அதை தூக்கியெறியத்தான் வேண்டும். ஏனெனில் அது பயனற்றது.
இந்த மாலை , தியானத்திற்கான ஒரு சாதனம். அது ஒரு சாவி. ஆனால் இது அனுபவத்தின் மூலம்தான் வரும். அது நிகழ்ந்தாலேயொழிய உங்களுக்குத் தெரியாது, ஆனால் இது நடக்கலாம், இது மிகவும் சுலபமானது, இது கடினமானதல்ல. நான் உயிருடன் இருக்கும்போது இது மிக சுலபம், நான் இல்லாதபோது இது மிகக் கடினமாகிவிடும்.
இந்த பூமியில் எல்லா சிலைகளும், ஒரு சமயத்தில், இது மாதிரியான சாதனங்களாக இருந்தவைகள்தான். ஆனால் இப்பொழுது அவைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. புத்தர் தன்னுடைய சிலையை செய்யக்கூடாது என்று பகிரங்கமாகக் கூறினார். ஆனால் சிலைகளின் மூலம் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தும் இப்பொழுதும் செய்யப்படவேண்டும். அந்த சிலை அர்த்தமில்லாததாக இருந்தாலும், அதன் மூலம் செய்யப்படும் வேலைதான் உண்மையானது.
மஹாவீரரை பின்பற்றியவர்கள் மஹாவீரருடன், அவருடைய சிலையின் மூலம் இன்றுக் கூட தொடர்பு கொள்ளலாம். அதனால், புத்தருடைய சிஷ்யர்கள் என்ன செய்வார்கள்? அதனால்தான் போதிமரம் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது. புத்தரின் சிலைக்குப் பதிலாக இதனை பயன்படுத்தினார்கள். புத்தருக்கு பின்பு ஐநூறு ஆண்டுகளுக்கு அவர் சிலை இல்லை. புத்தர் கோவில்களில், போதி மரத்தின் படமும், கால் அடிச்சுவடுகளும் அடையாளங்களாக வைக்கப்பட்டிருந்தது, இதுவே போது மானது. இது இன்னும் தொடர்கிறது. இப்பொழுது போதிகயா(Bodhgaya) வில் இருக்கும் மரம் அந்த அசல் போதிமரத்தில் இருந்து தொடர்ந்து வந்ததேயாகும். அதனால் இன்று வரை, அந்த வழியைத் தெரிந்திருப்பவர்கள், போதிகயா (Bodhgaya) வில் இருக்கும் அந்த போதிமரத்தின் வழியாக புத்தருடன் உரையாடலாம். உலகெங்கும் இருக்கும் சன்யாசிகள் போதிகயாவிற்கு வருவது அர்த்தமற்றதல்ல. ஆனால் அவர்களுக்கு அந்த சாவி தெரிந்திருக்கவேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் அங்கே போவார்கள், பின்பு முழு விஷயமுமே ஒரு சடங்காகிவிடும் அவ்வளவுதான்.
அதனால் இவையெல்லாம் சாவிகள் – குறிப்பிட்ட மந்திரத்தை, குறிப்பிட்ட விதத்தில் உச்சரிக்கும்போது, குறிப்பிட்ட வழியில், குறிப்பிட்ட அலைகளோடு அழுத்திச் சொல்லும்போது ஒரு விதமான அலைகள் உருவாகிறது. பின்பு போதி மரம், வெறும் போதி மரமல்ல, அது வழியாகிறது. அது கதவைத் திறக்கிறது. பின்னர் இருபத்தைந்து நூற்றாண்டுகளின் இடைவெளி இருக்காது. நீங்கள் புத்தரை நேருக்குநேர் பார்க்கலாம். ஆனால் சாவிகள் எப்பொழுதும் தொலைக்கப்படுகின்றன. அதனால் இவ்வளவுதான் சொல்லமுடியும்; படத்தைப் பயன்படுத்துங்கள், உங்களுக்கு நிறையத் தெரிய வரும். நான் உங்களுக்கு சொன்னதெல்லாம் தெரியவரும், நான் சொல்லாததும் தெரியவரும்.
*************************************************************************************************************
சக்கரத்தை விட்டு வெளியே வாருங்கள்
ஆன்மீகத் தேடல் உள்ளவர் என்பதன் அர்த்தம் என்ன?
முதலில் இதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது. ஒன்று வெளிப்புறமாக தெரியும் வாழ்க்கை நிறைவில்லாமல், வெளிப்புற வாழ்க்கை அர்த்தமில்லாமல் இருப்பது. இந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக இருக்கிறது என்ற உண்மையை அறிந்துகொண்ட வினாடியிலிருந்து தேடல் ஆரம்பமாகிறது. இது எதிர்மறையான பாகம், ஆனால், இந்த எதிர்மறையான பாகம் இருந்தாலேயொழிய அனுகூலமானது(positive) தொடர வாய்ப் பில்லை. ஆன்மீகத்தேடல் என்றால் ஆரம்பத்தில் ஒரு எதிர்மறையான உணர்வும், வாழ்க்கை இருக்கும்படி அர்த்தமற்றதாகவும், எல்லா செய்முறைகளும் கடைசியில் மரணத்தில் முடிகிறது, எல்லாம் குப்பையாகிறது, முடிவில் எதுவும் ஒருவர் கையில் இருப்பதில்லை என்பதை அறிவதாகும். நீங்கள் வாழ்க்கையை பொறுக்க முடியாத துன்பத்துடனும், நரகத்தில் இருப்பதுபோல் இருந்து, வாழ்க்கையை கடந்து செல்கிறீர்கள், ஆனால் முடிவில் எதையும் சாதிப்பதில்லை.
இது ஆன்மீகத் தேடலின் எதிர்மறையான பாகம். நீங்கள் இதை நோக்கிச் செல்ல உங்கள் முழு வாழ்க்கையும் உதவும். இந்த எதிர்மறைத்தன்மை, இந்த ஏமாற்றம், இந்த துன்பங்கள் என்கிற பாகத்தைத்தான் உலகத்தால் செய்யமுடிந்தது. வாழ்க்கை இப்பொழுது இருப்பதுபோன்றே இருக்கும்பட்சத்தில், அது அர்த்தமற்றதாக இருக்கிறது என்ற உண்மையை நீங்கள் உண்மையாக அறியும்போது, பின்பு உங்கள் தேடல் சாதாரணமாகத் தொடங்குகிறது, ஏனெனில் அர்த்தமற்ற வாழ்வில் நீங்கள் சௌகரிய மாக இருக்கமுடியாது. அர்த்தமற்ற வாழ்வில் உங்களுக்கும், வாழ்க்கை என்பவை களோடும், ஆழம் காண முடியாத அளவிற்கு, பிளவு ஏற்படுகிறது. ஒரு இணைக்க முடியாத இடைவெளி வளர்ந்து, அகலமாகிக்கொண்டே வருகிறது. நீங்கள் கரையுடன் கட்டப்படாமல் இருப்பதுபோல் உணர்வீர்கள். பின்னர் அர்த்தமுள்ளதையும், ஆனந்தத்தையும் நோக்கி தேடல் ஆரம்பிக்கிறது. இதுதான் இரண்டாவது பாகம், அனுகூலமான(Positive) பாகம்.
ஆன்மீகத் தேடல் என்றால், கனவினால் உருவாக்கப்பட்டதுடன் இல்லாமல், இருக்கும் உண்மைகளோடு ஒத்து இருப்பது. நம்முடைய முழு வாழ்க்கையும் ஒரு கற்பனை தான், நம்முடைய கனவு கற்பனை. இது, என்ன இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்வதற்காக அல்ல, இது ஆசைப்பட்டவைகளை அடைவதற்காகும். நீங்கள் ஆசை என்ற வார்த்தையை இப்பொழுது இருக்கும் வாழ்க்கையின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம் – வாழ்க்கை ஆசையின் எடுத்துக்காட்டாக இருக்கிறது. நீங்கள் இருப் பதைத் தேடவில்லை, நீங்கள் ஆசைப்படுவதை தேடுகிறீர்கள். நீங்கள் ஆசைப்பட்டுக் கொண்டே போனால், வாழ்க்கை ஏமாற்றமாகத் தான் இருந்து கொண்டே இருக்கும், ஏனெனில் அது இருப்பது போன்றே இருந்துகொண்டேயிருக்கிறது. அது உங்கள் விருப்பத்திற்கேற்ப இருக்க இயலாது. நீங்கள் பொய்யானவைகளிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். உண்மை உங்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று அர்த்தமில்லை, நீங்கள் உண்மைகளோடு இணக்கமாக இல்லாமல், உங்களுடைய கனவுகளுடன் இணக்கமாக இருப்பதுதான் காரணம். உங்கள் பொய்யான கனவுகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டு உண்மை தெரியவரும். நீங்கள் கனவு கண்டால் பரவாயில்லை, உங்களுடைய எந்த கனவாவது, எப்போதாவது நிறைவேறும்போது, எல்லா பொய்யானவைகளும் அகன்றுவிடும்.
ஆன்மீகத்தேடல் என்றால், இந்த எதிர்மறையான பாகத்தை தெரிந்துகொள்வதுதான், ஆசைப்படுவதுதான் எல்லா ஏமாற்றங்களுக்கும் காரணம். ஆசைப்படுவது என்றால் அவரவர்களுக்குத் தகுந்தாற்போல், ஒரு மேல் ஓட்டை(Shell) உருவாக்கிக் கொள்வ தாகும். ஆசைப்படுவதுதான் இந்த உலகம். உலகரீதியாக இருப்பதென்றால் ஆசைப்படுவது, எல்லா ஆசைகளும் ஒன்றும் இல்லாமலாகி ஏமாற்றத்தைத்தான் தரும் என்பதை அறியாமல் ஆசைப்பட்டுக்கொண்டே இருப்பதாகும். ஒருமுறை நீங்கள் இதைப்பற்றி அறிந்துகொண்டால் பின்பு நீங்கள் ஆசைப்படமாட்டீர்கள், அல்லது இருப்பது என்ன என்பதை தெரிந்துகொள்வதுதான் உங்களுடைய ஒரே ஆசையாக இருக்கும்.
நான் என்னையே வெளிக்காட்டுதல் அல்ல, ஆனால் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது. நான் இப்படி இருக்கவேண்டும் என்றோ, உண்மைகள் இப்படி இருக்க வேண்டும் என்றோ நினைக்காமல், உண்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும், நான் அதை அப்படியே, எதுவும் மறைக்கப்படாமல் தெரிந்துகொள்ள நினைப்பதாகும். நான் அதை வேறுவிதமாக வெளிக்காட்டக்கூடாது. நான் உள்ளேயே வரக்கூடாது. நான் உண்மையை நேருக்கு நேர், அது இருக்கும்படி அப்படியே எதிர்கொள்ள வேண்டும்.
ஆன்மீகத்தேடல் அனுகூலமான (Positive) அர்த்தத்தில், இப்பிரபஞ்சத்தை ஆசை ஏதும் இல்லாமல், இருக்கும்படி அப்படியே எதிர்கொள்வதாகும். ஆசை இல்லாத வினாடி யிலிருந்து, வெளிக்காட்டும் இயந்திரம் வேலை செய்யாமல் இருக்கும். அப்பொழுது நீங்கள் இருப்பதை பார்க்கலாம். இந்த இருப்பது என்ன – அந்த இருக்கவேண்டியது என்ன – ஒருமுறை தெரிந்தால் எல்லாம் தெரிந்துவிடும்.
ஆசைகள் எப்பொழுதும் தருவதாக வாக்குறுதி கொடுக்கும், ஆனால் ஒருபோதும் தராது. ஆசைகள், ஆனந்தம், பரவசம் தருவதாக எப்பொழுதும் வாக்குறுதி கொடுக்கும், ஆனால் முடிவு வரவே வராது. ஒவ்வொரு ஆசையின் முடிவிலும், பல ஆசைகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு ஆசையும் அதனிடத்தில் இன்னொரு பெரிய, பல ஆசைகளை உருவாக்குகிறது, பின்பு முடிவு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது.
ஒரு ஆசை இல்லாத மனம்தான் ஆன்மீகத்தேடலில் இருப்பதாக அர்த்தம். ஆன்மீகத் தேடலை மேற்கொண்டவர்க்கு இந்த ஆசையினால் ஏற்படும் அர்த்தமற்றவைப்பற்றி முழுமையாக தெரியும், அதனால் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தயாராக இருப்பார். ஒருமுறை என்ன இருக்கிறது என்பதை அறிய ஒருவர் தயாராகி விட்டால், பின்பு உண்மையானது எப்பொழுதும் ஒரு மூலையிலேயே இருப்பது தெரியும் - மூலையிலேயே இருக்கிறது. ஆனால் நீங்கள் அங்கு இருப்பதே இல்லை, நீங்கள் ஆசையில்தான் இருக்கிறீர்கள், எதிர்காலத்தில்தான் இருக்கிறீர்கள். உண்மையானது எப்போதும் நிகழ்காலத்திலேயே இருக்கும் – இப்போது இங்கேயே – ஆனால் நீங்கள் நிகழ்காலத்தில் இருப்பதே இல்லை. நீங்கள் எப்போதும் எதிர்காலத்திலும், உங்கள் ஆசைகளிலும், உங்கள் கனவுகளிலும் இருக்கிறீர்கள். கனவுகளிலும், ஆசைகளிலும் நாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மையானது இங்கே இப்போது இருக்கிறது.
ஒருமுறை இந்த உறக்கம் உடைக்கப்பட்டுவிட்டால், இந்த கனவும் உடைக்கப்பட்டு விடும். பின்பு நீங்கள் இப்போது இங்கே நிகழ்காலத்தில் இருக்கும் உண்மைகளோடு விழித்துக்கொண்டு இருப்பீர்கள். நீங்கள் பேரானந்தம், நிறைவு, இன்னும் எதை யெல்லாம் ஆசைப்பட்டு அடையமுடியவில்லையோ, அதையெல்லாம் அடைவீர்கள். ஆன்மீகத்தேடல் என்றால், இப்போது இங்கே இருப்பது. ஆனால் ஆசை இல்லாத மனம் இருந்தால்தான், இங்கே இப்போது இருக்கமுடியும், இல்லாவிட்டால் ஆசை உள்ள மனம் சலனத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கும். கடிகாரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள பெண்டுலத்தைப் (Pendulum) போல மனம் நினைவாற்றலின் மூலம் கடந்தகாலத்திற்கோ, அல்லது ஆசையின் மூலம், கனவின் மூலம், எதிர்காலத்திற்கோ செல்கிறது. ஆனால் அது எப்போதும் இங்கே, இப்போது, இருப்பது இல்லை. அது எப்போதும் இங்கே, இப்பொழுது, இருக்கும் விஷயத்தை நழுவவிட்டுக்கொண்டே இருக்கிறது. அது எப்போதும் ஒரு முனையான கடந்த காலத்திலிருந்து இன்னொரு முனையான எதிர்காலத்திற்கு போய்க் கொண்டேயிருக்கிறது. இந்த கடந்த காலத்தி லிருந்து எதிர்காலத்திற்கு நகர்ந்துகொண்டே இருப்பதினால் நடுவில் இருக்கும் உண்மையை விட்டுவிடுகிறோம்.
உண்மையானது இங்கே, இப்போது, இருப்பது. அது கடந்தகாலமும் அல்ல, எதிர் காலமும் அல்ல, அது எப்போதும் நிகழ்காலம்தான். இப்பொழுதுதான் அந்த ஒரே வினாடி, இப்பொழுதுதான் ஒரே நேரம், அது எப்பொழுதும் கடந்து செல்லாது. இப்போது என்பது ஆதி அந்தம் இல்லாதது. அது எப்போதும் இங்கேயே இருக்கிறது, ஆனால் நாம் இங்கு இருப்பதில்லை. அதனால் ஆன்மீகத் தேடல் உள்ளவர் என்றால், இங்கே இருப்பது, இதை நீங்கள் தியானம் என்றோ, யோகம் என்றோ, பிரார்த்தனை என்றோ அழைக்கலாம். இதற்கு என்ன பெயர் கொடுத்தாலும், எந்த வித்தியாசமும் ஏற்படுத்தாது, ஆனால் மனம்(Mind) இருக்கக்கூடாது. கடந்தகாலம், எதிர்காலம் இருக்கும்போதுதான் மனமும் இருக்கிறது. இவ்விரண்டும் இல்லாவிட்டால் மனமும் இருக்காது.
நேற்று நான் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நான் அவரிடம் உங்களால் நிகழ்காலத்தில் நினைக்கமுடியாது என்று சொல்லிக்கொண்டிருந்தேன். நீங்கள் நினைக்கும் வினாடியில் அது கடந்தகாலமாகிவிடுகிறது, அதனால் நிகழ்காலத்தில் மனம் இருக்க வாய்ப்பில்லை, அது கடந்தகால நினைவிலும், எதிர்கால கற்பனையி லும்தான் இருக்கிறது. அது நிகழ்காலத்துடன் தொடர்புகொள்வதே இல்லை – அதுவால் வர இயலாது. அது முடியாத ஒன்று. அதனால் நினைவுகள் இல்லை என்றால் மனமும் இல்லை. இந்த மனம் இல்லாமல் இருப்பதுதான் தியானம். பின்பு நீங்கள் இங்கே இப்போது இருக்கிறீர்கள். பின்பு நீங்கள் அதிரடியாக உண்மையினுள் செல்கிறீர்கள். பின்பு உண்மையானது உங்களுள் வெடிக்கிறது.
ஆன்மீகத் தேடல் என்பது மோட்சத்திற்காகவோ, அல்லது இறந்தபிறகு முக்திப் பெறுவதற்கோ அல்ல. திரும்ப அதுவும் ஒரு ஆசைதான், இது செல்வத்திற்கான ஆசையைவிட கௌரவத்திற்கான ஆசையைவிட, பதவிக்கான ஆசையைவிட இன்னும் பேராசையுடையது. மோட்சத்திற்கான ஆசை எல்லா ஆசைகளையும்விட பேராசையானது. ஏனெனில் அது இறப்பைத் தாண்டிக்கூட செல்கிறது.
ஆன்மீகத் தேடல் என்பது கடவுளைத் தேடுவது அல்ல, ஏனெனில் அது திரும்பவும் பேராசைதான். நீங்கள் கடவுளைத் தேடிக்கொண்டிருந்தால், பின்பு உங்கள் மனம் பேராசையுடையது. நீங்கள் எதற்காகவோ கடவுளைத் தேடுகிறீர்கள். அது உங்களுக்கேத் தெரியாமல், ஆழமாக, நினைவற்ற நிலையில்(Unconscious) நீங்கள் கடவுளை எதற்காகவோத்தான் தேடிக்கொண்டு இருக்கவேண்டும், ஆனால் நான் இப்படிக் கூறுவதின் மூலம்,ஆன்மீகத்தேடல் நிறைவேறும்போது கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. நீங்கள் தியானத்திற்காக வந்து, மனம் இல்லாமல் இருக்கும் நிலையில், மோட்சம் என்பது கிடையாது என்று நான் சொல்லவில்லை.மோட்சம் இருக்கிறது, உங்களுக்கு விடுதலை இருக்கிறது, ஆனால் அது உங்கள் ஆசையினால் வருவதல்ல. அது நீங்கள் உண்மையை இருக்கும்படி அப்படியே தெரிந்துகொள்வதின் விளைவாக வருவது.
கடவுள் இருக்கிறார், ஆனால் அவர் இருப்பது நீங்கள் ஆசைப்படுவதினால் அல்ல. உண்மை என்பது அவர்தான். அதனால் உங்களுக்கு உண்மையைத் தெரியும்போது, உங்களுக்கு அதுதான் தெய்வீகம் என்பது தெரியும். உண்மைதான் தெய்வீகம். ஆனால் தேடல் என்பது கடவுளுக்காகவோ, மோட்சத்திற்காகவோ, பேரானந்தத்திற்காகவோ அல்ல, ஏனெனில் எப்போதெல்லாம் ஆசை இருக்கிறதோ, நீங்கள் அதன் கற்பனை யில், எதிர்காலத்தில் இருப்பீர்கள். ஆன்மீகத் தேடல் என்றால் எதிர்காலத்து பொய்யானவற்றை அகற்றுவது, பின்பு நிகழ்காலத்தில் இருப்பது. இங்கே இப்போது, எது வந்தாலும், அதை எதிர்நோக்கத் தயாராக இருப்பதாகும். தெய்வத்தன்மை வெடித்து நிரூபணமாகி, சுதந்திரம் வரும். ஆனால் இதுவெல்லாம் உங்கள் நோக்கமல்ல, இவைகளெல்லாம் உண்மையை அறிந்துகொண்டதின் விளைவுகள், நிழல்கள்.
அதனால், முதலில் இந்த முழு வாழ்க்கை முறையும் ஏமாற்றம் தரக்கூடியது என்பதனை அறியவேண்டும். ஒரு பொய்யானதுகூட இருக்கக்கூடாது, இல்லாவிட்டால் நீங்கள் அத்துடன் கட்டப்பட்டுவிடுவீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்திலும், ஆழமாக செல்லுங்கள், அதிலிருந்து தப்பிச் செல்லாதீர்கள். அதனுள் ஆழமாகச் சென்று அதன் பொய்யானவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள். இதிலிருந்து தப்பிச் செல்லாதீர்கள், துறந்து செல்லாதீர்கள். அப்படியானால்தான், இந்த பாகம் நிறைவுபெற்று, உங்களால் இங்கே இப்பொழுது என்பதற்குள் குதிக்க முடியும்.
எதிர்காலம்தான், மனித மனம் உருவாக்கும் எல்லா அர்த்தமற்றவைகளுக்கும் அடிப்படை காரணம் என்பதை நீங்கள் அறிந்துகொண்டால், பின்பு நீங்கள் அடிப்படையான அடியை எடுத்து வைத்துவிட்டீர்கள், நீங்கள் பயணம் செய்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இப்பொழுது நீங்கள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி அறிய தாயாராக இருப்பீர்கள். முதல்பாகத்தில், எதிர்மறையான பாகத்தில், வாழ்க்கை மிகவும் உதவுகிறது. அதனால் ஒவ்வொரு அனுபவத்திடமும், ஒவ்வொரு ஆசையிடமும், போய் தெரிந்துக்கொள்ளுங்கள், முன்கூட்டியே துறவு மேற்கொள்ளாதீர்கள்.
இதுவும் நடக்கலாம், அதாவது நீங்கள் உண்மையில் வாழ்க்கையில் எந்த ஏமாற்றமும் அடையாமல், ஆனால் ஆன்மீக வாக்குறுதிகளுக்கு பேராசைப் படுகிறீர்கள். உங்களுக்கு வாழ்க்கைதான் கடவுள் என்பது தெரியாமல், வசீகரமான ஆன்மீக சொர்க்கத்திற்கு ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் முதல்பாகத்தை கடந்து வராததால், எல்லாமே கடினமாகத்தான் இருக்கும். இரண்டாம் பாகம் மிக்க கடினமாக இருக்கும்.
அதனால் முதல்பாகத்தை கடந்து வாருங்கள், இரண்டாவது பாகம் மிக்க சுலபமாக இருக்கும். முதல்பாகத்தில் முழுமையாக பயணம் செய்யவில்லை என்றால்தான், இரண்டாம்பாகம் கடினமாக இருக்கும். பின்பு நீங்கள்“எப்படி தியானம் செய்வது?” என்று கேட்பீர்கள். பின்பு நீங்கள் “மனம் வேலை செய்துகொண்டே இருக்கிறது” என்கிறீர்கள். பின்பு நீங்கள் “சிந்தனைகள் தொடர்கிறது, அதை நிறுத்த முடியவில்லை, அதை எப்படி நிறுத்துவது?” என்று கேட்கிறீர்கள். ஆசைகள் இருக்கிறது, அதனால் ஆசைகள் சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டே போகும். முதல் பாகம் நிறைவேற்றப்படவில்லை.
ஒரு முதிர்ந்த ஆன்மீகத்தேடல் உடையவர், வாழ்க்கையில் எந்த பயமும் இல்லாமல் எல்லா மூலை முடுக்குகளையும் கடந்து வந்தவர். எதுவும் தெரியாமல் தங்காத அளவிற்கு, அவர் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டவர். பின்பு தியானம் சுலபம், ஏனெனில் சிந்தனைகளை உருவாக்குவதற்கு யாரும் இல்லை, ஆசைகளை உருவாக்குவதற்கும் யாரும் இல்லை. ஹூ( Hoo) என்று கத்துவதினால் மட்டும்கூட உங்களால் நிகழ்காலத்தில் இருக்கமுடியும். எந்த ஒரு சின்ன நுணுக்கம்கூட, உங்களை ஆடாமல் நிறுத்திவிட முடியும். சென்(Zen) குருவின் கோள்கள் உயர்த்தப்பட்டால்கூட, உங்களால் நிகழ்காலத்தில் இருந்துவிட முடியும். முதல்பாகம் நிறைவேறியிருந்தால், இதுபோன்ற சாதாரண நுணுக்கங்களினால்கூட உதவமுடியும்.
ஒருநாள் ஒரு சென்(Zen) சன்யாசி, ரின்சாய்(Rinzai) என்பவர் கோவிலில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஆன்மீக சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவன் அவரை பேசவிடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். அதனால் ரின்சாய்(Rinzai) தன் உரையை நிறுத்திவிட்டு “என்ன சமாச்சாரம்?”என்றார். அதற்கு அவன் எழுந்து நின்று “ஆத்மா என்றால் என்ன?” என்று கேட்டான். ரின்சாய்(Rinzai) தன்னுடைய குச்சியை கையில் எடுத்துக்கொண்டு, அங்கு உட்கார்ந்து இருப்பவர்களை தனக்கு வழிவிடும்படி சொன்னார். அந்த நபர் நடுங்கத் தொடங்கினான். அவன் இதுதான் விடையாக இருக்கும் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
ரின்சாய் (Rinzai) அவன் அருகில் வந்து, அவன் கழுத்தை தன் இரு கைகளாலும் பிடித்து நெரிக்கத் துவங்கினார். அவனுடைய கண்கள் பிதுங்கி வெளியே வந்தன. ஆனாலும் அவர் அழுத்திக்கொண்டே “நீ யார்? கண்களை மூடிக்கொள்! ”என்றார். அந்த நபர் தன் கண்களை மூடிக்கொண்டான். ரின்சாய்(Rinzai) “நீ யார்?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அந்த நபர் தன் கண்களைத் திறந்து, சிரித்துவிட்டு, அவரை வணங்கினார். அவன் “நீங்கள் உண்மையாகவே ஆத்மா என்றால் என்ன என்பதற்கு பதிலளித்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்றான்.
ஒரு சாதாரண நுணுக்கம்! ஆனால் அந்த மனிதன் தயாராக இருந்தான். யாரோ ஒருவன் ரின்சாய் (Rinzai) யிடம் “இதையே வேறு யாராவது கேட்டிருந்தால், நீங்கள் இதையேத்தான் செய்து இருப்பீர்களா?” என்று கேட்டார். “அந்த நபர் தயாராக இருந்தான். அவன் கேள்வி கேட்கவேண்டுமே என்று கேட்கவில்லை, அவன் தயாராக இருந்தான். முதல்பாகம் நிறைவடைந்திருந்தது. அவன் அந்தக் கேள்வியை உண்மையாகவே கேட்டான். இந்த கேள்வி அவனுக்கு வாழ்வா? சாவா? என்று நிர்ணயிக்கும் கேள்வி. “ஆத்மா என்றால் என்ன? “ முதல்பாகம் முழுமையாக நிறைவு பெற்றிருந்தது. அவன் வாழ்க்கையில், பொய்யானவைகளை எல்லாம் அறிந்தபின்தான் ஆத்மா என்றால் என்ன என்று கேட்டான். இந்த வாழ்க்கை அவனுக்கு, ஒரு சாவாக நிரூபணமாகிவிட்டது. அதனால் இப்போது “வாழ்க்கை என்றால் என்ன?” என்று கேட்கிறான். அதனால் என்னுடைய பதிலானது, அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். நான் அவனை நிகழ்காலத்தில் அசையாமல் நிறுத்துவதற்கு உதவினேன் அவ்வளவுதான்” என்றார் ரின்சாய் (Rinzai).
எப்போது, யாரோ ஒருவர் உங்கள் கழுத்தை நெரித்து, உங்களை கொல்லும் தருவாயில் இருக்கும்போது, உங்களால் எதிர்காலத்தில் இருக்கமுடியாது, உங்களால் கடந்தகாலத்திலும் இருக்கமுடியாது. நீங்கள் இப்போது இங்கே இருப்பீர்கள். அந்த வினாடியைத் தவற விடுவது ஆபத்தானது. இந்த தருணத்தில் இருக்கும் ஒருவனிடம், “ஆழ்ந்துசென்று, யார் என்பதை தெரிந்துகொள்” என்று சொன்னால், அவனுக்கு மாற்றம் ஏற்பட்டுவிடும். அவன் சமாதி நிலைக்குச் சென்று, அந்த வினாடியில் அவன் அசையாமல் நிற்பான்.
ஒரு வினாடிக்கு உங்களால் நிகழ்காலத்தில் இருக்க முடிந்தால்கூட, உங்களுக்குத் தெரிந்துவிடும், நீங்கள் அதை எதிர்கொண்டிருப்பீர்கள். பின்பு உங்களால் அந்தத் தடத்தை மறுபடியும் விடவேமுடியாது.
என்ன இருக்கிறது? – என்ன இதுவெல்லாம், என்பதை தெரிந்துக்கொள்வதுதான் ஆன்மீக உணர்வு. அது அல்ல, இது. இதுவெல்லாம் என்ன? - இது நான் பேசுவது, இது நீங்கள் கேட்பது, இது முழுவதும்? என்ன இது? சற்று நின்று இதில் ஆழமாக இருங்கள். இது உங்களுக்கு திறந்திருக்கட்டும், நீங்கள் அதற்கு திறந்திருங்கள். பின்பு ஒன்று சேரலாம். அந்த ஒன்றுசேருவதுதான் தேடல்.
அந்த ஒன்றுசேருவதுதான் தேடல் என்பது, அதனால்தான் இதை யோகா (Yoga) என்று அழைக்கிறோம். யோகா(Yoga) என்றால் ஒன்று சேருதல் என்று அர்த்தம். யோகா (Yoga) என்ற வார்த்தையின் அர்த்தமே சேருதல் – திரும்பவும் சேருதல், மீண்டும் ஒருமுறை ஒன்றாகுதல். ஆனால் ஆன்மீகத் தேடல் உள்ளவர் என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் ஆன்மீகத்தைத் தேடவில்லை, அவர்கள் தங்களுடைய ஆசைகளைத்தான், புதிய கோணத்தில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் எந்த ஆசைகளையும், ஆன்மீக கோணத்தில் வெளிப்படுத்த முடியாது, ஏனெனில் இந்த ஆன்மீகக் கோணம் ஆசை இல்லாதவர்களுக்கு மட்டும்தான் திறந்திருக்கும். அதனால் ஆசைப்படுபவர்களெல்லாம் புதிய பொய்களையும், புதிய கனவுகளையும் உருவாக்கிக்கொண்டே போகிறார்கள்.
முதலில் ஆசைகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன, ஆனால் எங்கும் சென்றடை வதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் அசையாமல் நின்று, அது என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள். எல்லாமே திறந்திருக்கிறது. நாம்தான் நம்முடைய ஆசைகளால் மூடிக்கொண்டு இருக்கிறோம். இந்த முழு பிரபஞ்சமே திறந்திருக்கிறது. எல்லாக் கதவுகளும் திறந்திருக்கின்றன, ஆனால் நாம் பார்க்க முடியாத அளவிற்கு, வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். அதிலும் நாம் அதிகமாக ஏமாற்றம் அடைய அடைய, இன்னும் நம் வேகத்தை அதிகரித்துக் கொள்கிறோம். ஏனெனில் நம் மனம் “ நீங்கள் போதுமான அளவிற்கு வேகமாக ஓடவில்லை, அதனால்தான் உங்களால் அடைய முடியவில்லை” என்கிறது. “ நீங்கள் ஓடுவதினால் உங்களால் அடையமுடியாது” என்று மனம் சொல்லாது. மனம் “நீங்கள் போதுமான அளவிற்கு வேகமாக ஓடவில்லை, அதனால்தான் உங்களால் அடையமுடியவில்லை, அதனால் இன்னும் வேகமாக ஓடுங்கள், வேகமாக ஓடுபவர்களெல்லாம் சென்றடைகிறார்கள்” என்றுதான் சொல்லும். வேகமாக ஓடுபவர்களை கேளுங்கள், அவர்களின் மனமும் அதையேத்தான் சொல்லும். “இன்னும் வேகமாக ஓடுங்கள், யாரெல்லாம் உண்மையாகவே வேகமாக ஓடுகிறார்களோ, அவர்களெல்லாம் சென்றடைகிறார்கள்” என்றுதான் அவர்கள் மனமும் சொல்கிறது.
யாருமே அடைவதில்லை, ஆனால் எப்போதுமே யாரோ ஒருவர் உங்கள் முன் னாலும், பின்னாலும் இருந்துக் கொண்டேயிருக்கிறார்கள். நீங்கள் யாரையாவது முந்திக் கொண்டேப்போனாலும், நீங்கள் எங்கிருந்தாலும், யாராவது ஒருவர், உங்கள் முன்னால் எப்போதும் இருக்கிறார். ஏன்? ஏனெனில் ஆசை வட்டத்தில்தான் வளையம் வந்து கொண்டிருக்கும். நாமும் வட்டத்தில்தான் சுற்றிக்கொண்டி ருக்கிறோம். அதனால், நீங்கள் மிக வேகமாக ஓடினால், உங்களுக்குப் பின்னால் இருந்தவர்கூட, உங்கள் முன்னால் வந்துவிடலாம், ஏனெனில் நாம் வட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம், யாரேனும் ஒருவர் நமக்கு முன்னால் எப்போதும் இருந்துக் கொண்டேதான் இருப்பார், அதனால் நீங்கள் போதுமான அளவிற்கு வேகமாக ஓட வில்லை என்ற உணர்வும், யாரோ அடைகிறார்கள், நீங்கள் இழக்கிறீர்கள், என்ற உணர்வும் இருந்துகொண்டேதான் இருக்கும்.
இந்த பூமியில் நமக்கு நிறைய உண்மைகள் தெரியும். நாம் இந்த உலகத்தை சன்சாரா (Sansara) என்று அழைப்போம். சன்சாரா (Sansara) என்றால் சக்கரம் – நீங்கள் ஓடுவதோடு மட்டு மல்லாமல், சக்கரமும் சுழல்கிறது. அது திடமாக நிற்கும் சக்கரமல்ல. நீங்கள் நின்றால்கூட, சக்கரம் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். அதனால் ஒருவர் நின்றால் மட்டும் போதாது, அவர் அந்த சக்கரத்திலிருந்து வெளிவர வேண்டும்.
இப்படி சக்கரத்திலிருந்து காலை வெளியில் வைப்பதுதான் சன்யாசம் என்பது. நிறுத்துவது போதாது, நீங்கள் சக்கரத்திலிருந்து வெளியில் வரவேண்டும், ஏனெனில் நீங்கள் ஓடாவிட்டால் கூட, சக்கரம் சுற்றிக்கொண்டேதான் இருக்கும். அது ஒரு மாபெரும் சக்கரம், அதிலும் மிக்க சக்தி வாய்ந்தது, அதனால் நீங்கள் ஒரு இடத்தி லேயே நின்றுகொண்டு இருந்தாலும்கூட, நீங்கள் ஓடிக்கொண்டேதான் இருப்பீர்கள். இதிலிருந்து வெளியில் வருவதுதான் சன்யாசம் – ஓடுவதை நிறுத்துவது மட்டுமல்லாமல், அதிலிருந்து காலை வெளியில் வைப்பதாகும். அந்த சக்கரத் திலேயே இருக்காதீர்கள். அந்த பழக்கப்பட்ட பாதையிலிருந்து வெளியே வாருங்கள். அதற்கு சாட்சியாக இருங்கள். அப்போதுதான் அந்த சக்கரம் எதனால் ஆக்கப் பட்டிருக்கிறது, நீங்கள் ஓடாமல் இருக்கும்போதும் அது ஏன் சுற்றிக்கொண்டிருக்கிறது, என்பது உங்களுக்குத் தெரியவரும்.
இந்த சக்கரம் முடிவில்லாத ஆசைகளின் மூலம் உருவானது. அது இதுவரை இருந்த எல்லா ஆசைகள் மற்றும் இன்றும் இப்பிரபஞ்சத்தில் இருப்பவைகளால் உருவானது – இதுவரை இருந்த எல்லா மனிதர்களின், எல்லா உயிரினங்களின் ஆசைகள், இப் பிரபஞ்சத்தில் இருக்கிறது. நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆனால் உங்கள் ஆசைகள் உருவாக்கிய அலைகள் போய்க்கொண்டே இருக்கும். நீங்கள் இங்கே இருக்க மாட்டீர்கள், ஆனால் உங்கள் ஆசைகள், சிந்தனைகளை உருவாக்கிவிடுகிறது. நீங்கள் இங்கே இருக்கமாட்டீர்கள், ஆனால் உங்கள் ஆசைகள் தொடர்ச்சியான வளையத்தை உருவாக்கிவிடுகிறது. நீங்கள் இங்கே இருக்கமாட்டீர்கள், ஆனால் நான் சிலவற்றை சொல்லியிருக்கிறேன், அந்த வார்த்தைகள், அந்த ஒலிகள், முடிவில்லாமல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நீங்கள் எதற்கு ஆசைப்பட்டிருந்தாலும், நிறைவேறியதோ, நிறைவேறவில்லையோ, அதனால் எந்த மாற்றமும் உண்டாகாது. உங்கள் மனதில், இதயத்தில், ஆசை வந்த வினாடி, நீங்கள் சிற்றலைகளையும், அலைகளையும் உருவாக்குகிறீர்கள், அது போய்க்கொண்டே இருக்கும். இந்த சக்கரம், இந்த சன்சாரா (Sansara), இதுவரை இருந்த ஆசைகளாலும், இப்போது இப்பிரபஞ்சத்தில் இருக்கும் ஆசைகளாலும் ஆனது. இது எல்லா இறந்தவர்களின், மற்றும் எல்லா இருப்பவர்களின் மாபெரும் சக்தியாகும், இதில் உங்களால் அசையாமல் நிற்கமுடியாது. அவைகள் உங்களைத் தள்ளும். நீங்கள் ஓடியே ஆகவேண்டும்.
இது கூட்டத்தில் இருப்பதுபோலாகும். மொத்தக் கூட்டமும் ஓடிக்கொண்டிருக்கும் போது, உங்களால் அசையாமல் நிற்கமுடியாது. நீங்கள் ஓடுவதற்குத் தள்ளப் படுவீர்கள். நீங்கள் ஓடினால்தான் பத்திரமாக இருப்பீர்கள். நீங்கள் ஓடவில்லை யென்றால் கொல்லப்படுவீர்கள். ஓடுவதற்கு உங்கள் ஆக்க சக்தி தேவையில்லை. நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காவிட்டாலும், இந்தக் கூட்டம் உங்களைத் தள்ளும். இது ஒரு சக்கரம் – ஆசைகளின் சக்கரம். நீங்கள் சக்கரம் படம் கொண்ட திபத்தின் (Tibetan) படத்தைப் பார்த்திருப்பீர்கள். அது அழகாக, தெளிவாக வரையப்பட்ட ஓவியம் – முழு ஆசைகளின் சக்கரம்.
இந்த சக்கரத்தை விட்டு காலை வெளியில் வைப்பதுதான் சன்யாசம். நீங்கள் கூட்டத்திலிருந்து வெளியே வாருங்கள். நீங்கள் கீழே காலை வையுங்கள். நீங்கள் சாலை ஓரத்தில் உட்கார்ந்துக் கொண்டு, நீங்கள் விடையளியுங்கள், (Good bye). அப்போதுதான் சக்கரம் என்றால் என்ன? என்ற விஷயம் உங்களுக்குத் தெரியவரும். அப்போதுதான் உங்களுக்கு சில மனிதர்கள் வட்டத்தில் ஓடுகிறார்கள், என்பது தெரியும், ஏனெனில் அவர்கள் பலதடவை உங்களைக் கடந்து செல்வார்கள். பின்பு அது ஒரு சக்கரம் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஒரு புத்தர், ஒரு மகாவீரர், இந்த உலகத்தை சன்சாரா(Sansara) ஒரு சக்கரம் என்று அழைப்பார்கள், ஏனெனில் அவர்கள் ஒரு பக்கமாக ஒதுங்கி காலை வெளியில் வைத்து, அது ஒரு சக்கரம் என்று தெரிந்தவர்கள். நீங்கள் வரிசையாக ஒரு நேர்கோட்டில் ஓடுகிறீர்கள் என்றும் இல்லை. அது ஒரு வட்டம் – திரும்ப அதே ஆசைகள், அதே நாட்கள், அதே இரவுகள், அதே பொய்களை அகற்றுவது, இப்படியே சுழற்காற்றில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். பின்னால் இருந்து தள்ளப்பட்டும், முன்னால் இருந்து இழுக்கப்பட்டும், நீங்கள் போய்க்கொண்டே இருக்கிறீர்கள்.
சன்யாசம் என்றால் ஓரமாக, வெளியில் காலை எடுத்து வைப்பதாகும். இது சன்யாசத்தின் இரண்டாம் பாகம். சன்யாசத்தில் இரண்டு பாகங்கள் உள்ளன. முதல் பாகம், ஏமாற்றங்களையும், துன்பங்களையும் தெரிந்துகொள்வது. இது ஒரு ஆச்சரியம். ஒருமுறை இந்த உலகமே ஏமாற்றுவதுதான், இந்த உலகமே துன்பம் தான், என்பது தெரிந்துவிட்டால் அத்துடன் நீங்கள் ஏமாற்றமே அடையமாட்டீர்கள். உலகம் ஏமாற்றக்கூடியதல்ல என்று நீங்கள் நினைப்பதினால்தான் உங்களுக்கு ஏமாற்றம் வருகிறது. இது நம்பத்தகாத ஒன்று, என்று தெரிந்தாலும்கூட, நீங்கள் நம்புவதினால்தான், உங்களுக்கு துன்பம் வருகிறது. அந்த நம்பிக்கை அர்த்தமற்றது. இது உங்களுக்கு தெரியும்போது, நீங்கள் நம்பிக்கை இழந்ததாக உணரமாட்டீர்கள். பின்பு அவ்வாறு உணருவதற்கு எந்தக் காரணமும் இல்லை – பின்பு எதிலும் நம்பிக்கை இழந்ததாக உணர ஒன்றும் இல்லை. நம்பிக்கையே இல்லை.
அதனால்தான் புத்தமதத்தை புரிந்துக்கொள்ள முடியவில்லை. மேற்கத்திய மனதால் அதை நம்பிக்கையில்லாமல், எல்லாம் கெட்டதாக நடக்கும், என்று எதிர்பார்க்கும் ஒரு மதமாக அதை கருதியது (Pessimistic). இது இயற்கையாக எல்லோரும் தவறாக நினைக்கும்படியான ஒன்றே. புத்தமதம் நம்பிக்கையில்லாமல், அழிவை எதிர்பார்க்கும் ஒரு மதமல்ல, ஆனால் மேற்கத்திய மனதிற்கு அழிவை எதிர்பார்க்கும் ஒரு மதமாக தெரிந்ததற்கு காரணம், இந்த உலகம் ஏமாற்றுகிறது, இந்த உலகம் துன்பங்கள் ..நிறைந்தது என்று அது சொல்வதினால்தான். இதுதான் உங்களை கெட்டதை எதிர்பார்க்கச் செய்கிறது. ஆனால் இது உண்மையல்ல. இந்த பூமி மிக சந்தோஷமாக இருந்தவர்களை அதிகம் பார்க்கவில்லை, புத்தரைப் போல ஒருசில சந்தோஷமான வர்களைத்தான் பார்த்திருக்கிறது. புத்தர் கெட்டதை எதிர்பார்க்கும் ஒருவரல்ல. அதனால் இதன் இரகசியம் என்ன? இதன் இரகசியம் இதுதான் : இந்த உலகம் துன்பம் நிறைந்தது என்பது உங்களுக்குத் தெரிந்தால், பின்பு நீங்கள் துன்பத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க மாட்டீர்கள், எதிர்பார்ப்புதான், கெட்டதை எதிர்பார்க்கும் மனப்பான்மையை உருவாக்குகிறது. எப்போது எதிர்பார்ப்பு இல்லையோ, பின்பு துன்பத்தில் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஒருமுறை வாழ்க்கை துன்பம் நிறைந்தது என்பது உங்களுக்குத் தெரிந்தால், பின்பு நீங்கள் துன்பத்தில் இருக்கவே மாட்டீர்கள், நீங்கள் அதைவிட்டு வெளியே வந்து விடுவீர்கள்.
அதனால் சன்யாசி என்பவன் ஏமாற்றங்கள் அடைந்தவன் அல்ல. சன்யாசி என்பவன் இந்த உலகத்தின் ஏமாற்றங்களை அறிந்தவன். அவன் ஏமாற்றம் அடையவில்லை, அவன் சௌகரியமாக இருப்பான். அவனை ஏமாற்றுவதற்கு எதுவும் இல்லை. எது நடந்தாலும் அது அப்படிதான் நடக்கும் என்பது அவனுக்குத் தெரியும். இறப்புக்கூட அவனுக்கு ஒரு துன்பம் அல்ல, ஏனெனில் இறப்பு என்பது நிச்சயமானது. ஒருமுறை நீங்கள் இந்த சுழற்காற்றின் குணத்தையும், இந்த உலகத்தையும், இந்த வாழ்க்கை என்ற பெயரில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையையும், திரும்பத்திரும்ப ஒரே இடத்தில் கொண்டுவிடும் தன்மையையும் தெரிந்துகொண்டால், பின்னர் நீங்கள் அமைதியான, சந்தோஷமான, ஒரு மனிதராகி விடுவீர்கள். இப்பொழுது உங்களுக்கு எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கையுமில்லை, அதனால் நம்பிக்கை இழந்த உணர்வும் இல்லை. நீங்கள் சௌகரியமாக, அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் அதிக சௌகரியமாக இருந்தால், நீங்கள் அதிக அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் அதிகமாக அந்தந்த நொடியில் இருந்தால், நீங்கள் அதிகம் அலைபாயாமல் அசையாமல் இருப்பீர்கள்.
இந்த நிமிடம், இங்கே, இப்போது தான் தெரியவேண்டியதெல்லாம் தெரிந்து – உணரவேண்டியத் தருணம் – மோட்சம், கடவுள், உண்மைகள் – இந்த வினாடியே. அதனால் ஒரு வழியில், ஆன்மீகத்தேடல் என்பது எதற்காகவும் அல்ல. அது எந்த ஒரு பொருளுக்காகவும் அல்ல. அது இருப்பதைத் தெரிந்து கொள்வதற்கு, அது நீங்கள் இந்த வினாடியில் இருந்தால்தான் தெரிந்துகொள்ளமுடியும்.
இந்த வினாடியில் இருப்பதுதான் இரகசியக் கதவு, அல்லது இதை எல்லோருக்கும் தெரிந்த இரகசியம் என்றும் சொல்லலாம். இந்த வினாடியில் இருப்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்.
*************************************************************************************************************
உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்
அன்புள்ள ஓஷோ,
அன்பு, கருணை போன்ற குணங்கள் கடவுளுக்குரிய குணங்களாக சொல்லப்படுகிறது, இந்த மாதிரியான குணங்கள் இருக்கிறதா? கடவுள் இருக்கிறாரா? இதை விளக்கமுடியுமா?
கடவுள் இருக்கிறார் என்று சொல்வது சரியல்ல, ஏனெனில் இருப்பது எல்லாமே கடவுள்தான். கடவுள் மட்டும் இருப்பதாக சொல்லமுடியாது, ஏனெனில் இருக்கும் ஒவ்வொன்றும் கடவுள்தான். இருப்பவைகளெல்லாம் கடவுள்தான். கடவுளாக இருப்பதையும், கடவுளில் இருப்பதையும், இரண்டு விதங்களாக சொல்கிறார்கள். அதனால் இருப்பவைகளின் குணங்களை கடவுளின் குணங்களாக சுமத்தப்படவில்லை.
மற்ற எல்லாவற்றையும் இருப்பதாக சொல்லலாம், ஏனெனில் அவைகள் இல்லாமலும் போகலாம். நான் இருப்பதாக சொல்லலாம், ஏனெனில் நான் இல்லாமலும் போவேன். நீங்கள் இருப்பதாக சொல்லலாம், ஏனெனில் நீங்கள் இல்லாத காலமும் இருந்தது. ஆனால் கடவுள் இருக்கிறார் என்று சொல்லமுடியாது, ஏனெனில் கடவுள் எப்போதும் இருக்கிறார். அவர் இல்லாமல் இருப்பதைக் கற்பனைக்கூட செய்யமுடியாது, ஆனால் இருப்பது என்பது கடவுளைப் பொறுத்த வரை சொல்லமுடியாது, அதனால் நான், இருப்பவையெல்லாம் கடவுள்தான், அல்லது கடவுள் என்றால் இருப்பவை அனைத்தும் என்று சொல்கிறேன்.
கடவுளாக இல்லாத எதுவும் இருப்பதில்லை. உங்களுக்கு இது தெரிந்திருக்கிறதோ, இல்லையோ, அதனால் உங்கள் தெயிவீகத்தன்மையைப் பொறுத்தவரை எந்த வித்தியாசமும் இருக்காது. உங்களுக்கு இது தெரிந்திருந்தால், நீங்கள் இப்பிர பஞ்சமாக, மகிழ்ச்சிகரமாக ஆகிறீர்கள். உங்களுக்கு இது தெரியாவிட்டால், உங்கள் துன்பங்களோடு போய்க்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் கடவுள். நீங்கள் உறங்கிக்கொண்டிருந்தாலும், உங்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், அப்போதும் நீங்கள் கடவுள்தான். ஒரு கல் கூட அதற்கேத் தெரியாமல் கடவுள்தான். இருப்பவை யெல்லாம் கடவுள்.
கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க முயற்சிப்பவர்களெல்லாம், கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க முயற்சிப்பது, சுத்த அர்த்தமற்றது என்பது அவர்களுக்குத் தெரியாது. யாரெல்லாம் கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார்களோ, அவர்களும் அதேப்படகில்தான் இருக்கிறார்கள். யாரும் இருப்பதை இருக்கிறது என்று நிரூபிக்க மாட்டார்கள். நீங்கள் இந்த வகையில் சொன்னால், இருப்பவை இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டால், கேள்வி அசட்டுத்தனமாக இருக்கும்.
எப்போதாவது, யாராவது என்னிடம் கடவுள் இருக்கிறார், என்று சொன்னால் நான் அதை, இருந்து கொண்டிருப்பவைகளெல்லாம் இருக்கிறது, என்றுதான் அர்த்தம் செய்து கொள்வேன். கடவுளும் இருப்பவைகளும் சம்மானவர்கள், இவ்விரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான். இருந்து கொண்டிருப்பவைகளைப் பற்றி ஒருமுறை தெரிந்து விட்டால், பின்னர் நீங்கள் அவற்றை “இருப்பவைகள்” என்று அழைக்கமாட்டீர்கள், கடவுள் என்றுதான் அழைப்பீர்கள். முழுமையாக இருப்பவைகள் பற்றி ஒருவர் அறிந்துக்கொண்ட வினாடியிலிருந்து, உங்களால் அவற்றுக்கு “இருப்பவைகள்” என்ற வார்த்தையை உபயோகிக்க முடியாது. நீங்கள் அத்துடன் மிக்க நெருக்கத்துடன் இருப்பீர்கள், அப்போது நீங்கள் தனிப்பட்ட பெயரை உபயோகிக்க வேண்டும், அதற்கு கடவுள் என்று அழைப்பீர்கள். நீங்கள் இருப்பவைகளை கடவுள் என்று அழைப்பதற்கு, இதைத்தவிர வேறு காரணம் இல்லை. இனி நீங்கள் அத்துடன் நெருங்கிய சொந்தத்தில் இருக்கலாம், அத்துடன் தனியாக தொடர்பு கொள்ளலாம் ; அது இறந்துபோன ஒன்றல்ல. அது நீங்கள் சொந்தம் வைத்துக்கொள்ள முடியாத ஒன்றல்ல. அது உங்களை அலட்சியப்படுத்தும் ஒன்றல்ல.
இருப்பவைகளெல்லாம் கடவுள் என்று நாம் சொல்லும்போது, இருப்பவைகளெல்லாம் நமக்கு நெருங்கிய சொந்தம் என்ற அர்த்தத்தில்தான் சொல்கிறோம். நாம் அத்துடன் உறவு வைத்துக்கொண்டிருக்கிறோம், அதுவும் நம்மை அலட்சியப்படுத்துவதில்லை. ஆனால் மனித மனதைப் பொறுத்தமட்டில், கடவுள் என்ற வார்த்தையைவிட, துல்லியமான, சரியான வார்த்தை நமக்குத் தெரியாது.
நீங்கள் பண்டைய முறைகளில் நம்பிக்கை கொண்ட யூத மதத்தைச் சார்ந்தவரை கேட்டால் ஆங்கிலத்தில் கடவுளைக் குறிக்கும் சொல்லான “God” என்பதை முழுமையாக பயன்படுத்தமாட்டார். அவர் அதில் G-D என்பதைத்தான் பயன் படுத்துவார், O வை விட்டுவிடுவார். நீங்கள் அவர்களை “ஏன் G-D என்பதை உப யோகித்து O வை விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டால், அதற்கு அவர்கள் “நாங்கள் என்ன சொன்னாலும், அது எப்போதும் இருப்பதைவிட குறைவாகத்தான் இருக்கிறது, அதனால் O என்ற வார்த்தையை, விடுவதின் மூலம் முழுவதையும் சொல்லமுடியாத, மொத்தத்தையும் உள்ளடக்கும் அளவிற்கு விசாலமாக இருக்கமுடியாத வார்த்தையை நாம் பயன்படுத்துகிறோம், என்பதை அடையாளமாக இதன் மூலம் உணர்த்துகிறோம்” என்பார்கள். மேலும் O என்பது பூஜ்யத்திற்கான அடையாளம், பூரணத்துவத்தின் அடையாளம், முழுமையின் அடையாளம், அதனால் O விடப்பட்டு,G -D மட்டுமே இருக்கிறது.
எப்போதெல்லாம் நாம் ஏதாவது வார்த்தையை உபயோகப்படுத்துகிறோமோ, அப்போதெல்லாம் அது அர்த்தமுள்ளதாகவோ, மொத்தத்தை குறிக்கும் அளவிற்கு விசாலமாகவோ இல்லை. அது கடவுளைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, அது மனித அறிவைத்தான் குறிப்பிடுகிறது. நீங்கள் “இருப்பவைகள்” என்று சொன்னால், பின்பு நீங்கள் நடுநிலையான ஒரு வார்த்தையை உபயோகிக்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் அதனிடம் அலட்சியப்போக்குடன் இருக்கலாம், அதற்கு இருப்பவைகளும் உங்களுடன் அலட்சியப்போக்குடன் இருக்கலாம். நீங்கள் இருப்பவைகள் என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது, உங்களுக்கும் இருப்பவைகளுக்கும் இடையே உரையாடல் இருக்க வாய்ப்பில்லை. பின்னர் பாலம் ஏதும் இல்லை,ஆனால் இருப்பவைகளை தெரிந்தவர்களுக்கு, இருக்கின்ற எல்லாவற்றுடனும் உரையாடல் இருப்பது தெரியும், நீங்கள் அவற்றுடன் நெருங்கிய உறவு, அன்பு வைத்துக் கொள்ளலாம். இந்த உரையாடலுக்கான வாய்ப்பு, இந்த உறவுக்கான வாய்ப்பு, அன்புடன் இருக்கக்கூடிய வாய்ப்பு, இவைகளால் கடவுள் என்ற வார்த்தை, இருப்ப வைகள் என்ற வார்த்தையை விட, அர்த்தமுள்ளதாகயிருக்கிறது. ஆனால் இவ் விரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான்.
அதனால் கடவுள் இருக்கிறார் என்று நான் சொல்லமாட்டேன். இருப்பது எல்லாமே கடவுள்தான் என்று நான் சொல்லுவேன். இருப்பவைகள் எல்லாம் கடவுள். இருக்கிறது என்றால் கடவுளாக இருப்பதுதான். கடவுளாக இல்லாதது எதுவும் இருப்பதில்லை. கடவுளாக இல்லாத எதுவும் இருக்கமுடியாது. இது நமக்கு தெரிந்திருக்கலாம், தெரியாமலிருக்கலாம், அறிந்திருக்கலாம் அறியாமலும் இருக்கலாம். ஆனால் இதனால் எந்த மாற்றமும் உண்டாகாது.
அன்பு, கருணை போன்ற குணங்களை கடவுளுக்குரியதாக இருக்கிறதா என்று இன்னொரு கேள்வியையும் கேட்டீர்கள். திரும்பவும் எந்த குணங்களையும் கடவுளின் மேல் சுமத்தமுடியாது, ஏனெனில் எதிர்மறையான குணங்கள் இருக்க வாய்ப் பிருந்தால்தான், எந்த குணங்களையும் சுமத்தமுடியும். “ஒருவர் என்னை காதலிக்கிறார்” என்று சொல்கிறீர்கள், ஏனெனில் அவர் காதலிக்காமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவருக்கு உங்களை காதலிக்காமல் இருக்கும் தகுதியே இல்லை என்றபோது, அவர் என்னை காதலிக்கிறார் என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள். பின்னர் அவர் என்னை காதலிக்கிறார், என்று நீங்கள் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. என்னால் காதலில் இருக்கமுடியவில்லை என்றால், என்னால் வெறுப்புடன்தான் இருக்கமுடியும். அப்போது “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று சொல்லலாம். ஆனால் எனக்கு வெறுப்புடன் இருக்கும் தகுதியே இல்லையென்றால், அன்பு என்பதை என்னுடைய குணமாக சுமத்த முடியாது, அது என்னுடைய இயற்கையான இயல்பாகிறது.
ஒருவருடைய குணத்திற்கும், ஒருவருடைய இயல்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
குணம் என்பது ஓர் அவதாரத்திலும் இருக்கலாம், அவதாரம் இல்லாமலும் இருக்கலாம். குணத்தை உங்களுக்கு கிடைக்காமலும் செய்யலாம். நீங்கள் குணத்துடனும் இருக்கலாம், குணம் இல்லாமலும் இருக்கலாம். அது உங்களின் இயற்கையான இயல்பு அல்ல. அது உங்கள் மீது சுமத்தப்பட்ட ஏதோ ஒன்று, அது உங்களுடன் சேர்க்கப்பட்ட ஏதோ ஒன்று, அது உங்களுடைய இயல்பு அல்ல.
இயல்பு இல்லாமல் உங்களால் இருக்கமுடியாது. அதனால் யாராவது “கடவுள் அன்பு மிக்கவர்” என்று சொன்னால், அவர் துல்லியமாக சரியானதை சொல்லவில்லை. “அன்பே கடவுள்” என்று இயேசு சொல்லும்போது, அவர் சரியாக சொல்லியிருக்கிறார். ஆனால் “கடவுள் அன்புமிக்கவர்” என்று சொல்லவில்லை. பின்பு அன்பு என்பது அவர் இயற்கையான இயல்பாகிறது, ஒரு குணமல்ல. அதன் இடத்தை நிரப்ப முடியாது. கடவுள் அன்பாக இருக்கலாம், அன்பு கடவுளாக இருக்கலாம். ஏனெனில் அன்பு என்பது கடவுளின் இயற்கையான இயல்பு.
அன்பு என்பது சேர்க்கப்பட்ட ஒன்றல்ல, அதை சேர்க்கவும் முடியாது. அன்பு இல்லாத கடவுளை கற்பனையில் கூட நினைக்க வாய்ப்பில்லை, ஆனால் நீங்கள் கடவுளாக இல்லாத ஒரு கடவுளை கற்பனை செய்கிறீர்கள். அன்பு இல்லாத கடவுளை கற்பனை செய்வது, தெய்வீகத்தன்மை இல்லாத கடவுளை கற்பனை செய்வது போலாகும், ஏனெனில் அன்பு அழிக்கப்பட்ட வினாடியிலிருந்து, தெய்வீகத்தன்மையும் மிஞ்சாது. அதனால் திரும்பவும், அன்பு என்பது சுமத்தப்பட்ட ஒரு குணமாக நான் சொல்ல மாட்டேன். அதேபோல் கருணை என்பதையும் சுமத்தப்பட்ட ஒரு குணமாக நான் சொல்லமாட்டேன். அவை இயல்புகள்.
ஏதோ ஒரு இடத்தில் ஏசோப் (Aesop) என்ற ஒருவர், ஒரு கதையில் இதை சொல்லி யிருக்கிறார். ஒரு ஆற்றங்கரையில் ஒரு தேள், ஆமையிடம் “தயவுசெய்து,நீ உன் முதுகின் மேல் என்னை தூக்கிச் சென்று, அடுத்தக் கரையில் விட்டுவிடு” என்று பணிவாக கேட்டது. அதற்கு ஆமை “முட்டாள்தனமாக இருக்காதே! என்னை முட்டாள் என்று நினைக்காதே! நீ என்னை நடு ஆற்றில் கொட்டினால், நான் மூழ்கி செத்து விடுவேன்” என்றது. அதற்கு தேள் “நான் முட்டாள்தனமாக இல்லை, நீதான் முட்டாள் தனமாக இருக்கிறாய், ஏனெனில் உனக்கு இந்த சாதாரண நியாயம்(Logic) கூட தெரிய வில்லை, நான் அரிஸ்டாட்லின் (Aristotelian) பள்ளியைச் சார்ந்தவன், நான் ஒரு நியாயத்தை நிலைநிறுத்துபவன்! அதனால் நான் உனக்கு நியாயம் பற்றி ஒரு சாதாரண பாடம் நடத்துகிறேன். அப்படி நான் உன்னைக் கொட்டி, நீ மூழ்கி இறந்துபோனால் நானும் தான் உன்னுடன் சாகவேண்டும், அதனால் புத்திசாலியாகவும், நியாயமாகவும் இரு. நான் உன்னை கொட்டமாட்டேன் – என்னால் உன்னை கொட்ட முடியாது” என்றது.
அந்த ஆமை சற்றுநேரம் யோசித்துவிட்டு பின்பு “சரி! இது அர்த்தமுள்ளதாகத்தான் தெரிகிறது, என் மீது தத்திக் குதி, நாம் போகலாம்” என்றது. சரியாக நடு ஆற்றில் தேள் ஆமையைக் கொட்டியது. இருவருமே மூழ்கிக் கொண்டிருந்தார்கள். ஆமை இறப்பதற்கு முன்னால் “உன்னுடைய நியாயம் எங்கே போனது? நீ நியாயம் இல்லாத ஒன்றை செய்துவிட்டாய், அதுவும் நீயேதான், இதை ஒரு சாதாரண நியாயம், அதனால் அதை செய்யமாட்டேன் என்று சொன்னாய், ஆனால் இப்பொழுது செய்து விட்டாய்! நான் இறப்பதற்கு முன்னால் சொல்லிவிடு, நான் நியாயத்தின் இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்கிறேன்” என்றது.
அதற்கு அந்த தேள் “இது நியாயமா என்ற கேள்விக்கே இடமில்லை, இது என் னுடைய இயல்பு, இது இல்லாமல் என்னால் இருக்கமுடியாது, என்னால் இதைப்பற்றி பேசமுடியும், ஆனால் இதுவில்லாமல் என்னால் இருக்கமுடியாது, உண்மையாகவே எனக்கு அந்தத் தகுதியில்லை” என்றது.
உங்களுக்கு ஏதோ ஒன்றை செய்வதற்கு தகுதி இல்லையென்றாலோ, அல்லது செய்யாமல் இருக்க தகுதியில்லையென்றாலோ, அது உங்களுடைய இயல்பை சுட்டிக்காட்டுகிறது. நம்மால் அன்பு இல்லாத, கருணை இல்லாத ஒரு கடவுளை கற்பனையில்கூட நினைத்துப்பார்க்க முடியாது. அன்பு எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது, கருணை எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. நாம் அன்பு, கருணை என்று இரண்டு வார்த்தைகளாக, மொழியின் வரம்புக்குட்பட்டு உபயோ கிக்கிறோம், அல்லது ஒரு வார்த்தையே போதுமானது, நீங்கள் அதை அன்பு என்றோ அல்லது கருணை என்றோ அழைக்கலாம்.
நாம் இரண்டு வார்தைகளை உபயோகப்படுத்துகிறோம், ஏனெனில் அன்பிடம் நாம் எப்போதும் பதிலுக்கு எதையாவது எதிர்பார்க்கிறோம், ஆனால் கருணையிடம் அப்படியல்ல. எப்போதெல்லாம் நாம் மற்றவர்களிடம் அன்பாக இருக்கிறோமோ, அப்போதெல்லாம் பதிலுக்கு எதையாவது எதிர்பார்க்கிறோம். அது எவ்வளவு நுண்ணியதாக இருந்தாலும், அது ஒரு பேரம். சொன்னாலும், சொல்லப்படவில்லை யென்றாலும், தெரியவைத்தாலும், தெரியவைக்காமல் இருந்தாலும், அது ஒரு உள்ளார்ந்த பேரம்தான். ஏதோ பதிலுக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான் நாம் “அன்பு”, “கருணை” என்ற இரண்டு வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறோம். கருணையிடம் இருந்து எதுவும் பதிலுக்கு எதிர்பார்க்கப்படவில்லை, மேலும் கடவுள் நம்மிடமிருந்து பதிலுக்கு எதையும் எதிர்பார்ப்பதில்லை.
ஆனால் தெய்வீகத்தன்மையுடன் இருப்பவைகளுக்கு, அன்பு என்றாலும், கருணை என்றாலும், ஒன்றுதான். அவன் அன்பாக இருக்கிறான் என்றால், அதுவே அவன் கருணை. அவன் எப்போதும் கருணையுடன் இருக்கிறான் என்றால், அதுவே அவன் அன்பு. ஆனால் இவைகளெல்லாம் அவன்மேல் சுமத்தப்படக்கூடிய குணங்கள் அல்ல. இது அவனுடைய இயல்பு, அவனால் வேறுவிதமாக இருக்க இயலாது. ஆனாலும் நாம் பாகுபடுத்திப் பார்க்கிறோம், ஏனெனில் கருணை கிடைத்ததாக தெரியும் ஒருவர் தெய்வத்தின் அன்புக்குரியவராக இருக்கிறார். திரும்பவும் இதுவும் தவறாக வழி காட்டக்கூடிய ஒரு வாக்கியம். கடவுள் எப்போதும் அன்புதான், கடவுள் எப்பொழுதும் கருணைதான். ஆனால் நாம் அதை எப்போதும் பெற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
நாம் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவராக ஆகும் வரை, நம்மால் அதை பெற முடியாது. அதனால், எப்போது உங்களுக்கு தெய்வத்தின் கருணை கிடைக்கவில்லையோ, அப்போது அது தெய்வத்தின் பக்கத்திலிருக்கும் ஏதோ குறைபாட்டினால் அல்ல, ஆனால் நீங்கள் தடுக்கும் விதத்தில் எதையோ சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. நீங்கள் அதற்கு திறந்து இல்லை. நீங்கள் அதற்கு மென்மையாக இல்லை. கருணையுடன் இருப்பது கடவுளின் இயல்பு, அல்லது கருணையாகவே இருப்பது கடவுளின் இயல்பு. ஆனால் நம்மை பொறுத்தவரை, நாம் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவர்கள் அல்ல. நாம் இயல்பாக எதிர்க்கும் தன்மை உடையவர்கள். இவ்விரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.
மனம் எதிர்க்கும்தன்மை வாய்ந்ததாக இருந்தால், பின்பு அதுவால் ஏற்கும்தன்மை உடையதாக இருக்கமுடியாது. அதனால் எதிர்க்காத மனதினால்தான் ஏற்கமுடியும். அதனால் எதிர்க்கும்தன்மை வாய்ந்த, எந்த வகையான குணங்களை சுமந்து சென்றாலும், அதை கைவிட வேண்டும். மேலும் ஒருவர் கதவாக இருந்து பெற வேண்டும். கருப்பை போல், ஒருவர் முழுவதும் ஏற்பவராக இருக்கவேண்டும். பின்பு கருணை எப்பொழுதும் பொழிந்துக் கொண்டிருக்கும், அன்பு எப்பொழுதும் பொழிந்துக் கொண்டிருக்கும்.
எல்லாப் பக்கத்திலிருந்தும் கருணை பொழிந்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வினாடியிலும், எல்லா இடங்களிலும் கருணை பொழிந்துக் கொண்டிருக்கிறது. இது இப்பிரபஞ்சத்தின் இயல்பு. ஆனால் நாம் ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவராக இல்லை. இது மனதின் இயல்பு – மனம் எதிர்க்கும் தன்மை கொண்டது. தியானம் என்றால், எதிர்க்காமல், ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன் இருப்பது, திறந்திருப்பது. ஆனால் நியாயத்தால்( Logic) ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன் இருக்கமுடியாது; நியாயம் (Logic) எதிர்க்கும் தன்மையுடையது. நீங்கள் எதையாவது செய்தால், பின்பு உங்களால் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன் இருக்கமுடியாது. நீங்கள் எதுவும் செய்யாதபோதுதான், உங்களால் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன் இருக்கமுடியும்.
நீங்கள் எதையும் செய்வதாக நினைக்காத நிலையில் இருக்கும்போது, முழுமையாக, எதையும் செய்வதாக நினைக்காமல், சாதாரணமாக இருக்கும்போது, நீங்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் திறந்திருக்கிறீர்கள், பின்பு எல்லா இடத்திலிருந்தும் கருணையின் பொழிவு வரும். அது எப்போதும் வந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் நம்முடைய கதவுகள்தான் மூடியுள்ளது. நாம் எப்போதும் கருணையிடம் இருந்து தப்பித்துக் கொள்கிறோம். அது நம் கதவுகளைத் தட்டினால்கூட, நாம் தப்பித்துக் கொள்கிறோம்.
நாம் அதனிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கு காரணம் இருக்கிறது: மனம் பிறந்த வினாடியிலிருந்து, அது எப்போதும் தன்னை பாதுகாத்துக் கொள்கிறது. நம்முடைய பயிற்சி முழுவதும், நம்முடைய மொத்த கல்வி முறையும், நம்முடைய மொத்த மனிதப் பண்பாடும், எப்போதும் இப்படியேத்தான் இருக்கிறது. நம்முடைய மொத்த மனமும், நம்முடைய மொத்த பண்பாடும், எதிர்க்கும் தன்மை, போட்டி, சண்டையை அடிப்படையாகக் கொண்டது. நாம் ஒத்துழைப்பு என்ற இரகசியத்தை கற்றுக் கொள்ளும் அளவிற்கு முதிர்ச்சிப் பெறவில்லை – ஒத்துழைப்பினால்தான் இந்த உலகமே இருக்கிறது, சண்டையினால் அல்ல. மற்ற ஒன்று, அருகாமையில் இருக்கும் ஒன்று, வெறும் போட்டியிடுவதற்காக மட்டுமல்ல, ஆனால் ஒத்துழைத்து, பூர்த்தி செய்வதற்காக இருந்து, என்னை மேலும் வளமாக்குகிறது. மற்ற ஒருவன் இல்லாமல் நான் குறைவாகவே இருப்பேன். இந்த உலகத்தில் ஒரு தனிப்பட்ட மனிதன் இறந்தால்கூட, நான் சற்று குறைவாகத்தான் இருப்பேன். அவனால் உருவாக்கப்பட்ட வளம், அவனால் மண்டலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வளம், இனி இருக்காது. எங்கேயோ, ஏதோ ஒன்று காலியாகிவிட்டது. ஆகையால் நாம் சமாதான சக வாழ்வில் இருக்கிறோம், சண்டையில் அல்ல.
ஆனால் நம்முடைய மனம் மற்றும் சேர்க்கப்பட்ட நினைவில்லாத நிலை (Collective Unconsciousness) எப்போதும் சண்டைரீதியிலேயே நினைக்கிறது. எங்கெல்லாம் யாரேனும் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பகைவன் இருக்கிறான். பகைவன் என்பது அடிப்படை எண்ணம் (Assumption) நீங்கள் நட்பை வளர்த்துக்கொள்ளலாம், ஆனால் அதை வளர்க்க வேண்டும் – அடிப்படை எண்ணம் பகைவன் என்பதுதான். பகைவனுடன் நட்பை சேர்த்துக்கொள்ளலாம், ஆனால் அடித்தளம் பகைமையாக இருப்பதால், உங்களால் ஓய்வெடுக்க முடியாது.
அதனால்தான் உங்களால் நட்பை நம்ப முடியவில்லை, ஏனெனில் அடித்தளத்தில் பகைமை இருக்கிறது. நீங்கள் ஒரு போலியான நட்பைத்தான் வளர்த்துக் கொள்கிறீர்கள், செயற்கையாக எதையோ சேர்த்துக்கொள்கிறீர்கள், ஆனால் எங்கோ அடித்தளத்தில் பகைமை இருப்பது உங்களுக்குத் தெரியும் – மற்றவன் பகைவன். அதனால் நண்பரிடம்கூட உங்களால் இளைப்பாற முடியவில்லை, உங்கள் காதலர் காதலியிடம்கூட உங்களால் இளைப்பாற முடியவில்லை. எப்போதெல்லாம் யாராவது இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் நீங்கள் பதட்டமடைகிறீர்கள் – பகைவன் அங்கி ருக்கிறான். நீங்கள் நட்பு என்பதுபோல, ஒரு முன் தோற்றத்தை உருவாக்கி யிருந்தால், உங்கள் பதட்டம் சற்றுக் குறைந்திருக்கும், குறைவாக இருக்கும் – ஆனால் அது இருக்கும்.
இந்த மனப்பான்மை சில காரணங்களுக்காக வளர்க்கப்பட்டது – பரிணாம காரணங் களால். மனிதன் காட்டிலிருந்து வெளிவந்திருக்கிறான். இந்த முழு பரிணாம வளர்ச்சி, பல நிலைகளை பார்த்திருக்கிறது, பல மிருக நிலைகளையும்...... உடற்கூற்றுப்படியும், இது உடலுக்குத் தெரியும், ஏனெனில் உடல் உங்களுடையதல்ல. நான் “என் உடல்” என்று சொல்லும்போது, என்னால் உரிமைக்கொண்டாட முடியாத ஒன்றிற்கு உரிமைக் கொண்டாடுகிறேன். என்னுடைய உடல் பல நூற்றாண்டின் வளர்ச்சியினால் வந்தது. அடிப்படை செல் (Cell) வாரிசாக பெற்றது, என்னுடைய அடிப்படை செல் ( Cell) லில், எனக்கு முன்னால் இருந்த எல்லாவற்றையும் வாரிசாக பெற்று வந்திருக்கின்றேன். எல்லா மிருகங்கள், எல்லா மரங்கள், இதுவரை இருந்த எல்லாம், என்னுடைய அடிப்படை செல் (Cell) லுக்கு பங்காற்றியுள்ளது.
என்னுடைய அடிப்படை செல் (Cell) லில் சண்டை, போராட்டம், முரட்டுத்தனம், தாக்கும்தன்மை, என சேர்க்கப்பட்ட மொத்த அனுபவங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு செல் (Cell) லும் இதற்கு முன்னால் வரை இருந்த பரிணாம வளர்ச்சியின் போராட்டத்தை சுமந்துக்கொண்டு இருக்கிறது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் – உங்கள் மனம் வெறும் இந்த வாழ்க்கையில் தோன்றியதல்ல, அது நீண்ட பயணத்திற்குப் பிறகு உங்களிடம் வந்திருக்கிறது. அது உடலைவிட அதிகமாகக்கூட இருக்கலாம். ஏனெனில் இந்த உடல் இந்த பூமியில்தான் தோன்றியது, அதனால் நாற்பது மில்லியன் வருடங்களுக்கு மேல் இருக்காது. இதற்கு பூமியின் வயதைவிட அதிகமாக இருக்க முடியாது. ஆனால் முதல் மனம், வேறு ஒரு கிரகத்திலிருந்து வந்தது. அதனால் மனதிற்கு இன்னும் ஆழ்ந்த பரிணாம வளர்ச்சியின் அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவங்கள் உங்களை முரட்டுத்தனமாகவும், தாக்கும் தன்மையுடையவர்களாகவும் செய்கிறது.
இந்த முழு விஷயத்தைப் பற்றியும் ஒருவருக்கு தெரிந்திருக்கவேண்டும். ஒருவருக்கு தெரிந்தாலேத் தவிர, ஒருவனால் அவனுடைய கடந்தகாலத்திலிருந்து விடுபட முடியாது. மொத்தப் பிரச்சனையும், ஒருவன் தன்னுடைய கடந்த காலத்திலிருந்து விடுபடவேண்டும், ஆனால் இந்த கடந்த காலம் மிகப்பெரியது – அறியமுடியாத அளவிற்கு பெரியது. இதுவரை இருந்தவையெல்லாம் இன்னும் உங்களுடன் இருந்து வருகிறது. இதுவரை இருந்தவையெல்லாம் இன்னும் உங்களுள், விதையுள், நிகழக் கூடிய தன்மையுடன் இருக்கிறது. நீங்கள் கடந்த காலத்திலிருந்து வருகிறீர்கள், நீங்களே கடந்தகாலம்தான். இந்த கடந்தகால நோக்குடைய மனம், தாக்கும் தன்மையை உருவாக்கிக்கொண்டே போகிறது, தாக்கும் தன்மையின் ரீதியிலேயே நினைத்துக் கொண்டிருக்கிறது.
அதனால், மதம், ஏற்கும் தன்மையுடன், இருக்கச் சொன்னால், அந்த அறிவுரை கேட்கப்படாமல் போகிறது. மனதால் எப்படி ஏற்கும் தன்மையுடன் இருப்பது என்று நினைக்கக்கூட முடியவில்லை. மனதிற்கு ஒரே ஒரு விஷயம்தான் தெரியும், அந்த ஒரு விஷயத்தில்தான் அது ஏற்கும் தன்மையுடன் இருந்திருக்கிறது. அந்த ஒரு விஷயம் இறப்புதான், அதில் மனதால் ஒன்றுமே செய்யமுடியவில்லை, பின்னர் அதுவால் செயலாற்ற முடியவில்லை. ஏற்கும் தன்மையுடன் இருக்கவேண்டும் என்று அதற்கு ஒரு விஷயத்தை பொறுத்தமட்டில்தான் தெரியும், அது இறப்பு. அதனால் எப்போதெல்லாம் யாராவது “ஏற்கும்தன்மையுடன் இருங்கள்” என்று சொன்னால், எங்கோ நிழல்களில் இறப்பை உணர்கிறீர்கள். நான் “ஏற்கும் தன்மையுடன் இருங்கள்” என்று சொன்னால், மனம், “பின்பு நீ இறந்து விடுவாய், உனக்கு உயிருடன் இருந்து ஜீவிக்க வேண்டுமானால், முரட்டுத்தனமாக இரு, அதிக தகுதியுடையவர்கள்தான் ஜீவிக்கிறார்கள், அதிகமாக தாக்கும் உணர்வு இருப்பவர்கள்தான் ஜீவிக்கிறார்கள், நீ ஏற்கும் தன்மை மட்டும் வாய்ந்தவராக இருந்தால், நீ இறந்து விடுவாய்” என்று சொல்லும்.
