ATMA VICHARAM- ATMA DYANAM--SRI RAMANA MAHARISHI
இன்று மனித சமுதாயம் வலைதளங்களில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிப்பது போல், எண்ண அலைகளில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து வழிபட வழி சொன்னவர் பகவான் ஸ்ரீ ரமணர் ஒருவரே. அவர் சொன்ன மருந்து என்ன? அவர் இயற்ற நூறு ஆண்டுகளுக்கு முன் அருளிய அட்சரமண மாலையைப் பாராயணம் செய்தால் போதும் எண்ண அலைகளிலிருந்து உடனடியாக விடுபடலாம்.
தேடாது உற்ற நல் திருவருள்
நிதி அகத்தியக்கம் தீர்த்து
அருள் அருணாசலா (49)
மற்றும்
நுண்ணுறு உனை யான்
விண்ணுரு நண்ணிட
எண்(ண) அலை இறும்
என்று அருணாசலா (57)
மற்றும்
திரும்பி அகந்தனைத் தினம்
அகக் கண் காண்
தெரியும் என்றனை என
அருணாசலா.
இந்தப் பாடலைப் பாடும்போது மதுரை திருப்புகழ் அலமேலு அம்மாள் என்ற பக்தை, 'திரும்பிய கந்தனை' என்று பாடுவாராம்; அப்போது பகவான் ஸ்ரீரமணர் நிமிர்ந்து உட்கார்ந்து அவரை உற்றுப் பார்ப்பாராம்!
பகவான் ஸ்ரீ ரமணரை கந்தப் பெருமானாகவே கருதி வழிபட்டவர்கள் பலர், 'சிந்தை நொந்தவருக்கு கந்தனே துணை' என்பவதற்கிணங்க, பகவானை ஸ்கந்தனாகவே வழிபட்டுத் தங்கள் துயரங்களையெல்லாம் போக்கிக் கொண்டவர்கள் பலர். 'ஸ்கந்தா சரணம்' என்று சொல்லிக் கொண்டே இருந்தால் நம்மைப் பிடித்து ஆட்டுகின்ற துயரங்கள் எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் பறந்தோடிவிடும்.
'திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண் தெரியும்' என்கிறார் பகவான். நம் அகத்தை மனதைத் திரும்பி நாமே பார்க்க வேண்டும். இதுதான் ஆன்மிகத்தின் முதல்படி. அப்படிப் பார்க்கப் பார்க்க எண்ண அலைகள் ஓய்ந்துவிடும். 'உதித்த இடத்தில் ஒடுங்குதல்' என்று பகவான் இதனைக் குறிப்பிடுவார். 'ஓடக்காண்பது பூம்புனல் வௌ்ளம். ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்'. வௌ்ளம் ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால் யோகத்தில், தவத்தில் ஆழ்ந்திருப்பவர்களின் உள்ளம் ஒடுங்கிக் கிடக்கும். வெளியில் எங்கேயும் செல்லாது.
உன்னிடத்தில் ஒப்புவித்த
உள்ளத்தால் எப்பொழுதும்
உன்னைக் கண்டு எல்லாரும் உன் உருவாய்
அன்னியம் இல்
அன்பு செயும் அன்னோன்
அருணாசலா வெல்கும்
இன்பு உருவாம் உன்னில் ஆழ்ந்தே
என்று பகவான் ஸ்ரீ அருணாசல பஞ்ச ரத்தினத்தில் கூறுகிறார்.
நம்மிடம் உள்ள மனதை நம்முடையது என்று கருதி அதனிடம் அடிமைப்பட்டுச் சீரழிந்து போகிறோம். இதுதான் கொடுமையிலும் கொடுமை. 'மனம் நம்முடையது அல்ல' என்று கருத்து வேரூன்ற வேண்டும். மனத்தின் துணை கொண்டுதான் மனத்தை அகற்ற வேண்டும். நம்மிடம் மூன்று வித வாசனைகள் உள்ளன. அவை தேகவாசனை, லோக வாசனை, சாஸ்திர வாசனை ஆகும்.
ஒருமுறை பகவானிடம் சாஸ்திர விற்பன்னர்கள் வந்து வேத உபநிஷத்துக்களிலும், வேறு பல சாஸ்திரங்களிலும் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் கேட்டார்கள்.
