Showing posts with label MP-YOGI. Show all posts
Showing posts with label MP-YOGI. Show all posts

MP-YOGI

 துக்கம் என்பது தன்னைத் தொடாமல் எவன் ஒருத்தன் இருக்கிறானோ அவனே யோகி, பாவம், அதாவது மனஸில் அசுத்தம்தான், துக்கத்துக்குக் காரணம் மனசில் உள்ள அசுத்தங்கள் எல்லாம் நீக்கினால், அதுதானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும். ஒழுங்கினாலும் கட்டுப்பாடிட்டினாலும் தான் மனஸில் அசுத்தங்களை அகற்ற முடியும். இந்தச் சரீரக் கூட்டிலிருந்து ஆத்மா பிரிந்து போவதற்கு முன்பு சரியான கல்வியின் மூலமும். அப்பியாசத்தின் முலமும், கட்டுப்பட்டு ஒழுங்காக வாழ்ந்து, அசுத்தங்களைப் போக்கிக்கொண்டு விட வேண்டும். அப்படிச் செய்து ஜயித்தால், கடைசீயில் தேக வியோகமே பரமாத்மாவுடன் பிரியாமல் சேர்ந்து விடுகிற யோகமாகிவிடும்.

பரமாத்மாவைச் சேர்ந்துவிட்ட மனசு, வேறு எதையுமே சேர்த்துக் கொள்ள நினைக்காது.மனசு அதற்கப்புறம் ஒடவே முடியக் கூடாது. அப்படி ஒடாமல் ஆகிவிட்டதால்தான், அதற்கப்புறம் இந்த மனசினால் நமக்கு உண்டாகியிருக்கிற இத்தனை தொந்தரவுகளும் தொலைந்தபோதும்.

 அந்த நிலையைப் பெறுவதற்கு எதைச் சேர வேண்டும். மனசு எதிலிருந்து உற்பத்தியாயிற்றோ அதைத்தான் சேரவேண்டும். மனசு அதன் மூலத்தில் சேர்த்துவிட்டால், அங்கே அப்படியே கரைந்து போய்விடும். அப்புறம் ஒடாது. அதுவே சகல தொந்தரவுகளிலிருந்து விடுபட்ட நிலை.