அதனால் ஏற்கும் தன்மை ஒருபோதும் புரிந்துக்கொள்ளப்படவில்லை – கேட்கப் படவில்லை, புரிந்துக்கொள்ளப்படவுமில்லை. இந்த ஏற்கும்தன்மையைத்தான் பல வழிகளில் சொல்லியிருக்கிறார்கள். சிலர் அதை “சரணாகதி” என்கிறார்கள். சரணாகதி என்றால் ஏற்கும் தன்மையுடன் இருக்கவேண்டும் என்று அர்த்தம். சரணாகதி என்றால், தாக்கும் தன்மையுடன் இருக்கக்கூடாது என்று அர்த்தம். சிலர் “நன்றியுடன் இருங்கள்” என்கிறார்கள். இதுவும் ஏற்கும் தன்மையுடன் இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவதுதான். உங்களுடைய நியாயங்களின் (Logic) மூலம் தாக்கும் தன்மையுடன் இருக்கிறீர்கள். இப்பிரபஞ்சத்தை அது இருப்பதுபோலவே அப்படியே பெற்றுக்கொள்ளுங்கள், அது உள்ளே வரட்டும்.
மனதால் அன்பாக இருக்கமுடியாது, ஏனெனில் அன்பு என்றால் நீங்கள் மற்றவருடன் ஏற்கும் தன்மையுடன் இருக்கவேண்டும். ஆனால் நாம் அன்பில் கூட தாக்கும் தன்மையுடன் இருக்கிறோம். நீங்கள் ஒரு நண்பனிடம் கேட்டால், ` அவன் அன்பு என்பது, “ஒரு விதமான முரட்டுத்தனம் தான், இரண்டு கூட்டாளிகள் பரஸ்பரமாக, ஒருவரிடம் ஒருவர் முரட்டுத்தனமாக இருக்க சம்மதித்து சேர்வதுதான்” என்பான். ஒரு நண்பன் இவ்வாறு சொல்கிறான் என்றால் அவன் வெறும் அர்த்தமற்றத்தனமாக பேசவில்லை. அவன் அதை உணர்ந்துதான் கூறுகிறான். மேலும் அவனுக்கு ஏதோ தெரியும்.
எப்போதெல்லாம் நீங்கள் உடலுறவு கொள்கிறீர்களோ, எப்போதெல்லாம் நீங்கள் நெருக்கமான காதலில் இருக்கிறீர்களோ, இதைத் தொடரும் செய்கைகளெல்லாம் சண்டை போடுவது போலவே இருக்கும் – நீங்கள் சண்டை போடுகிறீர்கள். நமக்கு காதலாகத் தெரியும் எந்த செயலிலும் ஆழமாகச் சென்றால், நீங்கள் அதனுள் ஆழமாகச் சென்றால், நீங்கள் மிருகங்களின் வேர் உங்களிடம் இருப்பதை பார்ப்பீர்கள். முத்தமிடுதல், ஆழ்ந்து சென்றால் அது எந்த நேரமும் கடித்துக்கொள்ளுதலாக மாறலாம், அது கடித்துக் கொள்ளுதலாகத்தான் இருக்கும். இது ஒரு மனதின் வடிவம். சில நேரங்களில் காதலர்கள் “நான் உன்னைத் திண்ணவேண்டும்” என்று சொல்வார்கள் – மிக அன்பு நிறைந்த உணரிச்சியின் வெளிக்காட்டுதல்!. உண்மை யாகவும் அவர்கள் முயற்சிப்பார்கள். சில நேரங்களில், அது ஆழமாகச் சென்று, தீவிரமடைந்து, பின்பு உடலுறவு ஒரு சண்டையாகிவிடும் அவ்வளவுதான்.
அதனால் இரண்டு கூட்டாளிகள் (Partners) இரண்டு உடலுறவு வைத்துக்கொள்ளும் கூட்டாளிகள், எப்போதும் காதல், சண்டை என்று இவ்விரண்டுக்கிடையே மாறி மாறி போய்க்கொண்டிருப்பார்கள். மாலையில் அவர்கள் சண்டை போடுவார்கள், இரவில் அவர்கள் காதலிப்பார்கள்; காலையில் அவர்கள் சண்டை போடுவார்கள், மாலையில் காதலிப்பார்கள்..இரவில் சண்டை போடுவார்கள்..... இந்த சக்கரம் போய்க்கொண்டே இருக்கும் – சண்டை பின்பு காதல், சண்டை பின்பு காதல். நீங்கள் டி.எச்.லாரன்ஸ் (D.H. Lawrence) என்பவரைக் கேட்டால், அவர் “உங்களால் உங்கள் காதலர் காதலியுடன் சண்டை போடமுடியவில்லை என்றால், உங்களால் காதலிக்க முடியாது” என்பார். சண்டை காதலை நெருக்கமாக்கும். அது ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.
மனித மனம் இப்போது இருப்பது, கடந்த காலத்திலிருந்து வந்தது, அதுவால் அன்பாக இருக்கமுடியாது, ஏனெனில் அதுவால், ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன் இருக்க முடியாது. அதுவால் தாக்கும் தன்மையுடன்தான் இருக்கமுடியும். அதனால் நீங்கள் அன்பு இல்லாமல் இருக்கிறீர்கள் என்பதில்லை, நீங்கள் எப்போதும் அன்பை கட்டாயப்படுத்தி மற்றவர்களிடமிருந்து கேட்கிறீர்கள். அப்படியே நீங்கள் அன்பாக இருப்பதுபோல் நடித்தாலும், அது நீங்கள் மற்றவர்களின் அன்பை கட்டாயப்படுத்தி அமலுக்குக் கொண்டுவருவதற்குத்தான். இதில் தந்திரமிக்க நியாயம் (Logic) உள்ளது. அது எப்போதும் வற்புறுத்திக் கேட்பது, “அன்பை எனக்குக் கொடு”. நான் உங்களுக்கு அன்பைக் கொடுத்தால், அது உங்களிடம் வற்புறுத்திக் கேட்பதை இன்னும் கடின மாக்குவதற்குத்தான். மனித மனதால் அன்பாக இருக்கமுடியாது. அதனால் அன்பைப் பற்றி உண்மையாகத் தெரிந்தவர்களைக் கேட்டால், நீங்கள் புத்தரைக் கேட்டால், அவர் “மனம் இறந்தாலேயொழிய அன்பு பிறக்க முடியாது” என்பார். மேலும் உங்களுக்கு அன்பு இருந்தாலேயொழிய, உங்களால் கருணையை உணர முடியாது, ஏனெனில் அன்பில் மட்டும்தான் நீங்கள் திறந்துகொள்வீர்கள்.
மேலும் உங்களால் ஒரு குறிப்பிட்ட மனிதரிடம் மட்டும் அன்பாக இருக்கமுடியாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டும் திறந்திருந்து, மற்ற எல்லோரிடமும் மூடிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை, இது செய்ய முடியவே முடியாதவைகளில் ஒன்று.
“நான் உன்னிடம் அன்பாக இருக்கிறேன்” என்று நான் சொல்வது “எப்போதெல்லாம் நீ என் பக்கத்தில் இருக்கிறாயோ, அப்போதெல்லாம் நான் சுவாசிப்பேன், இல்லா விட்டால் நான் சுவாசிக்கமாட்டேன்” என்று சொல்வது போலாகும். இது உண்மையாக இருந்தால், பின்னர் அடுத்தமுறை நீங்கள் என்னிடம் வரும்போது, நான் இறந்தி ருப்பதை பார்ப்பீர்கள். சுவாசிப்பதை, நான் செய்யவோ, செய்யாமல் இருக்கவோ முடியாது. அன்பும் அதுபோல ஒன்றுதான். ஆனால் நமக்கு அன்பாகத் தெரியும் அன்பு, வேண்டுமானால் அன்பாக இருக்கவோ, அல்லது இல்லாமல் இருக்கவோ முடியும். அதனால்தான் இப்போதோ, அல்லது மற்றொரு சமயத்திலோ ஒரு காதலன் அல்லது காதலி மற்றொருவரின் காதல் இறந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இருவருக்கும் இது தெரியும். இருவருக்கும் இப்போது அன்பு இல்லை என்பது தெரியும்.
காதலர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் அதிகமாக தெரிந்துகொள்ளும் அளவிற்கு, அவர்களுக்கு துரதிஷ்டமான சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் அதிகமாக பழகும் அளவிற்கு, குறைவான நம்பிக்கையும், அதிகமான பொய்களும் தான் வெளிவருகிறது. அவர்களின் காதல் இறந்துவிட்டது என்று அவர்களுக்குத் தெரியும். நீங்கள் அதை குறுக்கி விட்டீர்கள். மிகக் குறுகிய பாதையை கட்டாயப் படுத்தியதால், அதுவால் உயிருடன் இருக்கமுடியவில்லை.
ஒருவர் அன்பு மிக்கவராக( Loving) இருக்கவேண்டும், அது ஒருவரிடம் மட்டும் காட்டும் அன்பல்ல( Lover). இந்த அன்பு தீவிரமாக, உண்மையான வடிவத்தில், எதுவும் சேர்க்கப்படாமல், எந்த குணங்களும் சுமத்தப்படாமல், அது உள்ளேயிருந்து மலரவேண்டும். அது இல்லாத ஒன்றின் மீது வாசனையை சேர்க்கப்பட்ட்டாக இருக்கக்கூடாது. இந்த அன்பு நிகழலாம். ஒருவருக்குத் தன்னுடைய மொத்த கடந்த காலத்தைப் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு உங்கள் மொத்த கடந்தகாலத்தைப் பற்றி தெரிந்த வினாடியிலிருந்து, நீங்கள் அதைத் தாண்டி செல்வீர்கள், அதற்கு மேல் கடந்து செல்வீர்கள், ஏனெனில் இப்போது தெரிந்து கொள்ளும் ஒன்று மனமல்ல(Mind) .
மனதை அறிந்துகொள்ளும் ஒன்றுதான் விழிப்புணர்வு(Consciousness) – இது தன்னுடன் கடந்தகாலத்தை சுமந்து வருவதில்லை, இது ஆதி அந்தம் இல்லாதது, இது எப்போதும் இப்பொழுதில்தான் இருக்கும், இது எப்போதும் புதியதாக இருக்கும், இது எப்போதும், இங்கே, இப்போது, என்றுதான் இருக்கும். நீங்கள் மனதை தெரிந்துக் கொள்ளும்போதுதான் உங்களுக்கு விழிப்புணர்வு தெரியவரும். பின்பு நீங்கள் உங்களை மனதுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளமாட்டீர்கள், உங்களுக்கும், உங்கள் மனதிற்கும், நடுவே இடைவெளி இருக்கும். உங்களுக்கு இதுதான் மனம் என்பது தெரியும் – இந்த எதிர்க்கும் தன்மை, இந்த வெறுப்பு, இந்த முழு நரகம்தான் மனம்(Mind).
இந்த மனம் தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறது. நீங்கள் மனதை தெரிந்துக் கொள்ளும் வரை அது தொடரும். இது ஒரு ஆச்சரியம்: நீங்கள் அறிந்துக்கொள்ளும் வினாடியிலிருந்து தொடர்ச்சி விட்டுப்போகிறது. இப்போது நீங்கள் இருப்பீர்கள் – ஆனால் கடந்தகாலத்துடன் தொடர்புடையவராக அல்ல – இப்போது நீங்கள் இந்த வினாடியினுடையதாக இருப்பீர்கள் – பொலிவாக (Fresh), இளமையாக, புதியதாக. இப்போது ஒவ்வொரு வினாடியும் நீங்கள் இறந்து, பின்பு திரும்பவும் பிறக்கிறீர்கள்.
எங்கோ ஓர் இடத்தில் செயின்ட் அகஸ்டின்(Saint Augustin) “நான் ஒவ்வொரு வினாடியும் இறப்பேன்” என்று சொல்கிறார். ஒருவர் தன்னுடைய முழு மனதைப் பற்றியும், அதனுடைய செயல்முறைகள் பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதன் தொடர்ச்சி – கடந்தகாலம் தொடர்ந்து வந்து, அது கூடவே இருந்து, பின்பு தன்னையே எதிர்காலத்திற்கு கட்டாயப்படுத்துவதும் ஒருவருக்குத் தெரியவேண்டும். எவர் ஒருவருக்கு இது தெரிந்திருக்கிறதோ, அவர் ஒவ்வொரு வினாடியும் இறப்பார். ஒவ்வொரு வினாடியிலும் கடந்தகாலம் தூக்கியெறியப்படும். பின்பு அவர் பொலிவு டன், புதியவராக, இளமையாக, வரவிருக்கும் புதிய வினாடிக்குள் குதிக்கத் தயாராக இருப்பார். இந்த புதிய விழிப்புணர்வு (Consciousness), இந்த இளமையான விழிப்புணர்வு – முடிவில்லாத இளமை – ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது, திறந்திருக்கிறது. அதற்கு எந்த சுவர்களும் கிடையாது, எந்த எல்லையும் கிடையாது. அது முழுவதும் விண்வெளியைப் போல் திறந்திருக்கும்.
இதை உபநிஷத்தில்(Upanishad) இதயத்துள் இருக்கும் விண்வெளி என்று அழைப்பார்கள். விண்வெளி, வெறும் விண்வெளியாக உள்ளது. அதுதான் விழிப்புணர்வு, சாக்ஷின்(Sakshin) – அறிந்துகொள்வதின் வெளிப்பாடு. நீங்கள் மனதையும், கடந்தகாலத்தையும் கடந்து செல்லுதல், உங்களை எல்லாப் பக்கத்திலிருந்தும், எல்லா கோணத்திலிருந்தும் திறந்து மென்மையாக்குகிறது. கருணை எல்லாப் பக்கங்களிலிருந்தும் உங்கள் மீது பொழிகிறது – மரங்களிலிருந்து, வானத்திலிருந்து, மனிதர்களிடமிருந்து, மிருகங்களிடமிருந்து, எல்லா இடங்களி லிருந்தும் – பின்பு ஒரு உயிரற்ற கல் கூட கருணையுடன் இருக்கும். கருணை உள்நோக்கி பொழிவதை நீங்கள் உணர்வீர்கள்.
பின்னர் இதை சாதாரணமாக பிரபஞ்சம் என்று சொல்லமுடியாது. பின்பு “இது கடவுள்” என்பீர்கள். இந்த உருவமாற்றம், குணமாற்றம், மனமாற்றம், இந்த இறந்த மனதிலிருந்து ஆதி அந்தம் இல்லாதிருக்கும் விழிப்புணர்வுக்கு மாறுவது, பழைய கழிக்கப்பட்ட மனதிலிருந்து, விழிப்புணர்வின் திறந்தவெளிக்கு மாறுவது....... இந்த மாற்றங்கள், உங்களுக்கு இப்பிரபஞ்சத்திடம் இருக்கும் மனப்பான்மையை மாற்றிவிடும். பின்பு முழு பிரபஞ்சமும் அன்பின் பொழிவுதான் – நட்புடையது, இரக்கம்கொண்டது, அன்புமிக்கது, கருணையுடையது. பின்பு நீங்கள் ஆயிரம் கைகளின் மூலம் அன்புக்குரியவராவீர்கள்.
அதனால் தான் இந்து மதத்தினர் ஆயிரம் கைகள் கொண்ட விக்ரகத்தை உருவாக்கி உள்ளனர். இதற்கு எல்லா இடத்திலும் கைகள் இருக்கின்றன, தெய்வத்தின் கைகள் உங்கள் தலைக்கு மேல் இல்லாத, ஒரு இடத்திற்கு உங்களால் போகவே முடியாது என்று அர்த்தம். எல்லா இடத்திலிருந்தும் தழுவல் இருக்கும். நீங்கள் எல்லா இடங்க ளுக்கும் போகலாம், இந்நிலையில் தெய்வம் இல்லாத இடம் ஒன்று இல்லவே இல்லை.
நானக்(Nanak) என்பவர் காபா (Kaaba) விற்கு சென்றார். அவர் மசூதிக்கு சென்றடைவதற்குள் களைப்படைந்தார், அவர் தன் கையில் இருந்த ஒரு சிறு மூட்டையை, அதில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே கீழேபோட்டுவிட்டு உறங்கிவிட்டார். அந்த மதகுரு மிகக் கோபம் கொண்டார், ஏனெனில் நான்க்(Nanak) ன் கால்கள் அந்த புனிதக் கல்லை நோக்கியிருந்தது. அதனால் அவரை இழுத்து வெளியில் போட்டுவிட்டு “என்ன முட்டாள்தனம் இங்கே செய்கிறாய்? உன் கால்கள் புனிதக்கல்லை நோக்கியிருக்கக்கூடாது என்ற அளவிற்குக்கூட உனக்கு மரியாதை தெரியாதா? நீ கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?” என்றுக்கேட்டார். இவ்வாறு கேட்டதில் நானக்( Nanak) ன் தூக்கம் கலைந்தது, அவர் எழுந்து உட்கார்ந்தார். பின்பு மதகுருவை பார்த்து “கடவுள் இல்லாத இடத்தை நோக்கி என் கால்களை போடு, என்னைத் தொந்தரவு செய்யாதே” என்று சொன்னார்.
கடவுள் இல்லாத திசையே இல்லை, ஏனெனில் திசையே தெய்வம்தான், இப்பிரபஞ்சமே தெய்வம்தான், ஆனால் நீங்கள் அதற்குத் திறந்திருக்கவேண்டும்.
மனம் மூடியிருப்பதினால்தான், இந்த முழு சோகமுடிவும், இந்த மனிதனுடைய இக்கட்டான, நிலையும் ஏற்படுகிறது. மனம் மூடியிருந்துக்கொண்டு, சுதந்திரமான ஒன்றுக்கு தேடிக்கொண்டேயிருக்கிறது. மனம்தான் சிறை, இந்த சிறை விடுதலையை தேடிக்கொண்டேயிருக்கிறது. இதுதான் மனித இனத்தினுடைய, சோக முடிவுக்கான காரணம்.
மனம்தான் சிறை, அதுவால் சுதந்திரத்தை எங்கிருந்தும் கண்டறிய முடியாது. சுதந்திரம் உங்களிடம் வருவதற்கு முன்னால், அது மரணமடையவேண்டும். ஆனால் நாம் மனதுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டு, இதுதான் நாம் என்று நினைக்கிறோம். மனம் மரணமடைவதால், நமக்கு ஒன்றும் ஆகாது, அது நமக்கு தோன்றவே செய்யாது. மனம் என்பது நம்மிடமிருந்து வேறுபட்டது, ஆனால் நாம் மனதுடன் நம்மை ஐக்கியப்படுத்திக்கொண்டேயிருக்கிறோம்.
நீங்கள் கடந்தகாலத்துடன் உங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தால், உங்களால் எப்படி கடந்த காலத்திலிருந்து வெளிவர முடியும்? எவன் ஒருவன் தான் கைதி என்பதை மறந்து விட்டானோ, அவன்தான் அதிகமாக சிறை வாசத்தில் இருக்க வேண்டும், ஏனெனில் பின்பு அவனுக்கு விடுதலைக்கான வாய்ப்பே இல்லை. இவ்வாறு மறந்துபோன கைதிக்கு கூட விடுதலை பெற வாய்ப்பிருக்கிறது, ஏனெனில் அவர்கூட தெரிந்துகொள்ளலாம், ஆனால் இதைவிட பெரிய கைதியாக இருப்பவர் யாரென்றால், யார் ஒருவர் சிறைவாசத்துடன் ஒன்றாகி, சிறையுடன் ஒன்றாகி, அதனுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டு, சிறையின் சுவற்றை அவனுடைய உடலாகவும், சிறைவாசத்தின் மற்ற ஏற்பாடுகளை, அவனுடைய மனதாகவும், ஏற்றுக்கொண்டு இருப்பவன்.
தெரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய மனதை பற்றி அறிந்துகொள்ளுங்கள் – உங்களால் இருக்கமுடியும், ஏனெனில் நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர். கனவு கலைக்கப்படலாம், ஏனெனில் நீங்கள் கனவல்ல, கனவு உங்களுக்குத் தோன்றுகிறது, ஆனால் நீங்கள் கனவல்ல. நீங்கள் சிறைவாசத்தை உடைத்தெறிந்து விட்டு வெளியில் வரலாம். ஏனெனில் நீங்கள் சிறைவாசமல்ல. ஆனால் உடலோடும், மனதோடும், நமக்கு நீண்டகாலத் தொடர்பு இருக்கிறது.
இதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்: உடல் புதியது, ஒவ்வொரு பிறப்பும் புதியது, ஒவ்வொரு ஆரம்பமும் புதியது, ஆனால் மனம் பழையது. அது உங்கள் முந்தினப் பிறவிகளிலிருந்து தொடர்ந்து வருகிறது. அதனால்தான் யாராவது உங்களிடம், உங்கள் உடல்நலம் கெட்டுள்ளது என்று சொன்னால், நீங்கள் கோபமடைவதில்லை, மேலும் அவர், உங்களிடம் இரக்கத்துடன் இருப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் யாராவது உங்களிடம், உங்கள் மனநலம் கெட்டுள்ளது, உங்கள் மனம் சரியில்லை, என்று சொன்னால் நீங்கள் மனரீதியாக தாறுமாறாகி, கோபமடைகிறீர்கள். பின்பு அவரை இரக்கத்துடன் இருப்பவராக நினைப்பதில்லை. அவன் நட்புக்குரியவனாகவே நினைப்பதில்லை.
உடலுடன் இது ஒரு புதிய தொடர்பு, இந்த பிறவியில்தான். இதற்கு முன்னால் நீங்கள் தொடர்புக்கொண்டிருந்த உடல்கள் எல்லாம் இறந்து விட்டன. இம்மாதிரி உடலோடு கொள்ளும் தொடர்பு ஒவ்வொரு பிறவியிலும் அறுந்துவிடும். இதுபோல பலதடவைகள் அறுந்திருக்கிறது. ஒருவர் தன்னுடைய உடல்தான் அவர், என்று நினைத்தால்கூட, அவர் தன் உடலுடன் ஐக்கியப்படுத்திக்கொள்வதில்லை. அதனால், அவர் உடலுக்கு நோய் வந்தால் எதற்கோ நோய் வந்ததுபோல் இருக்கிறார்.
நான் ஒரு மது அருந்துபவரின் வாழ்க்கையைப் பற்றி படித்துக்கொண்டிருந்தேன். அவனுக்கு பல முறைகள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது... பத்தாவது முறையாக அதே நீதிபதி அவனை சிறைக்கு அனுப்பினார். அதனால் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், “மதுதான், மது மட்டும்தான் உன்னுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்” என்றார். அந்த நபர் நீதிபதியைப் பார்த்து “நன்றி ஐயா, நீங்கள் ஒருவர்தான் என்னை பொறுப்பாளி ஆக்கவில்லை, மற்ற எல்லோரும் நான்தான் தவறு செய் கிறேன், என்று சொல்கிறார்கள், நீங்கள் மட்டும்தான் மதுதான் காரணம் என்பதை புரிந்துக்கொண்டுள்ளீர்கள், நான் இதற்குக் காரணம் இல்லவே இல்லை” என்றான்.
உடலில் ஏதாவது கோளாறு இருந்தால், நீங்கள்தான் அதற்குப் பொறுப்பு என்று நினைப்பதில்லை. ஆனால் மனதில் ஏதாவது கோளாறு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதற்கு நீங்கள்தான் காரணம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் மனதுடன் ஐக்கியமாகியுள்ளது தெளிவாக, ஆழமாகத் தெரியும். இது இப்படித்தான் இருக்கும், ஏனெனில் உங்கள் மெய்யிருப்பின்(Being) வெளிப்பாகம்தான் உடல், உள்பாகம் மனம். மனம் உங்களுடைய உள்ளார்ந்த நீங்கள், அதனால் நீங்கள் அத்துடன் அதிகமாக ஐக்கியப்படுத்திக்கொள்ளலாம். பல பிறவிகளில், பல வாழ்க்கையில், அது உங்களுடன் இருக்கிறது. மனம் பழையது, எப்பொழுதும் பழையது, தொடர்ந்து வருவது. ஆனால் நீங்கள் மனமல்ல. இதைத் தெரிந்துக்கொள்ளலாம், இதை தெரிந்துக்கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை.
வெறும் சாட்சியாக இருங்கள். எப்போதெல்லாம் மனம் வேலை செய்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு, அது எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள். அதில் தலையிடாதீர்கள், அதனுள்ளே செல்லாதீர்கள், உள்ளே வருவது, அதற்கு பலத்தை உருவாக்கும், ஐக்கியப்படுத்திக் கொள்ளும். உள்ளே வராதீர்கள், எதுவும் சொல்லாதீர்கள், நீதிபதியாக இருக்காதீர்கள், சாலையில் போக்குவரத்து கடந்து செல்கிறது, நீங்கள் சாலை ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். எந்த தீர்ப்பும் வழங்காதீர்கள். உங்களால் ஒரு வினாடிக்கு, ஓரத்தில் உட்கார்ந்துக்கொண்டு, மனதில் ஓடிக்கொண்டிருக்கும் போக்குவரத்தை, தொடர்ச்சியான போக்குவரத்துகளை பார்க்க முடிந்தால்கூட, உங்களால் ஒரு இடைவெளியை பார்க்க முடியும் – உங்களுக்கும் மனதிற்கும் நடுவே உள்ள இடைவெளி. பின்பு இந்த இடைவெளியைப் பெரிதாக, அகலமாக, பாலம் அமைக்க முடியாத அளவிற்கு செய்துகொள்ளலாம்.
இவ்வாறான இடைவெளி இருக்கும்போது, இவ்வாறான இடைக்காலம் இருக்கும்போது, பின்பு பாலம் இருக்காது. மனதின் வட்டம் நீங்கள் இருக்கும் இடத்தைத் தவிர்த்து வேறு இடத்தில்தான் இருக்கும் என்பதை, உங்களால் முடிந்தவரை, எல்லா முனைகளிலிருந்தும் பார்த்துவிட்டீர்கள். நீங்கள் எங்கோ உள்ளே வேறு ஒரு இடத்தில் இருக்கிறீர்கள். இது ஒரு கூற்றாக இல்லாமல், அறிந்த உண்மையாக இருந்தால், பின்பு நீங்கள் திறந்திருக்கிறீர்கள். பின்னர் நீங்கள் உள் விண்வெளியில், உள் வானத்தில், இதயத்துள் இருக்கும் விண்வெளியில் குதித்து விட்டீர்கள். நீங்கள் உள்ளே குதித்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் அங்கிருக்கிறீர்கள், மேலும் திறந்தும் இருக்கிறீர்கள்.
பின்பு உங்களுக்கு நீங்கள் எப்பொழுதுமே திறந்துதான் இருந்திருக்கிறீர்கள் என்பது தெரியவரும். நீங்கள் திறந்தவெளியில் தூங்கிக்கொண்டு, சிறையில் இருப்பதாக கனவு கண்டுக்கொண்டு இருந்தீர்கள் – சிந்தனை, கனவைத் தவிர வேறு எந்த பொருள்களாலும் ஆனதல்ல. அவைகள் ஒரே சாமான்களால் ஆனதுதான். பகல் நேரத்தில் அவற்றை சிந்தனை என்கிறோம், இரவு நேரத்தில் அவற்றை கனவு என்கிறோம். சிந்தனைகள் தெளிவாக ஊடுருவக்கூடியதால்( Transparent) நாம் அதனை சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்கிறோம். தெளிவாக ஊடுருவக்கூடியவைகளை, அது இருக்கிறது என்பதையே நீங்கள் மறந்து விடலாம். முழுவதையும் எளிதில் பார்க்கத்தக்க கண்ணாடி, நம் இருவருக்கிடையே இருந்தால், நாம் கண்ணாடி இருப்பதை மறந்துவிடலாம். நான் உங்களை நேராக பார்க்கிறேன் என்று நினைத்துக்கொள்வேன். இதற்கு என்ன அர்த்தம் என்றால், நான் முழுவதும் கண்ணாடியுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டு, கண்ணாடி இருப்பதாகவே நினைக்கவில்லை. என்னுடைய கண்களும், கண்ணாடியும் ஒன்றாகிவிட்டது என்று அர்த்தம்.
சிந்தனைகள் ஊடுருவக்கூடியது, இது எந்தத் தெளிவாக பார்க்கக்கூடிய கண்ணாடியை விடவும், இன்னும் தெளிவாகப் பார்க்கக்கூடியது. அவைகள் ஒரு தடையாக இல்லவே இல்லை. அதனால்தான் ஐக்கியப்படுத்திக்கொள்வது ஆழமாகிறது. சிந்தனைகளில் ஊடுருவக்கூடிய தன்மை, உங்கள் மிக அருகாமையில் இருப்பதினால், மனம் என்ற ஒன்று உங்களை சுற்றியே, எப்பொழுதும் இருந்துக்கொண்டிருக்கிறது என்பதையும், அது உங்களுக்கும், இவ்வுலகத்திற்கும் நடுவில் இருக்கிறது என்பதையும், நீங்கள் முழுவதும் மறந்துவிட்டீர்கள். எப்போதும், எங்கெல்லாம் நீங்கள் இருக்கிறீர்களோ – உங்களுக்கும், உங்கள் காதலர் காதலிக்கும் நடுவில், உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் நடுவில், மனம் இருந்துகொண்டே இருக்கிறது.
நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் மனம், ஒரு அடி உங்களுக்கு முன்னால் செல்கிறது, அது உங்களுக்கு முன்னால் போய் சேருகிறது. ஆனால் அதனுடைய ஊடுருவும் தன்மையினால் உங்களுக்கு அது தெரியவில்லை.
எப்போதெல்லாம் நீங்கள் கோவிலுக்குள் நுழைகிறீர்களோ, அப்போதெல்லாம் உங்கள் மனம் உங்களுக்கு முன்னால் நுழைந்துவிடுகிறது. நீங்கள் ஒரு நண்பரிடம் சென்றால், நீங்கள் அவரை தழுவிக்கொள்கிறீர்கள், ஆனால் உங்கள் மனம் உங்களுக்கு முன்பே தழுவிவிட்டது. இது உங்களுக்குத் தெரியலாம், உங்கள் மனம் எப்போதும் ஒத்திகை பார்க்கிறது. அவ்வாறு ஒரு அடி முன்னால் வைப்பது, என்பது, ஒத்திகை பார்ப்பதாகும். நீங்கள் பேசுவதற்கு முன்னால், என்ன பேசுவது என்று அது எப்போதும் ஒத்திகை பார்க்கிறது. நீங்கள் ஒன்றை செய்வதற்கு முன்போ, அல்லது செய்யாமல் இருப்பதற்கு முன்போ, அது ஒத்திகை பார்க்கிறது. ஒத்திகை என்றால், மனம் உங்களுக்கு முன்னால், அது தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறது என்று அர்த்தம். அது எப்போதும் ஒரு அடி முன்னால் இருக்கிறது. இது நிரந்தரமான ஊடுருவக்கூடிய பொருளால் ஆன தடையாக, உங்களுக்கும், மற்ற எல்லாவற்றிற்கும், எதை சந்தித்தாலும், எதை நீங்கள் நேருக்குநேர் பார்த்தாலும், அதற்கு நடுவே மனம் இருக்கிறது.
அதனால் எதிரே நேருக்குநேர் சந்திப்பது உண்மையானதாக, சொந்த அனுபவமாக இருக்கமுடியாது, ஏனெனில், ஏதோ ஒன்று நடுவே இருந்துக்கொண்டிருக்கிறது. உங்களால் அன்பாகவும் இருக்கமுடியாது, பிரார்த்தனை செய்யவும் முடியாது. இந்த தடையை அகற்றுவது அவசியமாக இருக்கும், எதையும் உங்களால் செய்யமுடியாது.
உங்களால் கருணையை உணர முடியவில்லை, ஏனெனில் உங்களைச் சுற்றி ஊடுருவிச் செல்லத்தக்க ஓடு ஒன்று தடையாக உள்ளது. கருணை, அன்பு, இப்பிரபஞ்சம், இவையெல்லாம் கடவுளின் குணங்களல்ல. அவையெல்லாம் தெய்வத்தின் இயல்புகள். ஆனால் நாம் அதற்குத் திறந்து இல்லை. எப்போது ஒருவர் திறந்து இருக்கிறாரோ, அப்போது அவர் ஏற்றுக்கொள்பவராகிறார்.
“நான் என்ற அகந்தை” போட்டியிடும் தன்மை கொண்டது. நாம் அவன் கடவுளின் அருளைப் பெற்றவன் என்று சொல்கிறோம். நாம் எல்லாவற்றையும் அவனுக்கு மறுக்கிறோம். இப்போது நாம் “கடவுள் அவனிடம் கருணைக்கொண்டவராகி விட்டார்” என்று சொல்லுவோம்.
கடவுள் கருணையாக இருப்பவர் என்று நாம் சொல்வதுதான் சரி, ஏனெனில் இப்போது கடவுளைத்தவிர வேறு எதுவும் இருப்பதில்லை. ஒருமுறை அந்த தடை அகற்றப்பட்டுவிட்டால், “நான் என்ற அகந்தை” யால் அதற்கு மேலும் நிற்கமுடியாது. ஒருவனால் “நான்” என்று சொல்லமுடியாது. அதனால், அவனால் “நான் அருளைப் பெறுவதற்குத் தகுதியானவனாகிவிட்டேன்” என்று சொல்லமுடியாது. அவனால், நான் பெற்றதின் காரணம், நான் என்பது இல்லாததுதான் என்றுதான் சொல்லமுடியும். “நான்” தான் தடையாக இருந்தது. அதனால் “நான்” இல்லாதபோது “இதுக் கடவுளின் கருணைதான். என்னால் என்ன செய்யமுடியும்?” என்றுதான் எப்போதும் சொல்ல முடியும். “நான்” என்பது இனி இல்லை.
அவன் அப்படி சொல்வது சரிதான், ஆனால் நாம் அப்படி சொல்வது சரியில்லை. நாம் திரும்பவும் நம்மை ஏமாற்றிக்கொள்கிறோம், ஏனெனில் நம்மால் மாபெரும் மாற்றத்தை அடையாளம் காணமுடியவில்லை. “நான் என்ற அகந்தை” நம்மை அடையாளம் காண விடாது. “கடவுள் அவனிடம் கருணையாக இருக்கிறார், ஆனால் என்னிடம் அவ்வாறு இல்லை”என்று “நான் என்ற அகந்தை” கூறும். கடவுள் மற்றொருவரிடம் கருணையுடன் இருக்கிறார் என்று சொல்வதின்மூலம், நாம் தவறாக வழிகாட்டக்கூடிய கருத்தை உருவாக்குகிறோம். கடவுளே கருணைதான்.
யாரேனும் ஒருவர் பெற்றுக்கொள்ள தயாராகயிருந்தால், அவர் எப்போதும் தருவதற்குத் தயாராகயிருக்கிறார். அவர் தருவதற்குத் தயாராகயிருக்கிறார் என்பதுகூட இல்லை – அவர் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். நீங்கள் பெறவில்லை என்றாலும்கூட, அவர் கொடுத்துக்கொண்டேதானிருக்கிறார். நீங்கள் மூடிக் கொண்டிருந்தாலும்கூட அவர் பொழிந்துக்கொண்டேயிருப்பார். அவருடைய அருள் பொழிந்துக்கொண்டே தான் இருக்கும். திறந்து இருந்து அதைத் தெரிந்துக் கொள்ளுங்கள், விழிப்புடன் இருங்கள், திறந்திருங்கள், அப்போதுதான் உங்களுக்கு அன்பு என்றால் என்ன? கருணை என்றால் என்ன? இரக்கம் என்றால் என்ன? என்பதெல்லாம் தெரியும். மேலும் அவை அனைத்தும் ஒன்றேதான். அப்போதுதான் உங்களால் பிரார்த்தனை என்றால் என்னவென்று தெரியும். தடை எதுவும் இல்லாதபோது, பின்பு பிரார்த்தனை என்பது, எதையாவது கேட்பதற்காக அல்ல, அது பிச்சை எடுப்பது அல்ல – பின்பு அது நன்றி சொல்வதாகும். அதனால் எதற்காவது பிச்சை எடுக்கும் பிரார்த்தனை இருந்தால், தடையிருக்கிறது என்று அர்த்தம். பிச்சை எடுப்பதும் ஒரு தடை, மனமும் ஒரு தடை.
எப்போதெல்லாம், எதற்காவது நன்றி சொல்லும் வகையில் பிரார்த்தனை இருக்கிறதோ, எதற்காவது என்பதுகூட அல்ல, இருப்பவை எல்லாவற்றிற்கும்..... எப்போதெல்லாம் கருணைப் பெற்றுக்கொள்ளப்படுகிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் நன்றி உணர்வுடன் இருப்பீர்கள். இது கடவுளின் பக்கத்திலிருந்து கருணை, இது பெற்றுக்கொண்டவரின் பக்கத்திலிருந்து பார்க்கும்போது நன்றியுணர்வு.
நமக்கு நன்றியுணர்வு என்பது தெரியாத ஒன்று. நமக்குக் கருணையைத் தெரிந்தாலேயொழிய அது தெரியாது. நமக்குக் கருணையைத் தெரிந்தாலேயொழிய நன்றியுணர்வைத் தெரியாது. ஆனால் இது தெரியக்கூடிய ஒன்றுதான்.
தெய்வத்திற்கான தேடலை ஆரம்பிக்காதீர்கள், விசாரணையை ஆரம்பிக்காதீர்கள், ஏனெனில் அது வேதாந்தம்(Metaphysics). அது பயனற்றது. கடவுளின் குணங்களைப் பற்றி பல நூற்றாண்டுகளாக வேதாந்திகள் நினைப்பது போய்க்கொண்டேயிருக்கிறது. வேதாந்தத்தை அறிபவர்களும் இருந்திருக்கிறார்கள், அவர்கள் “இது கடவுளின் குணம், இது கடவுளின் குணமல்ல” என்று சொல்வார்கள். சிலர் அவருக்கு குணமில்லை என்றும் – நிற்குணா(Nirguna) சிலர் அவருக்கு குணங்கள் இருக்கின்றன என்றும் -சுகுணா(Suguna) என்றும் சொல்வார்கள். நாமே தெரிந்துக்கொள்ளாத ஒன்றைப்பற்றி எப்படி தெரிந்துக்கொள்வது. கடவுள் குணத்துடன் இருக்கிறாரா, அல்லது குணம் இல்லாமல் இருக்கிறாரா, அவர் அன்புடன் இருக்கிறாரா, இல்லையா? என்பதைப் பற்றியெல்லாம் நாம் எப்படி முடிவெடுக்கமுடியும். அதைப்பற்றி நினைப்பதினால் மட்டும், நாம் அதைப்பற்றி முடிவெடுக்கப் போவதில்லை. அது சாத்தியமில்லை.
அதனால் வேதாந்தம் நம்மை பைத்தியக்காரத்தனத்திற்கு வழிநடத்திச் செல்லும். மனித கற்பனைகள் எல்லாம் நியாயமாகும்போது, பின்பு நாம் எதையோ சாதித்து விட்டதாக நினைக்கிறோம். நாம் எதையும் சாதிக்கவில்லை, கற்பனையும் நம்முடையதுதான், நியாயமும் நம்முடையதுதான். நாம் எதையும் தெரிந்துகொள்ளவில்லை.
வேதாந்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமானால், நீங்கள் எப்போதும் உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள். உங்களால் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாவிட்டால், உங்களால் ஆன்மீகத்துடன் இருக்கமுடியாது. ஆன்மீகமும், வேதாந்தமும், நேர் எதிர்மறையான தூண்கள். கடவுளிலிருந்து ஆரம்பிக்காதீர்கள். எப்போதும் உங்கள் மனதிலிருந்து ஆரம்பியுங்கள் – நீங்கள் இருக்கும் இடம். எப்போதும் அங்கிருந்தே ஆரம்பியுங்கள். நீங்கள் மனதிலிருந்து ஆரம்பித்தால், பின்பு ஏதாவது செய்யமுடியும், உங்களால் எதையாவது தெரிந்துக் கொள்ள முடியும். பின்பு எதையாவது மாற்றிக் கொள்ளலாம். பின்பு ஏதாவது செய்வது உங்கள் திறமையினுள் அடங்கியிருக்கும். உங்கள் திறமை உங்களுக்கே ஏதாவது செய்ய முழுமையாக பயன்பட்டால், பின்பு நீங்கள் வளர்வீர்கள். நீங்கள் விரிவடைவீர்கள், உங்களுடையத் தடைகள் போய்விடும், உங்கள் விழிப்புணர்வு மறைக்கப்படாமல் இருக்கும். அப்போதுதான் உங்களால் கடவுளிலிருந்து ஆரம்பிக்க முடியும்.
நீங்கள் ஆரம்பித்துவிட்டப்பிறகு, நீங்கள் தெய்வத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும்போது, பின்பு உங்களுக்கு கருணை என்றால் என்ன?, நன்றியுணர்வு என்றால் என்ன?, என்பது தெரியவரும். கருணை எல்லா இடங்களிலிருந்தும் உங்கள்மீது பொழிவதை உணர்வீர்கள், நன்றியுணர்வு என்பதை நீங்கள் உங்கள் இதயத்தினுள் விண்வெளியாக இருப்பதில், எங்கே அன்பு, இரக்கம், கருணை எல்லாம் பொழிந்துக் கொண்டிருக்கிறதோ, அங்கே அதற்கு நடுவில் நீங்கள் உணர்வீர்கள். அப்போதுதான் “கடவுளே!” அல்லது “ஹரே ராம்!” என்று சொல்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால், நம் வார்த்தைகளெல்லாம் வெறும் வார்த்தைகளாகத்தான் இருக்கும் – இப்பிரபஞ்சத்திடமிருந்து தெரிந்துக் கொண்டதாக இருக்காது, ஆனால் அதை மொழியிலிருந்தும், வேத நூல்களிலிருந்தும், கற்றுக்கொண்டதாகத் தான் இருக்கும்.
அதனால் கடவுளின் குணங்கள் என்ன என்பதை நான் சொல்லமாட்டேன். என்னைப் பொறுத்தவரை, எனக்குத் தெரிந்தவரை, கடவுளுக்கு எந்தக் குணமும் கிடையாது. இதனால் நாம் அவருடன் தொடர்பு வைத்திருக்கும்போது, அவருடைய அன்பை உணரமாட்டோம் என்றோ, அவருடைய கருணையை உணரமாட்டோம் என்றோ, அர்த்தமில்லை. இதனால் அர்த்தமாவது என்னவென்றால், இவைகள் எல்லாம் அவருடைய குணங்கள் அல்ல, இவைகள் அவருடைய இயல்புகள். அவர் இப்படித் தான் நிகழ்கிறார், வேறு எப்படியும் இருக்கமுடியாது. நீங்கள் அவருடன் மூடிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் அவரிடம் திரும்பிக் கொடுத்தாலும், அப்போதும் அவர் அதேபோல்தான் இருக்கிறார்.
இது வெளிச்சத்தைப் போலத்தான் – உங்கள் கண்கள் மூடியிருக்கிறது, ஆனால் வெளிச்சம் இன்னும் அங்கு இருக்கிறது. அது உங்கள் கண்கள் மூடிக் கொண்டி ருக்கிறது என்பதற்காக, அது இப்பிரபஞ்சத்தை விட்டு வெளியேப் போகாது. உங்கள் கண்களைத் திறந்துக் கொள்ளுங்கள்! வெளிச்சம் அங்கேயிருக்கிறது, அது அங்கேயேத்தான் எப்போதும் இருக்கிறது. உங்கள் கண்களிலிருந்து ஆரம்பியுங்கள்.
உங்களால் வெளிச்சத்தைப் பற்றி ஒன்றுமே நினைக்கமுடியாது, எப்படி உங்களால் நினைக்கமுடியும்? எந்த சிந்தனையும், எந்த மாதிரியான மனதில் திட்டமிடுதலும் தவறானதாக இருக்கும்; ஆரம்பத்திலிருந்தே அது தவறாக இருக்கும். உங்களால் சிந்திக்க முடியாது, நீங்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை.
தெரிந்ததைப்பற்றி சிந்திப்பது வட்டத்தில் போய்க்கொண்டேயிருக்கும். அதுவால் தெரியாததை (Unknown) தொடவே முடியாது, அதுவால் தெரியாததைப் பற்றி கற்பனைக்கூட செய்துபார்க்க முடியாது. தெரியாதது (Unknown) சிந்திப்பதற்காக அல்ல. அதனால்தான் சிந்தனையாளர்கள் கடவுளை மறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவரைத் தெரியாது. யாராவது ஒருவன் கடவுள் இல்லை என்று சொன்னால், அவன் கடவுளுக்கு எதிராக இருக்கிறான் என்பதில்லை, அவன் அதிகமாக சிந்திப்பவன் என்று அர்த்தமேத் தவிர, வேறொன்றுமில்லை. அவன் கடவுளுக்கு எதிராக இல்லை, ஏனெனில் கடவுளுக்கு எதிராக இருப்பதற்கு, அதற்கு முன் கடவுளைத் தெரிந்துக் கொண்டிருக்கவேண்டும். அவன் கடவுளுக்கு எதிராக இல்லை. யார் ஒருவருக்குத் தெரியுமோ, அவரால் எதிராக இருக்கமுடியாது. யார் ஒருவருக்குத் தெரிந்திருக்கிறதோ – அவரால் எப்படி எதிராக இருக்கமுடியும்? இது அவன் சிந்தித்துக்கொண்டேதான் இருக்கிறான் என்பதைக் காண்பிக்கிறது. மேலும் சிந்தனையினால், தெரியாததைப்பற்றி கற்பனைக்கூட செய்துபார்க்க முடியாது, அதனால் அவன் அதை மறுக்கிறான்.
கடவுளிலிருந்து ஆரம்பிக்காதீர்கள். அது பொய்யான ஒரு ஆரம்பம். அது எப்போதும் அர்த்தமற்றவைகளுக்கு வழிநடத்திச் செல்லும். வேதாந்தம் அர்த்தமற்றது. அது எதுவும் நினைக்கமுடியாத விஷயங்களைப் பற்றி நினைத்துக்கொண்டேயிருக்கிறது. பிரபஞ்சம் என்பதைப் பற்றி எந்த வாக்குமூலமும் கொடுக்கமுடியாது, ஆனால் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றி வாக்குமூலம் கொடுத்துக்கொண்டே போகிறது. மௌனம் தான் அதைப்பற்றிக் கொடுக்க முடிந்த ஒரே வாக்குமூலம்.
ஆனால் நீங்கள் உங்களிடமிருந்து ஆரம்பித்தால், பின்பு உறுதியானவற்றை சொல்ல முடியும். நீங்கள் உங்களிடமிருந்து ஆரம்பித்தால், பின்பு ஆரம்பம் சரியான ஆரம்பம்.
ஆன்மீகம் என்றால் தன்னிலிருந்து ஆரம்பிப்பது, ஆனால் வேதாந்தம், கடவுளிலிருந்து ஆரம்பிப்பதாகும். அதனால் வேதாந்தம் பைத்தியக்காரத்தனம் – ஒரு முறையுடன். எல்லா பைத்தியக்காரர்களும் முறையில்லாத வேதாந்திகள், எல்லா வேதாந்திகளும் – ஒரு முறையுடன், இருக்கும் பைத்தியக்காரர்கள். அவர்களுடைய முறையினால், அவர்கள் அர்த்தமுள்ளவற்றை பேசுவதுபோல் தெரியும், ஆனால் அவர்கள் அர்த்தமற்றவைகளை பேசிக்கொண்டேயிருப்பார்கள்.
உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள். கடவுள் இருக்கிறாரா என்று கேட்காதீர்கள். “நான்” என்பது இருக்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள். அன்பு என்பது கடவுளின் குணமா என்று கேட்காதீர்கள். `அன்பு` என்பது என்னுடைய குணமா? நான் இதுவரை அன்பாக இருந்திருக்கிறேனா! என்று கேட்டுக்கொள்ளுங்கள். கருணையைப் பற்றி கேட்காதீர்கள் “நான்” இதுவரை நன்றியுணர்வுடன் இருந்திருக்கிறேனா?, என்று கேளுங்கள் – ஏனெனில், இந்தக் கம்பம்தான் அருகில் இருக்கிறது, ஒரு அடிதான் நம்மை விட்டுத் தள்ளி இருக்கிறது. நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
எப்போதும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பியுங்கள். முடிவிலிருந்து தொடங்காதீர்கள், பின்பு அது ஆரம்பமே அல்ல. யார் ஒருவர் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கிறாரோ, அவர் எப்போதும் முடிவை அடைகிறார், ஆனால் யார் ஒருவர் முடிவிலிருந்து ஆரம்பிக்கி றாரோ அவர் ஆரம்பத்தைக்கூட அடைவதில்லை, ஏனெனில் முடிவிலிருந்து ஆரம்பிப்பதே முடியாத ஒன்று. நீங்கள் போய்க்கொண்டேயிருக்கலாம், அவ்வளவுதான்.
கடவுளை வேதாந்தமாக ஆக்காதீர்கள், ஆனால் ஒரு ஆன்மீக அனுபவமாக ஆக்குங்கள். உள்ளூர செல்லுங்கள். அவன் அங்கு இருக்கிறான். எப்போதும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். ஆனால், நீங்கள் உங்களை வைத்துதான் ஏதாவது செய்யவேண்டும். அப்படி செய்வதுதான் தியானம்; அப்படி செய்வதுதான் யோகா. உங்களை வைத்து ஏதாவது செய்யுங்கள்! நீங்கள் இருக்கும்படி மூடியிருக் கிறீர்கள். நீங்கள் இருக்கும்படி, இறந்து இருக்கிறீர்கள். நீங்கள் இருக்கும்படி உங்களுக்கு எந்த உரையாடலும் இல்லை – உங்களால் எந்த உரையாடலிலும் இருக்கமுடியாது – பிரபஞ்சத்துடனும், தெய்வத்துடனும், எந்த உரையாடலிலும் இருக்கமுடியாது. அதனால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். சில கதவுகளை திறந்து விடுங்கள், சில இடங்களில் உதைத்துத் திறந்து விடுங்கள். சில ஜன்னல்களை உருவாக்குங்கள். உங்கள் மனதிலிருந்து, கடந்த காலத்திலிருந்து வெளியே குதியுங்கள். பின்பு நீங்கள் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், நீங்கள் வாழ்வீர்கள், நீங்கள் கடவுளின் கருணையுடன் வாழ்வீர்கள், நீங்கள் அன்புடன் வாழ்வீர்கள், நீங்கள் அதனுடைய ஒரு பாகமாக இருப்பீர்கள். நீங்கள் அதனுடைய ஒரு சிற்றலையாக இருப்பீர்கள். நீங்கள் அதனுடைய ஒரு சிற்றலையாகிவிட்டால், தெய்வத்தின் ஒரு அலையாகிவிட்டால், அப்போதுதான் அனுபவப்பூர்வமான தெய்வீகத்தன்மை இருக்கும்.
அதனால் நான் ஒரு வேதாந்தி அல்ல. நீங்கள் என்னை வேதாந்திகளுக்கு எதிரானவன் என்று அழைக்கலாம். ஆன்மீகம் என்பது மனதின் புறத்திற்கும், அகத்திற்கும் வேறுபாடு இல்லாதது. உங்களிடம் இருந்து ஆரம்பியுங்கள், உங்களுடைய எதிர்க்கும் தன்மை வாய்ந்த மனதை மாற்ற ஆரம்பியுங்கள். அது ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன் இருக்கட்டும்.
நான் உங்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்...... புத்தர் தெய்வம் என்றால் என்ன என்பதனை தெரிந்துகொள்ள, ஆறு வருடம் தொடர்ச்சியாக முயன்றார், மேலும் அவர் எதையும் செய்யாமல் விட்டுவைத்தார் என்றும் சொல்லமுடியாது. அவர் மனிதரால் இயன்றவை எல்லாவற்றையும் செய்தார், மனிதரால் இயலாது என்றுத் தோன்றும் சிலவற்றையும் செய்தார். அவர் எல்லாவற்றையும் செய்தார். அவருடைய நாட்கள் வரை, என்னவெல்லாம் தெரிந்திருந்ததோ, எல்லாவற்றையும் கடைபிடித்தார். என்ன முறைகளெல்லாம் அவருக்கு சொல்லித்தரப்பட்டதோ, அவற்றையெல்லாம் கடைபிடித்து அதில் தேர்ச்சி பெற்றார்.
அவர் காலத்தில் இருந்த எல்லாக் குருவிடமும் சென்றார், எல்லோரிடமும் சென்றார். அவர்களால் சொல்லித்தர முடிந்ததை அவர் கற்றுக்கொண்டு, கடைபிடித்தார். பின்பு அவர் “ஏதாவது இன்னும் இருக்கிறதா ஐயா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் “இப்போது நீ போகலாம், ஏனெனில் என்னால் கொடுக்க முடிந்ததை நான் கொடுத்துவிட்டேன், மேலும் நான் மற்றவர்களிடம் சொல்வதுபோல, நீ சரியாக கடைபிடிக்கவில்லை, என்றும் உன்னை சொல்லமுடியாது, நீ கடைபிடித்து வந்தாய், ஆனால் என்னால் கொடுக்க முடிந்தது இவ்வளவுதான்” என்றார்கள்.
அதற்கு புத்தர், “என்னால் இன்னும் தெய்வத்தை தெரிந்துக்கொள்ள முடியவில்லையே” என்றார்.
இது ஒவ்வொரு குருவிடமும் நடந்தது. பின்பு அவர் எல்லா குருக்களையும் விட்டுவிட்டார். பின்பு அவராகவே சொந்த வழிமுறைகளை வகுத்து கடைபிடித்தார். தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளுக்கு அவர் வாழ்வா? இறப்பா? என்று போராடிக் கொண்டிருந்தார். அவரால் என்னவெல்லாம் செய்யமுடிந்ததோ, அதையெல்லாம் செய்தார். பின்பு, இறுதியில், அவர் செய்வதில் களைப்படைந்து விட்டார், மிகவும் களைப்படைந்து, ஒருநாள் அவர் போத்கயா (Bodhgaya) அருகில் நிரஞ்சனா (Niranjana) என்ற நதியில், மாலையில் நீராடிக்கொண்டிருக்கும்போது, அவரால் நதியைவிட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு மிகக் களைப்பாகவும், மிகவும் பலவீனமாகவும் உணர்ந்தார். அவர் அருகிலிருந்த ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஒரு யோசனை வந்தது, “நான் மிகவும் பலவீனமடைந்துவிட்டேன், என்னால் இந்த சிறிய நதியைக் கூட கடக்க முடியவில்லை? நான் எப்படி இந்த உலகத்து மொத்தக் கடலைக் கடக்க உயிரோடு இருப்பேன்? நான் எல்லாமே செய்தும், என்னால் தெய்வத்தைக் கண்டறிய முடியவில்லை, நான் உடலால்தான் களைப்படைந்தேன்” என்று நினைத்தார்.
அவர் தன் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக உணர்ந்தார். அந்த வினாடியில், அவர் எல்லாம் செய்து விட்டதாகவும், இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதையும் உணர்ந்தார். அவர் இளைப்பாறினார். அவர் இளைப்பாறியதால் புதிய ஆக்க சக்தி எழும்பியது. அவர் ஆறு ஆண்டுகளாக எதையெல்லாம் அடக்கி வைத்திருந்தாரோ, அதுவெல்லாம் மலர்ந்தது. அவர் நதியைவிட்டு வெளியே வந்தார். அவர் ஒரு இறகுப்போல் இருப்பதை உணர்ந்தார், ஒரு பறவையின் இறகு – கணமில்லாமல். அவர் போதி மரத்தடியில் இளைப்பாறினார்.
அது ஒரு வெளிச்சமான பௌர்ணமி நாள். யாரோ ஒரு கன்னிப்பெண், சுஜாதா என்ற ஒரு சூத்ரா(Sudra) பெண் அங்கே வந்தாள். அவளுடைய பெயர் அவள் ஒரு சூத்திர பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்பதை காண்பித்தது, ஏனெனில் சுஜாதா என்ற பெயரை மேல்ஜாதிக்காரர்கள் வைக்கமாட்டார்கள். சுஜாதா என்றால் “நல்ல பிறப்பு” என்று அர்த்தம். அவள் போதிமரத்திற்கு தினமும், ஏதோ வழிபடுவதாக வேண்டிக் கொண்டிருப்பதனால் அவள் சில இனிப்புகளோடு அங்கே வந்திருந்தாள்.....
புத்தர் அங்கே இருந்தார் – களைப்பாக, இரத்தசோகை கொண்டு, வெளுத்து இருந்தார் – ஆனால் மனதால் இளைப்பாறிக்கொண்டு, சுமை ஏதும் இல்லாமல் இருந்தார். அது ஒரு பௌர்ணமி இரவு, சுற்றிலும் யாரும் இல்லை. சுஜாதா என்ற பெண், அந்த மரத்தின் கடவுள் தன்னுடைய வழிபாட்டை ஏற்றுக்கொள்வதற்காக வந்திருக்கிறது என்று நினைத்தாள். இதுவே இன்னொரு நாளாக இருந்திருந்தால், புத்தர் மறுத்தி ருப்பார். அவர் இரவில் ஓய்வெடுக்கமாட்டார், அவர் சாப்பிடவும் மாட்டார். ஆனால் இன்று அவர் முழுவதும் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அவர் அந்த உணவை உண்டுவிட்டு உறங்கிவிட்டார். இதுதான் ஆறு வருடங்களுக்குப் பிறகு அவர் உண்மையாக உறங்கியது.
அவர் செய்வதற்கு ஒன்றும் இல்லாமல் ஓய்வாக இருந்தார், கவலைகள் எதுவும் இல்லை, நாளை என்பதுகூட இல்லை, ஏனெனில் ஏதாவது செய்வதற்கு இருந்தால்தான், நாளை என்பது இருக்கும். ஒருவருக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றால், பின்பு நாளை என்பது இல்லை. பின்பு இந்த வினாடியே போதுமானது.
புத்தர் உறங்கினார், பின்பு ஐந்து மணிக்கு கடைசி நட்சத்திரம் போய்க்கொண்டிருந்த போது, அவர் உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டார். அவர் அந்த கடைசி நட்சத்திரம் மறைவதை பார்த்தார் – அவர் அதை மனம் என்பது இல்லாமல் பார்த்தார், ஏனெனில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றபோது மனமும் இல்லை. இந்த மனம் ஏதாவது செய்ய வேண்டுமானால், அதை செய்வதற்குத் திறமை வாய்ந்தது, அது தொழில் நுட்பத்தில் திறமை வாய்ந்தது, அவ்வளவுதான். மனம் இல்லை, எதுவும் செய்வதற்கு இல்லை, அவர் பக்கத்திலிருந்து எந்த முயற்சியும் இல்லை.... அவர் உயிருடன் இருக்கிறாரா? அல்லது அவர் இறந்துவிட்டாரா? என்பதைப் பற்றிக்கூட பொருட் படுத்தாமல் அவர் தன் கண்களை திறந்து நடனமாட ஆரம்பித்தார். அவர் இவ்வளவு முயற்சிகளின் மூலம் தெரிந்துக்கொள்ள முடியாததைப் பற்றி இப்போது அவர் தெரிந்துக்கொண்டுவிட்டார்.
எப்போதெல்லாம் அவரை யாராவது, அவர் எப்படி அடைந்தார் என்றுக் கேட்டால், அவர் “நான் அதிகமாக அடைய முயற்சித்தபோது, நான் அதிகமான ஏமாற்றம்தான் அடைந்தேன், என்னால் அடையமுடியவில்லை, அதனால் நான் அடைந்துவிட்டதாக என்னால் எப்படி சொல்லமுடியும்?” நான் அதிகமாக முயற்சித்தபோதும், அதிகமாக சம்மந்தப்பட்டிருந்தபோதும் என்னால் அடையமுடியவில்லை, மனம் தன்னையேத் தாண்டி செல்ல முயற்சித்தது, ஆனால் அது முடியாத ஒன்று, அது நீங்களே உங்களுக்கு தந்தையாக முயற்சிப்பது போலாகும், அது உங்களை நீங்களே பெற்று எடுப்பதுபோல் ஆகும்” என்றார்.
அதனால் புத்தர் “நான்” அடைந்துவிட்டேன் என்று என்னால் சொல்லமுடியாது, நான் அதிகமாக முயற்சித்ததால், நான் நிர்மூலம் ஆனேன் என்றுதான் சொல்லமுடியும். நான் அதிகமாக முயற்சித்ததால், எல்லா முயற்சிகளும் பைத்தியக்காரத் தனமாகிவிட்டது. நான் முயற்சிக்காத ஒரு வினாடி வந்தது, அப்போது மனம் இல்லை,,அப்போது நான் சிந்தனையில் இல்லை, அப்போது எதிர்காலம் இல்லை, ஏனெனில் கடந்தகாலமும் இல்லை. இவ்விரண்டும் எப்போதும் சேர்ந்தேயிருக்கும். கடந்தகாலம் பின்னாலும், எதிர்காலம் முன்னாலும் இருக்கிறது, ஆனாலும் இவ்விரண்டும் எப்போதும் இணைந்தேயிருக்கும். ஒன்றை விட்டுவிட்டால் மற்றொன்று கூடவே விட்டுப் போய்விடும், பின்பு எதிர்காலம் இல்லை, கடந்தகாலம் இல்லை, மனம் இல்லை, நான் மனம் இல்லாமல் இருந்தேன். “நான்” குறைவாக, நான் இருந்தேன். பின்பு என்னவோ ஆயிற்று, மேலும் என்னால், அந்த என்னவோ ஆனது, இந்த வினாடியில்தான் என்று சொல்லமுடியாது, இது எப்போதுமே நிகழ்ந்துகொண்டுதான் இருந்திருக்கிறது. நான்தான் தெரிந்துக்கொள்ளாமல் இருந்தேன். அது எப்போதுமே நடந்துகொண்டுதான் இருக்கிறது. நான்தான் மூடியிருந்தேன். அதனால் நான் எதையோ அடைந்ததாக சொல்லமாட்டேன்” என்றார்.
மேலும் புத்தர் “நான் எதையோ தொலைத்துவிட்டேன் என்றுதான் சொல்லுவேன் – நான் மனதையும், “நான் என்ற அகந்தையை” யும் தொலைத்துவிட்டேன். நான் எதையும் அடையவேயில்லை. என்னிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அதுவெல்லாம் எப்பொழுதுமே என்னிடம், எல்லா அடுக்கிலும், இருந்திருக்கிறது என்பது இப்போதுதான் எனக்குத் தெரியும். இது ஒவ்வொரு கல்லிலும், ஒவ்வொரு மலரிலும் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது என்னால் அடையாளம் காண முடிகிறது. இது எப்போதுமே இப்படித்தான். நான்தான் குருடனாக இருந்தேன். இப்போது நான் என் குருட்டுத்தன்மையை தொலைத்து விட்டேன். நான் எதையும் பெறவில்லை. நான் சிலவற்றை தொலைத்தேன்” என்றார்.
நீங்கள் தெய்வத்திலிருந்து ஆரம்பித்தால், நீங்கள் அடைவதற்காக ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் உங்களிடமிருந்து ஆரம்பித்தால், பின்பு நீங்கள் தொலைக்க ஆரம்பிக்கிறீர்கள், சில விஷயங்கள் மறைய ஆரம்பிக்கும், பின்பு நீங்களே மறைவீர்கள். எப்போது நீங்கள் இல்லையோ அப்போது தன்னுடைய எல்லாக் கருணையுடனும், தன்னுடைய எல்லா அன்புடனும், தன்னுடைய எல்லா இரக்கத்துடனும், தெய்வம் இருக்கும், ஆனால் நீங்கள் இல்லாதபோதுதான்.
நீங்கள் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது வெளிப்படையான நிபந்தனை, இதை யாருக்காகவும் தளர்த்தமுடியாது. இது வெளிப்படையானது. இது பூர்ணமானது. நீங்கள்தான் தடை, கீழே விழுங்கள், பின்பு உங்களுக்குத் தெரியும்.
எப்போது உங்களுக்குத் தெரிகிறதோ, அப்போதுதான் உங்களுக்குத் தெரியும், உங்களால் அதை புரிந்துக்கொள்ள முடியாது, என்னால் அதை விளக்க முடியாது. என்னால் உங்களுக்கு புரியவைக்க முடியாது. நான் என்னவெல்லாம் சொல்கிறேனோ, நான் எதுவும் வேதாந்தம் பற்றி சொல்லவில்லை, நீங்கள் உங்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதைத்தான் காண்பிக்க முயற்சிக்கிறேன்.
நீங்கள் உங்களிடமிருந்து ஆரம்பித்தால், நீங்கள் தெய்வத்துடன் முடிப்பீர்கள், ஏனெனில் அது உங்களின் இன்னொரு பாகம், மற்றொரு கம்பம். ஆனால் இந்தக் கரையிலிருந்து ஆரம்பியுங்கள், நீங்கள் இல்லாத மற்றொரு கரையிலிருந்து ஆரம்பிக்காதீர்கள். உங்களால் அங்கிருந்து ஆரம்பிக்க முடியாது. நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கிருந்து ஆரம்பியுங்கள். நீங்கள் ஆழமாக செல்ல செல்ல, நீங்கள் குறைவாகவே இருப்பீர்கள்.
உங்களைப் பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்துகொள்ளும் அளவிற்கு, குறைவான சுயமாகத்தான் (Self) நீங்கள் இருப்பீர்கள். ஒருமுறை நீங்கள் உங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துக்கொண்டுவிட்டால், பின்பு நீங்கள் நிர்மூலமாகி விடுவீர்கள், நீங்கள் இல்லாமல் போய்விடுவீர்கள், நீங்கள் முழுவதும் செல்லாதவராவீர்கள் – இல்லை (Not) அந்த இல்லாததில், அந்த முழு செல்லாத்தன்மையில் உங்களுக்கு எப்போதும் விழித்துக்கொண்டிருக்கும், எப்போதும் ஆதி அந்தம் இல்லாமல் பொழிந்துக்கொண்டிருக்கும் கருணையைத் தெரியும். எப்போதும் உங்களை சுற்றி இருக்கும் அன்பை உங்களுக்குத் தெரியும். அது எப்போதுமே இருந்து கொண்டி ருக்கிறது, ஆனால் நாம் அதை கவனிக்கவில்லை. நிர்மூலமாகுங்கள். பின்பு நீங்கள் அதைப்பற்றி தெரிந்துக் கொள்வீர்கள்.
************************************************************************************************************
மாபெரும் சாகசம்
அன்புள்ள ஓஷோ,
தியானம் எப்படி வேலை செய்கிறது? எப்படி ஒருவரால் எப்போதும் தியான நிலையை அடையமுடியும்? எந்த வகையில் குண்டலினி(Kundalani) யை கடைபிடிப்பது, தியானத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது?
தியானம் என்பது ஆபத்தைக் கருதாமல் துணிந்து செல்வது, தெரியாதவற்றுள் துணிந்து செல்வதாகும் – இதுதான் மனித மனதால் செய்யக்கூடிய மாபெரும் சாகசம். இதில் நீங்கள் பயிற்சி எடுக்க முடியாது என்பதால்தான், நான் இதை துணிந்து செய்ய வேண்டிய ஒன்று என்று சொல்கிறேன். முதலில், உங்களால் முன்கூட்டியே எதையும் தெரிந்துக்கொள்ள முடியாது; உங்களுக்கு அதை தெரிந்தாலேயொழிய, உங்களால் அதை தெரிந்துக்கொள்ள முடியாது. சொல்லப்பட்டதெல்லாம், இறுதியாக எந்த அர்த்தத்தையும் தருவதில்லை, உண்மை சொல்லப்படாமலேயே இருக்கிறது. நிறைய சொல்லப்படுகிறது, ஒன்றும் இல்லாததைப் பற்றி நிறைய சொல்லப்படுகிறது, ஆனாலும் உண்மையைப் பற்றி, இன்னும் ஒரு வார்த்தைக்கூட சொல்லப்படவில்லை.
உங்களுக்கு அதைத் தெரிந்தாலேயொழிய, உங்களால் அதை தெரிந்துக்கொள்ள முடியாது. ஆனால் அதைப்பற்றி சிலவற்றைக் கோடிட்டு காட்டலாம். அது துல்லி யமாக சொன்னதாக இருக்காது – சொல்லவும் முடியாது. அதனுடைய இயற்கைத் தன்மையானது, அதைப்பற்றி சொல்லமுடியாத வகையில் இருக்கிறது. உங்களால் இதுதான் தியானம் என்று சொல்லமுடியாது. சொல்லக்கூடியது என்னவென்றால், இது தியானம் அல்ல, அது தியானம் அல்ல, மிஞ்சியிருப்பதுதான் தியானம், மிஞ்சியிருப்பது குறிப்பிடாமல் விடப்பட்டுள்ளது.
இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தியானம் என்பது மனதைவிட பெரியதாகும். இது மனதில் நிகழக்கூடிய ஒன்றல்ல. இது மனதிற்கு நிகழக்கூடிய ஒன்று, மனதில் அல்ல; இல்லாவிட்டால் மனதால் அதை வரையறுக்க முடிந்திருக்கும். மனம் அதை தெரிந்துக்கொள்ளும், புரிந்துக்கொள்ளும் திறன் வாய்ந்திருக்கும். இது மனதில் நிகழக்கூடிய ஒன்றல்ல, இது மனதிற்கு நிகழக்கூடிய ஒன்று. இந்த நிகழ்வு, வாழ்க்கைக்கு மரணம் நிகழ்வது போலாகும்.
மரணம் எப்போதும் வாழ்க்கையில் நிகழ்வதில்லை, ஆனால் வாழ்க்கைக்கு நிகழ்கிறது. தியானம் என்பது வாழ்க்கைக்கு மரணம் என்பதுபோல, அது மனதினுடைய மரணம். தியானம் என்பது இன்னும் ஆழமான மரணம் என்றும் சொல்லலாம் – உடலால் அல்ல, ஆனால் மனதால். மரணம் ஆழமாக இருக்கும் அளவிற்கு, திரும்ப பிறப்பதற்கான வாய்ப்பும் ஆழமானதாக இருக்கும். உங்கள் உடல் மரணமடையும்போது, நீங்கள் மறுபடியும் உடலால் பிறக்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரையில், ஒன்றுமே நடந்திருக்காது, ஒன்றும் இல்லை. நீங்கள் அப்படியேதான் இருப்பீர்கள் – அதே தொடர்ச்சி, அதே பழைய சங்கதி.
மரணம் ஆழமாக இருக்கும்பட்சத்தில், திரும்பவும் உயிர்பெறுதலும் ஆழமானதாக இருக்கும். நீங்கள் மனரீதியாக மரணமடைந்தால், மனம் மரணமடைந்தால், பின்பு நீங்கள் மறுபடியும் பிறக்கிறீர்கள். ஆனால் இந்த மறுபிறப்பு, உடலால் மீண்டும் பிறப்பது போல் அல்ல.... ஏனெனில் அதில் மீண்டும் வேறொரு உடல், மறுபடியும் பொருத்தப்படுகிறது; பழைய உடலுக்கு பதிலாக புதிய உடல் பொருத்தப்படுகிறது. ஆனால் மனரீதியான, மனதிற்குரிய மரணமாக இருக்கும்போது, மீண்டும் வேறு ஒரு மனம் பொருத்தப்படுவதில்லை. அப்போது மனம் இல்லாமல், விழிப்புணர்வு மட்டுமே தங்குகிறது.
அதனால் தியானம் என்பது மனமில்லாமல், விழிப்புணர்வு மட்டும் இருப்பதாகும் – அது திறந்த வானத்தில், சுவர்கள் எதுவும் சுற்றியில்லாமல் இருப்பது. நாம் இந்த வீட்டின் சுவர்களை இடித்துவிடலாம், ஆனால் அறைகளை அல்ல; ஏனெனில் “அறை” என்றால் காலியான இடம். அதனால் இப்போது இந்த அறை உங்களுக்கு அறையின் தன்மையாகும் (Roomness). இந்த அறை திறந்த வெளிக்கு கீழே இருக்கும். பின்பு நீங்கள் அதை ஒரு அறையாகவே பார்க்கமாட்டீர்கள், ஏனெனில் உங்களால் அதை வரையறுக்க முடியாது, அது வானத்துடன் ஒன்றாகிவிடும். ஆனால் அந்த அறை முன்பைவிட அதிகமாக, அங்கேயேதான் இருக்கிறது, அதனுடைய சுவர்கள்தான் இல்லை. அதனால், அறையை அறையின்தன்மை (Roomness), அதை சுவற்றுக்கு நடுவே இருக்கும் காலியான அறை என்று வரையறுத்தால், பின்பு சுவர் இல்லாமல் அந்த அறை அங்கேயேதான் இருக்கும். அது பெரியதாகவும், முடிவு இல்லாததாகவும் இருக்கும். அதனால் மனம் மரணமடையும்போது – நான் மனம் மரணமடையும்போது என்று சொல்லும்போது, நான் மனதின் சுவற்றைத்தான் குறிப்பிடுகிறேன் – இந்த இடத்தினுள் காலியாக இருப்பது இருந்துகொண்டேதான் இருக்கும், அதிகமாகும். அதுதான் விழிப்புணர்வு.
வேறுபடுத்திப் பாருங்கள்: மனதுள் காலியாக இருப்பதை நான் விழிப்புணர்வு என்கிறேன், அதைச்சுற்றி உள்ள சுவர்தான் மனம். அல்லது தை ஆங்கிலத்தில் இவ்வாறு சொல்லலாம், Mind என்பதில் சிறிய m கொண்ட mind மரணமடைகிறது, பெரிய M கொண்ட Mind இருந்து கொண்டேயிருக்கிறது. பின்பு அது உங்கள் மனமாக இருக்காது, உங்களால் மனமாக இருக்கமுடியாது, இந்த சுவர்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டால், இந்த இடம் மனமாக இருக்காது. இடம் அங்கேயே இருக்கும், ஆனால் அது மனமாக இருக்காது. மனம் சுவர்களாகத்தான் இருக்கமுடியும். மனம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டுத்தான் இருக்கமுடியும். இந்த சுத்தமாக காலியாக இருப்பது மனமாக இருக்கமுடியாது. அப்போது சிறிய m கொண்ட mind இறந்து, பெரிய M கொண்ட Mind இருக்கிறது. அப்போது நீங்கள் அங்கு இல்லை, உங்கள் மனம் வேறு ஒரு மனதால் நிரப்பப்படுவதில்லை, உஙகள் இடம் நிரப்பப்படுவதில்லை.
தியானம் என்பது ஒரு மெல்லிய மரணம் – உங்களின், உங்கள் மனதின், உங்கள் “நான் என்ற அகந்தை”யின், இன்னும் எதுவெல்லாம் உங்களை வரையறுக்கிறதோ, அவை எல்லாவற்றினுடைய ஆழ்ந்த மரணம். ஆனால் எது உள்ளே இருக்கிறதோ, அது அப்படியே தங்கிவிடுகிறது – அதுதான் சுத்தமான விழிப்புணர்வு.
அதனால் முதலில், மனிதனுடைய சுவர்கள், மனிதனின் செய்முறைகள், இவை யெல்லாம் தியானமல்ல, அவைதான் தடைகள். மனதின் சுவர்கள் எல்லாம் என்ன?, மனம் தன்னை எப்படி வரையறுத்துள்ளது?, அது எப்படி ஒரு வரம்புக்கு உட்பட்டதாகி விட்டது?, எல்லைகளினாலும், சுவர்களினாலும் தான் mind என்பது Mind என்பதிலிருந்து தனியாக வந்தது. இப்போது அந்த எல்லைகளும், சுவர்களும் எங்கே?.
இதில் மூன்று விஷயங்கள் இருக்கின்றன. முதல் விஷயம் நினைவாற்றல். மனதின் பெரும்பாகம் நினைவாற்றல் ஆக்ரமித்துள்ளது. இந்த நினைவாற்றல், மிக நீண்ட ஒன்று. இது பின்னோக்கி, இதுவரை நீங்கள் எண்ணிக்கை இல்லாமல் வாழ்ந்த பல வாழ்க்கைகளுக்குச் செல்கிறது. இந்த மனம் நீங்கள், தன் நினைவுடன் சேகரித்தது மட்டுமல்லாமல், எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைக்கிறது. நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது மனம் கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்கிறது. நீங்கள் முற்றிலும் நினைவில்லாத நிலையில், மயக்கத்தில்( Coma) இருக்கும் போதுகூட, மனம் சேகரித்துக்கொண்டே இருக்கிறது. மனம் சேகரித்துக்கொண்டே போகிறது. அதனிடமிருந்து எதுவும் தப்புவதில்லை. தற்போது நினைவற்ற நிலையில் இருக்கும் மனம்தான் (Unconscious Mind) தான் நினைவாற்றலில் சீனச்சுவர் (Chinese Wall) போல் இருக்கிறது – மிக நீண்ட ஒன்று.
இந்த நினைவாற்றல் உங்களுடைய மூளையின் ஒரு பாகமாக மட்டும் இல்லாமல், அது உங்களின் மெய்யிருப்பின் (Being) ஒவ்வொரு செல்லின் ஒரு பாகமாகவும், உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லின் ஒரு பாகமாகவும் இருக்கிறது. அதனால்தான் இருபத்தி நான்கு செல் ஆணி (men) லிருந்தும், இருபத்தி நான்கு செல் பெண்ணிலிருந்தும் (woman) உங்களை உருவாக்கத் தொடங்குகிறது. அவைகளுக்கு வழிமுறைத் தொகுப்பும் (Programme) நினைவாற்றலும், உள்ளடங்கியே உள்ளது. நீங்கள் முதல் நாள் கருப்பையில் இருக்கும்போதே உங்களுக்கு எப்படிப்பட்ட மூக்கு இருக்கும் என்று ஒருநாள் நம்மால் சொல்லமுடியும். அந்த புதிய முட்டை, உங்களுக்கு எந்த மாதிரியான கண்கள் இருக்கும், உங்கள் வயது எவ்வளவு பெரியதாக இருக்கும், எவ்வளவு புத்திக்கூர்மை இருக்கும், எவ்வளவு “நான் என்ற அகந்தை” இருக்கும் என்பதையெல்லாம் குறிப்பிடும்.