பகவானும் அனாயாசமாகத் தெளிவுபடுத்தினார். இதைக் கேட்ட அனைவரும் சுகப்பட்டனர்.
ஆனால் அங்கிருந்த சப்-ரெஜிஸ்தார் நாராயண ஐயர் என்ற பக்தர் மனக்கிலேசமுற்றார்.
வந்தவர்களின் புலமையும், ஆர்வமும், அவரது சாஸ்திர படிப்பின்மையும், தன்னை அவர்களோடு ஒப்பிடச் செய்து அவரைத் துக்கித்தது.
பண்டிதர்கள் விடைபெற்ற உடன் பகவான் அதற்காகவே காத்திருந்தது போல், நேரே நாராயண ஐயரை நோக்கி, 'என்ன?' என்றார்.
அவர் பதிலுக்கு காத்திராமல் பகவான், 'இது உமிதான் ஓய்! சாஸ்திரம் படிக்கிறதும், அதை அடிபிறழாமல் ஒப்புவிக்கிறதும் பரமார்த்தத்துக்கு எந்தப் பிரயோஜனமும் படாது.'
உண்மையை உணர்றதுக்கு இந்தத் தொல்லையெல்லாம் தேவையில்லை.
சாஸ்திரம் படிக்கிறதாலேயே உண்மையை உணர முடியாது.
சும்மா இருக்கிறதுதான் உண்மை. சும்மா இருக்கிறதுதான் கடவுள் என்று கூறி நாராயண ஐயரைக் கருணையோடு பார்த்தார்.
சிறிது நேரம் சென்று, 'ஓய்! உமக்கு நேரே சவரம் பண்ணிப்பீரா' என்று கேட்டார்.
நாராயண ஐயர், 'ஆமாம்' என்றார்.
'கண்ணாடி பார்த்து உம்முகத்துக்குத் தானே சவரம் பண்ணுவீர். இல்லே கண்ணாடியிலே தெரிகிற முகத்துக்குப் பண்ணுவீரா?'
அந்த மாதிரிதான் சாஸ்திரங்கள். அது முக்தியைக் காட்டும். அதை அப்பியாசம் பண்றதும், அது காண்பிக்கிற வழியிலே போறதும்தான் அதுக்குப் பிரயோஜனம். அதை விஸ்தாரமா சிலர் சிலாகிச்சுப் போசறதும், கண்ணாடியிலே தெரியற முகத்துக்கு சவரம் செய்யற மாதிரிதான் என்கிறார் பகவான்.
பகவான் இயற்றிய அருளிய அட்சரமணமாலைப் பாடல்கள் இரண்டை நாம் எப்போதும் மனதில் இருத்தி, திரும்பத் திரும்ப பாராயணம் செய்ய வேண்டும்.
ஒன்று: உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா
இரண்டு: ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக்காட்டு அருணாசலா
நம்மை ஏமாற்றி எப்போதும் ஓடி ஓடி ஊர் சுற்றிக் கொண்டிருக்கிற நமது உள்ளத்தை நாம் வசமாக்க வேண்டும். இந்த உலகில் தோன்றிய நம ஒரே கடமை அதுதான்.
லட்சுமி நரசிம்மன் பகவானின் பக்தர். பகவான் உள்ளது நாற்பதை (அவர் இயற்றியது) தெலுங்கில் மொழிபெயர்த்த போது, அதன் எழுத்துப் பிழைகளைச் சரிபார்க்க, பகவான் லட்சுமி நரசிம்மத்தைப் பணித்தார்.
பகவானிடம் உள்ளது நாற்பது பற்றித் தெளிவு பெற இது மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது. 'பகவானே! 'உள்ளது' அப்படின்னா என்ன?' என்று ஒருமுறை கேட்டார்.
பகவான், 'இங்கே இரு்கிறதை இரண்டு அம்சமா பிரிச்சுக்கலாம். நீங்க பார்க்கற விஷயங்கள் எல்லாம் ஒரு அம்சம். பாக்கற நீங்க இன்னொரு அம்சம். இந்த இரண்டுல எது பிரதானம். எது சத்யம்னு விசாரிச்சா சந்தேகமில்லாம பார்க்கப்படற விஷயங்களை விட பாக்கற நீங்கதான். இப்போது யார் இதையெல்லாம் பாக்கறதுன்னு உள்முகமா விசாரிங்கோ! இதுதான் உண்மையிலேயே சாதனை! இதுவரைக்கும் நீங்க செஞ்சதெல்லாம் இதை விசாரிக்காம செஞ்ச சாதனைதான்.