அந்த சாதாரணமாக தோன்றும் செல் உங்கள் அளவிற்கு சிக்கலானது. இது முழு இனத்தினுடைய நினைவாற்றலை, சேகரிக்கப்பட்ட மனதில் சுமந்துக்கொண்டி ருக்கிறது. மேலும் உங்கள் ஆத்மா, உங்கள் “நான் என்ற அகந்தை”, உங்கள் மனம், எல்லாம் அதனுள் ஊடுருவிச் செல்கிறது. அதனால் உடலுக்கு நினைவாற்றல் இருக்கிறது. உங்கள் மனதிற்கும் அதனுடைய சொந்த நினைவாற்றல் இருக்கிறது. நீங்கள் தெரு சந்தி (Cross Roads) போல் இருக்கிறீர்கள் – பல நினைவாற்றலுடன் ஒரு மனம். முழு இனத்தினுடைய நினைவாற்றலைக் கொண்ட ஒரு உடல், மொத்த சேகரிக்கப்பட்ட மனம், உடலின் நினைவாற்றல், மனதின் நினைவாற்றலைவிட சக்தி வாய்ந்தது. அதனால் நீங்கள் எப்போதும் அதற்குப் பலியாகிவிடுவீர்கள். நீங்கள் எப்படி
யெல்லாம் நினைத்தாலும்கூட அந்த வினாடி வரும்போது, உடல் வென்றுவிடும். உங்கள் மனம் அதற்கு முன்பு ஒன்றும் இல்லாதது. ஏனெனில் அது இனம் சம்ந்தப்பட்டது. அதனால்தான் எல்லா மதங்களும் உடலோடு சண்டையிட முற்பட்டு, அதனுடைய பிடியில் அகப்பட்டுவிட்டார்கள். உங்களால் அதனுடன் சண்டையிட முடியாது. நீங்கள் அத்துடன் சண்டைபோட ஆரம்பித்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தான் வீணாக்குவீர்கள்.
உங்களால் உடலுடன் சண்டையிட முடியாது, ஏனெனில் பார்க்கப்போனால், அது இனம் மட்டுமல்ல, அது அதுவாக இருப்பதற்கு முழு வரலாறு இருக்கிறது. சில விஷயங்கள் உங்களுள் இருந்துக்கொண்டேயிருக்கிறது. இதுவரை இருந்தவைக ளெல்லாம், உங்கள் உடலுள் இருந்துகொண்டே இருக்கிறது. உங்கள் சொந்த சுயம் (Self) எல்லாவற்றையும் அதனுள் சுமக்கிறது. அதனால்தான் மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் கடந்துவருவதுப் போல் கருப்பையில் இருக்கும் குழந்தை அந்த நிலைகளையெல்லாம் கடந்து வருகிறது.
மொத்தப் பரிணாம வளர்ச்சியின் சுருக்கம்தான் அந்த ஒன்பது மாதத்தில் கருப்பையில் நடக்கிறது. ஒருவர் ஒரு உயிருள்ள நுண்ணுயிராக ஆரம்பிக்கிறார். அதுதான் முதல் புராதன செல். எப்படி ஒரு உயிருள்ள நுண்ணுயிர், கடல் தண்ணீரில் ஆரம்பிக்கவேண்டியுள்ளதோ, அதேபோல் ஒருவர் அதே சூழ்நிலையில்தான் ஆரம்பிக்கவேண்டியுள்ளது. கடல் தண்ணீரில் இருக்கும் அதே இரசாயன நிலைகள் தான், கருப்பையும் கொண்டுள்ளது. செல் நீச்சலடிக்கும் அந்த கருப்பை தண்ணீரில், கடல் தண்ணீரில் உள்ள அதே கலவை தான் உள்ளது. துல்லியமாக அதுவேதான்.
கருப்பையில் பரிணாம வளர்ச்சி மறுபடியும் ஆரம்பமாகிறது. ஆனால் இது ஒரு சிறிய அளவில் உள்ள பரிணாம வளர்ச்சி. ஆனால் முழுவதும் முதலிலிருந்து ஆரம்பிக்கவேண்டும், ஏனெனில் செல்லுக்கு நினைவாற்றல் உள்ளது. இல்லாவிட்டால் அதனால் வேலை செய்யமுடியாது. இது திரும்பவும் அதே முறைகளை கடந்துச் செல்லும். இதற்கான நேரம் குறைவாக இருக்கும். அந்த நுண்ணுயிர், பல இலட்ச வருடங்களைக் கடந்த பின்புதான், அதுவால் கடலிலிருந்து பூமிக்கு வர முடிந்தது. இந்த செல், இந்த முட்டை செல் கருப்பைக்குள் ஒரு வாரத்திற்குள் கடந்து விடும். ஆனால் அந்த ஏழு நாட்களுக்கு, அதே பல இலட்ச வருடங்களை சுருக்கிய பரிணாம வளர்ச்சியும், அதன் நிலைகளும் இருக்கும். இந்த ஒன்பது மாதங்களும் சுருக்கிய பரிணாம வளர்ச்சியும், மேலும் செல்லில் உள்ளடங்கிய வழிமுறையின் தொகுப்பும் இருக்கிறது (Built – in program).
அதனால் ஒருவகையில் உங்கள் உடல், ஒரு மொத்த பரிணாம வளர்ச்சி. இது மிக சுருக்கிய, சிறிய நிலையில் ( Atomic) உடலுக்கு அதனுடைய தனிப்பட்ட நினை வாற்றல் இருக்கிறது. யார் ஒருவர் தியானத்தில் இருக்க ஆசைப்படுகிறாரோ, அல்லது ஏக்கம் கொள்கிறாரோ, அவர் முதலில் உடலின் நினைவாற்றலைப் பற்றியும், உடல்கூற்றின் நினைவாற்றலைப் பற்றியும் புரிந்துக்கொள்ளவேண்டும். அதனுடன் சண்டைப் போடாதீர்கள். நீங்கள் சண்டையிடுவதிலிருந்து ஆரம்பித்தால், பின்பு நீங்கள் தவறான அடியை எடுத்து வைக்கிறீர்கள். நீங்கள் மேலும் மேலும் பாதிப்படைவீர்கள். ஒத்துழைப்புடன் இருங்கள், இதற்கு வேறு வழியில்லை. உடல் முழுவதும் இளைப்பாறட்டும். உங்களுக்கும், உங்கள் உடலுக்கும் இடையில் பதட்டத்தை உண்டாக்காதீர்கள். உங்கள் உண்மையான சண்டை உடலுடன் அல்ல, உடலின் நினைவாற்றலினால் அல்ல, ஆனால் “நான் என்ற அகந்தையின்” நினைவாற்றலினால் – உங்கள் ஆத்மா, உங்கள் மனதினால் ஏற்படுவது. இது இன்னொரு முற்றிலும் வேறுபட்ட விஷயம். அதனால் உடலுடன் சண்டையிடாதீர்கள்.
நாம் உடலுடன் சண்டைபோட்டுக்கொண்டிருந்தால், நமக்கு மனதுடன் சண்டை போடுவதற்கு நேரம் இருக்காது. மேலும் நாம் உடலுடன் சண்டை போட ஆரம்பித்தால், அது முடிவில்லாமல் போய்க்கொண்டேயிருக்கும். அது நமக்கே பாதகமாக இருக்கும். அது அழிவாக இருக்கும். அது தன்னுடைய தோல்விக்கு விதைவிதைக்கும். ஒருவன் தோல்வி அடைவது நிச்சயம். ஒரே ஒரு செல் இந்த மொத்த மனித இனத்துடன் சண்டையிடுகிறது, இருப்பவை எல்லாவற்றுடனும் சண்டையிடுகிறது, அது முடியாத ஒன்று.
அதனால் உடலின் நினைவாற்றலை உங்களின் நினைவாற்றலாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உதாரணத்திற்கு, பசி என்பது உடலின் நினைவாற்றல். நீங்கள் அத்துடன் சண்டை போடலாம். ஆனால் வெற்றியடைவது மிகக் கடினம். மிகக் கஷ்டம், கிட்டத்தட்ட முடியாத ஒன்று. அப்படி நீங்கள் வெற்றிப் பெற்றுவிட்டால், உங்கள் வெற்றியே உங்கள் முழு தோல்விக்குக் காரணமாகிவிடும். ஏனெனில் உங்களால் உங்கள் பசியை வெல்ல முடிந்தால், நீங்கள் தற்கொலைக்கான அடியை எடுத்து வைக்கிறீர்கள். தொண்ணூறு நாட்களுக்குள் நீங்கள் இறந்துவிடுவீர்கள். உடல்கூட உங்களுக்கு, இது உணவு கொடுக்க வேண்டிய நேரம், என்று காட்டாது. அதனால் நீங்கள் அதைவெல்ல முடியாமல் இருப்பதே நல்லது, இல்லாவிட்டால், அது தற்கொலையாகிவிடும். பின்பு உங்களின் நினைவாற்றலுக்கும், உடலின் நினைவாற்றலுக்கும் பாலம் இருக்காது. இப்படி செய்வதுதான் அதை வெல்ல ஒரே வழி – ஆனால் அப்போது நீங்கள் உண்மையாக வெற்றியடையவில்லை, நீங்கள் உங்களையேக் கொல்லப் போகிறீர்கள்.
அதனால் உங்களுக்கும், உங்கள் உடலுக்கும், இடையேயுள்ள பாலத்தை உடைப்பதற்கு, நிறைய வழிகள் உள்ளன. பல வழிகள் இருக்கின்றன, பாலத்தை உடைக்க பல ஹத்தயோகா (Hathayoga) முறைகள் இருக்கின்றன. உடல், பசி, பசி, பசி....... என்று அழுதுக்கொண்டேயிருக்கும், ஆனால் பாலம் உடைந்துவிட்டதால் உங்களுக்குத் தெரியாது. உடல் போய்க்கொண்டேயிருக்கும், ஆனால் உங்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. நீங்கள் அதற்கு உணர்ச்சியற்று இருப்பீர்கள். உங்களையோ, அல்லது உங்கள் உடலையோ உணர்ச்சியற்று ஆக்கும் விதத்தில் எதையும் கடைபிடிக்காதீர்கள், ஏனெனில் தியானம் என்பது முழுமையான உணர்ச்சிமிக்க நிலை.
நீங்கள் தியானத்தில் ஈடுபட்டிருக்கும்போது, உங்கள் உடல் உணர்ச்சிமிக்கதாக ஆகும் – உடலின் உறுப்புகள் எவ்வளவு உணர்ச்சிமிக்கதாக ஆகமுடியும் என்பதை, உங்களால் கற்பனை செய்துக்கூட பார்க்கமுடியாது. நாம் துல்லியமாக எதையும் கேட்பதில்லை, நாம் துல்லியமாக பார்ப்பதுமில்லை – ஏதோ கேட்கிறோம், ஏதோ பார்க்கிறோம். நீங்கள் ஒரு பூங்கவை கடந்துச் செல்கிறீர்கள், நீங்கள் பார்ப்பதுபோல் தோன்றும், ஆனால் நீங்கள் வெறுமனே பார்ப்பீர்கள், கவனித்துப் பார்ப்பதில்லை. கண்கள் உணர்ச்சியற்றதாக ஆகிவிட்டது, நீங்கள் கண்களுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தீர்கள். உடல் உணர்ச்சியற்றதாகிவிட்டது, நீங்கள் உடலுடன் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தீர்கள்.
மொத்தப் பண்பாடும் உடலுக்கு எதிராக உள்ளது – மொத்தப் பண்பாடும், அது கிழக்கோ, மேற்கோ எங்கிருந்தாலும், அதனால் எந்த மாற்றமும் இருக்காது. இந்த கிரகத்தில் வளர்க்கப்பட்ட பண்பாடுகள் அனைத்தும், ஒரு வகையில் வியாதியுடையது. அது உடலுக்கு எதிராக உள்ளது, ஆனால் உடல் ஒரு மாபெரும் ஆச்சரியம். நீங்கள் உடலுக்கு எதிராகப் போனால், பின்பு ஒரு வகையில் நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு எதிராக இருப்பதாகும். உடல் இப்பிரபஞ்சத்தின் ஒரு சிறிய அளவாகும். இப்பிரபஞ்சத்துடன் நீங்கள் உறவு வைத்துக் கொள்ள, இப்பிரபஞ்சத்துடன் உங்களுக்கு பாலமாக அமைவது, மற்றும் நீங்கள் இப்பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள இருக்கும் ஒரே கருவி எல்லாமே உடல்தான். உங்கள் உடல் நடுவில் இருக்கும் ஒரு நிலையம்.
அதனால் உடலுடன் சண்டை போடாதீர்கள். உடலின் நினைவாற்றல் என்ன என்பதுடன், மனதின் நினைவாற்றல் என்ன என்பதை, தெளிவாக வேறுபடுத்திக் கொள்ளுங்கள். பசி என்பது உடலின் நினைவாற்றல். அதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மனதிற்கும் அதற்கான சொந்தமான நினைவாற்றல் இருக்கிறது. அவை இருப்பவைகள் அல்ல (Non exitential) உண்மையில் அவைகளுக்கு வாழ வைக்கும் தகுதி (Survival value) கிடையாது. உடலின் நினைவாற்றலுக்கு வாழ வைக்கும் தகுதி உள்ளது. இதுதான் இவ்விரண்டிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். நீங்கள் உடலின் நினைவாற்றலை மறுத்தால், நீங்கள் அதனுடன் சண்டை போட்டால், உங்களால் உயிருடன் இருக்கமுடியாது. ஆனால் மனரீதியான நினைவாற்றலுக்கு உண்மையில் வாழவைக்கும் தகுதி கிடையாது. அவை அனைத்தும் தேவையில்லாத சேகரிப்பு – தூக்கியெறிய வேண்டியதை, நீங்கள் சேகரித்து வைத்திருக்கிறீர்கள், அது தூக்கியெறியப்பட வேண்டியது. நீங்கள் அவைகளால் உங்களை அனாவசியமாக பாரமாக்கிக்கொண்டீர்கள். மேலும் இந்த மனதின் நினைவாற்றல் நீண்டது.
எப்போதெல்லாம் நீங்கள் கோபமாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன: அது உடலின் நினைவாற்றலினாலும் இருக்கலாம், மனதின் நினைவாற்றலினாலும் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட வேறுபாட்டை, அவை இரண்டுக்கும் இடையே செய்யவேண்டும். உங்களுடைய கோபத்திற்கு வாழவைக்கும் தகுதி இருந்தால், உங்களால் அது இல்லாமல் வாழமுடியாது என்றால், பின்பு அது உடல்ரீதியானது. ஆனால் உங்கள் கோபத்திற்கு வாழவைக்கும் தகுதி இல்லை யென்றால், பின்பு அது மனதின் பழக்கத்தினால் ஏற்படுவது. மனம் இயந்திரமாக மறுபடியும், மறுபடியும் செய்கிறது அவ்வளவுதான், அப்படியானால் அது மனதின் நினைவாற்றல். நீங்கள் பலமுறை கோபம் அடைந்திருக்கிறீர்கள், அது உங்களுள் பதப்பட்டுவிட்டது (Conditioning) எப்போதெல்லாம் யாராவது உங்களை தள்ளு கிறார்களோ, அல்லது ஒரு பொத்தானை தள்ளுகிறார்களோ, நீங்கள் மறுபடியும் கோபம் அடைகிறீர்கள். அதனால் கவனமாக இருங்கள், யார் ஒருவர் மனரீதியாக கோபம் அடையாமல், பழக்கத்தினால் கோபம் அடையாமல்..... இருக்கிறாரோ, அவருடைய உடல்ரீதியான கோபத்தில், அதற்கே உரிய அழகு இருக்கும். அது அசிங்கமாக இருக்காது. பின்பு அது, மரணமடையாமல் உயிருடன் இருக்கிறார் என்பதை மட்டும்தான் குறிக்கும். ஆனால் நீங்கள் அதிகமாக பழக்கத்தினால் கோபம் அடையும்போது, உங்களுக்கு உடல் ரீதியாக கோபப்படும் திறன் குறைந்துவிடும். பின்பு உங்கள் கோபம் அசிங்கமாக இருக்கும். அது உங்களுடன் எதையும் சேர்க்காது. அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவாக இருக்கும் அவ்வளவுதான்.
இதை இன்னொரு வழியின் மூலமும் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பாலுணர்வு. இது உடலின் நினைவாற்றலாக இருந்தால், பின்பு இதற்கு வாழ வைக்கும் தகுதி இருக்கும். ஆனால் இது அறிவு சம்மந்தப்பட்ட, மனரீதியான, பழக்கத்தின் காரணமாக இருந்தால், பின்பு இதற்கு வாழ வைக்கும் தகுதி இருக்காது. எவன் ஒருவன் பழக்கத்தில் பிடிபட்டுவிட்டானோ, அவனுடைய பாலுணர்வு அசிங்கமான ஒன்று. அதில் அன்பு இருக்காது, அழகும் இருக்காது. அதில் இசையும் இருக்காது. அதில் ஆழ்ந்த பிரதிபலிப்பும் இருக்காது. பாலுணர்வு அதிகமாக அறிவு ரீதியாக இருக்கும்போது, உடலால் குறைவாகவே ஈடுபடமுடியும். நீங்கள் அதைப்பற்றி அதிகமாகவே யோசிப்பீர்கள், ஆனால் துல்லியமாக அதைப்பற்றி உங்களால் தெரிந்துகொள்ள முடியாது. அதனுடைய ஆழ்ந்த இரகசியங்களைப் பற்றியும் அறிய முடியாது. மனம் பாலுணர்வு பற்றி நினைத்துக்கொண்டேயிருக்கும், பின்பு உடல் மனதைப் பின்பற்ற வேண்டும். எப்போதெல்லாம் உடல் மனதை பின்பற்றுகிறதோ, அப்போதெல்லாம் அதில் எந்த உயிரும் இருக்காது. அது எப்படியோ ஒரு இறந்த சுமையாக இழுத்துக்கொண்டேயிருக்கும்.
அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் – பாலுணர்வு அல்லது கோபம் அல்லது பேராசை. முதலில் அதற்கு வாழவைக்கும் தகுதி உள்ளதா என்பதைப் பார்த்து, பாகுபடுத்திக் கொள்ளுங்கள். பின்பு நீங்கள் அத்துடன் சண்டையிட வேண்டாம். அது வேறும் மனதின் பழக்கமாக இருந்தால் அதை தெரிந்துக் கொள்ளுங்கள். கடந்தகால செயல்களிலிருந்து வரும் மனதின் நினைவாற்றல், உங்களுள் பதப்பட்டுவிட்டது. நீங்கள் அதை மறுபடியும் மறுபடியும் செய்து கொண்டேயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு இயந்திரம்போல் செயல்படுகிறீர்கள். இதில் கவனத்துடன் இருங்கள், நீங்கள் தெரிந்தால் ஆச்சரியம் அடைவீர்கள், உங்கள் கோபத்தில் மனம் ஈடுபடாமல், மனதின் முன் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல், ஒரு சூழ்நிலைக்கு, முழு உடலுடனும், முழுமையான பிரதிபலிப்பாக இருந்தால், பின்பு வருந்தத் தேவையில்லை. அந்த சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் முழுமையாக அந்த சூழ்நிலையில் செயல்பட்டீர்கள். பின்பு வருந்துவதற்கான அவசியமே இல்லை.
இன்னும் ஒன்று: வருத்தம் இல்லாவிட்டால், மன ரீதியான குவியல் இருக்காது. பழக்கம் என்று எதுவும் இருக்காது. நீங்கள் அதையும் சேகரிக்க வேண்டியதில்லை. மனம் எதற்காக நினைவுகளை சேகரிக்கவேண்டும்? அதற்கு தன்னால் அந்த சூழ்நிலையில் முழுமையாக செயல்படமுடியும் என்ற நம்பிக்கை இல்லை. அது தயார்ப்படுத்திக் கொண்டும், பலமுறை ஒத்திகை பார்க்கிறது. ஏதோ ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை வந்தால், அது என்ன செய்யும் என்பதில் அதற்கு நம்பிக்கை இல்லை. அதற்கு இந்த சூழ்நிலையில் இதுவரை என்னவெல்லாம் நடந்திருக்கிறதோ, அதைப் பற்றியெல்லாம் தெரியவேண்டும். பின்பு அதிலிருந்து தக்கவாறு பிரித்து, அது செயல்முறை தொகுப்பு ( Programme) செய்து, அந்த குறிப்பிட்ட சூழ்நிலை வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதனை முடிவு செய்யும். அதனால்தான் மனம் நினைவுகளை சேகரிக்கிறது. அது அதிகமாக சேகரிக்கும் அளவிற்கு, உங்களால் குறைவாகவே அந்த சூழ்நிலையில் முழுமையாக செயல்படமுடியும். மேலும் உங்களுக்கு முழுமையாக செயல்படக்கூடிய திறன் குறைந்திருக்கும்போது, உங்களுக்கு அதிகமாக மனம் தேவைப்படும்.
அதனால் உடலுடன் செயல்படுங்கள். மனதுடன் செயல்படாதீர்கள். இது உங்களுக்கு விசித்திரமாக தெரியும். இதை நீங்கள் ஒரு ஆன்மீகவாதியிடமிருந்து எதிர்பார்த்தி ருக்க மாட்டீர்கள் – உடலிலிருந்து செயல்படுங்கள். பின்பு அந்த செயல் அளவுக்கு அடங்காமல் இருக்கும், பின்பு அதன் பிரதிபலிப்பும் (Response) முழுமையாக இருக்கும். உங்கள் மனதை உள்ளே வர விடாதீர்கள். பின்பு உங்களுக்கு நினைவுகள் இருக்காது, மனரீதியான சேகரிப்பு இருக்காது, வருத்தம் இருக்காது, செயல் நிறைவேறும், சில விஷயங்கள் இப்படி இருந்தது, சூழ்நிலைகள் இப்படி இருந்தது, நீங்கள் முழுமையாக, எந்த பாகமும் பின்தங்காத அளவிற்கு செயல்பட்டீர்கள். அதனால் யாராலும் வருந்தமுடியாது. நீங்கள் அதில் முழுமையாக இருந்தீர்கள். இல்லாவிட்டால் நீங்கள் நிறுத்திவைத்துக் கொண்ட பாகம் பின்பு வருந்தும்.
உடலால் முழுமையாக செயல்படமுடியும். ஆனால் மனதால் முழுமையாக செயல்படமுடியாது. மனம் எப்போதும் பிளவுப்பட்டுள்ளது. மனம் இருகூறாகத்தான் வேலை செய்யும். அதனால் மனதின் ஒரு பாகம் கோபப்படும், இன்னொரு பாகம் கூடவே வருந்துவதற்கு தயாராகிக்கொண்டிருக்கும். இதையும் குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும் – எப்போதெல்லாம் ஒரு பாகத்திற்கு எதிராக இன்னொரு பாகம் நிரந்தரமாக இருக்கிறதோ, அப்போது நீங்கள் மனதின் வழியாகத்தான் செயல்படு கிறீர்கள். உடலின் வழியாக அல்ல என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். உடல் எப்போதும் முழுமையானது. அதுவால் பிளவுபட்டு செயல்படமுடியாது. உடல் ஒரு ஓட்டம் (Flow). அதில் பாகுபாடுகள் இல்லை. நீங்கள் காதல் வயப்படும்போது, உங்கள் முழு உடலும்தான் காதல் வயப்படுகிறது. உங்களால் எந்த வேறுபாடும் செய்ய முடியாது. தலை காதலிக்க ஆரம்பிக்கிறது, அல்லது கைகள் காதல் செய்ய ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லமுடியாது. முழு உடலும் அதில் இருக்கிறது. ஆனால் மனதால் முழுமையாக எதிலும் இருக்கமுடியாது. ஒரு பாகம் எப்போதும் விமர்சித்துக்கொண்டு, சரியா, தவறா என்று எடைபோட்டுக்கொண்டு அதிகாரம் செய்துக்கொண்டு, பாராட்டிக்கொண்டிருக்கும், ஒரு பாகம் நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு, சரியா, தவறா என்று எடைப்போட்டுக் கொண்டும் நிந்தித்துக்கொண்டும் இருக்கும். அதனால் எப்போதெல்லாம் மனதின் ஒரு பாகம், செயலுக்கு எதிராக இருப்பதை பார்க்கிறீர்களோ, அப்போதெல்லாம் நீங்கள் அறிவு ரீதியாக, மனரீதியாக செயல்படுகிறீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
உடல்ரீதியாக செயல்படத் தொடங்குங்கள். நீங்கள் உண்ணும்போது உடல்ரீதியாக உண்ணுங்கள். எப்போது நிறுத்தவேண்டும் என்பது உடலுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மனதுக்கு தெரியாது. ஒரு பாகம் உண்டுக்கொண்டே இருக்கும். ஒரு பாகம் நிந்தித்துக்கொண்டேயிருக்கும். ஒரு பாகம் நிறுத்து என்று சொல்லிக்கொண்டே யிருக்கும். இன்னொரு பாகம் உண்டுக்கொண்டேயிருக்கும். உடல் முழுமையானது. அதனால் உடலிடம் கேளுங்கள். அதனால் மனதிடம் உண்ணலாமா அல்லது உண்ணவேண்டாமா, நிறுத்தலாமா அல்லது நிறுத்தவேண்டாமா என்று கேட்காதீர்கள். உங்கள் உடலுக்கு தேவை என்ன என்பதுத் தெரியும். அது பலப்பல நூற்றாண்டுகளின் விவேகத்தை சேகரித்துவைத்துள்ளது. அதற்கு எப்போது நிறுத்தவேண்டும் என்பது தெரியும்.
மனதிடம் கேட்காதீர்கள். உடலிடம் கேளுங்கள். உடலின் விவேகத்தை நம்புங்கள். உங்களைவிட உடல் புத்தியுள்ளது. அதனால்தான் மிருகங்கள் நம்மைவிட அதிக புத்திசாலித்தனமாக வாழ்கிறது. அவைகள் புத்திக்கூர்மையுடன் இருக்கிறது. ஆனால் அவைகள் சிந்திப்பதில்லை. அவைகள் சிந்திக்க ஆரம்பிக்கும் வினாடியிலிருந்து, அவைகளும் நம்மைப்போல் ஆகிவிடும். இது ஒரு ஆச்சரியம். மிருகங்களால் மனிதனைவிட புத்திக்கூர்மையுடன் வாழமுடியும்! இது பைத்தியக்காரத்தனமாக தெரிகிறது. அவைகளுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவைகள் அதிக புத்திக்கூர்மையுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு விஷயத்தில்தான் மனிதர்கள் மிக்கத் திறமை வாய்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள். அந்த ஒன்று, எல்லா விஷயங்களிலும் தலையிடுவது. நீங்கள் உடலுடன் தலையிட்டுக்கொண்டே இருக்கிறீர்கள், தலையிடாதீர்கள், உங்கள் உடல் தன் வேலையை செய்யட்டும். அதன் வழிக்குப் போகாதீர்கள். அப்போதுதான் உங்களால் உடலின் நினைவாற்றல் என்ன என்பதிற்கும், மனதின் நினைவாற்றல் என்ன என்பதிற்கும் தெளிவாக வேறுபடுத்த முடியும். உடலில் இருக்கும் நினைவாற்றல் உயிர் வாழ உதவும். மனரீதியான நினைவாற்றல் தடைசெய்யும். இந்த மனரீதியான நினைவாற்றல் அழிக்கப்படவேண்டியது என்று நான் சொல்லும்போது, நீங்கள் அத்துடன் ஐக்கியப்படுத்திக்கொண்டு, அதனுடன் ஒன்றாகிவிடக்கூடாது என்பதைத்தான் உணர்த்துகிறேன். நினைவாற்றல் சுயஆட்சி செலுத்துகிற விஷயமாக இருக்கக்கூடாது, மேலும் அது ஞாபகத்திலிருந்து மறையாமல் இருக்க எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது.
அது ஞாபகத்திலிருந்து மறையாமல் இருக்க ஏதோ செய்துகொண்டேயிருக்கிறது. நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள், ஆனால் நினைவாற்றல் வேலை செய்கிறது. நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் நினைவாற்றல் வேலை செய்கிறது. நீங்கள் வேலை செய்கிறீர்கள், உங்கள் நினைவாற்றலும் வேலை செய்கிறது. நினைவாற்றல் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டேயிருக்கிறது. அது என்ன செய்கிறது? நினைவாற்றலினால் என்ன செய்யமுடியும்? அதுவால் இப்போது இருப்பதே எதிர்காலத்திலும் இருக்கவேண்டும் என்று ஆசைப்படத்தான் முடியும். அதுவால் வேறு எதுவும் செய்யமுடியாது. அதுவால் ஞாபகத்திலிருந்து மறையாமல் வைத்துக்கொண்டு, அதையே எதிர்காலத்திற்கும் எடுத்துக்காட்டும். “எதுவெல்லாம் இருந்ததோ, அதுவெல்லாம் திரும்ப இருக்கவேண்டும், அல்லது எதுவெல்லாம் இருந்ததோ, அதுவெல்லாம் இருக்கக்கூடாது” என்று நினைவாற்றல் எப்போதுமே எதிர்காலத்திற்கு ஒரு வழிமுறையை, உங்களைச் சுற்றி நெய்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு வழிமுறையை நெய்ய அனுமதிக்க ஆரம்பித்து விட்டால், பின்பு உங்களால் சுதந்திரமாக இருக்கமுடியாது. நீங்கள் எப்போதும் ஒரு வழிமுறையில்தான் இருப்பீர்கள்.
காலியான விழிப்புணர்வாக இருப்பதை சுற்றி இந்த வழிமுறைகளெல்லாம் சுவர் போல் உண்டாகிறது. நீங்கள் எதிர்காலத்தினுள் ஒரு அடி எடுத்து வைக்கும் முன்பு, அது பல அடிகள் எடுத்து வைக்கிறது. அந்த வழி ஒரு திறந்த வழியாக இல்லை. அது சிறையாகிவிட்டது; நினைவாற்றல் அதை எப்போதும் குறுக்கிவிடுகிறது. ஆனால் நாம் எதிர்காலத்தில் சிறப்பாக வாழ்வற்கு, நினைவாற்றல் உதவுகிறது என்று நினைத்து ஏமாறுகிறோம். அது உதவுவது இல்லை. அது எதிர்காலத்தையும், கடந்தகாலம் போலவே ஆக்கத்தான் உதவுகிறது.
நினைவாற்றலினால், அதற்குத் தெரியாத எதையும் எடுத்துக்காட்டமுடியாது. அதற்கு தெரிந்தவைகளைத்தான் எடுத்துக்காட்ட முடியும் – அது எடுத்துக்காட்டும். அதன் பிடியில் அகப்பட்டுவிடாதீர்கள். மனம் எதிர்காலத்திற்காக எடுத்துக்காட்டுவதை ஒரு நிமிடம் கூட அனுமதிக்காதீர்கள். நிச்சயமாக, இந்த இறந்த பழக்கம் இல்லாமல் இருக்க சிறிது காலமாகும். இதைப்பற்றி அறிந்துகொள்ள ஆரம்பிப்பதுதான் தியானம். நீங்கள் அறிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டால், முழுமையாக அறிந்துகொண்டால், ஆழமாக அறிந்துக்கொண்டால் விழிப்புடன் இருந்தால், பின்பு இந்த நினைவாற்றல், உங்களைச் சுற்றி எதிர்காலத்தை நெய்யாமல் இருக்கும். நீங்கள் கனவு கண்டு கொண்டு இருந்தால்தான் அதுவால் நெய்யமுடியும்.
நினைவாற்றல் வேலை செய்வதற்கு, நீங்கள் கனவு கண்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பது அடிப்படை நிபந்தனை. அதனால்தான் உறக்கத்தில், உண்மையைப்போல் தெரியும் கனவுகளை – உண்மையைவிட அதிக உண்மையாகத் தெரியும் கனவுகளை உருவாக்குகிறது. நீங்கள் சாய்வான நாற்காலியில் ஓய்வாக உட்கார்ந்து கொண்டி ருக்கும்போது, பகல் கனவு இருக்கிறது. அவையெல்லாம் மனக்கோட்டைகள், சற்று உறங்கும்நிலையில் இருங்கள், உடனே நினைவாற்றல் நெய்ய ஆரம்பித்துவிடும், திட்டம் தீட்ட ஆரம்பித்துவிடும். அதுவே விழிப்புடன், கவனமாக இருந்தால், நினைவாற்றல் எதிர்காலத்திற்காக வேலை செய்வதை நிறுத்திவிடும். உள்ளேயும், வெளியேயும் விழித்திருப்பது, அதிகமாக விழித்திருப்பது தியானத்தின் ஆரம்பம்.
பல வழிகளில் இந்த விழிப்பை உருவாக்கலாம். உங்களை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்வதின் மூலம், நீங்கள் விழிப்புடன் இருக்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். இதை நீங்கள் கனவு காணும் நிலையில் கேட்டுவிட்டு, பின்பு நினைவாற்றல் “ஆமாம், நான் நாளை விழிப்புடன் இருப்பேன்” என்று இதை எடுத்துக்காட்டும். மேலும் இந்த நினைவாற்றல் இதைக் குறித்து யோசனைகள் செய்து, இதை ஒரு திட்டமாக்கிவிடும். நீங்கள் “விழிப்புடன் இருங்கள்” என்பதைக் கேட்டால், அதை வைத்து நீங்கள் ஒரு திட்டம் தீட்டி, நீங்கள் “ஆமாம், நான் இன்னொரு சமயம் விழிப்புடன் இருப்பேன்” என்று சொல்வீர்கள். மேலும் நான் விழிப்புடன் இருந்தால் மகிழ்ச்சித் தொடரும் என்றும், விழிப்புடன் இருப்பதின் மூலம் ஆனந்தம் வருவது நிச்சயம் என்றும் சொன்னால், நீங்கள் அதிகமாக கனவு காண ஆரம்பித்து, உங்கள் நினைவாற்றல் சம்பவங்களைக்கூட திட்டமிடும்.
உங்களை விழிப்புடன் இருக்கச் சொல்வதின்மூலம், நீங்கள் தியானத்தில் ஈடுபடப் போவதில்லை, அதனால் எந்த மாற்றமும் இருக்காது. அதனால் நான் சில உபாயங்களை உருவாக்குகிறேன். நீங்கள் விழிப்புடன் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை, கனவு காண முடியவே முடியாது என்ற வகையில், நான் சூழ்நிலைகளை உருவாக்குகிறேன்.
நான் சிலவற்றைச் சொல்கிறேன்.... உங்களைச் சுற்றி கார்பன்டை ஆக்ஸைடு (Carbon-Di- Oxide) அதிகமாக இருக்கும்போதுதான், கனவுகள் காண்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். நீங்கள் அதிகமாக கனவு காணும் நிலையில் இருப்பீர்கள். அதனால்தான் உங்களால் இரவைப்போல் பகலில் கனவு காண முடியாது. இரசாயன அம்சங்களில் மாற்றங்கள் இருக்கிறது. இரவு நேரங்களில் காற்றில் அதிகமான கார்பன்டை ஆக்ஸைடும் (Carbon-Di-Oxide), குறைவான ஆக்ஸிஜனும் (Oxygen) உள்ளது. அதனால் இதற்கு நேர்எதிர் மறையாக இருக்க வாய்ப்பிருந்தால், அதாவது நீங்கள் அதிகமான ஆக்ஸிஜனை (Oxygen) கொண்டிருந்து, உங்களைச் சுற்றியும் நிறைய ஆக்ஸிஜன் (Oxygen) இருந்து, கார்பன்டை ஆக்ஸைடு (Carbon-Di-Oxide) வெளியேற்றப்பட்டால், உங்களால் கனவு காணும் நிலையில் இருக்கமுடியாது. அதனால்தான் நான் தீவிரமாக மூச்சுவிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். இது உங்களுள் இரசாயன சூழ்நிலையை மாற்றுவதற்கு பயன்படும் ஒரு உபாயம் அவ்வளவுதான். ஆக்ஸிஜன் மேலும், மேலும், அதிகமாக இருக்கவேண்டும். ஆக்ஸிஜன் (Oxygen) அதிகமாகும் அளவிற்கு நீங்கள் குறைவாகவே கனவு காண்பீர்கள். மேலும் உங்கள் நினைவாற்றலினால், நீங்கள் கனவு காணும் நிலையில் இல்லாமல் இருந்தால், அதுவால் வேறு எதன் மூலமாகவும் வேலை செய்யமுடியாது.
காலையில் நாம் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்கிறோம். சூரியோதயத்துடன் காலையில் என்ன நடக்கிறது? கார்பன்டை ஆக்ஸைடு (Carbon-Di- Oxide) குறைந்து, ஆக்ஸிஜன் (Oxigen) அதிகமாகிறது. அதே இரசாயன மாற்றம் உங்களுக்குள்ளும் தேவைப்படுகிறது. இப்போதெல்லாம் தியான முகாமில் நாம் பயன்படுத்தும் முறைகள் எல்லாம், உடலில் அதிகப்படியான ஆக்ஸிஜன் (Oxigen) னை உருவாக்கும் சக்தி வாய்ந்த வழிகளாகும்.
அதில் மூன்று நிலைகள் முடிந்து நாலாவது நிலைக்கு ஒரு மாணவர் வரும்போது, அவர் அபரிமிதமான வாழ்க்கையின் ஆக்கசக்தியினால் (Life Energy) நிரம்பியிருக்கிறார், அது அவரை மிக்க விழிப்புடன் இருக்கச்செய்யும்.
உங்களை விழிப்புடன் இருக்கவைக்க இன்னொரு சாதனம் குண்டலினியை (Kundalini) கடைபிடிப்பதாகும். இது பாலுணர்வின் ஆக்கசக்தியை தியானத்திற்கும், விழிப்புடன் இருப்பதற்கும் பயன்படுத்தும் ஒரு முறையாகும். இது யார் ஒருவருடைய பாலுணர்வின் ஆக்கசக்தியை சுலபமாகவும், இயற்கையாகவும், தியானத்திற்காக நெறிப்படுத்த முடிகிறதோ, அவருக்கு இது மிக்க பயனுள்ளதாக இருக்கும். வேதம் (Vedas) உபநிஷத் (Upanishid) காலத்தில், பழங்காலத்திய இந்தியாவில், மக்கள் இயற்கைத்தன்மையுடனும், சாதாரணமாகவும் இருந்தார்கள். அதனால் அவர்களால் சுலபமாக அவர்களுடைய பாலுணர்வின் ஆக்கசக்தியை மாற்ற முடிந்தது. அவர்களுக்கு பாலுணர்வு என்பது ஒரு மனரீதியான பிரச்சனையாகவே இல்லை. அது ஒரு பிரச்சனையே இல்லை. அது பிரச்சனையாகத் தொடங்கினால், பின்பு அது மனரீதியாகிறது.
இன்று, இந்த நவீன உலகம், பாலுணர்வின் வக்கிரத்துடன், பாலுணர்வை சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகிவிட்டது. இதனால் அமானுஷ்ய சக்தியை ஒரு குறிப்பிட்ட அமானுஷ்ய வழியின் மூலம் இயங்க செய்வதுதான் குண்டலினி (Kundalini). ஆனால் இது, இப்போது கடினமாகிவிட்டது. ஆனால் இந்த முறையின் மூலம் சில நேரங்களில் குண்டலினி (Kundalini) எழும்புவதை உணர்கிறார்கள். அது வேறு விஷயம். யாராவது ஒருவர் தன்னுடைய குண்டலினி (Kundalini) எழும்புவதை உணர்ந்தால், பின்பு நான் அவருடைய குண்டலினியில் வேலை செய்வேன். பின்பு அவருக்கு குண்டலினியில் வேலை செய்வதற்கான சில முறைகளை கொடுப்பேன். ஆனால் குண்டலினியின் உணர்வு சுயேட்சையாக வந்தாலேயொழிய, நான் அந்த குறிப்பிட்ட நுனியை தொடுவதேயில்லை. நான் அதைப்பற்றி பேசுவதும் கிடையாது. நீங்கள் அதை தவிர்த்துவிட்டுச் செல்லலாம். இந்த காலம் இருக்கும் விதத்தில், நீங்கள் அதை தவிர்த்துதான் செல்லவேண்டும். இயற்கையான, மனம் இல்லாமல் இருக்கும் உடல்ரீதியான பாலுணர்வில்தான் குண்டலினி (Kundalini) யால் வேலை செய்யமுடியும் – கபடமற்ற மனம் இருப்பவர்களுக்கு இது வேலை செய்யும்.
நீங்கள் போய்க்கொண்டிருக்கும் பாதையில், எங்கோ ஓர் இடத்தில் நீங்கள் தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது, உங்களுடைய மனம் தன்னுடைய பிடியை நழுவவிடுகிறது. நான் முன்பு சொன்னதுபோல் நீங்கள் தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது, உங்களால் உடல் நினைவாற்றலுக்கும், மன நினைவாற்றலுக்கும் இடையே வேறுபடுத்த முடியும். இவ்விரண்டு நினைவாற்றலுக்கும் இடையே வேறுபாடும், பிரிவும் இருக்கும்போது, உடலைப்பற்றி, மனரீதியாக நினைப்பதுக் குறைந்துக்கொண்டே வந்துவிடும், பின்பு உடல் தன்னுடைய விவேகத்தை மட்டும் உபயோகித்து, தன்னுடைய கடமையைச் செய்யட்டும்.
சில நேரங்களில் குண்டலினி (Kundalini) விரைவாக செயல்படும். அதனால் அது தானாகவே வேலை செய்தால் நல்லது. நான் அதை நேரடியாக கடைபிடிக்க அனுமதிக்க மாட்டேன். மறைமுகமாக அதுவாகவே வேலை செய்யும். மேலும் அது பலமுறை வருகிறது – குண்டலினி (Kundalini) கடைபிடிப்பவர்களில், குறைந்தபட்சமாக முப்பதிலிருந்து நாற்பது சதவீதம் மக்களாவது குண்டலினி (Kundalini) யை உணர்கிறார்கள். அவர்கள் அதை உணரும்போது, பின்பு நான் தயாராக இருக்கிறேன், பின்பு அவர்கள் தொடர்ந்து செல்லலாம். அவர்கள் குண்டலினி (Kundalini) யின் கதவு வழியாக, இந்த முறையின் மூலமாக, தொடர்ந்து செல்வார்கள். ஆனால் இந்தமுறை மறைமுகமாகத்தான் குண்டலினி (Kundalini) யுடன் தொடர்புடையது, நேரடியாக அல்ல.
இந்த உலகம் முழுவதும் பாலுணர்வை ஒரு இயற்கையான விஷயம் என எடுத்துக்கொண்டாலேத் தவிர, என்னைப் பொறுத்தவரை, நேரடியான குண்டலினி (Kundalini) முறைக்கு வருங்காலம் கிடையாது. பாலுணர்வில் முதிர்ச்சி (Sexual Maturity) பெறுவதற்கு முன்பு உபயோகப்படுத்தக்கூடிய குண்டலினி (Kundalini) முறைகள் இல்லை. குண்டலினி (Kundalini) க்கு ஒரு பாதையை உங்களுள் பாலுணர்வு முதிர்ச்சிக்கு முன்னால் உருவாக்கப்பட்டாலே ஒழிய – பாலுணர்வு இயற்கையானதாக எடுத்துக்கொண்டாலும்கூட – நீங்கள் வக்கிரமாக ஆகாவிட்டாலும், நீங்கள் மிருகமாக ஆவதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது.
நான் உபநிஷத்தில் (Upanishad) லிருந்து ஒரு கதையை சொல்கிறேன்.
ஒரு ரிஷி தன்னுடைய மனைவியுடனும், மகனுடனும் உட்கார்ந்திருந்தார். ஒரு மனிதன் அந்த இடத்தைக் கடந்துசெல்லும்போது, அவன் ரிஷியின் மனைவியுடன் காதல் வயப்பட்டான். அவன் தன்னுடைய வீடு வரை, அவளை வரும்படி அழைத்தான். இந்த மனைவியும் அவனுடன் சென்றுவிட்டாள். இதற்கு ரிஷியிடமிருந்து எந்த விமர்சனமோ, அல்லது ஆட்சேபணையோ இல்லை. ஆனால் மகன் கோபமடைந்து, தன்னுடைய தந்தையிடம், “இது மிருகத்தனமாக இருக்கிறது, இது மிருகங்கள் செய்வதுபோல் இருக்கிறது, இதை அனுமதிக்கமுடியாது. நான் ஒரு அறநெறியை வகுத்தால், நான் இதை அனுமதிக்கமாட்டேன். இது மிருகங்கள் செய்வதுபோலவே உள்ளது” என்றான். அதற்கு தந்தை “இது மிருகங்கள் செய்வது போல் அல்ல, ஆனால் அதற்கு மாறாக உங்கள் ஆத்திரம், உங்கள் கோபம்தான், மிருகங்கள் செய்வதுபோல் இருக்கிறது, இது மிருகங்கள் சண்டைபோடுவதுபோல, இது அறநெறி சண்டையை வெளிக்காட்டுகிறது, இப்போது நடந்ததை எந்த மிருகமும் அனுமதிக்காது, அது சண்டையிடும்” என்றார்.
இந்த மனோபாவம், தந்தையின் மனோபாவம், உண்மையில் மிக உயர்ந்தது. உங்கள் மனோபாவம்தான் மிருகத்தன்மையுடன் இருக்கிறது என்கிறார். மிருகங்கள் தன்னுடன் துணைக்காக சண்டைபோடும், அவைகளுக்கு நிலப்பரப்பும், தனக்கு மட்டும்தான் இருக்கவேண்டும் என்ற உணர்வும் இருக்கிறது. நீங்கள் அதைத்தாண்டி சென்றால், அவைகள் சண்டையிடும். ஆனால் தந்தை இவ்வாறு சொல்கிறார், “நான் மனிதன், யாரோ ஒருவர் உன் தாயைப் பார்த்து காதல் வயப்பட்டால், இதற்கு யார் மீதும் தவறில்லை, மேலும் உன்னுடைய தாய், தயாராக இருந்தால், நான் யார்? நானும் இதைப்போலவேதான் அவளிடம் காதல் வயப்பட்டேன். இதில் எந்த வேறுபாடும் இல்லை, முற்றிலும் இதைப்போல்தான் நான் அவளிடம் காதல் வயப்பட்டேன். அவள் என்னைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாள், அவள் என் மனைவியாக இருக்க சம்மதித்தாள், ஆனால் என்னுடைய உடமையாக அல்ல, யாரோ இன்னொருவர் காதல் வயப்பட்டிருக்கிறார். மனித பலவீனங்கள் எனக்குத் தெரியும். ஏனெனில் எனக்கு என்னைப்பற்றித் தெரியும், நானே இதைப்போல் விழுந்திருக்கிறேன். அதனால் தவறாக ஒன்றும் நடக்கவில்லை, மேலும் நான் மிருகமல்ல, அதனால் இதற்காக என்னால் சண்டைபோடமுடியாது, அவனும் என்னைப் போல் ஒரு மனிதன்தான் என்பது எனக்குத்தெரியும், உன்னுடைய தாயும் அழகாக இருக்கிறாள், நானும் அவளுடன் காதல் வயப்பட்டிருக்கிறேன்” என்றார்.
ஆனால் இதுதான் உயர்ந்த அறநெறி. இதை பாலுணர்வின் முதிர்ச்சிக்கு முன்னால் தான் வளர்த்துக் கொள்ளமுடியும் – நீங்கள் பயிற்சி பெற்றிருந்தால்தான், இல்லா விட்டால் இல்லை. பாலுணர்வு முதிர்ச்சிக்குப்பிறகு, உங்களால் ஆக்கசக்தியை வழிநடத்தமுடியாது. அது மிகக்கடினமானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தடம் முன்பே இருந்தால், பின்பு ஆக்கசக்தி இயற்கையாக பாலுணர்வில் பாய்வதுபோல் இதிலும் பாயும்
இந்த மனிதன், இந்த தந்தை, இந்த ரிஷிக்கு, குண்டலினி (Kundalini) தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரால் அப்படி இருந்திருக்க முடியாது, சாத்தியமே இல்லை. இந்த ரிஷிக்கு குண்டலினி (Kundalini) வளர்ச்சி இருந்திருக்கிறது – ஆக்கசக்தி மேல்நோக்கிச் செல்வது – இல்லாவிட்டால் இந்த மனோபாவம் வராது.
ஆக்கசக்தி கீழ்நோக்கி செல்வது எப்போதும் முரட்டுத்தனமாக இருக்கும். ஆக்கசக்தி மேல்நோக்கி செல்வது எப்போதும் அன்பாக, புரிந்துக்கொள்ளும் தன்மையுடன், இரக்கத்துடன் இருக்கும்.
அதனால் இந்த முறை மறைமுகமானது. இது பலக்கதவுகளின் மூலம் வேலை செய்கிறது. உங்களுடைய குண்டலினி (Kundalini) யை உபயோகப்படுத்த முடிந்தால், இந்த முறை அதை பயன்படுத்தும். இது அதனுடைய பாதையை எடுத்துக்கொள்ளும், இது இணங்கும் தன்மை வாய்ந்தது. இந்த முறை முழுமையாக இணங்கும் தன்மை வாய்ந்தது. உங்கள் குண்டலினி (Kundalini) தயாராக இருந்து, ஆனால் அதை உபயோகப்படுத்த முடியவில்லை என்றாலோ, உபயோகப்படுத்துவது ஆபத்தானது என்றாலோ, அது பயன்படுத்தாது. பின்பு வேறு வழிகள், வேறு பாதைகள் இருக்கின்றன. இதனால் வேறு பாதைகளை பயன்படுத்தமுடியும்.
அந்த வேறு வழிகள் பெயரிடப்படவில்லை, ஏனெனில் பழங்காலத்தில் இதை பயன்படுத்த யாரும் சொல்லித்தரவில்லை. ஆனால் வேறு வழிகள் இருக்கின்றன. மகாவீரர் (Mahavira) குண்டலினி (Kundalini) யைப்பற்றி பேசியதேயில்லை. ஒருபோதும் இல்லை. புத்தர் குண்டலினி (Kundalini) யைப்பற்றி பேசியதேயில்லை. ஒருபோதும் இல்லை. கிறிஸ்து (Chirsy) க்கு இதைப் பற்றி தெரியவேத் தெரியாது. லாவோ ஸூ (Lao Tzu) இதைப்பற்றி கேள்விப்பட்டதேயில்லை. அவர்களெல்லாம் வேறு வழியின் மூலம் வந்தவர்கள்.
புத்தர் குண்டலினி (Kundalini) மூலம் வந்திருக்க முடியாது. அவருக்கு பாலுணர்வு என்பது முற்றிலும் சலிப்படைந்த ஒன்று. அவருக்கு அதில் குறைந்தபட்ச ஆர்வம்கூட கிடையாது. இது கண்டிப்பாக இப்படித்தான் நடந்திருக்கும். ஏனெனில் அவர் தந்தை தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து புத்தருக்கு அழகிய பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர் ராஜ்ஜியத்தில் இருந்த ஒவ்வொரு அழகிய பெண்ணும், புத்தரின் அரண்மனையில்தான் இருந்தாள். அவர் வெறுப்படைந்தார். இது கண்டிப்பாக நடந்திருக்கும். இந்த சூழ்நிலையில் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும். அவர் பாலுணர்வின் மீது வெறுப்புக்கொண்டதால் அவரால், இதே ஆக்கசக்தியை மாற்றமுடியும் என்பதை கற்பனைக்கூட செய்துபார்க்க முடியவில்லை. அதற்கு அவர் முயற்சிக்கவேயில்லை. பாலுணர்வின் ஆக்கசக்தியை தெய்வீகச் சக்தியாக மாற்றமுடியும் என்று யாராவது அவரிடம் சொல்லியிருந்தால் கூட, அவர் அதை கேட்டிருக்கமாட்டார். ஏனெனில் அவருக்கு பாலுணர்வை பற்றி மிக அதிகமான அளவுக்கு தெரிந்திருந்ததால், அவரைப் பொறுத்தமட்டில் அதில் எந்த தெய்வீகமும் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. அது சிற்றின்பமானது. புத்தர் வேறு ஒரு வழியைப் பயன்படுத்தினார். அவர் குண்டலினி (Kundalini) யைப் பற்றி பேசவேயில்லை. ஆனால் அவர் மையங்கள், சக்கரங்களைப்பற்றி பேசினார். அவர் சக்கரங்களின் மூலம் வேலை செய்தார்.
நீங்கள் குண்டலினி (Kundalini) க்காக முயற்சி செய்தால், பின்பு அதில் சீரான முறைகள் இருக்கின்றன. குண்டலினி தொடர்ச்சியானது. அது (Thermometer) தர்மாமீட்டரைப் போல தொடர்ச்சியானது. அது தர்மாமீட்டரைப் (Thermometer) போல மெல்ல மெல்ல எழும்பும். இதன் வழி சீராகத் தொடரும். புத்தர் இந்த வழியைப் பயன்படுத்தவில்லை. ஆனால் அவர் சக்கரங்களின், திடீர் தாண்டுதலில் வேலை செய்வது பற்றி பேசினார். ஒரு சக்கரத்திலிருந்து இன்னொரு சக்கரத்திற்கு ஒருவர் தாண்டுவார். அதில் தொடர்ச்சி இல்லை, தாண்டுதல்தான். இந்த தாண்டுதல் முறையினால் புத்தர், புதுவிதமாக இந்த உலகமே மாறப்போவதை கற்பனை செய்து பார்த்தார். இந்த உலகத்தில் எதிலும் தொடர்ச்சி இல்லை, தாண்டுதல்தான் இருக்கிறது.
எதுவுமே தொடர்ச்சியாக இல்லை. மலர் மொட்டுடன் தொடர்ந்து இல்லை. மலர் ஒரு தாண்டுதல். இளமைப் பருவம் என்பது குழந்தைப் பருவத்தின் தொடர்ச்சி அல்ல. அது ஒரு தாண்டுதல். அதனால் புத்தமத வேதாந்திகள் எல்லாம் இப்போது மகிழ்ச்சி யடைகிறார்கள். ஏனெனில் இன்று அறிவியலும், தொடர்ச்சியாக எதுவும் இல்லை, எல்லாமே தாண்டுகிறது, தாண்டுதல் இருப்பதாக சொல்கிறது. நமக்குத் தொடர்ச்சி யாய் இருப்பதுபோல் தோன்றுகிறது, ஏனெனில் நம்மால் அந்த இடைவெளியைப் பார்க்கமுடியவில்லை.
நீங்கள் இந்த வெளிச்சத்தை தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது தொடர்ச்சியானது அல்ல. எலக்ட்ரான்ஸ் (Electrons) தாண்டுகிறது, ஆனால் இடைவெளி மிகக் குறைவாக இருப்பதினால், உங்கள் கண்களால் அதை தெரிந்துக்கொள்ள முடியவில்லை. அது தொடர்ச்சியானது அல்ல. அது தாண்டுகிறது. ஆனால் தாண்டுதல் மிக வேகமாக இருப்பதால், ஒரு அணு இறந்து, மற்றொரு அணு அதிவேகமாக வருவதால், அதன் இடைவெளி கவனிக்கப்படுவதில்லை. திடீரென தாண்டுதல் இருக்கிறது. நீங்கள் ஒரு தீச்சுடரை மாலையில் ஏற்றி, அதை மறுநாள் காலையில் அணைத்தால், நீங்கள் அதே தீச்சுடரைத்தான் அணைத்ததாக நினைப் பீர்கள். ஆனால் அந்த தீச்சுடர் பல ஆயிரம் தடவை தாண்டி, அது ஆவியாகி, புதியது வந்து விட்டது. ஆனால் இது தொடர்ச்சியானதுபோல் தெரிகிறது.
ஹிராக்கிலிட்டஸ் ( Heraclitus) உங்களால் ஒரே நதியில் இருமுறை கால்வைக்க முடியாது என்றார். ஏனெனில் நதி பாய்ந்துக்கொண்டேயிருக்கிறது. அதனால் உங்களால் இருமுறை அதில் காலை வைக்கவே முடியாது. ஆனால் புத்தரோ “நீங்கள் ஒருமுறைகூட அதே நதியில் கால் வைக்க முடியாது” என்கிறார், ஏனெனில் நதி ஓடிக்கொண்டிருக்கிறது, நீங்கள் அதன் வெளிப்புறத்தைத் தொட்டவுடன் அது போய்விடுகிறது. நீங்கள் ஆழமாக போவதற்குள் அது மறுபடியும் போய்விடுகிறது. இன்னும் ஒரு அடி வைப்பதற்குள் பல நதிகள் சென்று விடுகின்றன. அதனால் இது எப்போதும் தாண்டும் முறைதான் என்கிறார்.
இந்த தாண்டுதல் கொள்கை புத்தருக்கு வந்தக் காரணம் அவர் குண்டலினி ( Kundalini) யை கடந்து வரவில்லை. அவர் ஒரு சக்கரத்திலிருந்து ஒரு சக்கரத்திற்கு தாண்டியே கடந்து வந்ததால், அவர் ஏழு சக்கரத்தைப் பற்றி பேசுகிறார். இதுவும் சாத்தியமானதே. நான் உங்கள் வீட்டிற்கு குதித்து குதித்து வரலாம். இதன்மூலம் நான் சில இடங்களை மட்டும்தான் தொடுவேன். இடைவெளிகள் இருக்கும். தொடர்ச்சி இருக்காது.
மகாவீரர் சக்கரங்களைப் பற்றியோ அல்லது தாண்டுதலைப் பற்றியோ பேசவில்லை. அவர் வெடிப்பதை ( Explosion) பற்றிதான் பேசினார். நீங்கள் இதுவாக இருக்கிறீர்கள், பின்பு நீங்கள் அதுவாக இருக்கிறீர்கள். இதில் தாண்டுவதற்கு நிறைய நிலையங்கள் கூட இல்லை. இது இன்னொரு வழி – வெடிப்பது. ஒரு வினாடிக்கு முன்பு நீங்கள் இதுவாக இருந்தீர்கள். ஒரு வினாடிக்குப் பிறகு நீங்கள் அதுவாக இருக்கிறீர்கள். இதில் தொடர்ச்சியும் இல்லை, தாண்டுதலும் இல்லை. வெடிப்பதுதான் இருக்கிறது. இதில் நடுவில் கடப்பதற்கு மையங்கள் எதுவும் இல்லை.
சென் (Zen) னில் இரண்டு பிரிவுகள் உள்ளன: ஒரு பிரிவு சென்(Zen) னின் திடீர் பள்ளி என்றும், இன்னொரு பிரிவு சென் (Zen) னின் சீரான பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் சென் (Zen) னின் சீரான பள்ளியில்கூட, குண்டலினி (Kundalini) யைப் பற்றி பேசப்படவில்லை. அது வேறொரு வழியை பயன்படுத்தியிருக்கிறது. குண்டலினி (Kundalini) யை பற்றிய பேச்சே சென் (Zen) னில் இல்லை. சென் (Zen) னின் சீரான பள்ளிக்கூட, வேறொரு வழியைப் பயன்படுத்தியிருக்கிறது.
உடலுக்கு பல வழிகள் இருக்கின்றன. அதுவே ஒரு மாபெரும் உலகம். நீங்கள் மூச்சின் மூலம் முயற்சிக்கலாம், மூச்சின் மூலம் உங்களால் தாண்டவும் முடியும். நீங்கள் பாலுணர்வின் மூலம் முயற்சிக்கலாம், அதன் மூலம் நீங்கள் தாண்டமுடியும். நீங்கள் விழிப்புடன் இருப்பதின்மூலமும் முயற்சிக்கலாம் – அதாவது நேரடியாக விழிப்புணர்வின் மூலம் – பின்பு நீங்கள் அங்கிருந்து தாண்டலாம். இவ்வாறு விழிப்புணர்வுடன் நேரடியாக முயற்சிப்பது, ஆழ்ந்த வழிகளில் ஒன்று. ஒரு வழியே கூட பல முறைகளில் உபயோகப்படுத்தலாம். நீங்கள் இதன் சிக்கலை புரிந்துகொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு, ஒரு சாலையை பல வழிகளில் பயன்படுத்தலாம். ஒருவர் சொகுசு காரின் (Car) மூலம் பயன்படுத்தலாம், இன்னொருவர் இரண்டு சக்கர வண்டியின் மூலம் சுமைகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தலாம், இன்னொருவர் நடந்து பயன்படுத்தலாம். வழி ஒன்றுதான், ஆனால், முறைகள்தான் முற்றிலும் வேறுபட்டது. ஒருவர் சொகுசுகாரில் உட்கார்ந்து செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் இடையே என்ன ஒற்றுமை இருக்கிறது? இவ்விரண்டிற்கும் பொதுவாக ஒன்றுமில்லை. சொகுசு காரில் நீங்கள் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து வருகிறீர்கள். நீங்கள் எதுவும் செய்வதில்லை. அதனால் யாராவது ஒருவர் “சும்மா உட்காருவதின் மூலம் இந்த வழியைக் கடந்தேன்” என்று சொல்லலாம். இதன்மூலம் அவர் எந்தப் பொய்யும் சொல்லவில்லை. ஆனால் நடந்து மட்டுமே அந்தப் பதையை கடந்தவன், எப்படி ஒருவன் உட்காருவதின் மூலம் கடக்கமுடியும் என்பதைத் தெரியாதவன், இந்த முறையை மறுப்பான். ஆனால் அவனும் சரியே.
ஒரே ஒரு வழியை பலவிதங்களில் பயன்படுத்தலாம் – உதாரணத்திற்கு விழிப்புடன் இருப்பது. குருட்ஜிஃப் (Gurdjieff) இதை பயன்படுத்துகிறார். ஆனால் இதை அவர் ஞாபகம் வைத்துக்கொள்ளுதல் என்பார். இந்த முறையும் வித்தியாசமானது. வழி ஒன்றுதான் – விழிப்புணர்வை பயன்படுத்தவேண்டும் – ஆனால் நினைவுவைத்துக் கொள்வதின் மூலம், விழிப்புடன் இருப்பதின் மூலம் அல்ல. இதில் என்ன வித்தியாசம்? நினைவு வைத்துக்கொள்ளுதல் என்றால், நீங்கள் தெருவில் இருக்கிறீர்கள், நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிடம் நில்லுங்கள், நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். உங்களைச் சுற்றிப் பாருங்கள், முழுமையாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு நிமிடம்கூட நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஆனால் நாம் மறந்துவிடுகிறோம். நாம் நினைவில் வைத்துக்கொள்வதே இல்லை. நான் உங்களைப் பார்த்தால், நான் என்னை மறந்து உங்களைப் பார்க்கிறேன். விழிப்புடன் இருப்பது ஒருமுனை அம்புக்குறியுடன் இருக்கிறது. இன்னொரு முனையில் அம்புக்குறி இல்லை. குருட்ஜிஃப் (Gurdjieff) இதை இரண்டுமுனைகளிலும் அம்புக்குறியாக்க சொல்கிறார். நீங்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்கிறீர்கள். அந்த பேச்சாளர் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்பதற்கு முதல் அம்புக்குறியும், அத்துடன் நீங்கள் உங்களைப் பற்றிய விழிப்புடனும் – கேட்பவரை பற்றியும் விழிப்புடன் இருந்தால், அது இரண்டாவது அம்புக்குறி. நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போது நீங்கள் உங்களையே மறந்துவிடாதீர்கள். நீங்கள் கேட்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். யாரோ ஒருவர் பேசுகிறார். நீங்கள் கேட்டுக்கொண்டி ருக்கிறீர்கள். இவ்விரண்டையும் கடந்து சென்று, நினைவு வைத்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்களே இரண்டு பக்க அம்புக்குறிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். வழி அதேதான். ஆனால் முறைதான் வேறுபட்டுள்ளது.
கிருஷ்ணமூர்த்தி “இதேபோல் நினைவு வைத்துக் கொள்ளாதீர்கள், இது ஒரு பதட்டமான முயற்சியாகிவிடும், முழுமையாக இருப்பவைகள் எல்லாவற்றையும் பற்றி விழிப்புடன் இருங்கள், நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். அவன் அங்கே இருக்கிறான் என்று தேர்ந்தெடுக்காதீர்கள். எல்லாவற்றையும் உள்ளடங்கிய விழிப்பு இருக்கட்டும். இதை ஒரு பக்கமாக குவிக்காதீர்கள் – ஒரு பக்கமாக குவிக்கப்படாத விழிப்புணர்வு நான் பேசிக்கொண்டிருக்கிறேன், நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கி றீர்கள், ஹாரன் (Horn) சத்தம் கேட்கிறது, வண்டிகள் கடந்து செல்கிறது..... எல்லாம் இருந்துக் கொண்டிருக்கிறது – விழிப்பு ஒரு பக்கமாக குவிக்கப்படாமல் இருக்கிறது. இதை அம்புக்குறிகள் ஆக்காமல் ஒரு பக்கமாக குவிக்காமல் இருங்கள்” என்று சொல்கிறார். வழி அதேதான். ஆனால் முறைதான் வேறுபட்டுள்ளது.
தந்திராவும் (Tantra) அதே முறையை, அதே வழியை, வேறு ஒரு விதத்தில் பயன்படுத்துகிறது. இப்படி ஒரு விதத்தை கற்பனைக்கூட செய்துப்பார்க்க முடியாத வகையில் பயன்படுத்துகிறது. அவர்கள் போதை மருந்துகளை பயன்படுத்தினார்கள் – பாங்க் (Bhang), சாராஸ் (Charas), கஞ்சா (Ganja), மதுபானம் (Wine). அவர்களின் முறை இதுதான்: போதை மருந்துகளை எடுத்துக்கொண்டு, ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும், விழிப்புணர்வை விட்டுவிடக்கூடாது. போதை மருந்தை எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும், ஆனால் நீங்கள் விழிப்புடன் இருக்கிறீர்கள் என்று விழிப்புடன் இருக்க வேண்டும். தன் நினைவை இழக்கக்கூடாது. போதை மருந்துகள் எல்லாம் பயன் அளிக்காத அளவிற்கு முறைகள் இருக்கின்றன. அப்போது பாம்பின் விஷம் பயன்படுத்தப்பட்டது. பாம்பை நாக்கில் கொட்டவைத்து, பாம்பு நாக்கை கொட்டியப் பிறகும் நீங்கள் விழிப்புடன் இருந்தால்தான் உங்களால் தாண்டமுடியும் – இல்லாவிட்டால் இல்லை. வழி ஒன்றுதான். ஆனால் முறைகள்தான் முற்றிலும் வேறுபட்டது.
இந்த தந்திரா (Tantra) பயிற்சியில் போதை மருந்துகள் எதுவும் வேலை செய்யாமல், நீங்கள் தன் நினைவுடன் இருந்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் தன் நினைவுடன் நடந்துக் கொண்டிருந்தால், பின்பு உங்களுக்கு ஏதோ பளிங்குப் போல் ஆகியிருக்கிறது. ஏதோ ஒன்று உடலின் இரசாயனத் தன்மையைத் தாண்டி சென்றுவிட்டது, இல்லாவிட்டால் உடலின் இரசாயனம் உங்களைப் பாதிக்கும். இப்போது நீங்கள் இரசாயனத் தன்மைக்கு அப்பாற்பட்டு இருக்கிறீர்கள். இரசாயனம் எங்கோ உங்களது உடலில் வேலைசெய்துக்கொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். அதுவால் உங்களைத் தொடமுடியாது.
அதனால் பல வழிகள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு வழியையும் பல முறைகளில் பயன்படுத்தலாம். என்னுடைய முறை, நேரடியாக எந்த வழியுடனும் சம்மந்தப் படவில்லை. அது பறக்கக்கூடிய, நீந்தக்கூடிய மற்றும் நீந்த, சாலையில் போகக்கூடிய திறன் வாய்ந்த ஒரு வண்டியைப் போல் ஆகும். உங்களுடைய தனிப்பட்ட குணத்திற்கு என்னத் தேவையோ, அந்தத் தேவையே முறையை மாற்றி, வழியையும் மாற்றும். இதை நீங்கள் பலமுறைகள் ஒன்றுசேர்ந்தது என்றும் சொல்லலாம். இது மறைமுகமானது. இது நேரடியாக இருக்க முடியாது. நான் முறையைக் கொடுப்பேன். உங்கள் மெய்யிருப்பு (Being) அதற்கு வழியைக் (Route) கொடுக்கும். விழிப்பு பெற்ற ஆக்கசக்தியினால் எந்த வழியை வேண்டுமானாலும் பயன்படுத்தமுடியும்: தந்திரா (Tantra) வழி, புத்தர் வழி, ஜென், சமணர் வழி, குருட்ஜிஃப்பின் (Gurdjieff) வழி, சுஃபி (Sufi) யின் வழி...... அதுவால் எந்த வழியை வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். நான் இப்படி சொல்லும்போது இது ஒரு ஆதாரமற்ற கற்பனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நான் அவ்வாறு அதை வகுத்திருக்கிறேன் என்பதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.
பல வழிகளில் முயற்சித்தவர்கள் என்னிடம் வந்து இந்த முறைகளை உபயோகிக்கும்போது, அது அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு உதவுகிறது. யாராவது ஒருவர் குண்டலினி (Kundalini) முயற்சித்துவிட்டு, என்னிடம் வந்தால் அந்த முறையின் மூலமாகவே அவருக்கு வேலை செய்யும். அவர் வழியிலேயே அவருக்கு உதவுகிறது. அவர் “இந்த முறை மிகவும் நன்றாகயிருக்கிறது, முன்பு இருந்த குண்டலினி (Kundalini) முறை இவ்வாறு ஆழ்ந்து ஒரு நோக்குடன் வேலை செய்யவில்லை” என்று சொல்கிறார். இது ஒரு குண்டலினி (Kundalini) முறையே அல்ல. ஆனால் இது வளைந்து கொடுக்கும் தன்மை வாய்ந்தது. இந்த முறையே தன் வழியைக் கண்டறியும். நீங்கள் முறையை செய்யவேண்டும் அவ்வளவுதான். பின்பு எல்லாமே அந்த முறையே செய்து கொள்ளும்.
வரப்போகும் உலகத்திற்கும், இப்போது இருக்கின்ற உலகத்திற்கும், இதுபோன்ற வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள முறைகள்தான் பயன்தரும். ஏனெனில் இப்போது பலவகையான மக்கள் இருக்கிறார்கள். பழைய உலகத்தில் இப்படி இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான் இருந்து வந்தார்கள். ஒரு இடத்தில் இந்துக்கள் இருந்தால், அங்கே இந்துக்கள் மட்டும்தான் இருந்தார்கள். அங்கே முகமதியர்கள் இருக்கமாட்டார்கள். பார்க்கப்போனால், அவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அவர்களுக்கு, மற்றவர்களின் பழக்க வழக்கங்கள் தெரியாது, அதனால் அவர்கள் குழப்பமடையவில்லை. அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருந்தார்கள். அவர்கள் திபெத்தின் (Tibet) புத்தர்களாக இருந்தால், அவர்கள் திபெத்தின் (Tibet) புத்தர்களாகவே இருந்தார்கள். அவர்கள் வேறு எதையும் கேள்விப்பட்டதேயில்லை. எல்லோரும் ஒரே வகையில் பதப்பட்டி ருந்தார்கள். எல்லோரும் ஒரே சமூக சூழ்நிலையில் வளர்க்கப்பட்டார்கள். அதனால் ஒரே முறைதான் தேவைப்பட்டது, அது வேலை செய்தது.
இப்போது அதுவெல்லாம் கடினம். மனங்கள் எல்லாம் குழப்பமடைந்துள்ளது. பார்க்கப் போனால் ஒரே வகை கிடையவேக் கிடையாது. ஒவ்வொருவரும் பலவகைப் பட்டவர்கள். அந்த அளவிற்கு மற்றவர்களின் தாக்கங்களும், எதிர்மறையான தாக்கங்களும் இருக்கிறது. இருக்கின்ற எல்லா மதமும் “மற்றவர்களுடையதை படிக்காதீர்கள், மற்றவர்களின் ஆசிரியர்களிடம் போகாதீர்கள் என்று சொல்லும்” இது ஒரு சாதாரண பிடிவாதம் அல்ல. இது பிடிவாதம்போல் தெரிகிறது. ஆனால் இது அடிப்படையாக, தங்களுடைய வகையை பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான். மேலும் இது தேவையில்லாத குழப்பத்திற்கு வழிவகுக்கும். இதனால் இதுவும் இல்லாமல், அதுவும் இல்லாமல், எந்த முறையையும் முழுமையாக பயன்படுத்தமுடியாது. அதனால் ஒருவர் குழப்பம் அடையக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தார்கள்.
ஆனால் இப்போது இது சாத்தியமில்லை. இப்போது எல்லோருமே குழப்பமடைந் திருக்கிறார்கள், மேலும் உதவியும் இல்லை. இப்போது ஒரே வகையாகயிருக்க சாத்தியமும் இல்லை, மேலும் ஒரு வகையை பாதுகாக்கவும் முடியாது. அதனால் நமக்கு எந்த வகையையும் சேராத, எல்லா வகையினரும் பயன்படுத்தக்கூடிய புதிய முறைகள் தேவைப்படுகிறது. அதனால் இந்த முறை இணங்கும் தன்மைக் கொண்டது, நான் குண்டலினி (Kundalini) யை மட்டுமோ அல்லது வேறு ஒரு குறிப்பிட்ட முறையிலோ அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் எல்லா முறைகளுடனும் ஆழ்ந்த அக்கறையுடன் இருக்கிறேன்.
நீங்கள் இந்த முறையை பயன்படுத்துங்கள். பின்பு அந்த முறையே வழியை கண்டுபிடிக்கும் – எந்த வழி உங்களுக்கு வேலை செய்யுமோ, அந்த வழியில் அது வேலை செய்யும். நான் இதை முறையிடமே விட்டுவிடுகிறேன். அந்த முறை கண்டுபிடிக்கிறது. அது நீங்கள் கண்டுபிடிப்பதைவிட மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கிறது. ஆனால் இந்த கண்டறிதல் நினைவற்ற நிலையில் நடக்கிறது. ஒரு வீட்டில் நெருப்பு இருப்பதுபோல் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. நீங்கள் ஒரு சூழ்நிலையில் இருக்கிறீர்கள், உங்களால் ஓட முடிந்தால் ஓடுங்கள். உங்களால் குதிக்க முடிந்தால் குதியுங்கள். அந்த சுழ்நிலை இருக்கிறது, உங்களால் எவ்வளவு முடியுமோ, அதை நோக்கி அந்த சூழ்நிலை உங்களைத் தள்ளும்.
நினைவற்ற நிலையில் இருக்கும் மனம் எப்போதும் தடுப்பதை குறைந்தபட்சமாக குறைக்கும் வழியையே தேர்ந்தெடுக்கும். அது மனிதன் கணிதம், உள்பொருளியல், நீங்கள் நினைவற்ற நிலையில் நீண்ட வழியை தேர்ந்தெடுக்கமாட்டீர்கள். நீங்கள் எப்போதும் சுருக்கமான வழியை தேர்ந்தெடுப்பீர்கள். நீங்கள் நினைவுள்ள மனதுடன் இருக்கும்போதுதான், நீங்கள் எங்கும் உங்களைக் கொண்டுச் செல்லாத வழிகளை தேர்ந்தடுப்பீர்கள், அல்லது மிக நீண்ட பாதையை தேர்ந்தெடுத்து, நீங்கள் சேருமுன் இறந்துவிடுவீர்கள். ஆனால் நினைவற்ற மனம் எப்போதும் சுருக்கமான வழியையே தேர்ந்தெடுக்கும். அதனால் இந்த முறை ஒரு சூழ்நிலையை, உருவாக்கும், பின்பு நினைவற்ற நிலையில் உள்ள மனம், மறைந்துள்ள அதன் வழியை எடுத்துக்கொள்ளும்.
*************************************************************************************************************
மையத்திற்கு வாருங்கள்
அன்புள்ள ஓஷோ,
எப்போதெல்லாம் ஒரு மனிதருக்கு இறுதியான ஆன்மீக வெடிப்பு நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் சங்கிலித் தொடர்போல் அவரைசுற்றி, ஆன்மீகத் தேடலில் உள்ளவர்கள் எல்லோருக்கும் அவரின் பிரதிபலிப்பாக ஆன்மீக வெடிப்பு இருக்கும் என்று சொன்னீர்கள். அதனால் உங்களைச் சுற்றி தொடர் சங்கிலியாக, பிரதிபலிப்பாக, ஆன்மீக வெடிப்பு ஆரம்பமாகிவிட்டதா என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள். இது போன்று இன்னும் உயர்ந்த ஆன்மீக வெடிப்பு இங்கு யாருக்காவது நடந்துள்ளதா? சீக்கிரத்தில் வெடிக்கப்போகும் மனிதர்கள், உங்கள் அருகில் யாரேனும் இருக்கிறார்களா?
முதலில் ஒருவர் ஆன்மீக வெடிப்பு என்றால் என்ன என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும். இதில் நிறைய விஷயங்கள் உள்ளடங்கி உள்ளது. முதல் விஷயம், இந்த வெடிப்புக்கு உங்களால் நேரடியாக எதுவும் செய்யமுடியாது. உங்களுடைய முயற்சிகள் அர்த்தமற்றது. அது நீங்கள் நிர்வகிக்க முடிந்த ஒன்றல்ல. வெடிப்பு உங்களுக்கு நிகழும். நீங்கள் அவ்வாறே இருந்து, பின்பு நீங்கள் தொடர்வீர்கள். இந்த வெடிப்புக்கு பின்பும் நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் அதை அடைந்திருந்தால், பின்பு நீங்கள் அதில் வெடிக்கமாட்டீர்கள். அதனால் இதை சாத்தியமாக்குவதற்கு, இதை நோக்கி எந்த முயற்சி எடுப்பதற்கும் வாய்ப்பில்லை; இதுதான் முதல் விஷயம். இதுதான் முதலில் வெடிப்பதுடன் சம்மந்தப்பட்ட விஷயம். வெடிப்பது என்றால் கடந்தகால தொடர்பை நிறுத்துவது, பழையது முழுமையாக போனபிறகு, புதியது வந்திருக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இந்த புதியதிற்கு பழையதுடன் தொடர்பில்லை. இது பழையதின் காரணமாக ஏற்பட வில்லை, அதனால் இதற்கு ஒன்றின் காரணமாக, இன்னொன்று வந்தது என காரணத்தொடர்பு (Causal Link) எதுவும் இல்லை. இது பழையதால் ஆக்கப்பட்டிருந்தால், பின்பு அது வெடித்தலே அல்ல; பின்பு அது தொடர்புள்ளது, பழையது, புது வடிவமாக தொடர்ந்திருக்கிறது. பின்பு சிலவற்றை நீங்கள் இலாபமாக சம்பாதித்திருப்பீர்கள், நீங்கள் உங்களுடன் சிலவற்றை சேர்த்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் அதேதான்; உங்கள் மையமான உடல், பொருள், ஆவி அதுவாகவேத்தான் இருக்கிறது. வெளிப்புறத்து விளிம்பில்தான் ஏதோ சேர்த்து, சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய “நான் என்ற அகந்தை” இன்னும் பலம் பெற்று, முன்பைவிட திடமாகிறது; நீங்கள் செல்வந்தர் ஆவீர்கள். அதனால் எந்த வெடிப்பும் தொடர்ச்சியில் இருக்காது.
வெடிப்பு என்றால் பழையது, முற்றிலும் இறந்து, புதியது பிறந்திருக்கிறது என்று அர்த்தம். இவ்விரண்டிற்கும், ஒன்றின் காரணமாக இன்னொன்று வந்தது என்ற தொடர்பில்லை. அவ்விரண்டிற்கும் இடைவெளி உள்ளது – பாலம் அமைக்க முடியாத அளவிற்கு இடைவெளி உள்ளது. அது ஆழம் காண முடியாத இடைவெளி. பின்பு இதை நீங்கள் வெடிப்பது என்று சொல்லலாம். இதை புரிந்துக்கொள்வது மிகக் கடினம். நம் வாழ்க்கையில் எல்லாமே ஒன்றின் காரணமாக ஒன்று இருப்பதால், அதை புரிந்துக்கொள்வது சுலபம். நம்முடைய நியாயமான( Logic) சிந்தனைகள் எல்லாம்; இந்த ஒன்றின் காரணமாக இன்னொன்று வருகிறது என்ற எண்ணத்தின் அடிப்படையில் உள்ளது; எல்லாமே தொடர்புடையது, எல்லாமே ஒன்றுக்கு இன்னொன்று சம்மந்தப்பட்டு, மேலும் அது இன்னொன்றுடன் தொடர்புடையது. எதுவுமே புதியதல்ல, எல்லாமே பழையதில் திருத்தம் செய்து, மாற்றி அமைத்ததுதான் – அதனால் அதை புரிந்துக்கொள்ளலாம். இது எதனால் என்றால், மனம் தொடர்ச்சியாக வருவது. மனம், சேகரிக்கப்பட்ட அறிவினாலும் (Knowledge), நினைவுகளினாலும் நிரம்பியுள்ளது. மனதால் பழையதை புரிந்துக்கொள்ள முடியும். ஆனால், புதியது அதற்கு புரிந்துக்கொள்ளமுடியாத ஒன்று. புதியதை மனதால் புரிந்துக்கொள்ளவே முடியாது. அப்படியே உங்கள் மனம் புதியதை புரிந்துக்கொள்ள முயற்சித்தாலும், அது புதியதை முன்பிருந்த வகையிலேயே மாற்றிவிடும். மனம் அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்து, அதற்கு ஒரு அர்த்தத்தையும் கொடுத்து, அதையும் ஒரு வகையாக பிரித்துவிடும். அதனால் பழையதுடன் தொடர்புடைய விஷயங்கள் இருந்தால், பின்பு மனம் சௌகரியமாக இருக்கும். ஏனெனில் அதுவால் புரிந்துக்கொள்ளமுடியும்.
வெடிப்பு என்ற விஷயம், மனதால் புரிந்துக் கொள்ளமுடியாத ஒன்று. உண்மையில், வெடிப்பில் மனம் வெடிக்கப்பட்டு, முழுமையாக வெளியில் தூக்கியெறியப்படுகிறது. அதனால் இரண்டாவதாக புரிந்துக்கொள்ள வேண்டியது இதுதான். உங்களால் வெடிப்பதை புரிந்துக்கொள்ள முடியாது. நீங்கள் புரிந்துக்கொள்வதெல்லாம், வெடிப்பாகாது; நீங்கள் ஏதோ ஒன்றை, உங்களுக்குத் தெரிந்த பழைய ஏதோ ஒன்றுக்கு மாற்றிவிடுவீர்கள். நான் பேசிக்கொண்டிருப்பவைகள் மற்ற வெடிப்புகளைப்போல் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் ஆன்மீக வெடிப்பு என்பது உணரக்கூடிய மற்ற எந்த விஷயத்தை போலவும் இல்லை.
ஒரு குண்டு வெடித்தால், எல்லாமே அழிந்துவிடுகிறது. பழைய ஒழுங்குப் படுத்தப்பட்ட நிலை போய், அங்கே குழப்பம்தான் இருக்கிறது. ஆனால் இந்த குழப்பம் பழையதால் ஏற்பட்ட ஒன்று. இது ஒரு தொடர்ச்சி. புதியது எதுவும் உயிர்பெற்று வரவில்லை. இந்த மொத்தக் குழப்பம், இந்த தாறுமாறான நிலை, பழைய ஒழுங்குப்படுத்தப்பட்ட நிலையின் தொடர்ச்சி. இது தாறுமாறாக இருக்கும் பழையதுதான். எந்த பொருள்ரீதியான வெடிப்பையும், ஆன்மீக வெடிப்புக்கு அறிகுறியாகவோ, அல்லது உருவணிகளாகவோ சொல்லமுடியாது. அந்த வார்த்தை பொருள்ரீதியான நிகழ்விலிருந்து வருவதாலும் மேலும் அதற்கு உள்ளர்த்தம் உள்ளதால், இது தவறாக வழி நடத்துகிறது. ஆன்மீக வெடிப்புக்கு பழையது தாறுமாறாகிவிட்டது, பழையது குழப்பும் வகையில் உள்ளது என்று அர்த்தமில்லை. ஆன்மீக வெடிப்பு என்றால் ஏதோ புதியதாக உருவாக்கப்பட்டு, ஏதோ புதியதாக இப்பிரபஞ்சத்திற்க்கு வந்திருக்கிறது என்று அர்த்தம்.
பொருள்ரீதியான வெடிப்பு அழிக்கக்கூடியது. ஆன்மீக வெடிப்பு ஆக்கப்பூர்வமானது. ஆனால் இதை நான், பழையதுடன், உவமை பொருந்தியவாறு புரிந்துக்கொள்ள வேண்டுமானால், பின்பு நம்மால் இதை தெரிந்துக்கொள்ள முடியாது. ஏதோ புதியது, ஏதோ முற்றிலும் புதியது, இருக்கும் பொருளாக உள்ளே வருகிறது. உங்களால் இதற்கு எந்த அர்த்தமும் தரமுடியாது, ஏனெனில் நீங்கள் பழையவர்கள். நீங்கள் இதை உருவாக்கமுடியாது. நீங்கள் காலியாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். நீங்கள் எதிர்மறையாக இல்லாமல் இருப்பதின் மூலமும், நீங்கள் இல்லையென்றா லும்தான் இதற்கு உதவுமுடியும். நீங்கள் ஆஜராகாமல் இருந்தால், பின்பு வெடிப்பு நிகழும். எதிர்மறையாகத்தான் உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் எதையாவது ஒன்றை, நாம் இருந்து அனுகூலமாக செய்வது சுலபமானது. ஆனால் ஏதோ ஒன்றுக்கு எதிர்மறையான ஒத்துழைப்புக் கொடுப்பது மிகக் கடினமானது.
ஒத்துழைப்பு சுலபமானது, ஒத்துழைக்காமல் இருப்பதும் சுலபமானது, ஆனால் எதிர்மறையாக ஒத்துழைப்பது மிகக் கடினமானது. எதிர்மறையான ஒத்துழைப்பு என்றால், தடைகள் எதுவும் ஏற்படுத்தாமல் இருப்பது. ஆனால் நாம் புதியதை உள்ளே வரவிடாமல் தடைகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கிறோம். நாம் எப்போதுமே பழையதிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் எப்போதுமே பழையதுடன் ஒட்டிக்கொள்கிறோம், நாம் நம்மை பழையதுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறோம். பழையது என்பது, உண்மையில் “நாம்” என்பதும் “நான்” என்பதும்தான். நான் எப்போது “நாம்” என்று சொல்கிறேனோ, அது முழு கடந்தகாலத்தைத்தான் குறிக்கிறது. அதனால் “நான்” எப்படி புதியதிற்கு உதவ முடியும்? “நான்” கடந்த காலமாக இருக்கும் பட்சத்தில் “நான்” எப்படி எதிர்காலத்தில் உதவமுடியும்? எப்போதெல்லாம் நீங்கள் “நான்” என்று சொல்கிறீர்களோ, அப்போதெல்லாம் அது ஒரு வார்த்தையில் அடங்கிய முழு கடந்தகாலமாகிறது. எதுவெல்லாம் “நான்” என்பதற்கு பின்னால் இருக்கிறதோ, அதுவெல்லாம் இப்போது இறந்துவிட்டது, அதுவெல்லாம் இப்போது புதைக்கப்பட வேண்டும்; அதனால் இந்த “நான்” என்பதுதான் புதியதை உள்ளே வரவிடாமல் இருக்கும் ஒரே தடை, இடையூறு, இடைஞ்சல் எல்லாம்.
அதனால் “நான்” என்பதுடன் அனுகூலமாக (Positively) எதையும் உங்களால் செய்ய முடியாது, எதிர்மறையாகத்தான் (Negatively) ஏதாவது செய்யமுடியும். நீங்கள் பழையது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள், இந்த புரிந்துக்கொள்ளுதல் ஆழ்ந்துச்சென்று உங்களுடைய உள்ளார்ந்த ஆழத்திலும் ஊடுருவிச் செல்லட்டும். புதியது, இருக்கும் பொருளாக உள்ளே வருவதற்கு, உங்களால் உதவமுடியாது என்பதை முழுமையாக புரிந்துக்கொள்ளுங்கள். புதியது, உள்ளே வந்தாலேயொழிய ஆன்மீகம் என்பது கிடையாது. புதியது வெடித்தாலேயொழிய உங்களால் மறுபடியும் பிறக்கமுடியாது, நீங்கள் தெய்வீகத்தின் கோணத்தில் இருக்கமாட்டீர்கள்.
“நான்” என்பது சுதந்திரமாக்கப்படவேண்டும் என்பதில்லை, அதற்கு மாறாக நான் என்பதிலிருந்து சுதந்திரம் கிடைக்கும், சுயத்திலிருந்து சுதந்திரம் கிடைக்கும். இதற்கு நான் ஏதோ செய்யவேண்டும் என்பதல்ல; இந்த அற்புதம் நிகழ்வதற்கு நான் ஒன்றுமே செய்யக்கூடாது. ஆனால் நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றை செய்துகொண்டேயிருக்கி றோம். இது “என்னிடமிருந்து” வருகிறது; இது நீடிக்கிறது, இது “என்னை” தொடர்ச்சி யாக்குகிறது, இது “என்னை” எதிர்காலத்திற்குள் எடுத்துக்காட்டுகிறது, பின்பு வெடிப்பு இருக்காது.
கண்ணாடிப்போல் இருக்கும் விழிப்புணர்வில் (Consciousness), இறந்துபோன இறந்த காலம், புழுதிப்போல் குவிந்துக்கொண்டேயிருக்கிறது, இதனால் கண்ணாடிப் போல் இருந்த விழிப்புணர்வு தொலைந்து, புழுதி மட்டும்தான் இங்கேயிருக்கிறது. நாம் அந்த புழுதியுடன் நம்மை ஐக்கியப்படுத்திக்கொள்கிறோம். உங்களால் உங்களுடைய கடந்தகாலம் இல்லாமல் உங்களை கற்பனை செய்து பார்க்க முடியுமா? உங்களு டைய மொத்த கடந்தகாலத்தையும் அழித்துவிட்டால், நீங்கள் எங்கே இருப்பீர்கள்? அப்போது என்ன செய்வீர்கள்? நீங்கள் யாராக இருப்பீர்கள்? கடந்த காலத்தில் இருந்த எல்லாவற்றையும் எடுத்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் அழிந்துபோவது போல், மறைந்து போவதுபோல் உணர்வீர்கள்.
கடந்தகாலம் என்ற ஒன்று இல்லாவிட்டால் நீங்கள் யார்? நீங்கள் எங்கே இருக்கி றீர்கள்? அப்போது, நீங்கள் எதனுடன் உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வீர்கள்? கடந்தகாலம் இல்லாவிட்டாலும், நீங்கள் இருப்பீர்கள், ஆனால் இதேபோல் அல்ல. உண்மையில், நீங்கள் இருந்ததற்கு நேர் எதிர்மறையாக இருப்பீர்கள். முழு கடந்த காலத்தையும் எடுத்துவிட்டால், நீங்கள் வெறும் விழிப்புணர்வாக இருப்பீர்கள். பின்பு நீங்கள் “நான் என்ற அகந்தை” யாக இருக்கமாட்டீர்கள்.
“நான் என்ற அகந்தை” என்பது சம்பவங்களின் தொகுப்பும், இறந்தகாலமும்தான். அது உங்களிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டால், பின்பு நீங்கள் ஓர் கண்ணாடியைப்போல், எல்லாவற்றையும் புதிய அடையாளத்துடன் பிரதிபலித்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் தான் தடை என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், பின்பு நீங்கள் செய்யவேண்டியது எதுவும் இல்லை. எப்போது உங்களுடைய பழைய அடையாளம் முழுமையாக அழிந்து, எப்போது உங்களுடைய உண்மையான மெய்யிருப்புக்கும் (Being), உங்களுடைய நினைவுகளுக்கிடையே இடைவெளி இருக்கிறதோ, எப்போது உங்களுக்கும் உங்களுடைய “நான் என்ற அகந்தை” க்கும் நடுவே காலியான இடம் இருக்கிறதோ, அப்போது காலியான இடத்திற்குள் வெடிப்பு உள்ளே வரும். அந்த காலியான இடத்திற்குள் வெடிக்கும்.
இந்த வெடிப்பை, அறிவுப்பூர்வமாக எப்படிப்பட்ட வழியிலும் புரிந்துக்கொள்ள முடியாது. நீங்கள் அதிகமாக அதை புரிந்துக்கொள்ள முயற்சிக்கும் அளவிற்கு நீங்கள் அதை குறைவாகவேத்தான் புரிந்துக்கொள்வீர்கள். அதனால் அதை நினைத்து பதட்டம் அடையாதீர்கள். ஓய்வாக இருங்கள். மேலும் என்னை புரிந்துக் கொள்வ தற்கும் முயற்சிக்காதீர்கள், அதற்குப் பதிலாக நான் என்ன சொல்கிறேனோ அதை நீங்கள் உங்களுக்குள்ளேயே உணருங்கள். நீங்கள் கடந்தகாலம் என்று நான் சொன்னால், பின்பு என்னுடைய வார்த்தைகளை சும்மா கேட்டுவிட்டு அது சரியா, தவறா என்று யோசித்துக் கொண்டிருக்காதீர்கள். என்ன சொல்லப்படுகிறதோ அதை உள்ளேச் சென்று உணருங்கள். உண்மை என்ற ரீதியில் சிந்தியுங்கள். அவை உண்மைகள்.
உள்ளே சென்று, நீங்கள் கடந்தகாலம்தானா என்று பாருங்கள். நான் என்ன சொல்கிறேனோ, அது உண்மையிலேயே ஒரு உண்மைதானா என்று பாருங்கள். உங்களிடம் கடந்தகாலத்தை தவிர்த்து வேறு ஏதாவது இருக்கிறதா? நீங்கள் இறந்துபோன இறந்தகாலம்தானா, அல்லது இறந்தகாலத்துடன் சம்மந்தப்படாதது ஏதாவது உங்களிடம் இருந்துக்கொண்டிருக்கிறதா? அது என்ன? நீங்கள் அதை உங்களுடையதாக சிறைவைக்க முடியாது, ஏனெனில் இந்த “நான்” என்பதுதான் சிறைவாசம். கடந்தகாலம் ஒரு வரம்புக்குட்பட்டதால், நீங்கள் அதே சிறையில் அடைக்க முடியும். கடந்தகாலத்தை சிறையில் அடைக்கலாம். அது நடந்துமுடிந்தது, அளவிற்குட்பட்டது. உங்களுள் கடந்தகாலத்துடன் சம்மந்தப்படாத, இங்கு, இப்போது, என்று இருக்கும் ஏதோ ஒன்றைப்பற்றி நீங்கள் அறிந்துக்கொண்டபிறகு முழு கடந்த காலமும் அழிக்கப்பட்டால் கூட, அந்த ஒன்று அப்படியே இருக்கும்.
கடந்தகாலத்தை அழிப்பதன்மூலம் அழிக்கப்படாமல் உங்களுள் ஏதாவது இருந்து, தொடர்ந்து வந்தால் அதுதான் கண்ணாடிப்போல் இருக்கும் விழிப்புணர்வு – சுத்தமான விழிப்புணர்வு. பின்பு “நீங்கள்” அதில் இல்லை, நீங்கள் ஒரு கண்ணாடியாக இருந்து எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறீர்கள். பின்பு உங்களுக்கும் உங்களுடைய “நான் என்ற அகந்தை” க்கும் இடையில் இடைவெளி இருப்பதை உணர்வீர்கள், காலியான இடம் இருப்பதை உணர்வீர்கள். உங்களால் இந்த புரிந்துக்கொள்ளுதலிலும், அறிந்து கொள்ளுதலிலும் தொடர்ந்து இருக்கமுடிந்தால், உங்கள் உண்மையான உடல், பொருள், ஆவிக்கும், கடந்தகாலத்திற்கும் இடையே உள்ள காலியான இடத்தில் – உங்கள் விழிப்புணர்வில் – உங்களால் தங்க முடிந்தால், பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து குவிக்கப்பட்ட உங்கள் மெய்யிருப்பு, உங்கள் “நான் என்ற அகந்தை” எல்லாம் வெளிப்புறத்து மேல்தட்டில் இருப்பவைகளாகி விடும்.
அது ஒரு எல்லைக்கோடாக ஆகிறது. அதன் மையத்தில் சுத்தமான விழிப்புணர்வு இருக்கிறது. அதிலேயே இருங்கள். இது மிகவும் அசௌகரியமாக இருக்கும்; அது மிகவும் சங்கடமாகவும், கடினமாகவும் இருக்கும். ஏனெனில் நாம் அங்கு தொடர்ந்து தங்கியதேயில்லை. நாம் எப்போதும் எல்லைக்கு (வட்டவடிவத்தில், காலியான இடத்தைச் சுற்றி இருக்கும் எல்லைக்கோடு) ஓடிவிடுகிறோம். நாம் எப்போதும் எல்லையில்தான் இருக்கிறோம், மையத்தில் இருப்பதில்லை. எல்லைதான் “நான் என்ற அகந்தை”, ஏனெனில் எல்லா சம்பவங்களும் எல்லையிலும், வட்டத்தின் விளிம்பிலும்தான் நடக்கும்.
வெளிப்புறவட்டத்தின் ஒரு நுனியில் இருந்துதான் நீங்கள் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்கிறீர்கள். நான் உங்களுடன் அன்பாக இருக்கிறேன் என்றால், இந்த அன்பு என்பது எல்லையில்தான் நிகழ்கிறது. ஏனெனில் என்னுடைய எல்லைதான் உங்களுடைய எல்லையுடன் தொடர்பும், சம்மந்தமும் வைத்துக்கொள்ளமுடியும். இந்த உலகத்தில் நடப்பதெல்லாம் , இந்த எல்லையில், எல்லைக்கோட்டில் நடக்கிறது. அதனால் நாம் எப்போதும் எல்லைக்கோட்டிலேயே தொடர்ந்து இருந்துக்கொண்டிருக்கிறோம். அது பரபரப்பான விஷயங்கள் நடக்கும் ஒரு மைதானம். ஆனால் மெய்யிருப்பு (Being) எப்போதும் மையத்தில் உள்ளது. அதனால் உங்களால் இந்த இடைவெளியில், இந்தக் காலியான இடத்தில் தொடர்ந்து இருக்கமுடிந்து, மேலும் நீங்கள் நீங்களாகவே இருக்கமுடிந்தால் – எல்லையில் அல்ல, ஆனால் மையத்தில் – மேலும் உங்களால் எல்லையை இறந்துபோன கடந்தகாலமாக, மேல்புறமாக, உடலாக, நினைக்க முடிந்தால் “நீங்கள்” தொலைந்து போவீர்கள்.
நான் வெளிப்புறமாக இருக்கும் இந்த உடலைப்பற்றி பேசவில்லை. உண்மையில், “நான் என்ற அகந்தை” தான் உடல்.
அதனால் அங்கு அறிவினால் புரிந்துக்கொள்ள முடிந்தவைகள் அல்லாமல், நியாய ரீதியில் புரிந்துக்கொள்ளுதல் அல்லாமல், ஆனால் இருப்பவை எல்லாவற்றின் மூலமும் காலியான இடத்தை உணரமுடிந்தால், நீங்கள் அசௌகரியம் ஆகிவிடு வீர்கள், நீங்கள் இறப்பதுபோல் உணர்வீர்கள், ஏனெனில் நீங்கள் எப்போதும் எல்லையில்தான் இருந்திருக்கிறீர்கள்; அதுதான் உங்கள் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. அதனால் மறுபடியும் நீங்கள் மையத்திற்கு செல்வது, இறப்பதுபோல் இருக்கும், ஏனெனில் தற்போது எல்லைதான் உங்கள் வாழ்வாகி விடுகிறது. உங்களுக்கு வேறு எந்த வாழைக்கையும் தெரியாது. நீங்கள் மூழ்குவதுபோலவும், இறப்பதுபோலவும், மூச்சுமுட்டுவது போலவும் உணர்வீர்கள், உடனே உங்கள் மனம் “எல்லைக்கே மறுபடியும் போய்விடு, வாழ்க்கை அங்கிருக் கிறது” என்று சொல்லும்.
ஆனால், எல்லையில், வாழ்க்கை இல்லை – செயல்கள் தான் இருக்கிறது. அங்கு செய்வதுதான் இருக்கிறது, இருப்பது அல்ல. அதனால்தான் நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லாதபோது, அந்த செய்யாமல் இருப்பது என்பது கடினமாகி, அத்துடன் உங்களால் தொடர்ந்து இருக்கமுடியாமல், நீங்கள் எதையாவது செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்கள் ஒரு செய்தித்தாளை படிக்கலாம், நீங்கள் வானொலியில் எதையாவது கேட்கலாம், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், அல்லது உங்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றால், பின்பு நீங்கள் உறங்கச் செல்லலாம். ஆனால் ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான் மிக்க கடினமானது. ஒரு வினாடிக்கூட நீங்கள் ஒன்றும் செய்யாமல் இல்லை. ஆனால் யார் ஒருவரால் தொடர்ந்து ஒன்றும் செய்யாமல் இருக்கமுடிகிறதோ, யாரால் மையத்தில் தொடர்ந்து இருக்க முடிகிறதோ, அவருக்குத்தான் மெய்யிருப்பு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
எதிர்மறையான ஒத்துழைப்பு என்பதற்கு இதுதான் அர்த்தம். உங்களுடைய ஒத்துழைப்பு எதிர்மறையாக தேவைப்படுகிறது. நீங்கள் எதையும் செய்யக்கூடாது; நீங்கள் ஒன்றும் செய்யாமல் தொடர்ந்திருக்க வேண்டும். பின்பு வெடித்தல் நிகழும்.
அது உங்களுக்கு நிகழ்கிறது. அது நிகழ்ந்துவிட்ட பின்பு நீங்கள் எப்போதுமே மையத்தில்தான் இருப்பீர்கள். பின்பு உங்களால் எதுவும் செய்யஇயலாது என்று அர்த்தம் இல்லை. உங்களால் செய்யமுடியும், ஆனால் உங்கள் செயலின் தரம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்போது வித்தியாசமான அன்பு மையத்திலிருந்து இருக்க வாய்ப்பிருக்கிறது, வித்தியாசமான நடவடிக்கைகள் மையத்திலிருந்து வர வாய்ப்பிருக்கிறது. இப்போது அன்பு என்பது ஒரு செயலாக இருக்காது, ஆனால் அது ஒரு மனநிலையாக இருக்கும். இது சில நேரங்களில் நீங்கள் அன்பாக இருப்பதும், சில நேரங்களில் நீங்கள் அன்பாக இல்லாமலிருப்பதுபோல் இருக்காது. இப்போது அது உங்கள் உயிர்தன்மையாகிவிடும். நீங்கள் அன்பாகவே இருப்பீர்கள், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு உறவிலும், வித்தியாசமான தரத்துடன் இருப்பீர்கள், வித்தியாசமான அர்த்தத்துடன், வித்தியாசமான ஆழத்துடன் இருப்பீர்கள். இந்த வெடிப்பின் மூலம் நீங்கள் உங்கள் மனதிடமிருந்து “நான் என்ற அகந்தை” யிடமிருந்து, உங்கள் உடலிலிருந்து, உங்கள் எல்லையிலிருந்து உங்களை வேறுபடுத்திக் கொள்வீர்கள் – முழுவதுமாக வேறுபடுத்திக் கொள்வீர்கள்.
வெடிப்பது என்பது அடையாளத்தை அழிப்பதாகும். இப்போது நீங்கள் தொடர்ச்சியாக இருக்கமாட்டீர்கள். ஏனெனில் எந்த தொடர்ச்சியும் எல்லையில்தான் இருக்கும். இது எல்லையின் தொடர்ச்சி அல்ல, இது ஒரு குதித்தல் (Jump). நீங்கள் எல்லையைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தால், பின்பு அது தொடர்ச்சியுடையது. நீங்கள் எல்லையை சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தால் ஒரு வாழ்க்கை முழுவதும்கூட ஓடலாம், அதனால் ஒவ்வொரு அடியும் முந்தைய அடியுடன் இணைக்கப்பட்டிருக்கும், மேலும் ஒவ்வொரு அடியும் உங்களுடைய அடுத்து வைக்கப்போகும் அடிக்கு வழிநடத்திச் செல்லும். அது இணைக்கப்பட்ட முறை. ஆனால் எல்லையிலிருந்து மையத்திற்கு குதிப்பது என்பது பழையதுடன் தொடர்ச்சியுடையதல்ல. அது தொடர்ச்சியில்லாதது – நீங்கள் வைக்கப்போகும் அடிக்கு, உங்களுடைய முந்தைய அடி காரணம் இல்லை. அது முற்றிலும் புதியது மற்றும் எதுவும் காரணம் இல்லை.
இது புரிந்துக்கொள்ள கடினமாகிறது. ஏனெனில் இந்த உலகத்தில் நிகழும் சம்பவங்கள் எதுவும் காரணம் இல்லாமல் இல்லை. ஆனால் நவீன இயற்பியல் (Physics) இதன் அருகில் வந்துவிட்டது; நவீன விஞ்ஞானம் இதற்கு ஒத்த சூழ்நிலைக்கு வந்துவிட்டது. எலக்ட்ரானின் (Electron) நடவடிக்கை தொடர்ச்சியில் இல்லை. அதனால் முழு விஞ்ஞானமும் (Physical Science) இந்த எலக்ட்ரானின் நடவடிக்கையால் புதியகோணம் எடுத்திருக்கிறது.
இந்த நூற்றாண்டிற்கு முன்பு, இயற்பியல் தான் (Physcis) விஞ்ஞான முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. எல்லாமே ஏற்படுத்தப்பட்டதுதான், எல்லாமே தொடர்ச்சிதான், மேலும் எல்லாமே நிச்சயமாக இருந்தது. ஏனெனில் ஒன்றின் காரணமாக இன்னொன்று தொடர்வதில்தான் நிச்சயம் என்பது இருக்கும். காரணமின்று விஷயங்கள் நடக்கும்போது, பின்பு அதில் நிச்சயம் என்பதிருக்காது, பின்பு இதில் பிரயோகிக்க முடிந்த எந்த உண்மையான விதியும் இருக்கமுடியாது.
முழு விஞ்ஞானமும் இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறது, ஏனெனில் அவர்களினால் எலக்ட்ரானின் நடவடிக்கைகளை நிர்ணயிக்க முடியவில்லை. அது காரணம் இல்லாமல் நடந்துக் கொள்கிறது. சில சமயங்களில் அது ஒரு நுனியில் இருந்து மறைந்து, இடையில் எந்தத் தொடர்ச்சியும் இல்லாமல், இன்னொரு நுனியில் தோன்றுகிறது. ஒரு நுனியான “A” என்பதிலிருந்து எலக்ட்ரான் மறைகிறது; இன்னொரு நுனியான “ B”என்பதில் தோன்றுகிறது. இந்த ‘A’ மற்றும் ‘ B’ க்கு இருப்பவைகளின் தொடர்ச்சி இல்லை. அது தொடர்ச்சியானதாக இல்லை, அது பயணிக்கவில்லை.இது ஆச்சரியத்திற்குரியதாகிறது, ஆனால் நான் இதை பெரும்பாலும் வேறுபட்ட இரு பொருள்களுக்கிடையேயுள்ள ஒற்றுமையாக நினைக்கிறேன்.
இரன்டு வகையான சிந்தனைகள் இருக்கின்றன – ஒன்று தர்க்கரீதியான சிந்தனை ( Logical Thinking) மற்றொன்று ஒற்றுமை ரீதியில் நினைப்பது. தர்க்கரீதியான சிந்தனை இடைவிடாமல் வரிசையாக சென்றுகொண்டிருக்கிறது. “இது இப்படியிருக்கிறது, அதனால் அது நிகழும்”.காரணம் உறுதியாக இருப்பதால் விளைவு தொடரும். தர்க்கரீதியான முறை தெளிவான, நிச்சயமான முறை. ஒரு குறிப்பிட்ட காரணத்தைக் கொடுத்தால் ஒரு குறிப்பிட்ட விளைவு தானாகவே பின்தொடரும்; சுதந்திரம் இல்லை. தர்க்கரீதியான சிந்தனையில் சுதந்திரம் இருக்காது. எல்லாமே கடந்த காலத்தினால் ஏற்படுத்தப்பட்டதால், இதில் கடந்த காலம் ஆதிக்கம் செலுத்துகிறது. நான் உங்களுக்கு குறிப்பிட்ட அளவிற்கு விஷத்தைக் கொடுத்தால், நீங்கள் இறந்து விடுவீர்கள்; நீங்கள் சுதந்திரமாக இல்லை. ஒரு குறிப்பிட்ட ஆளவு விஷம் இறப்பை உண்டாக்கும். இறப்புத் தொடர்ந்துதான் ஆகவேண்டும்; இது நிச்சயமானது, தொடர்ச்சி உடையது. இதில் ஒன்றின் காரணமாக இன்னொன்று நடக்கிறது.
ஒற்றுமை ரீதியில் சிந்திப்பது முற்றிலும் வித்தியாசமானது – எல்லாவகையிலும் வித்தியாசமானது. ஒற்றுமை ரீதியில் சிந்திப்பது கவிதையின் வழியாகும். நீங்கள் ஒன்றிலிருந்து, இன்னொன்றில் ஒற்றுமையின் மூலம் குதிக்கிறீர்கள், நியாயமான வரிசையின் மூலம் அல்ல. உதாரணத்திற்கு நான் யாரையாவது காதலித்து, நான் ஒரு கவிதை எழுதலாம். அதில் “என் அன்புக்குரியவள் நிலவைப்போல் இருக்கிறாள்” என்று எழுதலாம். இதில் எந்த தொடர்பும் இல்லை. இதில், என்னுடைய அன்புக்குரிய வளுக்கும், நிலவுக்கும் இடையே, எதுவும் ஒன்றுக்கு இன்னொன்று காரணமாக அமையவில்லை. இவ்விரண்டிற்கும் எந்த உறவுமுறையும் இல்லை, ஒற்றுமைதான் இருக்கிறது. நான் ஒரு நுனியிலிருந்து இன்னொரு நுனிக்கு வரிசையாக பயணம் எதுவும் செய்யாமலே குதித்துவிட்டேன். இது எலக்ட்ரான் நடந்துக்கொள்வதுபோல் இருக்கிறது.
கவிஞர்கள் எப்போதுமே இப்படித்தான் நடந்துக்கொண்டிருந்திருக்கிறார்கள், அவர்கள் ஒரு நுனியிலிருந்து இன்னொரு நுனிக்கு ஒற்றுமையின் மூலம் குதிப்பார்கள். அவைகளில் வெளிப்படையாக தெரியக்கூடிய ஒற்றுமைக்கூட இருக்காது, ஆனால் கவிஞருக்கு அது ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை இருப்பதுபோல் தெரிவதாலும், ஏதோ ஒன்றுக்கு எதிரொலி இருந்தால், அதுவே போதுமானது. ஏதோ ஒன்று மறுபடியும் எதிரொலிக்கிறது. பின்பு குதிப்பது இருக்கிறது, இது ஒரு ஒற்றுமையின் அடிப்படையில் குதிப்பது.
தியானத்தால், உண்மையையும், கடவுளையும் காணலாம் என்ற கொள்கையின் இலக்கியம் இந்த ஒற்றுமையில் தான். ஆன்மீக முறையில் கடவுளைக் கண்ட ஒருவரால், ஒற்றுமையைத்தான் தரமுடியும். அதனால்தான் இவ்வளவு உருவகமான கதைகள் இருக்கின்றன. அவையெல்லாம் ஒற்றுமைகள்; இயேசு ஒற்றுமைரீதியில் பேசினார், புத்தரும் மற்ற எல்லோரும் அவ்வாறே பேசினார்கள். அவர்கள் யாரும் நியாயமான காரணங்களையும், வாதங்களையும் கொடுக்கவில்லை. உண்மையில் இயேசு, எந்த ஒரு விஷயத்திற்காகவும் வாதித்ததே இல்லை. வாதம் என்பதில்லை, ஒற்றுமைதான் இருக்கிறது.
நீங்கள் இரக்கமுள்ளவராக இருந்தால்தான் உங்களால் ஒற்றுமையின் சிந்தனைகளை புரிந்துக்கொள்ள முடியும். நீங்கள் இரக்கமுள்ளவராக இல்லையென்றால், பின்பு உங்களால் புரிந்துக்கொள்ள முடியாது, ஏனெனில் ஒற்றுமை நியாயமான வாதத்தை சார்ந்ததில்லை, அதனால் உங்களுடைய இரக்கம் மிகுந்த மனோபாவத்தையும், மேலும் அதேமுறையை உங்களால் உங்கள் உள்ளேயும் கையாளமுடியுமா என்பதையும் பொறுத்தே இருக்கிறது.
அதனால் ஒற்றுமைக்கு, நான் எலக்ட்ரானின் நடவடிக்கையை எடுத்துக்கொள்கிறேன்: இதைப்போல்தான் ஆன்மீக வெடிப்பும். பழையது வெளிப்புற எல்லையில் விடப் படுகிறது; வெளிப்புற எல்லைக்கும் மையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.நீங்கள் எல்லையிலிருந்து மையத்திற்கு பயணமாக வரவில்லை. நீங்கள் பயணித்தால், பின்பு எல்லையிலிருந்து தொடர்பிருக்கும். பின்பு மையத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி எல்லையிலேயே எடுக்கப்பட வேண்டும், மேலும் அது முந்தைய அடியுடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும்; பின்பு ஒன்றுக்கு இன்னொன்று காரணமாக அமையும்.
நீங்கள் எல்லையில் இருக்கிறீர்கள், திடீரென்று நீங்கள் உங்களை மையத்தில் பார்க்கிறீர்கள். இதற்கு நடுவே எந்தப் பயணமும் இல்லை, பின்பு அது வெடித்தல்.
நாம் இன்னொரு ஒற்றுமையை எடுத்துக்கொள்வோம், ஏனெனில் உங்களுக்கு இயற்பியல் (Physics) தெரியாமலிருக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் பம்பாயில் இருந்துக்கொண்டு லண்டனில் இருப்பதாக கனவு காண்கிறீர்கள். காலையில் கனவு கலைந்து, தூக்கமும் முடிந்தபிறகு நீங்கள் லண்டனிலிருந்து பம்பாய்க்கு மறுபடியும் பயணித்தா வரவேண்டும்? மறுபடியும், நீங்கள் லண்டனில் இருப்பதுபோல் பம்பாயில் உறங்கிக்கொண்டு கனவு காண்கிறீர்கள். யாரோ ஒருவர் உங்களை எழுப்பி விடுகிறார், நீங்கள் அப்போது லண்டனில் இருந்தீர்கள், நீங்கள் லண்டனில் விழித்துக் கொள்வீர்களா? அல்லது பம்பாயில் விழித்துக்கொள்வீர்களா? நீங்கள் பம்பாயில்தான் விழித்துக்கொள்வீர்கள். ஆனால் நீங்கள் எப்படி திரும்பி வந்தீர்கள். நீங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்தீர்கள்? நீங்கள் அந்த தூரத்தை கனவில்தான் பயணித்து வரவேண்டும். நீங்கள் அந்த தூரத்தை பயணித்தால், நீங்கள் விமானத்தின் மூலம் வந்தால், பின்பு அந்த விமானமும் கனவின் ஒரு பாகமாகத்தான் இருக்கும். நீங்கள் விழித்துக்கொண்டால், பின்பு கனவு லண்டனில் கலைந்து, நீங்கள் பம்பாயில் விழித்துக்கொள்வீர்கள், இதற்கு இடையே பயணம் எதுவும் இருக்காது. அதனால் விழித்துக்கொள்வது என்பது புதியது. இது கனவுடன் தொடர்புடையதல்ல.
அதனால் எல்லைதான் கனவு –செய்கைகளின் கனவு, “நான் என்ற அகந்தை”யின் கனவு.அதனால்தான் இந்தியாவின், ஆன்மீகவாதிகள் “இது ஒரு மாயை” என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் “இது ஒரு கனவு; இந்த முழு உலகமும் ஒரு வெறும் கனவுதான்” என்று சொல்லியிருக்கிறார்கள். சங்கராவும், மற்றவர்களும் இந்த மொத்த உலகமும் ஒரு கனவுதான் என்று சொன்னபோது, இது ஒரு ஒற்றுமைத்தானே தவிர, இதை தவறாக புரிந்துக்கொள்ளக்கூடாது. இது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. என்ன அர்த்தமற்றத்தனமாக பேசுகிறார்கள், என்று நீங்கள் விரல் காட்டலாம். இந்த உலகம் ஒரு கனவா? இது உண்மையானதாக இருக்கிறது! இந்திய ஆன்மீக வேதாந்தியான சங்கராவுக்கும் இது தெரியும். உண்மையாக, இது உண்மை தான் என்பது அவருக்கும் தெரியும், ஆனால் அவர் ஒற்றுமையில் பேசுகிறார்.
“இந்த உலகம் ஒரு கனவு” இவ்வாறு சொல்லும்போது, இதற்கு உலகம் உண்மையாகவே ஒரு கனவு என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் இதில் விழிப்புணர்வு பெற்றால், இதற்கு முந்தைய விழிப்புணர்வுடன் தொடர்பு விட்டுப்போய்விடும் என்பதுதான் இதனுடைய பொருள். நீங்கள், கனவுக்கும், விழிப்புக்கும் இடையில் எந்தத் தொடர்பையும் காணமுடியாது, அது எந்த உறவில் என்னவாக இருந்தாலும், லண்டனில் இருந்தீர்கள், அங்கிருந்து எப்படி திரும்பிவந்தீர்கள் என்று நீங்கள் திகைத்துபோவீர்கள்.
ஆனால் உண்மையில் யாரும் திகைத்ததில்லை. ஒருவர் கனவிலிருந்து வெளிவந்த பிறகு, ஒருவர் ஒருபோதும் திகைப்பதில்லை. நீங்கள் எப்போதாவது திகைத்தி ருக்கிறீர்களா? நீங்கள் “ஓ! இது ஒரு கனவு”, என்று சொல்லி அந்த அத்தியாயத்தை முடிக்கிறீர்கள். நீங்கள் அதைப்பற்றி நினைப்பதேயில்லை. இதுவேதான் வெடிக்கும்போதெல்லாம் நிகழ்கிறது. உங்களுக்கு தெரியும், “ஓ! கனவு காணும் வஸ்து கரைந்துவிட்டது, அது ஒரு கனவு, இப்போது நாந் மையத்தில் இருக்கிறேன்”. நீங்கள் ஒருபோதும், “எப்படி? நான் எல்லையில் இருந்தேன், எப்படி நான் திரும்பவும் மையத்திற்கு வந்தேன்? நான் எப்படி பயணம் செய்தேன்?” என்று கேட்கமாட்டீர்கள்.
மக்கள் புத்தரிடம், “எப்படி நீங்கள் ஞான விழிப்பு (Enlightenment) பெற்றீர்கள்?” என்று கேட்பார்கள். இந்தக் கேள்வி அபத்தமானது. இது ஒருவரை பார்த்து நீங்கள் எப்படி கனவிலிருந்து வெளியே வந்தீர்கள்? அதன் முறை என்ன? அதன் உள் விபரம் என்ன? நீங்கள் கனவிலிருந்து வெளியில் வருவதை எப்படி பயிற்சி செய்வீர்கள்? என்றெல்லாம் கேட்பதுபோல் இருக்கிறது. கனவு கலைந்தது, ஆனால் கனவு கலைவதற்கு, அதற்கான சொந்த வழிகள் இருக்கின்றன. சிலசமயங்களில் தூக்கத்தில் மூச்சுத்திணறும் உணர்வை உண்டாக்கும் கனவு வருகிறது, அது முடியாத அளவிற்கு போகிறது, பின்பு அங்கு தாங்கமுடியாத தன்மையும், வேதனையும், கனவை கலைக்க காரணமாகிறது.
அதனால் வெளிப்புறத்து எல்லையில் இருக்கும் வாழ்க்கை, மூச்சுத்திணறல் கொடுக்கும்படியான கனவாகிவிட்டது, நாம் வாழும் வாழ்க்கை நரகமாகிவிட்டது, பின்பு இதுவெல்லாம் உங்களை கனவிலிருந்து வெளியே போட்டுவிடும். ஆனால் நீங்கள் அதிலிருந்து வெளிவந்தவுடன், உங்களுக்கு அது உண்டாக்கியதல்ல, தொடர்ச்சியானதும் அல்ல என்பது தெரியும். அதனால்தான் நாம் இதை வெடிப்பு என்று சொல்கிறோம். இதில் ஏதோ ஒன்று புதியதாக நடக்கிறது – ஏதோ ஒன்று முற்றிலும் புதியது. இதை பழையதின் ரீதியில் புரிந்துக்கொள்ள முடியாது.
அதனால் நீங்கள் எதிர்மறையாகக்கூட என்ன செய்ய முடியும்? உங்களால் மூன்று விஷயங்களாவது எதிர்மறையாக செய்யமுடியும். ஒன்று விழிப்புணர்வுடன் இருப்பது – உங்களால் ஒரே ஒரு வினாடிக்கு விழிப்புணர்வுடன் இருக்கமுடிந்தாலும் போதும், நீங்கள் கடந்தகாலத்துடன் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், அது உங்கள் மெய்யிருப்பு இல்லையென்றும் அறிந்துகொள்ளுங்கள். மெய்யிருப்பு நிகழ்காலத்தில் இருக்கிறது, இங்கே, இப்போது. ஆனால் நீங்கள் இங்கே, இப்போது, இல்லாத ஒன்றுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதை தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த விழிப்புணர்வு உங்களிடம் திடீரென எங்கிருந்தாலும் வரட்டும். நீங்கள் தெருவில் நடந்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு வினாடிக்கு நில்லுங்கள், திடீரென விழிப்புடன் இருங்கள், எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையிலும், ஒரு வினாடிக்கு நிறுத்துங்கள். திடீரென விழிப்படைந்து, நீங்கள் எங்கிருக்கிறீர்கள் எல்லையிலா அல்லது மையத்திலா? நீங்கள் நினைவுகளுடன் ஐக்கியப்படுத்திக் கொள்கிறீர்களா? அல்லது நீங்கள் நினைவுகளுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ள வில்லையா? ஆரம்பத்தில் இது ஒரு வினாடிக்குதான் வரும், அல்லது ஒரு வினாடிக்குக்கூட வராது. ஒரு நொடியின், ஒரு பாகத்தில் ஒரு க்ஷணத்தோற்றம் தெரியும். நீங்கள் அதை உணர்வீர்கள். உடனே அது சென்றுவிடும். ஆனால் அந்த க்ஷணத்தோற்றம் ஆழமாகும், பின்பு ஒரு புதிய நகர்தல், எல்லையிலிருந்து மையத்திற்கு இருக்கும் – இது எலக்ட்ரானின் நகருதலைப்போல இருக்கும் – ஒரு குதிப்பு, ஒரு நுனியில் இருந்து இன்னொரு நுனிக்கு தாண்டுதல் இருக்கும். அந்த சூழ்நிலை ஆழமாகும்.
கூடியமட்டும் விழிப்புணர்வுடன் தொடர்ந்திருங்கள், இதற்கு எந்த சூழ்நிலையையும் மற்றும் எல்லா சூழ்நிலைகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, மூச்சு வெளியே சென்றுவிட்டது. இன்னும் மூச்சு உள்ளே வரவில்லை. இடைவெளி இருக்கிறது – மிக சிறிய இடைவெளி, இவ்விரண்டிற்கு நடுவில் இருக்கிறது. நீங்கள் மூச்சை எடுத்துக்கொள்ளவுமில்லை. மூச்சு வெளியிலும் போய்க்கொண்டிருக்க வில்லை. அந்த இடைவெளியை அறிந்துக் கொள்ளுங்கள். அதிலேயே தொடர்ந்து ஒரு வினாடிக்கு இருங்கள்; நீங்கள் மையத்தை உணர்வீர்கள். மேலும் நீங்கள் எல்லையிலிருந்து மிக தூரத்தில் இருப்பீர்கள். நீங்கள் கனவை விட்டு வெளியில் இருப்பீர்கள்.
நீங்கள் உறங்கப்போகிறீர்கள், உறக்கம் உள்ளே வருகிறது என்று விழிப்புடன் இருங்கள். அது எதிர்பார்க்காத நேரத்தில் தோன்றுகிறது; நீங்கள் அதில் மூழ்குகிறீர்கள். பின்பு நீங்கள் விழித்துக்கொண்டுமில்லாமல், உறங்கிக்கொண்டு மில்லாத ஒரு வினாடி இருக்கிறது. அப்போது மனம் தன்னுடைய கோணத்தை மாற்றிக்கொள்கிறது. தூக்கமும் இல்லாமல், நீங்கள் விழித்துக்கொண்டுமில்லாமல் இருக்கும் ஒரு வினாடி இருக்கிறது. அதை அறிந்துக்கொண்டு, அந்த இடைவெளியி லேயே தொடர்ந்து இருங்கள், அப்போது நீங்கள் மையத்திற்கு தூக்கியெறியப் படுவீர்கள். நீங்கள் எல்லையைவிட்டு தள்ளியிருப்பீர்கள்.
காலையில் நீங்கள் தூக்கநிலையிலிருந்து திரும்புகிறீர்கள். அப்போது தூக்கம் கலைந்து, இன்னும் விழித்துக் கொள்ளாத ஒரு வினாடியை உணருங்கள். எப்போதும் அந்த ஒரு வினாடி இருக்கிறது. எப்போதெல்லாம் மனம் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுகிறதோ, அப்போதெல்லாம் இடைவெளி இருக்கிறது. எல்லா இடத்திலும் அந்த இடைவெளி இருக்கிறது. ஏனெனில் இடைவெளி இல்லாத மாற்றத்திற்கு வாய்ப்பில்லை; மேலும் அந்த இடைவெளியில் நீங்கள் எல்லையில் இல்லை. அந்த இடைவெளி எல்லையுடன் தொடர்புக்கொண்டதல்ல.
நீங்கள் துல்லியமாக நான் சொல்வதைப் புரிந்துக்கொள்ளவேண்டும்:
எந்த இடைவெளியும் எல்லையில் இல்லை; ஒவ்வொரு இடைவெளியும் மையத்தில்தான் இருக்கிறது.
தொடர்ச்சி என்பது மையத்தைச் சுற்றியிருக்கும் எல்லையில்தான் இருக்கிறது. ஒரு சம்பவம் நிகழ்கிறது, இன்னொரு சம்பவம் நிகழ்கிறது, இதற்கிடையில், இடைவெளி யில், எப்போதும் மையம்தான் இருக்கிறது. நீங்கள் எப்போதும் மையத்திற்கு திரும்பச் சென்றுவிட்டு அடுத்த நொடிக்கே நீங்கள் எல்லைக்கு திரும்பிவிடுகிறீர்கள். ஆனால் இது மிகவேகமாக நடப்பதால் ஒரு வகையில் இது நேரக் கணக்கிற்கே வராது, அதனால் சாதாரணமாக நீங்கள் இதை தெரிந்துக்கொள்ள முடியாது. ஆனால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்து, கவனமாக இருந்து, கண்காணித்துக் கொண்டிருந்து, ஜாக்கிரதையாக இருந்தால், பின்பு போகப்போக உங்களுக்கு க்ஷணத்தோற்றம் தெரிய ஆரம்பிக்கும்.
நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்கள். அந்த காதல் போய்விட்டது. இன்னும் வெறுப்பு வரவில்லை. அப்போது ஒரு வினாடி இருக்கிறது. காதல் எல்லையில்தான் நிகழ்கிறது, வெறுப்பும் எல்லையில்தான் நிகழ்கிறது. ஆனால் இவ்விரண்டிற்கும் நடுவே இருக்கும் இடைவெளி எப்போதும் மையத்தில் தான் நிகழ்கிறது. அதனால் நீங்கள் காதலிக்கும்போதும், நீங்கள் எல்லையில்தான் இருக்கிறீர்கள்; நீங்கள் வெறுக்கும்போதும், நீங்கள் எல்லையில்தான் இருக்கிறீர்கள். நீங்கள் காதல் என்பதிலிருந்து வெறுப்புக்கு மாறும்போதோ அல்லது வெறுப்பிலிருந்து காதலுக்கு மாறும்போதோ, நீங்கள் எல்லையில் இல்லை. இடைவெளி எப்போதும் மையத்தில்தான் இருக்கிறது. நீங்கள் மையத்திற்கு தூக்கியெறியப்படுகிறீர்கள். உங்களால் எல்லையிலேயே மாற்றிக்கொள்ள முடியாது, ஏனெனில் எல்லையில் நீங்கள் செய்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். மெய்யிருப்பு மையத்தில்தான் இருக்கிறது; நீங்கள் எதையாவது மாற்றுவதற்கு திரும்ப வந்தாக வேண்டும். ஆனால் இவ்வாறு வந்துபோகும் வேகம் மிக அதிகம், நேரம் கணக்கிடமுடியாத அளவிற்கு வேகமானது, அதனால் சாதாரணமாக இதில் நீங்கள் விழிப்புடன் இருக்கமுடியாது.
எந்த மாற்றத்திலும் விழிப்புடன் இருங்கள். நீங்கள் நோயுற்றிருந்தீர்கள், இப்போது நோய் போய்விட்டது, ஆனால் இன்னும் ஆரோக்கியம் வரவில்லை. விழிப்புணர்வுடன் இருங்கள் – நீங்கள் மையத்தில் இருப்பீர்கள். எந்த மாற்றமும் எல்லையிலேயே இருக்க வாய்ப்பில்லை. அதனால்தான் எல்லோருக்கும் தூக்கம் தேவைப்படுகிறது, ஏனெனில் உறக்கத்தில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்கிறது. உங்களால் ஆழ்ந்து தூங்க முடியவில்லையென்றால், உங்களால் வாழவே முடியாது, ஏனெனில் வாழ்க்கைக்கு குறிப்பிட்ட சில மாற்றங்கள் அன்றாடம் தேவைப்படுகிறது. உடலில், மனதில், உணர்ச்சிகளில் அன்றாடம் நிறைய மாற்றங்கள் ஆகவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. அதனால் இயற்கை உங்களை சுயநினைவின்றி ஆக்குவதற்கு வழி வைத்திருக்கிறது, ஏனெனில் சுயநினைவுடன் நீங்கள் மையத்தில் நெடுநேரம் இருக்கமாட்டீர்கள். நீங்கள் சுயநினைவின்றி எறியப்படுகிறீர்கள், ஆகையால் நீங்கள் எல்லையில் இல்லாமல், எல்லைக்கு ஓடாமல், மையத்தில் இருப்பீர்கள். நீங்கள் உறங்கிவிட்டபிறகு, நீங்கள் சுயநினை வின்றி இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் மையத்தில் இருக்கிறீர்கள், அத்தோடு நீங்கள் மெய்யிருப்புடன் அமைதியாகிறீர்கள்.
ஆனால், நீங்கள் விழித்துக்கொண்டிருக்கும்போதும் மாற்றங்கள் இருக்கின்றன. ஒற்றமையின் அடிப்படையில் சொன்னால், நீங்கள் உங்கள் காரின் கியரை (Gear) மாற்றுகிறீர்கள். மிகக் குறைந்த நேரத்திற்குதான் நீங்கள் காரை நடுநிலையில் (Neutral) வைத்திருப்பீர்கள். எப்போதும் நடுநிலையின் (Neutral Position) மூலமாகத்தான் கியரை மாற்றவேண்டும். நடுநிலையில் கியர் எதுவும் இல்லை. நீங்கள் முதல் கியரிலிருந்து இரண்டாவதிற்கு மாற்றும்போது, உங்களால் நேரிடையாக மாற்றமுடியாது. முதலில் நடுநிலைக்கு கொண்டுவந்தப் பிறகுதான் மாற்றமுடியும். இதில் நீங்கள் அதிக தேர்ச்சிப்பெற்றதும் இதற்கு குறைவான நேரம்தான் எடுத்துக்கொள்வீர்கள். உண்மையில் இதில் தேர்ச்சிபெற்ற ஓட்டுநர் ஒவ்வொரு முறையும் கியரை மாற்றும்போதும் அது நடுநிலைக்கு வந்துதான் மாறுகிறது என்பது தெரியாமல் போகிறது. அது மிக வேகமாக மாற்றப்படுவதால், அதில் அவன் கவனமாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. யார் ஒருவர் கற்றுக்கொள்கிறாரோ அவர்கள்தான் விழிப்புடன் இருக்கிறார்கள், மற்றபடி யாரும் விழிப்புடன் இல்லை. கற்றுக்கொள்ளும்போது நடுநிலையில் வைப்பதுதான் மிகக் கடினமானது. எப்போதெல்லாம் நீங்கள் ஒரு செய்கையில் இருந்து இன்னொரு செய்கைக்கு மாறுகிறீர்களோ, நீங்கள் திரும்பவும் நடுநிலைக்கு வருகிறீர்கள், மையத்திற்கு வருகிறீர்கள். அதனால் விழிப்புணர்வுடன் இருங்கள்.
யாரோ ஒருவர் உங்களை அவமரியாதை செய்துவிட்டார்கள் – இப்போது நீங்கள் மாறுவீர்கள், உங்களால் அதேபோல் இருக்கமுடியாது. நீங்கள் எல்லையில் மாறவேண்டும். இப்போது அதே முகம் பொருந்தாது, நீங்கள் உங்களுடைய முழு முகத்தை மாற்றியாக வேண்டும். இப்போது உங்கள் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப்பற்றி விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் உங்களுடைய மையத்திற்குச் சென்று, திரும்பவும் எல்லைக்கு வரவேண்டும். பிறகு நீங்கள் உங்களுடைய முகத்தை மாற்றிக்கொள்ளலாம். அதனால் யாராவது உங்களை அவமரியாதை செய்யும்போது, உள்ளே ஆழ்ந்து யோசியுங்கள், உள்ளே போங்கள். அவன் மாற்றத்திற்குரிய நுனியை கொடுத்திருக்கிறான்.
ஆன்மீகத்தேடல் உள்ளவருக்கு, விழிப்புணர்வின் மாறும் தன்மையை அறிய செய்வதற்கு, போதை மருந்துகளை பயன்படுத்தினார்கள். அவர்கள் ஏதோ ஒரு போதை மருந்தை கொடுத்துக்கொண்டேயிருப்பார்கள். அப்போது அந்த ஆசான் “இடைவெளியைப் பற்றி விழிப்புடன் இரு” என்று சொல்லுவார். ஒரு நொடி வரை நீங்கள் விழிப்புடன் இருந்தீர்கள். இப்போது நீங்கள் உங்கள் விழிப்புணர்வை இழந்துக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் நீங்கள் உங்கள் சுயநினைவிலிருந்து, சுயநினைவை இழக்கும் அந்த மாற்றத்தின்போது, வரும் ஒரு வினாடியை விழிப்புடன் இருந்து கவனியுங்கள்.
ஒருவர் எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கிறார், ஒருவர் இந்த மாறும் வினாடிகளில் விழிப்புடன் இருந்தால், ஒருவர் மையத்தைத் தெரிந்துக்கொள்ளலாம்.
ஒரு சென் (Zen) குரு ஜன்னல் வழியாக உங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, பின்னால் நின்றுகொண்டு, “விழிப்புடன் இருங்கள்!” என்று கத்துவார். நீங்கள் தூக்கியெறியப்பட்டு விட்டீர்கள், நீங்கள் நடுவில் இருக்கிறீர்கள். நீங்கள் ஜன்னலை கடந்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் தரையை பெரும்பாலும் முட்டி விட்டீர்கள். அவர் “விழிப்புடன் இருங்கள்” என்று கத்துகிறார், நீங்கள் தரையில் விழுந்துவிட்டீர்கள். உங்கள் முகம் மாறவேண்டும். இப்போது சூழ்நிலை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. நீங்கள் ஏதோ ஒரு வேதாந்த கேள்வியை கேட்கவந்திருக்கிறீர்கள், ஆனால் அவரோ முற்றிலும் வேதாந்தம் இல்லாமல் செய்துவிட்டார். அவர் உங்களை ஜன்னல் வழியாக வெளியே தூக்கியெறிந்துவிட்டார்! நீங்கள் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று கேட்டுக்கொண்டிருந்தீர்கள். இதற்கு ஜன்னல் வழியாக உங்களை எறிவது முற்றிலும் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அவர் “விழிப்புடன் இருங்கள்” என்று சொல்லுகிறார்.
நீங்கள் முகத்தை மாற்றும் அந்த துல்லியமான வினாடியிலும், நீங்கள் நிலைகளை மாற்றும்போதும், நீங்கள் ஜன்னலை கடந்துக்கொண்டிருக்கும்போதும் உங்களுடைய உடல் மட்டும் மாற்றங்களை கடப்பதில்லை. ஒரு ஆசானுக்கு எப்போது மாறுகிறது என்பது துல்லியமாகத் தெரியும். அந்த துல்லியமான வினாடியில்தான் அவர் “விழிப்புடன் இருங்கள்” என்று கத்துவார், அப்போது, அந்த வினாடியில் உங்களால் அவரை கேட்கமுடிந்தால், நீங்கள் மையத்தில் இருப்பீர்கள் – எல்லையிலிருந்து வெளியே தூக்கியெறியப்படுவீர்கள்.
எப்போதெல்லாம் மாற்றத்திற்கான சூழ்நிலை இருக்கிறதோ, அப்போதெல்லாம் உள்ளே பார்ப்பதற்கு கவனமாக இருங்கள். பயணம் எதுவும் இல்லை, எல்லை யிலிருந்து மையத்திற்கும், மையத்திலிருந்து எல்லைக்கும் குதிப்பதுதான் இருக்கிறது. இதனுடைய நடவடிக்கை ஒரு எலக்ட்ரானைப் போலவோ, அல்லது ஒரு கனவைப் போலவோ இருக்கும். அந்த விழிப்புணர்வை ஆழமாக்குங்கள். உங்களால் செய்ய முடிந்ததெல்லாம் இவ்வளவுதான். இது எதிர்மறையானது, ஏனெனில் விழிப்புணர்வு என்பது செய்வதல்ல, விழிப்புணர்வு ஒரு செயல் அல்ல.
எப்போதெல்லாம் நீங்கள் மாறும் நிலையில் இருக்கிறீர்களோ, அப்போதெல்லாம் விழிப்புடன் இருங்கள். அப்போது செயல்கள் எதுவும் இருக்காது. நீங்கள் விழிப்புடன் இருக்கும்போதெல்லாம் செயல்கள் நிறுத்திவைக்கப்படும். நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, உங்கள் மூச்சுக்கூட நின்றுவிடும். நான் ஒரு கத்தியை கழுத்தில் வைத்தால், அப்போதும் மூச்சு நின்றுவிடும். நீங்கள் அதிகமாக விழிப்புணர்வுடன் இருந்தால், எல்லாமே நின்றுவிடும். நீங்கள் மையத்திற்கு தூக்கியெறியப்படுவீர்கள்.
விழிப்புணர்வு என்பது செயல் அல்ல. செயலுக்கு அடிமைப்பட்டிருப்பது, விழப்புணர்விலிருந்து தப்பித்துக் கொள்வதற்குதான், நாம் எல்லோரும் செயல்களுக்கு அடிமையாகிவிட்டோம் – ஒருவர் ஏதாவது செய்யவேண்டும். இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது, தொடர்ச்சிக்கு உதவுகிறது.
எந்த வாய்ப்பையும் விழிப்புடன் இருப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் – எந்த வாய்ப்பையும், இதற்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் இருக்கின்றன. விழிப்புணர்வுடன் இருங்கள், எல்லையிலிருந்து மையத்திற்கு குதிப்பதை நீங்கள் உணர்வீர்கள். இவ்வாறு மையத்தில் இருப்பது உங்களுக்கு சுலபமாகிவிடலாம். நீங்கள் வீட்டின் வெளியே இருக்கிறீர்கள்; அங்கே வெப்பமாகிவிட்டது. சற்று உள்ளே வாருங்கள். எப்போதெல்லாம் உங்களுக்கு உள்ளே வரவேண்டும்போல் தோன்று கிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் உள்ளே வரலாம். எப்போதெல்லாம் உங்களுக்கு வெளியில் போகவேண்டும்போல் தோன்றுகிறதோ, நீங்கள் வெளியில் போகலாம். அதில் எந்த கஷ்டமும் இல்லை. எப்போது உங்களுடைய நகருதல், எல்லையி லிருந்து மையத்திற்கு இவ்வாறு ஆகிறதோ, பின்பு உங்களுக்கு வெடித்தல் இருக்கும்.
நான் “பின்பு”….. என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன், நான் “மெதுவாக” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன், நான் “படிப்படியாக” என்கிறேன், நான் “போகப்போக” ...... என்று சொல்கிறேன். ஆனால் இந்த வார்த்தைகள் எல்லாம் சம்மந்தம் இல்லாதது, ஆனால் வேறு வழியில்லாமல் நான் இந்த வார்த்தைகளை யெல்லாம் பயன்படுத்துகிறேன். இவையெல்லாம் வெடிப்பை பொறுத்தமட்டில் சம்மந்தம் இல்லாதது. அது படிப்படியானது கிடையாது, அது மெதுவானது கிடையாது, அது போகப்போக வரக்கூடியது கிடையாது. அது திடீரென்று வருவது, ஆனால் அதை உங்களால் புரிந்துக்கொள்ளமுடியாது. அதனால் நீங்கள் புரிந்துக்கொள்வதற்காக, அல்லது நீங்கள் விருப்பப்பட்டால், தவறாக புரிந்துக்கொள்வதற்காக, இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மொழியினுடைய மொத்த முறையும் எல்லைக்காக செய்யப்பட்டது, வேறு ஒன்றும் செய்யமுடியாது. மொழி, எல்லையில் இருக்கும் மனிதர்களின் மனதால் உருவாக்கப் பட்டது. இது எல்லையில் இருக்கும் மனிதர்களின் மனதிற்கு தேவைப்படுகிறது. இது எல்லைக்கு ஒரு தேவை, மையத்திற்கு இது தேவையில்லை. மையம் முற்றிலும் அமைதியானது, அங்கு எந்த மொழியும் தேவையில்லை. அதனால் நாங்கள், மையத்தை எல்லையின் மொழியால் எடுத்துச்சொல்ல வேண்டுமென்றால், பின்பு இது நடக்கத்தான் செய்யும்.
அதனால் நான் படிப்படியாக என்று சொல்லும்போது, என்னைத் தவறாக புரிந்துக்கொள்ளாதீர்கள். நான் படிப்படியாக என்ற அர்த்தத்தில் சொல்லமாட்டேன். வெடிப்பு ஒருபோதும் போகப்போக வராது. அதனால் இந்த வார்தைகளெல்லாம் உங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுப்பதற்காகத்தான், அதனால் நீங்கள் நடக்கும் என்று நம்பலாம், உங்களுக்கு அது கற்பனை செய்து பார்க்க வரலாம், இதனால் எல்லையில் சிலவற்றை புரிந்துக்கொள்ளலாம். இது விழித்திருக்கும் விழிப்புணர்வின் உலகத்தைப்பற்றி, கனவில் இருக்கும் ஒருவரிடம் சொல்வதாகும். இதற்கு ஒருவர் கனவின் மொழியை உபயோகிக்கவேண்டும், ஆனால் அது அபத்தமாகிவிடும். எந்த மொழியும் அபத்தமானது. எந்த வெளிக்காட்டுதலும் ஒரு வகையில் அபத்தமானது தான், ஆனால் ஒன்றும் செய்யமுடியாது. ஒருவர் உதவுவதற்கு முற்றிலும் வழியில்லாததை உணர்வார், அந்த உதவமுடியாத நிலை மிக அதிகமாக இருக்கிறது.
ஒருவருக்கு ஏதோ தெரிகிறது – உதாரணத்திற்கு, வெடிப்பதின் அர்த்தம் என்ன என்பது பற்றி எனக்குத் தெரியும், மையத்தில் இருப்பதென்றால் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னால் உங்களுக்கு சொல்லமுடியாது. நீங்கள் கேட்கிறீர்கள், நான் உங்களிடம் ஏதாவது சொல்கிறேன், எல்லா முறையும் என்னால் சொல்லமுடியாது என்பது எனக்குத் தெரியும். எனக்கு வெடிப்பு என்றால் என்ன என்பது தெரியும், மையத்தில் இருப்பதென்றால் என்ன என்பது தெரியும். நான் பேச ஆரம்பிக்கும் வினாடியிலிருந்து, நான் எல்லையின் மொழியை உபயோகிக்க ஆரம்பித்துவிடுகிறேன். நான் எல்லையின் மொழியை உபயோகப்படுத்தும் வினாடி யிலிருந்து, எல்லாம் திரித்துக்கூறுவதாகிவிடுகிறது. அதனால் இந்த தாத்பரியத்தை புரிந்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் சங்கிலி வெடிப்புகளைப்பற்றி கேட்கிறீர்கள். எப்போதெல்லாம் வெடிப்பு நிகழ்கிறதோ அப்போதெல்லாம் நிறைய விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. ஏனெனில் இது ஒரு மாபெரும் அற்புத சம்பவம். எங்கெல்லாம் ஒரு மனிதர் இதை கடக்கிறாரோ, அவர் எங்கிருந்தாலும் ஒட்டுவார் ஒட்டியாக ஆவதை அவரால் தடுக்கமுடியாது. அவர் இதற்கு விருப்பப்படாமல் இருக்கலாம், ஆனால் இது நிகழ ஆரம்பிக்கிறது. அவர் மையத்திலிருப்பது, அவர் அருகில் வருவோரையெல்லாம் மையத்திற்கு பிடித்துத் தள்ளும். இதனால் பல சமயங்களில் அவர் துரத்துவதாக மக்கள் நினைப்பார்கள்.
உதாரணத்திற்கு, குருஜிஃப் (Gurdjeff) வெறுப்பூட்டுபவராக பலர் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இவரை விட்டு ஓடினால் போதும் என்று இருக்கும், ஏனெனில் அவர் அருகில் இருப்பதினால், அவர்களுக்கேத் தெரியாமல் அவர்கள் தள்ளப்படுவார்கள். ஆன்மீகத் தேடலில் இருக்கும் நிறைய பெண்கள் அவரை விட்டு ஓடிவிட்டனர். ஏனெனில் அவர்களுடைய பாலுணர்வு மையத்தில் (Sex Center) ஒரு தாக்கத்தை உணர்ந்தார்கள். அவர்கள் எல்லோரும் இவர்தான் ஏதோ செய்கிறார் என்று நினைத்தார்கள். அவர் ஒன்றும் செய்யவில்லை, ஆனால் நமக்கு வேலை செய்துகொண்டிருக்கும் ஒரே மையம், பாலுணர்வின் மையம்தான் என்பதினால், முதல் தாக்கம் எப்போதும் அங்கேதான் உணரப்படும். ஆன்மீகத்தேடலில் உள்ள ஆண்கள் குருஜிஃப் (Gurdjeff) பிடம் வந்தால், அவர்கள் அவ்வளவாக உணர்வதில்லை, ஆனால் பெண்கள் உணர்வார்கள், இது எதனால் என்றால், ஆணின் உடலில் அனுகூலமான உயிரியல் மின்சாரமும் (Positive Bio electri Electricity), பெண்ணின் உடலில் எதிர்மறையான உயிரியல் மின்சாரமும் (Negative Bio electricity) இருக்கிறது, இதனால் எதிர்மறையான இணங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் கவர்ச்சி இருக்கும். ஒரு ஞான அறிவுப்பெற்ற ஆண் அதிகமான ஆக்கசக்தியை ஆன்மீகத்தேடலில் உள்ள பெண்களுக்கு பரவச் செய்கிறார். இதில் இரண்டு விஷயமும் நடக்கும். ஆன்மீகத் தேடலில் இருக்கும் பெண்கள் குருஜிஃப் (Gurdjeff) போன்றவர்களால் கவரப்படுவார்கள், அதே சமயத்தில் வெறுப்படையவும் செய்வார்கள். அந்த உள்ளார்ந்த தாக்கம் பல வகையில் உணரப்படும், ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த வழியில் அதை உணர்வார்கள்.
மேற்கில் இருப்பவர்களுக்கு பல காரணங்களினால் இது ஆழமாக உணரப்படும். ஒன்று, அவர்களுக்கு போதிய தொடக்கம் இல்லை. இந்தியாவில் ஆன்மீகத்தேடலில் உள்ளவர்கள் குருவின் கால்களைத் தொடவேண்டும். இது தேவையில்லாததாகவும், சம்பிரதாயமாகவும் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால், இதில் இரகசியங்கள் இருக்கின்றன. நீங்கள் ஒரு குருவிடம் குனிந்து அவர் கால்களைத் தொட்டால், உங்களுடைய பாலுணர்வின் மையத்தில் (Sex Center) அவர் இருப்பதினால் எந்த தாக்கமும் ஏற்படாது, ஏனெனில் நீங்கள் சரணடையும் வினாடியிலிருந்து அவருடைய ஆக்கசக்தியை உடல் முழுவதும் உணர்வீர்கள். சரணடைந்த உடல் முழுமையாகிறது. நீங்கள் இதை உணராமல் இருந்திருக்கலாம், ஆனால் நான் உங்களிடம் சொல்லும் போது, இப்போது உணர்ந்து தெரிந்துக்கொள்வீர்கள்.
இந்திய முறைப்படி காலைத்தொடுவதென்றால் பூமியில் முழுவதுமாக படுத்துக் கொண்டு காலைத் தொடவேண்டும். உடலின் எல்லா பாகங்களும் பூமியில் படவேண்டும். நாம் இதை சாஷ்டாங் (Sashtang) என்று அழைக்கிறோம். இதற்கு நீங்கள் பூமியில் படுத்துக்கொண்டிருக்கும்போது உடலின் எல்லா பாகங்களும் பூமியில் தொடுகிறது என்று அர்த்தம். அறிவியல்பூர்வமாக பல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. உங்கள் முழு உடலும் ஒன்றாகி ஒரு மையத்தில் மட்டுமல்லாமல் முழு உடலுக்கும் தாக்கம் பரவுகிறது. நீங்கள் படுத்துக்கொள்ளும்போது அந்த தாக்கம் உங்கள் தலைவழியாக கால்களை நோக்கிச் செல்கிறது. நீங்கள் நேராக இருக்கும் போது, நிற்கும்போது, அதேதாக்கம் உங்கள் மூலமாக கடக்கிறது. ஆனால் அதுவால் உங்கள் முழு உடலின் மூலம் கடக்கமுடியாது; அதுவால் உங்கள் கால்கள் வழியாக கடக்கமுடியாது. உங்களிடம் இருக்கும் ஒரே மென்மையான உறுப்பு பாலுணர்வின் மையம்தான் (Sex Center), அதனால் அது பாலுணர்வின் மையத்தின் வழியாக கடக்கிறது. நீங்கள் மையத்திலேயே இருக்கும் ஒரு குரு பக்கத்தில் நின்றால், அவருடைய தாக்கம், அவருடைய அதிர்வு உங்கள் மையத்தின் மூலமாக கடக்கும். இது வெறுப்பாகவும் ஆகலாம், கவர்ச்சியாகவும் ஆகலாம்; எதுவானாலும் கஷ்டங்கள் இருக்கும். நீங்கள் படுத்துக்கொண்டிருந்தால், பின்பு அந்த ஓட்டம் உங்கள் வழியாக கடக்கும். உங்களைத் தொடும், ஒரு நுனியிலிருந்து இன்னொரு நுனிக்கு ஓட்டம் இருக்கும், அதற்கு ஒரு தடவிக்கொடுக்கும் தன்மை இருக்கும்.
இந்த நாட்டில், உள் அறிவியலை வளர்ப்பதற்கு பல நூற்றாண்டுகள் ஆனது. அவர்களுக்கு பல வகையான அனுபவத்திற்கு பிறதுதான் தெரிந்தது. ஏனெனில் மனிதனை பன்றிப்போல் வைத்து ஆராயமுடியாது. இதையெல்லாம் தெரிந்துக் கொள்ள பல நூற்றாண்டுகள் ஆனது, இதைப்பல அனுபவங்களின் மூலமும், பல நிகழ்வுகளின் மூலமும் தெரிந்துக்கொண்டார்கள்.
அவர்கள், நம்பிக்கையுடன்தான் ஒருவர் ஆரம்பிக்கவேண்டும் என்பதை ஒரு அடிப்படை நிபந்தனையாகவே செய்துவிட்டார்கள். நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால், நீங்கள் திறந்திருப்பீர்கள். நீங்கள் சந்தேகத்துடன் இருந்தால், பின்பு நீங்கள் மூடியிருப்பீர்கள். நீங்கள் மூடியிருந்தால், பின்பு உங்கள் வெடிப்புக்கு உதவக்கூடிய ஆக்கசக்தி சுற்றச்சுற்றி போய்க்கொண்டிருக்கும், அதுவால் உங்களை ஊடுருவிச் செல்ல முடியாது. நீங்கள் மூடியிருக்கிறீர்கள். அது உங்களுக்கு உதவுவதற்கு வாய்ப்பில்லை, நீங்கள் திறந்து, நம்பிக்கையுடன் இருந்தால், பின்பு அது ஆழ்ந்து உள்ளே செல்கிறது. பின்பு வெடிப்பு, சங்கிலி வெடிப்பாகிறது. இது நடக்கலாம், இது எப்போதும் நடக்கிறது. அதனால் நம்பும் மனப்பான்மை சங்கிலி வெடிப்புகளை உருவாக்குகிறது.
சில நேரங்களில் சங்கிலி வெடிப்பு, ஆரம்பித்துவைத்த குரு இறந்தபிறகும்கூட தொடர்ச்சியாக போய்க்கொண்டேயிருக்கிறது. உதாரணத்திற்கு சீக்கியர்கள் பாரம்பரியத்தில் பத்தாவது குருதான் கடைசி. பத்தாவது வரை, குரு தொடர்ச்சியாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்தார்கள். ஆனால் பத்தாவதுடன் அந்த பாரம்பரியம் நின்று, உடைந்துவிட்டது. இதற்கு என்ன காரணம்? ஏன் கோவ்ந்த்சிங் குடன் நின்றுவிட்டது? அது குருநானக் (Guru Nanak) கில் ஆரம்பித்து கோவ்ந்த்சிங் வரை தொடர்ச்சியாக இருந்தது. அதுவரை அது வாழ்ந்துக்கொண்டிருக்கும் வலிமையாக இருந்தது, ஆனால் அது கோவிந்த்சிங்குடன் நின்றுபோய்விட்டது. அதை கொடுக்கவோ, மாற்றவோ முடியவில்லை, ஏனெனில் அதற்கு தகுதி வாய்ந்தவர் களாக யாரும் இல்லை. அதை முழுமையாக, மொத்தமாக பெறுவதற்கு யாரும் திறந்தில்லை. மேலும் அதை ஒரு பகுதியாக தர இயலாது. நீங்கள் முழுமையாக திறந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் இல்லை.
ஒரு பகுதியை நம்புவது நம்பிக்கையே அல்ல. அது ஏமாற்றிக்கொள்வதுதான். நீங்கள் தொன்னூற்றி ஒன்பது சதவீதம் நம்பினாலும், தொன்னூற்றி ஒன்பது புள்ளி ஒன்பது சதவீதம் நம்பினாலும்கூட அது போதாது. அந்த ஒன்றில் பத்து சதவீதம் சந்தேகம், முழுவதையும் கொல்வதற்கு போதுமானது, ஏனெனில் அந்த ஒன்றில் பத்து சதவீதம் சந்தேகம் உங்களை மூடச்செய்துவிடும். நீங்கள் நம்பிக்கையுடன் திறந்திருந்தால், பின்பு சங்கிலி பிரதிபலிப்பு இருக்கும்; பின்பு நீங்கள் முழுமையாக தொடர்பு கொள்கிறீர்கள். பின்பு அந்தத் தொடர்பு வெறும் தொடர்பல்ல. அது உங்கள் முழு மெய்யிருப்புடன் கலக்கிறது.
நீங்கள் திறந்திருந்தால், நீங்கள் என்னிடமிருந்து எதையாவது எடுத்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. முதலில் “நான்” என்பதேயில்லை. அது ஒருவரிடமிருந்து எதையாவது எடுத்துக்கொள்வதல்ல, இது நீங்களே உங்களுடைய சொந்த சுயத்தின் பிரதிபலிப்பாகும். நாம் “நான் என்ற அகந்தை” யினால் தனியாக தெரிகிறோம். நீங்கள் திறந்திருந்தால், பின்பு அந்த சங்கிலி பல நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்து வரலாம். உதாரணத்திற்கு புத்தருடைய சங்கிலித்தொடர்பு இன்னும் தொடர்கிறது. நிச்சயமாக, இன்று, அது அகலமாக இல்லை; அது குறுகிய ஓடையாகிவிட்டது. ஆனால் அது தொடர்கிறது.