இதையெல்லாம் செய்யற... பாக்கற (நான்) உண்மையிலேயே எது? இப்படி நான்ங்கறதா வெளிப்படறது எதுன்னு விசாரிங்கோ.'
அதுதான் உள்ளது அதுதான் பரமார்த்தம் என்றார் பகவான். அப்போ ஆத்ம ஞானம்கறது அதிசுலபம்தானே என்றார் லட்சுமி நரசிம்மன்.
பகவான் புன்னகையுடன், 'ஆமாம்!' அப்படித்தான் முதல்ல இருக்கும். ஆனா ரொம்ப கஷ்டம் இதிலே இருக்கற தவறான கருத்தும் தப்பான பார்வையும் போகணும். அதுக்கு இடைவிடாத முயற்சியும், நாம் உடம்பில்லை.. சுத்த அறிவுதான்கற திட நிச்சயமும் வரணும். இப்படி சொல்றேங்கறதனாலே அது முடியாதுன்னு நினைக்காதேள். நான் யார்ங்கற விசாரம் ஒருத்தனுக்கு வர்றதே அருளுக்கு அடையாளம். அதுக்கே ரொம்ப பக்தி வேணும் என்றார் பகவான்.
பகவான் அடிக்கடி அருணகிரிநாதரின் திருபுகழான 'குமரகுருபர குணதர நிசிதர' என்ற பாடலின் கடைசி வரியான, 'அறிவை அறிவது பொருள் என்று அருளிய பெருமாளே!' என்பதைச் சுட்டிக் காட்டுவார்.
ஒருமுறை பக்தர் ஒருவர் பகவானிடம், 'பகவானே! ஆத்மாவை உணரணும்னு சொல்றாங்களே. அது எங்கே இருக்கு? இதை எப்படி உணர்றது!' என்று கள்ளமில்லாத உள்ளத்தோடு கேட்டார்.
பகவான் ஆனந்தமானார். இப்போ என்கிட்ட ரமணாச்ரமம் எங்கே இருக்கு? அதுக்கு நான் எப்படிப் போறதுன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது?
நீயும் நீ பார்க்கற எல்லாம் ஆத்மாதான். அதை எப்பவும் நீ உணர்ந்து கொண்டேதான் இருக்கே.
ஆனா அது தெரியாம ஆத்மா எங்கேயிருக்குன்னு தேடறதும், அதை உணர்றதுக்குச் செய்யற முயற்சியும் பண்டரீபுரம் பஜனை பண்ற மாதிரிதான்.
பஜனை ஆரம்பிக்கறப்போ எல்லோரும் காலில் சலங்கைக் கட்டிக் கொண்டு ஒர பித்தளை விளக்கை ஏத்தி விட்டு நடுவிலே வச்சு அதையும் சுத்திச் சுத்தி வந்து பஜனை பண்ண ஆரம்பிப்பா.
பண்டரீபுரம் ரொம்பத் தூரத்துல இருக்கு. யாத்திரை பண்ணுவோம். வாங்கோன்னு பாடுவா. உண்மையிலேயே விளக்கைச் சுத்திதான் வருவா. ஒரு அடிகூட முன்னே போகமாட்டா!
ஆனா யாத்திரை போறோம்னு பாடுவா. இப்படியே பஜனை விடியற வரைக்கும் நடக்கும். பொழுது விடிய போறப்ப இந்தா பண்டரீபுரம் தெரியறது. கொஞ்ச தூரம் தான்னு பாடுவா.
பொழுது விடிஞ்ச உடனே பண்டரீபுரம் சேர்ந்துட்டோம். இதோ பண்டரீபுரம், இதோ பாண்டுரங்கன்னு பாடி அநத விளக்கை நமஸ்காரம் பண்ணி பஜனையை முடிச்சுடுவா.
இந்த ஆத்மா விஷயத்துலேயும் இப்படித்தான்?
நாமளும் ஆத்மாவையே எந்த நேரமும் தரிச்சுக் கொண்டே இருந்தும், ஆத்மா எங்கே, ஆத்மாவை இன்னும் அடையவில்லையேன்னு பஜனை பாடுறோம்.