போதி தர்மா (Bhodhi Dharma) இந்தியாவிலிருந்து சீனாவிற்குச் சென்றது யாருக்காவது பாடம் நடத்துவதற்கோ, அல்லது புத்தரின் போதனையை சீனர்களுக்கும், மற்றவர் களுக்கும் கொடுப்பதற்கோ அல்ல. அவர் இந்த வெடிப்பை கொடுக்கக்கூடிய அளவிற்கு இருக்கும் ஒரு ஆளைத் தேடிச்சென்றார். அந்த நபர் நன்கு திறந்திருந்ததால், போதிதர்மா இறப்பதற்குள் அவருக்கு எல்லாவற்றையும் மாற்றமுடிந்தது. அதற்காக அவர் சீனாவில் ஒன்பது வருடங்களாக தொடர்ந்து சுவற்றை பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தார். நீங்கள் அவரிடம் சென்றிருந்தால், அவர் உங்களை ஏறெடுத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். வந்து போவோருக்கெல்லாம் அவருடைய முதுகுதான் தெரிந்தது. நிறைய மனிதர்கள் “என்ன இது? ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?” என்று கேட்பார்கள். அதற்கு போதிதர்மா “நான் மனிதர்களை பல வருடங்களாக பார்த்துக்கொண்டிருந்தேன், ஆனால் அவர்கள் முகத்திலெல்லாம் சுவற்றைத் தவிர வேறு எதையும் காணமுடியவில்லை. யாருமே ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன் இல்லை; எல்லோரும் சுவற்றைப்போல் இருக்கிறார்கள். அதனால் இப்போது இது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை, எப்போது நீங்கள் சுவராக என்னிடம் வராமலிருக்கிறீர்களோ, பின்பு நான் உங்களைப் பார்த்து உட்கார்ந்துக் கொள்கிறேன், பின்பு உங்களைப் பார்க்கிறேன்” என்றார்.
ஒன்பது வருடங்களுக்கு தொடர்ச்சியாக போதிதர்மா பார்க்கும் அளவிற்கு, திறன் வாய்ந்தவர்களாக யாரும் வரவில்லை. பின்பு ஹூய் நிங் (Hui Neng) என்ற ஒருவர் வந்தார். அவர் வந்து போதிதர்மாவின் பின்னால் நின்று கொண்டார், பின்பு அவர் தன் கைகளை வெட்டி போதிதர்மாவிடம் கொடுத்துவிட்டு “இப்போது நீங்கள் திரும்புங்கள், இல்லையென்றால் நான் என் தலையை வெட்டிக்கொள்வேன்” என்றார். போதிதர்மா ஹூய் நிங்கைப் (Hui Neng) பார்த்து உட்கார்ந்து “இப்போது அந்த மனிதன் வந்துவிட்டான். உனக்காக நான் முழு இமயமலையையும் பயணித்து வந்திருக்கிறேன்” என்றார். வேதநூல்கள் எதுவும் இல்லாமல் செலுத்த முடிந்தது (Transmission).போதிதர்மாவிடம் எந்த வேதநூல்களும் இல்லை, அதனால் செலுத்தக்கூடியதை எந்த வேதநூல்களும் இல்லாமல் செலுத்தப்பட்டதாக சொல்கிறார்கள். அவர் ஹூய் நிங் (Hui Neng) யின் கண்களைப் பார்த்தார், பின்பு அவரிடமிருந்து இவருக்கு அனுப்பப்பட்டது, இது ஒரு நுனியிலிருந்து இன்னொன்றுக்கு பயணிக்காமல் போவது போலாகும்.
அதனால் இதை புரிந்துக்கொள்ள வேண்டும். சங்கிலி வெடிப்பும் திரும்பவும் ஒரு குதித்தல்தான். ஏதோ ஒன்று என்னுடைய விழிப்புணர்விலிருந்து உங்களுடைய விழிப்புணர்விற்குச் செல்கிறது என்றால், அது தாண்டிக் குதித்தல்தான். அது இங்கிருந்தது. பின்பு அது அங்கே இருக்கிறது, அது இதற்கிடையில் எங்கேயும் இருந்ததில்லை. இதற்கு எந்த முறையும் இல்லை. இந்த சங்கிலி முடிவில்லாமல் தொடர்ந்துக் கொண்டேயிருக்கலாம். ஆனால் அது தொடர்வதில்லை. அது மிகக் கடினமானது, ஏனெனில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் குருவிடமே திறந்திருப்பது மிகக் கடினமானது.
மனம் ஒவ்வொரு வழியிலும் மூடிக்கொள்ள முயற்சிக்கிறது, ஏனெனில் திறந்திருப்பது என்றால் இறப்பதாகும். மனதிற்கு இது ஒரு இறப்பு, அதனால் அது முயற்சிக்கும், அது வாதிடும், அது மூடியிருப்பதற்கு பல வழிகளைக் கண்டுபிடிக்கும். அது அபத்தமான காரணங்களை கண்டுபிடிக்கும். மற்ற வினாடிகளில், அதற்குப் பிறகு, இந்தக் காரணங்களையெல்லாம் உங்களுக்கு சந்தேகத்தை கிளப்ப முடியுமா என்பதையும், இந்த அர்த்தமற்றவைகள் உங்களை சந்தேகப் பேர்வழியாக்கியதை உங்களால் கற்பனைக்கூட செய்துபார்க்கமுடியாது. இந்த அர்த்தமற்றவைகள், தடைகளை உருவாக்கும். நீங்கள் திறந்தில்லை என்றால், பின்பு இந்த சங்கிலிக்கும் இந்த மாற்றிச் செலுத்துதலுக்கும் (Transmission) வாய்ப்பில்லை.
உங்களுடைய எல்லா தியானங்களும், தியானத்திற்கு நான் வற்புறுத்துவதும், முக்கியத்துவம் கொடுப்பதும், உங்களை திறந்துக்கொள்ளச் செய்வதற்குத்தான். எந்த வினாடியும் நீங்கள் திறந்துகொள்வீர்கள். பின்பு செலுத்துதல் (Transmission) சாத்தியமாகும்.
சின்னச்சின்ன வெடிப்புகள் தினமும் நிகழும். அவைகள் எல்லாம் மையத்தின் ஒரு க்ஷணத்தோற்றம்தான். ஆனால் அந்த க்ஷணத்தோற்றங்கள் போதாது. அது உங்களுக்கு உதவலாம். ஆனால் அத்துடன் நீங்கள் திருப்தி அடையாதீர்கள். சாதாரணமாக நாம் இத்துடன் திருப்தி அடைந்துவிடுவோம். ஒரு க்ஷணத்தோற்றம் இருக்கிறது. அத்துடன் ஒருவர் திருப்தி அடைந்து விடுகிறார். ஒருவர் அதை பொக்கிஷமாக்கி அதை நினைவு வைத்துக்கொண்டேயிருக்கிறார். அந்த க்ஷணத்தோற்றம் மையத்திலிருந்து எல்லைக்குச் சென்றவுடன் அது நினைவாகிறது. பின்பு நீங்கள் அதற்கு உணவூட்டி, அதை நினைவு வைத்துக்கொண்டு பெருமைக் கொள்வீர்கள். பின்பு அது எப்போது திரும்பவும் நடக்கும் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். பின்பு அது எல்லையின் நினைவின், ஒரு பாகமாகிவிட்டது. அது பயனில்லாதது.
சின்னச்சின்ன வெடிப்புகள், நீங்கள் அதற்கு நினைவுகளாக போஷாக்கு செய்யும்போது, அது கொல்லக்கூடியதாக மாற வாய்ப்பிருக்கிறது. அதை தூக்கியெறியுங்கள். அதை மறந்துவிடுங்கள். திரும்பத் திரும்ப அது நடக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்போதுதான் பெரும் வெடிப்புக்கு வாய்ப்பிருக்கிறது. அப்போதுதான் முழுமையான வெடிப்பு சாத்தியமாகும்.
அதனால் சிறிய வெடிப்புகள் இருக்கின்றன, ஆனால் நான் அதில் கவனம் செலுத்துவதில்லை. நீங்களும் அதில் கவனம் செலுத்தக்கூடாது, ஏனெனில் பின்பு அவைகள் உங்களுடைய நினைவாற்றலின் ஒரு பகுதியாகிவிடும். அவைகள் நினைவாற்றலையே அழித்துவிடமுடியாது, ஆனால் அதற்கு மாறாக, அதை பலப்படுத்தலாம். அதனால் ஒரு சிறிய அனுபவம், ஒரு மிகச்சிறிய அனுபவம் ஒன்றும் செய்யாது. தூக்கியெறியுங்கள். முழுவதையும் அடையும்வரை, போதும் என்ற மனதுடன் இருக்காதீர்கள்.
இறுதியான வெடிப்பு வரும்வரை திருப்தியடையாதீர்கள். தொடர்ந்து அதிருப்தியுடன் இருங்கள். நடந்து முடிந்தவைகளை நினைவு வைத்துக்கொள்ளாதீர்கள். எந்த அனுபவமும் சேகரித்து, அதை போஷாக்குப்படுத்தக்கூடாது. அது நிகழ நிகழ அதை தூக்கியெறிந்துவிட்டு, மறந்துவிட்டு போய்க்கொண்டிருங்கள். பெரும் வெடிப்பு வரும்வரை...... அதற்கு கம்மியாக எதுவும் போதாது, அதனால் இதில் எந்த கவனமும் செலுத்தாதீர்கள்.
வெடிப்புகள் நடந்திருக்கிறது, வெடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நான் சிறிய வெடிப்புகளைப் பற்றி பேசுவதேயில்லை. யாராவது என்னிடம் வந்து சிறிய வெடிப்பு இருந்ததாக சொன்னால், நான் அதை தூக்கியெறிய முயற்சிப்பேன். அதை ஞாபகம் வைத்திருக்கக்கூடாது, பின்பு அது ஒரு தடையாகிவிடும். பின்நோக்கி வர முடியாதளவிற்கு இருக்கும் ஒரு நுனியை அடையும்வரை மையத்தை நோக்கித் தொடருங்கள். அந்த நுனி வரும்போது அது நினைவாற்றலின் ஒரு பகுதியாக ஆகாது. நீங்கள் தொலைந்த விஷயங்களைப் பற்றித்தான் ஞாபகம் வைத்துக் கொள்வீர்கள். உங்கள் கூடவே இருக்கும் ஒன்றைப் பற்றி நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை.
உண்மையில் நீங்கள் ஒரு அனுபவம் தொலைந்த பின்புதான் அதைப்பற்றி அறிந்துக்கொள்வீர்கள். நீங்கள் “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்”, என்று சொன்னால், விழிப்புடன் இருங்கள், காதல் முடிவதற்கான எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அது ஏற்கனவே போயும் இருக்கலாம். இது “நான் என்ற அகந்தை”யின் கடந்தகாலம்தான். அதனால்தான் நீங்கள் – “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்பதில் மிகவும் என்பதற்கு முக்கியத்துவம் தருகிரீர்கள். “மிகவும்” என்பது இடைவெளியை நிரப்புவதற்காகத்தான். மேலும் இடைவெளி இருக்கிறது. காதல் போய்விட்டது. காதல் இருந்தால், நீங்கள் அதை உணர்வீர்கள், அத்துடன் இருப்பீர்கள். மௌனமே போதுமானது. அது போய்விட்டால், பின்பு நீங்கள் அதைப்பற்றி வீண் பேச்சு பேசிக்கொண்டிருப்பீர்கள். இப்போது மௌனம் போதாது. இதற்கு மாறாக இப்போது மௌனம் இறந்த காதலை வெளிக்காட்டிவிடும். மௌனத்தில் உங்களால் மறைக்கமுடியாது. இப்போது நீங்கள் அதைப்பற்றி வீண்பேச்சு பேச ஆரம்பித்து விடுவீர்கள். சாதாரணமாக நாம் விஷயங்களை சொல்வதற்காக பேசுவதில்லை. இதற்கு மாறாக நாம் விஷயங்களை மறைப்பதற்காக பேசுகிறோம். மௌனத்தில் உங்களால் வார்த்தைகளால் மறைக்கமுடியாது.
எப்போதெல்லாம் நீங்கள் சிறிய வெடிப்பைப்பற்றி அறிந்துக்கொள்கிறீர்களோ, அப்போதெல்லாம் அந்த நினைவை பேணிக் காக்காதீர்கள், அதுபோல் திரும்பவும் நடக்கவேண்டும் என்று ஏங்காதீர்கள். அது போய்விட்டது, அது இறந்த, கடந்த காலத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. அதை தூக்கியெறியுங்கள். இறந்தது புதைக்கப்படட்டும். நீங்கள் மேற்கொண்டு செல்லுங்கள். எப்போது உண்மையான வெடிப்பு, பெரிய வெடிப்பு, இறுதியான வெடிப்பு நிகழ்கிறதோ நீங்கள் அதை ஞாபகம் வைத்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அதை ஞாபகம் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை, அது உங்களுடனே இருக்கும். அது உங்கள் மையமாக இருக்கும். அது உங்கள் மெய்யிருப்பாக இருக்கும். உங்களால் அதை மறக்கமுடியாது. ஞாபகம் வைத்துக்கொள்வதற்கோ, அல்லது மறப்பதற்கோ எந்த அர்த்தமும் கிடையாது. பெரிய வெடிப்ப நிகழ்ந்தாலேயொழிய சிறியவைகளுக்கும் அர்த்தம் கிடையாது.
மேலும் நீங்கள் என்னை சுற்றியிருக்கும் மக்கள் இந்த வெடிப்புக்கு ஆளாகிறார்களா? என்று கேட்கிறீர்கள். ஆமாம் அவர்கள் அதைநோக்கிச் செல்கிறார்கள். அவர்கள் அதை நோக்கி செல்லவில்லையென்றால், அவர்களால் வெகு நாட்களுக்கு என்னிடம் தொடர்ந்து இருக்கமுடியாது, அவர்களால் தொடரவே முடியாது. எப்போதெல்லாம் திறன் இல்லாதவர்கள் என்னிடம் வருகிறார்களோ, அப்போதெல்லாம், ஒன்று, அவர்களாகவே போய்விடுவார்கள் அல்லது நான் அவர்கள் போகும்படியான சூழ்நிலையை உருவாக்கிவிடுவேன். அவர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் என்னுடன் யார் தொடர்ந்திருக்கிறார்களோ, அவர்கள் என்னுடன் தொடர்கிறார்கள். வெடிப்பை நோக்கி சென்றுக்கொண்டிருப்பவர்களைத் தான், மேலும் அவர்களுடைய புரிந்துக்கொள்ளும் தன்மை ஆழமாய் போய்க்கொண்டிருந்தாலும்தான், அவர்கள் விழிப்புடன் தெரிந்துக்கொள்கிறார்கள் என்றாலும்தான், நான் என்னுடன் இருக்க அனுமதிப்பேன். நிச்சயமாக பாதை கடினமானதாக இருக்கிறது, நிறைய படுகுழிகள் இருக்கின்றன, ஒருவர் ஒரு அடி முன் எடுத்து வைத்தால் அவர் இரண்டு அடிகள் பின்னே செல்வது அன்றாடம் நடக்கிறது. பாதை நேராக இல்லை. அது குறுக்கும் நெடுக்குமாக இருக்கிறது. மேலும் அது சமவெளியில் இல்லை; அது மலைப்பாதைப் போல் இருக்கிறது. அதனால் பலசமயங்களில், நீங்கள் அதே இடத்திற்கு, சற்று உயர்ந்த நிலையில் வருவீர்கள்.
யாருக்கு வெடிப்புக்கான வாய்ப்பிருக்கிறதோ, அவர்களைத்தான் நான் என் அருகில் இருக்க அனுமதிக்கிறேன்; இல்லையென்றால் அவர்களாகவே போவதற்கான சூழ்நிலையை உருவாக்கிவிடுவேன். ஒருவர் போவதற்கான சூழ்நிலையை உருவாக்குவது மிக சுலபம். ஒருவர் இருப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவது தான் மிகக் கடினம். எல்லோருமே போவதற்கு தயாராக இருக்கிறார்கள், ஏனெனில் மையத்திற்கு வருவதுதான் மிகக் கடினமான, துணிச்சல் தேவைப்பட்ட ஒன்று. என்னுடன் அவர்கள் எப்போதும் போராடிக்கொண்டிருப்பார்கள். என்னுடன், அவர்களால் எல்லையில் இருக்கமுடியாது. அவர்களுடைய மனம் எல்லா வழிகளிலும் எல்லையில் இருக்க முயற்சிக்கும், ஆனால் அவர்கள் மையத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தால்தான் என்னுடன் இருக்கமுடியும்.
நீங்கள் என்னுடன் இருக்கும்போது, நீங்கள் எல்லையிலேயே தொடர்ந்து இருந்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் மையத்திலேயே தொடர்ந்து இருக்கிறேன். இதே முறைதான் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளார்ந்த போராட்டத்தை பொறுத்தமட்டிலும் நடக்கிறது. உங்கள் மெய்யிருப்பு மையத்திலேயே தொடர்ந்திருக்கிறது. உங்கள் “நான் என்ற அகந்தை” தொடர்ந்து எல்லையிலேயே இருக்கிறது. அதனால் போராட்டமும், பதட்டமும் இருக்கிறது. நீங்கள் என்னிடம் வரும்போது நீங்கள் எல்லையாகவும், நான் மையமாகவும் இருப்பதினால், அதேப்போராட்டம் ஆரம்பமாகிறது. ஆனால், என்னுடன் இருப்பது பல வழிகளில் உதவும். நீங்கள் என்னுடன் தொடர்ந்து சிலகாலம் இருந்தால், உங்களால் தொடர்ந்து உங்களுடைய மெய்யிருப்பு மையத்துடனும் சுலபமாக இருக்கமுடியும். இது ஒவ்வொருவர் உள்ளே இருப்பது போலவேதான் இந்த சம்பவமும். இதில் சிறிதும் வித்தியாசம் இல்லை.
நான் உங்களிடம் பேசும்போது, நான் உங்களுடைய மையமாக இருந்து பேசுகிறேன். நீங்கள் என்னுடன் இருக்கும்போது அது நீங்கள் உங்கள் மையத்துடன் இருப்பது போலாகும். ஒருநாள் நீங்கள் மையத்தினுள் வெடித்தால், பின்பு உங்களுக்குத் தெரியும். அதற்கு முன்னால் உங்களுக்குத் தெரியாது. அதற்கு முன்னால் நீங்கள் என்னை நம்பித்தான் ஆகவேண்டும்.
நீங்கள் உங்கள் மையத்திற்கு வந்தவுடன், பின்பு உங்களுக்கு இதற்கு முன்னால், நீங்கள் என்னுடன் இருக்கவில்லை, உங்களுடைய மையத்தின் பிரதிபலிப்புடன்தான் இருந்தீர்கள் என்பது தெரியவரும். ஆனால், அது நீங்கள் கடந்து சென்றபிறகுதான் தெரியும். ஆனால், இது நடக்கும். எல்லோருமே ஆகக்கூடிய திறன் வாய்ந்தவர்கள் தான். ஆனால் அவனே அவனுக்கு தடையாக இருந்தால், அது வேறு விஷயம். நீங்களே உங்களுக்கு தடையாக இல்லையென்றால், நீங்களே உங்களுக்கு பகைவனாக இல்லையென்றால், பின்பு நீங்கள் எந்த புத்தர் அளவிற்கும் திறன் வாய்ந்தவர்கள்தான், எல்லாம் நடக்கும்.
*************************************************************************************************************
தீக்ஷையின் ரகசியங்கள்
அன்புள்ள ஓஷோ,
ஆன்மீக வாழ்க்கைக்கு தீக்ஷை கொடுத்து ஆரம்பித்து வைத்தல் என்றால் என்ன? தீக்ஷை கொடுப்பதில், ஆழ்ந்த மறைபொருலாக இருப்பதும், இரகசியத்தின் விசேஷமாக இருப்பதும் என்ன? எந்த மாதிரியான தீக்ஷையை நீங்கள் சன்னியாசிகளுக்கும், சன்னியாசி அல்லாதவர்களுக்கும் தருகிறீர்கள்? அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு விரிவாக சொல்லுங்கள்.
மனிதன் உறக்கத்தில் இருப்பதைப் போலத்தான் இருக்கிறான். மனிதர்கள் உறங்கு கிறார்கள் – விழித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுவதும்கூட உறக்கம்தான். தீக்ஷை கொடுப்பது என்றால், விழித்துக்கொண்டிருப்பவருடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்வது ஆகும். நீங்கள் விழித்துக்கொண்டவருடன் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்வது ஆகும். நீங்கள் விழித்துக்கொண்டவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டாலேத்தவிர உங்களால் உங்கள் தூக்கத்திலிருந்து வெளியில் வரமுடியாது, ஏனெனில் உங்கள் மனம் நீங்கள் தூக்கத்திலிருந்து வெளிவந்துவிட்டதாகக்கூட கணவுகாணும் திறன் வாய்ந்தது. இப்போது உறக்கம் என்பதே இல்லையென்றும், மனம் கனவு காணலாம். எந்த கனவிலும், அது கனவு என்பது உங்களுக்குத் தெரிய முடியாது. நீங்கள் அதிலிருந்து வெளிவந்த பிறகுதான் அதுவெல்லாம் கனவு என்பதை தெரிந்துக்கொள்ளமுடியும்.
உங்களால் எந்த கனவையும் நிகழ்காலத்தில் தெரிந்துக்கொள்ள முடியாது. நீங்கள் அதைப்பற்றி, அது போனப்பிறகுதான், அது கடந்து சென்றபிறகுதான், எப்போதும் அறிந்துக்கொள்ள முடியும். யாராலும் எப்போதும் “இது ஒரு கனவு” என்று கனவு காணும்போது சொல்லமுடியாது. எந்த நிகழ்கால வார்த்தைகளையும் கனவுக்கு பயன்படுத்த முடியாது. நீங்கள் எப்போதும் கனவு கண்டு முடித்தபிறகுதான், இது ஒரு கனவு என்று சொல்லமுடியும். ஏனெனில் கனவில் கனவே உண்மைபோலத் தோன்றுகிறது.
ஒரு கனவு உண்மைப்போல் தெரியவில்லையென்றால், அது கலைந்து விடும். அதற்கு உண்மையின் தோற்றம் இருந்தால்தான், கனவை உருவாக்க முடியும்.
நான் மனிதன் உறக்கத்தில் இருக்கிறான் என்று சொல்லும்போது, நீங்கள் இதை புரிந்துக்கொள்ள வேண்டும். நாம் இருபத்தி நான்கு மணிநேரமும் தொடர்ச்சியாக கனவில்தான் இருந்துக்கொண்டிருக்கிறோம். இரவில் நாம் வெளி உலகத்திற்கு மூடப்பட்டிருக்கிறோம். ஆனால் உள்ளே கனவு கண்டுக்கொண்டிருக்கிறோம். பகலில் நம்முடைய ஐம்புலன்களும் வெளியுலகத்தை நோக்கி திறந்திருக்கிறது. ஆனாலும் உள்ளே கனவில்தான் இருக்கிறோம். ஒரு நிமிடத்திற்கு கண்களை மூடிக்கொண்டால், நீங்கள் மறுபடியும் கனவுக் காண ஆரம்பிக்கலாம். அது உள்ளே தொடர்கிறது. உங்களுக்கு வெளியுலகத்தைப்பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் அந்த விழிப்புணர்வு கனவு கண்டுக்கொண்டிருக்கும் மனம் இல்லாமல் இல்லை. அந்த விழிப்புணர்வு கனவு கண்டுக்கொண்டிருக்கும் மனதிற்குமேல் ஏற்றப்படுகிறது, ஆனால் உள்ளே கனவு தொடர்கிறது. அதனால்தான் நாம் விழித்துக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கும் நேரங்களில்கூட, நாம் எது உண்மை என்பதை பார்ப்பதில்லை. நம் கனவுகளை உண்மைகளின் மீது ஏற்றுகிறோம். நாம் எப்போதும் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை, ஆனால் நாம் நம்முடைய கற்பனையைத்தான் பார்க்கிறோம்.
நான் உங்களைப் பார்த்ததும் எனக்கு உங்களைப் பற்றிய ஒரு கனவு வந்தால், நீங்கள் என்னுடைய கனவை திரையிடும் ஒரு பொருளாகிறீர்கள். நான் என்னுடைய கனவை உங்கள் மீது காட்டுவேன், அத்துடன் என்னவெல்லாம் நான் உங்களைப் பற்றி புரிந்துக்கொள்கிறேனோ அதையும் என் கனவுடன், கற்பனையுடன் கலந்து விடுவேன். நான் உங்களை நேசிக்கும்போது, நீங்கள் எனக்கு ஒருவிதமாக தெரிவீர்கள். நான் உங்களை நேசிக்காதப்போது, நீங்கள் எனக்கு முற்றிலும் வேறுவிதமாக தெரிவீர்கள். நான் உங்களை வெறும் திரையாக பயன்படுத்தி, நான் என்னுடைய கனவுகண்டு கொண்டிருக்கும் மனதை அதில் விழும்படி காட்டுகிறேன். நான் உங்களை நேசிக்கும் போது என்னுடைய கற்பனைகள் வேறு, அதனால் நீங்கள் வேறுவிதமாக எனக்குத் தெரிகிறீர்கள். நான் உங்களை நேசிக்காதபோது, நீங்கள் அதுவாகவேதான் இருக்கிறீர்கள். திரை அதேதான், ஆனால் அதில் காட்டப்படுவது வேறு. இப்போது நான் என்னுடைய வேறு ஒரு கனவை காண்பிக்க உங்களைத் திரையாக பயன்படுத்துகிறேன்.
திரும்பவும் கனவு மாறலாம். திரும்பவும் நான் உங்களை நேசிக்கலாம், பின்பு நீங்கள் திரும்பவும் வேறுவிதமாக எனக்குத் தெரிவீர்கள். நாம் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதேயில்லை. நாம் நம்முடைய சொந்த கனவை, இருப்பதின் மேல் விழச்செய்து அதைத்தான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அதனால் இந்த கனவுக் கண்டுக்கொண்டிருக்கும் மனம் உங்களைச்சுற்றி ஒரு உண்மையில்லாத உலகத்தை உருவாக்குகிறது. மாயா என்பதற்கும், பொய்யான உலகம் என்பதற்கும் இதுதான் அர்த்தம். பொய்யான உலகம் என்று சொல்வதின் மூலம் உலகம் இல்லை என்பதும், தெருவில் கேட்கும் சத்தம் இல்லை என்பதும் அல்ல. அது இருக்கிறது – ஆனால் நம்முடைய கனவு காணும் மனம் கனவுகளை நிறுத்தினாலேயொழிய, நம்மால் இருப்பதை அப்படியே தெரிந்துக்கொள்ளமுடியாது. சிலருக்கு சத்தம், சங்கீதமாக இருக்கலாம், சிலருக்கு அது வெறும் தொந்தரவாக இருக்கலாம்; சில சமயங்களில் சத்தம் இருப்பதையே அறிந்திருக்க மாட்டார்கள்; சில நேரங்களில் நீங்களே அதை பொறுத்துக்கொள்ள முடியாதபடி., தாங்கிக்கொள்ள முடியாதபடி ஆகிவிடும். சத்தம் அதேதான்; தெருவும் அதேதான், வண்டிகளின் போக்குவரத்தும் அதேதான், ஆனால் உங்களுடைய கனவு காணும் மனம் மாறுகிறது.
உங்களுடைய கனவு காணும் மனதால், உங்களைச் சுற்றி இருப்பவைகள் எல்லாம் புதிய வண்ணம் பெறுகிறது. நாம் உலகத்தை பொய்யானது என்றும், மாயை என்றும் சொல்வதும், உலகம் இல்லை என்பகை குறிப்பதற்காக அல்ல. அது இருக்கிறது, ஆனால் நாம் அதை பார்க்கும்விதம், அந்த பார்ப்பதுதான் பொய்யானது. அதை எங்குமே பார்க்கமுடியாது.
அதனால் யாராவது விழிப்பு பெற்றால், இந்த உலகம் மறைந்துவிடும் என்பதல்ல, ஆனால் அவர் விழிப்பு பெறுவதற்கு முன்னால் அவருக்கு, உலகமாக தெரிந்த உலகம் முழுவதும் மறைந்துவிடும். எல்லாம் ஒன்றுசேர்ந்த புது உலகம், நமது மனம், உணர்ச்சி, எண்ணம், சம்மந்தப்படாத, பொருள் சம்மந்தமான உலகம் அந்த இடத்திற்கு வந்துவிடும். உங்களால் கொடுக்கப்பட்ட வண்ணங்கள், உருவ அமைப்பு கள், நீங்கள் உங்கள் கனவு கண்டுக்கொண்டிருக்கும் மனதிற்கேற்ப சொன்ன அர்த்தங்களும், விளக்கங்களும் இனி இருக்காது.
இந்த மாயமான உலகம், இந்த பொய்யான உலகம், இந்த கனவை எடுத்துக்காட்டும் உலகம், இவைகளை பொறுத்தவரை நாமெல்லாம் ஒரே உலகத்தில் வாழவில்லை. ஒவ்வொருவரும் அவர்களின் தனி உலகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். எவ்வளவு கனவு கண்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு உலகங்கள் இருக்கின்றன. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரே மாதிரி இல்லை. ஒவ்வொருவரும் என்மீது ஏதோ ஒன்றை பிரதிபலிக்கும்படி செய்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் ஒன்றுதான். ஆனால் நானே கனவு கண்டுக்கொண்டிருந்தால், பின்பு எனக்கேக்கூட நான் ஒவ்வொரு வினாடியும் வித்தியாசமாக இருப்பேன். ஒவ்வொரு வினாடியும் என்னுடைய விளக்கம் வேறுபடும். நான் விழிப்புடையவனாக இருந்தால், பின்பு நான் ஒரேமாதிரியாக இருப்பேன். புத்தர் ஏதோ ஓர் இடத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிறார், ஒருவர் ஞான அறிவு பெற்றுவிட்டாரா என்பதை தெரிந்துக்கொள்வதற்கு, அவர் எப்போதும் ஒரே மாதிரி, கடல் தண்ணீரைப் போல இருக்கிறாரா என்பதை தெரிந்துக்கொண்டால் போதும். எந்த இடத்திலும், எல்லா இடத்திலும் அது உப்பாகத்தான் இருக்கும்.
நான் விழிப்படைந்து விட்டால், பின்பு எனக்கு நான் அதேமாதிரியாக இருப்பேன் – இந்த வாழ்க்கையில் மட்டும் அல்ல, ஆனால் இதுவரை இருந்த எல்லா வாழ்க்கை யிலும் நான் அப்படியேதான் இருந்திருக்கிறேன். முடிவில்லாமல் நான் அப்படியேதான் இருக்கிறேன். என்னுடைய உண்மையான நான், தொடர்ந்து அதுவாகவேத்தான் இருக்கிறது. அதை மாற்ற முடியாது, என் மீது நீங்கள் எடுத்துக்காட்டுவதுதான் மாறுகிறது. திரை தொடர்ந்து அதுவாகவேத்தான் இருக்கிறது, படம் மாறுகிறது, காட்சி மாறுகிறது. ஆனால் திரையைப்பார்ப்பதேயில்லை. நீங்கள் திரையின் மீது காட்டும் படத்தைதான் பார்க்கிறீர்கள். அந்த திரையில் எதுவும் காட்டப்படவில்லையென்றால், பின்பு நீங்கள் திரையை பார்ப்பீர்கள், இல்லை யென்றால் நீங்கள் திரையை பார்க்கவே மாட்டீர்கள். அந்த திரை அதுவாகவேத்தான் இருக்கிறது, காட்சி மாறுகிறது, அதனால் நீங்கள் என்னிடம் மாற்றத்தை பார்க்கிறீர்கள். நான் விழிப்பு பெற்றிருந்தால் எனக்கு நான் ஒரேமாதிரியாக இருப்பேன், ஆனால் நீங்கள் என்னை பலவிதமாக பார்ப்பீர்கள், ஏனெனில் நீங்கள் என்னிடம் கனவு காணும் மனதுடன் வருவீர்கள், அது என்மீது பிரதிபலிக்கும். ஒருவருக்கு நான் நண்பனைப்போல் தெரிவேன். ஒருவருக்கு நான் பகைவனைப்போல் தெரிவேன். அவர்களை அவர்களே எடுத்துக்காட்டிக் கொள்வார்கள்.
நாம் நம்மைச்சுற்றியே ஒரு உலகத்தை உருவாக்கிக்கொண்டு, ஒவ்வொருவரும் அவரவர் சொந்த உலகில் வாழ்கிறோம். அதனால்தான் கடுமையாக மோதிக்கொள்வது இருக்கிறது; உலகங்கள் மோதிக்கொள்கின்றன. உங்கள் உலகமும், என் உலகமும். அதனால் இரண்டு மனிதர்கள் சேர்ந்து ஒரு அறையில் வாழத்தொடங்கினால், அங்கே இரண்டு உலகங்கள் இருக்கின்றன, அதனால் மோதிக்கொள்வதை தவிர்க்க முடியாது. அந்த அறையில் இரண்டு மனிதர்கள் மட்டும் தங்கவில்லை. அந்த அறையில் மனிதர்கள் தங்கும் அளவிற்கு இடம் இருக்கிறது – ஆனால் அந்த அறையில் இரண்டு உலகங்களுக்கு இடமில்லை. எப்பொதெல்லாம் இரண்டு மனிதர்கள் ஒரு அறையில் இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் இரண்டு உலகங்கள் இருக்கின்றன.
மனித சமுதாயத்தில், மனித உறவில் வரும் மொத்த சண்டைகளும் இரண்டு உலகங்களுக்கிடையேதான். இரண்டு மனிதர்களுக்கிடையேயல்ல. நான் என் கனவுகளின் மூலம் ஒரு உலகத்தை உருவாக்கிக்கொள்ளாதவனாக இருந்து, நீங்களும் உங்கள் கனவுகளின் மூலம் ஒரு உலகத்தை உருவாக்காதவர்களாக இருந்தால், நாம் ஒரே அறையில் எந்த சண்டையும் இல்லாமல், முடிவில்லாமல் வாழலாம், ஏனெனில் இந்த அறை இரண்டு மனிதர்களுக்குப் போதுமானது. ஆனால் இரண்டு உலகங்களுக்கு இந்த முழு கிரகமேக்கூட போதாது. இங்கே ஒவ்வொரு வரும் ஒரு உலகமாக இருப்பதால், பல உலகங்கள் இருக்கின்றன. ஒருவர் தன்னுடைய உலகத்தில் வாழ்ந்துக்கொண்டு மூடியிருக்கிறார். இது உறக்கம். உங்களைச்சுற்றி ஜவ்வு போன்று இருக்கும் ஒன்றினுள் உங்கள் கற்பனைகள், எண்ணங்கள், திட்டங்கள், கருத்துக்கள், விளக்கங்கள் எல்லாம் உள்ளடங்கி உள்ளது.
நீங்கள் படம் காண்பிக்கும் இயந்திரம்போல் விஷயங்களை எடுத்துகாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அவைகள் எங்கும் இல்லை உங்களுக்குள் மட்டும்தான் இருக்கிறது, இதற்கு இந்த முழு உலகமும் திரையாகிறது, நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாது.
ஒரு சூபி (Sufi) ஏழை பரதேசி இருந்தார். அவருக்கு முன் ஹிஜ்ரா (Hijra) என்ற தேவதை தோன்றியது. அது உங்களால் எவ்வளவு தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் நாளை காலை உலகத்தில் இருக்கும் எல்லாத் தண்ணீரிலும் கெட்ட ஆவிகள் விஷத்தை கலக்க போகிறார்கள், அந்த தண்ணீரை யாரெல்லாம் குடிக்கிறார்களோ, அவர்களெல்லாம் பைத்தியம் ஆகிவிடுவார்கள் என்று சொல்லியது. அதனால் அந்த ஏழை பரதேசி (Fakir) இரவு முழுவதும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தண்ணீரை சேமிக்கிறார். உண்மையாகவே அந்த சம்பவம் நடக்கிறது. எல்லோருமே அடுத்த நாள் காலை பைத்தியமாகிவிடுகிறார்கள். யாருக்குமே முழு ஊரும் பைத்தியமாகிவிட்டது என்பது தெரியவில்லை. அந்த ஏழை பரதேசி மட்டும்தான் பைத்தியம் இல்லை, ஆனால் ஊர் முழுவதும் அவர்தான் பைத்தியமாகிவிட்டதாக பேசிக்கொள்கிறார்கள். அவருக்கு அவரைத்தவிர எல்லோருமே பைத்தியம் என்பது தெரியும். ஆனால் அவரை யாரும் நம்பவில்லை. அவர் அவருடைய தண்ணீரைக் குடித்துக்கொண்டு தொடர்ந்து தனியாக இருந்தார். ஆனால் அவரால் தொடரமுடியவில்லை. முழு ஊரும், எல்லோரும், முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகத்தில் இருக்கிறார்கள். யாருமே அவரைக் கேட்கவில்லை. மேலும் இப்போது அவரைப் பிடித்து சிறையில் போடுவார்கள் என வதந்திகள் இருக்கின்றன.
ஒருநாள் காலையில் அவரை பிடித்துச் செல்ல அவர்கள் வந்துவிட்டார்கள். ஒன்று அவரை உடல் நலம் பாதிக்கப்பட்டவராகக் கருதி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், இல்லையென்றால் அவர் சிறைக்கு செல்லவேண்டும். அவரை சுதந்திரமாக இருக்க அனுமதிக்கமுடியாது. அவர் முழுமையாக பைத்தியமாகி விட்டார், அவர் என்ன சொன்னாலும் அது புரியும்படியாக இல்லை, அவர் வேறு மொழியில் பேசுகிறார். ஏழை பரதேசியால் அவர்களுக்கு புரியவைக்க முயற்சித்து புரியவைக்க முடியவில்லை. அவர்களுக்கு அவர்களுடைய கடந்தகாலத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அந்த பைத்தியமாகிய காலைக்கு முன்பு நடந்தது எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஏழை பரதேசியால் புரியவைக்கமுடியவில்லை. அவர்கள் எல்லோரும் அந்த வீட்டை சுற்றி இருப்பவர்கள். அவர்கள் அவரை பிடித்துக்கொண்டார்கள். அந்த ஏழைப் பரதேசி அவர்களைப் பார்த்து “ஒரே ஒரு வினாடி அதிகமாக கொடுங்கள். நானே எனக்கு சிகிச்சை அளித்துக்கொள்கிறேன்” என்றார். அவர் பொதுவாக இருக்கும் கிணற்றுக்கு ஓடி தண்ணீரைக் குடித்தார், அவர் சரியாகி விடுகிறார். அந்த ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் சந்தோஷமடைந்தார்கள். இப்போது ஏழைப்பரதேசி சரியாகிவிட்டார். இப்போது அவர் பைத்தியமில்லை. உண்மையாக, அவர் இப்போதுதான் பைத்தியமாகி விட்டார். ஆனால் இப்போது அவர் பொதுவான உலகத்தில் ஒருவர்.
எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தால், நீங்களும் உறங்கிக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாது, எல்லோரும் பைத்தியமாக இருந்தால் நீங்களும் பைத்தியமாக இருந்தால், உங்களுக்கு அதைப்பற்றி தெரியாது.
தீக்ஷை கொடுப்பதென்றால், இப்போது நீங்கள் விழிப்பு பெற்றவரிடம் சரணடைந்து “எனக்கு இது புரியவில்லை. நான் பைத்தியமாகவும், தூங்கிக்கொண்டும் இருக்கும் இவ்வுலகத்தின் ஒரு பாகம். என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை., நான் எப்போதும் கனவு கண்டு கொண்டிருக்கிறேன், என்னுடைய விவேகம் எல்லாம் போலியானது. ஏனெனில் எப்போதெல்லாம் நான் செயல்படுகிறேனோ, அப்போதெல் லாம் நான் பகுத்தறிவு இல்லாத என்னுடைய மனதின் பாகத்திலிருந்துதான் செயல்படுகிறேன். நான் எப்போதும் சுயநினைவில்லாமல் செயல்பட்டுவிட்டு பின்பு அதை நியாயப்படுத்துகிறேன். நான் யாரிடமாவது காதல்வயப்பட்டுவிட்டு, பின்பு ஏன் நான் காதலிக்கிறேன் என்று நியாயப்படுத்த ஆரம்பிக்கிறேன் – காரணம் எங்கிருக் கிறது? சம்பவங்கள் இப்படியாக நடந்துக் கொண்டிருக்கிறது. முதலில் நான் எதையாவது விருப்பப்பட்டு ஆரம்பித்துவிட்டு பின்பு ஏன் அது எனக்கு பிடிக்கிறது என்று காரணங்களை கண்டுபிடிக்கிறேன், ஆனால் அந்த விருப்பம் பகுத்தறிவுக்கு உட்பட்டதல்ல”.
இந்த உணர்வு தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவரிடமிருந்தும் வரலாம். ஏனெனில் உறக்கம் எப்போதும் ஆழ்ந்திருப்பதில்லை. அது தடுமாறும். மிக ஆழமாக செல்லும், பின்பு மேலே வரும், பின்பு மிக ஆழ குறைவாகும். உறக்கம் எப்போதும் சமநிலை யில் இருப்பதில்லை. உறக்கத்தில் கூட ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. முழு இரவுக்கும் நீங்கள் ஒரே சமவெளியில் இல்லை. சில நேரங்களில் மிக ஆழமாக செல்வீர்கள், மிக ஆழமாக செல்லுவதால், அதைப்பற்றி பின்பு உங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியாது. நீங்கள் மிக ஆழமாக உறங்கியிருந்தால் பின்பு காலையில் “நான் எந்த கனவும் காணவில்லை” என்று சொல்வீர்கள் . நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள், ஆனால் உங்கள் உறக்கம் ஆழமாக இருந்ததால், உங்களால் அதை நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை, இப்போது நீங்கள் கனவு கண்டிருக்கிறீர்கள் என்பதை காண்பிக்க கருவிகள் இருக்கின்றன. நீங்கள் அதை மறுப்பதற்கு காரணம், அங்கே நினைவாற்றல் இல்லை – நீங்கள் மிக ஆழ்ந்திருந்ததால், உங்களுடைய சுய நினைவு கொண்ட நினைவாற்றலிலிருந்து வெகு தூரத்தில் இருந்ததால், மனதால் கனவிலிருந்து எதையும் வாங்கிக்கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் உறக்கம் எல்லைக்கோட்டிலேயே ஆழமின்றி இருக்கும், பின்பு உங்களால் கனவை நினைவு வைத்துக்கொள்ள முடியும். சாதாரணமாக நாம் காலைக் கனவைதான் எப்போதும் நினைவு வைத்துக் கொள்கிறோம், நாம் தூக்கத்திலிருந்து விழிப்பதற்கு சற்று முன் கண்ட கனவு நினைவிருக்கும், ஏனெனில் உறக்கம் அப்போது ஆழமில்லாமல் இருக்கும். அதனால் இடைவெளி குறைவாக இருக்கும்.
சாதாரண உறக்கம், நிறைய நிலைகளின், மட்டங்களின் இடையில், ஏற்ற இறக்கம் இருக்கும். சில நேரங்களில் நீங்கள் விழிப்புக்கும், உறக்கத்திற்கும் இடையே தடுமாறிக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் அவ்வாறு தடுமாறிக்கொண்டிருக்கும்போதும், ஏற்றத்தாழ்வுகள் விளிம்பிலேயே இருக்கும் போதும், உங்களால் சிலவற்றை வெளியிலிருந்து கேட்கமுடியும். நீங்கள் உறங்கிவிட்டீர்கள், நீங்கள் எதையாவது கேட்கிறீர்கள், யாரோ ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிலவற்றை புரிந்துக்கொள்ள முடிந்தது. சிலவற்றை புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் உங்களால் கேட்கமுடிகிறது. ஆனால் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதும், பலமான உறக்கத்தில் இருக்கும்போதும் அப்போது யாராவது பேசினால், உங்களுக்கு கோட்காது. விளக்கங்களுக்கோ, அர்த்தங்களுக்கோ அப்போது எந்த வேலையும் கிடையாது; உங்களால் கேட்கமுடியாது.
இந்த சாதாரண உறக்கத்தைப்போலவேதான், நான் பேசிக்கோண்டிருக்கம் வேதாந்த உறக்கமும், சிலநேரங்களில் நீங்கள் எல்லைக்கோட்டில் இருப்பீர்கள், புத்தருக்கு மிக அருகில், பின்பு உங்களால் புத்தர் என்ன பேசுகிறார்,சொல்கிறார் என்பதை சிறிதளவு புரிந்துக்கொள்ள முடியும். உங்களால் ஏதோ புரிந்துக்கொள்ள முடியும். நிச்சயமாக அவர் சொன்னதைப் போலவே துல்லியமாக இருக்காது. ஆனாலும் உங்களுக்கு ஏதோ கொஞ்சம், ஏதோ உண்மையைப்பற்றி ஒரு க்ஷணத்தோற்றம் கிடைக்கும்.
அதனால் யார் ஒருவர் தன்னுடைய வேதாந்த உறக்கத்தின் எல்லையில் இருக்கிறாரோ, அவருக்கு தீக்ஷை வேண்டியிருக்கும். அவருக்கு ஏதோ கேட்கிறது, அவருக்கு ஏதோ புரிகிறது. அவர் ஏதோ பார்க்கிறார். எல்லாமே ஏதோ பனிமூட்டத்தில் இருப்பதுபோல் இருக்கிறது. ஆனாலும் அவர் ஏதோ உணர்கிறார். அதனால் அவர் விழித்துக்கொண்டிருக்கும் ஒருவரை அணுகி, அவரிடம் சரணடைய வேண்டும். இந்த அளவிற்கு ஒரு தூக்கத்தில் இருப்பவரால் செய்யமுடியும். இந்த அளவிற்கு செய்யமுடியும், அதனால் அவர் சரணடையலாம். இவ்வாறு சரணடைதல் என்றால், உறக்கத்தைத் தவிர முற்றிலும் வித்தியாசமாக ஏதோ நடக்கிறது என்பதை அவர் புரிந்துக்கொள்கிறார் என்று அர்த்தம். எங்கோ அவர் உணர்கிறார். அவருக்கு சரியாகத் தெரிந்திருக்கமுடியாது. ஆனால் அவர் உணர்கிறார்.
எப்போதெல்லாம் புத்தர் கடந்து செல்கிறாரோ, அப்போதெல்லாம் உறக்கத்தின் எல்லைக்கோட்டில் இருப்பவர்களுக்கு, இந்த மனிதனுக்கு ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்வார்கள். அவர் வித்தியாசமாக நடந்துக்கொள்கிறார். அவர் வித்தியாசமாக பேசுகிறார். அவர் வித்தியாசமாக நடக்கிறார். ஏதோ இந்த மனிதனுக்கு நடந்திருக்கிறது. என்பதை யாரெல்லாம் எல்லைக்கோட்டின் மேல் இருக்கிறார்களோ, அவர்களால் உணரமுடியும். ஆனாலும் அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள், அதுவும் இந்த எல்லைக்கோடும் நிரந்தரமானதல்ல; திரும்பவும் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்குப் போகலாம். ஆனால் அவர்களை வெளியில் இழுக்க ஒரு வார்த்தைக் கூட போதுமானது, அதனால் அவர்கள் ஆழ்ந்த, சுயநினைவில்லாத தன்மைக்கு கீழே விழுவதற்கு முன்பு, அவர்கள் விழிப்பு பெற்ற ஒருவரிடம் சரணடையலாம்.
இது தீக்ஷை கொடுப்பவரின் பக்கத்திலிருந்து பார்த்தால் இது தீக்ஷை வழங்குதல். ஒருவர் “நானாகவே எதுவும் செய்யமுடியாது, நான் வழியில்லாமல் இருக்கிறேன். நான் இந்த வினாடியில் சரணடைய முடியவில்லை என்றால், நான் மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடலாம் என்று எனக்குத் தெரியும், பின்பு சரணடைய சாத்தியமில்லை” அதனால், தொலைக்கமுடியாத சில வினாடிகள் இருக்கின்றன. யார் ஒருவர் அந்த வினாடிகளை தொலைக்கிறார்களோ, அவர்களுக்கு அந்த வினாடி மறுபடியும் பல ஆண்டுகளுக்கு, பல வாழ்க்கையில் கிடைக்காமல் போகலாம். ஏனெனில் எல்லைக்கோட்டிற்கு வருவது ஒருவரின் கையில் இல்லை.
சில சமயங்களில் பல காரணங்களினால், அது உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கிறது. உங்கள் உறக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. சில நேரங்களில் இது நடக்கும். அதாவது புத்தர் கடந்து செல்வார். ஆனால் நீங்கள் எல்லையில் இருந்தால் தான் உங்களால் சரணடைய முடியும்.
இது புத்தரின் வாழ்க்கையிலிருந்து ஒரு அர்த்தமுள்ள கதை. அவர் விழிப்படைந்ததும் ஏழு நாட்களுக்கு தொடர்ந்து அவர் மௌனமாகவே இருந்தார். அவருக்கு பேச வேண்டும்போல் தோன்றவில்லை. இது ஒரு மிக அழகான கதை. கடவுள்கள் எல்லாம் அசௌகரியம் அடைந்தார்கள். ஏனெனில் புத்தர் மௌனமாக இருந்தார். பின்பு எல்லைக்கோட்டில் இருப்பவர்களெல்லாம் என்ன ஆவார்கள்? ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவருக்கு அவரால் எதுவும் செய்யமுடியாது., ஒரு புத்தரால்கூட அவர்களுக்கு ஒன்றும் செய்யமுடியாது; ஏற்கனவே விழிப்படைந்தவர்களுக்கும் அவரால் ஒன்றும் செய்யமுடியாது. அவர்களுக்கு எந்த உதவியும் இவரிடமிருந்து அவசியமில்லை. ஆனால் சிலர் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்களை சிறிது தள்ளினால் விழிப்புப்பெறுவார்கள். அவர் இருப்பதேக் கூட, அவர்கள் விழிப்படை வதற்கு போதுமானது.
அதனால் தேவர்கள் புத்தரிடம் வந்தார்கள். அவரை வணங்கி, அவரை பேசச் சொன்னார்கள். புத்தர் அவர்களிடம், “உதவமுடியாதபடி சில மனிதர்கள் இருக்கி றார்கள், அவர்கள் நன்றாக உறங்குகிறார்கள், அதனால் அவர்களிடம் பேசுவது பயனற்றது. யார் என்னைக் கேட்கிறார்களோ, அவர்கள் ஏற்கனவே விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களிடமும் பேசத்தேவையில்லை. அதனால் நீங்கள் எதற்காக என்னை பேசச்சொல்கிறீர்கள், இதில் அர்த்தம் இல்லை. என்னை தொடர்ந்து மௌனமாக இருக்கவிடுங்கள்” என்றார்.
தேவர்கள் “ஆனால் இன்னும் ஒரு வகையினர் விடுபட்டுள்ளனர். இன்னும் சரியாக விழிக்காதவர்கள் புரிந்து கொள்வார்கள் – அவர்கள் எல்லையில் இருக்கிறார்கள். அவர்கள் நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்காமல் இருக்கலாம். ஆனால், அவர்களை வெளியில் இழுக்க ஒரு வார்த்தைக்கூட போதுமானது, நீங்கள் பேசியே ஆக வேண்டும். ஆயிரமாயிரம் வருடங்களுக்குப்பிறகு தான் ஒரு மனிதர் புத்தராகிறார். அவர் கட்டாயம் பேசவேண்டும். அவர் மௌனமாக இருக்கக்கூடாது. அந்த வாய்ப்பு தொலைந்துவிடக்கூடாது”.
புத்தர் திருப்தி அடைந்தார். ஆமாம், மூன்றாவது வகை ஒன்று இருக்கிறது. அந்த மூன்றாவது வகைதான், தீக்ஷை வாங்குபவர்களின் வகை, நடு – வகை.
யார் ஒருவர் தீக்ஷை பெறுகிறார்களோ, அவர்களுக்கு சரணடைதலை தவிர்த்து வேறு எதுவும் உதவாது. ஆரம்பிப்பது என்றால் சரணடைவது. யார் ஒருவர் ஆரம்பிக்க வைக்கப்படுகிறாரோ, மற்றும் தீக்ஷை வழங்குதலுக்கு ஸ்ரோட்டபானா (srotapanna) என்று புத்தர்களின் வழக்கத்தில் சொல்லுவார்கள், இதற்கு பாயும் மின்சாரத்திற்கு வந்தவர் என்று பொருள். புத்தர் மின்சாரத்தைப் போல பாய்ந்துக்கொண்டிருக்கிறார். யார் ஒருவர் அவரிடம் சரணடைகிறாரோ, இந்த மின்சாரத்தில் விழுந்து அவரும் பாயத்தொடங்குகிறார். இதுதான் ஸ்ரோட்டபானா (Srotapanna) மின்சாரம் உங்களிடம் வரமுடியாது. மின்சாரம் உங்கள் வீட்டின் ஓரமாக பாய்ந்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் அதில் குதிக்கலாம். ஆனால் நீங்கள் நீந்த ஆரம்பித்தால், பின்பு நீங்கள் தடுக்க ஆரம்பிக்கிறீர்கள். பின்பு நீங்கள் மின்சாரத்துடன் சண்டையிட ஆரம்பிக்கிறீர்கள். பின்பு எங்கோ சென்றடைவதற்கு உங்களுக்கு குறிக்கோள்கள், இலட்சியங்கள் இருக்கின்றன.
அதனால் சில மனிதர்கள் ஞான அறிவு பெற்றவரிடம் வந்துவிடுவார்கள், ஆனால் வாதிக்க ஆரம்பிப்பார்கள். அவர்கள் காரணங்களைக் கேட்பார்கள், அவர்கள் ஆதாரங்களைக் கேட்பார்கள், அவர்களை திருப்தியடைய வேண்டும் என்பார்கள். இந்த வழி போராட்டத்திற்குரியது – அவர்கள் ஞான அறிவு பெற்றவருடன் சண்டை போடுவார்கள். இது ஞான அறிவு பெற்றவரை எந்த விதத்திலும் புண்படுத்தாது, ஆனால் இது உங்களை பாதிக்கும். ஏனெனில் அந்த வினாடி தொலைந்து விடுகிறது. நீங்கள் நடுவகையை சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள், அதனால்தான் வந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது நீங்கள் வினாடியை தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் நீங்கள் மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்திற்கு போகலாம். சரணடைதல் என்றால் ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுடன் ஓடுவதுடன், தன்னையே ஆற்றுக்குக் கொடுப்பதாகும்.
இப்போது ஆறு பாய்கிறது, அவன் அதைத் தொடர்கிறான். அவன் இப்போது நடப்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், முழுமையாக நடப்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறான். அதனால் தீக்ஷை பெற்றவருக்கு, தீக்ஷை என்றால் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடன் இருக்க, முழு நம்பிக்கையுடன் இருக்க, ஓர் ஆரம்பம். இது ஒரு பகுதியாக இருக்கமுடியாது. நீங்கள் ஒரு பகுதியாக சரணடைந்தால், அது சரணடைதலே அல்ல; நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். ஒரு பகுதியாக நீங்கள் சரணடைய முடியாது. ஏனெனில் பகுதியாக சரணடைதலில், நீங்கள் எதையோ தக்கவைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் தக்கவைத்துக்கொள்வது உங்களை மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு தள்ளிவிடலாம். உங்கள் சரணடையாத பாகம் நாசமூட்டும், எந்த வினாடியும் நீங்கள் மறுபடியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கலாம். சரணடைதல் எப்போதும் முழுமையானது. அதனால்தான் நம்பிக்கை அவசியமாகிறது. அது எப்போதும் ஆன்மீக வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு தேவையானதாக இருக்கும். நம்பிக்கை முழு நிபந்தனையாகவும், முழு தேவையாகவும் அவசியமாகிறது. நீங்கள் முழுமையாக சரணடைந்த வினாடியிலிருந்து, மாற்றங்கள் ஆரம்பிக்கிறது. இப்போது உங்களால் கனவுலகத்திற்கு திரும்பவும் போகமுடியாது. இந்த சரணடைதல் முழு எடுத்துக்காட்டுதலையும் தூள்தூளாக்கி விடுகிறது. ஏனெனில் இந்த எடுத்துக்காட்டும் மனம் “நான் என்ற அகந்தை” யுடன் கட்டப்பட்டிருக்கிறது. அதுவால் “நான் என்ற அகந்தை” இல்லாமல் இருக்கமுடியாது. அதற்கு “நான் என்ற அகந்தை” தான் முக்கிய மையம். நான் யாரையாவது நண்பன் என்று அழைக்கிறேன். ஏன்? நான் யாரையாவது பகைவன் என்கிறேன். ஏன்? பகைவன் என்பவன் என்னுடைய “நான் என்ற அகந்தை” யை புண்படுத்தியவன். நண்பன் என்பவன் அதற்கு தீனிப்போட்டு, போஷாக்காக ஆக்கியவன். அதனால்தான் தேவைப்படும்போது நண்பனாக இருப்பவன் தான் நண்பன் என்று சொல்கிறோம். தேவைப்படும்போது? என்ன தேவை? எப்போது உங்கள் “நான் என்ற அகந்தை” வாடுகிறதோ, அப்போது நண்பனைத் தெரியும். நம்முடைய முழு கனவுலகம், நமமுடைய கனவு காணும் மனம், எல்லாம் “நான் என்ற அகந்தை” யின் அடிப்பாகமாக உள்ளது. நீங்கள் சரணடைந்தால், நீங்கள் அடிப்பாகத்தையே சரணடைய செய்துவிட்டீர்கள். நீங்கள் முழுவதுமாக கைவிட்டுவிட்டீர்கள். இப்போது உள்ளே தடுமாற முடியாது. ஏனெனில் நீங்கள் கனவை விட்டுவிட்டீர்கள்.
அதனால் தீக்ஷை பெற்றவன் பக்கத்திலிருந்து பார்த்தால், இது ஒரு முழுமையான சரணாகதி. இது தீக்ஷை வழங்கியவருக்கு, தீக்ஷை என்றால் என்ன என்பதை புரிந்துக்கொள்வது மிக்க கடினமானது அல்ல. இது மிக சாதாரணமானது. இது தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவன் விழித்துக்கொள்வதற்கு, விழித்துக்கொண்டிருக்கும் ஒருவனிடம் சரணடைந்து, உதவி கேட்கிறான். இது சாதாரணமானது. இதில் சிக்கல் எதுவும் இல்லை.
ஆனால் யார் ஒருவர் உங்களுக்கு தீக்ஷை வழங்குகிறாரோ, அவருக்கு இது மிக சிக்கலான மிக கடினமான ஒன்று. சாதாரணமாக நாம், சரணடைதல்தான் மிகக் கடினம் என்று நினைத்துக்கொள்கிறோம். நீங்கள் வழித்தெரியாமல் இருக்கிறீர்கள், உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் சரணடையாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அதிகமாக தெரிந்துக்கொள்ளும்போது, நீங்கள் சரணடையும் தருணத்திற்கு வந்துவிடுகிறீர்கள். ஒருநாள் இது வந்தேத்தீரும். ஏனெனில் உங்களால் வேறு ஒன்றும் செய்யமுடியாது. உங்களால் சரணாகதி இல்லாத மனப்பான்மையில் நீடிக்க முடியாது. ஏனெனில் இது கஷ்டங்களை உங்களுக்கு உண்டாக்கும். உங்களால் தொடரவே முடியாது, உங்களுடைய ஏமாற்றங்களினாலும், பயத்தால் ஏற்படும் மூச்சுத்திணறலினாலும், நீங்கள் சரணடைய வேண்டிய ஒரு வினாடி வந்தேத்தீரும். தீக்ஷை வழங்குதலில் இது மிகக் கடினமான பாகமல்ல. இது ஒரு சாதாரண விஷயம். ஆனால் யார் ஒருவர் உங்களுக்கு ஆரம்பித்து வைக்கிறாரோ, அவருக்கு இது சிக்கலான விஷயம். இதில் நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. நிறைய விஷயங்கள் வழக்கமானதாக இல்லாமல் இரகசியமானதாக இருக்கிறது. வழக்கமான திலிருந்து, ஆரம்பிப்பது நல்லது. பின்னர் இரகசியமான விஷயங்களுக்கும், உள் விஷயங்களுக்கும் தொடரலாம்.
சரணடைதலை தொடர்ந்து, ஒத்தவகையில் இருக்கும் முதல் விஷயம் பொறுப்பு. யார் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கிறாரோ, அவர் சரணடைகிறார். யார் ஒருவர் விழித்துக்கொண்டிருக்கிறாரோ, அவர் பொறுப்பேற்றுக்கொள்கிறார். நீங்கள் ஒரு புத்தரிடமோ அல்லது இயேசுவிடமோ அல்லது முகமதிடமோ போய் நீங்களே சரணடைந்துவிட்டால், முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நீங்கள் எதை சரணடையச்செய்தீர்களோ அது மட்டும்தான் உங்களிடம் இருப்பது. இதற்கு மேல் உங்களால் எதையும் சரணடையச் செய்யமுடியாது – நீங்கள் உறக்கம், கனவைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. நீங்கள் இதை சரணடையச் செய்யுங்கள் – உங்கள் உறக்கம், உங்கள் கனவு, உங்கள் முழு அர்த்தமற்ற கடந்த காலம், நீங்கள் இவற்றை சரணடையச் செய்யுங்கள்.
சரணடைவது எப்போதும் கடந்தகாலத்தைப் பொறுத்தது. பொறுப்பு எப்போதும் எதிர்காலத்தைப் பொறுத்தது. உங்களுக்கு எதிர்காலம் இல்லை. உங்கள் கனவுகள் நிரம்பிய கடந்தகாலம், பல வாழ்க்கைகளின் நீண்ட எண்ணிக்கையான நினைவுகள், கனவுகள் சரணடைகிறது. அதுவும் நீங்கள் மிக கஷ்டப்பட்டுக்கொண்டு சரணடைகிறீர்கள். இந்த தூசிகள் நிறைந்த கடந்தகாலத்தை சரணடையச் செய்வதுகூட மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதைத்தவிர வேறு எதுவும் உங்களிடம் இல்லை. நீங்கள் உறங்கிக்கொண்டு, கனவுகண்டுக்கொண்டிருந்தீர்கள். பல கனவுகளின் பதிவு உங்களிடம் இருக்கிறது – நல்லதோ அல்லது கெட்டதோ, அழகானதோ அல்லது அசிங்கமானதோ, ஆனால் எல்லாக்கனவுகளும் ஒன்று தான். நீங்கள் தொலைந்துபோவதற்கு முன்னால் சரணடைந்துவிடுங்கள்: அதுவும் கூட மிகுந்த கஷ்டத்துடன், அதுவும் மிகவும் சகிக்க முடியாமல், போராட்டத்துடன், அதுவும் நீங்கள் நிறுத்திவைக்க, தவிர்க்க முயற்சிக்கிறீர்கள். எதையோ காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறது? உங்களிடம் இருப்பதெல்லாம் நீண்ட, வரிசையான கனவுகளும், நீண்ட உறக்கமும்தான்.
அதனால்தான், தீக்ஷை பெற்றவருக்கு இது கடந்த காலத்தை சரணடைய செய்வதாகும். உங்களுக்கு தீக்ஷை வழங்கியவருக்கு, இது எதிர்காலத்திற்கான பொறுப்பு. அவர் பொறுப்பாளியாகிவிடுகிறார். அவர் மட்டும்தான் பொறுப்பாளியாக முடியும். உங்களால் பொறுப்பாளியாக முடியாது – எப்படி தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவர் பொறுப்பாளியாக முடியும். பொறுப்பு என்பது ஒருபோதும் தூக்கத்தின் ஒரு அங்கம் கிடையாது. நீங்கள் உறக்கத்தில் ஒரு கொலை செய்துவிட்டால், நீங்கள் உறக்கத்தில் நடக்கும் வியாதியுடையவராக இருந்தால், நீங்கள் உறக்கத்தில் ஒரு கொலை செய்துவிட்டால், உங்களை எந்த நீதிமன்றமும் பொறுப்பாளி ஆக்காது. ஏனெனில் அதில் பொறுப்பில்லை. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஒருவர் எப்படி பொறுப்பாளி ஆகமுடியும்? நீங்கள் உங்கள் கனவுகளுக்கு பொறுப்பாளியாக நினைப்பதில்லை. நீங்கள் உங்கள் கனவில் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு நீங்கள் பொறுப்பாக நினைப்பதில்லை. நீங்கள் கொலை செய்திருக்கலாம். ஆனால் அது வெறும் ஒரு கனவுதான் என்று சொல்கிறீர்கள்.
பொறுப்பு விழிப்புடன் வருகிறது. இது உண்மையில் வாழ்க்கையின் அடிப்படை சட்டம். உறக்கத்திலிருக்கும் ஒருவர் தனக்கேக்கூட பொறுப்பாளி கிடையாது. ஆனால் விழிப்புடன் இருப்பவர் மற்றவர்களுக்கும் பொறுப்பாளியாகிறார்.
ஞானஅறிவு பெற்ற ஒருவரும், விழித்துக்கொண்ட ஒருவரும் நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் எல்லா குழப்பங்களுக்கும் அவர்தான் பொறுப்பாளி என்று நினைக்கிறார். ஒரு புத்தர் கருணையை உணர்கிறார். ஒரு புத்தர் உங்களுடைய குற்றங்களுக்கெல்லாம், பாவங்களுக்கெல்லாம் அவர் குற்ற உணர்வை அடைகிறார்; அவருக்கு அதில் பங்கு இருப்பதாக நினைக்கிறார், அவர் பொறுப்பாக நினைக்கிறார். உங்களுக்கு தெரியாது என்பதும், அவருக்கு தெரியும் என்பதும் அவருக்குத் தெரியும். உதாரணத்திற்கு மூன்றாம் உலகப்போர் வரப்போகிறது. விழித்துக்கொண்டிருப்ப வருக்கு அது வரப்போகிறது என்பது நன்றாகத் தெரியும். அது ஒவ்வொரு நாளும் அது அருகில் வந்துக்கொண்டிருக்கிறது. விரைவில் அது நமக்குமேல் இருக்கும். நீங்கள் உறங்கிக்கொண்டு, அதில் ஆழ்ந்திருக்கிறீர்கள். அவர் உறங்கிக்கொண்டில்லை. அவர் கனவிலும் இல்லை. அவர் முழுமையான விழிப்புணர்வுடன், மற்றவைகளை முன்கூட்டியே அறிய உதவும் கருவியான ரேடாரை (Rador) போல, வரப்போகும் எதிர்காலம் அவருக்கு தெரியும். அவர் குற்ற உணர்வு கொண்டு, ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறார்.
உதாரணத்திற்கு நீங்கள் விமானத்தின் மூலம் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உறங்கிக்கொண்டு, கனவு கண்டுக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் விமான ஓட்டுநர் விழித்துக்கொண்டிருக்கிறார். இப்போது ஏதாவது நடந்தால், அதில் இருக்கும் இயந்திரத்திலிருந்து ஏதாவது சத்தம் வந்தால், மிகச்சிறிய சத்தம்; அதில் ஏதோ தவறாகிவிட்டது என்பது யாருக்கும் தெரியாவிட்டால், அவர் மட்டும்தான் பொறுப்பாளியாவார். வேறு யாரும் இதற்கு பொறுப்பல்ல. முழுவதும் விழித்திருக்கும் ஒரே நபர், அவர்தான்.
ஒரு புத்தர் எல்லாக்குற்றங்களுக்கும், பாவங்களுக்கும் அவர்தான் பொறுப்பு என்று நினைப்பார். இயேசுவின் முழு கதையும், இந்த பொறுப்பின் அடிப்படையில் தான் உள்ளது. முழு கிறிஸ்துவ மதமும், அதன் முழு கொள்கையையும் இந்த பொறுப்பிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இயேசு, ஆதாமில் (Adam) ஆரம்பித்து நம் வரை நடக்கும் எல்லா பாவங்களுக்கும் அவர்தான் பொறுப்பாளியாக உணர்கிறார். இயேசு பொறுப்பாளியாக உணர்வதால் சிலுவையை தன்னுடைய முதுகில் சுமப்பதின் மூலம் நம்முடைய பாவங்கள் பொறுத்துக்கொள்ளப்பட்டு, மன்னிக்கப்படலாம் என்று நினைக்கிறார். அவர் எந்த வகையிலும் பொறுப்பாளியல்ல. ஆதாம் ஏதாவது செய்திருந்தாலோ, அல்லது இந்த முழு மனித மனம் ஏதாவது செய்திருந்தாலோ அவர் ஏன் பொறுப்பாளியாக வேண்டும். இறுமாப்புள்ள கிறிஸ்தவர்கள் இதைப்பற்றி பல நூற்றாண்டுகள் கலந்துரையாடியிருக்கிறார்கள். இயேசு எந்த பாவத்தையும் செய்யவில்லை, இருப்பினும் அவர் பொறுப்பாளியாக உணர்கிறார், என்று நான் சொல்கிறேன், ஏனெனில் அவர் விழித்துக்கொண்டவர். அவர் விழித்துக்கொண்ட சம்பவத்தினால் மட்டுமே, அவர் உறங்கிக்கொண்டிருப்பவர்கள் செய்த அனைத்திற்கும் பொறுப்பாளியாகிவிட்டார். அவருடைய சுமை அதிகரிக்கிறது. அவருடைய சிலுவை கனமாகிவிட்டது. சிலுவையில் அவருடைய மரணம், ஒரு அடையாளமானது; நாம் வாழவேண்டும் என்பதற்காகத்தான், நமக்காகத்தான் இவர் இறக்கிறார். அதனால்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஒரு வரலாற்று சம்பவமாகி விட்டது.
இந்த முழு மனித இனத்திற்கும் அவர் பொறுப்பேற்று நாம் மாறவேண்டும் என்பதற்காக இறந்தவர் அவர். ஆனால் அவருடைய இறப்பிற்கு பின்னரும், நாம் மாறவில்லை. அவருடையப் போதனைகளை கனவில் கேட்டுவிட்டு, அதற்கு விளக்கங்களை நம் விருப்பப்படி சொல்லிக்கொண்டிருக்கிறோம். பின்பு அவருடைய வாழ்க்கை, நம்முடைய கனவுலகத்தின் ஒரு அங்கமாகிவிடுகிறது. நாம் கிறிஸ்துவ ஆலயங்களையும், மறுக்கக்கூடாத கொள்கைகளையும் உருவாக்குகிறோம். நாம் ஜாதி உள்பிரிவுகளை உருவாக்குகிறோம். பின்பு கேத்தலிக் (Catholic) புரோட்டஸ்டன்ட் (Protestant) பிரிவு, இன்னும் பலவகையினர் இருக்கிறார்கள். இந்த முழு அர்த்தமில் லாமல் செய்வதின் பலனும், பல புதிய வழிகளில் திரும்புகிறது. ஆனால் உலகம் அப்படியேத்தான் இருக்கிறது.
நாம் அவரை வழிபட தொடங்குகிறோம். இதன்மூலம் அவர் கடவுளின் மகன் என்றெல்லாம் நாம் அவரைப்பற்றி கனவுக்காண ஆரம்பிக்கிறோம். நாம் ஆரம்பிக்க வைக்கப்படவுமில்லை, நாம் மாறவுமில்லை. இதற்கு மாறாக நாம் அவருடைய உண்மைகளையும், கனவாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். நாம் அவருக்கு தேவாலயங்கள் உருவாக்குகிறோம். நாம் அவருக்கு சிலை வைக்கிறோம். நாம் அவரை வழிபடுகிறோம் – மேலும் உறக்கத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் அவரை அமைதி உண்டாக்கும் மருந்தாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது ஒது ஞாயிற்றுக்கிழமை விஷயமாகிறது. இது ஒரு வாரத்திற்கு ஒருமுறை நாம் அவரிடம் செல்கிறோம். பின்பு நாம் நம்முடைய தடத்தில் தொடர்கிறோம். நாம் நன்றாக உறங்குவதற்கு அவர் உதவுகிறார்; நம்முடைய நினைவுள்ள மனம் சௌகரியமாகி விடுகிறது. நாம் பக்தி வாய்ந்தவர்களாக உணர்கிறோம். நாம் தேவாலயங்களுக்கு வழிபட செல்கிறோம். பிரார்த்தனை செய்கிறோம். வீடு திரும்பும்போது நாம் அப்படியேத்தான் இருக்கிறோம். நாம் இன்னும் சௌகரியமாக ஆகிறோம். இப்போது நாம் பக்தியுடன் இருக்க வேண்டும், மாறவேண்டும் என்ற சுமையில்லை. இப்போது நாம் ஏற்கனவே பக்தியுடன்தான் இருக்கிறோம், ஏனெனில் நாம் தேவாலயங்களுக்குச் சென்று, வழிபட்டு பிரார்த்தனை செய்திருக்கிறோம், நாம் ஏற்கனவே பக்தியுடன்தான் இருக்கிறோம். இப்படி முழு விஷயங்களும் போய்க்கொண்டிருக்கிறது.
சரணடைதலுக்கு ஒத்த விஷயம் பொறுப்பு. பொறுப்பு என்றால் பதில் சொல்ல வேண்டும். இதற்கு இயேசு உங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவராக இருக்கிறார். கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர்தான் இதற்கெல்லாம் பொறுப்பாளி என்று இயேசு நினைக்கிறார். அவர் கேள்வி கேட்கப்படுவார், பின்பு ஏன், இதுவோ அல்லது அதுவோ மனிதர்களுக்கு நடக்கிறது என்றக்கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். பொறுப்பு என்றால் இதுதான். இதுவேதான் அவரிடமும் இயற்கையாக நடப்பதாக அவர் உணர்கிறார். நீங்கள் அவரிடம் வந்து அவரிடம் சரணடைந்தால், பின்னர் அவர் குறிப்பிட்டு உங்களுக்கு பொறுப்பாகிறார்.
கிருஷ்ணர் அர்ச்சுனனிடம், “எல்லாவற்றையும் விட்டுவிடு, என்னிடம் வந்து என் கால்களில் சரணடைந்து விடு” என்று சொல்லலாம். இயேசு, “நான்தான் உண்மை. நான்தான் கதவு. நான்தான் வாசல். என்னிடம் வந்து என் வழியாக கடந்து செல்லுங்கள். கடைசி நாள் தீர்ப்பில், நானே சாட்சியாக இருக்கிறேன். நான் உங்கள் சார்பில் பதிலளிக்கிறேன்” என்று சொல்லலாம். இதுவெல்லாம் ஒற்றுமைரீதியில் சொல்வது. ஒவ்வொரு நாளும் தீர்ப்பு வழங்கும் நாள்தான். ஒவ்வொரு வினாடியும் தீர்ப்பு வழங்கும் வினாடிதான். கடைசிநாள் என்று எதுவும் இருக்கப்போவதில்லை. இயேசு யாரிடம் பேசினாரோ, அவர்களால் இவ்வளவுதான் புரிந்துக்கொள்ள முடிந்தது. “நானே உங்களுக்கு பொறுப்பாளியாகிறேன், கடவுள் கேட்கும்போது, நான் அங்கு சாட்சியாக இருந்து, நான் உங்கள் சார்பில் பதில் சொல்கிறேன். நீங்கள் என்னிடம் சரணடையுங்கள். நான் உங்கள் சாட்சியாக இருப்பேன்” என்றார் இயேசு.
இது ஒரு மாபெரும் பொறுப்பு. இதை உறங்கிக்கொண்டிருக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் உறக்கத்தில், உங்களுடைய சொந்தப் பொறுப்புகளை சுமப்பதே உங்களுக்கு கடினமாகி விடுகிறது. உங்களால் மற்றவர்களின் பொறுப்பை சுமக்க முடியாது. உங்களுக்கு இனி எந்தப் பொறுப்பும் இல்லாதபோதும், நீங்கள் முழுமையாக பாரம் இல்லாதபோதும்தான், உங்களால் இன்னொருவரின் பொறுப்புகளை சுமக்க முடியும் – உண்மையில் எப்போது நீங்களே இல்லையோ! இப்படி இல்லாமல் இருப்பதை, பல வழிகளில் பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
“நான் சொர்க்கத்தில் இருக்கும் என்னுடைய தந்தையின் மகன்” என்று இயேசு சொன்னபோது, தந்தை எனச் சொல்லப்படும் ஒரு நபரின் மகனல்ல அவர், தாய் என்று சொல்லப்படும் மேரியின் மகனல்ல அவர், என்பதையே அவர் குறிப்பிடுகிறார். ஏன்? சில சமயங்களில் மிகக் கொடூரமாகத் தெரியும். ஒரு நாள் அவர் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த போது அவரிடம், “உன்னுடைய தாய் மேரி வந்திருக்கிறாள், அவள் உன்னை இக்கூட்டத்தின் வெளியே கூப்பிடுகிறாள், அவள் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்” என்று ஒருவர் சொன்னார். அதற்கு இயேசு “எனக்கு தாய் கிடையாது! யார் என்னுடைய தாய்? யார் என்னுடைய தந்தை? யாருமே என்னுடைய தாய் அல்ல, யாருமே என்னுடைய தந்தை அல்ல” என்றார். இது கொடூரமாகத் தெரிகிறது. தாய் கூட்டத்தின் வெளியே நின்று கொண்டிருக்கிறாள். அவள் காத்திருக்கிறாள். ஆனால் இயேசு, “யாருமே என் தாய் அல்ல, யாருமே என் தந்தை அல்ல” என்று போய் அவளிடம் சொல் என்றார். ஏன்? அவர் உங்களுடைய கனவு காணும் விதத்தை மறுக்கிறார். “இவர் என்னுடைய தந்தை,தாய்,தாரம்,சகோதரன்” .... இது கனவு கண்டுக்கொண்டிருக்கும் மனதிற்கு,கனவுலகத்திற்கு, கற்பனை உலகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இயேசு இதை முற்றிலும் மறுக்கிறார். நீங்கள் தாயை மறுத்த வினாடியிலிருந்து, நீங்கள் இவ்வுலகத்தை மறுத்துவிட்டீர்கள், ஏனெனில் அவளுடன்தான் எல்லாமே ஆரம்பமாகிறது – இந்த முழு உலகமும். இதுதான் ஆரம்பம், இந்த கனவுலகத்திற்கு வருவதற்கான வேர், உறவுமுறைகளின் வேர், சன்சாரத்தின் (Sansara) வேர்.
நீங்கள் உங்கள் தாயை மறுத்துவிட்டால், நீங்கள் எல்லாவற்றையும் மறுத்து விட்டீர்கள் என்று அர்த்தம். இது உறங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு கொடூரமாகத் தெரியும். ஆனால் இது ஒரு உண்மை. “நான் சொர்க்கத்திலிருக்கும் என்னுடைய தந்தையின் மகன்” என்று அவர் வலியுறுத்துவதற்கு காரணம், “நான் ஒரு தனிமனிதன் அல்ல, நான் மேரியின் மகன், இயேசு அல்ல, நான் தெய்வீகச்சக்தியுடனும், இப்பிரபஞ்ச சக்தியுடனும் பின்னப்பட்டவன்” என்பதை சொல்வதற்காகத்தான்.
யார் ஒருவர் தன்னை இப்பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாக நினைக்கிறாரோ, அவர் உங்களுக்கு ஆரம்பித்து வைக்கலாம்; இல்லாவிட்டால் யாரும் உங்களுக்கு தீக்ஷை வழங்கமுடியாது. எந்த ஒரு குறிப்பிட்ட தனிமனிதனும் உங்களுக்கு தீக்ஷை வழங்கமுடியாது. இது நிறைய சமயங்களில் நடக்கிறது. இது தினந்தோறும் நடக்கிறது – தாங்களே உறங்கிக்கொண்டிருக்கும் சிலர் உறங்குபவர்களுக்கு தீக்ஷை வழங்குவார்கள்; குருடனை குருடன் வழிநடத்திச் செல்வது போல இருவரும் படுகுழியில் விழுந்துவிடுவார்கள். தூங்கிக்கொண்டிருக்கும் எவராலும், யாருக்கும் தீக்ஷை வழங்கமுடியாது. ஆனால் “நான் என்ற அகந்தை” தீக்ஷை வழங்கவேண்டும் என்கிறது; இந்த “நான் என்ற அகந்தை” யின் மனோபாவம் ஆபத்தானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தீக்ஷை கொடுக்க உரிமையில்லாதவர்கள் கொடுப்பதினால், முழு தீக்ஷை வழங்குதலும், அதன் முழு இரகசியங்களும், அதன் அழகும் கெட்டுவிட்டது. யார் ஒருவர் உள்ளே “நான் என்ற அகந்தை” இல்லையோ, யார் ஒருவர் உள்ளே உறக்கம் இல்லையோ, யார் ஒருவர் உள்ளே கனவு இல்லையோ அவர்கள் தீக்ஷை வழங்கலாம், இல்லாவிட்டால் தீக்ஷை கொடுப்பது தான் ஒரு மாபெரும் பாவம். ஏனெனில் அப்போது நீங்கள் மற்றவர்களை மட்டும் ஏமாற்றவில்லை, நீங்களே உங்களையே ஏமாற்றிக்கொள்கிறீர்கள் – ஏனெனில் தீக்ஷை கொடுத்து ஆரம்பித்து வைப்பது தான் மாபெரும் பொறுப்பு, இறுதியான பொறுப்பு. இப்போது நீங்கள் இன்னொருவருக்கு பொறுப்பாகிறீர்கள். இன்னொருவருக்கு பொறுப்பாவது என்றால் அது விளையாட்டல்ல, அது முடியாததை கையில் எடுத்துக்கொள்வதாகும். நீங்கள் அறிவீனமாக இருக்கும் ஒருவருக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாகும். அதனால் முழுமையான சரணடைதல் இருந்தால்தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும், இல்லாவிட்டால் ஏற்கமுடியாது. யார் ஒருவர் தன்னையே நிறுத்தி வைத்துக்கொள்கிறானோ, அவனுடைய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் அவன் தொடர்ந்து அவனாகவே இருப்பான், அவன் நீங்கள் சொன்னதை கேட்கமாட்டான், அவன் உங்களை அவன் வழியில் விளக்குவான்.
சுஃபி (Sufi) கதை ஒன்று இருக்கிறது. ஒரு பணக்காரன் இறந்துவிட்டான். அவன் பணக்காரன் மட்டுமல்ல, அவன் புத்திசாலியும்கூட. இது அபூர்வமாகத்தான் நடக்கும். அப்போது அவனுடைய மகனுக்கு பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கும். அவர் ஓர் உயிலில் அந்த கிராமத்து பெரியவர்களுக்கும், பஞ்சாயத்திற்கும் ஒன்று எழுதியிருந்தார். அந்த உயிலில் பகிரங்கமாக “என்னுடைய சொத்திலிருந்து, என்னவெல்லாம் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு, பின்பு நீங்கள் என்னுடையக் குழந்தைக்கு கொடுங்கள்” என எழுதியிருந்தது. இது சூரியோதயத்தைப் போல் தெளிவாக இருந்தது.
ஐந்து பெரியவர்கள் தங்களுக்குள் சொத்தைப் பிரித்துக்கொண்டார்கள். எதுவெல்லாம் விலைமதிக்கத்தக்க வகையில் இருந்ததோ, அதையெல்லாம் அவர்களுக்குள் பங்குபோட்டுக் கொண்டார்கள். பயனற்ற சிலவற்றைத் தவிர்த்து எதுவுமே மிச்சமில்லை. யாருமே அதை எடுத்துக்கொள்ள தயாராக இல்லை. அதனால் அது குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த இறந்த முதியவர், தன்னுடைய மகனுக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்து, அதை ஒரு வயதுக்கு வந்தபிறகு திறக்கச் சொல்லியிருந்தார். அதனால் அவன் வயதிற்கு வந்ததும் அக்கடிதத்தை திறந்து பார்த்தான். அதில் “பெரியவர்கள், நிச்சயமாக அந்த உயிலை வேறுவிதமாக விளக்கியிருக்கலாம், நீ வயதிற்கு வந்தவுடன், இந்த உயிலுக்கு இந்த விளக்கதைக்கொடு, இது என்னுடைய விளக்கம், இதைத்தான் நான் அதன்மூலம் தெரிவித்தது: உங்களுக்கு பிடித்ததையெல்லாம் எடுத்துக்கொண்டு, பிறகு உங்களுக்கு பிடித்தவைகளையெல்லாம், என்னுடைய குழந்தையிடம் கொடுங்கள்”.
மகன் இக்கடிதத்தை பெரியவர்களிடம் காண்பித்தான். அவர்கள் இப்படி ஒரு அர்த்தத்தைக் கற்பனைக்கூட செய்துப்பார்க்கவில்லை. அதனால் அவர்கள் தங்களுக்குள் எல்லாவற்றையும் பங்குபோட்டுக்கொண்டனர். அவர்கள் எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். ஏனெனில் இப்போது அர்த்தம் தெளிவாக இருந்தது, பையனும் தயாராகி விட்டான். மேலும் அந்தத்தந்தை, “நீ அதை எடுத்துக்கொள்ளும் நேரம் வரும்வரை அதை அவர்கள், தங்களின் சொந்த வழியில் அதை விளக்குவதுதான் நல்லது, ஏனெனில் நான் உன்னிடம் உன்னுடைய வயது வருவதற்கு முன் கொடுத்தால், பெரியவர்கள் அதை அழித்துவிடுவார்கள், அதனால் நீ அந்த வயதிற்கு வந்து அதை எடுத்துக்கொள்ள தயாராகும் வரை, அவர்கள் அதை தங்களுடையதுபோல் பாதுகாத்து தரட்டும்” என்று எழுதியிருந்தது. அவர்களும் அதை அவர்களுடையது போல் பாதுகாத்து வந்திருந்தார்கள்.
எப்போதெல்லாம் ஒரு பாகமாக சரணாகதி இருக்கிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் என்னுடைய போதனைகளை தவறாக விளக்குவீர்கள், என்னுடைய கட்டளைகளை, உங்களுக்கு பிடித்தவகையில் வரிசைப்படுத்துக் கொள்வீர்கள். உங்கள் உறக்கத்தில், உங்கள் உறக்கத்தன்மையுடைய மனதுடன் அதை அர்த்தமுள்ளதாக ஆக்குவீர்கள். அதனால் ஒருவர் முழுமையாக சரணடைந்தாலேத் தவிர பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. எப்போது ஒருவர் முழுமையாக சரணடைகிறாரோ, பின்பு முழுப்பொறுப்பு குருவிடம், விழிப்பு பெற்றவரிடம் வந்துவிடுகிறது. பின்பு அது முழுமையானது.
முன்தினங்களில், தீக்ஷை, பெறுவது சுலபமல்ல; அதுதான் மிகக் கடினமானது. அது கடினமாக இருக்கும் அளவிற்கு அந்த சம்பவம் இருந்தது. ஒருவர் தீக்ஷை பெறுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஒரு வாழ்க்கை முழுவதும் கூட காத்திருக்கும்படி இருக்கும், ஏனெனில் ஒருவர் தயாராக இருந்தாலேத்தவிர அவருக்கு தீக்ஷை வழங்கப்படாது. அதற்காக காத்துக்கொண்டிருக்கும் நிலை, உண்மையிலேயே சோதிக்கும் காலக்கட்டம். நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்களா? உங்களால் காத்திருக்க முடியுமா? நீங்கள் காத்திருப்பதில்தான் உங்களுடைய முதிர்ச்சி வெளிப்படும். ஒரு குழந்தையால் ஒரு வினாடிக்கூட காத்திருக்கமுடியாது. அவனுக்கு ஒரு பொம்மை வேண்டுமென்றால், அவனுக்கு இப்போதே வேண்டும்; அவனால் காத்திருக்கமுடியாது. மனம் பொறுமையில்லாமல் இருக்கும் அளவிற்கு அதற்கு குறைவான முதிர்ச்சியே இருக்கும். அதனால் தீக்ஷை கொடுப்பதற்கு முன்னால், பழையகாலத்தில் ஒருவர் பல வருடங்களுக்கு காத்திருக்க வேண்டும். இந்த காத்திருத்தல் ஒரு சோதிக்கும் கட்டமாக இருந்தது. மேலும் இந்த காத்திருப்பு ஒரு நல்ல பயிற்சியாகவும் இருந்தது.
உதாரணத்திற்கு நீங்கள் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்தால்தான், சுஃபிக்கள் (Sufi`s) உங்களுக்கு தீக்ஷை வழங்குவார்கள். நீங்கள் கேள்வி கேட்காமல்,குரு தானாகவே வந்து பதில் சொல்லும் வினாடி வரை காத்திருக்க வேண்டும்.
ஒருவர் பல விஷயங்களை செய்யவேண்டும். உதாரணத்திற்கு, ஒரு சுஃபி (Sufi) செருப்பு தைப்பவராக இருக்கலாம். நீங்கள் அவரிடமிருந்து தீக்ஷை பெறவேண்டும் என்றால், நீங்கள் அவருக்கு செருப்பு தைப்பதில் பல வருடங்களுக்கு உதவவேண்டும். மேலும் இதைக்குறித்து கேள்விக்கூட கேட்கவும் முடியாது. செருப்பு தைப்பதின் மூலம் என்னவாகும்? எப்படி நீங்கள் சுயத்தை அறிந்தவராக போகிறீர்கள்? எப்படி நீங்கள் தெய்வமாகபோகிறீர்கள்? இவ்வாறு செருப்பு தைப்பதில், என்ன சம்மந்தம்? சம்மந்தத்தை பற்றிக்கேட்டால்கூட, நீங்கள் வெளியில் எறியப்படுவீர்கள், ஏனெனில் அது உங்கள் வேலையல்ல.
என்ன சம்மந்தம் என்பதை தெரிந்துக்கொள்வது குருவின் வேலை. எப்படி உங்களால் தெரிந்து வைத்துக்கொள்ள முடியும்? உங்களுக்கு தெய்வத்தை தெரியாது, அதனால் உங்களால் செருப்பு தைப்பது எப்படி தெய்வத்துடன் சம்மந்தப்பட்டிருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கமுடியாது உங்களால் தெரிந்துக்கொள்ள முடியாடு. ஐந்து வருடங்களுக்கு ஒருவர் காத்திருந்துக்கொண்டு, குருவுக்கு செருப்பு தைப்பதற்கு உதவிக்கொண்டிருப்பார். குரு பிரார்த்தனைப் பற்றியோ, அல்லது தியானத்தைப் பற்றியோ பேசமாட்டார். அவர் செருப்பு தைப்பதைப்பற்றி மட்டும்தான் பேசுவார், இதை தவிர்த்து எதுவும் பேசமாட்டார். நீங்கள் ஐந்து வருடங்களுக்கு காத்திருக்கிறீர்கள் – இதுதான் தியானம். இது ஒரு சாதாரண தியானமல்ல, நீங்கள் இதனால் சுத்தமடைந்துவிடுவீர்கள்.
இந்த சாதாரண, கேள்விக்கேட்காமல் காத்திருப்பது, இந்த நம்பிக்கை முழு சரணடைதலுக்கான அடிப்படையை தயாராக்கும். சில நேரங்களில் இது வெளியிலிருந்து பார்ப்பதற்கு சுலபமாகத் தெரிகிறது. இது சுலபமானது அல்ல, இது மிகக் கடினமானது. உங்கள் மனம் தவிர்க்கும், உங்கள் மனம் கேள்வி கேட்கும், உங்கள் மனம் பிரச்சனைகளை எழுப்பும். மனம் “நான் என்ன செய்கிறேன்? நான் சரியானதாக ஏதாவது செய்கிறேனா? அல்லது என் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறேனா? நான் இவருடன் இருப்பதற்கும், இவருடன் செருப்பு தைப்பதற்கும் இவர் தகுதியானவரா? இது எந்த வகையிலாவது தேடலுடன் சம்மந்தப்பட்டதா?” என்றெல்லாம் கேட்கும்.
மனம் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கும். உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் கேட்க முடியாது. நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் அந்த வினாடிக்காக காத்திருக்க வேண்டும். உங்களால் ஒரு வருடத்திற்கு காத்திருக்க முடிந்தால்கூட மனம் தானாகவே அமைதியாகிவிடும். நீங்கள் அதற்கு தினமும் தீனிப்போட்டு, நீங்கள் அதற்கு தினமும் உதவினாலேத் தவிர அதுவால் தொடர முடியாது. தினமும் அதுவால் நீங்கள் தொந்திரவுச் செய்யப்பட்டாலே ஒழிய அதுவால் தொடர முடியாது. நீங்கள் காத்துக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் மனம் வீண்பேச்சு பேசிக்கொண்டு, கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருக்கிறது.
நீங்கள் காத்திருந்து, காத்திருந்து, காத்திருந்து கேள்விகள் அர்த்தமற்றதாகிவிடும். மனம் களைப்படைந்துவிடும். அதற்கு ஆர்வம் தொலைந்து, அது வேலை செய்யாமல் இருக்கும். நீங்கள் காத்துக்கொண்டிருந்தாலும் கேள்விகளே இல்லாத ஒரு வினாடி வரும். எப்போது கேள்விகளே இல்லையோ, அப்போது குரு பதில் சொல்ல ஆரம்பிப்பார்.
சிஷ்யருக்குள்ளே கேள்விகளே இல்லாத வினாடிதான் துல்லியமாக குரு பதில் சொல்லவேண்டிய வினாடி, ஏனெனில் இப்போது உங்களால் கேட்கமுடியும். உங்களுடைய சலச்சல என்ற பேச்சு நின்றுவிட்டது. இப்போது நீங்கள் மௌனமாக இருக்கிறீர்கள், இப்போது நீங்கள் ஒரு வழியாகிவிட்டீர்கள். ஆனால் சாதாரணமாக நாம் தினமும் மனதிற்கு தீனிப்போடுகிறோம். நாம் கலக்கமடைகிறோம். நாம் ஒரு மணிநேரம் கூட காத்திருந்து, நம்மால் தொடர்ந்து ஒரு மணிநேரம் காத்திருக்கமுடியுமா என்றுக்கூட பார்க்கமாட்டோம். நீங்கள் இந்த மனதால் தொடரமுடியுமா என்றுக்கூட பார்க்கமாட்டீர்கள். அதுவால் தொடரமுடியாது, ஏனெனில் மனதுடன் எதுவும் நிரந்தரம் கிடையாது. அது தானாகவே போய்விடும்.
ஒரு திபெத்தியன் (Tibet) குரு மிலரேப்பா (Milarepa) என்ற ஒருவர் இருந்தார். அவர் இதை சட்டமாகவே வைத்திருந்தார். அவரிடம் யாராவது கேள்விக்கேட்டால், கேள்விக்கேட்டவர் ஏழு நாட்களுக்கு காத்திருந்த பின்புதான் அவர் பதில் சொல்வார். இதுதான் எல்லாவற்றிற்கும் அவருக்கு கொடுக்கவேண்டிய காணிக்கை. இந்த நிமிடமேக் கேட்டால், அவர் உங்களை வெளியில் எறிந்து விடுவார்: “ஏழு நாட்களுக்கு காத்திருங்கள், கேள்வியுடன் தங்குங்கள்” என்பார். ஆனால் உண்மையில் உங்களால் அத்துடன் ஏழு நாட்களுக்கு தங்கமுடியாது. ஏழு நாட்கள் என்பது மிக நீளமானது.
சில சமயங்களில் யாராவது என்னிடம் வந்து ஒரு கேள்வியைக்கேட்டால், நான் அவரிடமிருந்து நழுவி இரண்டே நிமிடங்களுக்கு வேறு ஏதாவது பற்றிப்பேசினால், அவர் அந்தக் கேள்வியை மறந்துவிடுவார். அவர் மறுபடியும் இந்தக்கேள்விக்காக என்னிடம் வரமாட்டார். அவர் என்னிடம் ஒரு மணிநேரம் கூட பேசலாம், ஆனால் அவர் கேட்ட அதேக்கேள்வியை திரும்பக் கேட்கமாட்டார். அது ஒரு க்ஷணசித்தம், ஓர் அலை, அதற்கு அர்த்தம் இல்லை, அதனால் உங்களால் ஐந்து ஆண்டுகளுக்கு காத்திருக்க முடிந்தால், நீங்கள் அதேபோல் இருக்கமாட்டீர்கள்.
காத்திருப்பது மிகக்கடினமாகத்தான் இருக்கும். பழைய காலத்தில் தீக்ஷை வழங்குதல் நீண்ட காத்திருப்புக்கு பின்னால் செய்யப்பட்டது. பின்பு சரணடைதல் சுலபமாக இருந்தது. பொறுப்பும் எடுத்துக்கொள்ளலாம். இப்போது இது முழுவதும் வித்தியாசமாகிவிட்டது. யாருமே காத்திருக்க தயாராக இல்லை. நவீன மனிதனின் மிகக்கடுமையான வியாதி அவசரம்தான். நவீன மனிதன் புதிய அசாதாரணமான விஷயம் நேரத்தில் கவனமாக, உணர்வுடன் இருப்பது (Time Consciousness) மனதிற்கு அடிப்படையான மாற்றமாக வந்திருப்பது, நேரத்தைப் பற்றிய பிரக்ஞை. நாம் நேரத்தைப் பற்றி அதிக உணர்வுடன் இருப்பதால், நம்மால் ஒரு வினாடிக்கூட காத்திருக்க முடியவில்லை. அது முடியாத ஒன்றாகி விட்டது.
அதனால் தான் இந்த முழு தலைமுறையே குழந்தைத்தனமாகிவிட்டது. எங்கும் முதிர்ச்சி என்பதேயில்லை. ஏனெனில் முதிர்ச்சி என்பது காத்திருப்பதின் பயனாக வருவது. ஆனால் காத்திருப்பது நேரத்தைக் குறித்த உணர்வில்லாத போதுதான் சாத்தியமாகிறது. நேரத்தைக் குறித்த உணர்வு இருக்கும்போது அல்ல. இந்த நேரத்தை குறித்த உணர்வினால் தீக்ஷை வழங்குவதே முடியாத ஒன்றாகிவிட்டது. நீங்கள் தீக்ஷை பெறவே முடியாது. நீங்கள் ஓடிக்கொண்டே புத்தரைக் கடந்து சென்று, “நீங்கள் எனக்கு தீக்ஷை கொடுப்பீர்களா” என்று கேட்பீர்கள். புத்தரை தெருவில் நீங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது சந்திப்பீர்கள். இந்த நான்கு அல்லது ஐந்து வார்த்தைகளை சொல்வதற்கு கூட நிற்கும் நிலையில் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பீர்கள்.
முதிர்ச்சி என்பது இல்லாமல் போய்விட்டது. ஆனால் ஏன் இந்த நேரத்தைக் குறித்த உணர்வு – இது தடையாக உள்ளது, பெரிய தடை? இது ஏன் முன்பு இல்லை? இப்போது இது ஏன் இவ்வளவு பெரியதாக இருக்கிறது.
மரணத்தைப் பற்றிய பயம் வரும்போது, உங்களுடைய நேரத்தை குறித்த பிரக்ஞை ஆழமாகும். உங்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு மரணத்தை குறித்த விழிப்புணர்வு அதிகமாகும் அளவிற்கு உங்களுடைய நேரத்தைக் குறித்த பிரக்ஞையும் அதிகமாகும்.
ஒரு வினாடிக்கூட தொலைந்து விடக்கூடாது. மரணம் இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் தொலைந்தது தொலைந்ததுதான். மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இறக்கப்போகிறீர்கள். அதனால் எல்லா வினாடியையும் பயன்படுத்துங்கள்! உங்களால் காத்திருக்கமுடியாது, ஏனெனில் காத்திருப்பது என்றால் மரணத்திற்கு காத்திருப்பதுதான். மரணம் வருகிறது. யாராலும் காத்திருக்கமுடியாது. நாளை என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த வினாடியே மரணம் வரலாம். நீங்கள் அசௌகரியம் அடைகிறீர்கள், நீங்கள் நடுங்க ஆரம்பிக்கிறீர்கள், நீங்கள் ஒடத் துவங்குவீர்கள்.
இந்த நவீன மனம் ஓடுவதற்கான முழு காரணம் மரணபயம்தான். முதல் தடவையாக மனிதன் மரணத்தைக் குறித்து பயந்திருக்கிறான். ஏனெனில் முதல் தடவையாக மனிதனுக்கு மரணம் இல்லாததைக் குறித்து எதுவும் தெரியவில்லை. உங்களுக்கு மரணம் இல்லாதது குறித்து தெரிந்தால் பின்பு அவசரம் இருக்காது. நீங்கள் முடிவில்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள், எப்போதும் போதிய நேரம் இருக்கிறது, போதிய நேரத்திற்கு அதிகமாகவே இருக்கிறது. எதுவும் தொலைய வில்லை. ஏனெனில் நேரம் முடிவில்லாதது. அதனால் ஒரு நிமிடம் போனால், குறைந்த நேரம்தான் மிஞ்சியிருக்கும் என்று அர்த்தமில்லை. நேரம் அதுவாகவேதான் தொடர்ந்திருக்கும், ஏனெனில் அது முடிவில்லாதது. அளவுகளுக்கு அடங்காத பொக்கிஷத்திலிருந்து, உங்களால் எதையும் தொலைக்க முடியாது. நீங்கள் தொலைத்துக்கொண்டேயிருக்கலாம், ஆனால் அதில் எந்த வித்தியாசமும் இருக்காது. அதேதான் அதில் தொடர்ந்திருக்கும். உங்களால் அதிலிருந்து எதையும் வெளியில் எடுக்க முடியாது. ஆனால் நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது. மரணம் இருக்கிறது.
நாம் இறக்கப்போகும் உடலைப்பற்றி நாம் பிரக்ஞையுடன் இருக்கிறோம், ஆனால் நம்முடைய மரணம் இல்லாத உள்ளார்ந்த விழிப்புணர்வைப் பற்றி நாம் பிரக்ஞை இல்லாமல் இருக்கிறோம். பழையகாலத்தில் இறப்பில்லாததைப் பற்றி உணர்ந்தவர்கள் இருந்தார்கள். ஏனெனில் மரணம் இல்லை என்ற பிரக்ஞையினால், அவர்கள் உருவாக்கிய சூழ்நிலையில் அவசரம் என்பது இல்லை. விஷயங்கள் நகர்ந்தால், மிக மெதுவாக நகரும். தீக்ஷை வழங்குதல் சுலபம். அப்போது காத்திருப்பது சுலபமாக இருந்தது. அப்போது சரணடைவது சுலபமாக இருந்தது. அப்போது பொறுப்புகளும் சுலபமாக இருந்தது. இவைகள் எல்லாமே இப்போது கடினமாகிவிட்டது. ஆனாலும் இதற்கு வேறு வழியில்லை; தீக்ஷை கொடுத்து ஆரம்பித்தல் தேவை. பழைய தீக்ஷை வழங்குதல் முடியாததொன்றாகிவிட்டது. அதனால் அதனிடத்தில் புதிய தீக்ஷை வழங்கி நிரப்ப வேண்டும். பழையது, புதியதால் நிரப்பப்படவேண்டும். என்னுடைய எல்லா முயற்சியும் இதைநோக்கித்தான்.
நீங்கள் அவசரத்தில் இருந்தால், பின்னர் நான் தீக்ஷை, ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறையிலேயேக் கொடுப்பேன். இல்லையென்றால் தீக்ஷை வழங்குதலே இருக்காது. முன் நிபந்தனையாக, நான் உங்களைக் காத்திருக்க சொல்லமுடியாது. நான் தீக்ஷையை முதலில் கொடுத்துவிட்டு, பின்பு உங்கள் காத்திருத்தலை பல வழிகளில் நீட்டிப்பேன். பலவழிகளின் மூலம் உங்களை காத்திருப்பதற்குத் தூண்டுவேன், ஏனெனில் காத்திருத்தல் இல்லாமல் முதிர்ச்சியில்லை. அதனால் நீங்கள் தயாரானதும் இரண்டாவது தீக்ஷை வழங்குதல் இருக்கும், இதுதான் பழைய காலத்தில் முதலாவதாக இருந்திருக்கும். இப்போது இது முதலாவதாக இருக்கமுடியாது.
சில சமயங்களில் மக்கள் திகைத்துப்போவார்கள். சில சமயம் யாராவது என்னிடம் வரும்போது, அவன் என்னைப்பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டான், அவனுக்கு என்னைப்பற்றித் தெரிந்திருக்காது, ஆனால் நான் அவனுக்கு சன்னியாசத்திற்கு தீக் ஷை கொடுத்திருப்பேன். இது பைத்தியக்காரத்தனம், புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரியும். நான் என்னவெல்லாம் செய்கிறானோ, அதை நான் வேண்டுமென்றே செய்கிறேன். இந்த தீக்ஷை வழங்குதல், ஒரு ஆரம்பம்தான். ஏனெனில் இந்த தீக்ஷை வழங்குதலின் மூலம்தான், அவன் காத்திருப்பதற்கு நான் சில முறைகளை உருவாக்க முடியும், இல்லாவிட்டால் அவனால் காத்திருக்க முடியாது. நான் அவனிடம் “ஐந்து வருடங்கள் பொறுத்தி ருங்கள், பின்பு நான் தீக்ஷை வழங்குகிறேன்” என்று சொன்னால், அவனால் பொறுத்திருக்க முடியாது. நான் இந்த நிமிடமே அவனிடம் கொடுத்தால், பின்னர் அவனால் காத்திருக்கமுடியும்.
அதனால் இது அப்படியே இருக்கட்டும், இதனால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. முறை அதுவாகவேத்தான் இருக்கும். உங்களால் காத்திருக்க முடியாததால், நான் மாறுகிறேன். நான் உங்களைப் பிறகு காத்திருக்க அனுமதித்து, பின்பு இரண்டாவது தீக்ஷை வழங்குதல் இருக்கும். முதல் தீக்ஷை வழங்குதல் மாமூலானது, இரண்டாவது வழக்கப்படி இருக்காது. இரண்டாவது, ஒரு நிகழ்வாக இருக்கும். நீங்கள் என்னை கேட்க மாட்டீர்கள், நான் உங்களுக்குத் தரமாட்டேன்; அது தானாகவே நடக்கும். அது உள்ளார்ந்த மெய்யிருப்பில் நடக்கும். அது நடக்கும்போது உங்களுக்கு தெரியும்.
இப்போதைய உலகத்தில், இந்த நிமிடத்தில் வேறு எந்த வழியும் சாத்தியமில்லை. இது மாதிரியான, நேரத்தைக் குறித்த அதிக பிரக்ஞை இருப்பவர்களுக்கு வேறு வழியில்லை. முதலில் நான் உங்களைத் தள்ளிவிட்டு, பின்பு நான் உங்களில் வேலை செய்யவேண்டும். வேலை செய்வதும் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். அதுவாகவே இருக்கமுடியாது. உதாரணத்திற்கு, நான் அதிகமாக உங்களுடைய புத்தியுடன் வேலை செய்யவேண்டும், இது முன் காலத்தில் அவசியம் இல்லாததாக இருந்தது. இதை எப்போதும், ஒரு தடையாகவே நினைத்தார்கள். எனக்கும் அது தடைதான் என்பது தெரியும், புத்தியினால் உண்மையில் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது தெரியும், ஆனாலும் நான் உங்களுடைய புத்தியுடன் வேலை செய்து, எல்லாவற்றையும் விரிவாக எடுத்து சொல்லவேண்டும், ஏனெனில் இப்போது யாராவது, உங்களுடைய புத்தி தேவையில்லை என்று சொன்னால், இந்த வாக்குமூலத்தையே உங்களுடைய புத்தி வேறுவிதமாக விளக்கம் சொல்லும். உங்களுக்கு அந்த நபருடன் இருந்த தொடர்பு அறுந்து விடும், பின்னர் அவருடன் நெருக்கம் இருக்காது. இதுவே கதவை மூடுவதுபோல் ஆகிவிடும். இன்று இதை சொல்லமுடியாது, நிச்சயமாக இது ஒரு அடிப்படை உண்மைதான், ஆனால் அதை சொல்லமுடியாது. இதை பழையக்காலத்தில் சொல்ல முடிந்தது.
இப்போது நான் உங்களுடைய புத்தியுடன் நிறைய செய்யவேண்டியிருக்கிறது. நான் அந்த அளவிற்கு உங்கள் புத்தியுடன் இதுவரை வேலை செய்யாதவிதத்தில் செய்து, அது உங்கள் திறமையை மிஞ்சிய பிறகுதான், நீங்கள் இந்த கூற்றுக்கு தயாராவீர்கள் “புத்தியை தூக்கியெறியுங்கள்” இதற்கு முன்னதாக அல்ல, நீங்கள் திருப்தியடைந்தால் உங்கள் புத்தி சுலபமாக திருப்தியடைந்துவிடும். ஏனெனில் அது மேல்வாரியான பாகம் – எது சொல்லப்பட்டதோ அது பகுத்தறிவு கொண்டது, அப்போதுதான் நான் பகுத்தறிவு இல்லாதவற்றை தொடங்க முடியும். அதுதான் உண்மையான ஆரம்பம்”.
ஆனால் உங்களுடைய இதயத்திற்கு வருவதற்கு, நான் சுற்றிச்சுற்றிப்போய் உங்களுடைய புத்தியின் வேறு ஒரு வழியில் வரவேண்டியுள்ளது. அறிவின் சிக்கலான வழியின் மூலம் பயணம் செய்யவேண்டும் – தேவையில்லாதது, ஆனால் இந்த தலைமுறையினருக்குத் தேவைப்படுகிறது. இப்போது பகுத்தறிவு இல்லாததுக்கூட பகுத்தறிவின் மூலம் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
காத்திருக்கும் காலம், அறிவிற்கு எல்லாவற்றையும் கடந்துசெல்வதற்கு ஒரு பயிற்சியாகும். அதே நேரத்தில் நான் உங்களை கட்டாயப்படுத்தி தியானத்திற்கு தள்ளிவிடுவேன். பழையக்காலத்தில் தியானம் ஒரு இரகசியமாக, மறைபொருளாக இருந்தது. அது நீங்கள் முழுமையாக தயாரானவுடன்தான் உங்களிடம் தரப்படும். ஏனெனில் அது, இரகசியமான பொக்கிஷத்திற்கு, அது இரகசியமான சாவி. அதை நீங்கள் முழுவதும் தயாரானவுடன்தான் கொடுக்கமுடியும், இல்லாவிட்டால், அதை கொடுக்கமுடியாது. ஆனால், நீங்கள் தயாராவதற்காக நான் காத்திருந்தால், அதை உங்களிடம் கொடுக்கமுடியாமலே போய்விடும். அதனால் நான் உங்களிடம் சாவியை கொடுக்கிறேன் –நிச்சயமாக பொய்யான ஒன்று. நீங்கள் அதை வைத்துக்கொண்டு விளையாடலாம், அத்துடன் நீங்கள் காத்திருப்பீர்கள், அந்த பொய்யான சாவியுடனும், நீங்கள் சௌகரியமாக இருப்பீர்கள், ஆனால் அந்த சாவியை செய்திருக்கும் விதம், நீங்கள் அதை உபயோகித்துக்கொண்டேயிருந்தால், அதுவே உண்மையானதாகிவிடும். அந்த சாவியை செய்திருக்கும் விதம், நீங்கள் உபயோகித்துக்கொண்டிருந்தால்........
இந்த நிமிடம் அதுவால் கதவுகளைத் திறக்கமுடியாது. சாவி பொய்யானது. அதற்கு இருக்கக்கூடாத மூலைகள் (Corner) இருக்கின்றன. ஆனால் நீங்கள் அதை வைத்து முயற்சித்துக் கொண்டேயிருந்தால், அந்த மூலைகள், மறைந்துப்போக்கூடிய குறைதான், உலர்ந்து, உதிர்ந்துவிடும். அது தினமும் அதை நோக்கி நகர்ந்து, அதுவே உண்மையானதாகிவிடும். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன். அது அந்த சாவியின் இடத்தில் இன்னொன்றை தரப்போவதில்லை – அந்த சாவியை அதிகமாக உபயோகப்படுத்துவதினால் உண்மையான சாவியாகி விடும். அதில் யாருக்கும் தேவையில்லாத மூலைகள், தேய்ந்துவிடும். நீங்கள் தயாராகும் வரை காத்திருந்து, இந்த நிமிடமே கதவைத் திறக்கவல்ல உண்மையான தயாரான சாவியை தருவதற்கு, என்னால் காத்திருக்க முடியாது. கதவு தயாராக இருக்கிறது. சாவி தயாராக இருக்கிறது. ஆனால் நீங்கள் தயாராக இல்லை. அதனால் இரண்டு வழிகள் இருக்கின்றன. பழைய வழியில் நீங்கள் காத்திருக்கவேண்டும். நான், “ஐந்து ஆண்டுகளுக்கு காத்திருங்கள். இதுதான் சாவி, அதுதான் கதவு, ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு காத்திருங்கள். திரும்பவும், என்னிடம் எங்கே சாவி என்று கேட்காதீர்கள். ஆர்வத்தில் கூட கதவிடம் சென்று அதை தொடாதீர்கள், அந்த பூட்டிடம் செல்லாதீர்கள் – காத்திருங்கள்! நீங்கள் அந்தப்பூட்டை பார்ப்பதை, நான் பார்த்தால் கூட நான் உங்களை திரும்ப அனுப்பிவிடுவேன். சும்மா காத்திருங்கள். அந்த பூட்டை பார்க்காதீர்கள், பேராசைப்படாதீர்கள். இதுதான் சாவி. நீங்கள் தயாரானவுடன் இதை நான் உங்களிடம் தருவேன்” என சொல்ல வேண்டும். இதுதான் பழைய வழி. மக்கள் பல வருடங்களுக்கு காத்திருந்தார்கள், பல வாழ்க்கைகளுக்கு காத்திருந்தார்கள்.
ஒரு கதை இருக்கிறது.......
ஒரு சிஷ்யர் மூன்று வாழ்க்கைகளாக காத்திருந்தார். குரு அந்த சிஷ்யரை வைத்து, அவனால் எவ்வளவு தூரம் காத்திருக்கமுடியும் என்பதை சோதித்துப்பார்த்தார். அவர் சிஷ்யரைப் பார்த்து, “உன்னால் எவ்வளவு தூரம் காத்திருக்க முடியும் என்பதைப் பார்க்கப்போகிறேன்” என்று சொன்னார். அதற்கு அந்த சிஷ்யர் “சரி, நானும் உங்களால் காத்திருக்க முடியுமா என்பதை பார்க்கிறேன்” என்றார். இது இருவருக்குமே காத்திருத்தல் தான். இது உங்களுக்கு மட்டும்தான் காத்திருத்தல் என்று நினைக்காதீர்கள். நீங்கள் காத்திருந்தால், நானும் காத்திருக்கிறேன். நான் உங்களைவிட இன்னும் அவசரமாக காத்திருக்கிறேன். ஏனெனில், நான் திரும்பவும் இல்லாமலிருக்கலாம். அதனால் சிஷ்யர் “யாரால் அதிகமாக காத்திருக்க முடிகிறது, என்பதைப்பார்ப்போம்” என்றார்.
இது குருவுக்கு கடினமாகி விட்டது. திரும்பவும் மூன்று வாழ்க்கைகளுக்கு அவர் வரவேண்டியிருந்தது. அப்படி அவரும் காத்திருந்தார். ஒவ்வொரு முறை சிஷ்ஷியரும் வந்து உட்காருவார், ஒவ்வொரு முறையும் அதே கதை திரும்பியது.
கடைசியில் குரு தன் பொறுமையை இழந்து “இந்த சாவியை எடுத்துக்கொள், நீ வெற்றி பெற்றுவிட்டாய், நான் தோற்றுவிட்டேன்” என்றார்.
அதற்கு அந்த சிஷ்யர், “நீங்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? என்னால் இன்னும் காத்திருக்க முடியும்” என்றார்.
குரு அதற்கு “உன்னால் காத்திருக்க முடியும், ஆனால் இந்த காத்திருப்பதற்காக நான் அனாவசியமாக இந்த பூமிக்கு வரவேண்டும், உன்னால் இதை தொடர்ந்துகொண்டே இருக்கமுடியும்போல் தோன்றுகிறது. அதனால் சாவியை எடுத்துக்கொள்” என்றார்.
ஆனால் அதற்கு அந்த சிஷ்யர் “அந்த சாவி என்னிடம் வந்துவிட்டது, ஏனெனில் இவ்வளவு நீண்ட காத்திருப்பே சாவியாக மாறிவிட்டது. அதனால் எனக்கு இப்போது அது தேவையில்லை” என்றார்.
அதற்கு அந்த குரு “இந்த ஒரு காரணத்திற்காகத்தான் நான் இவ்வளவு அவசரமாக இருந்தேன் - ஏனெனில் நீ இன்னும் காத்துக்கொண்டிருந்தால், பின்பு சாவி கொடுப்பதற்கான அவசியம் இருக்காது – இந்த காத்திருப்பே சாவியாகிவிடும்”.
இதுதான் பழைய வழி. முதலில் காத்திருங்கள். பின்பு சாவி கொடுக்கப்படும். இப்போது இது சாத்தியமில்லை. அதனால் நான் மொத்தத்தையும் மாற்றவேண்டும். நான் சாவியை கொடுக்கிறேன், பின்பு நீங்கள் அத்துடன் விளையாடலாம். உங்களால் ஒன்றும் செய்யாமல்தான் காத்திருக்கமுடியாது. ஆனால் ஏதோ செய்துக்கொண்டு காத்திருக்கமுடியும். இப்போது உங்களிடம் சாவி இருக்கிறது, உங்களிடம் பூட்டு இருக்கிறது. கதவிருக்கிறது, பொக்கிஷத்தைப் பற்றிய நிறைய வதந்திகள் இருக்கிறது, உங்களிடம் எல்லாம் இருக்கிறது. நான் அந்த பொக்கிஷத்தைப் பற்றி நிறைய வதந்திகள் கிளப்பிக்கொண்டேயிருப்பேன். உங்களிடம் சாவி இருக்கிறது. உங்களால் காத்திருக்கமுடியும், உங்களிடம் பூட்டும், சாவியும் இருக்கிறது. இப்படி பொய்யான சாவியை வைத்துக்காத்திருப்பதும், விளையாடிக் கொண்டிருப்பதுமே, அதை உண்மையானதாக மாற்றிவிடும்.
குருவினுடைய பொறுப்பு உங்களுடைய சரணடைதலைப் பொறுத்திருக்கிறது. இதைத்தவிர இன்னும் எவ்வளவோ விஷயங்களை குரு செய்கிறார், ஆனால் அதுவெல்லாம் சிஷ்யரைப் பொறுத்து செய்வதில்லை. பாலமாக இருக்கும் ஒரே விஷயத்தில்தான் குரு, சிஷ்யரைப் பொறுத்து இருக்கிறார். சிஷ்யரின் சரணடைதல், குருவின் பொறுப்பு – இதுதான் பாலம். பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதுவெல்லாம் குருவிடம் மட்டும்தான் இருக்கிறது. உண்மையில் சிஷ்யர் செய்யவேண்டியது அதிகமாக இல்லை. குரு செய்யவேண்டியது அதிகமாக இருக்கிறது. அது சரியும்கூட, அது அப்படித்தான் இருக்கவேண்டும். சிஷ்யர் எப்போதும் அவர்தான் அதிகமாக செய்வதாக நினைக்கிறார், ஆனால் குருதான் அதிகமாக செய்யவேண்டியுள்ளது.
அதனால் அவர் எதையாவது பூடகமாக காண்பித்து விட்டு, அவர் உங்களுடன் பல அடுக்குகளில் கூடவே வேலை செய்யவேண்டும், அவர் உங்களுடைய உடலுடன் வேலை செய்யவேண்டும். இது உங்களுக்குப் புரியாது, ஏனெனில் நீங்கள் உங்கள் உடலைப்பற்றி முற்றிலும் அறியாமல் இருக்கிறீர்கள், உங்களுக்குப் பசிக்கும்போதும், வியாதியையும், வலியையும் உணரும்போதுதான் உங்களுக்கு உங்கள் உடலைப்பற்றி தெரியும். அவ்வளவுதான். அதுதான் நீங்கள் உடலுடன் வைத்திருக்கும் ஒரேத் தொடர்பு. உங்கள் உடல், எப்படிப்பட்ட ஒரு மாபெரும் அற்புதம் என்பது உங்களுக்குத்தெரியாது.
குரு, உங்கள் உடலுடனும் நிறைய செய்யவேண்டியிருக்கிறது. ஏனெனில் உடல் மாற்றம் அடைந்தலேத் தவிர, உள்ளூர இருப்பதை சமாளிக்கமுடியாது. அதையும் அவர் ஏதோ செய்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளாதவாறு செய்யவேண்டும். நீங்கள் தெரிந்துக்கொண்டால் அந்த உணர்வே உங்கள் உடலில் உபாதைகளை உருவாக்கும். பின்னர் குருவால் செய்ய இயலாது, ஏனெனில் இது உடலைக்குறித்த இரகசியமான விஷயம். இது அதைப்பற்றிய உணர்வு இல்லாதபோது, வேலை செய்யும். நீங்கள் அதைப்பற்றிய உணர்வுடன் இருந்தால், அது வேலை செய்யாது.
நீங்கள் இதை பரிசோதித்துப் பார்க்கலாம். நாளை, நீங்கள் சாப்பிடும்போது பிரக்ஞையுடன் இருங்கள். பின்பு வயிறு வேலை செய்கிறது என்பதையும், அது உணவை சத்தாக மாற்றுகிறது என்பதிலும் பிரக்ஞையுடன் இருங்கள். இப்படி அதைப்பற்றி இருப்பத்துநான்கு மணிநேரமும் உணர்வுடன் இருந்தால், நீங்கள் நோயாளிப் போல் உணர்வதுடன், உங்கள் வயிறு நலம் கெடும். உங்களால் அந்த உணர்வினால், எந்த சத்தையும் பெறமுடியாது. அது விஷமாகிவிடும். நீங்கள் அதை முழுவதையும் தூக்கியெறிய வேண்டும். இல்லாவிட்டால் முழு உடலும் சீர்கெடும்.
அதனால்தான் உங்களுக்கு உறக்கம் தேவை. உறக்கத்தில் உடலால் சிறப்பாக வேலை செய்யமுடியும். நீங்கள் உணர்வுடன் இல்லை. யாருக்காவது உடல்நலம் சரியில்லை யென்றால், மருத்துவர், முதலில் அவருடைய உறக்கம் நன்றாக இருக்கிறதா என்றுதான் பார்ப்பார். இல்லாவிட்டால் எந்த மருந்தும் பயன்படாது. எந்த உதவியும் செய்யமுடியாது. அவனுக்கு உதவமுடியாது, ஏனெனில் அவன் உடல் வேலை செய்யாது, அவன் அதில் மிகுந்த உணர்வுடன் இருக்கிறான். இந்த உணர்வினால் நாம் தேவையில்லாமல் பல நோய்களைத் தொடர்கிறோம். ஒரு முறை உங்கள் வயிறு நலம் கெட்டிருந்தபோது, நீங்கள் அதைப்பற்றிய உணர்வுடன் இருந்தீர்கள். பின்னர் வயிறு சரியாகிவிட்டது, ஆனால் அதைப்பற்றிய உணர்வு தொடர்கிறது. பின்னர் இந்த உணர்வு வயிற்றைப் பாதிக்கும். இது ஒரு விஷச்சூழல் ஆகிவிடும் – உங்கள் உணர்வை வயிறு பாதித்தது, பின்னர் வயிறை உணர்வு பாதிக்கிறது. இப்போது உங்களால் இதைவிட்டு வெளியே வரமுடியாது. நீங்கள் இப்படியே போய்க்கொண்டிருப்பீர்கள், பின்பு இது வாழ்நாள் விஷயமாகிவிடும்.
ஒருநாள் உங்கள் உறக்கம் கெட்டுவிடும். இன்னொருநாள் நீங்கள் சரியாக இருப்பீர்கள், ஆனால் இப்போது நீங்கள் அதில் அதிக நினைப்புடன் இருக்கிறீர்கள்; இப்போது நீங்கள், அன்று ஒரு நாளைப்போலவே, இன்றும் உறக்கம் வரப்போவ தில்லை என நினைப்பீர்கள். இன்று நீங்கள் அதே உணர்வுடன் இருப்பதால், உறக்கம் வராது; நீங்கள் அதிக உணர்வுடன் இருக்கிறீர்கள். இப்போது அடுத்தநாள் காலையிலி ருந்து இன்னும் அந்த உணர்வு அதிகமாகும்.
அதனால் குருவாக இருப்பவர் உங்களுடைய உடலில், உங்களிடம் சொல்லமுடியாத நிறைய விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. ஒருமுறை தொடுவதுக்கூட, ஏதோ செய்வது தான், ஒரு கையை தலையில் வைப்பதுக்கூட, ஏதோ செய்வது தான். பழைய உலகத்தில், பழங்காலத்து மனிதர்களுக்கு இது சுலபமாக இருந்தது. அவர்கள் அந்த அளவிற்கு உடல் உணர்வுடன் இல்லை. நேர உணர்வுடன் ஒத்திருக்கும் இன்னொரு விஷயம் உடலுணர்வு. நான் அதை மரண உணர்வென்று சொல்கிறேன். உண்மையில், நீங்கள் அதிகமாக மரண உணர்வுடன் இருந்தால், நீங்கள் அதிகமாக உடலுணர்வுடன் இருப்பீர்கள்.
இன்று எல்லோரும் உடலுணர்வுடன் இருக்கிறார்கள், ஒருவனை அவனுடைய சுயஉணர்வில்லாமல் உங்களால் தொடமுடியாது. அவன் சுயஉணர்வுடன் ஆகும் வினாடியிலிருந்து, தொடுவது, அதன் உள்ளர்த்தம், அதன் உள்வேலை எல்லாம் நின்றுவிடும். நாம் மிகவும் தொட்டாச்சுருங்கி போலாகிவிட்டோம். எல்லோரும் யாரும் நம்மை தொடக்கூடாது என்பதில் விழிப்புடன் இருக்கிறோம். நீங்கள் ஒரு கூட்டத்தில் நிற்கிறீர்கள். எல்லோரும் தொடுகிறார்கள். ஆனால் எங்கோ உள்ளுக்குள் எல்லா நேரங்களிலும் நாம் தொடப்படாமல் இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இது மாதிரி விஷயங்கள் கடினமாகிவிட்டது. தேவையில்லாத கடினம்.
உங்கள் உடலை மாற்ற நான் பல வழிகளில், நுணுக்கங்களை உருவாக்க வேண்டியுள்ளது. என்னுடைய தியான முறைகளை, தீவிர உணர்ச்சிகளிலிருந்து விடுபடுத்தக்கூடிய ஒரு நுணுக்கத்தை, உங்கள் உடலின் மையத்தை மாற்றுவதற் காகத்தான் நான் சேர்த்திருக்கிறேன். எந்த பழைய தியானத்திலும் இந்த பாகத்தை சேர்க்கவில்லை. ஏனெனில் இந்த பாகத்தை குருவால் செய்ய முடியும். அவர் தொடுவது, ஒரு முறை எந்த மையத்தையாவது தொட்டால் போதும், அதுவால் அதிகமான உணர்ச்சிகளை வெளிக்கொண்டுவர முடியும். ஆனால் இப்போது அது கடினமானது.
உதாரணத்திற்கு ஜென் (Zen) ஆசிரியர், அவர் கையில் கோல் வைத்திருப்பார். அவர் அந்தக் கோலை வைத்து அடிப்பார். எந்த மேற்கத்தியராலும் இதை புரிந்துக் கொள்ளமுடியாது. இரக்கமுள்ளவரால்கூட புரிந்துக்கொள்ள முடியாது. அதிலும் ஜென் (Zen) ஆசிரியரும் இதற்கு அர்த்தம் என்ன என்று சொல்லமாட்டார்.
அது அடிப்பது அல்ல, அது குறிப்பிட்ட மையத்தில் சுத்தியால் அடிப்பது. அது அடிப்பதே அல்ல. ஆனால் இதை மறைக்கவேண்டும். அவர் உங்கள் முதுகெலும்பிலோ அல்லது வேறு ஒரு உறுப்பிலோ அடித்துவிட்டு, “உன்னுடைய உடல் ஒரு குறிப்பிட்ட வகையில் வேலை செய்ய உதவுவதற்காக, நான் இந்த மையத்தை தொடுகிறேன்” என்று சொன்னால், நீங்கள் சுயஉணர்வுடன் ஆகிவிடுவீர்கள். அதனால் அவர் அதை சொல்ல மாட்டார். அவர் “நீ தூக்கத்துடன் இருப்பதாக நான் உணர்ந்தேன், அதனால் தான் உன்னை அடித்தேன்” என்று சொல்லுவார். எப்போதெல்லாம் உங்களுக்கு உறக்கம் வருகிறதோ, அப்போதெல்லாம் அவர் வந்து உங்களை அடிப்பார். இவ்வாறு அடிப்பது உண்மையை மறைக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு மறைவான யுக்தி. நீங்கள் “அவர் என்னை அடிக்கிறார்” என்று நினைப்பீர்கள், ஆனால் உங்களுடைய மையம் சுத்தியால் அடிக்கப்பட்டது என்பதை அறியமாட்டீர்கள். ஆனால் இப்போது அதையும் பயன்படுத்தமுடியாது.
உள்ளார்ந்த மின்சாரத்தை மாற்ற ஆசனங்களை பயன்படுத்தினார்கள், முத்திரை களைப் பயன்படுத்தினார்கள், ஆனால் அவைகளை நீண்ட நாட்களுக்கு கடைபிடிக்க வேண்டும். இப்போது யாராலும் அவ்வளவு நீண்டகாலத்திற்கு கடைபிடிக்க முடியாது. மேலும் அவைகளை தனிமையான சூழ்நிலையில் கடைபிடிக்க வேண்டும். மக்கள் நெருக்கடி நிறைந்த இடத்தில் முடியாது. நீங்கள் ஆசனங்களை, முத்திரைகளை கடைபிடிக்கும் போது, உங்கள் சக்கரங்கள் மிக மென்மையானதாகி விடும். அதனால் தனிமையிலேயே தொடர்ந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாமல் தொந்திரவு தரக்கூடிய பாதிப்புகள் இருக்கும். ஏனெனில் உங்கள் மையங்கள் எல்லாம் திறந்திருக்கிறது.
அதனால், குரு பல வழிகளின் மூலம், உங்கள் உடலில் நிறைய செய்வதற்கு இருக்கிறது. புதிய வழிகளை திட்டமிட்டு செய்வது அவரைப் பொறுத்துதான் இருக்கிறது. ஏனெனில் பழைய வழிகள் பயனில்லாமல் போகிறது. இது எதனால் என்றால், உங்களுக்கு அதிகமாக தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு நீங்கள் அதிகமாக சுயஉணர்வுடன் ஆகிறீர்கள், அதனால் புதிய முறைகளை பயன்படுத்த வேண்டும். ஞான அறிவு பெற்றவர் மட்டுமே புதிய முறைகளை பயன்படுத்தமுடியும். ஞான அறிவு பெறாமல் தீக்ஷை வழங்குபவர்களெல்லாம் பழைய முறைகளை நம்பித்தான் இருக்கவேண்டும். ஏனெனில் அவர்களால் புதிய முறைகளை திட்டமிட்டு உருவாக்க முடியாது. அவர்களுக்கு பழையது என்றால் என்ன என்பதும் தெரியாது, அவர்களுக்கு வெளிப்புறத்து அபிநயங்கள் மட்டும்தான் தெரியும். அவர்கள் தொடர்ந்து ஹதயோகா (Hatha Yoga), பிராணாயாமம் இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு புதிய ஞான அறிவுப்பெற்ற மனிதரிடமிருந்து இந்த உலகம் பல புதிய முறைகளை பெறுகிறது. இல்லாவிட்டால் அதுவால் புதிய முறைகளை பெறமுடியாது. ஒவ்வொரு தலைமுறையினருக்கும் புதிய முறைகள் தேவைப்படும். ஏனெனில் மனம் மாறிவிட்டது.
அதனால் குரு உங்கள் உடலை வைத்து நிறைய செய்யவேண்டும்; அதுதான் ஆரம்பம். இதில் கடினமான பாகம் என்னவென்றால், இது உங்களுக்கு தெரியக்கூடாது. அதனால்தான் குருவுடன் இருப்பதும், அவருடன் ஆசிரமத்தில் இருப்பதும், குருவுடன் உறங்குவதும் அர்த்தமுள்ளதாகிறது – ஏனெனில் உங்களுக்கு தெரியாமல் வேலை செய்வதற்கு அவருக்கு உங்கள் உடல் மென்மையாக இருக்கிறது. உங்களை சுயநினைவில்லாமல் செய்து, உங்கள் உடலுடன் வேலை செய்வதற்கு குருக்கள் போதை மருந்துகளைக்கூட பயன்படுத்தியிருக்கிறார்கள். மயக்கமருந்தை (Anesthetics) அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மட்டுமல்ல, குருக்களும் அவர்களுடைய சொந்த வழிகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். எப்போது நீங்கள் முழுமையாக சுயநினைவில்லாமல் இருக்கிறீர்களோ, அப்போது ஒரு வருடத்தில் செய்யமுடியாததை ஒரு நிமிடத்தில் செய்து விடலாம். ஏனெனில் அப்போது துல்லியமான நுனியைத்தொட்டு திருப்பி, மாற்றமுடியும். முழு மின்சாரத்தையும் வேறுவிதமாக்கலாம்.
பின்பு விஷயங்கள் இன்னும் கடுமையாகிவிடும், ஏனெனில் உபயோகப்படுத்த வேண்டிய சக்தி பாலுணர்வின் மையத்தில் உள்ளது. இது இன்னும் கூட கடினமாகி விடுகிறது – இது முழு சிக்கலின் ஒரு பாகம். நான் நேரம் குறித்த உணர்வு, மரணத்தை குறித்த உணர்வு, பாலுணர்வை குறித்த உணர்வைப்பற்றி பேசுகிறேன், இவையெல்லாம் ஒரு பாகங்கள். உங்களுக்கு அதிகமாக மரணத்தைக்குறித்த உணர்விருந்தால், அதிகமாக பாலுணர்வை உணர்வீர்கள் – ஏனெனில் பாலுணர்வுதான் மாற்று மருந்து. பாலுணர்வுதான் வாழ்க்கையின் ஆரம்பம், மரணம் அதன் முடிவு. மரணத்தைக் குறித்த உணர்வு, உங்களுக்கு அதிகமாக இருந்தால், பாலுணர்வைக் குறித்த உணர்வும் உங்களுக்கு அதிகமாகும். எந்த சமுதாயத்திற்கு மரணத்தைக் குறித்த உணர்வு இல்லையோ, அதற்குத்தான் பாலுணர்வைக்குறித்த உணர்வும் இருக்காது. இதற்கு அந்த சமுதாயத்தில் பாலுணர்வே இருக்காது என்று அர்த்தமில்லை, ஆனால் சுயநினைவின்றி இருக்கும். அது ஒது இயற்கையானதாக இருக்கும்.
நீங்கள் ஒரு பழையக்கால சமுதாயத்தினரிடம் சென்று, ஒரு பெண்ணின் மார்பகங்களைத் தொட்டு, இது என்ன என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு அவள், உடனடியாக எந்த ஒழுக்க கோட்பாடுகளுடனும் சம்மந்தமில்லாமல், எந்த உடலுணர்வோடும் சம்மந்தமில்லாமல் பாலுணர்வு சம்மந்தப்படாமல், இது குழந்தைக்கு பாலூட்டுவதற்காக என்று சொல்லுவாள்.
ஆக்க சக்தி பாலுணர்வு மையத்தில் இருக்கிறது. பாலுணர்வு மையத்தைப்பற்றி நாம் மிக்க பிரக்ஞையுடன் இருக்கிறோம், நாம் அதைத்தொடர்ந்து காத்துக்கொண்டு, பதட்டத்துடன் இருக்கிறோம். அதனால் உதவுவதற்கு கடினமாகிக்கொண்டேப் போகிறது. நான் பல புதிய முறைகளை உருவாக்கி, நான் பல வித்தியாசமான விஷயங்களைப் பற்றி பல கோணங்களில் பேசவேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு நான் பாலுணர்விலிருந்து மாறுவது குறித்து பேசியிருக்கிறேன், உங்களை ஓய்வாக இருக்கச் செய்யத்தான். உங்களால் பாலுணர்வு மையத்தில் பதட்டமில்லாமல் இருக்க முடிந்தால், உங்களால் பாலுணர்வு மையத்தில் தளர்ந்து இளைப்பாற முடிந்தால், பின்பு சக்தி மேல்நோக்கி வரும்.
தீக்ஷை வழங்கியவர் முதலாவதாக உங்களின் உடல் மாற்றத்திற்கு உதவவேண்டும். அதை மாற்றியாக வேண்டும். ஏனெனில், புதிய அதிசய சம்பவம் உங்கள் உடலுள் நிகழப்போகிறது. வரப்போகும் புதிய வெடிப்புக்கு, திடீர் தாக்குதலுக்கு உங்களுடைய விருந்தாளியாக ஆகப்போகும் புதிய ஆக்கசக்திக்கு, நான் உங்களுடைய உடலைத் தயார் செய்யவேண்டும். உங்களை விருந்து கொடுப்பவராக்க வேண்டும். முழு ஏற்பாட்டையும் மாற்ற வேண்டும்.
நாம் சாதாரணமாக இருக்கும்படி உள்ள ஏற்பாடுகள் போதாது. இப்போது இருப்பது உயிரியல் (Biological) படியான ஏற்பாடுகள். இந்த உடல், அமைப்பு, உடல் வடிவம் எல்லாம் உயிரியலுக்கு ஏற்ப உள்ளது. இதைப் பாலுணர்வின் வாகனமாக பயன்படுத்துகிறார்கள். இந்த முழு முறையும் இனத்தை தொடர்வதற்குத்தான். இயற்கையைப் பொறுத்தவரை, உங்கள் உடலிலிருந்து இதைத்தவிர வேறு எதையும் அது எதிர்பார்க்கவில்லை, அதனால் ஏற்பாடுகள் அதற்கு வகையாக செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது உங்களுக்கு இனத்தைத் தொடர்வதுடன், முழு உயிரியல் முறையை மாற்றி, முழுமையாக உயிரியல் அல்லாத புதிய கோணத்தை உருவாக்க வேண்டும், அது ஆன்மீகம், உடலின் முழு அமைப்பையும் மாற்ற வேண்டும்.
அதனால் குரு உங்களுடைய உடலுடன் நிறைய வேலை செய்யவேண்டும், பின்பு உங்கள் உணர்வுகளுடன், இப்போது உங்களுடைய புத்தியுடனும். இதுதான் சுயநினைவு, வழக்கமான பாகம். தீக்ஷை வழங்குவது, ஆசான் வெளிப்புற பாகத்திலும் ஏதோ செய்வார். ஆனால் உள்ளார்ந்த பாகம் இருக்கிறது. அது இரகசியமாக மறைந்திருக்கும் பாகம். அதை மனதினால் எண்ணத்தை தெரிவிப்பதின் மூலமும் (Telepathic Messages), உங்கள் கனவுகளின் மூலமும், மனத்தோற்றத்தின் (Vision) மூலமும், இரகசியத் தொடர்புகள் மூலமும் வேலை செய்யப்படுகிறது. உங்களுடைய புத்தியை நேரடியாக சமாதானப்படுத்தலாம். அதனிடம் நேரடியாக பேசி சமாதானப்படுத்தலாம். ஆனால் உணர்வுகளுடன் அது முடியாது. இதில் ஒருவர் மறைமுகமாக வேலை செய்யவேண்டும். உங்களுடைய உணர்வுகள் மாறி, உருமாற்றம் அடையும் வகையில் ஒருவர் சுற்றுப்புறச் சூழலை அமைக்கவேண்டும்.
ஆனால் இதுவும்கூட வெளிப்புறத்தைச் சேர்ந்ததே. உங்கள் உணர்ச்சிகள்,உங்கள் புத்தி, உங்கள் உடல், இவையெல்லாம் உங்கள் உடலின் வெளிப்புற சுயம் (Outer Self) நீங்கள் உள்ளே தங்கியிருங்கள், உங்கள் மெய்யிருப்பு (Being) ஆழமாக உள்ளே இருக்கிறது. அந்த மெய்யிருப்பையும் உருமாற்றம் செய்யவேண்டும். அதை, மனதினால் எண்ணத்தை தெரிவிப்பதின் மூலமும், மறைவான இரகசியமான பாதைகளின் மூலமும் செய்யப்படுகிறது. உங்கள் கனவை பயன்படுத்திக் கொள்ளலாம் – அவைகள் பயன்படுத்தப்படுகிறது. இது சாதாரணமாக நடக்கிறது, உங்களுக்கு உங்கள் கனவைப்பற்றி தெரியாமலிருக்கலாம், ஆனால் உங்கள் குருவிற்குத் தெரியும். நீங்கள் விழித்துக்கொண்டிருக்கும் நிலையைவிட, அவருக்கு உங்கள் கனவுகளின் மீதுதான் ஆர்வம். உங்களுடைய, பெயருக்கு விழித்துக் கொண்டிருக்கும் உணர்வு பொய்யானது. அது உண்மையானது அல்ல, அதன் மூலம் நீங்கள் வெளிப்படுத்தப்படவில்லை, அதில் நடிப்பு மட்டும்தான் இருக்கிறது, உங்களுடைய கனவு அதிக உண்மையானது.
ஃபிராய்டு (Freud) க்கு சில இரசவாத (Alchemy) பாரம்பரியத்திலிருந்து ஏதோ தெரிய வந்ததால், அதைக் கனவுகளை ஆராய பயன்படுத்தினார். ஏதோ எந்த இரகசிய வட்டத்திலிருந்தோ வெளியாகியிருக்கும். அவர் அதை பயன்படுத்தி ஒரு முழு அறிவியலை உருவாக்கினார். நிச்சயமாக அவரால் உங்களுடைய கனவுகளை நேரடியாகத் தெரிந்து கொள்ளமுடியாது; அவர் உங்கள் கனவைப்பற்றி வெளியிடச் செய்வார், கனவை காட்டச் சொல்வார், கனவை ஞாபகம் வைத்திருக்கச் சொல்வார், கனவைப்பற்றி பேசச் சொல்வார். பின்னர் அவரால் அதை ஆராய முடியும். ஆனால் தீக்ஷை வழங்குவதில், குருவுக்கு உங்களுடைய கனவுகளைத் தெரியும். அவரால் உங்களுடைய கனவுக்குள் போகமுடியும். உங்களுடைய கனவுகளுக்கு சாட்சியாக இருக்கமுடியும். பின்பு உங்களை பற்றிய இரகசியங்கள், உங்களுக்கு தெரிந்திருப்பதை விட அதிகமாக அவருக்குத்தெரியும்.
எட்கர் கையிஸ் (Edgar Cayce) தன்னைத்தானே தன் வயப்படுத்திக்கொண்டு மயக்கத்திற்கு போய்விட்டப்பிறகு, அந்த மயக்கத்திலேயே அவரிடம் உங்களுடைய கனவைப்பற்றி நீங்கள் ஏதோ சொல்ல வேண்டும். அதில் விட்டுப்போனதிருக்கும். அவர் தன்னுடைய மயக்கத்திலேயே உங்களுடைய கனவுக்குள் சென்று கனவின் முழு படத்தையும் அவரால் பார்க்க முடியும். பின்னர் அவர் “இதுவெல்லாம்தான் விட்டுப்போனவைகள், இதுதான் உங்களுடைய முழுக் கனவு”. என்று சொல்லுவார். யாரும் தங்களுடைய முழுக் கனவைக்கூட காலையில் நினைவுவைத்திருக்க முடியாது என்று ஆச்சரியப்படுவீர்கள் – அது சாத்தியமில்லாத ஒன்று.
அவருடைய சுயநினைவிலுள்ள மனம் திரும்பியதும், அது நடந்தது எல்லா வற்றையும் திரித்துக்கூறும், ஏனெனில் செய்தி நினைவற்ற நிலையிலிருந்து வந்தது. இது நினைவுள்ள மனதிற்கு எதிரானது. நினைவுள்ள மனம், திரித்துக்கூறும், வேறுவிதமாக விளக்கும். இது சிலவற்றை விட்டுவிட்டதைப் போலவும், சிலவற்றை சேர்த்ததைப் போலவும் ஆக்குகிறது. பின்னர் முழுவதும் அர்த்தமற்றதாகிவிடுகிறது. நீங்கள் இது கனவுதான் என்கிறீர்கள் – அர்த்தமற்றது. எந்த கனவும் அர்த்தமற்றது அல்ல; நீங்கள் விழித்திருக்கும் நேரங்களைவிட கனவுகளுக்கு ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கின்றன.
அதனால் குரு உங்கள் கனவுகளுடனும் வேலை செய்ய வேண்டும். அவர் உங்கள் கனவுகளுடன் வேலை செய்தாலேத்தவிர அவரால் உங்களுடைய விழிப்புக்கு வேலை செய்யமுடியாது, ஏனெனில் கனவுகளை உருவாக்குவதற்கு மூலாதாரமாக ஒன்று உங்களுள் இருப்பதுதான் மொத்த விஷயமே. அது அழிக்கப்பட வேண்டும், அது உங்களுடைய உணர்விலிருந்து (Consciousness) பிடுங்கி எறியப்பட வேண்டும். கனவுக்காணும் இயந்திர அமைப்பை முற்றிலும் உடைக்கவேண்டும். முற்றிலும் பிடுங்கி எறியவேண்டும். அதை முழுமையாக பிடுங்கி எறிந்தவுடன், முதலில் நீங்கள் கனவுகாண்பதை இழந்துவிட்டதாக உணர்வீர்கள். பின்பு நீங்கள் உறக்கத்தை இழந்துவிட்டதாக உணர்வீர்கள். நீங்கள் உறங்குவீர்கள், ஆனால் ஏதோ ஒன்று விழிப்புடன் இருந்துகொண்டிருக்கும். உடல் காலையில் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து நினைவுடன் இருந்தது உங்களுக்கு தெரியும்.
கனவு காண்பது தொலைந்துவிட்டால் உறக்கமும் தொலைந்துவிடும்.
கனவு காண்பது உறக்கத்திற்கு நிரந்தரமாக உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். உங்களால் கனவுகள் இல்லாமல் உறங்கமுடியாது, கனவுகள் உங்கள் உறக்கம் தொடர்வதற்கு உதவுகிறது. உதாரணத்திற்கு, நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு பசித்தால், பின்பு உறக்கம் கலைந்து விடும். உடல் அதை கலைத்துவிடும், “போய் எதையாவது சாப்பிடு!” என்று சொல்லும். உங்களுக்கு தாகம் எடுத்தால், உடல் “போய் எதையாவது குடி” என்று சொல்லும். ஆனால் கனவின் அமைப்பு அதற்கு முழுமையாக உதவும்; அது “சரி” என்று சொல்லிவிட்டு கனவின் அமைப்பு ஒரு கனவை உருவாக்கும். நீங்கள் கனவில் தண்ணீரைக் குடிப்பீர்கள் – பின்பு தூக்கத்தை கலைப்பதற்கான அவசியம் இல்லை, உங்களுக்கு தேவையானதை நீங்கள் எடுத்துக்கொண்டுவிட்டீர்கள். கனவு ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றை கொடுத்துவிட்டது. இப்போது நீங்கள் உறக்கத்தை தொடரலாம்.
உங்களுடைய மணி அடித்து எழுப்பும் கடிகாரம், மணி அடிக்கிறது, ஐந்து மணி ஆகிவிட்டது. நீங்கள் எழுந்திருக்க வேண்டும். நீங்கள் கோவிலில் இருப்பது போலவும், அங்கு மணி அடிப்பது போலவும் கனவு அமைப்பு, ஒரு கனவை உருவாக்கும். வெளியில் அடித்துக்கொண்டிருக்கும் மணியை கனவின் ஒரு பாகமாக மாற்றிவிடும். இப்போது மணி கோவிலில் அடித்துக்கொண்டிருக்கிறது. இப்போது எழுந்திருக்கவேண்டாம், நீங்கள் உறக்கத்தை தொடரலாம்.
நீங்கள் உங்களுடைய உறக்கத்தை தொடர கனவு உதவுகிறது. இல்லாவிட்டால் உங்களால் உறங்கமுடியாது; பல சமயங்களில் உறக்கம் கலைந்துவிடும். ஏனெனில் உடலால் தாங்கிக்கொள்ள முடியாதவகையில் நிறைய விஷயங்கள் வெளியில் நடந்துக்கொண்டிருக்கும். ஒரே ஒரு கொசுக்கூட உங்கள் உறக்கத்தை கலைத்துவிடும். ஆனால் கனவு அங்கேயும் உங்களுக்கு உதவலாம். அது ஒரு கனவை உருவாக்கும். அதில் கொசுவின் ரீங்காரம் ஒரு இசையாக இருக்கும், பின்பு நீங்கள் உறக்கத்தைத் தொடர்ந்து, கனவைக் காணலாம்.
அதனால் இந்த கனவுக்காணும் உணர்வின் (Dreaming Conscious) முழு இயந்திர அமைப்பையும், முழுவதும் பிடுங்கி எறியவேண்டும், இதற்காக குரு வேலை செய்யவேண்டும். இந்த கனவு காணும் இயந்திர அமைப்பை முழுவதுமாக அழித்தால்தான், உள்ளார்ந்து இருக்கும் கதவுகள் திறக்கும். அப்போதுதான் அவர் நேரிடையாக உரையாடலாம். இப்போது எந்த மொழியும் தேவையில்லை, எந்த வார்த்தைகளும் தேவையில்லை, அவர் நேரிடையாக உரையாடலாம். எப்போது வார்த்தைகள் இல்லாத நேரடித்தொடர்பு இருக்கிறதோ, அப்போதுதான் உண்மையை வெளிப்படுத்த முடியும். இல்லாவிட்டால் முடியாது. அதனால் அதிகப்பட்சமான, மறைவான பாகம் உங்களுடைய கனவு காணும் உணர்வுடன் இருக்கிறது – இதை மாற்றவேண்டும்.
ஏதாவது வெளியாகலாம்......... இப்படிப்பட்ட சம்பவம் நிறைய முறைகள் நடந்திருக்கிறது. இரகசிய உலகத்திலிருந்து வெளியான ஒரே ஒரு விஷயத்தை வைத்து, அறிவியல்கள் இருக்கிறது. நீங்கள் அதை சுற்றி அறிவியல் உருவாக்கலாம். ஆனால் அது பொய்யாக இருக்கப்போகிறது, எப்போதும் முழுமையாக இருக்காது. ஃபிராய்டின் ஆராய்ச்சி முழுமையாக முடியாது. ஏனெனில் அவருக்கு முழுமையாகத் தெரியாது. அவர் எதேச்சையாக, அவர் எங்கேயோ தடுமாறியதில், அவருக்கு ஒரு விஷயம் கிடைத்திருக்கிறது. அவர் அதை முழுமையாக்கினார், ஆனால் அந்த விஷயமே ஒரு பாகம்தான். முழுவதும் என்ன என்பது தெரியாது.
கனவுக்காணும் உணர்வு சுத்தமாகப்போய்விட்டால், பின்பு உண்மையான, மறைவான இரகசியங்களின் வேலை ஆரம்பிக்கிறது. குரு உங்களுடைய கைகளை எடுத்து அவருடைய கையில் வைத்துக்கொண்டு, எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம் – எந்த உண்மையானதற்கும், இந்த பிரபஞ்சத்தின் எந்த ஆழத்திற்கும், ஆனால் அதைப்பற்றி பேசமுடியாது, அதைப்பற்றி கலந்துரையாட முடியாது. குருக்கள் தங்களுடைய சிஷ்யர்களை சொர்க்கம், நரகம், இப்பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளுக்கு, எல்லா கிரகங்களுக்கும், உயர்ந்த பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அது உங்களுடைய கனவுக்காணும் உணர்வு போனப்பிறகுதான் நடக்கமுடியும். உங்களால் எதையும் எடுத்து, மற்றவைகளின் மீது காட்ட இயலாது, நீங்கள் ஒரு திரையாக வேண்டும், பின்பு இந்த உலகம் உங்களுக்கு வித்தியாசமாக இருக்கும், ஏனெனில் பின்பு நீங்கள் வித்தியாசமாக இருப்பீர்கள். இந்த உலகம் அப்படியேத்தான் இருக்கும், ஆனால் நீங்கள் அதன்மேல் எந்த எண்ணத்தையும் எடுத்துக்காட்ட மாட்டீர்கள்.
இது போன்ற இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள்தான் உள்ளே போகவேண்டும். உங்களுக்கு இதைப்பற்றி தகவல்கள் கொடுக்க இயலாது. அவைகளை உங்களுக்குத் தெரிய செய்யமுடியாது, என்னால் உதவமுடியும், என்னால் உங்களுடன் ஒத்துழைத்து வேலை செய்ய முடியும், என்னால் உள்ளார்ந்திருக்கும் கோணங்களுக்கு தள்ளமுடியும் – ஆனால் என்னால் உங்களுக்குத் தெரிவிக்கமுடியாது. அனுமதி இருப்பதற்கு அதிகப்படியாகவே இப்போது நான் தெரிவித்துக்கொண்டிருக்கிறேன். நான் அனுமதி இல்லாதவைகளைப் பற்றியும் உங்களுக்குத் தெரிவிப்பேன். ஏனெனில் அதிலிருக்கும் முக்கியமான விஷயங்களை விட்டு விடுவேன். அதை நீங்களாகவே வளர்க்கமுடியாது.
எப்போதும் ஏதாவது குறையும் எனக்கல்ல – உங்களுக்கு. உங்களுக்கு இந்த அபூர்வமான சம்பவம் நடக்கும்வரை, எப்போதும் ஏதோ ஒன்று குறையும். பிறகு எல்லாம் முழுமையாகிவிடும், எல்லாம் பிணைக்கப்பட்டு விடும். அதனால் நான் பல தொடர்புகளைப் பற்றி பேசுகிறேன், ஆனால் எப்போதும் சிலத்தொடர்புகள் விட்டுப் போயிருக்கும், அதை உங்களுடைய முயற்சியில்தான் நிரப்ப முடியும். நான் விட்டுப்போன தொடர்புகளை பற்றியும் பேசுவதின் காரணம், நீங்கள் இதனால் தூண்டப்பட்டு கடுமையாக உழைப்பீர்கள் என்பதற்காகத்தான். நீங்கள் அதிகமாக உழைக்கும் அளவிற்கு, நான் விட்டுப்போன தொடர்புகளைப்பற்றி அதிகமாகப் பேசுவேன். சிறப்பு தொடர்புகளை பற்றி பேசமுடியாது. அதை அனுபவிக்க மட்டும்தான் முடியும். ஆனால் நீங்கள் அந்த அனுபவத்தை பெறுவதற்கு, நான் உதவ தயாராக இருக்கிறேன், அந்த விஷயங்களின் இயற்கையான அமைப்பு, அதை அனுபவிக்க மட்டும்தான் முடியும் என்ற வகையில் இருக்கிறது.
உங்கள் பாகத்தை செய்யுங்கள். உங்கள் பாகத்தை செய்வதற்கு உங்களுக்கு திறன் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எப்போதெல்லாம் உங்களால் சரணடைய முடிகிறதோ அப்போதெல்லாம் குரு வருவார். குரு இருக்கிறார். குருக்கள் எப்போதும் இப்பிரபஞ்சத்தில் இருக்கிறார்கள். இவ்வுலகத்தில் எப்போதும் குருவிற்கு குறைச்சல் இருந்ததில்லை. அதற்கு எப்போதும் சிஷ்யர்கள் தான் குறைவாக இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒருவர் சரணடைந்தாலேத் தவிர எந்த குருவாலும் ஒன்றும் செய்யமுடியாது. அதனால் எப்போதெல்லாம் நீங்கள் சரணடைய முடிந்த ஒரு வினாடி வருகிறதோ, அப்போதெல்லாம் அதை தொலைத்து விடாதீர்கள். அந்த வினாடியில் உங்களுக்கு யாரும் கிடைக்கவில்லையென்றாலும் பின்பு பிரபஞ்சத்திடமே சரணடைந்து விடுங்கள். ஆனால் எப்போதெல்லாம் சரணடையக்கூடிய வினாடி வருகிறதோ, அதை விட்டுவிடாதீர்கள். ஏனெனில் அப்போது நீங்கள் எல்லைக்கோட்டில், உறக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடையில் இருக்கிறீர்கள். உடனே சரணடையுங்கள்!