அஞ்ஞான இருள் நீங்கி ஞானம் புலரும் போது இந்த ஆத்மா இங்கேயே இப்பவே இருக்கிறதுதான். அது நான்தான்னு பஜனையை முடிச்சிடுவோம் என்றபோது பகவான் முகத்தில் அளவில்லா ஆனந்தம் விளையாடியது.
ஒரு சமயம் சாதனையில் சிரத்தையுள்ள அன்பர் ஒருவர் பகவானைப பக்தியுடன் நமஸ்கரித்து,
'பகவானே எந்த நேரமும் மனசை ஆத்மாவிலேயே வெச்சிருக்கிறது தான் ஆத்ம விசாரம்ணு பகவான் சொல்றது, என்னைப் போல் இருக்கிறவாளுக்க சாத்தியமாகுமா?'
ஒரு பக்கம் ஆபீஸ் பொறுப்னா இனனொரு பக்கம் குடும்பப் பொறுப்பு. வாழ்க்கையிலே பெரும் பகுதி இதிலேயே போயிடுதே! ஆத்ம விசாரம் பண்ண கொஞ்ச நேரம் தான் கிடக்கிறது. அதுவும் இடைவிடாம மனசை ஆத்மாவிலேயே வச்சுண்டிருக்கிறது சிரமசாத்திமய கூட இல்லை. எங்களாலே முடியாது. அப்போ எங்களுக்கெல்லாம் வழியே இல்லையா? என்று மிக ஆதங்கத்துடன் கேட்டார்.
பகவான் மிக்க கருணையோடு மெதுவான குரலில் அவரிடம் 'நீங்க வீட்டை வி்ட்டு ஆஸ்ரமம் வர்றதுக்கு புறப்பட்டேள். வழியில் உம்மோட சிநேகிதரைச் சந்திக்கிறீர். அவரோட க்ஷேம லாபங்களை விசாரிச்சுவிட்டு ஆஸ்ரமத்துக்குத் தானே வர்றேள்! அவரோடேயே போறதில்லையே! அப்படித்தான் இதுவும். கார்த்தால எழுந்தவுடன் மனம் அமைதியா இருக்கும். அப்போது அதுக்கு, அதுயார்னு நன்கு நினைவுபடுத்தணும். தூக்கத்துலேயே இருந்து அப்பத்தான் வெளிவந்ததுனாலே தூக்கத்தோட சுகத்தை மறுபடி மிக எளிமையா நினைவு படுத்த முடியும். அதாவது மனசை தியானத்துல விசாரபரமா ஈடுபடுத்தணும்.
கார்த்தால எழுந்த உடனே தியானம் பண்றது வீட்டை விட்டு ஆசிரமத்து்குக் கிளம்பற மாதிரி.
அப்புறம் நமக்கு உண்டான வேலைகளைக் கவனிக்கணும். கார்த்தாலே செய்த தியானத்தோட தொடர்பு கைலதாரையா இருக்கும். நமக்கு தெரியும். தெரியாது. அது விஷயமில்லை. வேலை தானே நடக்கும். இது தான் வழியிலே சிநேகிதனைப் பார்த்து க்ஷேம லாபம் விசாரிக்கிறத.
மறுபடியும் இரவு தூங்கறதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் விசாரபரமா தியானத்துலே இருக்கணும். இதுதான் சிநேகிதன்கிட்டே சொல்லி கொண்டு ஆஸ்ரமம் வந்து சேர்றது.
இப்படித்தான் நாள் எல்லாம் தியானத்துலே இருக்கணும்.
கார்த்தாலே தூங்கி எழுந்ததுலேயிருந்து இரவு தூங்கறது வரை தான் வாழ்க்கை. இப்படி இருந்தா வாழ்க்கையே தியானமாயிடும்.
இதோட பரிபாகத்துலே மனம் தியாத்திலே இருந்தாலும், எதையாவது சிந்திச்சுக் கொண்டு விவகாரத்துல இருந்தாலும் ஆத்மாவிலேயே தான் நாம இருக்கோங்கற தெளிவு வரும்.'
மனசைச் சதாகாலமும் ஆத்மாவிலே வைத்திருப்பதற்கு பெயர்தான் ஆத்ம விசாரம். நான் சொல்றதோட அர்த்தம் இதுதான். இந்த தெளிவுதான் ஆத்ம விசாரம்.
______________________________________________