உங்களால் யாரையாவது கண்டுபிடிக்க முடிந்தால் நல்லது. உங்களால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால், பிரபஞ்சத்திடமே சரணடையுங்கள். அப்போது குரு தோன்றுவார், அவர் வருவார். எங்கெல்லாம் சரணடைவது இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை நோக்கி குரு அவசரமாக வருவார். நீங்கள் ஒன்றும் இல்லாமல் ஆவீர்கள், நீங்கள் காலியாய் இருப்பீர்கள் – ஆன்மீக ரீதியில் நீங்கள் காலியாக ஆவீர்கள் – பின்பு ஆன்மீக பலம் உங்களை நோக்கி வேகமாக வந்து உங்களை நிரப்பும். அதனால் எப்போதும் நினைவிருக்கட்டும், எப்போதெல்லாம் நீங்கள் சரணடைய வேண்டும்போல் உணருகிறீர்களோ, அப்போதெல்லாம் அந்த வினாடியை விட்டுவிடாதீர்கள். அது திரும்பவும் வராமல் இருக்கலாம். அல்லது அது பல நூற்றாண்டுகள் கழித்து வரலாம். இதில் வாழ்க்கைகள் தேவையில்லாமல் வீணாகும். எப்போதெல்லாம் அந்த வினாடி வருகிறதோ அப்போது சரணடையுங்கள்.
ஆனால் மனதிடம் ஒரு விஷமம் இருக்கிறது. நீங்கள் கோபமடைந்தால், அந்த நிமிடமே கோபமடைவீர்கள், ஆனால் நீங்கள் சரணடைய வேண்டும்போல் உணரும்போது, நீங்கள் அதைப்பற்றி யோசிப்பீர்கள், நீங்கள் அதைப்பற்றி திட்டம் தீட்டுவீர்கள், நீங்கள் காத்திருப்பீர்கள். மனம் எப்போதும் ஏதோ ஒரு வினாடியில்தான் எல்லையில் இருக்கும். அதனால் உடனடியாக தெய்வத்திடமோ, எதனிடமோ சரணடைந்துவிடுங்கள் – அது ஒரு மரமாகக்கூட இருக்கலாம், ஏனெனில் உண்மையானது நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பதில்லை. உண்மையானது, உங்கள் சரணடைதல் தான். ஒரு மரத்திடம் சரணடைந்தால் மரம் உங்களுக்கு ஆசானாகிவிடும். வேதநூல்களால் வெளிப்படுத்தமுடியாத பல விஷயங்களைப்பற்றி அந்த மரம் உங்களுக்கு வெளிப்படுத்தும். ஒரு கல்லிடம் சரணடைந்தால், கல் கடவுளாகிவிடும். கடவுள் வெளிப்படுத்தாத பல விஷயங்களை அந்த கல் வெளிப்படுத்தும். உண்மையானது சரணடைதல் தான்.
எப்போதெல்லாம் சரணடைதல் இருக்கிறதோ, அப்போதெல்லாம் ஒருவர் தோன்றி உங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வார். தீக்ஷை வழங்குதல் என்றால் இது தான்.
*************************************************************************************************************
ஒரு ஜன்னலை திறந்து விடுங்கள்
அன்புள்ள ஓஷோ,
பல்வேறுபட்ட குருக்களின் குழுக்கள் உடலோடும், உடல் இல்லாமலும் இருப்பதை பற்றி பிரம்மஞானிகள் பேசியிருக்கிறார்கள். அதில் எத்தனை குழுக்கள் இப்போது இருக்கிறது? இதுபோன்ற இரகசிய குழுக்கள் என்றால் என்ன? அவர்கள் எந்த விதத்தில் அவர்களின் செல்வாக்கை தேடலில் இருப்பவர்களுக்கும், உலகத்தின் நடவடிக்கைகளிலும் பயன்படுத்துகிறார்கள்? இம்மாதிரியான இரகசிய குருக்களின் குழுக்களுடன் உங்களுடைய தொடர்பை பற்றி சொல்லுங்கள்.
ஆன்மீக அறிவு (Knowledge) இருப்பதற்கு பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதில் முதல் கஷ்டம், அதை போதிய அளவிற்கு வெளிப்படுத்தமுடியாது. அதனால் அதைப்பற்றி யாருக்காவது தெரிய வந்தால்கூட, அவரால் அதை துல்லியமாக வெளிப்படுத்த முடியாது. என்ன தெரிந்திருக்கிறதோ அதை சுலபமாக பிறரிடம் மாற்றிக் கொடுக்க முடியாது. ஒருவருக்கு ஏதோ ஒன்றைத் தெரியும், அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அந்த அறிவை எடுத்து சொல்ல முடியாது. உங்களுக்கு தெரிந்து கொள்ளவேண்டும் என்பதினாலும், அதை சொல்லக்கூடிய திறன் ஒருவரிடம் இருக்கிறது என்பதினாலும், அதை சொல்ல முடியும் என்று அர்த்தம் கிடையாது.
ஆன்மீக அறிவு இயல்பானது, நீங்கள் அதை வெளிப்படுத்த முயற்சிக்கும்போது, உங்களால் அதை வெளிப்படுத்த முடியாது என்பதை உணர்வீர்கள். அதனால் அதை வெளிப்படுத்துவதற்கும், சொல்வதற்கும் இரகசிய குழுக்கள் (ஞான அறிவு பெற்றவர்களால் மட்டுமே தெரிந்துக்கொள்ளக்கூடிய, உடலோடும் உடலில்லாமலும் இருக்கும் குழு) தேவைப்படுகிறது.
ஒரு இரகசிய குழு என்பது ஒரு குறிப்பிட்ட வகையான விஷயத்தை கிரகித்துக்கொள்ள பிரத்யோகமாக பயிற்சிப்பெற்ற ஒரு குழு. இதை ஒற்றுமையுடைய ஒன்றுடன் எடுத்துப்பார்க்கலாம்: ஐன்ஸ்டின் (Einstein) தான் எடுத்துச்சொல்வதற்கு இவ்வுலகத்தில் அரை டஜன் மக்களுக்கு மேல் இல்லை என்ற உண்மையை அவர் பலமுறை குறிப்பிட்டுள்ளார். அவர் கணித அறிவு பற்றி பேசுகிறார், ஆன்மீக அறிவு பற்றி அல்ல, ஆனால் அவர் சொன்னது உண்மை. ஐன்ஸ்டின் சுலபமாக பேசுவதற்கு அரை டஜன் மக்கள்கூட இருக்கவில்லை. சாதாரண கணித குறிகளால் விளக்க முடியாத அளவிற்கு ஐன்ஸ்டின் கணிதத்தின் சிகரங்களை அடைந்தார்.
அப்படியே ஐன்ஸ்டின், அவருடைய அறிவைத் தெரிவிக்க முயற்சித்தாலும், நீங்கள் கேட்பீர்கள். ஆனால் உங்களுக்கு புரியாது, ஏனெனில் வெறுமனே கேட்பது புரிந்துக்கொள்ளுதல் ஆகாது. அதை உங்களால் புரிந்துகொள்ள முடியாதபோது, அதை தவறாக புரிந்து கொள்ள எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது, ஏனெனில் புரிந்துகொள்வதிலிருந்து புரிந்துகொள்ளமுடியாது என்பதற்கு நடுவில் தவறாக புரிந்துகொள்ளுதல் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. யாரும் தனக்கு புரியவில்லை என்பதை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. புரிந்துகொள்ளுதல் இல்லாதபோது, புரிந்துகொள்ளவில்லை என்பது அர்த்தமில்லை. நூற்றில் தொன்னூற்றி ஒன்பது பேருக்கு அது தவறாக புரிந்துக்கொள்ளுதல் என்று அர்த்தம். ஏனெனில் யாரும் தனக்குப்புரியவில்லையென்று சொல்லத் தயாராக இல்லை. எல்லோருமே புரிந்துக்கொண்டதாக சொல்வார்கள், பின்பு தவறாக புரிந்துகொண்டது தொடரும்.
கணிதம் என்பது ஏதோ ஞான அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் தெரியக்கூடிய இரகசிய அறிவு அல்ல. மேலும் அது வெளிப்படுத்தமுடியாத வகையைச் சார்ந்ததும் அல்ல. கணிதம் ஐயாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதில் பல்லாயிரக் கணக்கான மக்களின் மனங்களுக்கு பயிற்சி இருக்கிறது. உலகில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களும் இதை கற்பிக்கிறார்கள், ஒவ்வொரு தொடக்கப்பள்ளியிலும் கற்றுத்தருகிறார்கள். இதற்கு இவ்வளவு பயிற்சி இருக்கிறது, இதற்கு இவ்வளவு அறிவு இருக்கிறது, பல பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறையினர் இதை கற்பிக்கிறார்கள். ஆனாலும் ஐன்ஸ்டீன் “எனக்கு தெரிந்ததை சொல்ல ஆறுபேர்தான் இருக்கிறார்கள்” என்று சொல்கிறார். இதை உங்களால் புரிந்துக்கொள்ள முடிந்தால், பின்பு ஆன்மீக அனுபவங்களை சொல்வதின் கடினத்தை உங்களால் புரிந்துக்கொள்ள முடியும்.
ஒரு இரகசிய குழு (Esoteric Group) என்பது ஒரு குறிப்பிட்ட ஆசிரியருக்காக, பிரத்யோக பயிற்சி எடுக்கப்பட்ட ஒரு குழுவும் கூட, ஏனெனில் இது அபூர்வமான சம்பவம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தான் ஒரு புத்தர் நிகழ்கிறார், அப்படி புத்தரைப்போல் ஒரு நிகழ்வு ஏற்பட்டால், எப்படி அவரால் மற்றவர்களுக்கு சொல்லமுடியும்? புத்தர் அங்கே இருப்பார், உலகம் அங்கே இருக்கும், ஆனால் இதில் அர்த்தம் இருக்காது. புத்தரால் நேரிடையாக சொல்லமுடியாது, அதனால் ஒரு இரகசிய குழு, ஒரு உள்ளார்ந்த குழுவிற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. புத்தருக்கும், இவ்வுலகத்திற்கும் நடுவில் தரகராக செயல்பட ஒரு குழுவிற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பிரத்யோக குழு புத்தரை புரிந்துகொண்டு, பின்னர் அவரை இவ்வுலகத்திற்கு விளக்க பிரத்யோக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏனெனில் புத்தருக்கும், இவ்வுலகத்திற்கும், நிறைய இடைவெளி இருப்பதினால் புத்தர் புரிந்துகொள்ளப்படமாட்டார்.
இங்கே நான் இயேசுவைப்பற்றி குறிப்பிடுவது அர்த்தமுள்ளதாக இருக்கும். இதுபோன்ற இரகசிய குழுவில்லாததால்தான் இயேசு கஷ்டப்பட்டார். புத்தர் கஷ்டப்படவில்லை, ஏனெனில் அவருக்கு இரகசியக்குழு இருந்தது. சாதாரண மக்களால் இயேசுவை புரிந்துக்கொள்ள முடியாததால் அவர் சிலுவையில் அறையப்பட்டார். அவர்கள் அவரை தவறாக புரிந்துகொண்டனர் – இது நடக்கத்தான் செய்யும், ஏனெனில் இயேசுவுக்கும் மக்களுக்கும் இடையே இரகசியக்குழு இல்லை. இவர்களுக்கிடையே தரகராக இருக்கக்கூடியவர்கள் இல்லை, அதனால் இயேசு கஷ்டப்பட்டார். இந்தியாவில் புத்தரும் கஷ்டப்படவில்லை, மகாவீரரும் கஷ்டப்பட வில்லை; யாரும் சிலுவையில் அறையப்படவில்லை. இயேசுவும் இவர்கள் அளவிற்கு திறன் வாய்ந்தவர்தான், ஆனால் அவரை சிலுவையில் அறைந்தார்கள். ஏனெனில் இரகசிய குழு இருக்கவில்லை. தவறாக புரிந்துக்கொள்வதை தவிர்க்கமுடியாது. இயேசு என்னவெல்லாம் சொன்னாரோ, அவையெல்லாம் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது.
நிச்சயமாக, இயேசுவை பின்பற்றுபவர்கள் இருந்தார்கள், ஆனால் பொதுமக்கள்தான் பின்பற்றினார்கள். அவருடைய சிஷ்யர்கள் அனைவரும் பொதுமக்களிடமிருந்துதான் வந்தார்கள். அவர்களுக்கு இரகசிய பயிற்சி இல்லை. லியூக் (Luke) என்பவரும் தாமஸ் என்பவரும் ஒரு சாதாரண கல்வியறிவு இல்லாத சமுதாயத்தின் ஒரு பாகம், சிறு குடியானவர்கள். இவர்கள் இயேசுவை நேசித்தார்கள், அவரை உணர்ந்தார்கள், ஆனால் அவர்களாலும் அவரை புரிந்துக்கொள்ள முடியவில்லை, அதனால் அவரை பலமுறை குழந்தைத்தனமான கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு சில சிஷ்யர்கள் அவரை “கடவுளின் இராஜ்ஜியத்தில் உங்களுடைய இடம் எதுவாக இருக்கும்? நீங்கள் கடவுள் அருகில் இருப்பீர்களா – நாங்கள் எங்கே நிற்போம்? எங்களுடைய இடம் எதுவாக இருக்கும்?” என்று கேட்டிருக்கிறார்கள். அவர் கடவுளின் இராஜ்ஜியம் என்பதின் மூலம் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் பொதுமக்கள்.
ஒரு இரகசிய குழுவை திடீரென்று உருவாக்க முடியாது. புத்தர் திடீரென்று நிகழ்கிறார். ஆனால் இந்தக்குழுவை திடீரென்று உருவாக்கமுடியாது. அதனால் எந்த நாடுகளெல்லாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஆன்மீகத்தில் ஈடுபட்டு உள்ளதோ, அவைகளுக்கு இரகசிய குழுக்கள் தொடர்ச்சியாக பாரம்பரியமாக இருக்கிறது. எப்போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறதோ, அப்போது இந்த குழு வேலை செய்யத் தொடங்கும். அசோகர் உருவாக்கிய குழு இன்னும் இருக்கிறது – ஒன்பது பேர் கொண்ட ஒரு குழு. எப்போதெல்லாம் ஒருவர் அந்த குழுவிலிருந்து மரணம் அடைகிறாரோ அப்போதெல்லாம் அவர் இடத்திற்கு இன்னொருவர் வருவதால், அந்த குழு தொடர்கிறது. எப்போதெல்லாம் ஒருவர் மரணம் அடைகிறாரோ அப்போதெல்லாம் மற்ற எட்டுபேர்களும் சேர்ந்து ஒருவரை அவர் இடத்திற்கு தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த புதிய நபர் மீதியுள்ள எட்டுபேரால் பயிற்சியளிக்கப்படுகிறார், இவ்வாறு பயிற்சி தொடர்கிறது. அதிலிருக்கும் நபர்கள் மாறுகிறார்கள், ஆனால் குழு தொடர்ந்திருக்கிறது. இன்று வரை அந்தக்குழு இருக்கிறது, ஏனெனில் புத்தரின் அவதாரம் எதிர்பார்க்கப்படுகிறது. எந்த நேரத்திலும் அவர் வரலாம். புத்தர் இங்கு இருக்கும்போது உங்களால் திடீரென்று குழுவை உருவாக்க முடியாது. ஏனெனில் மறைவாக செயல்படும் நுண்திறன் வாய்ந்தவர்களை, நீண்ட பயிற்சியின் மூலமும், நல்ல பயிற்சியின் மூலமும் உருவாக்கப்படுகிறார்கள். இது திடீரென்று நடக்காது.
அதனால் பலமுறைகள் குழுக்கள் ஆரம்பிக்கப்படும். சில சமயங்களில் அது தொடரும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்துவிடும். சில சமயங்களில் அவைகள் போய்க்கொண்டிருக்கும். பின்பு காணாமல் போய்விடும், ஏனெனில் இதில் நிறைய கஷ்டங்கள் இருக்கின்றன. பல கஷ்டங்கள் இருக்கிறது. அசோகர் உருவாக்கிய ஒன்பது பேர் கொண்ட இரகசியக்குழு இன்னும் தொடர்கிறது என்றால், அதில் அதை தொடரவைக்க நிறைய நிபந்தனைகள் உதவியாக இருக்கின்றன. ஒன்று, அது கூட்டத்துடன் நேரடியாக தொடர்பு கொள்வதில்லை. அதற்கு இன்னும் வேறு குழுக்கள் நடுவில் இருக்கின்றன. அது எப்போதும் தெரியாமல், மறைந்து அதனுடைய இருப்பிடத்தை உங்களால் தெரிந்துக்கொள்ள முடியாதவாறு தொடர்ந்து இருக்கிறது. அந்தக் குழுவிலிருந்து ஒருவருக்கு தீக்ஷை வழங்கப்பட்டதும், தீக்ஷை வழங்கிய வினாடியிலிருந்து அவர் உங்கள் உலகத்திலிருந்து மறைந்து விடுகிறார் – முழுமையாக மறைந்து விடுகிறார். பின்னர் உங்களால் அவரைப்பற்றி ஒன்றுமே தெரிந்துக்கொள்ள முடியாது. பின்னர் அந்தக்குழு பெயர் வெளியிடாமல் தொடரும்.
இந்தக்குழுவிடம் நிறைய சாவிகளும், நிறைய முறைகளும் இருக்கின்றன. அந்த சாவிகளின் மூலமும், முறைகளின் மூலமும் வேலை செய்துக்கொண்டேயிருக்கிறது. இந்த ஒருக்குழுவின் அங்கத்தினர்கள் உடலுடன், நம்மைப் போலவே உயிருடன் இருக்கிறார்கள். ஒருமுறை இந்தக்குழுவின் அங்கத்தினராக இருந்தவர் மீண்டும் இந்தக்குழுவில் ஒன்பது நபர்களில் ஒருவராக மற்றொரு வாழ்வில் தேர்ந்தெடுக்கப்படமாட்டார். பின்பு அவர் குழுவிற்கும் பொதுமக்களுக்கும் இடையே தொடர்பாக இருப்பார். இதை அந்த ஒன்பது நபர் கொண்ட ஒரு குழுவைச் சுற்றி, இன்னொரு வட்டத்தை உருவாக்குகிறது, இது பெரிய வட்டம். ஏனெனில் அந்தக்குழுவில் நிறையபேர் அங்கத்தினர்களாக இருந்திருப்பார்கள். அவர்களுக்கு புத்தரையும், இரகசிய குழுவின் நுண்திறன் வாய்ந்தவர்களையும் நேரிடையாக தெரியும். அவர்களுக்கு இதில் நிறைய அனுபவம் இருப்பதினால், அவர்கள் கூட்டத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே, அந்தக் குழுவுடன் வேலை செய்யலாம். ஆனால் அவர்கள் அந்தக்குழுவின் அங்கத்தினர்களாக இருக்கமாட்டார்கள். இந்த குழுவில் இருந்த ஒருவர் மறுபடியும் இந்த பூமியில் பிறக்கவில்லை என்றால், அவர் உடல் இல்லாமல் இருக்கிறார் என்றால், அவர் உடல் இல்லாத நிலையிலேயே தொடர்ந்திருக்கிறார் என்றால், அப்போதும் அவர் தன் வேலையை தொடர்கிறார்.
எவ்வளவோ நுண்திறன் கொண்டவர்கள் இந்த உடலுடன் இல்லாமல் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். பிரம்மஞானிகள் இவர்களை குருக்கள் (Masters) என்று அழைக்கிறார்கள். குரு கூத் ஹூமி (Koot Humi) ஐ போல இவைகள் இட்டுக்கட்டிய பெயர்கள், ஆனால் இது தனிப்பட்ட குணத்தை, தனிப்பட்டிருக்கும் ஒன்றை குறிக்கிறது. இவைகள் இட்டுக்கட்டிய பெயர்கள்தான். ஆனால் அது உடலில்லாமல் உதவும் ஒரு ஆன்மாவை குறிக்கிறது.
இது குரு கூத்ஹூமி (Koot Humi) அசோகரின் ஒன்பது பேர் கொண்ட குழுவில் இருந்த, மிகப் பழைய நுண்திறன் வாய்ந்தவர்களில் ஒருவரான இவர், பிரம்மஞானத்தின் முழு இயக்கத்தை உருவாக்கினார். அவர்கள் புத்தரின் அவதாரத்திற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சித்து வந்தார்கள். ஏனெனில் புத்தர் இருபத்தைந்து நூற்றாண்டு களுக்கு பிறகு அவர் மறுபடியும் பிறக்கப் போவதாகவும், அப்போது அவருடைய பெயர் மைத்ரேயா என்று இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். கௌதம புத்தரைப் போல ஞான அறிவுப்பெற்ற ஒருவருக்கு இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு பிறகு யார் ஞான அறிவுப்பெறுவார் என்று தெரிந்துக்கொள்ளும் திறன் இருக்கும். அதனால் புத்தர் முன்கூட்டியே சொன்னார், அதனால் இந்த நிகழ்வுக்காக அசோகரின் ஒன்பது பேர் கொண்ட குழு பல நூற்றாண்டுகளாக வேலை செய்துக்கொண்டிருக்கிறது. இப்போது நேரம் நெருங்கிவிட்டது. அதனால் பிரம்மஞானத்தின் இயக்கம் ஒரு தயாராக்குவதுதான் – இது தோல்வியடைந்தது. இந்த பரிசோதனை தோல்வியடைந்த து, அவர்கள் மூன்று அல்லது நான்கு நபர்களை, மைத்ரேயாவை இறக்குவதற்கு சாதனமாக்குவதற்காக பரிசோதித்து பார்த்தார்கள், ஆனால் பரிசோதனை தோல்வியடைந்தது. இதுவோ, அதுவோ, எதுவோ ஒன்று விட்டுப்போய்விட்டது. அது வெற்றியின் விளிம்பில் இருந்தபோது ஏதோ நடந்துவிட்டது.
கிருஷ்ணமூர்த்தி தயாராக இருந்தார், அவரை ஒரு சாதனமாக ஆக்க, அவர் முற்றிலும் தயாராக இருந்தார். எல்லாமே தயாராகிவிட்டது. மதகுரு நின்று பிரசங்கம் செய்யும் மேடைக்கு, தன்னை சரணடைந்து, காலியாக ஆவதற்கு அவர் வந்துவிட்டார், மைத்ரேயா உள்ளே போகவேண்டிய தருணத்தில், கடைசி வினாடியில் அவர் சரணடைய மறுத்துவிட்டார். அவரைச்சுற்றி இருந்த யாருமே இப்படி நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்க்கவில்லை. இப்படி கிருஷ்ணமூர்த்தி, கடைசிப்படியில் தோல்வியடைந்து, திரும்ப வருவார் என்று சின்ன குறிப்புக்கூட தரவில்லை. அதனால் அந்த சம்பவத்திற்கு பிறகுதான், இவ்வாறு திரும்ப வந்த நிகழ்வுக்குப்பிறகுதான், அவர் தன் வாழ்க்கை முழுவதும், நாற்பது வருடங்களுக்கு அவர் தனித்தன்மையை வலியுறுத்திக்கொண்டிருந்தார்: “தனித்தன்மையுடன் இருங்கள் !”.
இதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்த முழு ஏற்பாடும் ஒருவருடைய தனித்தன்மையை இழக்க செய்வதாக இருந்தது, இல்லாவிட்டால் ஒருவரால் சாதனமாக இருக்கமுடியாது. “நீங்கள் இல்லாததைப்போல் இருக்க வேண்டும்! உங்களை மிஞ்சிய சக்திகளிடம் முழுமையாக சரணடையவேண்டும்” அவர் குதிப்பதற்கு விளிம்பில் இருக்கும்போது அவர் சரணடைய மறுத்துவிட்டார். எல்லாமே தயாராக இருந்தது; ஒரு அடி வைத்திருந்தால் மைத்ரேயா இவ்வுலகத்தில் இருந்திருப்பார்.
ஆனால் கடைசி அடி வைக்கமுடியாமல் போய்விட்டது. அவர் திரும்ப வந்துவிட்டார். அவர் நான், நானேதான் என்றார். அதனால்தான் அவருடைய முழு தத்துவமும் “சரணடையாதீர்கள், பின்பற்றாதீர்கள், நம்பாதீர்கள், சிஷ்யராக இருக்காதீர்கள்” என்றானது. இவையெல்லாம் அதன் விளைவுதான்; இதுவெல்லாம் நியாயப்படுத்துவதும், சமாதானப்படுத்திக் கொள்வதும்தான்.
அவரால் எடுத்து வைக்கமுடியாமல் போன அந்த ஒரு அடியைப்பற்றி தொடர்ச்சியாக நாற்பது வருடங்களுக்கு உழைத்திருக்கிறார். இன்னும் அவர் அதைவிட்டு வெளியே வரவில்லை, வருத்தம் இருக்கிறது, புண் இருக்கிறது. அவரால் கடைசி வினாடியில் சரணடைய முடியவில்லை. அதனால் பிரம்மஞானம், கிருஷ்ணமூர்த்தியிடம் தோல்வியடைந்து, ஒரு இறந்துபோன இயக்கமாகிவிட்டது, ஏனெனில் அந்த இயக்கம் இருந்ததற்கு காரணமே இந்த நிகழ்வை செயல்படுத்துவதற்குதான். அது அர்த்தமற்ற தாகிவிட்டது. வீடு கட்டப்பட்டுவிட்டது, ஆனால் குரு அதில் தங்குவதற்கு வரவில்லை. அதனால் சாதனமாக இருப்பதற்கு கிருஷ்ணமூர்த்தியின் மறுப்புக்கு பின்னர் பிரம்மஞானம் அர்த்தமற்றதாகிவிட்டது. அது இன்னும் பழைய பாதிப்பினால் இயங்குகிறது. ஆனால் எதுவும் கணிசமாக இப்போது இல்லை.
இந்த முழு இயக்கமும் அசோகரின் நுண்திறன் வாய்ந்த ஒன்பது நபர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். பல வழிகளில் அவர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். பேருக்கு இருக்கும் நம்முடைய வரலாற்றுக்கு பின்னால் உங்களால் கற்பனைக்கூட செய்து பார்க்கமுடியாத ஒரு வரலாறு இருக்கிறது. மேலோட்டமாக நமக்கு வரலாறாக தெரிவது உண்மையான சம்பவங்களல்ல, அதற்கு ஆழமான அடிபாகம் உள்ளது. நம்முடைய வரலாறு என்று அழைக்கப்படும், ஆனால் உண்மையில் அம்மாதிரி இல்லாத வரலாற்றுக்குப் பின்னால், நமக்கு தெரியாத ஆழ்ந்த ஒரு வரலாறு தொடர்கிறது.
உதாரணத்திற்கு, நாம் எல்லோரும் ஹிட்லரைப்பற்றி, மற்றும் அவருடைய எல்லா அதிகாரங்களும் கொண்ட அரசு, அவருடைய இயக்கங்கள், ஏதோ செய்யவேண்டும் என்று ஆபத்தை பொருட்படுத்தாமல் நடந்து கொள்வது, என்றெல்லாம் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இதற்குப்பின்னால் ஏதோ மறைந்திருந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஹிட்லர் மற்ற சக்திகளுக்கு ஒரு சாதனமாகத்தான் இருந்தார். நாடகத்தில் அவர் ஒரு உண்மையான நடிகராக இல்லை என்று இப்போது சிலக்குறிப்புகள் கிடைக்கின்றன. அவர் ஒரு கருவியாகத்தான் இருந்தார், அவர் பயன்படுத்தப்பட்டார். வேறு யாரோ ஒருவர் அவர் பின்னால் இருந்தார், வேறு சக்திகள் இயங்கிக்கொண்டிருந்தன. உதாரணத்திற்கு அடால்ஃப் ஹிட்லரின் (Adolf Hitler) கட்சி சின்னமாக ஸ்வஸ்திகா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது பழைய, மிகப்புராதான, ஒரு குறிப்பிட்ட நுண்ணறிவு பயிற்சிப் பள்ளியின் சின்னமாக இருந்தது.
இந்தியாவில் மிக புராதான குழு ஜெயினர்களுடையது. அவர்களுடைய சின்னமும் ஸ்வஸ்திகா தான். ஆனால் ஹிட்லரைப் போன்றது கிடையாது. ஹிட்லரின் ஸ்வஸ்திகா சின்னம், தலைகீழாக இருந்தது. ஜெயினர்களின் ஸ்வஸ்திகா, கடிகாரத்தின் முட்கள் நகரும் திசையில் இருந்தது. ஹிட்லருடையது, கடிகாரத்தின் முட்கள் நகரும் திசைக்கு எதிர்புறமாக இருந்தது. இவ்வாறு எதிர்புறமான ஸ்வஸ்திகா அழிவுக்கான முத்திரை. அவர்கள் மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து சின்னத்தை தேர்ந்தெடுப்பதற்காக தேடினார்கள், ஏனெனில் சின்னம் என்பது வெறும் சின்னமல்ல, உங்களால் ஆழ்ந்த பாரம்பரியத்திலிருந்து சின்னத்தை எடுக்க முடிந்தால், பின்னர் அந்த சின்னம் தொடர்பாகிவிடுகிறது. அதனால் இந்திய ஐரோப்பிய இனத்திலிருந்து புராதான சின்னத்தை கண்டறிவதற்கு நபர்கள் திபெத்திற்கு சென்றார்கள், ஏனெனில் அந்த சின்னத்தை வைத்துக்கொண்டு மறைந்திருப்பவைகளுடன் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்வஸ்திகா தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆனால் தலைகீழாக. இதைக்கண்டறிந்த ஹெசன் ஹாஃப் (Hessen Hoff) என்பவர் அடால்ஃப் ஹிட்லரை அந்த சின்னம் தலைகீழாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி சம்மதிக்க வைத்தார். அவர் இரகசிய குழுவுடன் தொடர்புள்ளவர்களில் ஒருவர், ஆனால் அவர் குழம்பிவிட்டார். அவர் இரண்டு விஷயங்களுக்காகத் தேடினார். முதலில் ஒரு புராதான சின்னத்திற்கு, இரண்டாவதாக ஒரு சின்னம் புதியதாகவும், மாற்றக்கூடிய வகையிலும் இருக்கவேண்டும். இதனால் ஸ்வஸ்திகா தேர்ந்தெடுக்கப்பட்டு அது தலைகீழாக பயன்படுத்தப்பட்டது. இது இதைப்போல் இருந்ததே இல்லை, ஆனால் அதனால் சம்பவங்கள் புதிய வடிவெடுக்க ஆரம்பித்தது.
இது உலகெங்கும் இருக்கும் இரகசிய தொடர்புகளைப்பற்றிய ஞானம் இருப்பவர்களுக்கு இந்த தலைகீழான சின்னத்தினால் ஹிட்லர் தன்னையே அழித்துக்கொள்ளப்போகிறார் என்பது தெரியும். அவர் பைத்தியமாகி, அவர் தற்கொலை செய்துக்கொள்ளத்தூண்டும் சக்திகளுடன் தொடர்பிருக்கும் என்பது தெரியும்.
ஹிட்லரின் தத்துவத்திற்கு முழு எண்ணங்களும் மறைந்திருந்த பள்ளிகளால் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி எவ்வாறு பிரம்மஞானிகளாலும், மறைந்திருக்கும் குழுக்களாலும் பயன்படுத்தப்பட்டாரோ அவ்வாறு இவரையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு குறிப்பிட்ட அளவு வரை, ஒரு குறிப்பிட்ட வினாடிவரை, ஹிட்லர் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக்கொண்டே வந்தார். அவர் வெற்றியடைந்துக் கொண்டேயிருந்தார். தோல்வியே இல்லை. இது எல்லோரும் கவனிக்குமாறு இருந்தது. அவரால் எதிலும் வெற்றிக்காண முடிந்தது, அவரை வீழ்த்த முடியவே முடியாதென்பது போல் தோன்றியது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எல்லாம் தலைகீழாக போக ஆரம்பித்தது. இவ்வாறு ஏன் நடந்தது?
நாசிக் கொள்கைகளுக்கு எதிராக இருந்த சக்திகள் ஹிட்லரை தோற்கடித்தது. ஆனால் அது உண்மையான வரலாறு இல்லை. அது வெளிப்புறத்து சம்பவம். ஹிட்லர் இரகசிய குழுக்களினால் பயன்படுத்தப்பட்டார். இந்த மறைந்திருக்கும் இரகசிய குழு பல நூற்றாண்டுகளாக மனித இனத்திற்கு அவர்கள் நினைத்தவாறு உதவமுடிய வில்லை. அதனால் வேறு வழியில்லாமல் இவ்வாறு முயற்சித்தது. மனித இனம், தங்களைத் தாங்களே பூமியில் அழித்துக்கொள்வதற்கு முன் அவர்களுக்கு உதவியாக வேண்டும் என்று துணிச்சலாக எடுத்த முயற்சி இது. அவர்கள் முனிவர்களின் மூலமும், மக்களின் மூலமும் முயற்சித்துப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கு உற்சாகம் குறைவாகவே இருந்தது. அதனால் அவர்கள் அடால்ஃப் ஹிட்லரின் மூலம், இந்த முழு உலகத்தையும் வென்று, அது அழிவதற்கு முன்னால் குறிப்பிட்ட போதனைகளை மனித இனத்திற்கு கொடுக்கலாம் என்று முயற்சித்தார்கள்.
ஆனால் கிருஷ்ணமூர்த்தியைப் போலவே ஹிட்லரும் கடைசி வினாடியில் தனித்துவமிக்க தனி மனிதனாகிவிட்டார். அவர் கீழே இறங்க ஆரம்பித்தார். இது போர் வரலாறின் அதிசயம். இதுபோல் – எப்போதும் நடந்ததில்லை – ஹிட்லர் எந்த தளபதியிடமிருந்தும் அறிவுரை பெறமாட்டார். அவர் பேசாமல் நகருவார் அல்லது தாக்குவார், ஆனால் எந்த அறிவுரையும் தளபதியிடமிருந்து பெறமாட்டார். அவருடைய பயிற்சிப் பெற்ற மக்களின் அறிவுரைக்கு எதிராகக்கூட அவர் செயல்படுவார். அவர் இஷ்டத்திற்கு முடிவெடுப்பார். ஆனால் அப்படியும் வெற்றி பெறுவார். அதில் பைத்தியக்காரத்தனமான செயல்கள் இருந்தது, அர்த்தமில்லாத செயல்கள் இருந்தது. போர் என்றால் என்ன என்றுத் தெரிந்திருக்கும் எவரும், அதுபோல செயல்பட்டிருக்க மாட்டார்கள், ஆனால் அப்படிப்பட்ட செயல்கள் செய்தும், அவர் மூன்று ஆண்டுகள் வெற்றிப்பெற்றார்.
அவரை சுற்றியிருக்கும் எல்லோருக்கும், அவர் ஏதோ ஒரு மாபெரும் சக்திக்கு சாதனமாக இருக்கிறார் என்பது தெரியும். இதை விளக்கமுடியவில்லை. அவர் எப்போதெல்லாம் ஆணையிடுகிறாரோ, அப்போதெல்லாம் நினைவுள்ள மனதுடன் இருக்க மாட்டார். எப்போதெல்லாம் அவர் ஆணையிடுகிறாரோ அப்போதெல்லாம் அவர் பரவச நிலையில் இருப்பார். அவர் கண்களை மூடிக்கொண்டிருப்பார், அவர் நடுங்க ஆரம்பிப்பார், அவருக்கு மூச்சு வாங்கும், பின்பு அவருடைய குரலும் முற்றிலும் மாறிவிடும். வேறு ஒரு குரல் ஆணையிடும். அந்த ஒரு வினாடியிலிருந்து, அந்த நுனியிலிருந்து அவர் பரவசத்தை அடந்ததேயில்லை. ஏதோ வேலை செய்துக்கொண்டிருந்தத் தொடர்பு விட்டுப்போய்விட்டது.
இப்போதெல்லாம் யாரெல்லாம் அவரைப்பற்றியும், அவர் வாழ்க்கையைப் பற்றியும் படிக்கிறார்களோ அவர்களெல்லாம் நடந்து முடிந்த சம்பவங்களெல்லாம் வெறும் அரசியல் ரீதியானது, மட்டுமல்ல என்பதை உணர்கிறார்கள். அவர், அவராகவே ஒரு அரசியல் பித்து பிடித்தவர் அல்ல, அவர் ஒரு பைத்தியக்காரத்தனமான அரசியல்வாதி அல்ல. ஏனெனில் அவர் என்னவெல்லாம் செய்தாரோ, அதுவெல்லாம் முழுவதும் அரசியலாக இல்லை – அவருடைய முழு அணுகுமுறையும், அவருடன் தொடர்ந்து இருப்பவர்களெல்லாம் அவர் ஒரு பிளவுபட்ட தனி குணத்துடன் இருப்பதாக உணர்ந்திருக்கிறார்கள். சாதாரண நேரங்களில், நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு அவர் சாதாரணமாக இருப்பார். எந்த தந்திரமும் இல்லை; அவர் மிக சாதாரணமாக இருந்தார். ஆனால் அவர் ஆக்ரமிக்கப்பட்டவுடன் அவரை மிஞ்சி சக்திகள் செயல்படும் போதும், அவர் முற்றிலும் வேறுபட்ட ஒரு தனி குணமுடைய வராக இருந்தார்.
இதற்கு பின்னால் யார் இருந்தார்? ஏதோ மறைந்திருக்கும் இரகசியக்குழு இருந்தது, அது எதையோ முயற்சித்தது. எப்போது ஹிட்லர் தனி மனிதனாக ஆனாரோ, அப்போது அவர் ஆட்சியை நழுவவிட்டுவிட்டார். அவருடைய கடைசி நாட்களில் அவர் மிக சாதாரணமாக இருந்தார். இந்த குறிப்பிட்ட வினாடிக்கு பின்பு, அவர் தொடர்பை இழந்தவுடன், அவர் என்ன செய்தாலும் அது அவருக்கு எதிராகப்போனது. இதற்கு முன்னர், அவர் என்ன செய்தாலும் அது அவருக்கு சாதகமாக இருந்தது.
நான் உங்களிடம் பேசிக்கொண்டிருந்த அசோகாவின் ஒன்பது பேர் கொண்ட குழுதான் இதற்கு பின்னரும் இருந்தது. அவர்கள் இந்த உலகத்தையே கைப்பற்ற முயற்சித்தார்கள். மனிதனை பொறுத்தவரை நீங்கள் அப்பாற்பட்டிருக்கும் சக்திகளுடன் இயங்கத்தொடங்கினால், உங்களுக்கே அவைகளைத் தெரியாமலிருக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் வெற்றிப்பெற்றால், வேறு யாரோ வெற்றிப் பெறுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது. நீங்கள் வெற்றி பெற்றவுடன், உங்கள் “நான் என்ற அகந்தை ” பலம் பெறுகிறது, பின்பு உங்கள் “நான் என்ற அகந்தை” பெரும் பலம் பெற்று, நீங்கள் எந்த சக்தியின் சொல்படியும் கேட்காத ஒரு வினாடியும் வரும். இது நிறைய தடவை நடந்திருக்கிறது.
இந்த இரகசியக்குழு, நான் சொன்னதுபோல, எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் தொடர்ச்சிக்காக அடிப்படையாக இயங்குகிறது. பல வழிகளில் அவர்கள் உதவலாம். ஜப்பான், ஜெர்மனியுடன் நட்பானது தற்செயலாக நடந்தது அல்ல. அது இந்த ஒன்பது பேர் கொண்ட குழுவினால்தான். இது மறைந்திருக்கும் உண்மை. ஹிட்லருக்குப் பின்னால் இயங்கிக்கொண்டிருந்த இரகசியக்குழு, புத்தர்கள் குழு, அதனால் புத்தர்களின் நாடான ஜப்பான், ஹிட்லரின் பக்கமாக திரும்பும்படி செல்வாக்கை பயன்படுத்தியிருக்கலாம். முழு கிழக்கு நாடுகளும் ஹிட்லர் வெற்றிப்பெற்றுக்கொண்டிருந்தபோது, சந்தோஷம் அடைந்தார்கள். கிழக்கு நாடுகள் முழுவதும் உள்ளூர ஹிட்லருக்கு சாதகமாக இருந்தார்கள். அவர் பின்னால் இயங்கிக்கொண்டிருந்த குழு கிழக்கு நாடுகளின் குழு.
எதுவுமே எதேச்சையாக நடப்பதில்லை. எல்லாவற்றிற்குப் பின்னாலும் காரணத்தொடர்பு இருக்கிறது. எப்போதெல்லாம் புத்தரைப்போல் ஒரு குழு நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் இரகசியக்குழுவின் முதல்வேலை மக்களுக்கும் அவருக்கும் தரகராக இருந்து உதவுவதுதான். இந்த இரகசியக்குழுக்களின் இன்னொரு வேலை ஒரு முறை கிடைத்த அறிவை, அதற்குட்ப்பட்ட விஷயங்களைப் பாதுகாப்பது. புத்தர் பிராதானமான அறிவுபெற்றார், ஆனால் அதை யார் பாதுகாப்பார்? புத்தகங்களின் மூலம் பாதுகாப்பது பாதுகாப்பே அல்ல, ஏனெனில் அறிவுக்குட்ப்பட்ட விஷயங்கள் என்பது மிகவும் இருந்துக்கொண்டிருப்பது, ஆனால் புத்தகங்கள் இறந்துபோனது. வார்த்தைகளைத்தான் பாதுகாக்க முடியும், விஷயங்களை அல்ல. அறிவை மனிதர்களால்தான் பாதுகாக்க முடியுமேத்தவிர புத்தகங்களினால் அல்ல. ஏனெனில் இந்த புத்தகங்களை மறுபடியும் விளக்கவேண்டும், யார் அதை விளக்குவார்? இரகசிய மொழிகளில் இருக்கும் அவைகளை நடைமுறைப் பழக்கத்தில் இருக்கும் மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும். யார் அதை மொழிபெயர்ப்பார்கள்? அப்படி அதை மொழிபெயர்க்க முடிந்தால், சரியாக விளக்க முடிந்தால் பின்பு அந்த நபரால் புத்தகங்கள் இல்லாமலே போதனைகள் வழங்க முடியும். அப்படியில்லாமல் எவரெல்லாம் புத்தகத்தை நம்பி இருக்கிறார்களோ அவர்களால் சரியாக விளக்க முடியாது.
உங்களுக்கு ஏதோ ஒரு வழியில் அதைப்பற்றி தெரியாமல், எந்த புத்தகத்தையும் உங்களால் படிக்கமுடியாது. உங்களால் உங்களைத்தான் படிக்கமுடியும், வேறு எதையும் படிக்கமுடியாது. அதனால் நீங்கள் புத்தரின் தம்மபதாவை (Dhammapada) படித்தால், நீங்கள் புத்தரின் தம்மபதாவை படிக்கவில்லை, ஆனால் உங்களுடைய தம்மபதாவைத்தான் படிக்கிறீர்கள். இப்போது நீங்கள் உருவாக்குபவராக இருப்பீர்கள். இப்போது உங்களுடைய ஆழம் புத்தரின் போதனைகளின் ஆழத்தை நிர்ணயிக்கும். நீங்கள் உங்களை கடந்துசெல்ல முடியாது. உங்களுக்கு உங்களை கடந்த எந்த க்ஷணத்தோற்றமும் கிடைக்காது.
இதனால் எப்போதெல்லாம் அறிவை (Knowledge) அடைகிறார்களோ – நுண்ணிய, அஸ்திவாரமான, இறுதியான – இதை புத்தகங்களின் மூலம் பாதுகாக்க முடியாது. சாதாரணக் கல்வியைத்தான் புத்தகங்களின் மூலம் பாதுகாக்க முடியும், எவைகளை தவறாக விளக்கமுடியாதோ, எந்த ஒன்றில் சாதாரண பள்ளிகள்கூட உங்களுக்கு பயிற்சி அளிக்கலாமோ, அவைகளைத்தான் புத்தகங்களின் மூலம் பாதுகாக்க முடியும். உங்களுக்கு மொழித் தெரிந்தால் பின்பு அதையும் தெரிந்துக்கொள்ளலாம். ஆனால் பிரதான அறிவுக்குட்ப்பட்ட விஷயங்களை அவ்வாறு பாதுகாக்க முடியாது. அவைகளை வாழ்ந்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் மூலம்தான் பாதுகாக்க முடியும். அதனால்தான் இரகசிய குழுக்கள் இருக்கின்றன. பின்பு இது ஒரு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றப்படுகிறது. இந்த மாற்றம் இயந்திரத்தனமான மாற்றமல்ல. இது இயந்திரமல்ல, அப்படியிருக்கவும் முடியாது. இது ஒரு கலையைப் போல.
நான் ஒரு கதை சொல்கிறேன், மிக இரகசியமான ஒன்று..........
தேர்ச்சி பெற்ற திருடன் என்று ஒரு புத்த மத கதை இருக்கிறது. அவர் மிக்க திறமைசாலி, அப்படிப்பட்ட ஒரு தேர்ச்சி, அவரை பிடிக்கவே முடியாது. அவர் எப்போதெல்லாம் பூட்டை உடைத்துக்கொண்டு வீட்டினுள் சென்று வருகிறாரோ, அப்போதெல்லாம் தெர்ச்சி பெற்ற திருடன் வந்துவிட்டுப்போனார் என்று தெரியும்படியான ஒரு தடயத்தை விட்டுச்செல்வார். அவருடைய கலை மிகவும் பிரபல்யமடைந்தது, அவர் ஒருவர் வீட்டிற்கு வந்தால், பின்பு மற்றவர்கள் பொறாமை அடைவார்கள். ஏனெனில் அந்த தேர்ச்சி பெற்றத்திருடன் தன்னுடைய திறமையை பயன்படுத்தும் அளவிற்கு இருக்கும் தகுதியான வீடுகளுக்குத்தான் போவார்.
அந்த நாட்டு மன்னரே அவரை சந்திக்க விரும்பினார். எல்லாமே அறிவிக்கப்பட்டு விடும்; எப்போதெல்லாம் அவர் யாரிடமிருந்தாவது திருட வேண்டுமோ, அப்போதெல்லாம் அங்கே புரளி இருக்கும். அந்த நபருக்கு முன்கூட்டியே தேர்ச்சி பெற்ற திருடன் கூடிய விரைவில் வருகிறார் என்ற தகவல் கிடைத்துவிடும்; “உங்களுக்கு எந்த ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டுமோ அதை செய்து கொள்ளலாம், பின்பு அந்த குறிப்பிட்ட நாளில், அந்த குறிப்பிட்ட வினாடியில், திருட்டு நடக்கும்” – திருடன் பிடிபடமாட்டார்.
பின்னர் அவருக்கு வயதாகி விட்டது, அவருடைய மகன் தந்தையைப் பார்த்து “இப்போது உங்களுக்கு வயதாகிவிட்டது, எனக்கு உங்களுடைய கலையைப் பற்றி “ஆ” ன்னா “ஊ” ன்னா கூட தெரியாது, அதனால் நானும் பயிற்சி பெறுகிறேன்” என்றான்.
அதற்கு தந்தை “அது மிகக் கடினம். இது அறிவியல் கிடையாது, இது விஞ்ஞானத்தைப் போல எப்படி என்று தெரிந்துக்கொள்ள முடியாது, நீ திருடுவதற்கென்றே பிறந்திருந்தாலேயொழிய என்னால் சொல்லமுடியாது; அப்போது அதற்கு வாய்ப்பிருக்கிறது. அது அவ்வளவு கலை நுணுக்கம் நிறைந்தது, அது ஒரு ஆக்கப்பூர்வமான கலை. நான் அதில் வாழ்ந்திருக்கிறேன், இது எனக்கு எந்த கெடுதலையும் விளைவிக்கவில்லை, ஆனால் என் ஆன்மாவிற்குதான். அதனால் நாம் பார்க்கலாம்” என்றார்.
ஒருநாள் இரவு அவர் மகனை தன்னுடன் தொடரச் சொன்னார். அவர்கள் ஒரு அரண்மனைக்கு சென்று சுவற்றை உடைத்தார்கள். அவருக்கு அறுபத்தைந்து அல்லது எழுபது வயதிருக்கும். ஆனால் அவருடைய கைகளில் நடுக்கம் இல்லை, மகன் இளமையுடன் இருந்தான், பலத்துடன் இருந்தான். ஆனால் அவனுக்கு மூச்சு வாங்கியது. அந்த இரவு குளுமையாக இருந்ததால், மகன் நடுங்கிக்கொண்டிருந்தான்.
அவன் தந்தை “நீ ஏன் நடுங்குகிறாய்? சும்மா சாட்சியாக இரு. நான்தான் திருடன்; நீ சாட்சியாக இரு. நீ ஏன் நடுங்குகிறாய்?” என்று கேட்டார்.
ஆனால் அவன் நடுங்காமலிருக்க, அதிகமாக முயற்சித்த அளவிற்கு அதிகமாக நடுங்கினான். அவன் தந்தை ஏதோ தன் வீட்டில் வேலை செய்வது போல வேலை செய்துக்கொண்டிருந்தார். பின்னர் அவர்கள் உள்ளே சென்றார்கள். அவர் பூட்டைத் திறந்து, தன் மகனை உள்ளே போகச் சொன்னார். அவன் உள்ளே போனதும் தந்தை அவன் பின்னாடியிருந்து கதவை பூட்டிவிட்டு, வீட்டிலிருப்பவர்கள் எல்லோரும் விழித்துக்கொள்ளும்படியான சத்தங்களை செய்தார். பின்பு அவர் ஓடிவிட்டார், ஆனால் மகன் உள்ளே பூட்டப்பட்டிருந்தான். முழு வீடும் திருடனை தேடிக்கொண்டிருந்தது. மகன் எப்படியிருப்பான் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
தந்தை வீட்டிற்கு சென்றார். இரவு குளிர்ந்திருந்தது, அவர் தன்னுடைய படுக்கைக்கு சென்று சௌகரியப்படுத்திக்கொண்டார்.
இரண்டு மணிநேரம் கழித்து மகன் ஓடி வந்தான். அவன் தன்னுடைய தந்தையின் போர்வையை இழுத்துவிட்டு, “நீங்கள் என்னை கிட்டத்தட்ட கொன்றுவிட்டீர்கள்! இப்படியா எனக்கு பயிற்சித்தருவது?” என்றான்.
தந்தை அவனைப் பார்த்து, “சரி, நீ வந்து விட்டாய். நல்லது! பின்பு என்னிடம் கதையெல்லாம் சொல்லாதே, அது சம்மந்தம் இல்லாதது, அதை விவரமாக சொல்ல வேண்டாம். நீ திரும்பிவிட்டாய், அது நல்லது. அந்த கலை மாற்றப்பட்டுவிட்டது. நீ இங்கே எப்படி வந்தாய் என்று சொல்லதேவையில்லை, நீ திரும்பிவிட்டதே போதுமானது, அந்த கலை மாற்றப்பட்டுவிட்டது” என்றார்.
மகனுக்கு பேசுவதற்கு அசௌகரியமாக இருந்தது. ஆனால் அவன் “நான் முதலில் நீங்கள் எப்படி என்னை கிட்டத்தட்ட கொன்றுவிட்டீர்கள் என்பதையும், நீங்கள் எவ்வளவு கொடூரமாக உங்கள் மகனிடம் நடந்துக்கொண்டீர்கள் என்பதையும் நான் உங்களிடம் சொல்கிறேன்” என்றான்.
தந்தை அவனிடம், “என்ன நடந்தது என்று சொல். நீ என்ன செய்தாய் என்பதைப் பற்றியல்ல. நான் கதவை பூட்டியதும் என்ன நடந்தது?” என்றுக் கேட்டார்.
மகன் “நான் அப்படியே இன்னொருவராகிவிட்டேன். மரணம் பக்கத்தில் இருந்தது! அப்போது வந்ததுபோல் சக்தியை நான் எப்போதுமே உணர்ந்ததில்லை. எல்லாமே பணயமாக இருந்தது – வாழ்வா? சாவா? நான் துல்லியமாக விழிப்புடன் இருந்தேன். நான் இதுவரை இப்படி விழிப்புடன் இருந்ததேயில்லை. நானே விழிப்புணர்வாகி விட்டேன். ஏனெனில் ஒவ்வொரு வினாடியும் விலைமதிக்கமுடியாதது. இந்த வழியா அல்லது அதுவா, எல்லாமே தீர்மானிக்கப்படாமல் இருந்தது. பின்பு கையில் மெழுகுடன் ஒரு பெண் என் அறையை தாண்டிச்சென்றாள். நீங்கள் சரியாக கேட்டீர்கள், “என்ன நடந்தது?” ஏனெனில் என்னால், நான் செய்தேன் என்று சொல்ல முடியாது. எப்படியோ நான் சில பூனைகள் இருப்பதுபோல் சத்தப்படுத்தினேன். அதனால் அவள் பூட்டைத்திறந்து கதவை திறந்தாள், அவளுடைய விளக்கை வைத்துக்கொண்டு உள்ளே பார்த்தாள். என்னால் நான் செய்தேன் என்று சொல்லமுடியாது. அது நடந்தது”.
“நான் அவளுடைய மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, அவளை தள்ளிவிட்டு ஓடினேன். நான் ஓடினேன் என்று சொல்லமுடியாத அளவிற்கு அதிவேகமாக ஓட ஆரம்பித்தேன், ஓட்டம் நிகழ்கிறது – நான் இல்லை, நான் முழுமையாக இல்லை. ஏதோ ஒரு சக்தி நகர்ந்துக்கொண்டிருந்தது. அவர்கள் துரத்தினார்கள், நான் ஒரு கிணற்றை கடந்துக்கொண்டிருந்தேன். அது நடந்தது. அதை நான் செய்தேன் என்று சொல்ல முடியாது, அதனால் நான் ஒரு கல்லை எடுத்து கிணற்றுக்குள் தூக்கி எறிந்தேன். அவர்கள் எல்லோரும் கிணற்றை சூழ்ந்துக்கொண்டனர். அவர்கள் திருடன் உள்ளே விழுந்து விட்டான் என்று நினைத்தார்கள். அதனால் நான் இங்கேயிருக்கிறேன்” என்றான்.
ஆனால் தந்தை ஆழ்ந்து தூங்கிவிட்டார். அவர் அந்த கதையைக்கூட கேட்கவில்லை. காலையில் அவர் “விவரமெல்லாம் தேவையில்லாதது, கலையை சொல்லமுடியாது, அதை தோழமையுடன் இருப்பதின் மூலமும், அதை உதாரணமாக இருந்துக்கொண்டிருப்பவர்களையும்தான் காண்பிக்க முடியும்”.
பிரதான அறிவை (Supreme Knowledge) மாற்றவும், பாதுகாக்கவும் முடியும். சில சமயங்கிளில் இரகசிய குழுக்கள் குறிப்பிட்ட ஒரு நபரின் வருகைக்காக காத்திருந்து, பல நூற்றாண்டுகளாக அந்த அந்த அறிவுட்குட்பட்ட விஷயங்களை அவருக்காக பாதுகாத்து, அந்த விஷயங்களை அவருக்கு மாற்றும்.
உதாரணத்திற்கு, மஹாவீரர் ஐம்பதனாயிரம் சன்னியாசிகளை வைத்திருந்தார். எல்லோரும் அவர் நாட்களில் ஞான அறிவு பெறமுடியாது. அதனால் பலபேர் தொடர்ந்து எங்கோ வழிகளில் இருந்தனர். மஹாவீரர் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வரவேண்டியதில்லை, அதனால் இதுப்போல் எங்கோ பாதையில் இருப்பவர்களுக்கு மேற்கொண்டு அந்த அறிவைப் போய் சேர்த்தாக வேண்டும். யார் கொண்டுபோய் சேர்ப்பார், மஹாவீரர் இங்கு இருக்கமாட்டார்.
வேதநூல்களை நம்ப முடியாது, ஏனெனில் அவைகள் பைத்தியக்காரத்தனமானது. யாராவது அதை விளக்கவேண்டும், ஆனால் அவர்களால் அவர்களுடைய புரிந்துக்கொள்ளும் தன்மையைத் தாண்டி விளக்கமுடியாது. அதனால் இது அர்த்தமற்றது. அதனால் இந்த சாவிகளை பாதுகாக்க ஒரு குழு இருக்கவேண்டும். அப்படியானால்தான் அந்த சாவிகளை ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருப்பவர்களிடம் ஒப்படைக்கலாம். இல்லாவிட்டால் அவைகள் தொலைந்துவிடும் அல்லது அவர்கள் தேவையில்லாமல், அர்த்தமில்லாமல் போராடவேண்டும், அல்லது அவர்கள் குருவை மாற்றவேண்டும்.
எப்போதெல்லாம் யாராவது குருக்களை மாற்றுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர் புதியதாக ஆரம்பிக்கவேண்டும், ஏனெனில் பழைய முறை எதையும் புதியதில் உபயோகிக்கமுடியாது. இந்த பாதையைச் சேர்ந்த எதையும் அந்தப் பாதையில் பயன்படுத்தமுடியாது – ஒவ்வொரு பாதைக்கும், அதற்கே உரிய கருத்துக்களைத் தெரிவிக்கும் சாதனம் ஒன்றிருக்கிறது. அதனால் முகமதின் வழியில் அர்த்தமுள்ளதாக தெரியும் எதுவும் மஹாவீரரின் பாதையில் அர்த்தமுள்ளதாக தெரியாது; புத்தரின் பாதையில் அர்த்தமுள்ளதாக தெரியும் எதுவும் இயேசுவின் பாதையில் அர்த்தமுள்ளதாகத் தெரியாது. அதனால் ஒருவர் புத்தரின் பாதையிலிருந்து இயேசுவின் பாதைக்கு மாறினால், அவர் புதியதாக ஆரம்பிக்க வேண்டும். கடந்த வாழ்க்கைகளின் எல்லா பயிற்சிகளும் தூக்கியெறியப்படும். அது நல்லதல்ல; அது சுத்தப்பயனற்றது.
அதனால் எப்போது குரு இல்லையோ, அப்போது இந்த இரகசிய குழுக்கள் அறிவை (Knowledge) பாதுகாக்கும். அப்போது அந்த விஷயங்கள் குருவைப் போல வேலை செய்ய ஆரம்பிக்கும். ஆனால் அந்த விஷயங்கள் இருக்கும் மனிதர்களின் மூலம்தான் பாதுகாக்கமுடியும். இந்த அசோகாவின் ஒன்பது நபர்களில், ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட சாவியில் நுண்ணறிவுப் பெற்றவர்கள். ஒவ்வொரு தனி நபரிடமும் எல்லா சாவிகளும் இல்லை. ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட சாவியில் வல்லுநர்கள். அந்த குழுவில் ஒன்பது நபர்கள் அமைக்கப்பட்டது. ஏனெனில் புத்தர் ஒன்பது கதவுகள், ஒன்பது சாவிகள், ஒன்பது வகையான புலமைகளைப் பற்றி பேசியிருக்கிறார்.
ஆனால் ஒவ்வொருவரும் ஒரு சாவியில் தான் நுண்ணறிவுப் பெற்றவர்கள். அவருக்கு ஒரே ஒரு கதவைப்பற்றிதான் தெரியும். அந்தக் கதவின் மூலம் நுழைய நினைப்பவர்களுக்கு அவர் மூலம் உதவி கிடைக்கும். புத்தருக்கு ஒன்பதை பற்றியும் தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த ஒன்பது பேரும் ஒன்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியாது; ஒரு கதவின் ஒரு சாவியை தெரிந்துகொண்டால் போதுமானது.
இந்த நுண்ணறிவு பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சாவியை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு கதவைப் பற்றி, எல்லாம் தெரியும், ஒரு தியான பாதை. எப்போதெல்லாம் தேவை இருக்கிறதோ அப்போதெல்லாம் அந்த ஒருவர் உதவுவார். அந்த உதவி, நேரடியாகவும் இருக்கலாம், மறைமுகமாகவும் இருக்கலாம். ஆனால் அவர் உதவுவார். எப்போதெல்லாம் ஒரு புதிய புத்தர் வருகிறாரோ, ஒரு புதிய ஞான அறிவு பெற்ற ஒருவர் வருகிறாரோ, அப்போதெல்லாம் இந்த குழு அதற்குத் தேவையான அடிப்படைகளை தயார் செய்வார்கள். இவர் சொல்வதை கேட்பதற்காகவும், புரிந்துக்கொள்வதற்காகவும் மக்களை தயார் செய்வார்கள். அப்படிப்பட்ட அடிப்படைகள் இல்லையென்றால், பின்னர் எல்லா குருக்களும் சிலுவையில் அறையப்படுவார்கள் – அவர்கள் சிலுவையில் அறையப்படுவார்கள், ஏனெனில் அவர்களை புரிந்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவ எந்தக்குழுவும் இருக்காது.
இந்த குழுக்களுக்கு வேறு சில வேலைகளும் இருக்கின்றன. சில நேரங்களில் மனித இனத்திற்கு தங்களுக்கு முன்பு தெரிந்திருந்த விஷயங்களை தற்போது மறந்து விடுகிறது. எங்கோ “இறந்தவர்களின் புத்தகம்” (Book of the Dead) என்ற எகிப்தியர்களின் (Egypta) புத்தகத்தில் “பேதமை என்பது மறந்துபோவதை தவிர்த்து வேறு எதுவும் இல்லை” என்கிறது. தெரிந்திருந்த சில விஷயங்கள் இப்போது மறந்துவிட்டது. எதுவுமே புதியதல்ல, ஏதோ சில விஷயங்கள் மறந்துவிட்டன. அதை நீங்கள் திரும்பவும் தெரிந்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு புதியதாக தெரிகிறது. பலமுறைகள், பல சாவிகள் தொலைந்துவிட்டன – சில நேரங்களில் அதற்கு இரகசியக்குழுக்கள் அதை பாதுகாக்க இல்லாததால் தொலைந்துவிட்டது.
சில நேரங்களில் குழுக்கள் இருக்கின்றன. ஆனால் அந்த அறிவின் மூலம் யாரும் தீக்ஷை பெற தயாராக இல்லை. அப்போது இரகசிய குழுவால் அதை பாதுகாப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது. சில நேரங்களில் பாதுகாப்பதும் கடினமாகி விடுகிறது; ஏனெனில் அது மிக சுலபமானதல்ல, ஒன்பது பேர் கொண்ட குழுவில் ஒருவர் இறந்துவிட்டால், அந்த இடத்தை நிரப்புவது சுலபமல்ல, ஏனெனில் அந்த இடத்திற்கு தேர்தலின் மூலம் தேர்ந்தெடுப்பதில்லை. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுமில்லை. அறிவு குடியரசை சார்ந்திருப்பதில்லை. அது அறியாமையைச் சார்ந்தேயிருக்கிறது.
அறிவு எப்போதும் கொடுங்கோல் கொண்டது – எப்போதும். அணு சம்பந்தப்பட்ட குழுவிற்கு (Atomic Commission) யார் தலைவராக இருக்கவேண்டும் என்பதை ஒரு தேர்தலின் மூலம் நீங்கள் முடிவெடுக்க முடியாது. நீங்கள் அப்படி முடிவெடுத்தால் பின்பு நீங்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுப்பதாகும்.
அறிவு எப்போதும் கொடுங்கோல் கொண்டது, அது எப்போதும் கீழிருந்து இருக்காது, அது எப்போதும் மேலிருந்துதான் இருக்கும். வித்தியாசத்தை தெளிவாக பாருங்கள். எது ஒன்றும் கீழிருந்து வருவது அறிவீனமாகத்தான் இருக்கும். அதனால் அரசியல் என்பது அறிவீனத்துடன் உயர்வு சமமாக இருக்கிறது. அது கீழிருந்து வருகிறது. யார் ஒருவர் அடிமட்டத்தில் இருக்கிறாரோ அவர் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார். உயர்வு என்பதின் அர்த்தம் என்ன? கீழேயிருந்து மேலேயிருப்பதை முடிவெடுக்கிறது, அதனால் உயர்ந்தது என்பது கீழே இருப்பதைவிட கீழானதாக இருக்கவேண்டும். அதனால் குடியரசில், தலைவர்கள் என்பவர்கள், அவர்களை பின்பற்றுபவர்களை பின்பற்றுபவர்கள், அறிவு இதை சார்ந்திருக்க முடியாது. அறிவு எப்போதும் மேலிருந்து கொடுக்கப்படுவதால் அது கொடுங்கோல் கொண்டது.
இரகசிய குழு சாவிகளை பராமரித்து அறிவை பாதுகாத்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வகையான, அறிவை அல்லது குறிப்பிட்ட இரகசியங்களை, சொல்லும் அளவிற்கு திறன் வாய்ந்தவர்களாக யாராவது ஒருவர் தயாரெனில் பின்பு சாவி அவர்களிடம் கொடுக்கப்படும். குழு காத்திருக்க வேண்டும். அது பல நூற்றாண்டுகளுக்குக்கூட காத்திருக்க வேண்டியிருக்கலாம். மேலும் அவர்களின் இடத்திற்கு இன்னொருவரை பொருத்துவது மிகக்கடினமானது. இதை மற்றவர்கள் முடிவு செய்ய முடியாது. மிஞ்சியிருக்கும் எட்டு நபர்கள், ஒரு திறன் வாய்ந்த நபரை தேர்ந்தெடுக்க வேண்டும், அந்த திறன் வாய்ந்த நபரும் அந்த குழுவிற்குள் நுழைவதற்கு முன்னால் பயிற்சி பெற வேண்டும். சில நேரங்களில் அந்த குழு ஒரு நபருடன் பல வாழ்க்கைகளில் வேலை செய்து, பின்பு அந்த நபர் அதனுடைய ஒரு அங்கத்தினரின் இடத்தில் பொருத்தப்படுவார். அப்படி யாரும் கிடைக்கவில்லையென்றால், அந்த சாவி தொலைந்துவிடும், பின்னர் அந்த இரகசியக்குழுவால் அந்த சாவியை கண்டுபிடிக்க முடியாது. புத்தரைப் போல ஒருவர் நிகழ்ந்தால்தான் அதை மறுபடியும் கண்டுபிடிக்க முடியும். இரகசியக் குழுவால் அதை பாதுகாக்கவும், எடுத்துச் செல்லவும்தான் முடியும், அதுவால் கண்டறிய முடியாது. கண்டுபிடிப்பது அவர்களின் திறனுக்குட்பட்டதல்ல.
பல சாவிகள் தொலைந்து விட்டன. பல குழுக்கள் இயங்கியது, பல குழுக்கள் இன்னும் இயங்கிக்கொண்டேயிருக்கிறது. ரோஸிக்ரூசியன்ஸ் (Rosicrucians) என்ற இது போன்ற இணையான குழு மேற்கில் இருந்தது. அது பல நூற்றாண்டு களாக இயங்கியது. உண்மையில் அது கிறிஸ்துவர்கள் குழு அல்ல. அது கிறிஸ்துவர் களை விட பழமையானது. ரோஸிக்ரூசியன்ஸ் என்பது ரோஸிக்கராஸ் என்பதின் இரகசியக் குழு, சிலுவை கிறிஸ்துவர்களின் சின்னம் மட்டுமல்ல, அது இயேசுவைவிட பழையது.
இயேசுவே இசன்ஸ் (Essenes) எனப்படும் இரகசியக் குழுவால் தீக்ஷை வழங்கப்பெற்றவர்தான். கிறிஸ்துவர்களின் எல்லா புனித நாட்கள் உதாரணத்திற்கு ஈஸ்டர் எல்லது டிசம்பர் 25 இவை இயேசுவைவிட பழையது. கிறிஸ்துவர்கள் பழைய பாரம்பரியத்தை கிரகித்துக்கொண்டார்கள். இயேசுவே ஒரு இரகசியக் குழுவைச் சார்ந்தவர்தான், அது அவருக்கு நிறைய விஷயங்களை சொல்லியிருக்கிறது, அதை அவர் மக்களுக்கு சொல்ல முயற்சித்தார்.
இயேசு வருவதற்கும் அவர்கள் ஒரு அடிப்படையை தயாரிக்க முயற்சித்தார்கள், ஆனால் அதை தயாரிக்க முடியவில்லை. அதுவால் சரியாக இயங்கமுடியவில்லை. ஆனால் ஜான் என்ற ஞானஸ்நானம் வழங்குபவர், இயேசுவுக்கு முன்னால் வந்தவர் என்பது நமக்குத் தெரியும். அவர் ஜோர்டான் என்ற ஆற்றங்கரையில், முப்பது அல்லது நாற்பது வருடங்களாக ஒன்றைதான் அவர் கற்பித்தார். அது “நான் வரப்போகும் ஒருவருக்கு முன் அறிவுப்புக்காக வந்திருக்கிறேன். உண்மையானவர் இன்னும் வரவிருக்கிறார். நான் அவருக்கு அடிப்படைகளை தயார் செய்வதற்காக வந்திருக்கிறேன், அவர் வந்தவுடன் நான் மறைந்து விடுவேன்” என்பதுதான்.
அவர் ஜோர்டான் ஆற்றங்கரையிலேயே நாற்பது வருடங்களாக தங்கிக்கொண்டு அங்கிருக்கம் மக்களை புனிதப்படுத்திக்கொண்டிருந்தார். வரப்போகும் உண்மையானவருக்காக அவர் ஞானஸ்நானம், எல்லோருக்கும் தீக்ஷை வழங்கினார்.
எல்லோரும் “யார் வரப்போகிறார்?” என்று கேட்டார்கள். அந்த முழு நாடும் “வரப்போகும் ஒருவரை” பற்றி தூண்டப்பட்டது. ஜான் என்ற ஞானஸ்நானம் வழங்குபவருக்கும், அவருடைய பெயர் தெரியவில்லை. அவரும் காத்திருக்க வேண்டியிருந்தது. அவர் இசனஸ்சை சார்ந்தவர். கடந்த வாழ்க்கையில் இசனஸ் குழுவில் இயேசுதான் தீக்ஷை பெற்ற அங்கத்தினர்களில் முக்கியமானவராக இருந்தார். இயேசு ஜான் என்ற ஞானஸ்நானம் செய்துவைப்பவரிடம் ஞானஸ்நானம் பெற வந்தார், இயேசு ஞானஸ்நானம் பெற்ற அந்த நாளிலிருந்து ஜான் என்ற ஞானஸ்நானம் வழங்குபவர் ஒரேயடியாக மறைந்துபோய்விட்டார். அவர் இயேசுவிற்கு ஜோர்டான் ஆற்றங்கரையில் ஞானஸ்நானம் செய்தார், அதன் பின்னர் உடனே அவரை திரும்பவும் காணமுடியவில்லை.
புது உண்மையானவர் வந்துவிட்டார் என்ற இந்த நிகழ்வு நாட்டிற்கு ஒரு செய்தியாகிவிட்டது, ஏனெனில் அவர் தொடர்ந்து நாற்பது வருடங்களாக “உண்மையானவர் வந்ததும் நான் ஞானஸ்நானம் செய்து வைக்கும் கடைசி ஆள் அவராகத்தான் இருக்கும், பின்பு நான் மறைந்துவிடுவேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஞானஸ்நானம் வழங்குவதும் கிறிஸ்துவர்களுக்கு முன்னாலே இருந்தது. இயேசுவிற்கும் முன்னாலும் ஞானஸ்நானம் வழங்குதல் இருந்தது, அதைப் பின்பு கிறிஸ்துவ மதம் தொடர்ந்தது.
ஜான் என்ற ஞானஸ்நானம் வழங்குபவர் இசன்ஸ் என்ற இரகசியக் குழுவைச் சார்ந்தவர். நிறைய குழுக்கள் இருக்கின்றன, ஆனால் எப்போதும் கஷ்டம் எப்போது வருகிறது என்றால், எப்போது யாராவது ஒருவர் இனியில்லையோ அப்போது அந்த இடத்தை யாராலும் நிரப்பமுடியவில்லை. பின்பு அது விட்டுப்போன தொடர்பாகிவிடுகிறது. ஒவ்வொரு சொல்லித் தருதலிலும் அந்த விட்டுப் போனத் தொடர்பு தோன்றுகிறது. எப்போது விட்டுப்போன தொடர்பு தோன்றுகிறதோ அப்போது அந்த இடைவெளியை நிரப்புவதற்கு உங்களால் அந்த குழுவிடமிருந்து உதவி பெற முடியாது. கிறிஸ்துவ மதத்தில் இடைவெளி இருக்கிறது, இப்போது நிறைய இருக்கிறது. ஒவ்வொரு சொல்லித் தருதலிலும் இடைவெளி இருக்கிறது. அதில் ஒரு பாகம் தொலைந்துவிட்டால் கூட பின்பு அதை நிரப்புவதற்கு மறுபடியும் இயேசுவைப் போல் ஒருவர் நிகழ்ந்தாலேயொழிய முடியாது. அதை முன்கூட்டியே சொல்ல இயலாது, அதை ஏற்பாடு செய்யமுடியாது, அதற்கு முன்கூட்டியே திட்டம் தீட்டமுடியாது. ஆனால் தீக்ஷை பெற்றுத் தேடலில் உள்ளவர்களை திட்டம் தீட்டி உருவாக்கமுடியும், அது யாராவது பயன்படுத்தும் அளவிற்கு இருந்தால், எப்போது வேண்டுமோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இரகசியக் குழுக்கள் இந்த பூமி சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, இப்போது இந்த பூமியைத் தவிர்த்து இன்னும் ஐம்பதாயிரம் கிரகங்களிலாவது வாழ்க்கை இருக்கவேண்டும் என்பதை விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள். இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறதே தவிர குறைவாக இருக்க வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட மாபெரும் பிரபஞ்சத்தில், சாதாரணமாக சம்பவிக்கக்கூடிய விதியின்படி இன்னும் குறைந்த பட்சமாக ஐம்பதாயிரம் கிரகத்திலாவது வாழ்விருக்கவேண்டும். ஒரு கிரகத்து அறிவை இன்னொரு கிரகத்தில் சேர்க்கும் பணியும் இந்த இரகசியக் குழுவைச் சார்ந்தது. அது சற்று கடினமானது. ஏனெனில் நமக்கெல்லாம் தெரிந்த தாகயில்லை. நமக்கு ஒரு பாகமாக ஏதாவது தெரிந்திருக்கலாம். இன்னொரு கிரகத்தில் சிறந்த அறிவு இருக்கலாம்; இன்னொரு கிரகத்தில், இப்போது இன்னொரு புத்தர் இருக்கலாம். இப்பிரபஞ்சத்தில் இருக்கும் பல்வேறு முறைகள் கொண்ட அறிவுக்கு ஒரு உள் இணைப்பாக இந்த இரகசிய குழு செயல்படுகிறது. அதனால் விட்டுப்போன இணைப்புகளை மற்ற கிரகத்திலிருந்துகூட பெற்றுத் தரலாம். உண்மையில் எப்போதும் இது நடக்கிறது.
எப்போதெல்லாம் ஏதாவது விட்டுப்போகிறதோ, அதற்கு எப்போதெல்லாம் ஒருவர் தோன்றி அதை கண்டுபிடிப்பதற்காக நம்மால் கூப்பிடமுடியவில்லையோ, அப்போதெல்லாம் அந்த விட்டுப்போன விஷயங்கள் வேறு கிரகத்திலிருந்தால், பின்பு அந்த விஷயங்களை அந்த கிரகத்திலிருந்து பெற்றுத்தரலாம். இந்த இரகசியக் குழு இப்பிரபஞ்சத்திற்கும் அனைத்துடனும் தொடர்பு கொள்ளலாம். இந்தப் பணி யாராவது ஒருவர் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு பழைய கால கிராமத்திற்கு செல்வதுபோல் மதிக்கத்தக்கதாகும். பழைய காலத்து கிராமத்திற்கு ஒன்றும் தெரியாது, ஆனால் பல்கலைக்கழகத்து நபருக்கு தெரியும், இந்த மனிதன், பழைய காலத்து கிராமத்திற்கு அறிவை பெறுவதற்கு பயிற்சி அளிக்கலாம். பின்னர் அதை அவர்களிடம் கொடுக்கலாம். அதேசமயத்தில் அவரும் தன்னுடைய அறிவினுடைய மூலாதாரத்துடன் தொடர்பு வைத்திருக்கலாம். இது ஒரு ஒற்றுமையில் சொல்வதுதான்.
பலமுறைகள் வேறு கிரகத்தினர்கள் இந்த கிரகத்திற்கு வந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் பல அடையாளங்களை விட்டுப்போயிருக்கிறார்கள். சில நேரங்களில் அறிவின் சாவிகளை இந்த கிரகத்திலுள்ள சில குழுவினரிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த குழுக்கள் இயங்கிக்கொண்டிருந்தன. இரகசியக் குழுக்கள் ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்கு போகமுடிந்தவை, ஆனால் அதில் ஏதோ குறைவதால், அதை விளக்குவது மூலம் புரிந்துக்கொள்ளமுடியாது.
ஒவ்வொரு தலைமுறையினரும் தாங்களே சொந்த முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்; எந்த பழைய முறைகளும் உங்களுக்கு உதவியாக இருக்காது. நீங்கள் மாறிவிட்டீர்கள், உங்கள் மனம் மாறிவிட்டது. சாவிகள் பழைய பூட்டுகளுக்குப் பொருந்தும். ஆனால் பூட்டு மாறிவிட்டது. இரகசியக் குழுக்களால் சாவிகளைத்தான் பாதுகாக்க முடியும், பூட்டை அல்ல, ஏனெனில் பூட்டுகள் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்குப் புரிகிறதா? பூட்டுகள் உங்களிடமிருக்கிறது – புத்தரிடம் இல்லை, இயேசுவிடம் இல்லை. அவர்களிடம் சாவி இருக்கிறது. பல பூட்டுகளை திறக்கக்கூடிய சாவிகளை அவர்கள் செய்கிறார்கள். இரகசியக் குழுவினர்களால் இந்த சாவிகளை பாதுகாக்க முடியும், ஆனால் அதே நேரத்தில் பூட்டுகளும் மாறுகின்றன.
நீங்கள் புத்தர் திறந்த அதே பூட்டல்ல. துல்லியமாக அதே சாவியினால் இப்போது திறக்கமுடியாது. அதே சாவி போதுமானதாக இருந்தால், பின்னர் எந்த ஒரு பேதமை உள்ளவனும் அதை பயன்படுத்தலாம். பின்பு எந்த விவேகமும் தேவையில்லை, யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நான் உங்களிடம் சாவியை மட்டும் கொடுத்துவிடலாம், பின்னர் நீங்கள் பூட்டைத் திறந்துக்கொள்ளலாம். இது போதுமானது. இதுதான் சாவி, அதுதான் பூட்டு. ஆனால் பூட்டுகள் நிரந்தரமாக மாறிக்கொண்டேயிருப்பதனால், இந்த சாவிகளை புத்திசாலியாக இருக்கும் ஒரு குழுவினரிடம் கொடுக்கப்படவேண்டும் – பூட்டுகளுக்கு தகுந்தவாறு புதுவிதமான சாவிகளை எப்போதும் வகுத்துக்கொண்டிருப்பதற்காக.
பூட்டுகள் மாறிக்கொண்டேயிருக்கும், அவைகள் எப்போதும் அதுவாகவே இருக்காது. அதனால் இறந்த சாவிகளை பாதுகாப்பதுடன் மட்டுமல்லாமல் எப்போதெல்லாம் பூட்டு மாறுகிறதோ அப்போதெல்லாம் சாவியையும் மாற்றும் அறிவியலும் தெரிந்திருக்கவேண்டும். அது இரகசியக் குழு பாதுகாக்கிறது. நீங்கள் அதை புத்தகங்களில் பாதுகாக்க முடியாது, ஏனெனில் பூட்டுகள் தெரியாது. அவைகள் மாறும், அவைகள் மாறிக்கொண்டேயிருக்கும். பூட்டுகள் நிகழக்கூடிய தன்மைகளையும், பூட்டுகளின் எல்லா இணைப்புகளைப் பற்றியும் எந்த புத்தகத்தாலும் எழுத முடியாது. அவைகள் மாறிக்கொண்டேயிருக்கும். சூழ்நிலைகள் மாறுகிறது, கல்வி மாறுகிறது, பண்பாடு மாறுகிறது, எல்லாம் மாறுகிறது அதனால் பூட்டுகளும் வித்தியாசமாகிவிடும். எப்படித்தான் சாவிகளை பாதுகாத்தாலும், அது ஒரு வகையில் பொய்யானதாக போய்விடும். அது பூட்டுக்குச் சேராது. ஆனால் சாவிகளை எப்போது மாற்றும் அளவிற்கு புத்திசாலியாக இருக்கும் ஒரு குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதான் இரகசிய அறிவுக்கும் வெளிப்படையான பாரம்பரியத்திகும் உள்ள வித்தியாசம்.
வழக்கமான பாரம்பரியம் பூட்டைப்பற்றிய எந்த ஆலோசனையும் இல்லாமல் சாவியை சுமந்துச் சென்றுக் கொண்டேயிருக்கும். அது எப்போதும் பழைய சாவியைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கும்; எந்த பூட்டும் இதன்மூலம் திறக்கப்படுவதில்லை என்பதை அது கவனிக்காது. ஆனால் வழக்கமான பாரம்பரியம் கிறிஸ்துவ தேவாலயங்களில் இருக்கும் உறுப்பினர்களைப் போல் சாதாரண மக்களைக் கொண்டது. தேவாலயங்கள் சாவிகளை வைத்திருக்கிறது. அவர்களுக்கு இயேசுவின் காலத்தில் இந்த சாவியால்தான் பலக்கதவுகள் திறக்கப்பட்டது என்பது தெரியும். அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் விஷயம் சரியானது, அவருடைய தகவல் சரியானது; உண்மையில் இந்த சாவி பல பூட்டுகளை திறந்திருக்கிறது. அவர்கள் சாவியை சுமக்கிறார்கள், அவர்கள் சாவியை வழிபடுகிறார்கள் ஆனால் அது இப்போது எந்த பூட்டையும் திறப்பதில்லை. அவர்களால் வேறு சாவியையும் திட்டமிட்டு உருவாக்கமுடியாது, அவர்களுக்கு சாவிகளை திட்டமிட்டு உருவாக்குவதற்கு நேரமில்லை. அவர்களிடம் ஒரே ஒரு சாவிதான் இருக்கிறது, அதை அவர்கள் வழிபட்டுக்கொண்டேயிருக்கிறார்கள், அதுவால் பூட்டைத் திறக்க முடியவில்லை என்றால் பின்னர் பூட்டுதான் அதற்கு பொறுப்பு. பின்னர் பூட்டுதான் தவறானதாக இருக்கமுடியும், பின்னர் பூட்டுதான் ஏதோ தவறாகயிருக்கிறது, சாவி அல்ல.
வழக்கமான பாரம்பரியத்தில் உள்ளவர்கள் எப்போதும் பூட்டை கண்டனம் செய்துவிட்டு சாவியை வழிபடுகிறார்கள். இரகசியக் குழுக்கள் ஒருபோதும் பூட்டைக் கண்டனம் செய்வதில்லை, அது எப்போதும் சாவிகளை மாற்றுகிறது. போப்பாண்ட வரின் முறைப்படி சாவியை சுமப்பார்கள், அவர்களிடம் சாவி இருக்கிறது, அதை அவர்கள் வழிபட்டுக்கொண்டேயிருப்பார்கள், ஆனால் கிறிஸ்துவர்களுக்கு உள்ளார்ந்த இரகசியக் குழுக்கள் இருக்கின்றன. இது எப்போதும் நடக்கும் – இரகசியக் குழு, வெளிப்படையாயிருக்கும் பாரம்பரியக் குழுவுடன் சண்டையிடும், ஏனெனில் வெளிப்படையாக இருக்கும் பாரம்பரியக் குழு “இந்த சாவி வேலை செய்யவேண்டும். இந்த சாவி உனக்காக அல்ல, நீங்கள்தான் அந்த சாவிக்கு தக்கவாறு ஆகவேண்டும், இந்த சாவி பூட்டை திறக்கும் விதத்தில் நீங்கள்தான் செய்யவேண்டும். இந்த சாவி உனக்காக அல்ல, சாவியை மாற்றமுடியாது, நீங்கள்தான் மாறவேண்டும்” என்று சொல்லும். ஆனால் யாராவது “எங்களால் சாவியை மாற்றமுடியும்” என்று சொன்னால் அவர் நம்பிக்கையற்றவராகவும், சமய பேதமுடையவராகவும் ஆகிறார். பின்பு அவர் அர்த்தமில்லாததை பேசுவதால், அவரைக் கொன்றுவிட வேண்டும்: “அவர் சாவியை மாற்றிவிட்டார் – இந்த சாவி, இயேசு எங்களுக்குக் கொடுத்தது, புத்தர் எங்களுக்குக் கொடுத்தது, மஹாவீரர் எங்களுக்குக் கொடுத்தது. இந்த சாவியை மாற்றமுடியாது !”
அதனால் எப்போதும், எப்போதெல்லாம் குரு இருக்கிறாரோ, எதையாவது கண்டுபிடிக்கும் அளவிற்கு, உண்மையான அனுபவப்பூர்வமான குரு இருக்கிறாரோ, அவரிடமிருந்து இரண்டு மின்சாரமாக (Currents) பிரிகிறது. ஒன்று வெளிப்படையாக வழக்கமான பாரம்பரியமாக – பார்க்கமுடிந்த போப்புடன் கூடிய தேவாலயங்கள், பழமைபற்றுடைய சங்கராச்சாரியார். அவர்கள் எப்போதும் அதே சாவிக்காக முக்கியத்துவம் தருகிறார்கள். சாவி பூட்டைத் திறக்காவிட்டால், பின்பு சாவி என்பதற்கு அர்த்தம் இல்லை என்று அவர்கள் நினைப்பதேயில்லை. பிறகு அது சாவியே அல்ல. எதுவால் திறக்கமுடியுமோ அதற்குதான் சாவி என்று பொருள். அது எந்த பூட்டையும் திறக்கவில்லையென்றால் அதை சாவி என்று சொல்லுவதே தவறாக வழிநடத்திச் செல்லக்கூடிய வார்த்தையாகிறது. இது ஒரு மொழி ஏமாற்றாகிறது. இது சாவியே அல்ல, அது பூட்டை திறக்கும்போதுதான் சாவியாகிறது. நீங்கள் எதையாவது உங்கள் சட்டைப்பையில் போட்டுக் கொண்டால், அது சாவியாகாது, அது சாவியாக இருக்க வாய்ப்பிருக்கிறது, அவ்வளவுதான். அது பூட்டைத் திறக்கும்போதுதான் உண்மையான சாவியாகிறது. அது எந்த பூட்டையும் திறக்கவில்லையென்றால் அது சாவியாக இருக்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறது.
பார்க்க முடிந்த தேவாலயங்களில், சாவியிடம் அதே பிடிவாதக் கொள்கையுடன் இருக்கிறார்கள், ஏனெனில் அந்த சாவி ஒரு உண்மையான குருவால் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு உண்மையான குருவும் ஒரு நெருங்கிய வட்டத்தை உருவாக்குவார்கள். அந்த நெருங்கிய வட்டத்திடம் சாவியையும், அதை சில சூழ்நிலைகளில் எப்படி மாற்றவேண்டும் என்ற விஷயத்தையும் சொல்லியிருப்பார்கள். நெருங்கிய வட்டத்திற்கு எப்போதும் வெளியில் உள்ள வட்டத்துடன் கருத்து வேறுபாடு இருக்கும், ஏனெனில் வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவர்களை நீங்கள் தாழ்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்கள், நீங்கள் குரு எங்களுக்குக் கொடுத்த சாவியை மாற்றுகிறீர்கள்; “நீங்கள் யார்? நீங்கள் எப்படி மாற்றலாம்?” உதாரணத்திற்கு இஸ்லாமில் சில சுஃபிகளுக்கு இரகசிய விஷயங்கள் தெரிந்திருந்தன. ஆனால் முகமதியர்கள் அவர்களைக் கொன்றுவிட்டார்கள். மன்சூர் சாவிகளின் மாற்றங்களைப் பற்றி பேசியதால் அவர் கொல்லப்பட்டார்.
இரகசியக் குழுவிற்கு எப்போதும் பூட்டிடம்தான் ஆர்வம். சாவியிடம் எந்த பிடிவாதக் கொள்கைகளும் கிடையாது. வெளியில் வழக்கமாக இருப்பவர்கள், சாவியிடம் பிடிவாதக் கொள்கையுடன் இருக்கிறார்கள், ஆனால் பூட்டின் மீது எந்த ஆர்வமும் கிடையவே கிடையாது. அது திறந்தால், நல்லது; அப்படித் திறக்கவில்லையென்றால் நீங்கள்தான் பொறுப்பு. சாவியின் பொறுப்பு கிடையாது.
முகமதியர்கள் பல சுஃபி வரிசைகள், நெருங்கிய வட்டங்கள், நெருங்கிய குழுக்கள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் புரட்சிகரமாக வேலை செய்து வந்ததாக முகமதியர்கள் நினைத்தார்கள், எனவே அவர்களை கொன்றுவிட்டார்கள். பல சுஃபிகளை கொன்றுவிட்டதால், இறுதியாக அவர்கள் மறைய வேண்டியிருந்தது. அதனால் இப்போது சுஃபீஸ் இருக்கிறார்கள், ஆனால் அவர்களை உங்களால் தெரிந்துக்கொள்ளமுடியாது. யாரோ ஒருவர் பெருக்குபவராக இருப்பார்; அவர் சுஃபியாக இருக்கலாம் என்பதை உங்களால் துப்பறிய முடியாது. யாராவது ஒருவர் உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாலே ஒழிய உங்களுக்குத் தெரியமுடியாது. அவர் தினமும் உங்கள் வீட்டிற்கு வருவார், ஆனால் இவரிடம் ஏதோ சாவியிருக்கும் என்பதை உங்களால் அறியமுடியாது.
அவர் வெறும் செருப்பு தைப்பவராக இருக்கலாம். அவர் தொடர்ந்து செருப்புத் தைத்துக்கொண்டிருப்பார், அங்கு உட்கார்ந்துக்கொண்டிருப்பவர்களெல்லாம் செருப்பு தைக்கும் கலையில் பயிற்சி பெற்றவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். சில வாடிக்கையாளர்கள் இருப்பார்கள், ஆனால் உண்மையில் அவர்களில் சிலர் அவரிடம் செருப்பு தைப்பதில் மட்டும் பயிற்சி எடுக்காமல், அவருடைய சிஷ்யர்களாகவும் இருப்பார்கள். இந்த செருப்புத் தைக்கும் தொழில் ஒரு முன்தோற்றமாகத்தான் இருக்கும். உள்ளே, வேறு ஏதோ போய்க்கொண்டிருக்கும்.
வெளிப்புறமாக இருக்கும் பாரம்பரியத்தில் சுஃபிகளை பொறுத்துக்கொள்ள முடியாத தால் அவர்கள் மொத்தமாக மறையவேண்டியிருந்தது. அவர்கள் கொல்லப்படுவார்கள், ஏனெனில் உள்ளே இருப்பதை, தொடர்ந்தால், பின்பு வெளிப்புற பாரம்பரியத்திற்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடுவதுடன், அது அர்த்தமற்றதாகவும் ஆகிவிடும்.
யார் ஒருவர் தன்னைத்தானே கண்டுபிடிக்கிறார்களோ, யார் ஒருவர் தானே சாவிகளைத் திட்டமிடுகிறார்களோ, யார் ஒருவருக்கு விஷயங்களின் மூலாதரத்தை தானே தெரிந்துக்கொண்டாரோ, யார் ஒருவர் தானே உண்மைகளை நேருக்கு நேர் எதிர்க்கொண்டாரோ, அவர் மட்டும்தான் குரு. பின்பு எப்போதுமே இரண்டு பிரிவுகள் இருக்கும். சில சமயங்களில் குருக்கள் எந்த வெளிப்புற குழுக்களையும் அனுமதிப்பதில்லை. புத்தர் காலத்தில், புத்தருடன் சமமான ஸ்தானத்திலேயே இன்னும் ஏழு குருக்கள் இருந்தார்கள். நீங்கள் அவர்கள் பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அதில் ஒருவர் தான் தெரிந்திருக்கிறது – மஹாவீரர், மற்ற ஆறு நபர்களையும் முற்றிலும் தெரியவில்லை. அவர்களிடம் சாவிகள் இருந்தன – புத்தர், மஹாவீரர் அளவிற்கு விஷயமும் இருந்தது – ஆனால் அவர்கள் வெளிப்புறமாக சுற்றி எந்த குழுவையும் அமைக்க அனுமதிக்கவில்லை. நெருங்கியக் குழு மட்டும்தான் எப்படியோ, எங்கோ தொடர்ந்தது. அதில் ஒருவர் பிரபுத்த கட்யாயான் (Prabuddha Katyayan), இன்னொருவர் பூர்ண காஷ்யாப் (Purna Kashap) இன்னொருவர் அஜித் கேஷ் கம்பல் (Ajit Kesh Kambal) - இவர்கள் புத்தர், மஹாவீரருக்கு அதே ஸ்தானத்தில் அதே அந்தஸ்த்தில், அதே உள்ளார்ந்த உணரக்கூடிய தன்மையுடன் இருந்தார்கள். இவர்கள் பெயர்களை புத்தர் குறிப்பிட்டுள்ளதால் தெரியும் அவ்வளவுதான். வேதநூல்கள் எதுவும் காணப்படவில்லை, பின்பற்றுதல் இல்லை, கோவில்கள் இல்லை, கிறிஸ்துவ தேவாலயங்கள் இல்லை ஆனால் அவர்கள் மறைந்து, மெல்லிய வழிகளில் இன்னும் தொடர்கிறார்கள். அவர்கள் பலருக்கு உதவவில்லை என்று யாரும் சொல்லமுடியாது; அவர்கள் உதவியிருக் கிறார்கள். அவர்களை பல பேருக்கு தெரியாது, ஆனால் அவர்கள் பல பேருக்கு, எந்த புத்தர் அளவிற்கும் உதவியிருக்கிறார்கள்.
புத்தர் பெயர் தெரிந்தது; முழு உலகத்திற்கு அவரைப்பற்றித் தெரியும். ஆனால் நமக்கு அதிகமாக அவரைப் பற்றித் தெரிந்திருக்கும் அளவிற்கு அவரை குறைவாகவே பயன்படுத்தமுடியும். அவருக்கு நெருங்கிய வட்டம் இருக்கிறது, அவர்கள் மட்டும்தான் அர்த்தமுள்ளவர்கள். ஆனால் அவர்களுக்கு எப்போதும் வெளிப்புற மத சம்மந்த வரிசையுடன் சண்டை நேர்ந்தது. வெளிப்புற வரிசை எப்போதும் சக்தி வாய்ந்தது, ஏனெனில் கும்பல் அத்துடன் இருக்கிறார்கள், எப்போதும் சண்டையிருக்கும்.
புத்தர் மிகக் குறிப்பாக தேர்ந்தெடுத்து ஒரு வட்டத்தை உருவாக்கினார். அவர் அந்த வட்டத்தை மஹா காஷ்யபா (Maha Kashyaba) என்ற ஒருவருடன் உருவாக்கினார். இந்தப் பெயர் ஒரே ஒரு முறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது. சாரிபுட்டா (Sariputta) என்பவரும், மொகலாயன் (Moggalayan) என்பவரும்தான் வெளிப்புற வரிசையில் அவருடைய பிரதான சிஷ்யர்கள், அவர்களுடைய பெயரும் உலகம் முழுவதற்கும் தெரியும், அவர்களுக்கு புண்ணியஸ்தலம் உள்ளது. ஆனால் உண்மையான ஆதாரப்பூர்வமான சாவி மஹா காஷ்யபாவிடம் கொடுக்கப்பட்டது – சாரிபுட்டாவிடம் அல்ல. மொகலாயரிடம் அல்ல. ஆனால் அவருடைய பெயர் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, முழு புத்த வேத புத்தகத்தில் ஒரே ஒரு முறைதான்.
நான் அந்த சம்பவத்தை விளக்குகிறேன்.....
ஒருநாள் புத்தர் தன் கையில் பூவுடன் வந்தார். அவர் ஒரு ஆன்மீக சொற்பொழிவைத் தரவேண்டும். ஆனால் எந்த சொற்பொழிவும் கொடுக்காமல், அவர் பூவைப் பார்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார். அவர் என்ன செய்கிறார் என்று எல்லோரும் வியந்தார்கள். அது பத்து நிமிடங்களுக்கு, இருபது, முப்பது நிமிடங்களுக்கு.... தொடர்ந்தது. பின்னர் ஒவ்வொருவரும் அசௌகரியம் அடைந்தார்கள். யாராலும் அவர் என்ன செய்கிறார் என்பதை சொல்லமுடியவில்லை. அவர்கள் எல்லோரும் கூடியிருக்கிறார்கள் – குறைந்தபட்சம் பத்தாயிரம் நப்ரகளாவது இருப்பார்கள் – அவர் பேசுவதை கேட்பதற்கு. அவரோ பூவை மட்டும் பார்த்துக்கொண்டு வெறுமனே உட்கார்ந்திருந்தார்.
மஹா காஷ்யபா சிரித்தார். புத்தர் அவரைப் பார்த்து “மஹா காஷ்யபா என்னிடம் வா” என்றார். அவர் அந்தப் பூவை மஹா காஷ்யபாவிடம் கொடுத்துவிட்டு “எதையெல்லாம் என்னால் சொல்லமுடியுமோ அதையெல்லாம் நான் எல்லோரிடமும் சொல்லிவிட்டேன், எதையெல்லாம் சொல்லமுடியாதோ அதையெல்லாம் மஹாகாஷ்யபாவிடம் கொடுத்துவிட்டேன்” என்றார். இதற்கு முன்னரோ, அல்லது பின்னரோ மஹா காஷ்யபாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை – அவர் யார் என்றோ, எங்குப் பிறந்தார் என்றோ எந்தத்தகவலும் இல்லை. ஏன் இந்த மொத்த புனித நூலும் அவரைப்பற்றி மௌனமாக இருக்கிறது? - புத்தர் “நான் மஹா காஷ்யபாவிடம் என்னால் சொல்லமுடியாததை கொடுக்கிறேன்” என்று சொல்லுமளவிற்கு முக்கியமானவர் அவர். நிச்சயமாக, முக்கிய விஷயம் “எதை சொல்லமுடியாதோ” முக்கியம் இல்லாததைதான் சொல்லமுடியும், மேல்வாரியாகத்தான் சொல்லமுடியும், உபயோகம் உள்ளதைதான் சொல்லமுடியும். மிக விசேஷ அர்த்தமுள்ள விஷயங்களை மௌனத்தில்தான் மாற்றமுடியும். ஆனால் திரும்பவும் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு யாருக்கும் மஹா காஷ்யபாவிற்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பின்னர் பதினோரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒருவர் சைனாவில் “நான் மஹா காஷ்யபாவின் நேரடி சங்கிலியில், நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன்” என்று பிரகடனப்படுத்தினார்.
பதினோரு நூற்றாண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒருவர் சைனாவிலிருந்து “நான் மஹாகாஷ்யபாவை சார்ந்தவன், நான் அவருடைய சிஷ்யன்” என்றார். அவர்தான் போதிதர்மா. எந்த இந்திய புனித நூல்களிலும் போதிதர்மா குறிப்பிடப்படவில்லை. அவர் இந்தியாவில் பிறந்து, நான்கில் மூன்று பங்கு இந்தியாவில் வாழ்ந்தார். யாருக்கும் அவரைப்பற்றித் தெரியாது – அவர் எங்கிந்தார் என்றோ, என்ன செய்தார் என்றோத் தெரியாது. திடீரென்று அவர் சைனாவில் தோன்றி “நான் மஹாகாஷ்யபா வைச் சார்ந்தவன், புத்தரிடமிருந்து பூவைப் பெற்றவன். அந்தப் பூவை நான் வைத்திருக்கிறேன், இன்னும் புதியப் பொலிவுடன்” என்கிறார்.
நிச்சயமாக, அது பொலிவுடன் இருப்பதைத் தவிர வேறுவிதமாக இருக்கமுடியாததைப் பற்றி அவர் பேசுகிறார். யாரோ ஒருவர், “எங்கே அந்த மலர்?” என்றுக் கேட்டதற்கு, போதிதர்மா “அவன் உங்கள் முன்னாலேயே நிற்கிறான் – நான்தான் அந்த மலர். இந்த மலரை புத்தர் மஹா காஷ்யபாவிடம் மாற்றிக் கொடுத்தார், இப்போது நான் ஒரு சரியான நபரைத் தேடி வந்திருக்கிறேன், ஏனெனில் இப்போது நான் இறக்கப் போகிறேன். இதுதான் என்னுடைய கடைசிப் பிறவி. அதனால் இங்கு யாரோ ஒருவர், கொடுக்கத்தக்கதாக இருக்கிறார் என்று ஒரு குறிப்பிட்ட தகவலுடன் நான் இந்தியாவிலிருந்து, சைனாவிற்கு பயணித்து வந்திருக்கிறேன். அதனால் நான் அவரை தேடித்தான் வந்திருக்கிறேன். ஆனால் அந்தத் தகவல் கிடைத்த, அதே மூலாதாரக்கிலிருந்து இன்னொன்றும் தெரிவித்திருக்கிறார்கள், அதாவது நான் அவரிடம் போகக்கூடாது, அவர்தான் என்னிடம் வரவேண்டும் என்று. அதனால் நான் காத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.
அவர் “தகவல் கிடைத்த மூலாதாரம்” என்பதின் மூலம் அவர் எதைக் குறிப்பிடுகிறார்? இரகசியக் குழு யாரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதை நபர்களிடம் சொல்லிக் கொண்டேயிருக்கும். போதிதர்மா “ஆனால் அதே மூலாதாரம் என்னிடம், நான் அவரைத் தேடிச் செல்லக்கூடாது என்று தெரிவித்திருக்கிறது”, என்றார், ஏனெனில் சில நேரங்களில் நேரடியாகத் தேடுவது குறிக்கிடுவதாகிறது. நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் அது ஒரு விஷயம்; நீங்கள் என்னிடம் வந்தால் அது முற்றிலும் வேறு விஷயமாகிறது. நான் உங்கள் வீட்டிற்கு வந்தால், நீங்கள் எனக்கு மூடியிருப்பீர்கள்; நீங்கள் என்னிடம் வந்தால் நீங்கள் திறந்திருப்பீர்கள். நீங்கள் வந்துவிட்டீர்கள்.
போதிதர்மா, “அதே தகவலின் மூலாதாரம்தான் என்னிடம் நான் காத்திருக்கவேண்டும் என்றும், அதே மூலாதாரம் என்னிடம் எப்படி அந்தப் பூவை கொடுக்கவல்ல ஒருவனைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் எனக்கு குறிப்பிட்டு, கோடிட்டு காட்டியுள்ளது” என்றார். அதனால் அவர் யாரையும் பார்க்காமல் சுவற்றை பார்த்து உட்கார்ந்திருந்தார். நிறைய மனிதர்கள் அவரிடம் வருவார்கள். அந்த சீன நாட்டு மன்னரான வூ (Wu) அவரை பார்க்க வந்தார். ஆனால் போதிதர்மா தன் முகத்தைத் திருப்பவில்லை. அவர் சுவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்.
வூவின் அரசவை உறுப்பினர், அவரிடம் அரசர் வருகிறார் என்றும், மன்னருக்கு முன்னால் சுவற்றைப் பார்த்து உட்கார்ந்திருப்பது அவ்வளவு நல்லதாய் இருக்காது, மிக பண்பில்லாமல் இருக்கும் என்றெல்லாம் சொல்லி இசைய வைக்க முயற்சித்தார். போதிதர்மா “நான் அரசரிடம் போகவில்லை, அரசர் என்னிடம் வருகிறார். இந்த பண்புகள் இல்லாத போதிதர்மாவிடம் வரலாம், வேண்டாமா என்று அவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதற்கு அவருக்கு சுதந்திரம் இருக்கிறது. நான் அவரிடம் வரவில்லை” என்றார்.
“நான் அவரிடம் போகவில்லை, அவர் என்னிடம் வருகிறார், அதனால் அவர் தேர்ந்தடுத்துக்கொள்ளட்டும். அவருக்கு வரவேண்டுமானால் அவர் நான் இருப்பதைப் போலவே வரவேண்டும்” என்று போதிதர்மா சொன்னதை அரசர் கேட்டுவிட்டார். வூ வந்தார். அவர் வந்துதான் ஆகவேண்டும். அவருக்கு அது பிடிவாதமாகிவிட்டது. இந்த மனிதனை நாம் பார்க்க வருவதற்கு அவன் தகுதியானவனா என்று சரிபார்க்க முடியவில்லை. போதிதர்மா சுவற்றைப் பார்த்து உட்கார்ந்திருந்தார். வூ அவரிடம் “நீங்கள் ஏன் சுவற்றை பார்த்து உட்கார்ந்திருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் என்னை பார்க்கமாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் ஏன் மற்றவர்களையும் பார்ப்பதில்லை?” எனக் கேட்டார்.
போதிதர்மா அதற்கு “என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களையும், மற்றவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன், ஆனால் அவர்களின் கண்களில் நான் இந்த சுவற்றைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அதனால் சுவற்றை பார்ப்பதேமேல் என்று முடிவு செய்துவிட்டேன். ஒருவருக்கு ஒரு சுவர் இருக்கிறது என்று தெரிந்தால் சௌகரியமாக இருக்கும். யாரையாவது பார்த்தபிறகு அங்கே சுவற்றை உணர்வது இன்னும் கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் எனக்கு பின்னால் இருப்பதாலும், நான் உங்களை பார்க்காததாலும் என்னால் இன்னும் சௌகரியமாக பேசமுடிகிறது” என்றார்.
ஒன்பது வருடங்களுக்குத் தொடர்ந்து அவர் அப்படியே சுவற்றைப் பார்த்து உட்கார்ந்திருந்தார். யாரிடம் சொல்வதற்கு இவருக்கு குறிப்பிட்ட தகவல் இருந்த தோ, அவர் வந்தார். ஹூய் நிங் (Hui Neng) என்பவர் வந்தார். அவர் தன் கைகளை வெட்டு போதிதர்மாவிடம் கொடுத்துவிட்டு” முற்றிலும் திரும்பி உட்காருங்கள், இல்லாவிட்டால் நான் தலையை வெட்டிக் கொள்வேன்” என்றார். போதிதர்மா முழுவதும் திரும்பி உட்கார்ந்தார், ஹூய் நிங்யை பார்த்து, “நான் இந்த மலரை உன்னிடம் கொடுக்கிறேன். நான் காத்துக்கொண்டிருந்தேன். ஒரு அறிவின் மூலாதாரம் என்னிடம் அடையாளம் கொடுத்தது – அந்த நபர் வருவார், தன் கையை வெட்டிக்கொள்வார், அதை உங்கள் முன் போடுவார், நீங்கள் ஒரு வினாடி தாமதித்தால் அவர் தன் தலையை வெட்டிக் கொள்வார். அவசரப்படாதே. நான் எதற்காக இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வந்தேனோ, அந்த விஷயத்தை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்” என்றார்.
இரகசியமாக இருந்த சென் (Zen) மத அணுசரணை முறை, இப்போது வழக்கமான வெளிப்புறத்து சென் (Zen) மத அணசரணை முறையில் மலர்ந்திருக்கிறது. சென் (Zen) புத்த மதம் என்பது இரகசிய போதிதர்மா பாரம்பரியத்தை சுற்றி இருக்கும் வெளிப்படையான மத அணுசரணை முறைதான். இப்போது என்னவெல்லாம் சுஸூகி (Suzuki) என்பவரும், மற்றவர்களும் உலகெங்கும் என்ன பேசுகிறார்களோ, அது வெளிப்புறத்திலிருந்து அறிவது, இரகசியமானதல்ல. இது திரும்பவும் மறைந்திருக்கிறது; அது மறுபடியும் மறைந்துவிட்டது. ஆனால் அந்த மின்சார சக்தி (Current) உள்ளது, அது தொடர்கிறது. அதனால்தான் இரகசிய குழுக்கள் இருக்கின்றன. அவை பல காரணங்களுக்காக இருக்கின்றன.
நீங்கள் என்னிடம், நான் எப்படி இரகசிய குழுவுடன் தொடர்பு வைத்திருக்கிறேன் என்று கேட்டீர்கள். உங்களால் ஒன்றுடன் தொடர்புக்கொள்ள முடிந்தால், பின்பு நீங்கள் எல்லாவற்றுடனும் தொடர்புக்கொள்ளலாம். இது வானொலியை திருப்புவதுபோலத்தான். உங்கள் வானொலியால் ஒரு நிலையத்துடன் வேலை செய்ய முடியும் என்றால், பின்பு அதற்கு மற்ற நிலையங்களுடன் வேலை செய்ய கஷ்டமிருக்காது. இயந்திர அமைப்பு சரியாக வேலை செய்தால், உலகை சுற்றியிருக்கும் எந்த நிலையத்தை வேண்டுமானாலும் பிடிக்கலாம். உங்களால் ஒரு இரகசிய குழுவுடன் தொடர்பு வைத்துக்கொள்ள முடிந்தால், எல்லா இரகசிய குழுவுடனும் தொடர்பு வைத்துக்கொள்ள முடியும். உங்களுக்குத் தொடர்பு வேண்டியிருக்கும் அல்லது தேவையில்லாமலிருக்கும், ஆனால் ஒருமுறை உங்களுக்கு இணக்கம் செய்ய தெரிந்தால், நீங்கள் தொடர்புக்கொள்ளலாம். பலமுறை நீங்கள் இரகசிய குழுவை எதிர்கொள்வீர்கள், ஆனால் அந்த வாய்ப்பையும், தடத்தையும் தொலைத்துவிடுவீர்கள்.
நான் என்னவெல்லாம் செய்கிறேனோ, அதுவெல்லாம் பல வழிகளில் மறைந்திருக்கும் இரகசியங்கள்தான். அதனால்தான் பலமுறை நான் உங்களுக்கு குழப்பமாக இருக்கிறேன். வெளிப்படையாக கற்பிப்பது எப்போதும் குழப்பத்தை உண்டாக்காது, அது தெள்ளத்தெளிவாக இருக்கும். அது இரண்டையும், இரண்டையும் கூட்டினால் நான்கு என்பதுபோல மிக சாதாரணமானது. ஆனால் இரகசிய குழுவிடமிருந்து வருவது உள்ளார்ந்தது, இரகசியமானது, புரிந்துக்கொள்வது கடினமானது, ஏனெனில் புது விஷயத்தை கிரகித்துக்கொள்ளவேண்டும் என்றபோது நம்முடைய புரிந்துக் கொள்ளும்தன்மை தொந்தரவு அடைகிறது.
உங்களுக்குத் தெரிந்திருக்கும் விஷயத்தை, உங்களால் சீக்கிரமாக கிரகித்துக்கொள்ள முடியும். அது உங்களின் ஒரு பாகமாகிவிடும். அதை உங்களால் சுலபமாக ஜீரணிக்க முடியும். உங்களுக்கு புதியதாக இருக்கும் எதுவும் உங்களுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும். எந்த மறைவான விஷயத்தையும் கணித ரீதியில் சொல்லமுடியாது. அதை பூடகமாக தரவேண்டும், அதை கவிதையாகத் தரவேண்டும். பின்பு அது இருப்பதாகிவிடும். ஒரே சமயத்தில், அதற்கு பல விஷயங்கள் இருக்கும்.
நான் பல இரகசிய குழுக்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். ஒரு குழுவைச் சார்ந்தவர்கள், இன்னும் உயிருடன் இருக்கும் பலபேரை எனக்குத் தெரியும். உண்மையான குருக்களால் கொடுக்கபட்ட பல சாவிகளை எனக்குத் தெரியும். ஆனால் பழைய பாரம்பரியத்தில் எந்த சாவியும் போதாது, அதனால் நான் சாவிகளை திட்டமிட்டுச் செய்வதினால், நான் எந்த இரகசிய குழுவுடனும் நேரடித் தொடர்பில் இல்லை, ஏனெனில் குறிப்பிட்ட சாவிதான் அதனிடம் பாதுகாப்பதற்காக கொடுக்கப் பட்டுள்ளது, அதனால் அதுவும் அதில்தான் ஆர்வமாக இருக்கும். நான் ஒரு குறிப்பிட்ட சாவியிடம் மட்டும் விருப்பமாக இல்லை. எனக்கு பல புதியமுறைகளை திட்டமிட்டு உருவாக்குவதிலும் புதிய நுணுக்கங்களை உருவாக்குவதிலும்தான் விருப்பம் இருக்கிறது, ஏனெனில் பழைய சாவிகள் பல விதத்தில் சம்மந்தமில்லாமல் போய்விட்டது.
இந்த சாவிகள் அனைத்தும், இந்த உலகம், உள்ளூர் உள்ளூராக (Local) இருக்கும் போது தயாரித்தது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அது எப்போதும் உள்ளூராக இருந்தது. முதன்முறையாக நாம் முழுமையாக உள்ளூராக இல்லாமல், இப்பிரபஞ்ச மாகவே இருக்கும் உலகத்தில் இருக்கிறோம். உண்மையாக, முதல்முறையாக நாம் உலகத்தில் இருக்கிறோம். முன்பு, நாம் எப்போதும் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தின் எல்லைக்குட்பட்டுதான் இருந்துவந்தோம். அந்த சாவிகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட உள்ளூர் சூழ்நிலையையும், பண்பாட்டையும் பொறுத்தே தயாரிக்கப்பட்டது. இப்போது முதல்முறையாக, ஒரு வகையில் பார்த்தால் எல்லாம் கலந்த குழப்பமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பண்பாடோ, ஒரு குறிப்பிட்ட வகையில் பதப்பட்டிருப்பதோ கிடையாது. எல்லாம் கலந்துவிட்டது. இது இன்னும் அதிகமாகிக்கொண்டே போகப் போகிறது. கூடிய விரைவில் உள்ளூர் பின்னணி இல்லாமல், பிரபஞ்சத்தின் பின்னணியோடு உலகத்தின் பிரஜையாக இருப்பார்கள்.
இந்த நூற்றாண்டு முடிவதற்குள் நமக்கு தேவைப்படும் – நமக்கு ஏற்கனவே தேவைப்படுகிறது, பிரபஞ்சத்திற்கு பொதுவான சாவிகள். உதாரணத்திற்கு இயேசுவின் சாவி, அந்த குறிப்பிட்ட யூதர்களின் கூட்டத்திற்காக செய்யப்பட்டது இயேசு யூதர்களின் மனதிற்காக, ஒரு சாவியை கண்டுபிடித்து, திட்டமிட்டுச் செய்தார் என்பது உண்மையிலேயே வரலாற்றில் விதியின் திருவிளையாடல். இப்போது யூதர்கள் அவருக்கு எதிராக இருக்கிறார்கள், அவரை பின்பற்றுபவர்களும் யூத மதத்திற்கு எதிரானவர்கள். குறிப்பிட்ட யூதர்களின் பதப்பட்ட மனதிற்காக திட்டமிட்டுச் செய்த சாவி அது. என்னைப் பொறுத்தவரை இயேசுவை கிறிஸ்துவர்களைவிட யூதர்கள் அதிகமாக பயன்படுத்திக்கொள்ளலாம், ஏனெனில் கிறிஸ்துவ மதம் பின்னர் வெளியில் வளர்க்கப்பட்டதுதான்; இயேசுவுக்கு எந்த கிறிஸ்துவரையும் தெரியாது. அவரே முதலில் கிறிஸ்துவர் கிடையாது. அவர் யூதர். ஆனால் இது நம் வரலாற்று விதியின் திருவிளையாடல்.
புத்தர் ஒரு குறிப்பட்ட மனதிற்காக திட்டமிட்டு சாவியை தயாரித்தார். இப்போது இந்தியாவில் மட்டும்தான் அந்த மனம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் எந்த இடத்திலும் அவர் சாவி இல்லை. அது சீனாவில், ஜப்பானில், இலங்கையில், பர்மாவில், திபெத்தில் இருக்கிறது, இந்தியாவில் இல்லை. ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட வகையான இந்து மனதிற்காக அந்த சாவியை திட்டமிட்டு வகுத்தார். அவர் இந்துவாக பிறந்தார். அவர் இந்துவாக இருந்தார். அவருக்கு எந்த புத்த மதத்தைப்பற்றியும் தெரியாது. அதனால் சாவி இந்துக்களின் மனதிற்கேற்ப செய்யப்பட்டது, பின்பு அந்த சாவி இந்துக்களின் மனதிற்கேற்ப செய்யப்பட்டது, பின்பு அந்த சாவியை சுற்றி ஒரு உட்பிரிவு வளர்ந்து அது இந்துக்களுக்கு எதிராகப்போகிறது. பின்பு அந்த சாவி சம்மந்தமில்லாமல் போகிறது. ஒரு குறிப்பிட்ட இந்து மனதைத் தவிர, பின்பு இது யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் போகிறது. ஆனால் இதுதான் வரலாற்றின் திருவிளையாடல். இது எப்போதும் இப்படித்தான் நடக்கிறது.
அதனால் நான் போராடி ஒருவகையில் உலகத்தார் அனைவரும் பயன்படுத்தும் வகையில் திட்டம் தீட்டி சாவிகளை செய்து வருகிறேன் – ஒரு குறிப்பிட்ட உள்ளூர் பண்பாட்டிற்கு மட்டுமல்லாமல், மனித மனம் முழுவதற்கும், கூடிய விரைவில் நமக்கு அது தேவைப்படும், உள்ளூர் சாவிகள் போதாது. இந்த எல்லா சாவிகளை ஒன்று சேர்த்தாலும் ஒன்றும் ஆகாது, இதன் கலவைகளாலும் ஒன்றும் ஆகாது. இதனால் இன்னும் அர்த்தமற்றதாகத்தான் போகும். நீங்கள் ஒரு பூட்டை, பல சாவிகளைக் கொண்டு திறக்கிறீர்கள்: குரானில் இருந்து சில விஷயங்கள், பைப்பிளிலிருந்து சில விஷயங்கள், புத்தரிடமிருந்து சில விஷயங்கள், மஹாவீரரிடமிருந்து சில விஷயங்கள். மேலும் நிறைய மக்கள் நல்ல எண்ணத்துடன் பல கெட்ட விஷயங்களை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லா மதங்களையும் ஒன்று சேர்ப்பதை குறித்துப் பேசுகிறார்கள். அது ஒரு பூட்டை திறப்பதற்காக எல்லா சாவிகளையும் ஒன்று சேர்ப்பதைப் பற்றி பேசுவதாகும் – எல்லா சாவிகளை ஒன்று சேர்ப்பதா! ஒன்று போதுமானது, நிறைய சாவிகளைக் கொண்டு உங்களால் ஒரு பூட்டைத் திறக்கமுடியாது. ஒன்று திறந்திருக்கக்கூடும், இப்போது பல சாவிகளினால் முடியாது.
உலகம் தனித்தனியாக பிரிந்திருக்கும்போது உள்ளூருக்காக செய்யப்பட்ட சாவிகள் அவை. அப்போது பிரபஞ்சத்திற்கு பொதுவான மனம் என்பது கிடையாது – நாம் வரலாறு எனப்படும் வரலாற்றுக்கு இதுவரை அப்படி ஒன்று இருந்ததாகத் தெரியாது. சில நேரங்களில் அபூர்வமாக பிரபஞ்சத்தின் மனதுடன் இருப்பவர்கள் நிகழ்ந்திருக்கிறார்கள், ஆனால் அது நம்முடைய சமுதாய பண்பாடு வளர்ச்சியைக் கடந்தது, நம்முடைய நினைவாற்றலைக் கடந்தது. இந்த அபூர்வமான சம்பவமான பிரபஞ்ச மனம் முன்னால் நிகழ்ந்திருக்கிறது, ஆனால் அது முழுவதும் மறக்கப்பட்டுவிட்டது. உதாரணத்திற்கு, நான் இரண்டு விஷயங்களை சொல்கிறேன். இங்கிலாந்தில், அவர்கள் நடுராத்திரியில் தேதியை மாற்றுவார்கள். உண்மையில் பார்க்கப்போனால் அது அர்த்தமில்லாமல் இருக்கிறது. இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, இந்த தேதியை மாற்றுவதற்காக யாரும் தூக்கத்தை விட்டுவிட்டு விழித்திருக்கப் போவதில்லை. அது நியாயமானதல்ல, நடக்கக்கூடியதல்ல. தேதி காலையில் மாற்றப்பட வேண்டும் – அதுதான் பொது அறிவாக இருக்கும். நீங்கள் எப்போதும் காலையில்தான் தேதியை மாற்றுவீர்கள். ஆனால் இது ஏன் இப்படி செய்யப்பட்டுள்ளது? அதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது.
இந்தியாவில், காலை ஐந்தரை மணியாக இருக்கும்போது, அது இங்கிலாந்தில் நடு இரவாக இருக்கும். இந்த நாகரீகப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு முன்னால் இந்துக்களின் கொள்கை உலகெங்கும் ஆட்சி செய்துவந்த ஒரு காலம் இருந்தது. எப்படி பிரிட்டிஷ் ராஜ்ஜியம் உலகம் முழுவதும் இருந்ததோ அவ்வாறு இருந்தது. கிரீன்விச் (Greenwich) நேரம்தான் உண்மையான நேரம், எல்லோரும் அதை சரிபார்த்துக்கொள்வார்கள். இப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு கிரீன்விச் நேரம் கிட்டத்தட்ட மறந்துவிட்டது. பத்து அல்லது பதினைந்தாயிரம் கணக்கான வருடங்களுக்குப் பிறகு அதைப்பற்றி யாருக்கும் தெரியாது.
மஹாபாரதத்திற்கு முன்பும் ஒரு உலகம் இருந்தது – மஹாபாரதம் ஒரு இந்திய வரலாற்றுக்கு முந்திய போர் – இந்துவின் மனம் முழு உலகத்தை ஆட்சி செய்துவந்த போது, எப்போதெல்லாம் இந்தியாவில் காலையாக இருந்ததோ, அதுதான் தேதியை மாற்றுவதற்கு சரியான நேரம், அப்போதெல்லாம் அது இங்கிலாந்தின் நடு இரவாக இருந்தது. அதனால் அவர்களும் தேதியை மாற்றிக்கொண்டிருந்தார்கள். அது தொடர்ந்தது.
இங்கிலாந்தில் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு அரசவை, ஜனவரி 1லிருந்து வருடம் தொடரவேண்டும் என்ற ஒரு சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றியது என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் வருடம் மார்ச் 25ம் தேதியுடன் முடிந்துக்கொண்டிருந்தது. ஆனால் மார்ச் 25 வுடன் ஒரு வருடத்தை முடிப்பதற்கான அர்த்தம் என்ன? அதில் எந்த அர்த்தமும் கிடையாது. ஆனால் இந்திய வருடம் அதனுடன்தான் முடிந்தது. மார்ச் 25ம் தேதி இந்திய வருடம் முடிந்தது. அதுவேதான் உலகம் முழுவதிலும் இருந்தது. அவர்கள் இதை மாற்று வதற்கு சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டியிருந்தது.
ஆங்கிலத்தில் டிசம்பர் என்ற வார்த்தைக்கு பத்தாவது மாதம் என்று அர்த்தம், ஆனால் அது பண்ணிரெண்டாவது மாதம். டிசம்பர் என்ற வார்த்தை துஷ் – பத்து என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வருகிறது. ஆனால் எதனால் பண்ணிரெண்டாவது மாதமானது? அது இந்திய வருடத்தின்படி அது பத்தாவது மாதம். இந்த பழைய பாரம்பரியம் தொடர்ந்திருக்கிறது; அவர்களுடைய காலத்தைக் குறிக்கும் அட்டவணை இந்தியாவிலிருந்துப் பெற்றது.
டிசம்பர் மாத கடைசி வார்த்தை உலகம் முழுவதும் X’MAS என்று அழைக்கிறார்கள். X என்பது ரோமன் எண்களில் பத்து, MAS என்றால் சமஸ்கிருதத்தில் மாதம். X’MAS என்றால் பத்தாவது மாதம், இது டிசம்பர் என்று அர்த்தம். ஆனால் ஏன் டிசம்பர் பத்தாவது மாதமாக இருக்கக்கூடாதா? ஆனால் அது இந்திய காலத்தைக் குறிக்கும் அட்டவணைப்படி அது பத்தாவது மாதம், மஹாபாரதத்திற்கு முன்பு, கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்.
மஹாபாரதத்தை பற்றி இருக்கும் நூல்களில், அர்ச்சுனர் மெக்சிகோ (Mexico) வைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கதைகள் இருக்கின்றன. சமஸ்கிருத வார்த்தையான மேக்சிகோ (Maxika), மெக்சிகோ என்றானது. மெக்சிகோவில் முன்பிருந்த கலாச்சாரத்தில் நிறைய இந்து அடையாளங்களை பார்த்தால், அதை இந்துக் காலாச்சாரத்தைச் சார்ந்தது என்று சொல்லாமல் இருக்கமுடியாது. முழு மெக்சிகனின் கலாச்சாரமும் இந்துவாக இருந்தது. இந்து கோவில்கள், இந்துக் கடவுள், இன்னும் விநாயகரின் சிலைக்கூட அங்கு இருந்தது. ஆனால் இப்போது அப்படி ஒன்று இருந்ததாகவே தெரியவில்லை.
நாம் திரும்பவும் ஒரே உலகத்திற்கு வந்துவிட்டோம், அர்ச்சுனர் திரும்பவும் ஒரு மெக்சிகனின் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம். கூடிய விரைவில் எந்த உள்ளூர் பண்பாடும் இருக்காது. இந்த குவிக்கப்படாத பண்பாட்டிற்கு, நாம் புதிய மற்றும் மாற்றத்தக்க சாவிகளை உருவாக்கவேண்டும் – நிறைய பூட்டுகளுக்கு உபயோகிக்கும்படியாக, குறைந்த திடத்துடன், நிறைய மாற்றங்களை ஏற்கும் வகையில் இருக்கவேண்டும்.
எனக்கு நிறைய இரகசிய குழுக்களைத் தெரியும் – இந்த வாழ்க்கையிலும், அதற்கு முன்பும் நான் நிறைய இரகசிய குழுக்களுடன் தொடர்புகொண்டிருக்கிறேன், ஆனால் அவைகள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரத்தை என்னால் உங்களுக்கு சொல்ல முடியாது. என்னால் அவர்களுடைய பெயர்களை சொல்லமுடியாது. ஏனெனில் அதற்கு அனுமதி கிடையாது. மேலும் அதனால் உங்களுக்கு எந்த பயனும் கிடையாது. ஆனால் அவைகள் இன்னும் இருக்கிறது, அவைகள் இன்னும் உதவி செய்ய முயற்சிக்கிறது என்றளவிற்கு நான் சொல்லலாம்.
சில குழுக்கள் இன்னும் உயிருடன் இருக்கிறது – உதாரணத்திற்கு அசோகாவின் குழு. அசோகா மற்ற அரசர்களைவிட அர்த்தமுள்ளதாக ஏதாவது செய்தார் என்றால், அது இந்த இரகசியக் குழுவை உருவாக்கியதுதான். அக்பர் அசோகரை நிறைய வழிகளில் அதேப்போல் செய்ய முயற்சித்தார். அவர் ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார், ஆனால் அது அர்த்தமற்றது. அவர்கள் வெறும் அரச சபையினர்கள் தான் – நவரத்தினா, “அக்பரின் ஒன்பது நவரத்தினங்கள்”. ஆனால் அவைகள் பொய்யான ஆபரணங்கள், வெளிப்புறமானது – யாரோ ஒருவர் கவிஞராகவும், இன்னொருவர் போர்வீரர்..... அது எந்த அர்த்தத்தையும் தரவில்லை. அசோகர் எங்கிருந்தோ புத்தியுள்ள ஒன்பது நபர்களை வைத்திருந்தார் என்பது அக்பருக்குத் தெரியும், அதனால் அவர் ஒன்பது நவரத்தினங்கள் கொண்ட குழுவை உருவாக்கினார். அவருக்கு அசோகரின் குழுவைப்பற்றி ஒன்றும் தெரியாது.
அசோகரின் குழு இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. அது இன்னும் சாவிகளுடன் உயிருடன் இருந்து உதவுகிறது. முழு பிரம்மஞான குழுவும் இந்தக் குழுவினால் ஆரம்பிக்கவைக்கப்பட்டது. அதனால்தான் பிரம்மஞானத்தில் புத்தர் பிரதானமானவராக ஆனார். முழு பிரம்மஞானமும் ஒரு வகையில் புத்தமதமும், இந்து மதமும் கலந்திருக்கிறது. அதனால்தான் மேற்கத்திய நாடுகளில் இதை மேற்கத்தியர்களை கிழக்கத்தியர்களாக மாற்ற மேற்கொண்ட முயற்சி என்று நினைத்தார்கள் – இது இந்து மதம் புதிய வகையில் கவருவதாக எண்ணினார்கள். இது ஒருவகையில் உண்மையானது, ஏனெனில் இதற்கு தீக்ஷை வழங்கும் குழு, புத்தர் குழுவாக இருந்தது.
நீங்களும் ஏதோ ஒரு இரகசிய குழுவுடன் தொடர்புக் கொள்ளலாம். அதற்கு முறைகளும், நுணுக்கங்களும் இருக்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் உங்களை வைத்து நிறையவே வேலை செய்ய வேண்டும். நீங்கள் இருக்கும்படியே உங்களால் தொடர்புக்கொள்ள முடியாது. நீங்கள் ஒரு இரகசியக் குழுவைக் கடந்து செல்வீர்கள். ஆனால் உங்களால் அதை கண்டுபிடிக்கமுடியாது. நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும், புதிய கோணங்களுக்கு உங்களை இணக்கம் செய்து கொள்ள வேண்டும், புதிய அதிர்வுகளை உணர்வதற்கு; நீங்கள் உணர்ச்சிமிக்கவராக இருக்கவேண்டும்.
பின்பு நீங்கள் என்னை “நீங்கள் இரகசிய குழுவுடன் தொடர்பு வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்கமாட்டீர்கள். உங்களுக்கு என்னுடன் உட்கார்ந்திருக்கும்போதும், என்னுடைய கண்களை பார்க்கும்போதும் தெரியும். நீங்கள் என்னுடைய குரலை வெறுமனே கேட்கும்போதும், அல்லது என்னுடைய மௌனத்தை கேட்கும்போதுக் கூட நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். ஆனால் நீங்கள் உங்களை மாற்றிக் கொண்டால்தான், உங்களை புதிய உண்மைகளுடன் இணக்கப்படுத்திக் கொண்டால்தான் அவர்கள் வருவார்கள் – நீங்கள் புதிய கோணத்திற்கு உங்களை திறந்து வைத்தால்தான்.
இரகசிய குழுக்கள் இருக்கிறது, அது எப்போதுமே இருந்திருக்கிறது. நீங்கள்தான் மூடியிருக்கிறீர்கள். யோசனைகளில் மூடியிருக்கிறீர்கள், சிந்தனைகளில் மூடியிருக்கிறீர்கள், உங்கள் சுயத்தினுள் மூடியிருக்கிறீர்கள், திறப்பதற்கு முடியாமல், ஜன்னல் இல்லாமல், கதவு இல்லாமல் இருக்கிறீர்கள். வானம் அங்கிருக்கிறது – சும்மா ஜன்னலை திறங்கள், உங்களுக்கு வானத்தையும், நட்சத்திரங்களையும் தெரியும். அவைகள் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் சரி, பக்கத்திலிருக்கும் ஒரு ஜன்னலை சும்மா திறப்பதின் மூலம், நீங்கள் வெகு தூரத்திலிருக்கும் நட்சத்திரங் களுடன் தொடர்பு கொள்கிறீர்கள். ஒருவகையில் இது நியாயமானதாக இல்லை; இவ்வளவு பக்கத்திலிருக்கும் ஒரு ஜன்னலைத் திறந்தால், எப்படி அவ்வளவு தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்? நான் “உங்கள் பின்னால் இருக்கும் ஜன்னலை திறந்து விடுங்கள், பின்பு நீங்கள் இந்த முழு பிரபஞ்சத்துடனே தொடர்புக் கொள்வீர்கள்” என்று சொன்னால், அதற்கு நீங்கள் “இது பைத்தியக்காரத்தனம், சும்மா இவ்வளவு பக்கத்திலிருக்கும் இந்த ஜன்னலைத் திறப்பதின் மூலம், எப்படி அவ்வளவு தொலைவில் இருப்பதுடன் நான் தொடர்பு கொள்ள முடியும்?” என்பீர்கள். ஆனால் அது அப்படிதான். மனதின் ஒரு ஜன்னலை திறந்துவிடுங்கள், அதை தியான ஜன்னலாக ஆக்குங்கள், பின்பு நீங்கள் வெகு தூரத்தில் வெளிச்சத்துடனும், உங்களை சுற்றியிருக்கும் பல நிகழ்வுகளுடனும் தொடர்பு கொள்வீர்கள்.
அந்த ஓரத்திலேயே, உங்களை சுற்றியே எல்லாமே நடக்கிறது. ஆனால் நீங்கள் குருடனாகவோ அல்லது தூங்கிக்கொண்டோ அல்லது தெரிந்துக்கொள்ளாமலோ இருக்கிறீர்கள். நான் இங்கு இருக்கிறேன், நீங்கள் இங்கு என்ன நடக்கிறது என்பதை கற்பனைக்கூட செய்துபார்க்கமுடியாது. உங்களால் கற்பனைக்கூட செய்துபார்க்க முடியாது!
நான் ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தேன். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஏதோ ஒரு பிறந்தநாள் விழாவில் பேசினார். நான் முதலாமாண்டு மாணவனாக இருந்தேன். அப்போது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் “நான் கௌதம புத்தர் காலத்தில் இருந்திருந்தால் அவரிடம் சரணடைந்திருப்பேன்” என்றார். நான் தலையிட்டு “தயவுசெய்து இதைப்பற்றி மறுபடியும் பரிசீலனை செய்யவும், இதைப்பற்றி இன்னொரு முறை சிந்தித்துப் பார்க்கவும். உண்மையிலேயே புத்தரின் கால்களில் சரணடைந்து இருப்பீர்களா? இந்த வாழ்க்கையில் நீங்கள் எந்த பிச்சைக்காரனிடமாவது போயிருக்கிறீர்களா? புத்தர் பிச்சைக்காரராகத்தான் இருந்தார். நீங்கள் எந்த குருவிடமாவது போயிருக்கிறீர்களா? பார்வைக்கு தெரியாத உலகத்தின் குருவிடம்? எனக்குத் தெரிந்தவரை, நீங்கள் யாரிடமும் போனதில்லை, அதனால் மறுபரிசீலனை செய்யவும். புத்தர் காலத்தில் நீங்கள் உயிருடன் இருந்திருந்தால், அவர் கால்களில் சரணடைந்திருப்பீர்களா? நீங்கள் அவரை அடையாளம் கண்டுக்கொண்டீர்களா?” என்றுக் கேட்டான்.
அவர் திகைத்துப் போனார், அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டார், அவர் மௌனமானார். அவர் “நான் என் வார்த்தைகளை மீணடும் எடுத்துக்கொள்கிறேன், ஏனெனில் நான் இதைப்பற்றி நினைக்கவேயில்லை, நான் சும்மா சொன்னேன். உண்மையில் நான் யாரிடமும் போனதில்லை, அதனால், நான் புத்தரிடம் போயிருக்கமாட்டேன் என்பது நியாயமாகத் தெரிகிறது. நான் அவரைக் கடந்து சென்றிருந்தால்கூட, நான் அவரை பார்த்திருக்கமாட்டேன். அப்படியே நான் புத்தருடன் தொடர்புக் கொண்டார்களோ அவர்களெல்லாம் அவரை அடையாளம் கண்டுக்கொண்டார்கள் என்றில்லை. அது அப்படி இல்லை!”.
புத்தர் ஒரு கிராமத்தைக் கடந்துச் செல்கிறார்..... யாருமே அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. அவர் சொந்த தந்தைக்கே அவரை அடையாளம் தெரியவில்லை; அவருடைய சொந்த மனைவிக்கே அடையாளம் தெரியவில்லை.
நான் இங்கு இருக்கிறேன் – உங்களால் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அடையாளம் காணமுடியவில்லை, வெளிப்புறம் மட்டும்தான் தெரிகிறது. நீங்கள் வெளியில் இருப்பதுடன்தான் பழகிக்கொள்கிறீர்கள். அது அப்படிதான் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த உள்ளார்ந்த தன்மையுடனே தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை, எப்படி என்னுடன் வைத்துக்கொள்ள முடியும்? அது முடியாத ஒன்று. நீங்கள் உங்கள் உள்ளார்ந்த தன்மையுடன் தொடர்பு வைத்திருந்தால் பின்பு அது சுலபமாகும். பின்பு நீங்கள் என்னுடைய உள்ளார்ந்த தன்மையுடன் அல்லது பொதுவாக உள்ளார்ந்த தன்மைகளுடன் தொடர்பு வைத்திருக்கலாம், இல்லாவிட்டால் நீங்கள் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள், நான் தொடர்ந்து பதிலளித்துக் கொண்டேயிருப்பேன். பின்பு எல்லாம் முக்கியமானதை விட்டுவிடும்.
ஆனால் நான் பதில் சொல்வது என்னுடைய பதிலிலிருந்து, உங்களுக்கு பதில் கிடைக்கும் என்பதற்காக அல்ல. இல்லை, நான் எப்போதும் நம்பிக்கைக்கு எதிராக நம்புவதில்லை, நான் எப்போதும் என்னுடைய பதில், உங்களுடைய பதிலாகிவிடும் என்பதை நம்புவதேயில்லை. என்னுடைய பதில்களால் உங்களுக்கு எந்த உபயோகமும் இருக்காது என்பது எனக்குத் தெரியும். பின்பு நான் ஏன் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன்?
நான் பதில் சொல்லிக்கொண்டேயிருப்பது, என்னுடைய பதில் உங்களுடைய பதிலாகிவிடும் என்பதற்காக அல்ல, ஆனால் முழுமையாக உங்களால் என்னை அமைதியாக கேட்கமுடிந்தால், அந்த அமைதியாக கேட்பதில் நீங்கள் நேரடியாக உங்கள் உள்ளார்ந்த தன்மையுடன் தொடர்புக்கொள்வீர்கள். திடீரென்று அது உங்களுள் வெடிக்கலாம், திடீரென்று நீங்கள் இதுவரை இருந்த உலகத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு உலகத்தில் இருக்கலாம். அது நடந்தால், பின்பு நீங்கள் புதுப் பிரபஞ்சத்திற்குள் வந்துவிட்டீர்கள்.
புது பிரபஞ்சம் உங்கள் சொந்தமானது. அது மறைந்திருக்கும் இரகசியம், உள்ளார்ந்த இரகசியம். உள் பிரபஞ்சத்திடம் இதுவெல்லாம் இருக்கிறது.
*************************************************************************************************************
ஒரு நொடிப்பொழுதில் கூட
ஜூன் 2ம் தேதி 1971 அன்று பம்பாய், இந்தியாவில் மா ஆனந்த பிரதிமாவின் பேட்டியின் அடிப்படையில் ஓஷோ அவர்கள் பேசியதின் ஒரு பாகம்:
விழிப்புப் பெறுதல் ஒரே ஒரு வினாடியில் நிகழ வாய்ப்பிருக்கிறது. அந்த ஒரு வினாடியில் ஒருவர் தெய்வமாக வெடிக்கலாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆனால் பொதுவாக அப்படி நடப்பதில்லை. ஒருவர் பல வாழ்க்கைகளில் போராடவேண்டும். ஏனெனில் வேலை கடினமானது. மேலும் ஒருவர் தானாகவே விழிப்புப் பெற முடியாது. இது பெரும்பாலும் இப்படிதான்; ஒருவர் காலையில் உறங்கிக் கொண்டிருந்தால், ஒருவர் விழித்துக்கொண்டில்லாவிட்டாலும், அவர் விழித்துக் கொண்டிருப்பதாக கனவு காண எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது.
மனிதர்கள் ஒரு குழுவாக இருந்து எல்லோருமாக சேர்ந்து ஏதாவது முயற்சி செய்ய முடிவெடுக்கலாம். பின்பு உறக்கம் கலைவதற்கான வாய்ப்புகள் அதில் நிறைய இருக்கின்றன. அதனால் விழிப்புப் பெறுவது முழுமையாக ஒரு குழுவாக செய்யும் வேலை. அதுவால் தனியாக நிகழமுடியும், ஒவ்வொரு தனிமனிதனும் இதை தனியாகச் செய்வதற்கு திறன் வாய்ந்தவர்கள்தான். ஆனால் அது அவ்வாறு நிகழ்வதில்லை. உண்மையான இயக்கம் வேறுவிதமானது, ஏனெனில் நாம் ஒருபோதும் நமக்கு முடிந்தளவிற்கு அதிகபட்சமாக வேலை செய்யமாட்டோம். நாம் மனதில் பத்து சதவீத பாகத்திற்கு மேல் வேலை செய்யமாட்டோம். தொன்னூறு சதவீதம் நிகழக்கூடிய சாத்தியத்துடன் இருக்கிறது. அதை பயன்படுத்துவதேயில்லை.
நீங்கள் உறங்கிக்கொண்டிருந்தாலும், விழித்துக்கொண்டிருந்தாலும் அதனால் எந்த வித்தியாசமும் ஏற்படாது, கனவு காணுதல் உள்ளே போய்க்கொண்டேயிருக்கிறது. நமக்கிருக்கும் இந்த விழித்துக்கொள்ளுதல், விழிப்புணர்வு எல்லாம் மேல்வாரியானது. உள் ஆழத்தில் கனவிருக்கிறது, அது தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
அதனால் ஒருவருக்கு இரண்டு விஷயங்கள் இருக்கலாம். ஒன்று தனிமனிதனாக இயங்க சாத்தியமாக வேண்டும் அல்லது குழுவின் இயக்கம் தேவைப்படும். முழு சன்யாசத்தின் வரிசையும் ஒரு குழுவின் இயக்கமாகதான் உருவாக்கப்பட்டது. பத்தாயிரம் மக்கள் ஒரு குழுவாக இயங்கினால் விழிப்புப் பெறுதலுக்கு அதிக வாய்ப்பிருக்கிறது, அதனால் ஒருவர் விழிப்புப் பெற்றால்கூட, அவரால் சங்கிலி விழிப்புகளை உருவாக்க முடியும்.
புத்தர் ஒரு குழு வரிசையை உருவாக்கினார். மஹாவீரர் ஒரு குழு வரிசையை உருவாக்கினார். அவர்களுடைய வரிசை உண்மையில் வெழிப்படையான சம்பவமாக இருந்தது, அவர்கள் சன்னியாசிகள், ஒரு வரிசையான சன்னியாசிகள். உள்ளூர அவர்கள் குழுவாக இயங்கினார்கள், அந்தக் குழுவின் இயக்கம் பல வாழ்க்கையில் தொடர்கிறது.
உதாரணத்திற்கு, புத்த சன்யாசிகளின் குழுவிலிருந்து மக்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ளார்ந்த புரிந்துக்கொள்ளுதலும், ஒரு உள்ளார்ந்த சபதமும் இருக்கிறது – அந்தக் குழுவிற்கு ஒரு சத்தியம் – எப்போதெல்லாம் ஒருவர் விழித்துக் கொள்ள முடிந்தவரை உதவி செய்யவேண்டும். ஏன் குழுவில் இருப்பவர் களுக்கா? ஏனெனில் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறிப்பிட்ட நுட்பம் இருக்கிறது.
நீங்கள் ஒரு குறிப்பிட்ட நுட்பத்துடன் முன் வாழ்க்கைகளில் வேலை செய்திருந்தால், நீங்கள் இந்த வாழ்க்கையிலும் சுலபமாக அந்த வேலையை செய்யலாம். அதனால் முன் பிறவிகளிலும், மற்ற வாழ்க்கைகளிலும் என்னைச் சார்ந்த மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்களின் குழு பலவழிகளில் அதிகத்திறனுடன் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நுனி, அது ஏதோ வேலை செய்கிறது, அது ஏதோ செயல்கள் செய்திருக்கிறது, அவர்களுக்கு இது ஒரு ஆரம்பமல்ல. இல்லாவிட்டால், ஒவ்வொரு புதிய நபருக்கும் அதிகமான தேவையில்லாத, முக்கியமில்லாத வேலைகளை செய்துக் கொண்டிருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, தொடங்குபவர்களுக்கு புத்திக்கு ஏற்றவேலை தேவைப்படுகிறது. யாரெல்லாம் முன் வாழ்க்கைகளில் ஒரு குறிப்பிட்ட நுட்பத்துடன் வேலை செய்திருக்கிறார்களோ, அவர்களுக்கு புத்திச் சார்ந்த வேலை இப்போது தேவையில்லை. நீங்கள் அவர்களிடம் நுட்பத்தைச் சொன்னால் அவர்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
புத்தியை சார்ந்த வேலைகள் இருக்காது, அவர்கள் மேல்வாரியான கேள்விகளை கேட்கமாட்டார்கள். அந்த ஆர்வம் இருக்காது. அந்த ஆர்வம் நிறைய நேரத்தையும், நிறைய சக்தியையும் எடுத்துக்கொள்கிறது. ஆனால் ஒருவருக்கு இனி ஜென்மம் இல்லை என்றால், அவரால் தொடங்குபவர்களுக்கு வேலை செய்யமுடியாது. அவர் தன் வேலைகளை பழையவர்களுடன், எப்படியோ கரையில் இருப்பவர்களுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். அவர்களுக்கு எந்த அறிவுச் சார்ந்த தத்துவமும் தேவையில்லை. அவர்களுக்கு மேல்வாரியான விசாரணைகள் இல்லை. அவர்கள் நேரடியாக ஆழ்ந்துப் போவார்கள்.
பழைய தேவையான, ஒருவருக்கு நம்பிக்கை இருக்கவேண்டும் என்றத் தேவை, உண்மையில் ஒரு தந்திரம்தான். அது பழையவர்களுக்கும், புதியவர்களுக்கும் வேறுபடுத்துவதற்காகத்தான். புதியவர்களுக்கு நம்பிக்கை முடியாத ஒன்று; சந்தேகம்தான் சாத்தியமானது. பழையவர்களுக்கு மட்டும்தான் நம்பிக்கை சாத்தியமானது. சந்தேகம் முடியாத ஒன்று.
அதனால் யாரிடம் நிறைய வேலையை குறைந்த நேரத்தில் செய்யமுடியும் என்பதை தெரிந்துக்கொள்ள ஒரு தந்திரம், ஒரு நுட்பம்தான் நம்பிக்கை என்பது. நம்ப முடிந்தவர்கள் சந்தேகப்படுபவர்களை விட வித்தியாசமானவர்கள் என்பதல்ல. யாருக்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களெல்லாம் இதற்கு முன்னால் எங்கோ வேலை செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம், அதனால் அவர்களிடம் அறிவுச் சார்ந்த ஆர்வம் இல்லை. அது நிறைவேற்றப்பட்டுவிட்டது. அவர்கள் கடந்துவிட்டார்கள்; அவர்கள் இப்போதுதான் பள்ளியில் சேருபவர்கள் அல்ல. அவர்கள் நுழைவுத்தேர்வை கடந்து வந்தவர்கள்.
நம்பிக்கையை கேட்பது “நீங்கள் கடந்த வாழ்க்கைகளில் இதற்கு வேலை செய்திருக்கிறீர்களா?” என்று கேட்பதாகும். நீங்கள் வேலை செய்திருந்தால்தான், உங்களுக்கு நம்பிக்கை இருக்கும், இல்லாவிட்டால் இருக்காது. இன்றைய உலகத்தில் சந்தேகம்தான் பிரபலமாகவும், சுலபமாகவும் இருக்கிறது. நம்பிக்கை கடினமானது. இதற்குக் காரணம் மனித மனம் மாறிவிட்டது என்பதல்ல. இதற்குக் காரணம் பழைய பாரம்பரியம் மிக குறுகலாக போய் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
உண்மையில் நானக்கிற்கு (Nanak) பிறகு புதிய பாரம்பரியமே இல்லை. இப்போது எல்லா மதங்களும் பழையதாகிவிட்டது. அவைகள் மிக நீண்ட நாட்களாக போய்க் கொண்டிருக்கிறது, அது ஒவ்வொரு நாளும் குறுகிக்கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு புதிய நாளிலும், பாரம்பரியத்தில் குறைந்த மனிதர்களே இருக்கிறார்கள். புத்தருக்குப் பிறகு இப்போது இருபத்தைந்து நூற்றாண்டுகளாகிவிட்டது – இந்த பாரம்பரியம் மிகப் பழையதாக இருப்பதால், இருக்கும் குருவுடன் தொடர்பு வைத்திருந்தவர்களில், கிட்டத்தட்ட எல்லோரும் முக்தி அடைந்துவிட்டார்கள்! இதைத் தவிர யாரெல்லாம் தொடர்ந்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் மட்டகரமான மக்கள். அவர்கள் இருபத்தைந்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து வேலை செய்திருக்கிறார்கள்.
எல்லா பாரம்பரியங்களும், அதனுடைய தொடர்புகளும் ஒருவகையில் இப்போது பழையதாகிவிட்டது. அதனால்தான் நம்பிக்கைக் குறைகிறது. நிறைய வாழ்ந்துக்கொண்டிருக்கும் பாரம்பரியங்கள் இருந்தன. அதில் முன் வாழ்க்கைகளில் நிறைய மக்கள் அத்துடன் இயங்கினார்கள். ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை ஆணிவேராக இருந்தது, சந்தேகம் மிகக் கடினமாக இருந்தது.
நீங்கள் என்னைக் கேட்டால், நான் பல விஷயங்கள் செய்கிறேன்.யாரெல்லாம் என்னுடன் கடந்த வாழ்க்கையில், என்னுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு வைத்திருந்தார்களோ அவர்களுக்கு வேலை செய்வது – நிறைய மக்கள் இருக்கிறார்கள். இன்னொன்று வரப்போகும் நாட்களில் இருப்பதற்கு புதியத் தொடர்பை உருவாக்குவது. ஏனெனில் எந்த பழைய சிந்தனைகளும் பயனில்லை.
நான் ஒருவரை அவருடைய தொடர்ச்சியிலிருந்து மாற்றவிரும்பவில்லை, ஏனெனில் ஒருவரை நம்மால் இந்த நீண்டப் பாரம்பரியமான இருபத்தைந்து நூற்றாண்டுகளில் முக்தியடைய வைக்க முடியவில்லை என்றால், இப்போது அவரை மாற்றுவதில் பயனில்லை. அவர் தன்னுடைய பாரம்பரியத்திலேயே ஆழமாகப் போவதுதான் நல்லது. அவரை மாற்றாமல் இருப்பதுதான் நல்லது, ஆனால் அவருடைய சொந்த பாரம்பரியத்தை உயிருடன் இருக்கும் ஒன்றாக மாற்றவேண்டும். அவர் அதில் ஆழ்ந்துச் செல்லலாம். அவர் பழையதின் இன்னொரு தொடர்ச்சியாக இருப்பார்.
ஆனால் முன்னதாக நான் புதியவர்களுக்காக வேலை செய்தேன், அதனால் என்னுடைய வலியுறுத்தல்கள் சந்தேகம் என்றதில் இருந்தது. நான் எப்போதும் சந்தேகத்திலேயே அக்கறையுடன் இருப்பேன் ஏனெனில் சந்தேகத்தின் மூலம்தான் புதியவர்களை கவரமுடியும். நம்பிக்கையின் மூலம் அல்ல. நம்பிக்கை பழையவர் களை தான் கவரும். அவர் கடந்தகால வாழ்க்கையில் அவர் ஏதோ செய்துக் கொண்டிருந்திருப்பார். நான் சந்தேகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம், நான் இருக்கப்போகும் புதிய பாரம்பரியத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.
இப்போது நான் நம்பிக்கையை வலியுறுத்துகிறேன்., இதில் ஒன்றும் முன்னுக்குப்பின் முரண்பட்டதாக இல்லை. இது வாசலை மாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை. நான் சந்தேகத்தை வற்புறுத்தும்போது யாரும் வரவில்லை. இப்போது நான் நம்பிக்கையை வலியுறுத்துகிறேனே. அதனால் என்னுடன் கடந்த வாழ்க்கையில் தொடர்பு வைத்திருந்தவர்களுக்காக வேலை செய்கிறேன்.
அதனால் எந்த கஷ்டமும் இருக்காது, ஏனெனில் நாம் எதிலும் ஆழ்ந்துச் செல்வதில்லை. நம்மால் ஆழ்ந்துச் செல்ல முடியாது. இதற்கு நிலைகள் இருக்கின்றன. நான் சந்தேகம் என்று சொல்லும்போதும், நம்பிக்கை என்று சொல்லும்போதும், ஸ்திரமாக இல்லாமல் இருக்கிறது. இதற்கு வெளியில் போடும் பெயர்ப்பலகை மாறியிருக்கலாம், வேறுவிதமான வார்த்தைகள் இப்போது வரும். என்னவெல்லாம் நான் செய்துக்கொண்டிருந்தேனோ அது தொடரும். இப்போது என்னுடைய வலியுறுத்தல், இதற்கு முன்பு எதற்காகவோ வேலை செய்தவர்களுக்காக இருக்கும். அதனால்தான் இந்த சன்னியாசிகளின் வரிசையெல்லாம் – ஏனெனில் சந்தேகத்தால் இதை உருவாக்கமுடியாது.
எப்போதெல்லாம் சந்தேகம் இருக்கிறதோ, அப்போது ஒருவரால் தனியாகத்தான் இருக்கமுடியுமே தவிர குழுவாக வேலை செய்யமுடியாது. சந்தேகம் என்ற நுட்பத்தால், உங்களால் குழுவாக வேலை செய்யவே முடியாது. முடியவே முடியாது. சந்தேகம் உங்களை தீவாக ஆக்கிவிடும். ஆனால் எப்போது நீங்கள் கண்டமாகிறீர்களோ (Continent) அப்போது நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்திருக்கிறீர்கள். பின்பு பிரிவு கிடையாது, நீங்கள் கூட்டமாக வேலை செய்யலாம்.
மனிதனைப் பொறுத்தமட்டில், அவன் மிக பலகீனத்துடன் இருக்கிறான். அதனால் அவனை தனியாக நம்பமுடியாது. அவனால் ஒன்றும் செய்ய இயலாது. அவனால் அவனை ஏமாற்றிக் கொள்ளதான் முடியும். அதனால் நாம் தனி மனிதர்களுடன் வேலை செய்துக்கொண்டேயிருந்தால், நாம் இயந்திர உதவிகளை பெறவேண்டிய அவசியம் இருக்கும். உதாரணத்திற்கு, நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள், உங்களை எழுப்புவதற்கு யாரும் இல்லை. நீங்கள் மணி அடிக்கும் கடிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். அது உங்களுக்கு உதவுவதற்கு இருக்கும் ஒரு இயந்திர சாதனம். ஆனால் எந்த இயந்திரச் சாதனமும் உங்களுக்கு நீண்டகாலம் உதவ முடியாது, ஏனெனில் நீங்கள் அதற்கு பழக்கப்பட்டு விடுவீர்கள், விரைவில் மணி அடிக்கும் கடிகாரத்தினால் உங்களை தூக்கத்திலிருந்து எழுப்ப முடியாது. இதற்கு பதிலாக உறக்கம் இன்னும் ஆழமாகும் – மனம் வேலை செய்யும் விதமானது நீங்கள் அந்த மணி அடிப்பதை, கனவில் வேறு ஏதாவது அடையாளமாக மாற்றி, அதை வேறுவிதமாக விளக்கிவிடுவீர்கள். பின்பு அந்த உறக்கம் தடைபடாமல் இருக்கும். மணி அடிப்பது உங்கள் கனவின் ஒரு பாகமாக இருக்கும்விதமாக கனவை உருவாக்கிக் கொள்வீர்கள், அதனால் அது தூக்கத்திற்கு எதிராக இருக்காமல், ஆனால் கனவின் ஒரு பாகமாக இருக்கும்.
நான் பல நபர்களுடன் தனித்தனியாக முயற்சி செய்திருக்கிறேன். நான் அவர்களிடம் இயந்திர சாதனங்களையும் கொடுத்திருக்கிறேன், ஆனால் அவர்கள் அதற்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள், பின்னர் புதியவிதமான ஏமாற்றம் இருக்கிறது. இதுதான் ஆன்மீகத்தின் மாபெரும் ஏமாற்றம்; ஒருவர்தான் விழிப்புப் பெற்றதாக கனவு காணலாம். இதுதான் மாபெரும் கொடியநோய், இருப்பதிலேயே மிக ஆபத்தானது. நாம் நம் உறக்கத்தை தொடர்ந்துக்கொண்டே நாம் விழிப்புப் பெற்றதாக கனவு காணலாம். பின்பு எந்த சாதனங்களுக்கும் அவசியம் இல்லை, நீங்கள் உங்கள் கனவுடன் மட்டும் இருக்கிறீர்கள்.
அதனால் இப்போதிலிருந்து என்னுடைய வலியுறுத்தல் குழுவாக வேலை செய்வதில் இருக்கும். அதனால் ஒருவர் ஒரே வினாடிக்கு விழித்திருந்தால்கூட, அவரால் மற்றவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கமுடியும். அவர் உங்களை அசைக்கலாம். இந்த சன்னியாசிகளின் வரிசை ஒரு உள்ளார்ந்த நம்பிக்கையுள்ள ஒரு குழுவாக இருக்கும்.
ஒரு வினாடியாக இருந்தாலும், உங்களுக்கு விழிப்புணர்வு வருவதுபோல் உணர்ந்தால், மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் அவசியம் இருக்கும்போது உங்களுக்கு உதவுவார்கள்.
*
